இது ஒண்ணும் சொந்தக் கதை சோகக் கதை இல்லங்க முடிக்கிறதுக்கு முன்னால கண்டிப்பா பஞ்ச் பண்ற மாதிரி மேட்டர் இருக்குன்னு..உறுதியா சொல்லிக்கிறேன்.... தைரியமா...மேலே படிங்க....! எந்த வயசுல இருந்து நான் ரஜினி ரசிகன்னு எனக்கு தெரியல இப்போ கூட நினைச்சு பாக்கும் போது சரியா ஞாபகம் இல்ல.....யாராவது விருந்தாளி வரும் சமயதுல..அம்மாவும் சரி அப்பாவும் சரி...ரஜினி மாதிரி...சிரிப்பான்னு சொல்லுவாங்க... நானும் இடுப்புல ஒரு கைய வச்சுகிட்டு ஹா...ஹா.......ஹா...ன்னு விபரம் தெரியாம சிரிச்சு வைப்பேன்.... இடுப்புல கைய வச்சுக்கிறதும்...தலை முடிய கோதி விட்டுக்கிறதும்....என்னைய கேக்காமலேயே...எனக்கு வந்துடுச்சு..... ஏதாவது ரஜினி படம் வந்துச்சுன்னா ரஜினி பேண்ட் போட்டு நடிக்கிறாரா..இல்லை...வேஷ்டி கட்டி நடிக்கிறான்னு...யாரவது பெரியவங்ககிட்ட....இல்ல சினிமா போஸ்டர்னு என்னோட முதல் ஆர்வம் அதில்தான் இருக்கும்....ஏன் தெரியுமா? வேஷ்டி கட்டி நடிச்ச....சண்டை அவ்வளவா இருக்காது அப்படீன்றது...அப்போ என்னோட எண்ணம்....அதனாலதான் அப்போ வந்த முரட்டுக்காளை எல்லாம் எனக்குப் பிடிக்காது....பாயும் புலி, தனிக்காட்டு ராஜா, துடிக்கும் கரங்கள்ன்னு ர...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....