Skip to main content

புறம்.....!


















ஒரு நிசப்தமான இரவில்
வெற்று வானமும் ஒற்றை நிலவும்
என் உயிர்தடவிய கணங்களை
எழுத நினைத்த நிமிடங்களில்
வந்தது உன் நினைவு...!

கலைந்து செல்லும் மேகங்களில்
மறைந்து நின்று கண் சிமிட்டுவது...
நீயென்று கணித்து முடித்த கணத்தில்...
கை கொட்டி சிரித்தது .... நட்சத்திரம்...!

உடல் ஊடுருவி அணைத்தது
நீதான் என்று உணர்ச்சிவயப்பட்ட நேரத்தில்
பரிகசித்து..பயணம் முடித்திருந்தது
நடு நிசியின் ஊதக் காற்று....

கிறக்கத்தில் கண்மூடினால்...
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!


காதலில் தகிக்கும் எல்லோரும் 240 வால்ட் மின்சாரத்தை உடம்பில் ஏற்றுக் கொண்டிருப்பவர்கள்தான். ஒரு இரவின் வெறுமையில் ஒற்றை நிலவும் ...ஒரு நிலவுதான் யார் இல்லேன்னு சொன்னது...? காதல் தகிப்பில் ஒரு நிலவு என்பதே பெரிய சிலாகிப்பாக தெரிகிறது. காதல் வயப்படும் கணங்களில் எல்லாமே அர்த்தம் பொதிந்ததாயும் ஒரு வித குழந்தையை ஒத்த மனோ நிலையும் ஏற்படுவதுதான் அழகு.

ஒரு படத்துக்கு ட்ரெய்லர் மாதிரிதான்...ஆன்மிக உச்சத்துக்கான ட்ரெய்லர் காதல் அனுபவம். பெரும்பாலும் அதனை அன்னம் பிரிக்கும் பால் போல பிரித்து...உருவம் விலக்கி அருவத்தை உள்ளே வைத்து...அதாவது உணர்வுகளை உள்ளே படரவிட்டு....அதில் லயித்துக் கிடப்பது ஒரு அலாதியான அனுபவம். இந்த சந்தோசம் எங்கே இருந்து கிடைக்கிறது... நமக்குள்ளேதான்...ஆனால் அதற்கு ஒரு தூண்டு சக்தி....புறத்தில் தேவைப்படுகிறது....

பழக..பழக... புறத்தின் தொடர்பறுந்து..... நமக்குள் நாமே காதலோடு நிறைந்து கிடக்கும் ஆச்சர்யமும் நடக்கும்....அதற்கு..தேவை புரிதலுடன் கூடய பொறுமையான பயணம்.....!


தேவா. S




Photo Courtesy: Ms. Ramya Pilai
Article & image copy right @ http://maruthupaandi.blogspot.com

Comments

Chitra said…
////உருவம் விலக்கி அருவத்தை உள்ளே வைத்து...அதாவது உணர்வுகளை உள்ளே படரவிட்டு....அதில் லயித்துக் கிடப்பது ஒரு அலாதியான அனுபவம்.////


..... அனுபவம் பேசுதோ? ரைட்டு!!!
Chitra said…
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்

.... sweet!!!
கிறக்கத்தில் கண்மூடினால்...
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!

//


அவளின் (அவர்களின்) நினைவுகளால் உறக்கம் தொலைத்ததொடு மட்டுமல்லாமல் உங்களையும் தொலைத்திருக்கிரீர்கள்..
Jey said…
இளமை திரும்புகிறது தேவாவுக்கு....:)
பழக..பழக... புறத்தின் தொடர்பறுந்து..... நமக்குள் நாமே காதலோடு நிறைந்து கிடக்கும் ஆச்சர்யமும் நடக்கும்....அதற்கு..தேவை புரிதலுடன் கூடய பொறுமையான பயணம்.....!

//


Nice lines
பழக..பழக... புறத்தின் தொடர்பறுந்து..... நமக்குள் நாமே காதலோடு நிறைந்து கிடக்கும் ஆச்சர்யமும் நடக்கும்....அதற்கு..தேவை புரிதலுடன் கூடய பொறுமையான பயணம்.....!

//


Nice lines
dheva said…
சித்ரா...@ அனுபம் எப்போ பேசியிருக்கு...கவிதைதான் எழுதுது...ஹா..ஹா..ஹா..!
dheva said…
ஜெய்...@ பங்காளி...எப்போ நமக்கு வயசாச்சு.....?
dheva said…
வெறும் பய தம்பிய பாருங்க..காதல்னா துள்ளி குதிகிறான்..வேற கட்டுரைனா...பம்முறான்....ஆமா எங்க ஏமியோட காதலனை காணோம்....?
Ramesh said…
உணர்வுகளில் லயித்துக்கிடப்பது...அருமையாக எழுதி இருக்கிறீர்கள் தேவா....
காதலி முகத்தை பார்த்து விட்டால், எதற்கு தனியாக ஒரு நிலவு. அது தேவையே இல்லையே! ;)
dheva said...

வெறும் பய தம்பிய பாருங்க..காதல்னா துள்ளி குதிகிறான்..வேற கட்டுரைனா...பம்முறான்....ஆமா எங்க ஏமியோட காதலனை காணோம்....?

//

நமக்கு இந்த காதல் மட்டும் தான் ஈசியா மண்டையில ஏறுது.. மத்ததெல்லாம் பம்முது..... இப்போ கூட பாருங்க மத்ததெல்லாம் பத்து தடவை படிச்சா கூட புரியமாட்டேங்குது.. இது ஒரு தடவை தான் பாத்தேன் பக்குன்னு ஒட்டிகிச்சு..
//கிறக்கத்தில் கண்மூடினால்...
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!// எனக்கு மட்டும் இந்த மாதிரி கனவு வரவே மாட்டேங்குதே. காதலும் கண்ணாமூச்சியாட்டம் ஒன்னுதாண்ணே.
nis said…
நல்லா இருக்கிறது
//அதாவது உணர்வுகளை உள்ளே படரவிட்டு....அதில் லயித்துக் கிடப்பது ஒரு அலாதியான அனுபவம்// ரொம்ப சரிண்ணே.... சூப்பரா இருக்கும். கூடவே ஒரு பெருமூச்சும் சேர்ந்து வந்தா என்ன அர்த்தம்ணே
அடி மின்சார ரயிலே
உன்னோடு பயணிக்க ஊரார் ஆசைபட
ஒத்தையாக என்னோடு வந்தாய்

தண்டவாளத் தனிமையில்
தவழ்ந்தோடலாம்

தாக்குப் பிடிக்க நான் தயார்
தெறத்தோட நீ தயாரா ?


என்னடா ஜில்லு கவிதலாம் எழுதுற ???
சரி எதோ பீலிங்க்சுல கிறுக்கிட்டனோ :)

ஃபீலிங்கசை வர வழைத்த தேவா அண்ணனுக்கு நன்றி :)
//இந்த சந்தோசம் எங்கே இருந்து கிடைக்கிறது... நமக்குள்ளேதான்...ஆனால் அதற்கு ஒரு தூண்டு சக்தி....புறத்தில் தேவைப்படுகிறது....//

உண்மையான வார்த்தைகள்! அப்படியே ஓஷோவை நினைவு படுத்துகிறது உங்க வார்த்தை தேவா!


நண்பா! நீங்க நம்ப பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சுதே! எப்போ வர்றீங்க?

http://uravukaaran.blogspot.com/

புது பதிவுகளை போட்டிருக்கேன். வந்து பாருங்க!
sakthi said…
கலைந்து செல்லும் மேகங்களில்
மறைந்து நின்று கண் சிமிட்டுவது...
நீயென்று கணித்து முடித்த கணங்களில்
கை கொட்டி சிரித்தது .... நட்சத்திரம்...!


தேவா நல்ல வரிகள்
கோர்த்திருக்கும் விதம் அருமை
Unknown said…
Fantastic flow....
பத்மா said…
நிலவினால் உண்டாகும் மனக்கிளர்ச்சி எத்தனை யுகமானாலும் மாறாது .... நிலவு ஒரு catalyst ....
jey இளமை திரும்புகிறது தேவாவுக்கு....:)

jey@@@ பொய் சொன்னாலும் அளவோடு சொல்லணும்
அருமை பதிவு...
..... அனுபவம் பேசுதோ? ரைட்...!
Unknown said…
ரொம்ப நல்லாயிருக்குங்க..
உணர்வுகளச் சொல்றதுல உங்கள மிஞ்ச முடியுமா?
// காதல் வயப்படும் கணங்களில் எல்லாமே அர்த்தம் பொதிந்ததாயும் ஒரு வித குழந்தையை ஒத்த மனோ நிலையும் ஏற்படுவதுதான் அழகு.//
ஐயோ அத ஏன்னா கேக்குறீங்க .. அது ரொம்ப ரவுசு பண்ணுது .. ஆனா நல்லாத்தான் இருக்கு ..
Anonymous said…
ரொம்ப நாளாக உங்க பதிவை படித்துக் கொண்டு
இருக்கிறேன், இது வரை கருத்துரை இட்ட்து இல்லை...வாழ்த்த வயதில்லை...வணங்குகிறேன்....
//காதலில் தகிக்கும் எல்லோரும் 240 வால்ட் மின்சாரத்தை உடம்பில் ஏற்றுக் கொண்டிருப்பவர்கள்தான்.//


லைவ்வா இல்ல நெகட்டிவ் மட்டுமா...ஹி..ஹி..
vinthaimanithan said…
காதலிச்சா இப்படியெல்லாம் நடக்கும்தான்...!
விஜய் said…
எப்படி அண்ணா இப்படி எல்லாம் எழுதுறீங்க ...போங்க...நிறையா கத்துக்கணும் உங்ககிட்ட..
சின்னதா ஒரு விசயத்த எடுத்துகிட்டு எப்படி எல்லாம் எழுதுறீங்க ...

//கிறக்கத்தில் கண்மூடினால்...
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!//

ஐயோ என்ன வரிகள்....அண்ணா பின்னீட்டீங்க..சிலவற்றை கத்தி பாராட்டியே தீரனும், அந்த மாதிரி அருமையான பதிவு
//கிறக்கத்தில் கண்மூடினால்...
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!//

இந்த காதல் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுலன்னா காலைப் பொழுது பிரகாசமாய் விடிந்திருக்கும். உண்மைதான் காதல் அகத்தில் பிரகாசம், புறத்தில் பரிகாசம்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...