
நீ இல்லாத நேரங்களில்….
மெளனமான பொழுதுகளில்தான்...
மனம் ஒரு குழந்தையைப்போல விழிக்கிறது....
பூக்களிலிருந்து பரவும் வாசம் போல...
அத்துமீறி என்னை ஆக்கிரமிக்கிறது...காதல்....
ஒரு குழந்தையைப் போல...முரண்டு பிடித்து...
மீண்டும் மீண்டும்....
உன் நினைவுகளை என்னுள் கொட்டி…
மார்கழி குளிராய் மனது நிறைக்கிறது......
கரை தொடும் அலைகள் போல...
ஒவ்வொரு நினைவும்...
தவணை முறையில்..
நெஞ்சம் நனைக்கின்றன...
ஒவ்வொரு நிமிடத்தையும்
நகர வைத்து
உன்னைவிட்டு நகர மறுக்கிறது... மனது!
நீ இல்லாத நேரங்களில் தான்....
உன் நினைவு அதிகமாயிருக்கிறது...
இன்னும் சொல்லப்போனால்...
அது நீ இருப்பதை விட .... சுகமாயிருக்கிறது....!
நீங்ககள் உற்று நோக்கி கவனித்து இருந்தால்...காதலிக்கும் தருணங்களில்...காதலி அருகில் இருக்கும் நேரங்கள் பெரும்பாலும் அவளது இருப்பை நமக்கு உணர்த்துவது இல்லை. மனைவியோ அல்லது காதலியோ இல்லாத போது அந்த வலி கொடுக்கும் சுகமே அலாதிதான்.
காத்திருக்கும் நேரங்களில் தான் காதலை உணர முடியும்... அப்போது காதல் என்பது நமக்குள் இருப்பது...அதை தூண்டும் சக்தியாகத்தான் ஒரு பெண் இருக்க முடியும் என்று..புரிந்து கொள்ள முடிந்தது. அப்படியான ஒரு காதலின் சக்தி எனை ஆளுமை செய்த தருணத்தி....தவழ்ந்து வந்தது தான் இந்த கவிதைக்குழந்தை.........!
- தேவா. S
Comments
அருமை...!
உன் நினைவு அதிகமாயிருக்கிறது...
இன்னும் சொல்லப்போனால்...
அது நீ இருப்பதை விட .... சுகமாயிருக்கிறது....!}}}}
அருமையான கவிதை நண்பரே!!!
நகர வைத்து
உன்னைவிட்டு நகர மறுக்கிறது... மனது!
நீ இல்லாத நேரங்களில் தான்....
உன் நினைவு அதிகமாயிருக்கிறது...//
unmai.
உன் நினைவு அதிகமாயிருக்கிறது...
இன்னும் சொல்லப்போனால்...
அது நீ இருப்பதை விட .... சுகமாயிருக்கிறது....!//
ஹ்ம்ம்ம் ..... அழகான கவிதைக் குழந்தை.. :-))