Skip to main content

Posts

Showing posts from March, 2015

நினைவுப் பறவை...!

உனக்காய்....ஏங்கிக் கொண்டிருக்கும் என் எழுத்துக்களை அடைத்து வைத்து, அடைத்து வைத்து எத்தனை நாட்களைத்தான் நான் நகர்த்த முடியும்..? தூரத்தில் பறக்கும் பருந்தின் நிழலைப் போல இப்போதும் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் உன் நினைவுகள் மட்டுமே எனக்கு சொந்தமாயிருக்கின்றன... மறந்து போன அழகிய கனவின் தெளிவில்லாத பிம்பமாய் ஏதேதோ ஞாபகங்கள் இன்னதென்று சொல்ல முடியாத உணர்வுகளென்று மீண்டும் மீண்டும் நினைவுகளில் உன்னைத் தேடிப் பிடிக்கும் முயற்சிகளில் சலிப்புற்று சரிகிறேன் நான்... தூரத்து வானில் சிறகடிக்கும் பட்டமொன்றின் வர்ணக் கலவையில் என்னை தொலைத்துக் கொண்டே உனக்கும் எனக்கும் பிடித்த பாடலொன்றை நினைவுகளால் பாடிக் கொண்டிருக்கும் போதே எல்லாம் நின்று போகிறது... நூலறந்த பட்டம் திசையறியாமல் காற்றில் எங்கோ பறந்து செல்ல... பகிர செய்திகளின்றி நீல வானத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன வெண் மேகங்கள்.... வலிக்கும் சிறகுகளை இழுத்துக் கொண்டு மெல்ல மெல்லத் தாழிறங்கிக் கொண்டிருக்கிறது என் நினைவுப் பறவை.... ..... ..... .... நான் உனக்காக கவிதை ஒன்றை எழுதத் துவங்குகிறேன்... தேவா

வாழ்வே தவம்....!

சுமக்க முடியாமல் புத்தகக் கட்டை சுமந்து பள்ளி சென்ற பாதைகள், வெறிச்சோடி கிடக்கும் திருவிழா சமயங்களில் வள்ளி திருமணம் நடக்கும் அந்த  மிகப்பெரிய பொட்டல், காய்ந்து தேய்ந்து கிடக்கும் கண்மாய், முதுகு பிடித்து இழுக்கும் கருவேலஞ் செடிகளுக்கு நடுவே ஊர்ந்து செல்லும் ஒற்றையடிப் பாதை, மூன்று குச்சிகளை ஊன்றி வைத்து தடித்த விறகினை மட்டையாக்கி நெருஞ்சி முள் குத்த ஓடி விளையாடிய சலசலக்கும் அந்தப் பனங்காடு, இன்னமும் உச்சி பொழுதினில் ஆங்காங்கே நிழலை விரித்து வைத்தபடி வெறுங்காலோடு சூடு பொறுக்க முடியாமல் வரும் மனிதர்களை நேசமுடன் எதிர் நோக்கும் கருவேல மரங்கள்........ பொட்டல் காட்டில் காய்ந்து போன புல்லினை இழுக்க முடியாமல் ஆங்காங்கே இழுத்து பசி தீர்த்துக் கொள்ள முயலும் ஆடு, மாடுகள், அதை இன்னமும் மேய்த்துக் கொண்டிருக்கும் அரைஞான் கொடியால் டவுசரை இழுத்துக் கட்டிக் கொண்டிருக்கும் பையன்கள், பாவாடையை வயிற்றுக்கு மேல் இழுத்து கட்டி சுருங்கிப் போன மேல் சட்டையை மறைக்க முயலும் சிறுமிகள்...., தொள தொள முண்டா பனியனோடு மடித்துக் கட்டிய லுங்கியோடு கண்கள் சுறுக்கி எதிரே வருபவர்களை வெள்ளந்தியாய் பார்