Skip to main content

Posts

Showing posts from September, 2015

யாகத் தீ...!

நான் எழுதிய கவிதைகளை எல்லாம் நீ இப்போது வாசிக்கிறாயா? ஒரு வெறுப்போடுதான் கேட்டேன். அவள் பதிலேதும் சொல்லாமல் அலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். வெறுமனே நானும் அலைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சப்தமில்லாத அந்த நிமிடங்களை சடக்.. சடக்...சடக் என்று மென்று விழுங்கிய படியே காலம் ஓடிக் கொண்டிருந்ததை பற்றிய பிரக்ஞை எனக்கு அறவே இல்லாதிருந்தது போலத்தான் அவளுக்கும் இருந்திருக்க வேண்டும்... சடாரென்று என்னைப் பார்த்தாள்...கலைந்த கேசத்தைப் பற்றிய யாதொரு அக்கறையுமின்றி என்னை அவள் அப்படி ஊடுருவிப் பார்த்தது எனக்கு ஒரு மாதிரியாய் இருந்தது... நீ ஏன் எதுவுமே எழுதுவது இல்லை இப்போதெல்லாம் என்று அவள் கேட்டது, சடலத்திடம் போய்  ஏன் இறந்து கிடக்கிறாய் என்று கேட்பதைப் போலவே தோன்றியது எனக்கு. நான் எழுதுவதில்லைதான் ஆனால் அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை... ஒவ்வொரு இறகாக பிய்த்துப் போட்டு விட்டது காலம். நான் முன்பு போல தோகை விரிக்க இன்னும் எத்தனை நாள் காத்திருக்க வேண்டும் என்று எனக்குத்  தெரியவில்லை. அகங்காரத்துக்காக எந்த மயிலும் தோகை விரிப்பதில்லை அது அழகியலின் வெளிப்பாடு. இருந்தாலும

மீளல்...!

மீளல் என்பது எப்போதும் கடினம்தான் அது காலத்தை தின்று விடுகிறது சுற்றியிருப்பவர்களுக்கு புரிதலின்மையைக் கொடுக்கிறது வலியோடு நகர வைக்கிறது வார்த்தைகளைக் கொன்று விடுகிறது; பதுங்கித் திரியும் அடிபட்ட புலியின் கொடூரத்தோடு பாய்வதற்கான தருணத்தை அது எதிர்பார்த்து காத்திருக்கிறது; மீளல் ஒரு வேள்விதான் அது எலும்புகளைத் துளையிட்டு ரத்தத்தை உறிஞ்சி  நரம்புகளை அறுத்தெறிந்து  தடாலென்று கீழ் தள்ளி விடும் போதுதான் விழுந்த இடத்திலிருந்து நாம்  எழுந்து விஸ்வரூபமெடுக்க வேண்டியிருக்கிறது மீட்சி அல்லது மீளலென்பது காலம் கையளிக்கும் இடைநிலைச் சூழல்தானென்றாலும் மீளும் வரை மீண்டு கொண்டிருப்பவன் பாவிதான், துரோகிதான்; மீளல் ஒரு சூழ்நிலை மாற்றிதான் அது மீளும் வரை இடதை வலதாக காட்டுகிறது வலதை இடதாகவும் மேலைக் கீழாகவும்  கீழை மேலாகவும் காட்டிக் கொண்டேஇருக்கிறது... மீள்பவனை ஊமையாக்குகிறது; மீள்பவனின் வார்த்தைகளிலிருக்கும்  சத்தியமென்பது விழலுக்கிறைத்த வெற்று நீர்தான்... ஆனாலும்... மீளலொரு நாள் தன்னை மீட்டெடுத்துக் கொள்கிறது கூட்டுப் புழுவினை உடைத்து சிறகசைத்துப் பறக்கும் வண்ணத