
வெள்ளைப் பேப்பரில்...பாலைவனத்து ஒட்டகம் போல...
எப்போதும் ஊறும் என் பேனா....
உனக்காக கடிதம் எழுத திறக்கும் போது...
நயகராவாய்...வார்த்தைகளை இறைப்பது எப்படி?
கூட்டத்தில் இருந்தாலும் தனித்து கிடக்கும் மனது...
உன் நினைவுகளோடு இருக்கும் போது....
திருவிழாவாய் குதுகலிப்பது எப்படி?
ஏதோரு ஒரு உணர்வு....இருக்கும் ஒன்றை...
இல்லாமல் வெளியே... காட்டிக் கொண்டு....
மெளனமாய் மனதுக்குள்...
பூக்களை இறைத்து...விளையாடுவது எப்படி?
வந்து விழும் வார்த்தைகள் எல்லாம்...
உன் நினைவுகளுக்குள்...மூழ்கி வருவதால்...
கவிதையாய் உருமாறி...
காவியமாய் ஜொலிக்கிறதே...எப்படி?
சாரலாய் நீ சிரிக்கும் போது....
சிதறி விழும் முத்துக்களாய்.....
வெளிவரும் சப்தங்கள்...
வேத மந்திரமாய்..என்னை மூர்ச்சையாக்கி...
சமாதி நிலையில் தள்ளுகிறதே...எப்படி?
சூட்சுமமாய் எனைத் தீண்டி...உடலற்ற....
வெட்டவெளியில்...எனைத்தள்ளிவிட்டு..
நினைவுகளால் எனை நிறைத்து....
என் நினைவுகளை நீ அறுத்து....
ஏகாந்த வெளியில் நிரந்தர...மோகத்தில் தள்ளிவிட்டு.....
தூர நின்று சிரிக்கிறாயே....எப்படி?
கேள்விகளால்..மனம் அறுந்து...
உன் குரல் கேட்டு மீண்டும் நான் பிறந்து...
இன்னுமொரு பிறப்பெடுத்து...உன்னைத்தேடி அலைவேனோ....?
ஏதோ ஒரு காலத்தில்...ஒரு..தடிமனான ஜென்மத்தில்...
உன்னை விட்டு வந்த பாவத்தில்...
இப்போது கேள்விகளில்...வாழ்கிறேனோ?
ஒரு பெண் தன்னை நேசிக்கிறாள் என்ற விசயம் ஒருவனுக்குள் ஏகப்பட்ட மாற்றங்களை உருவாக்கும்...அந்த காதலை தியானம் செய்ய செய்ய... கண்டெடுத்த வார்த்தைகளை கோர்த்த போதுதான் இந்த கவிதை கிடைத்தது.
காதலுக்கும், காமத்துக்கும், கடவுளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காலம் காலமாக எம்மக்களுக்கு தவறாக போதிக்கப்பட்டுள்ளது...! காதலும்...காமமும் தான் இந்த பிரபஞ்சத்தை இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது...பூமியும் இன்ன பிற .... கோள்களின் மீது சூரியன் வைத்திருக்கும் காதாலால்தான்... நாம் இருக்கிறோம். இது ஒரு சிறிய உதாராணம்... சுகமான காதல் கொள்ளுங்கள் நேர்மையான காமம் கொள்ளுங்கள்...உங்களோடு இறைவன் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்....!
- தேவா.
Comments
உன்னை விட்டு வந்த பாவத்தில்...
இப்போது கேள்விகளில்...வாழ்கிறேனோ?
............ கவிதை நீர்வீழ்ச்சியில், உங்கள் உணர்வுகளும் கருத்துக்களும் விழும் விதம், அருமை. பாராட்டுக்கள்!
இப்படியான உங்களின் புரிதல்கள் எல்லோருக்கும் வருவது கடினம். ஆழமான கவிதையும் அதன் பின்னான வரிகளும் பாடம் சொல்லி கொடுக்கிறது.
நன்றி