Skip to main content

Posts

யாரோ....யார் யாரோ...?!

நான் யாரென்று கேட்கிறீர்களா? தெரியவில்லை. என் பெயரும், ஊரும் சுற்றமும் என் நினைவிலிருந்து அழிக்கப்பட்டு விட்டது அல்லது யாரோ அழித்து விட்டார்கள். இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் கொஞ்சம் முன்பு படுத்திருந்தேன் அதன் முன்பு எங்கோ போய்விட்டு வந்திருந்தேன். வேறு ஒன்றும் என்னைப் பற்றி எனக்கு சரியாய் சொல்லத் தெரியவில்லை. வெகு காலம் முன்பு இந்த வீதியில் நடந்து பயின்ற ஞாபகமொன்று மட்டும் மெலிதாய் என் நினைவிலிருந்தபடியால் இந்த வீதிக்குள் நடந்து கொண்டிருக்கிறேன். ஒருவேளை இந்த வீதியாய் அது இல்லாமலுமிருக்கலாம் யாரவது வந்து என்னை யார் என்று கேட்டு விடாத வரைக்கும் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஒரு மாடு ஒன்று என் முன்பு வந்து நின்றது. அது முறைத்துப் பார்ப்பது போல தோன்றியது. உற்றுப் பார்த்த போது அதுவும் என்னைப் போலவே வெறுமனே நின்று கொண்டிருக்கிறது என்று புரிந்தது. ஏனோ தெரியவில்லை அதன் கண்கள் என்னைப் பார்த்து நீ யாரென்று கேட்பதாகத்தான் எனக்குத் தோன்றியது. நீ யார் என்று அதனிடம் மெல்ல கேட்டேன். அது மெளனமாய் நின்றது. நீ மாடு என்பது உனக்குத் தெரியுமா? இல்லை நான் உன்னிடம்  நீதான் மாடு எ...

கோதை...!

வானிடை வாழும் அவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தட முலைகள் மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே... என்று சடாரென்று சொன்னாளாம் கோதை. கேட்ட விஷ்ணு சித்தருக்கு தலை சுற்றியே போய்விட்டதாம், பெருமாளைப் போய் எப்படியம்மா என்று கலங்கி நின்ற பொழுதியில் கோதை உறுதியாய் சொல்லி விட்டாளாம். நான் மணமுடித்தேன் என்றால் அது அந்த அரங்கனைத்தான் மணமுடித்தேன் என்று அவள் சொன்ன போது அரங்கனே விஷ்ணு சித்தரின் கனவில் வந்து கோதை சூடி பார்த்த மாலைதான் வேண்டும் என்று கேட்டதும் அவரின் நினைவுக்கு வந்ததாம்.  ரங்கநாதன் மீது கொண்ட காதலின் காரணமாய் கோதை  என்னும் ஆண்டாள் எழுதித் தீர்த்த பாசுரங்களில் செந்தமிழ் மீதேறி காதலும் பக்தியும் விளையாடும் பேரனுபவத்தை வாசிக்கும் போது நம்மாலும் உணர முடியும். ஆண்டாளை அரங்கனே ஆட்கொண்டு மணமுடித்தான் என்று ஆண்டாளின் கதையை மனதிற்குள் அசை போட்டபடி அமர்ந்திரந்தேன். இன்னும் சரியாய் ஒன்றரை மணி நேரம் இரு...

அவர்...!

ஒரே பேருந்து நிலையத்தில்தான் ஏறினோம்... வெகுநேரம் பேசிக் கொண்டே வந்தார் சிரித்தார், வருத்தப்பட்டார், புலம்பினார், உரிமையாய் தான் தின்ற பிஸ்கெட்டில் பாதி கொடுத்தார் எந்த ஊர் போகிறேன் என்று விசாரித்தார்... உள்ளூர் அரசியல் பேசினார், ஊர் முழுதும் ஒரே வெயில் என்றபடி ஜன்னலோரம் அமர்ந்து கொள்ளட்டுமா? என்று கேட்டமர்ந்தார் அம்மா உணவகம் நல்ல திட்டமென்றார் மீண்டும் இந்த அம்மாவே வரக்கூடாதென்றார் திமுகவிற்கும் என் வாக்கில்லை இருந்தாலும் கலைஞர் திறமையானவர்தான் என்றார் இந்த விலைவாசியில் எப்படி பிழைப்பதென்றார்? மோடியைக்  கொடுத்து வைத்தவர் என்றவர் சொல்லிக் கொண்டிருந்த போதே... இடத்தின் பெயரை அதட்டிச் சொல்லி இறங்கச் சொன்ன கண்டக்டரின் குரலைக் கேட்டவுடன் அரக்கப் பறக்க இறங்கி ஓடிப் போன அவர்  உங்களோடு கூட வந்திருக்கலாம் என்றோ ஒரு நாள்  ஏதோ ஒரு பேருந்தில்..! தேவா சுப்பையா...

பனை மரக் காடே.... பறவைகள் கூடே..!

ஊருக்கு நடுவேயிருந்த  பெருந்திண்ணைகளை காட்டி கேட்டான் பேரன் இது என்னப்பத்தா..? இதான் மொளக்கூட்டுத் திண்ணைப்பே...மாரியாத்தாளுக்கு பொங்க வச்சு இங்கனதேன் மொளப்பாரி எடுப்போம் என்றாள் அவள்... யாருமற்ற திண்ணையை வெறித்தபடி கடந்தான் சிறுவன். ஒரு  வீட்டுத் திண்ணையில் சுருங்கிப் படுத்திருந்த  மீசைக்கார தாத்தாவைக் காட்டி இது யாருப்பத்தா இம்புட்டு பெரிய மீசை...? அவருதேன் நம்மூரு நாட்டமைப்பே...நாட்டாமைன்னா  என்னப்பத்தா...? நம்மூருல எதுவும் பெரச்சினையின்னா முன்னாடி எல்லாம் அவருகிட்டதேன் போய்ச்சொல்லுவோம், நீ பாத்தியே மொளக்கூட்டுத் திண்ணை அங்கதேன் வச்சு நாயம் சொல்லுவாக...? முன்னால் நடந்து கொண்டிருந்தாள் கிழவி... உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. வெறிச்சோடிக் கிடந்தது தெரு. தெரு முழுதும் செம்மண் புழுதி. செருப்புல்லாம நடக்கிறியே அப்பத்தா கால் சுடலையா உனக்கு....? பழகிப்போச்சப்பே...வெரசா வா என்று கையைப் பிடித்து அழைத்து நடந்தாள் அப்பத்தா. ஏம்பத்தா இதென்னப்பத்தா இம்புட்டு மேடா இருந்துச்சு இது மேல ஏத்திக் கொண்டு வந்து  என்ன நிப்பாடி வச்சிருக்க ஒரே கு...

பாம்பு வந்திருச்சு....!

திடீரென்று ரமாதான் கத்தினாள். ஞாயிற்றுக் கிழமை மதியத்தை ஓய்வாய் ஈசிஸேரில் படுத்து கழித்துக் கொண்டிருந்த பரந்தமான் கையிலிருந்த குமுதத்தைத் தூக்கி எறிந்து விட்டு  பதறி அடித்துக் கொண்டு அடுக்களைக்குள் ஓடினார். வாசலில் பம்பரம் விட்டுக் கொண்டிருந்த பாபு பம்பரத்தை திண்ணையில் வீசி விட்டு வீட்டுக்குள் ஓடினான்.டேய்.. தம்பி உள்ள வராதடா.....அடுக்களைக்குள்ள பாம்பு வந்திருக்குடா என்று மாலு கத்தியபடியே திண்ணைக்கு ஓடி வந்த போது அவள் சப்தத்தைக் கேட்டு அறைவீட்டிற்குள்ளிருந்து லுங்கியை தூக்கிக் கட்டியபடி எங்கடி பாம்பு...? என்று வெளியே வந்த முரளியிடம் கிச்சன்ல அண்ணா என்று பயந்தபடியே சொன்னாள் மாலு... முரளி கிச்சனுக்குள் சென்ற போது அவளுடைய அம்மா ரமாவும், அப்பா பரந்தமானும் கையில் விறகுக் கட்டைகளோடு நெல் கொட்டி வைத்திருக்கும் பத்தாயத்துக்குப் பின்னால் இருந்த அண்டா குண்டக்களைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். டேய்... நீ சின்னப் பையன் வெளில போடா பாம்பு உன்னைப் பிடுங்கி கிடுங்கி வைக்கப் போகுது...போய் வாசல்ல தம்பி தங்கச்சிகள பாத்துக்க என்று சொன்ன ரமாவைப் பார்த்து அப்போதுதான் கொஞ்சமமாய் அரும்பிக் கொண்ட...

கிணற்றடி...!

வீடு கட்டுவதற்கு முன்பு வெட்டிய கிணறு அது என்று பாட்டி சொன்னாள். தாத்தா அப்போது ரங்கூனில் இருந்தாராம். குடிசை வீடாய் இருந்த போது தரைக் கிணறாய் இருந்ததை மாற்றி சுற்றுச் சுவரெழுப்பி கயிறு போட்டு கையால்தான் தண்ணீர் இழுத்திருக்கிறாள் பாட்டி. ரங்கூனிலிருந்து வந்த தாத்தா பக்கத்தூர் செவ்வாய்க்கிழமை சந்தையில் உசைன் பாய் கடையில் வாங்கி வந்து மாட்டி இருக்கிறார் அந்த சகடையை. சாரக்கயிறை போட்டு தாத்தா தண்ணீர் இறைக்கும் லாவகமே தனியாம், வீடு கழுவ, பாத்திரங்கள் கழுவ, எப்போதும் வீட்டுப் பெண்களும் அவ்வப்போது ஆண்களும் கிணற்றடியில் குளிப்பார்களாம்... பாட்டிக்கு பத்துப் பிள்ளைகள். பத்து பிள்ளைகளின் அத்தனை தேவைகளையும் தீர்த்து வைத்தது அந்தக் கொல்லைப்புறக் கிணறுதான். விடியற்காலையில் ஓட ஆரம்பிக்கும் சகடை பின்னிரவு வரை ஓடித் தீர்த்து விட்டு ஒரு சில மணி நேரம் மட்டுமே கொஞ்சம் ஓய்ந்து கிடக்குமாம். பிரம்ம முகூர்த்தத்தில் மனிதர்கள் விழிக்கும் முன்பு சகடை விழித்துக் கொண்டு காத்திருக்குமாம்... காலை நாலு மணிக்கு கர்ர்ர்க்ரர்க்க்க்ர்ரகரவென்று அந்த கிராமத்து வீடுகளின் எல்லா வீட்டுக் கிணறுகளிலும் சகடைகள் உர...

ராஜாவாக இருப்பதென்பது...!

ராஜாக்கள் உலகம் கொடுமையானதுதான்... தீரம் என்ற பெயரில் எல்லாவற்றிற்கும் முன் செல்ல வேண்டும்... கோடி பேருக்கு ஒரு நீதி சொல்லி அது சரிதான் என்று நிறுவ வேண்டும்... ஒவ்வொரு நிமிடத்திற்குள்ளும் ஒளிந்திருக்கும் ஆபத்துக்களை கெதக் கெதக் என்று கடக்க வேண்டும்... பயப்படாத மனிதன் உண்டா இந்த புவியில்வ்.? ஆனால்... ராஜாக்கள் வாழ்க்கையில் பயப்படவே கூடாது... உடல் முடியாத போதும் கம்பீரமாய் நடக்கப் பழகவேண்டும்... குரல் வரவில்லை என்றாலும் கர்ஜிப்பது போல நினைத்துக் கொண்டு மியாவ் என்றாவது சப்தமெழுப்ப வேண்டும் ஊரையே நடு நடுங்க வைத்து விட்டு நம்பிக்கையின் நாயகனென்று முகம் இறுக்கி, உதடு துடித்து மீசை முறுக்கிவிட்டு... மொத்தத்தில்... வலிக்காத மாதிரியே நடிக்க வேண்டும்... ஆமாம்... பேரவஸ்தைதான் ஒரு ராஜாவாக இருப்பதென்பது...! தேவா சுப்பையா...