PREVIEW சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த ஆறாவது பாகத்திலும் தொடர்கிறது... திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்ப்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது. உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் உள்ள பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....! இதுவரை... பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV பாகம் V இனி... நான் காட்டுக்குள் மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தேன். என் வீடு என்னைத் தேடி அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும் என்று எனக்குத் தெரியும். அது பற்றிய எண்ண விவரணைகளுக்குள் செல்லாமல் மெல்ல சமகாலச் சூழலுக்குள் ஒரு சர்ப்பத்தைப் போல புத்தியை தவழவிட்டேன். அடர்த்தியாய் விரிந்து சென்று கொண்டிருந்த மல...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....