ஒரு தார்ச்சாலையும், கொளுத்தும் உச்சிவெயிலும், இறுகக் கட்டிய கழுத்து டையும் வெறுமையான எதிர்காலமும் எப்போதும் வெறுப்பாய் பார்க்கும் மனிதர்களும்...டார்கெட் நோக்கி துரத்தும் படியளக்கும் முதலாளிகளும் எப்போதும் அறிந்ததில்லை திருமணத்திற்காக காத்திருக்கும் என் அக்காவையும் கடந்த மாதம் ரிட்டயர்ட் ஆன என் அப்பாவையும், எட்டாம் வகுப்பு படிக்கும் என் தம்பியையும்..... கல்லூரிக்கு அனுப்பியதே மிகப்பெரிய சாதனையாகவும் பெற்ற பி.காம்., பட்டமே மிகப்பெரிய அங்கீகாரமாகவும் நினைத்த என் குடும்பத்தினரின் ஒரே நம்பிக்கை நான். நான் பெற்ற பட்டம் முன் அனுபவம் இல்லை என்பதால் நிராகரித்த மிகைப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களும் சரி....இன்னும் அடி மாட்டு விலைக்கு வேலைக்கு கூப்பிட்டு ஓரிரு மாதங்கள் சென்று சம்பளம் கொடுக்காமால் ஏமாற்றிய உள்நாட்டு முதலாளிகளும் சரி.... என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியாதவர்கள்....அவர்களின் வேலை கொடுப்பதற்கான அளவீடு என்ன என்பதும் அறிந்து கொள்ள நான் முயலவில்லை காரணம் என் வீட்டின் பசி. ரிட்டயர்மெண்ட் ஆன அப்பாவின் பணம் வீடுகட்ட வாங்கிய கடனுக்கு போதுமானதாக இருந்தது. நான் கூட கேட்டேன்.. கடன் வாங்கி அப்பட
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....