
என்னிடம் கேள்விகள்
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!
நான் யாரென்று...
இனியும் என்னிடம் கேட்காதீர்கள்
ஒற்றை வார்த்தையில்
நான் உங்களுக்கான...
பதிலானவன் அல்ல...!
என் கனவுகளின்
எல்லை எதுவென்று
கணக்குக் கூட்டி கூட்டி
நீங்கள் தொலைந்து போகாதீர்கள்;
நான் எல்லைகளுக்குள்
ஏதோ ஒரு திசையை நோக்கி
எப்போதும் பயணிப்பவன் அல்ல..!
என் சித்தாந்த வேர்களை
தேடிப் பிடித்து..
என்னைக் கணிக்க...
கனவிலும் முயன்று தோற்காதீர்;
நான் சித்தாந்தங்களை எல்லாம்
செதுக்கி எறிந்து
வெற்றில் நிரம்பிக் கிடப்பவன்!
என் காதல்கள் எல்லாம்
யாருக்காயிருக்கும் என்று
உங்கள் புத்திகளை உலுக்கிக் கொண்டு
பொழுதுகளை வீணடிக்காதீர்கள்;
நான் தேகம் கடந்த வெளியில்
தேவைகளற்ற காதலில்
லயித்துக் கிடப்பவன்...!
என் இறுதி என்னவாயிருக்கும்
என்று கூடிக் கூடி பேசி
ஓய்ந்து போகாதீர்கள்
நான் நெருப்பில் சுடப்பட்டாலும்
மண்ணில் புதைபட்டாலும்
மரித்துப் போய்விடுபவன் அல்ல...!
நெருப்புக்குள் நான் குளிரானவன்
குளிருக்குள் சூடானவன்
தேனினுள் கிடக்கும் கசப்பானவன்
நீரற்ற ஒரு பாலையின்
வற்றிப் போன சுனையின் தடமானவன்
எல்லாவற்றுக்கும் இடமானவன்,
பிரபஞ்ச வெளியினில் வெளிப்படாத
புள்ளியில் நின்று வெளிப்பட்ட
யாவற்றையும் வேடிக்கை பார்க்கும்
நிறையானவன்...;
என்றெல்லாம் சொன்னால்...
மீண்டும் என்னிடமே நீங்கள்
கேள்விகள் கேட்பீர்கள்...
அதனால்...
என்னிடம் கேள்விகள்
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!
தேவா. S
Comments
வாழ்த்துக்கள்.
அன்புடன் :
ராஜா
.. இன்று
பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!
EXCELLENT!
இனியும் என்னிடம் கேட்காதீர்கள்
ஒற்றை வார்த்தையில்
நான் உங்களுக்கான...
பதிலானவன் அல்ல...!
திமிர்ர்ர்ர்ரூ :)
எல்லை எதுவென்று
கணக்குக் கூட்டி கூட்டி
நீங்கள் தொலைந்து போகாதீர்கள்;
நான் எல்லைகளுக்குள்
ஏதோ ஒரு திசையை நோக்கி
எப்போதும் பயணிப்பவன் அல்ல..!
Beyond Imagination..
தேடிப் பிடித்து..
என்னைக் கணிக்க...
கனவிலும் முயன்று தோற்காதீர்;
நான் சித்தாந்தங்களை எல்லாம்
செதுக்கி எறிந்து
வெற்றில் நிரம்பிக் கிடப்பவன்!
அதுவும் இல்ல.. இதுவும் இல்லன்னா எப்படி?
யாருக்காயிருக்கும் என்று
உங்கள் புத்திகளை உலுக்கிக் கொண்டு
பொழுதுகளை வீணடிக்காதீர்கள்;
நான் தேகம் கடந்த வெளியில்
தேவைகளற்ற காதலில்
லயித்துக் கிடப்பவன்...!
‘காதல்களில்’னு இருக்கனுமோ? :)
என்று கூடிக் கூடி பேசி
ஓய்ந்து போகாதீர்கள்
நான் நெருப்பில் சுடப்பட்டாலும்
மண்ணில் புதைபட்டாலும்
மரித்துப் போய்விடுபவன் அல்ல...!
சபாஷ்!
குளிருக்குள் சூடானவன்
தேனினுள் கிடக்கும் கசப்பானவன்
நீரற்ற ஒரு பாலையின்
வற்றிப் போன சுனையின் தடமானவன்
எல்லாவற்றுக்கும் இடமானவன்,
பிரபஞ்ச வெளியினில் வெளிப்படாத
புள்ளியில் நின்று வெளிப்பட்ட
யாவற்றையும் வேடிக்கை பார்க்கும்
நிறையானவன்...;
அருமை..
சரி உங்க கிட்ட ஒரு கேள்வி.. உங்களப் பாத்து யாரு என்ன கேள்வி கேட்டா?
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!//
உங்களிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுக்கிறேன்.எப்பிடி உங்களால இப்பிடியெல்லாம் முடியுது?
உயர்ந்த உள்ளமே உனக்கு ஓர் வாழ்த்து.