
அது அதுவாகவே...இருக்கிறது...
அலட்டலும்...அறிமுகமுமின்றி..
தேவைகளை எல்லாம் சூன்யமாக்கி
சலமின்றி...அது இருக்கிறது.
விதிகளை எல்லாம் புறம்தள்ளி....
புலன்களுக்கு புலப்படாத...
ஒரு புன்னகையுடன்!
ஆர்ப்பாட்டமான மனதுக்குதான்....
எல்லாம் தேவையாகி இருக்கிறது...
கடவுளையும் சேர்த்து....
மெல்ல மெல்ல நிகழும்
நிகழ்வுகளோ..எல்லாவற்றையும்
உடைத்துப் போட்டு விடுகிறது...
பல நேரங்களில் கடவுளையும் கூட!
கேள்விகள் கேட்கும் மனதுக்கு
எப்போதும் புரிவதில்லை...
பதில்கள் இல்லையென்று...!
பதிலே இல்லாமல் கேள்விகளே...
பதிலாய் மாறும் விந்தைதான்...
பல நேரங்களில் புரியாமல்...
தர்க்க வாய்ப்பாட்டுக்குள்
தள்ளிவிடுகிறது மனிதனை!
ஆசைகளின் விளிம்புகள்
எல்லாம் அறியாமையிலிருந்து
எட்டிப்பார்க்க....
மரணத்தை மறுக்கும்...
மனிதனுக்கு தேவைப்படுகிறது...
ஆத்திகமும் நாத்திகமும்....!
மற்றபடி...அது அதுவாகவே...இருக்கிறது...!
எப்படி வேண்டுமானால் கற்பிதங்கள் கொள்ளுங்கள் மனிதர்களே....! உங்களின் எந்த செயலும் அல்லது சொல்லும் அதை பாதிப்பதில்லை...இன்னும் சொல்லப்போனால் உங்களின் அறியமையையும் தர்க்கங்களையும், பல விதமான நம்பிக்கைகளையும் உள்ளடக்கி அது....ஆனந்தத்தில் சலனமின்றி சந்தோசித்து இருக்கிறது.
விடைதேட முயலும் மனம்தான் நடுக்கடலில் தவிக்கும் படகு போல தத்தளிக்கிறது...கடல் என்னவோ அந்க படகையும் சேர்த்துக் கொண்டு ஒரு புரிதலோடு மெளனமாய்த்தானிருக்கிறது...! ஏனென்றால் கடலுக்குத் தெரியும்...காற்றடித்தால் கரை சேரும்...இல்லை எனில் அங்கேயே இருக்கும். கடலை பொறுத்த மட்டில் இரண்டும் ஒன்றுதான்....! எதிர்பார்க்கும் மனிதர்களுக்குத்தன் எல்லா அலைச்சல்களும்..! மனமில்லாத மிருங்கங்கள் கூட இயற்கையின் பகுதியாகி விடுகின்றன....ஆனால் மனிதனோ.... எப்போதும் சுமந்து கொண்டிருக்கிறான் கற்பனைகளையும்...கற்பிதங்களையும்...
எது எப்படி ஆனாலும் சரி....
"அது அதுவாகவே...இருக்கிறது...!"
தேவா. S
Comments
--
உங்க டெம்ப்ளேட் மாத்துங்கன்னு சொல்லனம்னு நினெச்சேன். இப்ப இருக்கறதும் ரொம்ப பளிச்சுனு இருக்கு வேற நல்லதா மாத்துங்க தேவா. ஃபாலோயர்ஸ் விட்ஜெட் என்னாச்சு?
......எத்தனை ஆழமான அர்த்தங்கள் கொண்ட வரிகள்.................!!! மெளனமாக யோசிக்க வைக்கிறது. தேவா, அருமை. Nice meditation thoughts for the day.
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################
அருமையா வரிகள்