அடிக்கடி என்னை தோற்கவிடு காலமே
அப்போதுதான் துரோகிகளின் கோரமுகங்களையும்....
நட்புகளின் ஆதரவுக்கரங்களையும்
என்னால் சரியாக பற்றிக் கொள்ள முடிகிறது...
எனக்கு வலிக்கும் இரணங்களைக் கொடு.....
அப்போதாவது என்னை நேசிக்கிறவர்களை
நான் நேசிக்கிறேனா என்று பார்க்கிறேன்...?
என்னை முகத்தில் அறைந்து காயப்படுத்து காலமே...
எனக்காக எத்தனை கண்கள் கண்ணீரை சுமந்திருக்கின்றன
என்று பார்த்தாவது அறிவு வரட்டும் எனக்கு...
என்னை அடித்து துவம்சம் செய்; தோல்விகளால் குளிப்பாட்டு;
அப்போதாவது வெற்றிகளின் போது...
என்ன செய்யவேண்டும் என்று எனக்கு புரியட்டும்!
நெருப்பில் எரிந்து கொள்கிறேன்
இரணத்தில் வெந்து கொள்கிறேன்
எரிச்சலில் நொந்து கொள்கிறேன்
எனக்கு தோல்விகளைப் புகட்டு காலமே....
அப்போதாவது என் வெற்றிகளில்...
நான் மனிதர்களை சரியாய் கணிக்கிறேனா என்று பார்க்கிறேன்...!
என்னை நீ படைத்தளித்தாய் என்று
சில சூழல்களுக்கும் மனிதர்களும் நான் பாடம் புகட்ட வேண்டும்
என் வெற்றியின் உச்சத்தில் முகஸ்துதி மனிதர்களை
என் காலுக்கு செருப்பாக்குகிறேன்...;
முன் பேசி பின் இகழ்ந்தவர்களின்
நரம்புகளை அறுத்து உனக்கு ஒரு மாலை செய்து தருகிறேன்
இடுப்பெலும்புகளை உடைத்து
முதுகெலும்புகளில் கோர்த்து உன் கால்களில் சமர்ப்பிக்கிறேன்
அதனால் என்னை தோற்கவிடு காலமே...
ஏனெனில்...
இந்த உலகமே பெருமூச்செறியும்...
பிரமாண்டமான அசுர வெற்றி கொள்ளவேண்டும் நான்..!
தேவா. சு
Comments
அப்போ இயேசு மாதிரி அறை வாங்கி பேர் வாங்கலாமுனு ரெடி ஆகிட்டே...அப்படி தானே தம்பி :)
////முன் பேசி பின் இகழ்ந்தவர்களின்
நரம்புகளை அறுத்து உனக்கு ஒரு மாலை செய்து தருகிறேன்
இடுப்பெலும்புகளை உடைத்து
முதுகெலும்புகளில் கோர்த்து உன் கால்களில் சமர்ப்பிக்கிறேன்/////
அப்படி எல்லாம் செய்தா ஜெயிலுக்கு போய் ரேசன் அரிசி சாப்பாடு தான் சாப்பிடனும் ...தம்பி Be careful :)
எதை செஞ்சாலும் அண்ணன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு பண்ணு..... :)
Ungal Tholvikku En Valthukal...