Skip to main content

சிதறல்...!
















யாரோ கல்லெறிந்திருக்கிறார்கள்
இந்த முறையும்...தப்பாமல்
நடனமாடுகிறது குளம்....
தடுமாறி நிற்கிறேன் நான்!

***

நிசப்தமான நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!

***

ஒரு மழை
ஒரு சாரல்
ஒரு காதல்
ஒரு கவிதை
நீ.....!

***

பேருந்துப் பயணம்
ஜன்னலோர இருக்கை
வழி நெடுக வாழ்க்கை
பார்வையாளனாய் நான்....!

***

ஒரு சிட்டுக் குருவி
ஈரச் சிறகு..
படபடக்கும் உலர்த்தல்
சிறகடிக்கும் மனசு...!

***

காற்றில் பறக்கும்
சருகுகள்....
கலைந்து திரியும்
மனிதர்கள்.....
நிற்கப் போகும் காற்று!

***

கனவுகள் மொய்க்கின்றன
நீ சிந்திச் சென்ற
புன்னைகையின் மிச்சங்கள்
இன்னும் இறைந்து கிடக்கின்றன
மூளைக்குள்...!

***



தேவா. S

Comments

Anonymous said…
//பேருந்துப் பயணம் ஜன்னலோர இருக்கை வழி நெடுக வாழ்க்கை பார்வையாளனாய் நான்....!/// கவிதைகள் ரசனை... பேருந்துப் பயணம் உண்மையை உணர்த்தினாலும் Classic.

By சே.குமார் on சிதறல்...! on 11/16/10

==========================================

அழகான கவிதைகள் மாப்ஸ்...
By TERROR-PANDIYAN(VAS) on சிதறல்...! on 11/15/10

==========================================


//நிசப்தமான நடு நிசி குளிரில் நடுங்கிக் கொண்டே நடக்கிறேன்.... சூடான உன் நினைவுகளோடு....!// ஓஹோ
By அன்பரசன் on சிதறல்...! on 11/15/10


=============================================

அருமைண்ணா ஒவ்வொன்னும்.. புது டெம்ப்ளெட் மின்னுது :)
By இராமசாமி கண்ணண் on சிதறல்...! on 11/15/10

==============================================

பேருந்துப் பயணம் ஜன்னலோர இருக்கை வழி நெடுக வாழ்க்கை பார்வையாளனாய் நான்....! truth
By Anonymous on சிதறல்...! on 11/15/10
ஹேமா said…
தேவா...ஒவ்வொன்றும் ஒவ்வொரு செய்தி சொல்வதாய் நல்லாயிருக்கு !
கவிதைகள் அனைத்தும் அருமை. குறிப்பை பயணக் கவிதை
கவிதைகள் அனைத்தும் அருமை அண்ணா
//யாரோ கல்லெறிந்திருக்கிறார்கள்//

ஊ புல்லா வம்பிழுத்தா கல்லால அடிக்காம என்ன பண்ணுவாங்க?

//இந்த முறையும்...தப்பாமல்//

செம அடியா?
//நடனமாடுகிறது குளம்....
தடுமாறி நிற்கிறேன் நான்!//

ஜோடி no 1 ல சேத்துடுவமா? இல்லை மானாட மயிலாட?
//நிசப்தமான நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!///

நா வேணா ஒரு சஜஷன் சொல்லவா..? அப்படியே சூடா ஒரு கப் காபி-யும் குடிங்க.. :D :D
குட்டிக் கவிதைகள் அனைத்தும் அருமை.. :-))
அனைத்தும் அருமை... ஒவ்வொன்றும் கதைகள் சொல்கின்றன...
//காற்றில் பறக்கும்
சருகுகள்....
கலைந்து திரியும்
மனிதர்கள்.....
நிற்கப் போகும் காற்று!//
அருமையான ஒப்பீட்டு உவமை மாப்ள...

//நிற்கப் போகும் காற்று!//
இந்த வரியை நான் ரொம்பவே ரசிச்சேன்...
அருமையான..கவிதைகள்..!
இவைகள் வெறும் "சிதறல்" அல்ல;
ஒவ்வொன்றும் முத்துச் சிதறல்கள்!!

மிக நன்று..
Anonymous said…
அண்ணா செம! :)
இது


இது எவ்வளோ அழகா ரசிக்க முடியுது... இதவிட்டுட்டு தேடல், புரிதல்னு குழப்ப கவிதை எழுதிட்டு...

எல்லாமே கலக்கல் அண்ணே
sakthi said…
நிசப்தமான நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!

கிளாஸ் தேவ்
Ganesan said…
simple wordings but nice to feel. i love this...
And i shared this page in facebook....
மிக அருமையாக உள்ளன அனைத்தும்!
Unknown said…
இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம் ...
Ramesh said…
வாவ் அற்புதம். சிதறல்களை அன்புடன் ஏற்றுக்கொள்ளும் சிதறல்கள்...என்னோட வலைப்பதிவு பெயரே இதுதான்(ரெட்டை மகிழ்ச்சி)
Ramesh said…
//ஒரு மழை
ஒரு சாரல்
ஒரு காதல்
ஒரு கவிதை
நீ.....!

சிதறலாய் எங்கள் மனசு..

ரசனையான கவிதை.. ரசனையான பின்னூட்டங்கள்..(ரமேஷ் ரொம்ப நல்லவன் - நான் என்னைச் சொல்லலை)
Unknown said…
புது டெம்பிளேட் மாதிரியே.. கவிதையும் சூப்பர்..
Unknown said…
///கனவுகள் மொய்க்கின்றன
நீ சிந்திச் சென்ற
புன்னைகையின் மிச்சங்கள்
இன்னும் இறைந்து கிடக்கின்றன
மூளைக்குள்...!////

இந்தக் கவிதை டாப்..
THOPPITHOPPI said…
படிப்பவரை கவரும்படி உங்கள் எழுத்து அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள்
//யாரோ கல்லெறிந்திருக்கிறார்கள்
இந்த முறையும்//

எத்தனை முறை எறிந்தாலும்... ம்ம்ம்..கூடுதல் அர்த்தம்..அருமை!

***

//நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!//

மௌனமான இரவில் பேசும் நினைவுகள்..அழகு. அனுபவம்.

***

//ஒரு மழை
ஒரு சாரல்
ஒரு காதல்
ஒரு கவிதை
நீ.....!//

மிகவும் கவர்ந்த கவிதை...ஆறே வார்த்தைகளில் அற்புதம். “நீ”க்கு நிகர் யாருமில்லை.. இப்போது.

***

//ஜன்னலோர இருக்கை
வழி நெடுக வாழ்க்கை//

எதார்த்தம்.. ஒத்த உணர்வுகள் ;-)

***

//படபடக்கும் உலர்த்தல்
சிறகடிக்கும் மனசு...!//

சிறகடிக்குது மனசு.. கவிதையை ரசித்து.

***

//கலைந்து திரியும்
மனிதர்கள்.....
நிற்கப் போகும் காற்று!//

நிதர்சனம்.

***

//கனவுகள் மொய்க்கின்றன
நீ சிந்திச் சென்ற
புன்னைகையின் மிச்சங்கள்
இன்னும் இறைந்து கிடக்கின்றன
மூளைக்குள்...!//

வாவ்...கற்பனை அழகு. :-)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...