Pages

Monday, November 29, 2010

ஓ......!
ட்ரெய்லர் VIII

குளித்து முடித்து வெளியில் வந்த தீபக்...மறுபடியும் பேசத்தொடங்கியிருந்தான்..அடுக்களையில் பாத்திரங்களின் சப்தம் இன்னும் வேகமாக கேட்கத்தொடங்கியிருந்தது...ஒரு விசும்பலுடன் கூடிய முணு முணுப்பு கேட்டுக் கொண்டிருந்தது...ஆமாம் கீதா தான் அது...!

நேற்று இரவு வந்த அந்த சண்டையின் மூலம் எதுவென்று ஆழ்ந்து நோக்கினால் அற்பமானதாகத்தானிருக்கும்...அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட விவதங்கள் கர்ணகொடூரமாக மாறிவிட....அந்த ராத்திரி மிக அடர்த்தியகத்தான் போனது..அவர்களுக்கு, அவர்களின் குட்டிப்பையன் அருண்...பேந்த பேந்த விழித்த படியே உறங்கிப் போயிருந்தான்....

விடிந்து இன்னமும் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு பள்ளிக்குத் தயாராகி....ஸ்கூல் பேக் சகிதம் காத்துக் கொண்டிருந்தவனுக்கு கிலி பிடித்துக் கொண்டது. மீண்டும் சண்டை போடுறாங்களே...அவனுக்கு அம்மாவும் பிடிக்கும் அப்பாவும் பிடிக்கும்...இரண்டு பேரின் முகங்களையும் பரிதாபமாக பார்த்துக் கொண்டு அழுகையை தொண்டையில் அடக்கிக் கொண்டு...சோகமாய் அமர்ந்திருந்தான் 8 வயது அருண்.

" ஏண்டி சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா படிச்சுட்டோம் வேலை பாக்குறோம்னு திமிரா உனக்கு.. உன்னைய போய் வீட்ல உள்ளவங்ககிட்ட சண்டை போட்டு கல்யாணம் பண்ணிகிட்டேன் பாரு ..என்னைய செருப்பல அடிக்கணும்....தலைமுடியை உதாரணம் காட்டி கத்தினான் தீபக்......

நான் மட்டும் என்னவாம்...உங்க புத்தி இவ்ளோ கேவலாமா இருக்கும்னு தெரிஞ்சு இருந்தா.. உங்கள ஏன் கல்யாணம் பண்ணிக்கிறேன்..மகா கேவலமான மனுசன் நீங்க...சின்ன சின்ன விசயத்துக்கு கூட ஒத்துப் போகாத ஒரு ஜென்மம் நீங்க...ச்சே..என் வாழ்க்கையே வீணாப்போச்சு...

கோபத்தில் தீபக்...கீதாவின் தலைமுடியை பிடித்து கையை ஓங்க.. கீதா அவனின் சட்டையை எட்டிப் பிடித்தாள்...." தலைல இருந்து கைய எடுடா.... த்த்தூ..... நீ எல்லாம் ஒரு ஆம்பளை..கட்டுன பொண்டாட்டிய போய் கை நீட்டிகிட்டு...." முகத்தில் காறி உமிழாத குறையாக வார்த்தைகள் வந்து வெளியில் விழுந்தன....

"த்தூத்தேறி நாயே.... யார பாத்து வாட போடான்னு சொன்ன..உன்னய... கன்னத்தில் ப்ளார்ர்ர்ர்ர்........." ஓங்கி ஒன்று விட்டான் தீபக்........பதிலுக்கு அவன் முகத்தில் நகங்களை வைத்து கீறினாள்.. கீதா..." யோவ் உன்ன என்ன பண்றேன் பாரு.. " அடிக்கிற அடி...கருமம் புடிச்ச தாலிய கட்டிட்டு என்ன வேணா பண்ணிவியாடா நீ...." செவுளில் தீபக்கிற்கு எட்டி ஒண்ணு விட்டாள்....

ஆளுக்கொரு மூலையில் சிதறி விழுந்து வார்த்தைகளால் தண்டித்துக் கொண்டனர். "உன்னை பத்தி தெரியும்டி.. லட்சணம் ஆஃபீஸ் போனமா வந்தமான்னு வர்றியா.. அங்க அங்க ஊர் மேஞ்சுட்டு வர்ற.. கேட்டா.. ஆயிரம் லொச்சை காரணம் வேற...." வார்த்தையில் நெருப்பை அள்ளிக் கொட்டினான் தீபக்.

இது ஆண்களிடம் இருக்கும் ஒரு அருவறுப்பான குணம். மிகைப்பட்டவர்களிடம் இது கேவலமான சாக்கடையைப் போல தேங்கி நிற்கிறது. ஒரு பெண் சிரித்து பேசினாள், நாலு இடங்களுக்கு சென்று வந்தால்.. திமிராய் இருந்தாள் உடனே..அவளின் நடத்தையோடு சம்பந்தப்படுத்தி பார்ப்பது. இந்த துர்குணம் சமுதாயத்தில் புரையோடித்தான் போய்கிடக்கிறது. உடையோடு சம்பந்தப்படுத்துதல்... தொழிலோடு சம்பந்தப்படுத்துதல் என்று எல்லா அநாகரீகங்களும் அரங்கேறும் ஒரு இடம் அல்லது பார்வைகள் எங்கே இருந்து கிடைத்தது ஆண்களுக்கு என்பது விளங்க முடியாத புதிர்.

பெண்களின் கோபமோ ஒரு தடவை வந்து விட்டால் அதில் காம்ப்ரமைஸ் ஆகி திரும்பி கூல் ஆவது கடினம்...கோபத்தின் உச்சத்தில் அவர்களுக்கு தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற எண்ணம் மிகைத்திருப்பதும் ஒரு காரணம்....மேலும் தன்னின் ஆதிபலம் என்ன என்று ஒவ்வொரு பெண்ணின் ஆத்மாவும் அறியாமலில்லை அதிலிருந்து வெடிக்கும் உக்கிரம் கடுமையானதாகவே இருக்கிறது. ஆணின் வலு உடலளவில் இருந்தாலும் பெண்னின் மனோபலத்தின் முன் எல்லாமே....தூசுதான்...

'நீயும் நீ கட்டின தாலியும்....இத கட்டிட்டுதானே இவ்ளோ பேச்சு பேசுற....அடிக்கிற உதைக்கிற...இந்தா நீயே வச்சுக்க...' தாலியை கழட்டி விசிறியடித்தாள் கீதா....! திகைத்து நின்றான் தீபக்....அதுதானே பெரும்பாலும் ஆண்களின் உச்ச பட்ச அதிகாரம்.....! இருவருமே அலுவலகத்தில் பணி புரிகிறார்கள்...அலுவலத்திற்கு நேரமாகி விட்டது...வேறு....கீதா துவண்டு போய் படுக்கையில் விழுந்து கேவி கேவி அழத்தொடங்கியிருந்தாள்.

அருணின் பிஞ்சுமனம் திகைத்துப்போயிருந்தது....அந்த சின்ன இதயத்தின் துடிப்பு...அதிகமாகி இருந்தத்து...அம்மாவும் வேணும் அப்பாவும் வேணும்....ஐயோ அம்ம்மமா.... ஓடிப்போய் கொஞ்ச நேரம் அம்மாவை கட்டிக் கொண்டு அழுதான்...கொஞ்ச நேரம் அப்பாவை கட்டிக் கொண்டு அழுதான்...

பிஞ்சுக்கு எப்படி தெரியும் வளர்ந்திருக்கும் மூளைகளின் திமிர்களும், கோபங்களும், இங்கிதங்களும் நாகரீகங்களும்..அநாகரீக வார்த்தைகளும்....! பல நேரங்களில் மனித மூளைகள் ஏன் வளருகின்றன ஏன் விருத்தியாகின்றன என்பதுதான் இப்போதைய ஆத்திரம். ஆயிரத்தெட்டு விசயஙக்ள் அறிந்த மனித மூளை அதை உள்ளுக்குள் சமைத்து அகங்காரமாக்கி வார்த்தைகளில் அசிங்கத்தையும் ஆணவத்தையும் கொட்டி நிந்திக்கிறது.

சக மனிதனை, சமுதாயத்தை, நண்பனை, மனைவியை, கணவனை சாடவும் ...அத்துமீறிய வார்த்தைகளை பேசவும் ஆதரிக்கவும் யார் அதிகாரம் கொடுத்தது. எப்போதும் ஒரு பிரமாண்ட சக்தி நம்மை கவனிக்கிறது என்பதை பெரும்பாலும் மறந்து விடும் மனிதர்கள்...நாகரிகத்தின் உச்சத்தில் வாழ்வது போன்று ஒரு உச்ச கதியில் தங்கள் மூளைகளைப் பிறழவிட்டு நகர்ந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள் அந்தோ பரிதாபம்...அவர்களின் மூளைகள் அவர்களையே அழிக்கும் என்பதற்கு வரலாற்றில் இருக்கும் சான்றுகள் அறியாதவாரா இல்லை அறிந்தும் மறந்து போனவரா?

அருண் தனது பிஞ்சு மனதில் யோசித்தான்....ஏன் அம்மாவும் அப்பாவும் சண்டை போட வேண்டும்..? இரண்டு பேரையும் கட்டிக்கொண்டு நான் இரவில் இனி உறங்க முடியாதா? சண்டைல எப்டி சேருவாங்க..? எப்படி எல்லாம் சரியாகும்..?

அழுது கொண்டே யோசித்துக் தேம்பிக் கொண்டிருந்த அருணை தேற்ற ஆளில்லை அப்போது...இந்த தருணத்தை சரியாக பயன்படுத்தி....அவனின் மூளையில் சேமித்து வைத்திருந்த அன்றைய கணக்கு டெஸ்ட்டுக்கான பாடங்கள் சுத்தமாய் அழிந்து போயிருந்தன...அறிவியல் ஆசிரியர் படித்து மனப்பாடம் செய்யச் சொல்லியிருந்த....கேள்விபதில்கள் சிதைந்து போயிருந்தன....புத்தக பைக்குள் வைக்க வேண்டிய ஆங்கிலம் கிராமர் நோட் புக் எடுத்து வைக்க மறந்திருந்தான்........சண்டை எல்லாவற்றையும் திறமையாய் அவனுள் கலைத்துப் போட்டிருந்தது....

' டேய்...அருண்...ஸ்கூலுக்கு நேரமாச்சுல்ல்ல வாடா.... ' வாசலில் ஸ்கூட்டரை உதைந்து கொண்டிருந்த தீபக்....கத்தினான்....ஆமாம் ஆண்களின் கோபம் பெரும்பாலும் அந்த சூழலை விட்டு வெளியே சென்று விடுவதுதான்.....அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்திலும்....சண்டையால் ஏற்பட்ட கோபத்திலும்....அருணை தர தரவென்றூ இழுத்து வந்து..ஸ்கூட்டரில்...உட்காரவைத்து..ஆக்ஸீலேட்டரை..முறுக்கினான்.....

தீபக்கின் சிந்தனை....எல்லாம் எப்படியாவது...டைவர்ஸ் வாங்கிட்டு நிம்மதியா வாழணும்..என்பதை கணக்கு போட்டுக் கொண்டிருந்த அதே வேளையில்....வீட்டில் படுக்கையில் கிடந்த தீபா அலுவலகத்திற்கு அன்று லீவு சொல்லிவிட்டு.. நெருங்கிய தோழிக்கு டெலிபோனை சுழற்றினாள்.....

' ஹலோ.....ரம்யாவா.....? தீபா ஹியர் டி.....' அழுகையும் ஆத்திரமுமாக முதல் வார்த்தையாகவே கேட்டாள்...' டைவர்ஸ் அப்ளை பண்ணியாகணும்டி...என்னால இந்த ஆளு கூட வாழவே முடியாது.....' விவரித்துக் கொண்டிருந்தாள்........


அடுத்த பாகத்தில் ட்ரெய்லர் VIII நிறைவுறும்...(அட அதுக்கப்புறம் ட்ரெய்லர் IX தொடருங்க...)

காத்திருங்கள்....

பின் குறிப்பு: சுட்டுப் போட்டாலும் அநாகரீக வார்த்தைகள் நமக்கு வரமாட்டேங்குதுங்க....ஏதோ ஒரு வாழ்க்கை முறை சரியா என்னை சுட்டுப் போட்டு இருக்கு...அதுக்கு என்ன பேரு வேணா வச்சுக்கோங்க...பல பேரு அதுக்குப் பேரு கல்ச்சர்னு (தமிழ்ல சொல்ல மாட்டேனே..) சொல்றாங்க...!

அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்டா....!


தேவா. S

Saturday, November 27, 2010

மாவீரர் நாள்...!

எமக்காக ஆதவன் ஒரு விடியலைப் பரப்புவான்....அப்போது எமக்கான கானங்களும், இசையும், பறவைகளின் சங்கீதமும் ஒலிக்கும்....எமது ஆ நிறைகள் சந்தோசத்தில் தன்னிச்சையாக பால் சொரியும்...! எம் குல பெண்டிரின் முகங்களில் பூரிக்கும் சந்தோசத்தின் வெளிச்சத்தில் வெட்கி கதிரவன் சில கணங்கள் தன் முகம் மறைப்பான்....!

தினவெடுத்த எம்மவரின் தோள்கள் பூமாலைகளை தாங்கி நிற்கும்... தமிழ் தேசமெங்கும் சுதந்திர ஈழக்காற்று சுற்றிப் பரவி தென்றலாய் நடனமாடி மலர்களில் இருந்து நறுமணத்தை காற்றில் பரப்பி எமது தமிழ் ஈழம் முழுதும் பரவவிடும்....

எம்மவர் சிந்திய இரத்தத்துளிகளும்....மண்ணில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் ஆன்மாக்களும் அன்றைய தினத்தில் சர்வ நிச்சயமாய் எமது உணர்வுகளுக்குள் உயிர்த்தெழுந்து...ஆனந்தக் கண்ணீராய்....மண்ணில் வீழ்ந்து அஞ்சலிகளை ஆத்மார்த்தமாக்கும்....

குள்ள நரிகளும் கபட நாய்களும் வெறி பிடித்த மிருகங்களும்...எமது தமிழ்தேசிய கொடியின் பட்டொளி காற்றில் உரசி தெறிக்க வைக்கும் தீப்பொறிகளின் உக்கிரம் தாங்க முடியாமல்....செத்து வீழும் காட்சிகளை எம் மழலையர் கண்டு காரணம் கேட்க எம் குலப் பெண்களும் ஆண்களும் அதன் பின்ணனியில் உள்ள துரோகக் கதைகளை...சொல்லி சொல்லி சிரிப்பர்....

எம் கனவுகள்....அழிந்துவிடவில்லை..
அது கனல் போல் கனன்று கொண்டிருக்கிறது...
வல்லூறுகள் வாழ்வது போலத் தோன்றூம்..
ஆனால் காலத்தின் கணக்குகள்...
எல்லாவற்றையும் கலைத்துப் போடும்...!

ஒரு தொன்மையான இனத்தின் வேர்கள்
அழிந்துவிட்டதாய் நினைப்பதின்
பின்ணணியில் பிழையாமல் விழித்திருக்கிறது
எம் எதிரிகளின் அறியாமை...!

காலமே...காட்சிகளை மாற்றும்...
அன்று மேல் கீழ் ஆகும்...
கீழ் மேல் ஆகும்....
ஆமாம்..மாற்றம் பிரபஞ்ச நியதியன்றோ?

வெகு தூரமில்லை உறவுகளே...! சிங்க நிகர் தலைவனின் கனவுகள் நிறைவேறும்...தமிழும் தமிழனும்...அழியும் என்று உலகம் மகிழும் தறுவாயில் எல்லாம்..எம் இனமும் எம் மொழியும் வெகுண்டு எழுந்து...உலக எண்ணங்களைத் தவிடு பொடியாக்கிவிடுவது வழமையான ஒன்று...!

ஒப்பற்ற ஒரு சீரிய தொல் இனம் நாம்....தொன்மையான செம்மொழியை கொண்டவர்கள் நாம்....!!!!!!! ஈழம் என்பது ஈழத்தில் பிறந்தவர்க்கு மட்டுமின்றி...ஒவ்வொரு தமிழனின் கனவாய்க் கொள்வோம்....!

எம் மக்களுக்காக போராடி.. எமது வாழ்வாதரங்களுக்காக மண்ணில் தலை சாய்த்த வெற்றித் திருமகன்களுக்கும்...மாவீரர்களுக்கும்...இந்த மாவீரர் தினத்தில் (27.11.2010)

எமது வீர வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறோம்....!!!!!!!

வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே!
வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே
படைகள் செல்க செல்கவே!

தேவா. S

Friday, November 26, 2010

பசி...!கலைந்து கிடக்கும்...
மணல்வெளியில் பரவிக்கிடக்கும்
மனிதர்கள் விட்டுச் சென்ற....
காலடிகளோடும் கதைகளோடும்..
மெளனமாய் ஓய்ந்து கிடக்கிறது
நள்ளிரவு மெரீனா...!

ஒற்றை உடைமையை...
தலைக்கு கொடுத்துவிட்ட
திருப்தியில் கடந்து போன
நாளின் கஷ்டங்களை காற்றில்...
பறக்கவிட்டு....தொடர்கிறது
ஒரு தெருவோர பிச்சைக்காரனின்
கனவுகள் நிறைந்த தூக்கம்....!

சிலையான தலைவர்கள்...
அமைதியாக நிற்கிறார்கள்...
நெஞ்சு நிமித்தி வந்து அமரப்போகும்
காக்கை குருவிகளுக்காக.....!

காக்கிச்சட்டைகளின் கைகளில்...
அவசரமாய் திணிக்கப்ப்டும்
இந்திய ரூபாய்கள் அனுமதிக்கிறது...
காமத்தை காசாக்கும் கவர்ச்சியான
வாழ்வின் சோகங்களை....!

அரவமற்ற நடு நிசியில்.....
ஆனந்தமாய் சாலை கடக்கும்
தெரு நாய் சுதந்திரத்தின் உச்சத்தில்...
வெறித்துப் பார்க்கிறது அவ்வப்போது...
சாலை கடக்கும் வாகனங்களை...!

நகரம் காக்க நகரும்
காவல்துறை வாகனங்கள்...
எங்கேயாவது டீ குடிக்கவேண்டும்.....
கொட்டாவியோடு வண்டியோட்டும்.
காவல்காரரின் கண்கள் ஏக்கமாய்...
சுழல விடுகிறது தூக்கத்தை..!

எல்லா கடவுளர்களும்....
பூட்டுக்களோடு பாதுகாப்பாய்..
தத்தம் ஆலயங்களில்....
வீடுகளற்ற குடித்தனங்கள்...
நடைபாதை ஓரங்களில்....!

அடைக்கப்பட்ட டாஸ்மாக்கை
திட்டிய படி....போதையில்...
அரசியல் பேசும்...குடிமகனின்
குரல் கேட்டு நகர்ந்து செல்லும் மாடுகள்!

சுவர்களில் கட்சித் தலைவர்கள்
சிரிப்போடும்....கை குவித்தலோடும்...
தெருவெங்கும்..பட்டொளி வீசும்
பல கட்சிக் கொடிகள்...சொல்கிறது...
ஒரு குழப்பமான நாட்டின் சூழலை....!

நள்ளிரவில் பெற்ற சுதந்திரம்....
தேங்கியே கிடக்கிறது....
விடியாமலேயே.. இன்னும்..
அதன் கோரப்பற்களுக்குள்...

இன்னும் சற்று நேரத்தில்..
விடியப் போகும் விடியலோ...
அரிதார மனிதர்களை களமிறக்கும்...
கூவி கூவி புத்தி விற்க....
தாவி தாவி பெருமை பேச....

சாக்கடைகளில் நெளியும்...
எமது தேசத்து வாழ்க்கையில்
புதுமைகள் புகுத்த முனையும்.....
புத்திகளுக்குத் தெரியுமா
காலங்களாய் பசித்திருக்கும்...
எமது ஒட்டிய வயிறுகளைப் பற்றி...?தேவா. SThursday, November 25, 2010

எளிது....!ட்ரெய்லர் VII

எங்கேயோ ஆரம்பிக்கிறோம் விசயங்களை, எதன் பொருட்டோ நடத்துகிறோம் விவாதங்களை ஆனால் அதன் அடித்தளம் என்ன என்பதை மறந்து விட்டு ஏதேதோ பேசிக் கொண்டு இருப்போம். இப்படி பல நேரங்களில் ஆகிவிடும். விவாதங்கள் என்பது புதிய விசயங்களை அறிய நாம் நடத்தும் கருத்துக்களின் போர். இங்கே கருத்துக்கள் பரிமாறிக் கொள்வதில் உச்ச பட்ச நாகரீகம் வேண்டும்.

நாகரீகம் பற்றி விவாதித்துக் கொண்டு எப்படி எல்லாம் மரியாதையாக பேச வேண்டும் என்று கருத்துப் போர் செய்து கொண்டிருந்த இருவர்..கிண்டலும் கேலியுமாய் ஒருவரை ஒருவர் நையாண்டி செய்து... தனிப்பட்ட முறையில் பேசி கேவலமான உபோயோகம் கொள்ள முடியாத வார்த்தைகளை பயன்படுத்தி சண்டையிட்டு சட்டைகளை கிழித்துக் கொண்டு ரத்தக்களறியாய் விவாதத்தை முடிவுக்கு கொண்டு வராமல்...அதை ... வேறு வகைக்கு திருப்பி விட்டுவிட்டனர்.....!

மொத்தத்தில்... அடிப்படை நோக்கம் சிதைந்து தானே போய்விட்டது?????

பேச்சில், எழுத்தில், கருத்தில், செயலில் கொஞ்சம் இல்லை அதிகமாகவே.. நாகரீகம் தேவைப்படுகிறது. நான் எப்படி வேணா பேசுவேன்...எவ்ளோ அசிங்கமா வேணுமானாலும் பேசுவேன்....என் எதுத்தாப்ல இருக்கவன் எல்லாம்..சும்மா ஜுஜுபின்னு நினைக்கிற மனோ பாவத்துக்குப் பின்னால இருக்குற அகங்காரம்...சர்வ நிச்சயமாய் அந்திமத்தில் கர்ண கொடூரமாய் அவர்களையே திருப்பி அழிக்கும்.

உன் வீட்டுக்குள்ள நீ எப்டி வேணா இருந்துக்கோங்க.. என்ன வேணா பேசிக்கோங்க...அப்போ கூட...கூட இருக்க மனுசங்களுக்கு அதுல உடன்பாடு இருக்கணும், ஆனா வெளில வந்துட்டா ஒரு காமன் கல்ச்சர் (இங்கிலிபீசுலயே சொல்றேன்....தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை.. சோ..அண்ட் சோன்னு சொல்லி விஜயகாந்த் ரேஞ்சுக்கு பாயாதீங்க..ப்ளீஸ்..மீ ஹியூமன் பீயிங்னோ...)இருக்கு...! எப்டி சிரிக்கணும்... எப்படி உட்காரணும் எப்படி உடுத்தணும் எப்படி சாப்பிடணும்.....

இப்டி...பலப்பல மேட்டர்ஸ் இருக்கு...மக்கா!!!!! தொலைபேசில பேசும் போது எப்டி பேசணும்..போன எப்டி பிடிக்கணும்...எப்போ தேங்க்ஸ் சொல்லணும்...எப்போ சாரி சொல்லணும்..எதுக்கு எவ்ளோ வாய்ஸ் ரெய்ஸ் பண்ணனும்...(இது எல்லாம் பப்ளிக்ல பப்ளிக்ஸ்...சும்மா உங்க ஆத்துக்குள்ள எப்டி வேணா இருங்க...) இப்டி எல்லாம் இருக்கு....! அட இருக்கா இல்லையாங்க....?????

வெளில வந்து நின்னு காச் மூச்சுனு நான் கத்தினா....சட்டைய தொறந்து விட்டுட்டு..நடக்குறதுக்கு பதிலா ஓடினா...எனக்கு இன்னாங்கோ பேரு?...................

யெஸ்.. யெஸ்.. யூ ஆர் கரெக்ட் யுவர் ஆனர்....! அதேதான்.... !

இது பொதுவெளில, அது போக கார்பரேட் கல்ச்சர்னு (மறுபடியும் இங்கிலிபீஸ்...தமிழ்ல வருவனாங்குதே...!!!!!! அவ்வ்வ்வ்வ்) சில மேட்டர்ஸ் இருக்கு அது.. பத்தி பேசுனா நான் மெய்ன் பிக்சர் போடவே முடியாது மக்கள்ஸ்....ட்ரெய்லர மட்டுமே சிந்துபாத் கதை மாதிரி எழுதிகிட்டே போக வேண்டியதுதான்....

இப்டி எல்லா இடத்துலயும் ஒவ்வொரு சென்ஸ் அப்ளை பண்ணனும்...அதுக்கு பேருதான்...காமன்சென்ஸ்...!(அடச்சே..நம்ம மன்மதனை குறிகிற காமன் இல்லீங்கோ..இது இங்கிலிபீசு காமன்) அந்த காமன் சென்ஸ் அவுட்டயிட்டா.....மிச்சத்த பப்ளிக் நீங்களே சொல்லிடுங்கோ...!

ஏன் பப்ளிக் பப்ளிக்னு சொல்றேன்னா...நம்ம மூஞ்சில காறித்துப்பி அசிங்க அசிங்கமா திட்டும் போது கூட .... அதைபத்தி கவலைப்படமாம மேலே சொல்லுங்கோன்னு கேட்டுட்டு.. உங்க வந்தாரை வாழ வைக்கும் கான்ஸப்ட ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணிட்டு கண்டுக்காம நிக்குறீங்களே....!!!நம்ம கல்ச்சர்...(ம்ம்கூம் பயபுள்ள கடைசி வரை தமிழ்ல சொல்லமட்டேங்குதே..) பாதகத்தை எல்லாம் கண்டுக்காம போங்கன்னு சொல்லிலீங்கோ....!!!!!! ஆரார்க்கு எப்டி பாடம் எடுக்கணுமோ அப்டி எடுக்கச் சொல்லுதுங்கோ.....

ஆமாங்க....சாத்வீகம் போதிச்சு ஆன்மீக வழி...அமைதின்னு சொன்ன அதே நம்ம கல்ச்சர்..ரத,கஜ,துரக பதாதிகள் எல்லாம் வச்சு இருந்தங்க....!!!!! இந்தோனேசியா வரைக்கும் போய் சூட் பண்ணிட்டு வந்திருக்காங்க...கங்கை கொண்டான், கடாரம் கொண்டானு பேரு எல்லாம் வாங்கி இருக்காங்க....

கண்ணகி கோவில் எப்டி சேர மகராஜா கட்டுனார்னு தெரியும்ல.....! பிச்சைகாரங்க இல்ல பாஸ் நாம எல்லாம்... நீங்க வேணும்னா.. கஜினி முகமதுவோட சொந்தகாரங்க யாராச்சும் இருந்த... கேட்டுப்ப்பாருங்களேன்...எப்டி வசதியா இருந்தோம் நாமன்னு......(அட கேட்டுதான் பாருங்களேன்...)

செம காமெடியா இருக்கு பாஸ் ராஜாங்க கதை சொல்றதுக்கே....நாம தெக்கு தெக்குனு கத்தினா எப்டி சில பேருக்கு வடக்கு வடக்குனு காதுல விழுதுன்னு தெரியலேன்னு நம்ம ஊர்ப்பக்கத்துல சொல்லுவாங்க.....

ரமண மகரிஷின்னு ஒருத்தர் இருந்தாருன்னு சொன்னா.... அவரையும் அவர்கிட்ட இருந்து கிடைக்கப் பெற்ற ஞானத்தையும்...தத்துவங்களையும் பாக்குறத விட்டுப்புட்டு...அவரின் புறத்தை பத்தி விமர்சனம் செஞ்சா எம்புட்டு ஒரு அறியாமை அது......

ஆமாம்....சரி விடுங்க..நமக்கு கெட்டதுல கூட நல்லது தெரியும்.....அதே நேரத்துல கெட்டது எப்டி நல்லா வரலாம்னு சொல்யூசனும் கொடுக்கத் தெரியும்..ஏன்னா நம்ம பார்வை அப்டி....!!!!! ஆனா எல்லோருக்கும் அப்டின்னு சொல்ல முடியாதுங்களே.. சில பேர்கள் குற்றங்களை பெரிய பூதக்கண்ணாடி வச்சு தேடிட்டே இருப்பாங்க எப்டி கொற சொல்லாலாம் எங்க குத்திகாட்டலம்..எப்டி அசிங்கப்படுத்தலாம்னு யோசிச்சு யோசிச்சு அதுல எக்ஸ்பர்ட் ஆக இருப்பாங்க...

இப்போ என்னா மேட்டர்னா எப்டி வேணா நினைக்கட்டும்..ஆனா அந்த பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர....அமைதியான உறுத்தாத சொல்யூசன் கொடுக்க முடியுமா....அவுங்களால? இந்தக் கேள்விதான் இப்போதைக்கு எனக்கு எழுகிறது...

IF WE ARE NOT PART OF THE SOLUTION THEN WE ARE THE PROBELEM!!!!!

பாரதி சொல்லியிருக்கிறார்...." படிச்சவன் சூதும் வாதும் பண்ணினா........." நான் பேலன்ஸ் லைன்ஸ் முழுமை பண்ண விரும்பல....அது நான் கற்ற நாகரீகம். என்னா நீ ட்ரெய்லர் ட்ரெய்லர்னு போட்டுகிட்டே போற எப்போ மெய்ன் பிக்சர்...?னு நம்ம பங்காளில ஒருத்தன் கேட்டுப்புட்டான்...பதில் சொல்லாம இருக்க முடியுமா.....சொல்லித்தானே ஆகணும்....

பங்காளி...ஊர்ல இருக்குற எலிய எல்லாம் பிடிக்க ஒருத்தன்...குழல் ஊதிகிட்டே....எலி எல்லாம் ஃபாலோ பண்ணி வர வச்சு....கடைசில கொண்டுபோய் தண்ணிக்குள்ள தள்ளி விடுவான்னு படிச்சு இருக்கோம்ல....

அப்டித்தான்...ட்ரெய்லர்னு....சொல்லி ஊதிகிட்டு போய்கிட்டே இருப்போம்...மொத்தமா தண்ணிக்குள்ள் தொபுக்குனு குதிக்க போறேன்னு சொல்லல...நெருப்புக்குள்ள குதிச்சுடுறேன்....பங்காளி...! அச்சச்சோ....... நீ நெருப்புக்குள்ள போனா நீயும் போய்ச் சேந்துடுவியேன்னு பதறுறியா....போவோம் பங்காளி...முடிஞ்ச வரைக்கும் ஏதோ உளறிட்டு செத்துப் போய்ட்டான் லூசுன்னு யாராச்சும் சொன்னா சொல்லிட்டுப் போறாங்க....

நாம் வாழ்ற வரைக்கும்...நமக்கும் அடுத்தவங்களுக்கும் உபோயோகமா நாகரீகமா ஒழுக்கமா வாழ்ந்த போதும்....சரிதானுங்களே....! வாழ்க்கை ரொம்ப எளிதானது நேரானது...மனுசங்க நாம காம்ளிகேட் பண்ணிக்கிறோம்....!!!!அன்பா எல்லோரையும் பாருங்க...எல்லாமே. எளிதுதான்....!!!!!

இன்னும் விரிவாக பேசுவோம்......தொப்புள் கொடி உறவுகளே....காத்திருங்கள்....!


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்டா...!


தேவா. S

Wednesday, November 24, 2010

நீ.....!தெருவெல்லாம்
இறைந்து கிடக்கிறது
உன்னோடு சுற்றித் திரிந்த
ஞாபகங்களின் சுவடுகள்...!

காதலோடு கை சேர்த்து
சிரித்து எழுப்பிய...
ஒலிகளின் அதிர்வுகள்
கலைத்துப் போடுகின்றன
சம கால நினைவுகளை...!

காதலா? நட்பா..?
என்று தீர்மானிக்க முடியாமல்
மத்திமத்தில் கிளைத்த
உணர்வுகளின் தெளிவற்ற...
பிம்பங்களால் இதோ...
நிகழ்ந்தே விட்டது நம் பிரிவு...!

உன்னைப் பற்றிய...
நினைவுகளோடும் செரிக்க முடியா...
ஆசைகளோடும் இறுக்கத்தில்..
மூடிக் கிடக்கிறது தீர்மானித்தல்களில்...
தோற்றுப் போன மனது....!

ஒரு மழையின் ஸ்பரிசம் போல
தீண்டாமல் தீண்டிச் சென்ற
உன் இயல்புகளின் விருப்பங்கள்
ஒரு தென்றலைப் போல
வருடி மறைந்துதான் போனது...!

ஒரு கோப்பை தேநீரும்...
ஒரு மழை நேரத்து மாலையும்
என்னை சுற்றி பரவிக் கிடந்த
உன் நினைவுகளும்....
என்னிலிருந்து சிணுங்கலாய்
உதிரத் தொடங்கியிருந்த...
கவிதைகளும், சொல்லாமல்...
சொல்லிக் கொண்டிருந்தன...
உன் மீதான என் காதலை...!

என் பெயர் சொல்லி...
நீ அழைத்த தருணங்களும்...
என் முகம் பார்த்து நீ ....
மறைத்த வெட்கங்களும்....
காற்றிப் பறந்த உன் கூந்தலை..
ஒதுக்கிவிட்டு..நீ பார்த்த பார்வையும்...
குவித்துப் போட்டிருக்கின்றன்...
எனக்குள் ஏதேதோ உணர்வுகளை...!

படாமல் படும் பனியாய்
தொடாமலேயே நிறைந்திருக்கும்
உன் நினைவுகள் கொடுத்த...
வெளிச்சத்தில் துளிர்த்து நிற்கிறது
சொல்லாத காதலின் ஒரு தளிர்.....!!!

பிரிவோம் என்று தெரிந்தே...
பழகிய நாட்களின் ஓரங்களில்
ஒட்டியிருந்த காதலின்
படிமாணங்களை பகுத்தெடுத்து
வைத்திருக்கிறேன்..என் உள்ளங்கையில்
உன் நினைவுகளின் எச்சங்களோடு...!

உனை தேட எடுக்கும்
முயற்சிகளை மனதுக்குளேயே
மரித்துப் போகச் செய்து.....
இந்தக் கணம் வரை..
விளையாடிக் கொண்டிருக்கிறேன்....
நீ என் மீது வைத்திருந்த...
காதல் என்ற பெயருக்குள்
ஒளிந்திருக்கும் ஒரு நிஜக்காதலோடு....!

தேவா. S

Tuesday, November 23, 2010

திடம்...!
ட்ரெய்லர் VI


இப்போ...இப்போ...இப்போ... நிஜமாவே நினைச்சு பாக்குறேன்...!!!!!! உப்பும் உறைப்பும் ஓவரா சாப்பிட்டு சாப்பிட்டு... ரோசமும், கோவமும்...நமக்கு அதிகமா வருதோன்னு....!

மிகப்பெரிய மனப்பிறழ்ச்சியும் தவறான கற்பிதங்களையும் காட்டுவதையும்....அதில் ஏதோ அபரிதமான உண்மைகள் இருப்பது போல மனிதர்கள் ஆராவரம் காட்டுவதையும் குறைந்த பட்சம் பார்த்து விட்டு வாயில் வெற்றிலை பாக்கு போட்டு குதப்பிக் கொண்டு எங்கேயோ ஒரு மூலையில் எனக்கேன்ன என்று துப்பிவிட்டு....மேலே வானத்தில் பறக்கும் காகங்களை எத்தனை என்று எண்ணிக் கொண்டு...சாதாரணமாக நகர......கண்டிப்பாய் என்னால் முடியாது.

உலகம் மொழியற்று கிடந்த காலத்தில் இயல், இசை, நாடகம் என்று உலகிற்கு நாகரீகம் கற்பித்த ஒரு இனத்தின் கலச்சாரத்தை சாட கவர்ச்சியான மேலை நாட்டு கலாச்சாரம் உதவுகிறது என்பதை மேம்போக்காக பார்க்கும்போது உண்மை இருப்பது போல தோன்றினாலும்....ஒரு குடியின் ஒரு சமூகத்தின் பழக்கவழக்கங்கள்....வாழ்வியல் முறைகள்...ஆங்காங்கே நிகழும் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனோதத்துவ ரீதியில் வார்க்கப்படுபவை.......

உண்ணவும், உடுத்தவும் வாழவும் மிகையாக இயற்கையை சார்ந்திருந்த ஒரு சமூகத்தின் மனோதத்துவ இயல்புகள் என்ன? என்று ஆராய்ந்து பார்க்க கொஞ்சம் விசால பார்வையும்...தெளிந்த உள்நோக்குத் தன்மையும் அவசியம் இவை இரண்டும் அற்றுப் போனால்..மேம்போக்கான....மனம் என்ன என்ன கதைக்கிறதோ அவை எல்லாம் எடுத்து நாம் கடை பரப்பி வைத்து... லேகியம் விற்பது போல கூவி கூவி விற்க வேண்டியதுதான்.

வியாபரத்தின் அடிப்படையில் சமோயோசித புத்தியை பயன்படுத்தி..தான்... தான் என்று வாழும் ஒரு கூட்டத்திற்கு எப்போதும் அடுத்த மனிதர்கள் பற்றி கவலையில்லை....! ஒருவன் முகத்தில் காறி உமிழ்ந்தால் அதற்கு கோபம் கொள்தல்தான் மனித இயல்பு...

அங்கே கோபத்தை மறைத்து விட்டு... சிரித்துக் கொண்டு....சாதரணமாக புத்திமதிகள் சொல்லிவிட்டு போகும் இடாமாயிருக்கட்டும் இல்லை.... உன்னை நான் கண்டு கொள்ளவில்லை என்று நகரும் இடமாயிருக்கட்டும் அதற்கு பின்னால் ஏதோ திட்டமிருக்கிறது ...கபட குள்ள நரித்தனம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்....?

இந்திய கலாச்சாரத்தின் இரு பெரும் சீர்கேடுகள் நிகழ்த்தப்பட்டது அன்னியர்களால்....ஒன்று...பெண்ணடிமைத் தனம்.....! இதை நிகழ்த்த....அன்னியர்களின் வழிமுறைகளும்....சாஸ்திரங்களும் உதவி செய்தது......இதைக் கிழித்து வெளியே நாம் வந்து கொண்டிருந்த நேரத்தில்தான்.....வியாபாரம் செய்ய கையேந்தி நமது தேசத்துக்குள் நுழைந்தனர்....இன்று கலாச்சாரத்தின் உச்சத்தில் இருப்பதாய் நாம் நினைக்கும் வெள்ளையர்கள்.

இயல்பிலேயே....வந்தவரை வரவேற்கும் ஆதரிக்கும், நம்பும் குணம் கொண்ட லெமூரியக் கண்டத்து மக்கள் இவனின் சூழ்ச்சியில் விழுந்துதான்.....இவனிடமே நாட்டை விட்டு...விட்டு....பின் போராடி பெற வேண்டியதாகி விட்டது. சுதந்திரம் கொடுத்துவிட்டு அவன் போய் 60 ஆண்டுகளுக்கும் மேலாயும் அவனின் கபடமும் வஞ்சமும் சூழ்ச்சியும் இன்னும் நம் மனிதர்களிடம் தொக்கியே நிற்கிறது.

பெரும்பாலும் அரசியலில் அவன் விட்டுச் சென்ற ஆதிக்க மனப்பான்மை கொடி கட்டிப் பறக்கிறது. ஆக இன்றைய சமூகத்தில் ஆங்காங்கே இருக்கும் சமூக சீர்கேடுகளுக்கு காரணம் நயவஞ்சகர்களின் குள்ளத்தனம் இன்னும் நம்மிடம் எஞ்சியிருப்பது தானே?

ஒரு கணம் நில்லுங்கள்....யாரை நாம் திட்டிக் கொண்டிருக்கிறோம் தெரியுமா..... நீதிக்காக தனது புதல்வனை தேர்காலில் வைத்தானே.. .மனு நீதிச் சோழன் அவனின் சந்ததியினரை.....!!!!! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே....குடவோலை முறை கொணர்ந்து ஜனநயகயத்தின் சாயல் உட்புகுத்தினானே...இராசராசன்...அவனின் சந்ததிகளையும்தான்......

ஒரு கோவில் கட்ட....அறிவியல் வசதிகள் அற்றுப் போயிருந்த காலத்தில்....மலைகளே இல்லாத ஒரு பகுதியில் கல்லாலேயே கோவில் செய்ததற்குப் பினால் இருந்த தொழில்நுட்பமும்.....நிர்வாகம் செய்த மூளைகளும்.....என்ன முட்டாள்களின் கூட்டமா?

" தேரா மன்னா...." என்று சபைதனில் வந்து கேட்ட பெண்ணின் கூற்றில் இருந்த உண்மை கேட்டு...." யானோ அரசன்....யானே...கள்வன்..." என்று உயிர் துறந்த வேந்தர்களின் வரலாற்றையும் உள்ளடக்கிய சந்ததியினருக்குத்தான்...இன்று கலச்சாரமற்றவர்கள் என்ற பட்டம்....

நான் பள்ளிக்கு முதன் முதலாய் செல்கிறேன்....பக்கத்து வீட்டு பாபு அங்கேயே..மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.....!!!! பாபுவிடம் அம்மாவிடம் என் அம்மா தம்பியை பார்த்துக் கொள்...என்று சொல்லி அனுப்புகிறாள்....தெருவில் விற்கும் பாண்டாங்களை வாங்கித் தின்னாதே தம்பி என்று கண்டிக்கிறாள்.....? பாபுவும் நானும் கைகோர்த்து பள்ளி செல்கிறோம்....கூடப்பிறக்காமலேயே பாபு எனக்கு அண்ணன் ஆகிவிட்டான்....

இது கூட்டு சமுதாயம்....!!!!!

இங்கே...மனிதர்கள் கூடி வாழ்ந்தார்கள் (இன்னமும் வாழ்கிறார்கள்)...! பின் தீர்மானித்து தலைவனை தேர்ந்தெடுத்தார்கள்.....அதன் பின் அந்த தலைவனின் கீழ்.....நிர்வாகம் நடந்தது.....! என்னதான் நிர்வாகமும் அரசும் இருந்தாலும்....இவன் பெரும்பாலும் சக மனிதனை சார்ந்தேதான் பிரச்சினைகளை தீர்க்கிறான்.

அமீரகத்தில் நான் வசிக்கிறேன்....எனக்கு முடியவில்லை ஏதோ பிரச்சினை என்றால்...ஒரே ஒரு தொலைபேசியில் ஆம்புலன்ஸ் வரும்....அவர்களே கொண்டுபோய் மருத்துவம் மனையில் சேர்த்து விடுவார்கள். இங்கே....சமூகம் என்பது அரசும் அரசுசார் நிறுவனங்களும்...இதில் ஒரு கட்டுபாட்டு இயங்குதன்மை மிகுந்திருக்கிறது. மனிதர்களும் உறவுகளும் அற்றுப் போயிருக்கும் ஒரு சூழல் இது!

ஆமாம் இறுக்கத்தோடு....ஒவ்வொரு கட்டுப்படுகளை எண்ணத்தில் கொண்டு வாழும் மனிதர்கள் பெரும்பாலும் சுயநலமாய் இருந்து போவதால் பக்கத்து வீட்டுக்காரனின் பெயரே கூட தெரிவதில்லை.....தெரியவேண்டிய அவசியமும் இல்லை.... இந்த சூழல் அப்படி.....

ஆனால்...சொந்தமோ இல்லையோ....சும்மாவே..... மாமா, சித்தப்பா, பெரியப்பா, பங்காளி, மாப்பிள்ளை, மச்சி....என்று உறவோடு வாழும் பெருங்கூட்டம் நாம். ஒருத்தருக்கு உடம்பு முடியவில்லை எனில் தெருவே கூடி நின்று அவரை மருத்துவமனையில் சேர்க்கும்.....பக்கத்து வீட்டுக்காரன் சமைத்து அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பான்...

எங்கள் கலாச்சாரத்தில் ஒருத்தருக்கு ஒருவர் நாங்களேதான் உரிமைகளை கொடுக்கிறோம்.....எங்களுக்கு....இப்படி வாழ்வதில் சுகம் இருக்கிறது. நாங்கள் கூட்டம் கூட்டமாக..... உண்டு வாழ்ந்து வளர்ந்தவர்கள்....!!!!

கலச்சாரம் போதிக்கும் நாடுளில் வாழும் மனிதர்களை நாம் குறை சொல்வதற்கில்லை.....அது அவர்களின் கலாச்சாரம். அவன் பர்கர்தான் எனக்கு பிடிக்கும்....காலையில் ஒரு பிரட் டோஸ்ட் சாப்பிடுவேன்.... என்று சொன்னால் அது இயல்பு...!!!! நான் போய் அங்கே உட்கார்ந்து கொண்டு அவர்கள் போல நடந்து கொண்டால் அது நடிப்பு......!!!!!!!

மனிதன் வேறுபட்டவன் அவன் எக்காலமும் மத்த ஜீவராசிகளோடு ஒத்துப் போகாதவன்.....சிந்திக்கவும் ஒரு விசயத்தை உணரவும் மனிதானல் மட்டுமே முடியும்.....!!!!! அந்த உணர்தலும் விட்டுக் கொடுத்தலும், சகித்துப் போதலும்...அடுத்த மனிதரின் மனம் புண்படுமே என்று யோசித்து வாழ்வதும்...கொஞ்சம் ஆழமாக சுவாசித்து....இயற்கையைச் சார்ந்து வாழ்பவனுக்கு மட்டுமே கை கூடும்.....

நாம் இயற்கையோடு ஒத்து வாழ்ந்தவர்கள்.....வாழ்பவர்கள்....இங்கே எமது மனிதர்களின் செயல்பாடுகளில்...விதிமுறைகளில்...மனோதத்துவ ரீதியான...மிகப்பெரிய பரந்த விசயங்கள் இருக்கின்றன... அவை மிக சூட்சுமமானவை....!

எவையெல்லாம் எமது திடமோ...அவையெல்லாம் புரிந்து கொள்ளப்படாமையால்....அவை குறையாகத் தெரிகின்றன....என்பதுதான்....சரியான உண்மை...


இன்னும் விரிவாக பேசுவோம் தோழர்களே.....காத்திருங்கள்...


அப்போ......வர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்டா!!!!!


தேவா. S

Monday, November 22, 2010

பெண்...!ட்ரெய்லர் V

சிலிர்த்து போய் நிற்கிறேன்...எப்படி வாழ்வின் சில உணர்வுகளை பகிர்ந்து கொள்வது என்று....காலங்கள் ஓடி கொண்டே இருக்க அதை வயது என்று கணக்கிட்டு உலகம் சொல்ல நம்மைச் சுற்றிய மாற்றங்கள் எல்லாம் தவிர்க்க முடியாததாகிப் போய்விடுகிறது.

சட்டென்று கொண்டு வந்து எங்கேயோ நிறுத்தி விட்ட வாழ்க்கையை பின்னோக்கி பார்க்கிறேன். 2004ன் பிப்வரி 5 அது ஒரு அழகான மாலை வேளை...என்னை ஏர்போர்டில் ஊருக்கு அனுப்புவற்காக வந்த நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டும் ...பயணத்திற்கான வாழ்த்துக்களை தொலைபேசி வழியே தொடர்ந்து கேட்டுக் கொண்டும் சார்ஜா ஏர்போர்ட்டை நோக்கிய அந்த பயண மகிழ்ச்சியின் உச்சத்தின் பின்ணனியில் என் திருமணம் மறைந்திருந்தது.

பெண்ணுக்குப் பிடிக்கிறதா என்று கேட்டு....மாப்பிள்ளைக்கு பிடிக்கிறாத என்று உறுதி செய்து....பெண்ணோடு மாப்பிள்ளை தொலை பேசியில் பேசித்தான் ஆகவேண்டும் என்று உறவுகள் எல்லாம் நிச்சயதார்த்தத்துக்கு முன்னால் ஒற்றைக் காலில் நிற்க....எனக்குள் ஆச்சர்யம் பரவியது.

எப்படி ஒரு காலத்தில் பெண்ணை கல்யாணத்திற்கு முன்னால் சந்திக்கவும் பேசவும் தடைகள் விதித்த எம் சமுதாயமா...????? மாற்றத்தை உள்வாங்கி அதன் பின்ணனியில் இருக்கும் உண்மைகளை அலசி அதை ஏற்றுக் கொண்டாலும் இன்னும் நேர்த்தியாக பயணித்துக் கொண்டே இருக்கிறதே... என்று ஒரு கணம் என்னை ஸ்தம்பிக்க வைத்தது...பழைய பஞ்சாங்கம் என்று சொல்லக் கூடிய உறவு முறை பாட்டிகளும், தாத்தாக்களும் இதை ஆதரித்துப் பேசியது இன்னும் ஆச்சர்யமாக இருந்தது எனக்கு.....!

இது ஒரு பக்கம் இருக்க....நான் பணி புரிந்த அலுவலகத்தில் இருந்த இந்திய தோழர்களும் தோழிகளும், நான் தொலைபேசியில் பேசும் வரை....என்னை விடவில்லை... !!!!! அது எல்லாம் அந்தக் காலம்..இப்போது 21 ஆம் நூற்றாண்டில் எவ்வளவோ மாறிப் போய்விட்டது. பெண் பற்றிய புரிதல் வேண்டும்..அந்த பெண்ணுக்கு உன்னைப் பற்றி தெரிய வேண்டும்..........என்று வலியுறுத்தலும் சேர்ந்தே என்னை உந்த....திருமணத்திற்கு முந்தைய எங்கள் பேச்சு ஆர்ப்பாட்டமாய் ஆரம்பித்தது..

சென்னையின் பட்டப்படிப்பும்...சுற்றுப்புறமும் தெளிவாய் சிந்திக்க வைத்திருந்தாலும்...சீரான சிந்தனையோடு குடும்ப சூழலையும் உணர்ந்தவராய் எனக்கு வரவிருந்த வாழ்க்கை துணை இருந்தது. ஆண்கள் பெரும்பாலும் ஏதேதோ ஒரு கற்பனையில் கொஞ்சம் கூடுதல் ஹீரோ தனத்தோடுதான் திருமணத்தை எதிர் கொள்கிறார்கள்.

அப்படித்தான் நானும்....நானும் என் உத்தியோகமும், என் கல்வியும், வாசித்த புத்தகங்களும்...என் தலை மீது ஏற்றி வைத்துக் கொண்டு அதை இடைக்கு இடை பேச்சில் கொண்டு வந்து எனது ஆளுமையை சமையம் கிடைக்கும் போது எல்லாம் காட்டிக் கொண்டு இருந்தென்.

இங்கே ஒரு விசயம் கவனிக்க வேண்டும்....ஆணின் ஆளுமை என்பது வேண்டுமென்றே போடும் வேசமல்ல....அது அவன் உடலின் சுரப்பிகளில் உள்ள கோளாறு. 10 வயது பையன் 30 வயது பெண்ணிடம் பேசினால் கூட அவனிடம் அந்த ஒரு ஹீரோத்தனமும், நான் இருக்கிறேன் எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்வேன் என்று சொல்லக் கூடிய ஒரு தன்மையும்வந்து விடும். இது குறை அல்ல..அவன் அப்படிப்பட்ட குணாதிசயங்கள் கொண்டவன்...

இன்னும் சொல்லப்போனால்..ஒரு குதிரை கனைப்பதும், ஒரு யானை பிளிறுவதும் எப்படி அதன் குணாதிசயமோ அது போலத்தான் இதுவும் குணாதிசயம். இதை சமப்படுத்தவும் தீர கர்வமும் அற்றுப் போகவும் திருமணங்கள் மிக அவசியம். (யாரோ கேட்கிறார்கள்....அப்போ பெண்கள் ....???? என்று ... ஆமாம் இதே போல அவர்களுக்கும் இயல்பிலேயே குணாதிசயங்கள் இருக்கின்றன....)

இந்த இடத்தில்தான் ஒரு மிகப்பெரிய உண்மையை உணர வேண்டும்....அதாவது ஆணோடு பெண்ணை எந்த காலத்திலும் ஒப்பிட்டு பார்த்து பேசக் கூடாது. இரண்டும் வேறு வேறான குணாதிசயங்கள் கொண்ட மனித படைப்புக்கள். ஆணை ஆணாகவும் பெண்ணை பெண்ணாகவும் பார்த்தல் தான் சிறப்பு.

ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லும் வார்த்தையில் கொஞ்சம் ஆதிக்கவாதிகளின் குரலும் கலந்து இருக்கிறது. ஆணும் பெண்ணும் இரு வேறு சக்திகள்....

ஆணின் சக்தி ஒரு வகையில் சிறப்பு.....என்றால்....

பெண்ணின் சக்தி இன்னொரு வகையில் சிறப்பு.......

ஒரு சகோதரியின் வலைத்தளத்தில் நான் படித்து ரசித்த ஒரு கவிதை வரியை உங்களோடு பகிர்வது நலம் என்று நினைக்கிறேன்.......

" பெண் ஆணை விட....
மேலானவளும் அல்ல....
கீழானவளும் அல்ல....
அவள் வேறானவள்......"

உலக இயக்கத்தில் சிவமாய்.. இருக்கும் எதுவமற்ற தன்மை....இயங்க ஆரம்பிக்கும் போது சக்கியாய் மாறுகிறது.....இந்த தத்துவத்தை உணர்த்தும் ஒரு சிம்பாளிக் போஸ்டர்தான்.....அர்த்த நாரீஸ்வரார்.....

சிவம் இல்லையேல்...சக்தி இல்லை......

ஆனால்....சக்தி இயங்கவில்லை எனில் சிவத்தின் இருப்பே தெரியாமல் போய்விடும் என்பதுதானே உண்மை...?

இதுதான் உண்மை. திராவிட கலாச்சாரத்தில் பெண்களுக்கு எப்பவுமே உயரிய இடம்தான். ஆமாம் சங்க காலத்தை எடுத்து புரட்டுங்கள் அதிலிருந்து.....சிவகங்கைச் சீமையின் செம்மண் வரலாறு வரை எடுத்துப் படியுங்கள்....ராணி வீரமங்கை வேலு நாச்சியாரின் ஆட்சியில்தான் வெள்ளையனை முழு வீச்சில் எதிர்க்க போர் முரசு கொட்டப்பட்டது சிவகங்கைச் சீமையில்.

இடையிலே வந்த சில சீர்கேடுகளும்..கபட மூளை கொண்ட மனிதர்களின் தந்திரங்களும்....பெண்ணை அடக்கி ஆயிரெத்தெட்டு சடங்குகள் சடங்குகளையும் உட்படுத்தி இன்றளவும் அந்த சீர்கேட்டினை தாக்கம் இருக்குமளவிற்கு செய்துவிட்டனர்.

இயல்பிலேயே அன்புவயப்பட்ட பெண்ணை அதே உணர்வின் பால் கட்டுப்படுத்தி அடக்கு முறைகளை கொண்டு வந்தனர். இராசாராம் மோகன்ராய் முதல் புரட்சிக் கவி பாரதி வரை எதிர்த்து எதிர்த்து...இன்று அந்த தீமையின் வேர்கள் வரை வந்து மாய்த்துவிட்டோம்.....!!!!!! இன்று பெண்ணடிமைக்கு எதிராய் ஆயிரம் மகளிர் நல அமைப்புகளும், காவல் துறையில் தனிப்பிரிவுகளும் வந்து விட்டன...!!!!

இன்னும் சொல்லப்போனால்... தேசத்தை ஆளும் கட்சியின் தலைவியும், இந்திய முதல் குடிமகனாய் இருக்கும் ஒருவரையும் பெண்ணாகக் கொண்ட ஒரு தேசத்தின் குடி மக்கள் தாம் நாம்....

இனி பெண்ணடிமை பற்றி பேசுவது என்பது முற்போக்கு வாதம் அல்ல....அது பிற்போக்கு வாதம்....சரிதானே...? ஆமாம் நாம் அதை கடந்து வந்து விட்டோம்....!! ஆங்காங்கே நடக்கும் தீமைகள் சர்வ நிச்சயமாய் மேலும் கருவறுக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றமில்லை.

அட எங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறேன்.. அப்டியே ஒரு யு டர்ன் பண்ணி மீண்டும் திருமண வாழ்க்கைக்குள் வாருங்கள்...

எனக்கும் எல்லா ஆண்களைப் போலத்தான் கர்வம் அழியும் ஒரு நிகழ்வாக திருமணம் அமைந்தது. இதில் உண்மை இருப்பது எல்லோருக்குமே தெரியும்.. இரு வேறு குணாதிசங்கள் கொண்ட மனித படைப்புகள் ஒன்றாய் வாழ வேண்டும். இந்த வாழ்க்கையில் நிச்சயமாய் எல்லாம் ஒத்துப் போய் விடும் என்று சொல்ல முடியாது.

இன்னும் சொல்லப் போனால் இரண்டு ஒத்த மனோ நிலை கொண்ட ஆண்களோ அல்லது பெண்களோ இல்லை ஆண் பெண்களோ இருப்பதற்கான சாத்தியமே கிடையாது. அதிக பட்சம் ஒத்துப் போகக் கூடியவர்கள் கூட 60 - 60%தான் இருக்க முடியும்.

100% சதவீதம் என்னோடு ஒத்து போகும் ஒரு மனிதனை கண்டுபிடித்தல் சாத்தியமில்லைதானே.....???? இன்னும் சொல்லப்போனால் நம்மோடு நாமே ஒத்துப் போக முடியாத தருணங்கள் பல இருக்கும் போது....மற்றவரிடம் எப்படி?

இப்போது வாருங்கள் திருமண வாழ்க்கைக்கு....

எனக்கு டீ பிடிக்கும், அவளுக்கு காபி பிடிக்கும்..... - நான் அவளுக்கு காபி பிடிப்பதை ரசிக்கிறென்.....அவளும் நான் டீ குடிப்பதை ரசிக்கிறாள்.....

எனக்கு புத்தகம் படிக்க பிடிக்கும் - அவளுக்கு பாட்டு கேட்க பிடிக்கும், நான் அவள் பாட்டுக் கேட்பதை அனுமதித்து ரசிக்கிறேன்...அவள் என் புத்தகம் படித்தலை அனுமதித்து ரசிக்கிறாள்....

ஆழமான கம்பீரமான காதல் இந்த விட்டுக் கொடுத்தலையும்...புரிதலையும் கொடுத்திருக்கிறது. திருமணமான புதிதில் ஒரு வருட காலத்தில் முரண்பாடுகள்....அதிகம் இருந்தது...ஆனால் உற்று பார்த்து உற்றூப் பார்த்து.... தெளிவுகளுக்கு வந்தோம்.....

ஒரு தினத்தில்....எனக்கு கவிதை பிடிக்கும்....அவளுக்கும் ஏன் கவிதை பிடிக்கவேண்டும் என்ற புரிதல் என்னிடமும்.....

எனக்கு........கதைகள் பிடிக்கும் அது ஏன் அவருக்கும் பிடிக்க வேண்டும் என்ற புரிதல் அவளிடமும்...

மலர்ந்த தருணத்தில்....அழகான ஒரு இல்லறம் பிறந்தது அங்கே....!!!!!! கோடி பேர்களை மாற்றி வாழ்வதில் மீண்டும் இது போல அல்லாமால் வேறு பிரச்சினைதானே வெடிக்கும் இல்லை என்றால் அக்கறை இல்லாத மேம்பாக்கான ஒரு துணைதானே அமையும்...

எங்களுக்குள் சண்டைகள் வந்த போது எல்லாம்...இது என்ன வாழ்க்கை என்று ஒதுங்கிப் போய் விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய போது எல்லாம்....எம் முன்னோர்கள் திருமணமென்ற மாயவிலங்கிட்டு.... 2000 பேர் முன்னிலையில் ஒப்புக் கொண்ட வாழ்க்கையை மீறப்போகிறேனா நான்? எமது சமுதாயத்திடம் சொல்லப்போகும் நான் விலகியதற்குப் பின்னால் இருக்கும் காரணம் சரிதானா....? என்று எனக்குள் கேள்விகள் கேட்கத் தொடங்கினேன்....

அப்படி கேள்விகள் எழுந்த போது எல்லாம்....இருவரும் வாழ்க்கையை ஆராயத்தொடங்கினோம்....அதில் இருந்த பிரச்சினைகள் புரிதலில் உடைந்து போயின. இப்படி சிந்திக்கவும் எமக்குள்ளே பகுத்து ஆய்வு செய்து கொள்ளவும் ஒரு காரணியாய், மேலும் யாரும் கேட்க மாட்டார்கள்...கேட்டாலும் என் வாழ்க்கை என்று சொல்லவும் வாதிடவும் அறிவுகள் இருந்தாலும்...உறவுகளை அறுத்தெறியும் முன் ஒரு உள்ளப் பகுப்பாய்வு.....ஒரு மாயையான பயம் வேண்டும் என்று.....எம் சமுதாயம் ஏற்படுத்தி வைத்திருந்த திருமணம் என்ற பந்தத்தின் மீது அந்த நிகழ்வின் மீது..... ஒரு மரியாதை வந்தது....

ஒரு சகிக்க முடியாத வேதனைகளை தரும் கணவனையோ அல்லது மனைவியையோ....பொறுத்து பொறுத்து சகிக்க முடியாமல் வாழ்வதை விட பிரிதல் நலம் என்ற கருத்தை இந்தக் கட்டுரை ஆதரிப்பதோடு...அப்படி பிரிவதின் பின்ணனியில் தீர உங்கள் துணையினைப் பற்றி நீங்கள் எடுக்கும் முடிவு சரிதானா என்று....முடிந்த வரை சுற்றங்கள் நட்புக்களிடம் ஆலோசனை செய்து....இந்திய சட்டங்களின் படி விவகாரத்து பெறலாமே.....!!!! அதற்கு எந்த தடைகளும் இல்லைதானே....?

மேலும் அப்படி பிரிந்தவர்கள்...மீண்டும் தமக்கு ஒத்த துணையைக் கொண்டு வாழ்வதையும் இந்தக் கட்டுரை ஆதரிக்கிறது!!!!!!!!!!!

பிரிவதற்கு முன்னால்......ஒராயிரம் முறை யோசிக்கத்தான்....திருமணம் என்ற....கோட்பாடு வரையறுக்கப்பட்டது....இயல்பிலேயே...சந்தர்ப்பவதாமாக சிந்திக்கும் மனித மனதினை தடுத்து சிந்திக்க வைக்கும் ஒரு உபாயம்தான் திருமணம் என்னும் வாழ்க்கை சேரும் முறை....

திருமணம் என்ற கோட்பாட்டினை சிலர் துஷ்பிரோயோகம் செய்திருக்கின்றனர்...அதைக் கொண்டு ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் துன்புறுத்தி இருக்கிறார்கள்.....அவர்கள் எல்லாம் சர்வ நிச்சயமாய் தண்டிக்கப்பட வேண்டியவர்களே அன்றி தவிர்க்கப்பட வேண்டியது....திருமணம் என்னும் மனோதத்துவ மந்திர சாவி இல்லைதானே...?

இந்தியாவை விடுங்கள்...வேறு எந்த நாட்டில் அல்லது எந்த கலாச்சாரத்தில் அல்லது எந்த மதத்தில் திருமணம் இல்லை?.........இது எல்லா நாட்டு மனிதர்களும் வட்ட மேசை மாநாடு போட்டு எடுத்த தீர்மானமா? இல்லை....இல்லை இது ஆழ்மனதின் (கவனிக்க!!!!!) வெளிப்பாடு.....


காத்திருங்கள் தோழர்களே...இன்னும் விரிவாக பேசுவோம்.....!


தேவா. S


பின் குறிப்பு: நான் வாழ்க்கையில் எப்போதும் வாசித்துக் கொண்டே இருக்கும் கவிதையான என் குட்டி தேவதைக்கு வாழ்த்துச் சொன்ன தம்பி விஜய், தோழி கெளசல்யா மற்றும் அத்தனை நட்புகள் மற்றும் உறவுகளுக்கு என் அன்பான நன்றி மற்றும் நமஸ்காரங்கள்......!

Saturday, November 20, 2010

களம்.....!

ட்ரெய்லர் IV

ஒரு மண்ணில் நான் பிறந்தேன்...சில மக்களுடன் நான் வளர்ந்தேன்...ஏதேதோ புசிக்கக் கொடுத்தார்கள்....எதை எதையோ உடுக்கக் கொடுத்தார்கள்....! சிரிக்கவும் அழவும் முறையற்றுப் போயிருந்த புத்தியில் எங்கே சிரிக்க வேண்டும் எப்போது சிரிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார்கள்....

ஒரு இடத்தில் ஒரு உடலை கிடத்தி சுற்றியிருந்து எல்லோரும் அழுவதை பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது...சப்தமாய் சிரித்தேன்....ஏன் இப்படி என்று...? யாரோ என்னை தனியே அழைத்துக் கொண்டுபோய்...இதன் பெயர் இறப்பு என்று போதித்தார்கள். எனக்கு சிரிப்பு வருகிறது என்று கனைத்து சிரித்து எள்ளி நகையாடிய கணத்தில் என்னைக் காத்திருக்கச் சொன்னார்கள்...காலம் கற்றுக் கொடுக்கும் என்று.....

ஏதோ ஒரு நாளில் நான் நேசித்த ஒருவன் உடல் செயலற்று கிடந்தது பார்த்து நான் அசைத்து, அசைத்து முயன்று முயன்று அவன் எழவில்லை என்று அறிந்து சோர்ந்து போய் நின்ற கணத்தில் அவன் எழமாட்டான் என்று யாரோ சொல்லிய போது திமிராய் ஏன்? என்று அவரைப் பார்த்து முறைத்த போது அவர் மெலிதாய் சிரித்து நகர்ந்ததின் காரணம் அறியவில்லை நான்....

ஆனால் என் நேசத்துகுரியவன் இன்னும் எழவில்லை.... ஆனால் எனக்குள் அவன் மீண்டும் நடக்கவேண்டும் என்னோடு பேசவேண்டும், சிரிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது....ஆனால் அது நிகழாது என்று உணர்ந்தபின் என்னுள் ஒரு கலக்கமும் இறுக்கமும் ஏற்பட...ஏதோ வித்தைகளை மூளை பரப்பி கட்டளைகளை பிறப்பிக்க...

என் கண்கள் பனிக்கத்தொடங்கின....என் உணர்வினை வெளிக்காட்ட நான் சப்தமிட்டு கத்தத் தொடங்கினேன்.....சுற்றி நின்ற கூட்டம் அதை அழுகை என்றது....!!!!!!

அன்று யாரோ ஒருவர் அழுத போது அவரின் பிரிய உறவுகள் இதைத்தான் செய்தன என்று ....என்னிடம் கூட்டம் கூறியது....! .மரணமென்றால் என்னவென்று அறியவும்...மரணம் யாருக்கேனும் சம்பவித்தால் எப்படி நடந்து கொள்ளவேண்டும்மென்றும் எனக்கு இப்போது சொல்லிக் கொடுத்தார்கள்.

நான் கேட்டுக் கொண்டேன். ஒரு உயிர் ஜனித்து நம்மிடம் இருந்து மறைந்து போகும் போது அதை அப்படியே கொண்டு போய் புதைத்தோ, அல்லது எரித்தோ விடுவதில் நமக்குள் ஒரு சமநிலை வாரது...அதனால் நமது அன்பின் வெளிப்பாடாய் அழுது தீர்க்கு பொழுதில் நமது சுமைகள் மனம் விட்டு விலகும் என்றும் பயிற்றுவித்தார்கள்.

வாழ்ந்து மறைந்த மனிதனை நினைவு கூறல் என்ற சில சடங்குகள் ஏற்படுத்தி அதை மையப்படுத்தி நினைவு கூறலை ஒரு நன்றிக்கடன் ஆக்கினார்கள். நாளடைவில் மரணமும், அதன் பின் சடங்குகளும் பெரியதளவில் பின்பற்றப்பட்டன. .இப்படிப்பட்ட செயல்களை செய்யவும் சீராய் ஒரு கட்டுக்குள் இருக்கவும் மனித ஆழ்மனமே (கவனிக்க!!!!!!!) கட்டளைகள் பிறப்பித்தது......

யாம் ஜனித்த மண்ணில் இருந்து எமக்கான வரைவுகளை யாமே தீர்மானித்தோம். தண்ணீரை மிருகம் போல யாம் தலை குனிந்து நாவால் பருகி வந்தோம்....அங்கே முதன் முதலில் ஒருவன் கையால் அள்ளிப்பருகும் செயலை கடினப்பட்டு செய்து...அதில் அதிக நீர் குடித்து....அதை எமக்கும் பயிற்றுவித்தான்....

அதை பயிற்றுவிப்பதில் பயில்வதில் ஒரு சுகம் இருந்தது பலன் இருந்தது. இப்படி பயிற்றுவிக்கப்பட்ட எதிலெல்லாம் சுகம் இருந்ததோ எதில் எல்லாம் பலன் இருந்ததோ அதை யாம் திரும்ப திரும்ப செய்தோம். அது எமது வழமையாகிப் போக எமது சந்ததிகளும் அதனை பின்பற்றத் தொடங்கினார்.

யாம் எல்லாம் கற்றுத் தேறி பார்த்துக் கொண்டிருந்த வேளையில் சில அத்து மீறல்களும் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தன. தண்ணீரை கைகளால் அள்ளிப் பழகவும் பருகவும் பழக்கிக் கொடுத்த சமுதாயத்தில் அதை ஒரு கட்டளையாக பிறப்பித்து பிறர் கொண்டு நீர் இறைத்து தனக்கு தருவிக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் கலவரங்கள் செய்தது. அப்படி கலவரம் செய்த கூட்டத்தில் உடல் வலிவும் உடலில் அதிக உணவுப் பொருட்கள் கூடி அதீத கொழுப்பும் கூடிப் போயிருந்தது.

இப்போது கையால் நீர்பருக பழகிக் கொடுத்தவனை .....விமர்சிக்க ஒரு கூட்டம் உருவானது. எமது இஷ்டம் போல் நாம் நீர் பருகுவோம்...நீ பயிற்றுவித்ததால்... ஒரு கூட்டம் அதை துஷ்பிரோயோகம் செய்தது....உமது கற்பிப்பும், கட்டுப்பாடும் எமக்கு வேண்டாம் என்று கொக்கரித்தது.

அப்படி கொக்கரித்த கூட்டம் கூறுவதில் அர்த்தஙகள் இருப்பது போல தோன்றி சிலர் கையால் நீர் பருக மாட்டோம்….எமது வசதிப்படி செய்வோம் என்றும் கையால் நீர் பருகும் ஒரு செயல் முறையை விமர்சிக்கத் தொடங்கினர்..............

ஆனால் கையால் நீர் பருகி பழகி அதன் பயன்பாடு அறிந்த கூட்டம்...சப்தமில்லாமல் இவர்களை கட்டுப்படுத்தி செயல் செய்யவைத்து பயன் பெற வைக்க என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தது........அதற்காகவே...சில யுத்திகளைப் பின்ன ஆரம்பித்தது....அந்த யுத்தியின் பின்னால் கூட்டு வாழ்வில் சீரான ஒரு சுமுகமான நிலை வேண்டும் என்ற பேரவா மிகுந்திருந்தது..............

மரணம் என்றால் என்ன என்று எம் சமுதாயத்திற்கு போதிக்கப்பட்டதும்.....அதன் பின் முதன் முதலில் எமக்கு நீர் பருக பயிற்றூவிக்கப்படதும் போல காலம் மாற மாற எம்மை சீரான ஒரு மக்கள் கூட்டமாக இருக்க வைக்க கட்டுப்பாடுகள் மேல், கீழ், இடம் வலம்.........என்று கூட்டி , குறைத்து........விரிவடைந்து கொண்டிருந்தது போல....அதை துஷ்பிரோயோகம் செய்ய ஒரு கூட்டமும் அந்த துஷ்பிரோயோகத்தால் பாதிக்கப்பட்ட கூட்டம் தன் விருப்பப்படி வாழ்வேன் என்று கோஷமிடலும்...........தொடந்து கொண்டுதான் இருந்தது..........

இதுதன் நமது களம்......!!!!!!!


இன்னும் விரிவாக பேசுவோம் தோழர்களே காத்திருங்கள்.......


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா!!!!!!!தேவா. SFriday, November 19, 2010

போர்...!

ட்ரெய்லர் III

இம்மையில் யாம் எதைக் கொண்டு தெளிவது எம் பரம் பொருளே....! சுற்றி சுற்றியிருக்கும் சுற்றலில் விரிந்து பரந்திருக்கும் மாயையின் ஆட்சியில் வெருண்டு மருண்டு ஒடுங்கி ஒழிவதைத் தவிர வழியற்றுப் போயிருக்கும் எமது யாக்கைகளுக்கு ஏதாவது ஒரு ஊன்று கோல் கொடு.....

விடுபட்டு விடுபட்டு....விலகி விலகி வாழும் வாழ்வில் பெறும் நிம்மதிகள் சர்வ நிச்சயமாய் நிம்மதியின் சாயலில் இருப்பதாகவே படுகிறது. இங்கே இன்னொரு குருசேத்ர போர் தேவை.....

எங்கே....அர்சுனன்...எங்கே.....பரமாத்மா..???? பாரதத்தோடு பணி முடிந்து விட்டது என்று போய்விட்டீர்களா? எங்கே எங்கள் ரசூல்(ஸல்).....எமக்கான போர்களுக்கு நீங்கள் மீண்டும் தேவை என்பதை மறந்து விட்டீர்களா? எங்கே ஜீசஸ்...... சிலுவையை சுமந்து மனித பாவங்களை ஒழிக்க நீங்கள் வாழ்ந்து காட்டியதால் வலிஅறியாது.... நிகழ்கிறது இங்கே....ஓராயிரம் அட்டூழியங்கள்........!!!!

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

பரமாத்மா நீங்கள் வந்து தேரோட்டினாலும் சரி...இல்லை..ரசுலே (ஸல்), நீங்கள் முன்னின்று வழி நடத்தினாலும் சரி அல்லது எங்கள் தேவனே......நீர் வந்து வழி நடத்தினாலும் சரி...இங்கே....மாய்க்கப்பட வேண்டிய விடயங்கள் குவிந்து கிடக்கின்றன....மூலைக்கு மூலை....

வேலையில்லாமல் வீதிக்கு வீதி அலையும் எம் இளைஞர் கூட்டம் ஒரு பக்கம்,விலை வாசி ஏற்றத்தால் குரல்வளைகள் பிடிக்கப்பட்டு விழி பிதுங்கும் எம் மக்கள் ஒரு பக்கம்....., விவாசாயத்தை நம்பி நம்பி...வானமும் பொய்க்க....வாக்களித்த படி வரத்து நீரும் வராமல் பொய்க்க.... வாடிப்போய் காலியாகும் எம் கிராமங்கள் ஒரு பக்கம்.....எமது வறுமையை சாதகமாக்கி , எமது சூழ் நிலைகளை சூத்திரங்களாக்கி....வழிகெடுக்க மூட நம்பிக்கை ஆன்மீகங்கள் ஒரு பக்கம்.......

வயிற்றுப் பசியில் போராடும் எம்மக்களுக்கு வாக்களிக்க வாய்க்கரிசி போடும் அரசியல் வாதிகள் ஒரு பக்கம்...கற்றாலும் விசால பார்வையற்று சுயநலமாய பொதுநலம் பேசும்....இருண்ட மூளைகள் ஒரு பக்கம்....என்று சூறாவளியாய் சுழன்று கொண்டிருக்கிரது எமது வாழ்க்கை.........

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

வாழ வழி சொல்லா......நிமிர்ந்து நிற்க கைகொடுக்கா வாய்கள்...இன்று கதைக்கும் கதைகளின் பின்ணனியில் தம்மின் அறிவுகளை கடை பரப்பு முயற்சிகள்தானே இருக்கிறது...? எமது தேசம் எமது மாண்பு எமது பிரச்சினைகள்......எமது வலிகள்....மருந்து கொடுக்க கரங்களைத்தானே கேட்கிறோம் நாங்கள்? எமக்கு அறிவுரைகள் வேண்டாம்....அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் ...வலிக்க வலிக்க பேச வாய்களும்.....கருத்துக்களையும், புத்தக உதாரணங்களையும் கூற எம்மிடம் மூளைகளும் நிறையவே இருக்கின்றன.....நாங்கள் கேட்பது வாழ்க்கை கல்வி........ஏதேனும் வழி உண்டா அதற்கு....?

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

மழையில் ஒழுகும் எமது கூரைகளை எப்போது மாற்றுவோம்.....? வயதுக்கு வந்த எம் பெண்ணின் திருமணத்தின் செலவுகளுக்கு என்ன செய்வோம்.....? வளர்ந்த பையனின் கல்விக்கு என்ன செய்வோம் என்று கணக்குப் போடுமா எங்கள் மூளைகள் இல்லை...உங்களின் வெற்று வியாக்கினங்களையும்.....கர்வ அறிவுகளின் கூவல்களையும் வேடிக்கைப் பார்க்குமா.....? எங்களது இப்போதைய கவலை எல்லாம்..தக்காளி விலை குறையுமா....வெங்காயத்தின் விலை ஏன் ஏறிக் கொண்டே போகிறது ஏன்?.. பெட்ரோல் இல்லாமல் வண்டி ஓடுமா என்பதுதான்..........

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

காலங்கள் தோறும் செருப்பு இன்றி சகதியில் உழவு வேலை செய்கிறாரே...அந்த முத்துசாமி......அவரின் வாழ்க்கை மாற ஒரு உபாயம் சொல்லுங்கள்....? படித்து முடித்து வெளிநாடுகளுக்கு பறக்க வேண்டிய குடும்பச் சூழலால் குடும்பத்தை விட்டு வெளிநாடுகளில்...

பொருளாதரம் வேண்டு முடங்கிக் கிடக்கிறதே இந்திய இளைஞர் கூட்டம்...அதுவும் திருமணம் செய்து விட்டு......குடும்பச் சூழல் காரணமா மனைவியைப் பிரிந்து அவன் வெளிநாடுகளில் வாழ்கிறானே ஒரு இரத்த வாழ்க்கை அது பற்றி உங்களுக்கு ஏதேனும் ஒரு கற்பனையாவது இருக்கிறதா?

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

வியாக்கியானம் பேசும் மூளைகள் கொஞ்சம் என்னுடன் சென்னையின் சேரிப் பகுதிக்ளை சுற்றிப் பார்க்க வருமா? செருப்பில்லாமல் கூவக்கரையோரம் குவிந்து கிடக்கும் வாழ்க்கையை வாசிக்க முடியுமா? மூக்குகளை பொத்திக் கொள்ளாமல்....அவர்களின் ஒரு நாள் வாழ்க்கையை பங்கு போட முடியுமா? காலம் காலமாய் கலைந்து போயிருக்கும் எம் மக்களின் வாழ்க்கைகு தீர்வு இல்லை.....ஆனால் காமத்தை எப்படி அடுக்கி வைப்பது....? வாழ்க்கையில் எப்படி திமிர்கள் கொள்வது என்று வழிமுறை சொல்கிறீர்கள்.....

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

இடுப்பெலும்பில் சக்கியற்று நிற்கிற மக்களிடம் வந்து போர்ப்பயிற்சிகள் கொடுக்கிறீர்கள். ஒரு எழுத்தாளனும், அரசியல்வாதியும், கவிஞனும் பத்திரிக்கையாளனும் நான்கு சுவர்களுக்குள் மண்டியிட்டு போதை மாத்திரைகளை விழுங்கிவிட்டு எழுதுவது போல கற்பனையில் எழுதிக் கொண்டே இருந்தால் எதார்த்தப் பக்கங்களில் துருத்திக் கொண்டு இருக்கும் எலும்புகளை எப்படி பார்ப்பது.....?

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

தெளிந்த மானுடனாய் வாழவும்....சிந்தனைகளை கூட்டிக் கழித்து தீர்மானங்கள்
எடுக்கவும், வறுமையை துரத்தவும், கிராமப்புற பட்டதாரி இளைஞர்களை....சம காலத்து நிகழ்வுகளோடு கூடிய ஒரு சர்வதேச சமுதாயத்தை எதிர் கொள்ளும் பயிற்சி அளித்தலும், விவசாய தொழில் நுட்பத்தில் புரட்சி செய்தலும், கிராமங்கள் என்ற நமது உயிர்துடிப்புக்ளை பாதுகாப்பதும்....மூத்த குடிமக்களை மரியாதையாகவும் அவரவர் குடும்பத்துடன் வாழும் வகையில் குடும்பங்களுக்கு தெளிவு கொடுப்பதும்........

முதியோர் இல்லங்கள் எல்லாம் எதிர்காலத்தில் இல்லாமல் போக ஒரு பெரும் புரட்சி செய்வதும் செய்வதும்,வாக்களிக்கும் போது நேர்மயாக வாக்களிப்பதோடு தெருவோரங்களில் வீடுகளின்றி முடங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெரும்பானமை மக்களுக்கு வாக்களிக்க அதிகாரம் பெற்றுக் கொடுப்பதும்....என்று ஓராயிரம் வேலைகள் இருக்கிறது..... நமக்கு.......


எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

முதலில் எம் உயிர் உடலில் தங்கட்டும்.....! எம் சந்ததி தழைக்கட்டும்...குறைந்த பட்சம் வாழ வழி பிறக்கட்டும்.....ஆமாம் உயிரோடு முதலில் இருந்தால்தானே...மனிதனுக்கு கலாச்சாரமும் ,திருமணமும் இன்ன பிற....விவரிப்புகளும்

வாழவே வழியற்று போராடிக் கொண்டிருக்கும் அன்றாடாட சராசரி மக்களுக்கு தீர்வு சொல்ல நாவுகள் இருக்கின்றனவா...? .மூளைகள் இருக்கின்றனவா..........?

வாருங்கள் நமக்குத் தேவையான உளவியல் போரைத் தொடங்குவோம்.. ...! இந்த வலைப்பூ என்ற ஒப்பற்ற ஊடகம் மூலம்.............


விரிவாக பேசுவோம் இன்னும் காத்திருங்கள்.......!அப்போ வார்ர்ர்ர்ட்ட்ட்டா......!!!!!!!தேவா. S

Thursday, November 18, 2010

மரபு.....!


ட்ரெய்லர் II


சுற்றிப் பரவியிருந்த மண்ணின் தாதுக்களுக்குள் நான் கலந்து ஒளிந்திருந்தேன், செடி கொடிகளுக்குள் சத்துப்பொருளாய் மாறி விரவியிருந்தேன், காய், கனிகளுக்குள் தைரியமாய் அடர்ந்து போயிருந்தேன்...வீசும் காற்றில் பிராணனில் பரவிப்போயிருந்தேன்..ஹைட்ரஜனுக்குள் கலந்து போயிருந்தேன்....ஓடும் நீரில் நனைந்து போயிருந்தேன்......

எம்மை சுவாசித்தவரின் நாசிகளுக்குள் பிராணணாயும், உண்டவரின் உடலுக்குள் சக்திப்பொருளாகவும், கண்டவரின் புத்தியில் நினைவுப் படிமமாகவும் படிந்து போயிருந்தேன். உடலுக்குள் எல்லாமாகி சக்தியாய் விரவி......இரத்தத்தில் கலந்து....உடலின் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஓட்டமாயிருந்தேன்....மேலும் ஒரு ஒரத்தில் இருந்த விந்துப் பையில் ஜீவசத்தாய் கலந்து போயிருந்தேன்...வேறொரு உடலின் கருப்பை உள்ளே சினைமுட்டைகளாய் அடர்ந்து போயிருந்தேன்.....

ஒரு இயற்கை சுழற்சியில் இரண்டும் ஒன்றாய் கலந்த கணத்தில் ஒரு திரண்ட உருவாய் வளர்ந்து போயிருந்தேன்...நீரும் காற்றும் எனைச் சுற்றி நிறைந்து போயிருந்தேன்....ஏதோ தினத்தில் ஒரு உருவாய் இந்த பூமியில் விழுந்து போயிருந்தேன்......

எந்த மண்ணில் இருந்து என் பிண்டத்துக்கான சத்து உருவப்பட்டதோ.....? எந்த பூமியில் இருந்து எனக்கான காற்று சுவாசிக்கப்பட்டதோ....? எந்த சூழ்நிலையில் அல்லது மனோ நிலையில் கருவாய் நான் ஜனிக்கப்பட்டேனோ அது எனக்குள் ஒரு வித குணாமாய் நிறைந்து போயிருந்தேன். எந்த உடல்களின் ஜீவசத்தாய் நான் வெளிப்பட்டு இருந்தேனோ...அந்த உடலில் இருந்த குணம் குரோமோசோம்களாய் என்னுள் பரவிக் கிடந்தது.....! டி.என்.ஏ க்களில் எல்லாம்...எந்த இடத்திலிருந்து எந்த மூலத்திலிருந்து தருவிக்கப்பட்டதோ அதன் மொத்த தொடர்ச்சியின் வேர்கள் மறைந்து ஒளிந்து போயிருந்தன....!

என் குணாதியங்களின் பின்ணனியில் காற்றும், நீரும், காய்களும் கனிகளும் இன்ன பிற தாதுக்களும், உப்புக்களும், உணவுப் பொருட்களும் மறைமுகமாய் விஸ்வரூபம் எடுத்துக் கிடந்தன. உடல் ஜனிக்க காரணாமாயிருந்த ஜீவன்கள் எல்லாம் என் புத்தியில் நிறைந்து போயிருந்தனர்.

ஆமாம்.....எல்லா உயிர்களின் குணாதிசயங்களின் பின்ணணியில் நாம் துச்சமென நினைக்கும் பல்வேறு விசயங்கள் இருக்கின்றன. அதுவும் ஒவ்வொரு மண்ணின் இயல்பும் ஒவ்வொரு மாதிரி...அந்த இயல்புக்கேற்ப உடலும் மனமும் சேர்ந்தே பிசையப்படுகின்றன. மலைகளில் வாழும் மனிதர்களுக்கு ஒரு இயல்பும், சமவெளியில் வாழ்பவர்களுக்கு ஒரு இயல்பும், பாலையில் வாழ்பவர்களுக்கு ஒரு இயல்பும்,,, நீர் நிலைகள் நிறைந்த பகுதியில் வாழ்பவர்களுக்கு ஒரு இயல்பும், காடுகளில் சுற்றித் திரிபவர்களுக்கு ஒரு இயல்பும், குளிர் பிரதேசங்கங்களில் இருப்பவர்களுக்கு ஒரு இயல்பும் ...என்று....மனிதர்கள் மாறி மாறி குணங்களுடன் இருந்தார்கள்....

குணாதிசயத்தையும், வாழும் போது மனோ நிலையையும் நிர்ணயிக்கும் மிகப் பெரிய காரணியாய் நீரும் காற்றும் இருந்தன......!

மனிதர்களின் குணம் மற்றும் பெற்று வந்த மரபணுக்கள் எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு முறையான வாழ்க்கை முறைகள் ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ப தீர்மானிக்கப்ட்டது. அது அந்த அந்தப் பகுதிகளின் செளகரியத்தை முன்னிலைப்படுத்தி தீர்மானிக்கப்பட்டது......கரடு முரடான வாழ்க்கையில் ....மனம் என்ற விசயம் ஈடுபட விதிமுறைகளை உருவாக்க மனிதனின் ஆழ்மனம் ....மிகவும் உதவியது......

மனித ஆழ்மனம் எதோடு தொடர்புடையது என்று உங்களுக்கே தெரியும் அல்லவா.....?

அச்சச்சோ.....ரொம்ப பேசிட்டேங்க....எனக்கு நேரமும் ஆயிடுச்சு....ஒரு மிகப்பெரிய உண்மையை கொஞ்சமா சொல்லணும்னு நினைச்சேன்....ஆனா அது முடியாது போல இருக்கு....! வாழ்க்கைல எப்பவுமே...இருக்குற சுவாரஸ்யமும் த்ரில்லும்தான் இந்த நிமிசம் வரைக்கும் எல்லாத்தையும் இழுத்துப் பிடிச்சு நிறுத்தி வைச்சு இருக்கு இல்லீங்களா....! சுவாரஸ்யமாவே பார்ப்போம் வாழ்க்கையை.....

இப்போதைக்கு கிளம்புறேன்....மிச்சத்த...பாக்குறப்போ பாக்கலாம்.....!


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்டா.........!தேவா. S

Wednesday, November 17, 2010

நியதி....!

ட்ரெய்லர்

சமப்பட்டு போய் கிடக்கிறது மனசு.....! இங்கே... அங்கே ஓடி ஓடி...ஆடிப் பாடி....ஒரு குறிப்பிட்ட காலத்திலேயே...சமப்பட்டு........மெளனத்தில் ஒரு மோகனப் புன்னகையோடு....எனக்குள் என்னையே பார்த்து சிரித்துக் கொண்டு...ரசித்துக் கொண்டு ஒரு சுகமான அதிர்வலைகளை உள்ளுக்குள் பரப்பிக் கொண்டு...சமப்பட்டுப் போய்க் கிடக்கிறது.

இப்போதெல்லாம் அரிதாகவே வெளியே வந்து எட்டிப்பார்க்கிறது....! ஆணவங்களும், அகங்காரங்களும், சப்தமான பேச்சுக்களும் சிரிப்புகளும் சேர்ந்து ஒரு வித அவஸ்தையைக் கொடுக்க வெளியே வர விருப்பமின்றி மீண்டும் உள்ளேயே போய்....கண்கள் மூடி....அகக்கண்கள் திறந்து அண்டத்துள் கலந்து .....பேச்சற்று மொழியற்று.....விழிகள் மூடியிருக்க.....ஏதோ ஒன்று திறந்து கொள்ள புலனற்ற பார்வை...வந்து பளீச் சென்று வந்து விழுந்து விடுகிறது.

ஒரு வித நெரிசல் தொலைத்த சந்தோசம் உடல் முழுதும் வந்து அழுத்த......உள்ளே சென்று உற்று நோக்க....வேசமிட்டு கோசமிட்டு.....கொக்கரிக்கும் மானுடர்களின் அகத்தின் உள்ளே இருக்கும் இருப்புத்தன்மைகள் எல்லாம்....அழுது கொண்டு மூலையில் சிறைப்பட்டு கிடக்கின்றன என்ற உண்மை தெரிகிறது.

அவர்களின் ஆன்மா சிறைப்பட்டுக் கிடக்கிறது. அகம் நோக்கி திரும்புவது கூட பல நேரங்களில் அகங்காரத்தில் நிகழ்ந்து விடுகிறது. பிரபஞ்சம் படைக்கப்பட்டதில் இருந்து சரி தவறுகள் எல்லாம் இயற்கைதான் நியமிக்கிறது...அதுவே எல்லா காரியங்களையும் நடத்துகிறது...ஆனால் ரப்பர் மனிதர்கள் எல்லாம் தாங்கள் நிகழ்த்துவது போல கருதி...தன்னுள் சேர்த்து வைப்பது அவர்களின் அகங்காரத்திற்கு வலுவேற்றி விடுகிறது.

ஆல்ஃபிரட் ஐன்ஸ்டீன் கண்டு பிடித்த அத்தனையுமே ஏற்கனவே பிரபஞ்சத்தில் இருந்தது...என்ன ஒன்று மனித மூளைகளால் அறியப்படாமல் இருந்தது. உள்ளதை கொணார்பவன் மனிதன்.....இதில் ஆச்சர்யம் கொள்ள என்ன இருக்கிறது. மட்டுப்பட்ட மனிதர்களுக்கு மனிதர்களின் நியதிகள்...ஆனால் பிரபஞ்ச நியதி என்ற ஒன்று இருக்கிறதே...அது எத்தனை பேருக்குத் தெரியும்?

அது என்ன பிரபஞ்ச நியதி? பூமி சூரியனை சுற்றுவது நியதி.....சுற்றித்தான் ஆகவேண்டும் என்று கட்டாயம் இல்லை ஆனால் சுற்றவில்லை என்றால் என்ன ஆகும்....????? அண்டத்தில் இருக்கும் எல்லா கோள்களும் ஒரு வித பிடிப்பில் ஈர்ப்பில் கட்டுண்டு நிற்கின்றன....? உண்டா இல்லையா...? நியதிகள் எல்லாம் இல்லாம் சேர்ந்து ஒரு வித சீரான வேகத்தில் சீரான இயக்கத்தில் அதன் அதன் அழகில் எல்லாமே.... அழகாய் நகர்ந்து கொண்டிருக்கிறதே.....?

வயிற்றுப்பசியும், அயற்சியில் உறக்கமும், காமத்தில் கூடலும், தேடலில் விவாதங்களும், வலித்தால் கோபமும், சந்தோசத்தில் சிரிப்பும், சோகத்தில் அழுகைகயும்.....10 மாதத்தில் குழந்தையும்......நியதிகள்....! யார் வகுத்தது இவற்றை...? இவை அவற்றின் தேவைகளை அவையே கணக்கிட்டு....அதன் அழகில் நிகழ்த்தி.....அதன் பின் வரும் நிகழ்வுகளுக்கு அதே சீரில் இயங்குகின்றன.....! இங்கே விருப்பு வெறுப்பு என்று எதையும் திணிக்க இயலாது....அல்லது இதை மாற்றி எனக்கு 5 மாததில் குழந்தை வேண்டுமென்றால் ..அதற்குப் பெயர் குழந்தை அல்ல....பிண்டம்.....

ஓட்டுனர் உரிமம் பெறும் போது சாலை விதிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.....சரி உரிமமும் பெற்றாயிற்று......வாகனமும் வாங்கியாயிற்று....சாலையும் இருக்கிறது.... நமக்கும் வண்டி ஓட்டத் தெரியும்....? பின் எதற்கு ரெட் சிக்னலில் நிற்கிறோம்....?(சென்னைல ரெட் சிக்னல் தாண்டி தான் இன்னும் நிக்கிறாங்க....அது வேற கதை)...

இடது பக்கம் திரும்ப லெஃப்ட் இன்டிகேட்டர் போட்டு திரும்பு......முன்னால போற வண்டில பிரேக் லைட் எறிஞ்சா.. உன் வண்டி ஸ்பீடு கண்ட்ரோல் பண்ணு....அடிக்கடி சென்ன்டர் மிர்ரர் பாரு (எனக்கு தெரிஞ்ச துபாய் வாகனம் ஓட்டும் விதியை சொல்கிறேன்...அந்த அந்த ஊர்ல இருக்கவுக அந்த அந்த ஊர கற்பனை பண்ணிக்கோங்க.....ச்சும்மா எங்க ஊர்ல இப்டி இல்லானு வாதம் பண்னிட்டு வரப்பிடாது...) இப்படி ஒரு கட்டுக்குள் வாழ வேண்டிய சூழல்.....ஏனென்றால்...அப்போதுதான் இயக்கமும்.....விளைவுகளும் நன்றாக இருக்கும்.....

இது விடுத்து....நான் என் இஷ்டத்துக்குத்தான் வண்டி ஓட்டுவேன்...என்னிடம் லைசென்ஸ் இருக்குன்னு ஒவ்வொருத்தரும் நினைச்சா.......என்ன ஆகும்....????? இந்த இடத்தில ஒரு ரெண்டு நிமிசம் யோசிச்சுட்டு மேல படிங்க....

இப்படித்தான் மதங்களும்,மத ஆச்சார்யார்களும், இறைத்தூதர்களும் வாழ வழியையையும் சட்டங்களையும், மக்களுக்கு சொல்லிவிட்டுப் போனார்கள். இப்படி போனதற்குப் பின்னால் ஒரு சீரான இயக்கம் இருக்க வேண்டும் என்று ஒரு பெரு நோக்குதான்..இருந்திருக்க வேண்டும்..!

இன்னைக்கு ஈவ்னிங்க் ஆபீஸ் போய்ட்டு வந்து பக்கது வீட்டுக்காரன் பார்க்கிங்ல வண்டி போடமுடியுமா நான்.....? பிச்சு புடுவான் பிச்சு.....சரிதானுங்களே.....

கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் எங்கும் நிறைந்து இருப்பதற்கு காரணம்...ஜஸ்ட் ஃபார் ஸ்மூத் மூவிங்...! ஆனால் இதிலும் ஒரு விசயம் இருக்கு....இடம்,பொருள் ஏவல் ...தெரிஞ்சு நடந்துக்கணும்...ஆமாம்....இந்தியாவில் சட்டமாக்கப்பட்டது....வளைகுடா நாட்டில் சட்டமில்லை....வளைகுடா நாட்டில் சட்டம் என்று சொல்லி இறுக்கப்படுவது..... அமெரிக்காவில் சட்டம் கிடையாது......அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது ஈரோப்பில் தளர்த்தப்பட்டிருக்கும்.....

ஒவ்வொரு மண், வெவ்வேறு மனிதர்கள், அவர்கள் வசதிக்கும் சூழலுகும் ஏற்ப சட்ட திட்டங்கள்....! எல்லோரும் ஒரு சட்டத்தை பின்பற்றி வாழ வேண்டும் என்று கட்டாயம் இல்லை. வாழ்வின் வசதிகளுக்கு ஏற்ப மண்ணின் இயல்புக்கேற்ப (மண்ணுக்கு இயல்பு இருக்கிறது....இந்தியாவில் விளையுமொரு செடியை கொண்டு வந்து செளதியில் வைத்து ராஜ உபசாரம் கொடுத்தாலும் அது மரித்துதான் போகும்) மனிதர்கள் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள்.

நியதிகள் என்பவை இல்லாத ஒரு மனித இனம் இருந்திருக்கவே முடியாது......ஆதிகாலத்தில்.....இருந்திருக்கலாம் ஆனால் அங்கேயும் ஒரு வித அவர்களுக்கேற்ற நியதிகள் இல்லாமல் இருக்க வாய்ப்பு இல்லை...கட்டுபாடும் நியதியும் மனித ஆழ்மனதிலிருந்து தோன்றுபவை....ஆழ்மனம் பிரபஞ்சத்தோடு தொடர்புடையது........

பாருங்கள்... இவ்வளவு நேரம் பேசியதற்கே என் மனம் என்னை திட்டுகிறது...அது மீண்டும் உள்ளே செல்ல எத்தனிக்கிறது....ஆமாம்...தன்னைத்தான் பார்த்து ஆனந்தம் கொள்ளும் சுகம் அடுத்தவர் பற்றி பேசுவதிலும் ஊருக்கு உபதேசம் செய்வதிலும் கிடைக்கவே போவதில்லைதானே.....? ஒரு கதை ஒன்று சொல்லி முடிக்கலாம் என்று நினைத்தேன்....என் ஆன்மாவிடம் இருந்து எனக்கு அனுமதி கிடைகக்வில்லை.....

நான் என்னுள் லயிக்கப் போகிறேன்.....அது எல்லாம் சொன்னாப் புரியாதுங்க....தனியா உக்காந்து உங்களுக்குள்ளே நுழைந்து..ஆத்ம விசாரணை செஞ்சு பாருங்க தெரியும்.......!

(என்னது ஆத்ம விசாரணைனா என்னவா...தம்பி. சி.போ. வந்துட்டான்....மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்)


அப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா !!!!!!!


தேவா. STuesday, November 16, 2010

சிதறல்...!
யாரோ கல்லெறிந்திருக்கிறார்கள்
இந்த முறையும்...தப்பாமல்
நடனமாடுகிறது குளம்....
தடுமாறி நிற்கிறேன் நான்!

***

நிசப்தமான நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!

***

ஒரு மழை
ஒரு சாரல்
ஒரு காதல்
ஒரு கவிதை
நீ.....!

***

பேருந்துப் பயணம்
ஜன்னலோர இருக்கை
வழி நெடுக வாழ்க்கை
பார்வையாளனாய் நான்....!

***

ஒரு சிட்டுக் குருவி
ஈரச் சிறகு..
படபடக்கும் உலர்த்தல்
சிறகடிக்கும் மனசு...!

***

காற்றில் பறக்கும்
சருகுகள்....
கலைந்து திரியும்
மனிதர்கள்.....
நிற்கப் போகும் காற்று!

***

கனவுகள் மொய்க்கின்றன
நீ சிந்திச் சென்ற
புன்னைகையின் மிச்சங்கள்
இன்னும் இறைந்து கிடக்கின்றன
மூளைக்குள்...!

***தேவா. S

Saturday, November 13, 2010

வரம்....!


ஞாபகங்களின் ஆளுமையில்
வந்து விழும் நினைவுகளில்
நிறைந்திருக்கும் உணர்வுகளில்
ஆனந்தக் கனவுகளில்
வெட்கி நிற்கிறது உன்னிடம்
நான் சொல்ல மறந்த காதல்...!

தொலை தூர புள்ளியாய்
நகரும் உன் நகர்வில் லயித்து
உன்னைப்பற்றிய கனவுகளில்
நினைவுகளை செரித்து செரித்து
படைத்துக் கொண்டிருக்கிறேன்
உனக்கான ஒரு கவிதையை....!

எப்போதோ பெய்தாலும்
தவறாமல் நெஞ்சு நிறைக்கும்
ஒரு வானம் பார்த்த மழையாய்
காதலை கொட்டி நிறைக்கிறது
ஆசையாய் நீ பரவவிட்டுச் சென்ற...
அடர்த்தியான அந்த கடைசிப் பார்வை....!

என் மனக்கிளைகளில்
அமர்ந்திருக்கும் அத்தனை
எண்ணக் குயில்களும் இசைக்கும்.....
இசையில் தப்பாமல் ஒளிந்திருக்கிறது
உனக்கான ஒரு காதல் ராகம்....!

அழுந்த பெய்யாத மழைக்குப்
பின்னான மண்ணின் வாசம் போல
விரவிக்கிடக்கும் உணர்வுகள்
கண் சிமிட்டி சிரிக்கின்றன
எனக்குள் இருக்கும் உனக்கான
கம்பீரக் காதலைப் பார்த்து...!

ஒரு மரமும் அதன் நிழலும்
கொஞ்சலோடு பேசிச் சிரித்து
எனைக் கேலி செய்த பொழுதில்
கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தில்
கிறுக்கத் தொடங்கியிருந்தேன்....
என் காதலின் கன பரிமாணங்களை....!

எப்படிப் பார்த்தாலும் ஒரு மனிதனுக்குள் இருக்கும் பச்சையம், அந்த உயிர்ப்புத் தன்மையின் மூல முடிச்சு காதல். காதல் இல்லை எனக்குள் என்று சொல்லும் மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நலம். காதல் என்ற வார்த்தையின் கற்பிதங்கள் பலவாறு மனித மூளைகளுக்குள் பதியப்பட்டு இருப்பதால் அறிவின் படி நிலைக்கேற்ப, ஏற்பட்ட அனுபவத்திற்கேற்ப ஒரு புரிதல் கிடைக்கும். காதல் சம்பந்தப்பட்ட ஒரு மிஸ்டிக் நினைவுகள் வருவது எப்போது என்று கொஞ்ச ஆராய்ந்து பார்த்தால்....

அது பெரும்பாலும் தனிமையில்தான் தனது ராஜாங்கத்தை நடத்துகிறது.....ஆமாம் தனிமை தவம் அல்ல....அது வரம்....!தேவா. S

Wednesday, November 10, 2010

சரி...!


எங்கேயோ சிறகடித்து பறக்கிறது மனது.. இந்த பூமிக்கு மட்டும் நான் சொந்தகாரனில்லை என்று எப்போதும் உள்ளே ஒரு உணர்வு சொல்லிக் கொண்டே
இருக்கிறது.

சுற்றுப்புற சூழல் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு வரைமுறை கோட்டினை மனதளவில் கிழித்து மனிதனை மட்டுப்பட்ட ஒரு நிலையில் வைத்திருக்கிறது. சிறகடித்து பறக்கும் நேரங்களில் எல்லா எல்லைகளும் மறைய கட்டடற்ற ஒரு வெளியில் நினைவுகளற்று இலக்குகளும் அற்று பறத்தலில் லயித்து நகரும் போது அந்த சுகம் அலாதியானதுதானே.....!

வெற்று வானத்தை ஓராயிரம் எண்ணங்களோடு பார்த்துவிட்டு நகர்ந்து போகாமால் ஒரு பறவையாக உங்களை உடனடியாக பாவியுங்கள்...! பாவித்த பின் சட சட வென்று சிறகடியுங்கள்.. உங்களின் சிறகடிப்பில் அறியாமைத்தூசுகளும், கட்டுப்பாட்டு அழுக்குகளும் பறந்தே போகட்டும்... எவ்விப் பிடியுங்கள் கட்டுக்களற்ற வெளியின் நுனியை..இதோ..மேலே..மேலே மேலே...மேலே...

காற்றின் திசை பற்றிய கணக்கு தெரிந்து விட்டதா.. ஹா ஹா..ஹா.. எங்கே செல்லவேண்டும் என்று ஏன் நாம் தீர்மானிக்க வேண்டும்.. காற்றின் நகர்வு தீர்மானிக்கட்டும். என்னது இடம் நோக்கிய நகர்வா....சரி....எது இடம்..ஓ. எனக்கு இடம் எது.... நிஜத்தில் வெட்டவெளியில் இடம் வலம் என்று ஒன்று இல்லைதானே....? காலம் காலமாய் பாவித்து வந்த பொய் ஒன்று ஒடிந்து விழுந்தது

....காற்றின் திசை நோக்கிய நகர்வு உண்டானது.......

இறகுகளுக்குள் காதலோடு காற்று...பறவையாய் மாறிய நம்மை காதலோடு கூடிச் செல்கிறது கண்டீரா தோழரே...! எப்போதும் இடைவிடாது சுவாசித்தாலும் காற்றினைப் பற்றி மனிதன் சிந்திப்பதில்லை...அது எப்போதும் அவனின் புழுக்கத்தை துவட்டும் ஒரு வேலைக்காரன்...மட்டுமே...! சுவாசிப்பில், குடிக்கும் நீரில், உணவில், வெளியில் விரவிக்கிடக்கும் அந்த பிரமாண்டம்...எப்போதாவது கொடுமுகம் காட்டும் போது மட்டும் புயல் என்றுபெயர் சொல்லி அழைத்து பயப்படுவான்...

சரி விடுங்கள்.. இதோ நமது நகர்வு.....நகர்வற்ற நகர்வுதானே...இது! சிறகின் கோணம் மாற்றுவதின் மூலம் நமது திசை மாற்ற முடியும் நண்பரே..ஆனால் அப்படி செய்யாதீர்…இன்று ஒரு நாள் ஏதோ ஒன்று நமது திசையை தீர்மானிக்கட்டும்.

ஆமாம் திசை என்றால் என்ன? ஏதோ ஒரு கணக்கிற்காக சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்றும் அதன் எதிர் திசை மேற்கு என்றும் மற்ற பிற திசைகள் வடக்கென்றும், தெற்கென்றும் நாம் பிரித்து வைத்து இருக்கிறோம். வெட்டவெளியில் ஏது திசைகள்...? அல்லது எதற்கு திசைகள் எங்கே திரும்புகிறோமோ அது ஒரு பகுதி அவ்வளவே...! அட அடுத்ததாக நம்பிக் கொண்டிருந்த திசை என்ற நம்பிக்கையும் கழன்று விழுந்துவிட்டது தானே....?

இன்னும் கொஞ்சம் சிறகினை அழுந்த வெட்டவெளியினில் பதியுங்கள் தோழர்களே...மேலே..மேலே..மேலே....இதோ அதீத உயரத்தில் நாம்...! வளியின் போர்வைக்குள்ளே எவ்வளவு முடியுமோ அவ்வளவு வந்து விட்டோம்....!

என்ன கேட்கிறீர்கள் வளி தாண்டி போக முடியுமா என்றுதானே? முடியும் தோழர்களே.. அதற்கு...மனிதரில் இருந்து இப்போது பறவையாய் ஆனது போல் பறவையிலிருந்தூ சூட்சும ரூபம் கொள்ள வேண்டும். ஆமாம் உடலோடு செல்லல் சாத்தியமன்று... உடல் துறந்தால்.....வளி தாண்டிய வெளியில் மிதக்கலாம்...!

அது இப்போது வேண்டாம்...வாழும் பூமியின் தாத்பரியங்களும், மனிதர்களின், பிறப்பின் அர்த்தங்களும், ஆனந்தத்தின் உச்சத்தையும், அறியாமையின் சொச்சத்தையும் அறிந்து கொள்வோம்....

மிதத்தல்..பறத்தல் இரண்டும் தொடர் நிகழ்வாக இருக்கும் இக்கணத்தில் கொஞ்சம் கீழ் நோக்கி பார்வையை செலுத்துங்கள்...என்ன? என்ன யோசிக்கிறீர்கள்...

ஆமாம் எங்கே இருக்கிறது எல்லைகள் அங்கே? எங்கே இருக்கிறது மனிதனால் வகுக்கப்பட்ட ஜாதியும் மதங்களும்? எங்கே இருக்கின்றன மனிதர்களின் கோபங்கள்? எங்கே இருக்கிறது மனிதர்களின் சந்தோசங்கள்? எங்கே இருக்கிறது வக்கிரமும் பொறாமையும்? எங்கே இருக்கிறது தற்புகழ்ச்சியும் தலைக்கனமும்? எங்கே இருக்கிறது வெற்றியும், தோல்வியும்.....?

இருக்கும் எல்லாம் அதன் அதன் அழகில் இருக்கும் போது நான் மேலே சொன்ன எல்லாம்...மனிதர்களின் மனதுக்குள்ளே தானே இருக்கிறது???? சுற்றுப்புற ச் சூழல் சீராய் இருக்கிறது...! ஓடும் ஆறும், பெய்யும் மழையும், உறுதியான மலைகளும் ஏதோ ஒரு சீரில் இருக்கும் போது மனிதனின் மனத்திலிருக்கும் விசயங்கள் தானே அவனின் வாழ்க்கையையும் சமுதாயத்தின் சூழலையும் தீர்மானிக்கின்றன.

மனிதரின் தலைக்கனங்களும் தன்னைப்பற்றி தானே பெருமை பேசிக் கொள்ளலும் மற்ற மனிதர்களை விட த் தன்னை மிகப்பெரிய மனிதராக காட்டிக் கொள்ளலும் என்று ஒரு வெற்று வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. நம்மிடம் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது என்றால் அந்த ஒரு லட்ச ரூபாயை வீட்டில் பீரோவிலோ இல்லை வங்கியிலோ குறைந்த பட்சம் சட்டை பாக்கெட்டிலோ வைத்துக் கொள்வதுதானே மரியாதை...

என்னிடம் ஒரு லட்சம் இருக்கிறது என்று சட்டை பேண்ட் முழுதும் குத்திக் கொள்வோமா கரகாட்டம் ஆடுவது போல...? அப்படி குத்திக் கொண்டு ஆட்டம் காட்டுவது தகுதியற்ற செயல் அல்லது தகுதியின்றி கிடைத்த பொருளை எல்லோருக்கும் காட்டி பெருமை காட்டும் ஒரு வக்கிரம்.

இயல்புகளில் சிறப்பு இருந்தால் செயல்கள் செம்மையாகும் அதுவே அந்த மனிதரின் பெருமை பேசும்....ஆனால் வக்கிர மனிதர்கள் தன்னை தானே புகழ்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் தன்னை ஜெயித்தவனாக காட்டிக் கொள்ள எல்லா குறுக்கு வழிகளையும் ஆபாசங்களையும் செயலில் புகுத்திக் கொள்கிறார்கள்.

இவர்கள்தான் இவர்கள் வாழும் உலகின் பெரும் புள்ளிகள் அதனால் அவர்களின் பிண்டம் விட்டு அவர்களின் நோக்கு நகர்வது இல்லை எப்போதும் தன்னை மிகப்பெரியவனாக நினைப்பவன் அங்கேயே இருந்து கூத்துக்கள் காட்டி கூவி கூவி தன்னை சந்தைப்படுத்துகிறான்.

சிறகடிக்கத் தெரியாத அந்த ஜீவன்கள் அதனாலேயே மேலே வருவதில்லை. மேலே வந்தவனோ தெளிவோடு தலைக்கனமின்றி எல்லாவற்றையும் முழுமையாகப் பார்ப்பவனாக இருக்கிறான். அவனின் புரிதலில் இந்த கோமாளிகளைக் கண்டு அவர்களுக்காகவும் அனுதாபங்களையும் பிரார்த்தனைனைகளையும் செய்பவனாக இருக்கிறான்.

இதோ இதுதான் தோழர்களே நாம் சிறகடித்து மேலே வந்து பார்த்து புரிந்தது. சரி எது என்று தீர்மானிக்கும் திடத்தை உயரிய பார்வை தருகிறது. தவறான எல்லாம் கூட சரி என்று மட்டுப்பட்டு உணரும் மனிதர்களின் சரியான முகங்களும் தெரிய வருகிறது......! வெகுதூரம் வந்து விட்டோம்....ஓரளவு உண்மைகளின் பக்கத்திற்கு வந்திருக்கிறோம். களைத்துப் போயிருப்பீர்கள்.... அதோ... ஒரு மேகக்கூட்டம் வருகிறது தயாராக இருங்கள் ஒரு பரவச குளு குளு குளியலுக்கு.... அது களைப்பினை தீர போக்கும்..!

கடந்து சென்ற மேகக் கூட்டம் நம்மை எவ்வளு குளுமைப் படுத்தி சந்தோசம் கொள்ளச் செய்தது.. இதோ பாருங்கள் எந்த கர்வமுமின்றி அதன் போக்கில் அது கடந்து சென்று கொண்டிருக்கிறது....இதுதான் வாழ்வின் சாரம் செய்யும் செயலின் பெருமைக்கு நாம் காரணமல்ல.. இது நிகழ்வு அல்லது இயல்பு என்று நினைத்தாலே போதும் பல தலைகள் கனமின்றி இருக்கும்...

அந்தி நேரமாகிவிட்டது தோழர்களே...பறவையயாய் பெற்ற அனுபவம் போதும்...இப்பொது எதுவும் செய்யாதீர்கள்...சிறகுகளை உள்நோக்கி மடக்குங்கள்...வேகத்தினை சீராக்க அவ்வப்பொது சிறகினை புறம் நீட்டி மட்டுப்படுத்துங்கள்... இதோ இதோ.. இதோ.. கீழே வந்து விட்டோம்....இதோ பூமியைத் தொட்டுவிட்டோம்....

மேலே போனது எதார்த்த உண்மை என்னும் சிறகை விரித்து அடித்து....கீழே வந்தது எதார்த்த உண்மை என்னும் சிறகை சீராக மடக்கி.....மேலே செல்வதும் கீழே வருவதும் இயற்கையின் விதி...இதிலே சிறப்பு என்று என்ன இருக்கிறது.....?

ஆனால் அனுபவங்கள் தானே பயிற்றுவிக்கிறது எது சரி? எது தவறு என்று....

கொஞ்சம் எல்லாம் விட்டு விட்டு ....இந்த கட்டுரையும் புறம் தள்ளி விட்டு...அமைதியாக கண்மூடி ஒரு கணம் ஆழமாக சுவாசித்து விட்டு உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளுங்கள்....

சரி எதுவென்று.....??? சரியா.....

உங்களை இறக்கி விட்டுவிட்டேன்.. இனி உங்கள் பயணம் தொடர உங்களுக்குத் தெரியும்...இதோ என் எல்லைகளை உடைத்து.. நான் மீண்டும் பறக்கிறேன்.. மேலே...எனக்கு மிகைப்பட்ட நேரங்களில் எல்லையற்று இருப்பது சரி என்று படுகிறது.....

மீண்டும்....சிறகடிக்கிறேன்......என் வெட்டவெளி வானத்தின் எல்லைகள் தேடி...!


தேவா. S

Sunday, November 7, 2010

முரட்டுக் காளை....!தலைவரை பத்தி எழுத சொல்லிட்டு தம்பி அருண் பாட்டுக்கு போய்ட்டான்....! நாம ஏற்கனவே ரஜினினு சொன்னாலே பத்திகிட்டு எரிவோம்....இதுல பெட்ரோல வேற ஊத்துன எப்டி? ....சும்மா பத்திகிட்டு எரியும்ல..எரிமலை மாதிரி..ஹா...ஹா..ஹா...!

தலிவர் படத்த லிஸ்ட் எல்லாம் பண்ண முடியாது.. என்ன பொறுத்த வரைக்கும்....எல்லாமே... நம்பர் 1 தான்...!!! இது எப்டி இருக்கு....ஸ்ட்ரெய்ட்டா மேட்ருக்குள்ள போவமா....இப்டிச் சூடு.....

முரட்டுக்காளை (1980)

படம் போட்ட கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன்....! ஒரு காளை மாடு முரட்டுத்தனமா நிக்கும் போது.. அத அடக்க சிங்கம் மாதிரி நம்ம சூப்பர் ஸ்டார்.....! என்னோட கவலை எல்லாம் தலிவருக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுன்னுதான்....அது எப்டி ஆகும் தலைவர் சும்மா பிரிச்சு மேஞ்சு காளைய அடக்குற வரைக்கும் பக்கத்து சீட்ல இருந்த ஆள டேமேஜ் ஆக்கிட்டேன்...ஜு ஜு பி....!எப்பவுமே தலிவர் படம்னா...அப்டிதான்...இஹ் ஹா...ஹா ஹா..! அதுக்கு அப்புறம் வர்ற பாட்டு...நான் சொல்ல தேவயில்ல..உங்க ஹிட் இல்ல எங்க ஹிட் இல்ல.. உலக ஹிட்....

தமிழ் சினிமாவுக்கே பஞ்சர் பாத்த படம்.... ! எங்க ஊர்..(எந்த ஊர்னு கேட்டா ரூட்டு மாறிடும்...ட்ராக்க புடிங்க....) தியேட்டர்லயே.. 200 நாள் ஒடினிச்சு.....தலிவர் எல்லாம் வந்ததா சொல்லிக்கிட்டாங்க.. ! ஏன் நான் போகலியான்னு கேக்குறீங்களா.அப்போ எனக்கு 4 வயசோ இல்ல 5 வயசோ தெரில...இது எப்டி இருக்கு...? ஹா.. ஹா..ஹா..!

முரட்டுகாளை..யாராலும் இதுவரையும் அடக்க முடியாத காளை...!

பாயும் புலி (1983)


ஃபர்ஸ்ட் சீன்ல தலைவர் அடி வாங்கி கார் ஆக்ஸிடண்ட்ல தூக்கி வீசும்.....அழுது கிட்டே....நான் அப்பா கைய பிடிச்சு கெஞ்சினேன்.. என்ன வீட்டுக்கு கூட்டிடு போங்க... எனக்கு படம் பிடிக்கலேன்னு..! . கொஞ்சம் இருடான்னு கெஞ்சி உக்கார சொல்லி.. கஷ்டப்பட்டு உக்காந்து....அதுக்கபுறம் பாலாஜி சார் கிட்ட சண்டை கத்துகிட்டு.....அவரு வக்கிற பரீட்சை எல்லாம் ஒவ்வொரு கட்டமா தாண்டும் போது........நெஞ்சுகுள்ள ஒரே திக்.. திக்..திக்........மறுபடியும் குதிச்ச குதில தியேட்டர் சீட் நெட் கழண்டு விழாததுதான் கொற....

தலைவர் பழிக்கு பழி வாங்கும் இடம் எல்லாம்....சும்மா ஜிவ்வுனு மேலே தூக்கிட்டு போகும்....! .மன்ணுல கைய குத்துற சீன பாத்துட்டு வீட்டுக்கு வந்தும் ஹூ.. ஹான்னு சத்தம் போட்டுஅலும்பு பண்ணினத நினைச்சா... ஹா...ஹா..ஹா.

பாயும் புலி... தலைவர்....கொளுத்து கொளுத்துனு கொளுத்தி எரிஞ்ச படம்.....!

புவனா ஒரு கேள்விக் குறி (1977)

அண்ணே.. நாகராஜண்ணே.... நமக்கு எல்லாம் இது ஒத்து வராதண்ணே.. நீங்க போங்க..போங்கனு சொல்லிட்டு சம்பத் அப்டீன்ற ஒரு கேரக்டர் ஆகவே வாழ்ந்து இருப்பாரு தலைவர். ஒரு கிளியர் கேரக்டர்.... தன்னுடைய காதலி இறந்து போயிருக்கும் சோகத்தை தாடிக்குள் மறைத்து வைத்துக் கொண்டு... இருப்பதாகட்டும், நண்பன் தவறு செய்யும் போது பதறும் இடமாகட்டும்...தானே ஒரு தனிக்கட்டை தன்னால எந்த பாதிப்பும் வராம சுமித்ராவ காப்பாத்த முடியும்னு உறுதி கொடுக்குற இடம் னு எல்லாம்..... பின்னி எடுத்து இருப்பார்….

உங்களுக்கு எல்லாம் ஒண்ணு சொல்றேன் என்ன தெரியுமா? ரஜினி வெறும் மசா லா படம் மட்டும் கொடுத்ததால சூப்பர் ஸ்டார் இல்லீங்க..... எல்லா மசாலவுக்கும் முன்னால அவர் நடிச்ச படம் எல்லாமே காவியம்...

புவன ஒரு கேள்விக் குறி.....ரஜினிக்கு எப்டியெல்லாம் நடிக்கத் தெரியும்னு டீட்டெய்ல் நோட்ஸ் கொடுத்த படம்....!

ஆறிலிருந்து 60 வரை (1979)

சராசரியா இந்த படம் பாத்துட்டு கண் கலங்காதவங்க யாரும் இருக்க முடியாது. பொறுமையான ஒரு ஏழை ஏமாறும் அண்ணண் எப்டி இருப்பாரு...? அவர் வாழ்க்கைல வந்து போன காதல் சுவடுகள் வலி.. எல்லாத்தையும் ஒரு உணர்வா உள்வாங்கி பிழிஞ்சு எடுத்து....கொடுத்து இருப்பார்.....!

தலைவரோட காதல் காட்சிகளும் சரி, ஒரு குடும்பத்தலைவனா வாங்கிக் கொள்ளும் வலிகளும் சரி...எல்லாமே க்ளாஸ்தான்....!

தலைவர்னா ஸ்பீடுதான்... லேட்டஸ்டா கூட ஒரு ஜோக் படிச்சேன்....

சென்னைல தலைவர ஓவர் ஸ்பீடுனு சொல்லி அரஸ்ட் பண்ணிட்டாங்களாம்....போலிஸ்.....! ஆனா ஆக்சுவலா தலைவர் வாக்கிங்தான் போயிருக்கார்.....ஹா..ஹா...ஹா...! அப்டி ஒரு ஸ்பீட் இருக்குற பவர் புல் மேன்... ஒரு தென்றலா வாழ்ந்து காமிச்சு இருப்பார்.. இந்தப் படத்துல..!

ஆறிலிருந்து அறுபது வரை....அமைதியான ஓடம்....!

பில்லா (1980)


ஒரு டான்...ஒரு பெரியா கடத்தல்காரன் எப்டி இருப்பாங்க? எவ்ளோ திமிரு இருக்கும்? எவ்ளோ தில்லு இருக்கும்... எப்டி சீரியஸா இருப்பாங்க... அவுங்க காதல் எப்டி இருக்கும்? ஹா.. ஹா.. பட்டாசு கிளப்பி இருப்பாரு தலைவர்......

அதுக்கு நேர் மாற ஒரு கேரக்டர் ராஜப்பா... சும்மா வெத்தலை போட்டு எச்சி துப்புறதுல கூட ஒரு ஸ்டைலுன்னு அசத்திருப்பார்...! பில்லாவ சூட் பண்ணி பின்னால ராஜாப்பா பில்லாவா மாறி.. .செம ஸ்பீட் ட்ராக்ல போகும் படம்...அப்ப பட்டி தொட்டி எல்லாம் வசூல அள்ளி குவிச்சது....சாதாரணமா எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம்....

ஆமா பாஸ்.. வெத்தலைய போட்டேன்டி பாட்டு.. தெருக்கு தெரு பாடிச்சு....! நாம எல்லாம் சட்டை பட்டன தொறந்து விட்டுகிட்டு.... குட்டி பில்லாவா திரிஞ்ச காலம் அது....

பில்லா .....புல்லட்....!

நெற்றிக் கண் (1981)


ஹீரோ ஒருத்தர்.. அவரோட அப்பா சபலம் நிறைஞ்ச ஒரு தொழிலதிபர்.... தீராத விளையாட்டுப் பிள்ளை.....! நவரசத்தையும் கொட்டி சிருங்காரம்ங்கிற ஒரு பாவத்த அப்டியே தட்ல வச்சி ஜூஸ் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுக்குற மாதிரி அலேக்கா அலம்பல .....செஞ்சு இருப்பரு...! பொண்ணுக கிட்ட வழியிறது ஒரு கேரக்டர்.. இதுல தலைவர் வழிய மாட்டர்....ரொமாண்டிக்கா மூவ் பண்ணுவார்... அது.. வழிசலுக்கும் கொஞ்சம் மேல....நார்மலுக்கு கொஞ்சம் கீழ....

வெக்கப்படுறது எப்டின்னு தலைவர பாத்துதான் பொண்ணுகளே கத்துக்கணும்...! யாரயும் விட்டு வைக்காத ஒரு எப்பவுமே டீன் ஏஜ் மைன்ட் செட்ல இருக்குற ஒரு ம னுசன கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி இருப்பார்.....! இந்த பக்கம் மகன் ரஜினி.. மைல்ட் அன்ட் ரொமண்டிக் ஹீரோ..... ! பாட்டு எல்லாமே சூப்பர்ப்.. அதுவும் ராமனின் மோகனம்.... பாட்டு... இன்னிக்கு வரைக்கும் ... எப்போ கேட்டாலும் ஒரு நிமிசம் உங்கள உள்ள இழுத்துப் போட்டுடும்.....!

நெற்றிக் கண்... நெருப்பு!

எங்கேயோ கேட்ட குரல் (1982)


போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா, ரங்கா இப்டி ஆக்சன் மசால படமா கொடுத்துகிட்டு இருந்த சூப்பர் ஸ்டார் இமேஜ் பாக்காம நடிச்ச படம் இது. தன்னுடைய மனைவி பாதை தவறிப் போய்ட்டான்றத எதார்த்தமா உள்வாங்கி அதுல இருக்குற நிதர்சனத்த விளங்கிக்கிட்டு அவருக்குள் இருக்கிற காதல காதலா உள்ளதானே தேக்கி வச்சுகிட்டு ஒரு நிதானமான நடிப்புல கலக்கி இருப்பார்.

ரஜினின்ற ஒரு மிகப்பெரிய நடிகனை எல்லோரும் நடிக்கத் தெரியாதவர்னு முத்திரை குத்தி ஒரு வட்டத்துக்குள்ள தள்ள முயன்ற போது.. அதை உடைச்சுகிட்டு வெளில வந்து ஒரு சிங்கம் மாதிரி இந்த படத்துல வாழ்ந்து காட்டியிருப்பார்......!

எங்கேயோ கேட்ட குரல்.........எப்பவுமே கேட்கும் குரல்!

நல்லவனுக்கு நல்லவன் (1984)


வச்சிக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள....என்று ஒரு செம் பீட் பாட்டோட தொடங்குற படம்.. ஒரு ரெளடியா இருக்குற தலைவர இடையில் வர்ற ராதிகா திருத்துறதும் அதுக்கு அப்புறம் கதை சூடு பிடிச்சு தலைவர் தொழிலதிபர் ஆகுற வரைக்கும் கதை போய்கிட்டே இருக்கும்....

என்ன ஸ்பெசல்னா...தலைவர் இளம் வயசுல ரெளடியா இருப்பதில் இருந்து ஒரு பொறுப்பான கணவன, தொழிலதிபரா, அப்புறம் ஒரு அப்பாவான்னு எல்லா இடத்துலயும் சிக்ஸர் அடிச்சு இருப்பாரு....கூடவே இருக்கும் ராதிகா கூட வாழ்ந்து இருப்பாங்க....!

ஏன் இவர் சூப்பர் ஸ்டாரா இன்னும் மின்றாருன்னா.... எல்லாவிதமான பரிமாணங்களும் நடிப்பில காட்றதலதான்..

நல்லவனுக்கு நல்லவன்....மைல்கல்!

எஜமான் (1993)


எல்லா நடிகரும் பஞ்சாத்து தலைவர்கள் மாதிரி வேஷ்டி சட்டை கட்டி நடிச்ச போது அடா அடா.. நம்ம தலைவர் இப்டி நடிச்சு ரொம்ப நாளாச்சேன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்.....! அப்டிப்பட்ட நேரத்தில என் வயித்துல பால வார்த்த மாதிரி வந்த படம்தான் எஜமான்.

வானவராயர்.........பேர சொல்லும் போதே ஒரு திமிரு வந்து உக்காந்துக்குது மனசுல....! தலைவர் பில்டப்ஸ் எல்லாம் இல்லாம பஞ்ச் டயலாக்ஸ் கம்மிய ஒரு ஆன ஸ்டைல் நிறைய இருக்கும் ஒரு எதார்த்தமான படம் அது. துண்டா கொடுக்கிறீங்க துண்டு... கொய்யாலா.. பாருங்க.. அத என்ன பண்றேன்னு.. அதுல ஒரு ஸ்டைல வச்சு சும்மா சுத்தி தோள்ள போடுற ஸ்டைல் இருக்கே....சான்ஸே இல்ல...! செய்றது சாதரணம் ஆன செய்யணும்னு தோணுறது இருக்குல்ல அதன் சூப்பர் ஸ்டார்.....!

நகைச்சுவை, பைட், அப்புறம் சோகம்னு, காதல்னு சும்மா பிரிச்சு மேஞ்சு இருப்பாரு தலைவர்.

எஜமான்...........ஆளுமை!


படையப்பா (1999)

படையப்பாவில் தலைவர ரசிக்க நிறைய காரணங்கள் இருக்கு.. ஆரம்பம் முதல் முடியுற வரைக்கும் படம் முழுதும் ஒரு நெருப்பு இருந்துகிட்டே இருக்கும்..டயலாக் டெலிவரியும் சரி.. வசனத்தில் இருக்கும் கூர்மையும் பாக்குற ரசிகன கொஞ்சம் கூட சோர்வடைய வைக்காது.

ஆக்சன் கூடவே கதை, ஸ்டைல் மியூசிக்னு மல்டி வே ல ஸ்கோர் பண்ணின படம். ரம்யா கிருஷ்ண் இதுல சிக்ஸர் அடிச்சு இருப்பாங்க.. இன்னும் சொல்லப் போனால் ரம்யாகிருஷ்ணன் இந்த படத்துக்கு அப்புறம்தான்..ரொம்ப பாப்புலர்.....

" அழகும் ஸ்டைலும் கூடவே பொறந்தது.. அது எப்பவுமே விட்டுப்போகாது...." இப்படி எத்தனையோ டயலாக்ஸ் சொல்லலாம்.. நடிகர் திலகமும் இதில் நடித்திருப்பது சிறப்பு.....!

படையப்பா.....பயர்.....!

இதிலிருந்து விடுபட்ட படங்கள் நிறைய.. என்ன கேட்டா எல்லா ரஜினி படமும் சூப்பரா பிடிக்கும்னு சொல்லிட்டு போய்ட்டே இருப்பேன். இருந்தாலும் ஒரு தொகுப்புனு பாத்தா இது எல்லாம் பிடிக்கும்... அவ்ளோதான்..!

அன்னில இருந்த இன்னிக்கு வரைக்கும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத முரட்டுக் காளையாக ரஜினி இருப்பதற்கு காரணம்....தலைக்கனம் இல்லாம தான் வேலைய தான் பாக்குறதுதான்....

அப்புறம் ஒரு விசயம்.. கண்டிப்பா இத தொடர 4 பேர கூப்பிட சொல்லிட்டான் தம்பி அருண்...ம்ம்ம் சரி.. நான் யார கூப்பிடுவேன்..........சரி..... தம்பி செளந்தர்,ஜீவன் பென்னி,கோமாளி செல்வா அப்புறம் டேஞ்சர் டெரர் பாண்டியன்.....அருணுக்காகவும் தலைவருக்காவும்.. கொஞ்சம் டைம் கொடுங்க மக்கா....!

" நெஞ்சுக்குள் அச்சமில்லை....
யாருக்கும் பயமுமில்லை.....
வாராதோ வெற்றி என்னிடம்.....
விளையாடுங்க உடல் பலமாகுங்க...
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்
ஆனந்தம் காணலாம் எந்நாளுமே....!"


அப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா....!


தேவா. S