Skip to main content

தமிழீழம் வென்றெடுப்போம்....!


என்னமோ...விடுதலைப்புலிகளை கூண்டோடு அழித்து விட்டோம்...வெற்றி கண்டு விட்டோம் என்று கொக்கரிக்கிறாயே...ராஜ பக்ஸே உன் கூட சேர்ந்து உன் ராணுவமும் கொக்கரிக்கிறதே...உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா? உள் நாட்டுக்குள் விடுதலை கேட்டு தார்மீக அடிப்படையில் உங்களின் அராஜகம் தாங்காமல் போராடிய ஒரு இளைஞர் கூட்டதை அழிக்க.....உலக நாடுகள் எல்லாம் வரவேண்டும் என்றால்....மறவர் படையின்...மரத் தமிழனின் வீரம் எத்தகையது என்று நாம் உணர முடியும்.

வல்லரசுக் கனவோடு....இன்னும் ஊழல் நிறைந்த சாக்கடை அரசியல் நடத்தி கொண்டு....மகாத்மாவின் பெயரை சொல்லிக் கொண்டு.......பழிவாங்கும் உணர்வையும் மென்று வெற்றிலை போட்டு தன் மேலேயே...உமிழ்ந்து கொண்ட....பாரதமே.... நீங்கள் எதையும் சாதித்து விட வில்லை....என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்....மேலே...சீனாகாரன் வருவான் உங்களை கேள்வி கேட்க....அப்போது முடிந்தால் பதில் சொல்லுங்கள்...! இலங்கையில் நீங்கள் செய்திருப்பது....முரசு கொட்டிய வெற்றியில்லை....கேவலமான.....அசிங்கம்.....தரும புத்திரர்களே.....ஏன் சகுனியைப் போல் நடந்து கொண்டீர்கள்....வாழ்விழந்த மக்களின் சாபம்..என்னவெல்லாம் உங்களை செய்யுமோ?

இப்படி சீனாகாரனிடமும், பாகிஸ்தான்காரனிடமும்...பிச்சை எடுத்து ஒரு.... இன அழிப்பை நடத்திவிட்டு என்ன கொக்கரிப்பு வேண்டி கிடக்கிறது? வரலாற்றில்...ஒரு முக்கியமான விசயம் நடந்தேறி விட்டது....அதில் தமிழனின் பராக்கிரமம்....பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு விட்டது. அது என்ன தெரியுமா? ஒரு உள் நாட்டிற்குள் உரிமை கேட்டு போராடிய குழுவை ஒழிப்பதற்கு...உலகமே திரண்டு வந்து....சண்டையிட வேண்டிய நிலைமை....என்றால்....தமிழனின் வீரம் எத்தகையது என்று சொல்லத்தேவையில்லை....

தனியே....ராஜ பக்ஸேயும் அவரது....கூட்டணியும் போரிட்டு இருந்தால்.....சிங்களவனின்...சாம்பல் கூட மிஞ்சி இருக்காது...இந்த உண்மை உலகத்துக்கே தெரியும்.......! காலச்சக்கரம்...தன் சுழற்சியை...இன்னும் நிறுத்த்திவிடவில்லை....அந்த சுழற்சியில்...சூழ்ச்சி வேர்கள் கட்டாயம் அறுந்து போகும்.....!

முட்டாள் சிங்களவன் ஒரு பிரபாகரனை..ஒழித்துவிட்டதாய்...கொக்கரிக்கிறான்......ஆனால் ஒவ்வொரு உண்மைத் தமிழனும் இன்று பிரபாகரனாய் மாறி நிற்கிறான்...தமீழீழம் வென்றெடுக்க.....!


தேவா. S

Comments

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தன் சொன்னதாக பாடத்திட்டத்தில் எழுதி வைத்துள்ளனர், இதை சொன்ன புத்தன் மடையனா, இல்லை நம்மையெல்லாம் படிக்க வைத்துள்ளதால் நாம் மடையர்களா, புத்தம் தேசிய மதம் என வைத்துகொண்டு மாரடிக்கும் இலங்கையில் அன்பு உள்ளதா இல்லை அமைதி உள்ளதா மனிதனை மனிதனாக மதித்து அன்பையும் அறிவையும் போதிக்கவேண்டிய ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் படுகொலை நடத்தினால் கண்டிக்கிறது. இலங்கை சம்பவத்தில் ஏன் நடிக்கிறது
இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் இலங்கை எவ்வாறு திகழ்கிறது என்று தமிழன் தமிழனாக வாழவேண்டுமானால் தமிழ் ஈழம் அமைந்தே தீரவேண்டும் ஈழத்தின் விடுதலை நெருப்பு இலங்கையை எரிக்கட்டும் இனமான தமிழினம் எழுச்சியுடன் எழும்பட்டும் , இன்னல்களையே தன்னகத்தே கொண்டு இன்னுயிர் ஈந்த போராளிகளுக்கும் இனிய தமிழ் உறவுகளுக்கும் வீரவணக்கம் செய்வதோடு நின்று விடாமல் வீர சபதம் மேற்கொள்வோம்...
பொட்டில் அடித்தாற்போல் சொல்லிருக்கிறாய் நண்பா...

என்றும் வாழ்க தமிழ்! எங்கும் வெல்க தமிழனின் வீரம்!

வாழ்த்துக்கள்.
அன்பன்,
ராம்
Chitra said…
////வல்லரசுக் கனவோடு....இன்னும் ஊழல் நிறைந்த சாக்கடை அரசியல் நடத்தி கொண்டு....மகாத்மாவின் பெயரை சொல்லிக் கொண்டு.......பழிவாங்கும் உணர்வையும் மென்று வெற்றிலை போட்டு தன் மேலேயே...உமிழ்ந்து கொண்ட....பாரதமே.... நீங்கள் எதையும் சாதித்து விட வில்லை....என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.///


..... ம்ம்ம்ம்....... வேதனையான விஷயம்.
INDIA 2121 said…
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
நிச்சயம் ஒருநாள் தர்மம் வெல்லும்
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
//இலங்கையில் நீங்கள் செய்திருப்பது....முரசு கொட்டிய வெற்றியில்லை //

மறுக்க முடியாத உண்மை..
உங்கள் மன வேதனையை உணர முடிகிறது.. சொன்ன விதம் சிறப்பு, தேவா.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...