Skip to main content

Posts

Showing posts from June, 2018

தேடல் - 1

காரணமின்றி காரியமில்லை எத்தனை எழுத்தாளர்களை கடந்து வந்த போதும் பாலகுமாரனை விட்டு நகர மறுக்கிறது மனசு. காரணம் ஆன்மீகம். இலக்கியம் என்பது மானுடவியல் சார்ந்தது. ஆன்மிகத் தேடல் இந்த வாழ்வோடு மட்டுமா தொடர்புடையது? சென்னைக்கு வேலைதேடி பெட்டியோடு பேருந்து ஏறிய போது பெட்டிக்குள் துணிமணியோடு பாலகுமாரனின் நாவல்களும் என்னோடு வந்தன. நிறைய பெட்டிகள் இப்படித்தான் பயணித்தன என்பதை பின்னர்தான் தெரிந்து கொண்டேன். கடவுள் கடவுள் என்று பேய்ப்பிடித்து அலைந்த பொழுது பாலகுமாரனின் நாவல்கள்தான் பொறுமையாய் பாடமெடுத்தன. பாலகுமாரனை பார்க்க வேண்டுமென்றல்லாம் எனக்கு ஆசை கிடையாது. அடுத்தடுத்து வெளிவரும் அவரது பல்சுவை நாவல்களை வாங்கிப் படித்து விடவேண்டும் அவ்வளவுதான். ஒரு பிரதோஷ மாலையில் மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயிலின் வெளி மண்டபத்தில் தேமேவென்று உட்கார்ந்த்திருத பொழுது பாலகுமாரன் யாரோ இருவருக்கு பூம்பாவை கதை சொல்லிக் கொண்டிருப்பதை பார்த்தேன். ஓடிப்போய் உங்கள் வாசகன் சார் நான் என்றெல்லாம் சொல்லத் தோன்றவில்லை. வெள்ளை வேட்டி சட்டை தாடி குடுமி சகிதமாய் அவர் உள்ளும் புறமும் உருமாறிக் கொண்டிருந்த நேர