Skip to main content

Posts

Showing posts from December, 2013

தொலைந்து போ.....2013!

இது ஒன்றுமில்லை. இது சந்தோசம்.  இது துக்கம். இது வலி. இது சுகம். பேச நிறைய இருக்கிறது; ஒன்றுமே இல்லை. கருணையானது; கொடூரமானது. நினைவில் நிற்கிறது. மறந்தும்  போகிறது. இது பொய். இது நிஜம். இது நம்பிக்கை. இது துரோகம். பேச என்ன இருக்கிறது இது பற்றி? மெளனமாயிருப்பதிலும் அர்த்தமில்லை. புத்தி பேதலித்த நிலையிது. புத்தன் சுவைத்துப் பார்த்த கனி இது. நிரம்பி வெறுமையான பாத்திரம் இது.  இது நிறைய கொடுக்கும். இது நிறைய எடுக்கும். இது எல்லாமே. ஆனால் ஒன்றுமே இல்லை. ஓ....கொடூரமான காலமே.... ஓ.... கருணை மிகு காலமே.... ஓ...அழகே.... ஓ.....கோரமே.... மிருகமே... தெய்வமே.... ஓ..... காலமே.....................போ......போ...................போ....! காலமே..... வா..... வா......! நீ வேண்டாம்...நீ வேண்டும். சிரிக்கிறேன். அழுகிறேன்....பின் பகிர ஏதுமின்றி வெறிக்கிறேன்....! திரும்பிப் பார்க்க விரும்பவிலை.....கெட் லாஸ்ட்.... அ|ண்ட் கெட் அவுட்.... 2013....!!!!!!!!!!!  தட்ஸ் இட்....!!!!! #... அப்பா...ஐ லவ் யூ... ஐ லவ் யூ...... ஐ லவ் யூ...#

பந்தயக் குதிரை...!

அது நடந்து கொண்டிருக்கிறது இப்போது. தொகுத்தெழுதிய உணர்வுகளை ஒரு புத்தக வடிவில் காணும் ஒரு பெருங்காதலில் வாரியர் என்னும் வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளை வகை பிரித்துக் கொண்டிருக்கிறோம். எப்போதுமே தனிமையில் என்னை வாழ்க்கை விட்டதில்லை. இப்போதும் அப்படித்தான் நண்பர்களின் உதவியோடு கட்டுரைகள் தொகுப்பு அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. 2014ஆம் வருடத்தின் மத்தியில் இந்த உழைப்பு புத்தகமாய் மாறலாம். வலைப்பூவில் எழுத ஆரம்பித்த 2010 ஆரம்ப நாட்களில் பின்னாளில் புத்தகமெல்லாம் போடுவோம் என்ற எண்ணமோ எதிர்பார்ப்போ எனக்கு இருந்ததில்லை. நகர்தலும் நகர்தலின் பொருட்டு நிகழும் சூழலுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.  தொடர்ச்சியாக என்னை வலைப்பூவிலும், பேஸ்புக்கிலும் வாசித்து வரும் நண்பர்கள் எப்போதும் கொடுக்கும் உத்வேகமும், அன்பும் எதிர்பார்ப்புமே என்னை மீண்டும்மீண்டும் எழுதத் தூண்டுகிறது. இலக்கிய வட்டத்திலிருக்கும் யாருடனும் எனக்கு அதிக தொடர்புகள் இல்லை. என்னை முன்னிலைப்படுத்தி ஒரு வியாபராப் பொருளாக்கிக் காட்டிக் கொள்ளும் ஒரு வெறித்தனமான மார்க்கெட்டிங் உத்திகள் என்னிடம் அறவே இல்லை. என்னை

காதல் மொழி...!

உயிர் திறக்கும் இசை ஒன்றை கேட்டுத் தொலைத்து விட்டு தேன் குடித்த வண்டாய் கிறங்கிக் கிடக்கிறேன். ப்ரி யமான காதலியாய் உள்ளுக்குள் உட்கார்ந்து கொண்டு இம்சிக்கும் இந்த பாடலின் வசீகரம் என்னவென்று தெரியாமல் அது சொல்ல முயலும் அவஸ்தைக்குள் சிற்றெறும்பாய் ஊர்ந்து செல்கையில், அடாவடியான ஒரு காதலின் கன பரிமாணங்கள் புலப்படுகின்றன. காதலை முதலில் பார்வையால் அவள் சொல்லிவிட அதற்கு மேல் அதை முன்னெடுத்துச் சென்று அவளிடம் வார்த்தையாக்க வேண்டிய பெரும் அவஸ்தை காலம் காலமாக ஆண்களுக்கே உரித்தானது. மிக மெலிதாய் காதலைச் சொல்லும் ரகம் இல்லை இந்தப் பாடல். நளினமாய் காதலைச் சொல்லத் தெரியாத ஒரு முரட்டு கிராமத்து இளைஞனின் எண்ண வெளிப்பாடு இந்தப் பாடல் போன்றுதானிருக்கும். அது அவஸ்தைதான் அது இம்சைதான், அது வலிதான் ஆனாலும் அதில் ஆனந்தித்துக் கிடக்க முடிகிறது. உள்ளுக்குள் ஏதேதோ உணர்வுகளைக் கிளறிவிட்டு தொட்டுப் பிடித்து விடும் வண்ணத்துப் பூச்சியாய் நகர்ந்து கொண்டே இருக்கும் காதலைத் துரத்திக் கொண்டிருக்கும் ஒரு விளையாட்டாய் இது இருக்கிறது. காதல் என்பது புரிந்து கொள்ளுதல், காதல் என்பது அறிவை பகிர்ந்து கொள்ளுதல்

எம்.ஜி.ஆர்....!

விடியக்காலை ரேடியோ நியூஸ் கேட்டுட்டு அப்பா குலுங்கிக் குலுங்கி அழுதுட்டு இருந்தத பாத்த நான் திகைச்சுப் போய்  படுக்கையில இருந்து எந்திரிச்சேன். எனக்கு அப்போ 10 வயசு.... அப்பா கிட்ட போய் என்னாச்சுப்பான்னு நானும் அழுதுகிட்டே கேட்டேன்....சகாப்தன் செத்துப் போய்ட்டாருடா.....சாகாப்தன் செத்துப் போயிட்டாருடான்னு கலங்கிக்கிட்டே சொன்னாரு..... அடுப்படியில இருந்த அம்மாவும் ஓடியாந்து விசயத்தைக் கேள்வி பட்டு நெஞ்சுல அடிச்சுக்கிட்டு அழுதது இன்னமும் என் மனசுல பசுமையா இருக்கு.... பக்கத்து வீட்டு பாபு அப்பா, பாபு அம்மா, எதிர்வீட்டு ஜோயல் அப்பா, ஜோயல் அம்மா, டைப்பிஸ்ட் சார் அவுங்க வொய்ஃப், சண்முகம் சார்ன்னு எல்லோரும் தேம்பித் தேம்பி அழுத அந்த டிசம்பர் 24தான்  எம்.ஜி.ஆர் என்னும் தங்கத்தலைவன் அதிகாலை 3 மணி அளவில் மாரடைப்பால் உறக்கத்திலேயே தன் உடலை விட்டு நகர்ந்த நாள். அது ஒரு மிகப்பெரிய துக்க தினம். அப்படி ஒரு தலைவனை பிரிய தமிழகத்தின் எந்த ஒரு மனிதரும் விரும்பி இருக்கவில்லை. அவருடைய கட்சி என்று இல்லை மாற்றுக் கட்சித் தொண்டர்களையும் வசீகரித்து  வைத்திருந்த பிரம்மாண்ட பிம்பம்தான் எம்.ஜி.ஆர்.

பிரிதல் இனிது....!

பின்னொரு நாளில் அவள் பிரிந்து செல்வாள் என்று கூறியது போலவே இன்று...பிரிவொன்றில்... நின்று கொண்டிருக்கிறேன் நான்....! இனிதலென்று பெறுதலைச் சொல்லிக் கொடுத்திருந்த உலகிலிருந்து விலகி நின்று தனிமையை ஊன்றிக் கொண்டு மெல்ல நகர முற்படுகிறேன் ஒரு மழைத்துளி போல மீண்டுமொருத்தி என் மீது வந்து விழுந்து புரிதலாய் சேர்ந்தோம் என்று சொல்லவும் கூடும்... அவளிடமும் சொல்வேன்... பின்னொரு நாளில் நாம் பிரியக்கூடுமென்று...! தேவா சுப்பையா... Photo Courtesy: Ashokarsh Photos - Source: Web

தளபதி...!

கர்ணன், குந்திதேவி, பஞ்ச பாண்டவர்கள், கெளரவர்கள் என்று கதைக்கான கரு என்னவோ மகாபாரதத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதுதான். அங்கே சூரியனை வணங்கியதால் சூட்சுமமாய் கருத்துத் தரித்துக் கொண்ட புராண குந்திதேவியை இந்த நவீன காலத்தில் கொண்டு வந்து காட்ட முடியாது அல்லவா? அதனால் சிறுவயதில்  விபத்தைப் போல ஏற்பட்ட ஒரு கர்ப்பம், அந்த குழந்தை கூட்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு ஆற்றில் மிதந்து வந்து சலவை செய்யும் ஒரு பாட்டியின் கையில் கிடைத்து விடுகிறது. மிக பிரம்மாண்டமான கதைக்களம். சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், மாஸ்ட்ரோ, மணிரத்னம், சந்தோஷ்சிவன், தோட்டா தரணி என்று அனல் பறக்கும் கூட்டணி வேறு. கிட்டத் தட்ட தமிழ் சினிமாவின் பொற்காலமாய் அது இருந்தது. 1990களின் வாக்கில் என்னைப் போன்ற ரஜினி ரசிகர்களும் கமல் ரசிகர்களும் தெருவுக்குத் தெரு நின்று கொண்டும், பள்ளிக் கூடங்களின் வகுப்பு இடைவேளைகளினூடேயும், ஆற்றில் குளிக்கும் போதும், கிரிக்கெட் விளையாடி விட்டுத் திரும்பி வரும் போதும் ஆக்ரோசமாய் மோதிக் கொள்வோம். கமல் ரசிகர்கள் பிரதானமாய் பேச போதும் போதுமெனும் அளவிற்கு கமலிடம் நடிப்பும், நிறைய விருதுகளும்ம் ரஜி

ஊமை என்றால் ஒரு வகை அமைதி...!

பசித்திருக்கையில் தாயின் முலை தேடி பக்கத்திலிருக்கும் துணியை எடுத்துச் சுவைக்கும் குழந்தையைப் போல சுவைத்து விட்டு நான் பசித்தே இருக்கிறேன் எப்போதும். ஏதோ ஒரு துணி கிடைத்து விடுகிறது இல்லையேல் என் விரல் சுவைத்து நானே பசி தீர்த்துக்கொண்டதாய் எண்ணிக் கொள்கிறேன். தீராத பசியை தீர்ந்தது போன்றெண்ணிக் கொண்டு தற்காலிகாய் வயிறு எக்கிப் போய் ஏக்கப் பெருமூச்சுடன் காத்திருக்கையில் ஏதோ ஒரு தருணத்தில் தாக்கம் நிறை அனுபவமாய் என் வாய் நிறைக்கிறது அவ்வப்போது பிரபஞ்சத்தின் பஞ்சு முலை.  தாயிடம் பாலருந்தாத யாரும் இந்த பூமியில் இல்லை. அது வெறுமனே பசியாற்றிக் கொள்ளுமொரு இடமாய் மட்டுமா நமது அனுபவப் பதிவில் பதிந்து கிடக்கிறது...? அல்ல....அது பசிக்கு தொடர்பில்லாத பெரும் திருப்தியை கொடுத்திருக்கிறது. சலனமில்லாத பாதுகாப்பைக் கொடுத்திருக்கிறது. கதகதப்பான இளம் சூட்டை நமக்குள் பரப்பி உறுதியாய் இரு பிள்ளாய் என்று உறுதி கொடுத்திருக்கிறது. பாலருந்துகையில் தலை தடவும் தாயின் வாஞ்சையை வார்த்தைப் படுத்தவோ அல்லது அதற்கு சமமான ஒரு அன்பொழுகு நிலையை காட்சிப்படுத்தவோ அல்லது கற்பிதம் செய்து கொள்ளவோ இயலவே இயலாது. பரிபூர

கடவுளின் மொழி...!

விடியக்காலை மூணு நாப்பதுக்கு சென்னையில பிளைட். நான் மதியம் 3:00 மணிக்கு மதுக்கூர் பஸ்டாண்ட்ல நிக்குறேன். எப்டி பாத்தாலும் மன்னார்குடி ஒரு முக்கால் மணி நேரம். அங்க இருந்து கும்பகோணம் ஒரு இரண்டு மணி நேரம். ஒரு ஆறு மணில இருந்து ஒரு ஆறரைக்குள்ள கும்பகோணம் போனா அங்க இருந்து ஒரு ஏழு மணி நேரம் வச்சுக்கிட்டா கூட வொர்ஸ்ட் டூ வொர்ஸ்ட் விடியக்காலை ஒரு மணிக்கு நம்மல சென்னை ஏர்போர்ட்ல தள்ளிவிட்டுட்டு போய்ட மாட்டானான்னு.....நான் யோசிச்சுட்டு இருந்தப்பவே....மன்னார்குடிக்கு பஸ்ஸும் வந்துடுச்சு..... இப்படி ஒரு டைட் செட்யூல் வச்சுக்கிட்டு ஏன் ஊருக்குப் கெளம்பணும்னு நீங்க கேக்குறது எல்லாம் சரிதான் பாஸ். ஆனா ஒரு வாரம் லீவுக்கு ஊருக்கு வந்துட்டு இந்த ஊர விட்டு கிளம்புற பாடு இருக்கே....அதை இந்த மாதிரி கிளம்பிப் போறவங்களுக்குத்தான் தெரியும். மண்ண விட்டு, மரத்த விட்டு, சொந்தங்கள விட்டு அம்புட்டு ஈசியா கெளம்ப முடியும்ன்றீங்க? ரொம்ப கஷ்டம். இந்தா பன்னென்டு தானே ஆகுது. அட ஒண்ணுதானே ஆகுதுன்னு நேரத்தக் கடத்தி கடத்தி... இன்னொரு கை சாப்டுப் போப்பான்னு அம்மா ஒரு கரண்டி சோறப் போட்டு ரெண்டு கரண்டி சாம்பார ஊ

தேடல்....01.12.2013!

ஒன்றும் இல்லை என்று தோன்றிய கணத்தில்தான் எனக்கான சுதந்திரப் பெருங்கதவுகள் திறந்து கொண்டன. யாரும் யாருக்கும் எதுவும் செய்து விட முடியாது என்று உணர்ந்த போது சுற்றி இருக்கும் எந்த ஒரு மனிதரையும் சூழலையும் குறை சொல்ல எண்ணம் வரவில்லை. இது ஒரு பரிபூரணமான விடுதலை. செயல்களுக்குள் நின்று கொண்டு விளைவுகளைக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்த, உருவாக்கிக் கொண்ட சிக்கல்கள் நகர்ந்த நிலை. எந்த ஒரு கற்பனைக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத தத்துவங்களுக்குள்ளும் சித்தாந்தங்களுக்குள்ளும் அடைபட்டுக் கொள்ளாத பெரும் திறப்பு. கருத்துக்களைக் கொண்டு அந்த கதவினைத் தட்டத்தான் வேண்டும் ஆனால் அந்த திறப்புக்கும் கருத்துகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தத்துவங்களின் மீதேறி பயணித்துதான் அங்கே செல்லவேண்டும் ஆனால் அங்கே இருப்பது தத்துவங்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் சற்றும் தொடர்பில்லாதது. ஒரு நொடியில் எல்லாம் கழற்றி எறிந்தால் மட்டுமே அந்த பெருவெளிக்குள் ஊடுருவ முடியும். யாரும் யாருக்கும் சொல்லி மாற்ற முடியாது என்ற புரிதலை அந்த கதவிற்கு அப்பால் போனபின்பு உணர முடிந்தது. தேடிக் கொண்டிருப்பவர்கள் தேடி வருவார்கள். கேள