
வல்லரசு கனவோடு...இந்தியாவின் வருங்காலம்....!
செல்லரித்த...கட்டைகளாய்...
தெருவின் ஓரங்களில்...!
2020லாவது... ஏக்கங்கள் தீராதா....
தெருவோரம்.. பிச்சை என்னும்...தீட்டு நீங்காதா?
கடல் நீரை குடி நீராய்...
மாற்றும் திட்டத்தோடு...
இவர்களின் கண்ணீரை நிறுத்த..ஒரு திட்டமுண்டா...!
எத்தனை தலைமுறைதான்...
தெருமுனையில் ஜனித்து...
நடை பாதையில்... வளர்ந்து...
ஒவ்வொரு சிவப்பு சிக்னலையும்...
வாழ்வாதாரமாக நம்பி வழுமோ?
தெருவோர அகதிகள்....
இவர்களுக்கு ஒரு இயக்கம் உண்டா?
முள்கம்பி இல்லா.. வெற்றிடத்தின்...
ஜன நாயக...அடிமைகள்...
காக்க ஒரு கட்சி உண்டா!
சமுதாய சாக்கடையின்...அடையாள புழுக்களாய்...
தன் பரம்பரை சொத்தாய்...
வறுமையை வாரிசுகளுக்கு...எழுதி வைக்கும்....
காம உச்சத்தின்... அடையாளமாய்...
இனி ஒரு பாரதி ..வருவானா?
உணவில்லா இந்த தனி மனிதர்களுக்காக ..
ஜகத்தினைத்தான் அழிப்பானா?
- சென்னை செல்லும் போது எல்லாம் மிகுந்த மனவருத்தத்தோடு நன் உற்று நோக்கிய விசயம் ..இந்த நடை பாதை குழந்தைகள்! ஒவ்வொரு சிக்னலிலும் நான் காத்திருக்கும் போது...என் கண்கள் கசிவது வாடிக்கையான ஒன்று!
கைக்குழந்தைகளோடு பிச்சை எடுக்கும் பெண்களை நினைக்கும் போது ... வக்கில்லாமல்... இவர்களை வெளிக்கொண்டு வரும் இவர்களின் காமத்தின் மீது கோபம்வரும்; எந்தவித... சம்பந்தமும் இன்றி.. இவர்களை இந்த சூழ் நிலைக்கு தள்ளிய இறைவன் மீது கோபம் வரும்! கார்களிலும் பேருந்திலும், பைக்குகளிலும் லட்ச லட்சமாய் செல்லும் மக்களுக்கு வாடிக்கையான காட்சிகள்தான் இவை என்றாலும்...இந்த நிலையை மாற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத ... அரசின் மீது கோபம் வரும்!
சாமானிய என் கோபம் என்ன செய்து விடும்... ஒரு கவிதையாவது எழுதலாமே என்ற எண்ணத்தின் விளைவில்..தெரித்த வார்த்தைப் பொறிகள்தான் இந்த கவிதை. எங்காவது ஒரு இடத்தில் எனது சிறு பொறி பட்டு பெரும் தீப்பிழம்பாய் மாறி...வரும் காலங்களில்.. சிறார்கள் எந்த இடத்திலும் பிச்சை எடுக்காமல் இருந்தால் சரிதான்.
தேவா. S
Comments
இந்த ரவுத்திரம் அப்படியே இருக்கட்டும்
எல்லா இடங்களுக்கும் பரவட்டும்...!
ஒருநாள் கண்டிப்பாக கொதித்து வெளிப்படும் ...!
அப்போது இந்த அவலங்கள் அழிந்து விடும்..!
......................................நம்பிக்கையுடன்...!
உணவில்லா இந்த தனி மனிதர்களுக்காக ..
ஜகத்தினைத்தான் அழிப்பானா?
........இந்த கோபத்தீ போதுமே!
////கைக்குழந்தைகளோடு பிச்சை எடுக்கும் பெண்களை நினைக்கும் போது ... வக்கில்லாமல்... இவர்களை வெளிக்கொண்டு வரும் இவர்களின் காமத்தின் மீது கோபம்வரும்;////
பல சமயங்களில், அந்த குழந்தைகள், அவர்கள் குழந்தைகளாய் இருப்பதில்லை என்பது கவலைக்குரிய/பிரச்சினைக்குரிய விஷயம்.
பதிவுடன் தந்திருக்கும் பாடலும் பொருத்தம்.
காட்சிகள் மாறட்டும் விரைவில்...