
ட்ரெய்லர் II
சுற்றிப் பரவியிருந்த மண்ணின் தாதுக்களுக்குள் நான் கலந்து ஒளிந்திருந்தேன், செடி கொடிகளுக்குள் சத்துப்பொருளாய் மாறி விரவியிருந்தேன், காய், கனிகளுக்குள் தைரியமாய் அடர்ந்து போயிருந்தேன்...வீசும் காற்றில் பிராணனில் பரவிப்போயிருந்தேன்..ஹைட்ரஜனுக்குள் கலந்து போயிருந்தேன்....ஓடும் நீரில் நனைந்து போயிருந்தேன்......
எம்மை சுவாசித்தவரின் நாசிகளுக்குள் பிராணணாயும், உண்டவரின் உடலுக்குள் சக்திப்பொருளாகவும், கண்டவரின் புத்தியில் நினைவுப் படிமமாகவும் படிந்து போயிருந்தேன். உடலுக்குள் எல்லாமாகி சக்தியாய் விரவி......இரத்தத்தில் கலந்து....உடலின் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஓட்டமாயிருந்தேன்....மேலும் ஒரு ஒரத்தில் இருந்த விந்துப் பையில் ஜீவசத்தாய் கலந்து போயிருந்தேன்...வேறொரு உடலின் கருப்பை உள்ளே சினைமுட்டைகளாய் அடர்ந்து போயிருந்தேன்.....
ஒரு இயற்கை சுழற்சியில் இரண்டும் ஒன்றாய் கலந்த கணத்தில் ஒரு திரண்ட உருவாய் வளர்ந்து போயிருந்தேன்...நீரும் காற்றும் எனைச் சுற்றி நிறைந்து போயிருந்தேன்....ஏதோ தினத்தில் ஒரு உருவாய் இந்த பூமியில் விழுந்து போயிருந்தேன்......
எந்த மண்ணில் இருந்து என் பிண்டத்துக்கான சத்து உருவப்பட்டதோ.....? எந்த பூமியில் இருந்து எனக்கான காற்று சுவாசிக்கப்பட்டதோ....? எந்த சூழ்நிலையில் அல்லது மனோ நிலையில் கருவாய் நான் ஜனிக்கப்பட்டேனோ அது எனக்குள் ஒரு வித குணாமாய் நிறைந்து போயிருந்தேன். எந்த உடல்களின் ஜீவசத்தாய் நான் வெளிப்பட்டு இருந்தேனோ...அந்த உடலில் இருந்த குணம் குரோமோசோம்களாய் என்னுள் பரவிக் கிடந்தது.....! டி.என்.ஏ க்களில் எல்லாம்...எந்த இடத்திலிருந்து எந்த மூலத்திலிருந்து தருவிக்கப்பட்டதோ அதன் மொத்த தொடர்ச்சியின் வேர்கள் மறைந்து ஒளிந்து போயிருந்தன....!
என் குணாதியங்களின் பின்ணனியில் காற்றும், நீரும், காய்களும் கனிகளும் இன்ன பிற தாதுக்களும், உப்புக்களும், உணவுப் பொருட்களும் மறைமுகமாய் விஸ்வரூபம் எடுத்துக் கிடந்தன. உடல் ஜனிக்க காரணாமாயிருந்த ஜீவன்கள் எல்லாம் என் புத்தியில் நிறைந்து போயிருந்தனர்.
ஆமாம்.....எல்லா உயிர்களின் குணாதிசயங்களின் பின்ணணியில் நாம் துச்சமென நினைக்கும் பல்வேறு விசயங்கள் இருக்கின்றன. அதுவும் ஒவ்வொரு மண்ணின் இயல்பும் ஒவ்வொரு மாதிரி...அந்த இயல்புக்கேற்ப உடலும் மனமும் சேர்ந்தே பிசையப்படுகின்றன. மலைகளில் வாழும் மனிதர்களுக்கு ஒரு இயல்பும், சமவெளியில் வாழ்பவர்களுக்கு ஒரு இயல்பும், பாலையில் வாழ்பவர்களுக்கு ஒரு இயல்பும்,,, நீர் நிலைகள் நிறைந்த பகுதியில் வாழ்பவர்களுக்கு ஒரு இயல்பும், காடுகளில் சுற்றித் திரிபவர்களுக்கு ஒரு இயல்பும், குளிர் பிரதேசங்கங்களில் இருப்பவர்களுக்கு ஒரு இயல்பும் ...என்று....மனிதர்கள் மாறி மாறி குணங்களுடன் இருந்தார்கள்....
குணாதிசயத்தையும், வாழும் போது மனோ நிலையையும் நிர்ணயிக்கும் மிகப் பெரிய காரணியாய் நீரும் காற்றும் இருந்தன......!
மனிதர்களின் குணம் மற்றும் பெற்று வந்த மரபணுக்கள் எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு முறையான வாழ்க்கை முறைகள் ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ப தீர்மானிக்கப்ட்டது. அது அந்த அந்தப் பகுதிகளின் செளகரியத்தை முன்னிலைப்படுத்தி தீர்மானிக்கப்பட்டது......கரடு முரடான வாழ்க்கையில் ....மனம் என்ற விசயம் ஈடுபட விதிமுறைகளை உருவாக்க மனிதனின் ஆழ்மனம் ....மிகவும் உதவியது......
மனித ஆழ்மனம் எதோடு தொடர்புடையது என்று உங்களுக்கே தெரியும் அல்லவா.....?
அச்சச்சோ.....ரொம்ப பேசிட்டேங்க....எனக்கு நேரமும் ஆயிடுச்சு....ஒரு மிகப்பெரிய உண்மையை கொஞ்சமா சொல்லணும்னு நினைச்சேன்....ஆனா அது முடியாது போல இருக்கு....! வாழ்க்கைல எப்பவுமே...இருக்குற சுவாரஸ்யமும் த்ரில்லும்தான் இந்த நிமிசம் வரைக்கும் எல்லாத்தையும் இழுத்துப் பிடிச்சு நிறுத்தி வைச்சு இருக்கு இல்லீங்களா....! சுவாரஸ்யமாவே பார்ப்போம் வாழ்க்கையை.....
இப்போதைக்கு கிளம்புறேன்....மிச்சத்த...பாக்குறப்போ பாக்கலாம்.....!
அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்டா.........!
தேவா. S
Comments
/குணாதிசயத்தையும், வாழும் போது மனோ நிலையையும் நிர்ணயிக்கும் மிகப் பெரிய காரணியாய் நீரும் காற்றும் இருந்தன......!//
உண்மை.
தொடர்நுங்கள். இந்த போஸ்ட் சின்னதா இருக்கற மாதிரி ஒரு பீலிங்
இன்னும் கடனை அடைக்கிலியா. எவ்ளோ நாள்தான் இப்படி ஓடி ஒளிவீங்க?
கடன்காரங்களுக்கு பயந்து வீட்டை தவிர எல்லா இடத்துலையும் இருந்திருக்கீங்க
அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்டா.........!
சித்தத்தில் தெளிவிருந்தால் சீவன் முக்தி எய்துமப்பா....
தெளிவு நிறைந்த சித்தம்..எல்லாம் கட்டுப்பட வைக்குமப்பா....!!!!!!
எனக்கு தெரியாது.. அதையும் நீங்களே சொல்லிடுங்க அண்ணே..
இந்த பத்தியே போதும் அண்ணா ., மனித வாழ்வின் நிலையாமை பற்றி விளக்குவதற்கு அல்லது மனித வாழ்வின் உண்மையை சொவதற்கு ..!!
அண்ணன் சண்டைக்கு கூப்பிடுவாரு போல ., யாரவது வாங்களேன் ..!!
கொஞ்ச நாள் இந்த புள்ள நால்ல எழுதுச்சி. ஊர் வம்புக்கு போகாத போகாத சொன்னேன். கேக்கல.. இப்பொ மறுபடியும் யருக்கும் புரியாம எழுத ஆரம்பிசிடுத்து... அவ்வ்வ்வ்..
true anna.