Skip to main content

Posts

Showing posts from November, 2011

நான் அவன் இல்லை....!

என்னிடம் கேள்விகள் எதுவும் கேட்காதீர்கள்... உங்களுக்கான பதில்களை கொடுக்கிறேன் என்று என்னால் நடிக்க முடியாது ஏனென்றால் உங்கள் கேள்விகள் எல்லாம் பதில்கள் என்ற பொய்யை பெற எழுப்பப்பட்ட பொய்கள் என்று நானறிவேன்..! நான் யாரென்று... இனியும் என்னிடம் கேட்காதீர்கள் ஒற்றை வார்த்தையில் நான் உங்களுக்கான... பதிலானவன் அல்ல...! என் கனவுகளின் எல்லை எதுவென்று கணக்குக் கூட்டி கூட்டி நீங்கள் தொலைந்து போகாதீர்கள்; நான் எல்லைகளுக்குள் ஏதோ ஒரு திசையை நோக்கி எப்போதும் பயணிப்பவன் அல்ல..! என் சித்தாந்த வேர்களை தேடிப் பிடித்து.. என்னைக் கணிக்க... கனவிலும் முயன்று தோற்காதீர்; நான் சித்தாந்தங்களை எல்லாம் செதுக்கி எறிந்து வெற்றில் நிரம்பிக் கிடப்பவன்! என் காதல்கள் எல்லாம் யாருக்காயிருக்கும் என்று உங்கள் புத்திகளை உலுக்கிக் கொண்டு பொழுதுகளை வீணடிக்காதீர்கள்; நான் தேகம் கடந்த வெளியில் தேவைகளற்ற காதலில் லயித்துக் கிடப்பவன்...! என் இறுதி என்னவாயிருக்கும் என்று கூடிக் கூடி பேசி ஓய்ந்து போகாதீர்கள் நான் நெருப்பில் சுடப்பட்டாலும் மண்ணில் புதைபட்டாலும் மரித்துப் போய்விடுபவன் அல்ல...! நெருப்புக்குள் நான் குளிரானவன் குளிருக்

வழிப்போக்கனின்...வழியில்!

நிலவின் அழகில் தடுமாறி... தளும்பி கிறங்கிக் கிடந்த... ஒரு குளக்கரை இராத்திரியின்.. நிசப்த நிமிடங்களுக்குள் நான் ஊறியே கிடந்தேன்...! மொழிகளின்றி இரைச்சலாய் மெளனத்தை பகிர்ந்து கொண்டிருந்த தூரத்து மலைகளை ஒற்றிக் எடுத்துக் கொண்டிருந்த வாடைக் காற்றின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டு பறந்த ஒற்றைக் குயிலின் சப்தம் என் காதுகளை தடவிச் செல்கையில் கிறங்கிக் கிடந்த என் விழிகளை அடைத்து மூடி எங்கோ ஒரு கனவு வெளிக்கு இழுத்துச் செல்ல காத்திருந்த இமைகளை மெல்ல பிரித்தெடுத்து மீண்டும் மூழ்குகிறேன்... அந்த மோன நிலைக்குள்...! கேட்கவும் சொல்லவும் யாருமற்று... தேவைகள் எல்லாம் தொலைந்து போன பூமியின் அந்த சொர்க்க இராத்திரியின் நிமிடங்களில் மானுட ஜனித்தலின் அர்த்தங்களை எல்லாம் கை குவித்து நீர்பருகும் ஒரு தாகக்காரனாய்... விழி குவித்து காட்சிகளாய்... பருகிக் கொண்டிருந்தேன்..! சந்தோசங்களின் உச்சங்களுக்கு துணை தேவையில்லை..., சரித்திரத்தின் பக்கங்களுக்குத்தான் நிகழ்வுகளின் அழுத்தங்களும் மனிதர்களின் நகர்வுகளும் அவசியமாகின்றன...! கருக் கூடி ஜனிக்கையில்... உரு மறைந்து மரிக்கையில்... அற்றுப் போகும் வாழ்க்கையில் இடையில் துளிர்க்கு

மற்றபடி...

யாரோ எழுதிய கவிதையை யாரோ வாசிக்கிறார்கள் எங்கோ பரிமாறப்பட வேண்டிய காதல்கள் எங்கோ... எடுத்துக் கொள்ளப்படுகின்றன... இலக்குகள் மாறி எப்போதும் பயணிக்கும் கவிதை வரிகள் இடம் மாறி பூக்களை பூக்க வைக்கின்றன; விலாசம் மாறியே எப்போதும் செல்லும் படைப்பாளிகளின் கற்பனைகள் எப்போதாவது எதேச்சையாக படைப்பின் மூலத்தை யாரோ ஒரு வாசிப்பாளனிடம் கொண்டு சேர்த்து ஜெயித்துக் கொள்வதும் உண்டு; மற்றபடி... படைப்பாளியின் உலகமென்பது... அவனும், அவன் கவிதைகளும் கிளர்ந்தெழும் எண்ணங்களும் வார்த்தைகளும், எழுத்துக்களும்... மறுபடிகள் இல்லாத படைப்புகளுமாய் அந்திச் சூரியனும், அதிகாலை நிலாவும் முகம் வருடும் சொரசொரப்பான கடற்கரை உப்புக் காற்றும்.... நட்சத்திரங்களும், வானமும் மனிதக் கூச்சல்கள் கடந்த ஆழ்ந்த மெளனமும் என்று... சராசரிகள் கடந்த சங்கமத்தில் எப்போதும் தேடுகிறது இல்லாத.. ஒரு விடையை...! தேவா. S

பிரபாகரன் என்னும் நெருப்பு....!

ஈழ தேசத்தில் வெடித்த அந்த அக்னி இன்று வியாபித்து அகில உலகமெங்கும் இருக்கும் தமிழர்களின் மனதில் எல்லாம் பெரும் தீப்பிளம்பாய் கிளர்ந்து நிற்கத்தான் செய்கிறது. ஆமாம்....பிரபாகரன் என்ற பெயரினை உச்சரிக்கும் போதே ஒவ்வொர் தமிழனின் மயிர்க்கால்களும் சிலிர்த்து எழத்தான் வேண்டும்.... கொடுமைகள் பல இழைத்து எம் மக்களை இன ரீதியாக ஒடுக்கி அடக்குமுறைகள் செய்த அரியாசனத்தில் இருந்த இலங்கை தேசத்தின் சொறி நாய்களுக்கு தலைவர் பிரபாகரன் சிம்ம சொப்பனமாய்த்தான் இருந்தார்... இலங்கை இராணுவமும், போலிஸ் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பிரபாகரன் என்ற பெயரைக் கேட்டாலே நடு நடுங்கிப் போய் தமது கால் சட்டைகளை நனைத்துக் கொண்டு ,தொண்டை வரண்டு போய் உடனே உயிர் பயம் கொள்ளத்தான் செய்தார்கள்... ஒரு இனத்தை ஒரு தேசத்திலிருந்து முழுதுமாய் ஒழித்து விட சிங்கள பேரினவாத அரசு முடுக்கி விட்ட எல்லா கொடும் செயல்களையும் ஆரம்பத்தில் அகிம்சா முறையில் சாதிக்க முயன்று, முயன்று அந்த முயற்சிகள் எல்லாம் கொடியவர்களின் ஆயுதங்களால் எரிக்கப்பட்ட போது களமிறங்கி ஆயுதத்தை கைப்பிடத்த சீற்றமான புலிதான் பிரபாகரன்.... எம் குலப் பெண்டிரின் கற்புகளை அழித்தாயா?

பதிவர் திலகம் பப்பு.....ரிடர்ன்ஸ்!!!!

ரொம்ப நாளு ஆச்சு பப்பு கிட்ட பேசி, சரி பப்பு இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்கான்? ரொம்ப நாளாச்சு பப்புவ பாத்துன்னு சொல்லிட்டு பப்புவுக்கு போன் பண்ணி பப்பு இருக்காருங்களான்னு கேட்டா....யெஸ் பதிவர் திலகம் பப்பு ஹியர்னு ஒரு முரட்டுக் குரலு கேட்டுச்சு.....? என்னது பதிவர் திலகம் பப்புவா...? கொஞ்சம் ஷாக்காகி என்ன பப்பு சார் இப்போ எல்லாம் உங்கள புடிக்கவே முடியலை...பெரபலம் ஆனவுடனே கண்டிகிடுறதே இல்ல சார் நீங்கன்னு சொன்னேன்.... ஆமா யாரு நீங்க... ஓ....ஹோ அவரா ...? இப்ப என்ன வேணும் ஒங்களுக்கு என்ன பத்தி எழுதி மறுபடியும் நீங்க பப்ளிசிட்டி ஆகணுமா? நோ ப்ராப்ளம் இந்த பதிவர் திலகம் பப்புவ வச்சி மேல வந்தவங்க கோடி பேரு...அந்த கோடியில நீங்க ஒரு கோடியில இருந்துட்டு போங்க... ! முன்ன மாதிரி என்ன நீங்க நினைக்க முடியாதுன்றத மட்டும் மனசுல வச்சிக்கிடுங்க....இந்த பதிவுலகத்துல பதிவுகள எழுத வந்து பல்டி அடிச்சு போனவங்க கோடி பேரு.....ஆனா இந்த பப்புவோட ட்ராக்கே தனி....எப்டின்னு கேக்குறீங்களா.....? ஏதாச்சும் எழுதணும்னா நான் சொந்தமா யோசிச்சு கிரியேட்டிவிட்டியோட எழுதணும்னு தப்பு தப்பா சில நல்ல ச்சே ச்ச்சே நொள்ளை பதிவர்ங்

ஒரு நதி நகர்கிறது...!

ஒரு நதி நகர்கிறது சலனங்களை எல்லாம் விழுங்கிவிட்டு... இரைச்சலான நிசப்தத்தோடு....! அவ்வப்போது கலைந்து போகும் தவத்தில் யாரேனும் மானுடரின் அத்துமீறல் இருக்கும்.... பல நேரம் கரையோர பறவைகளின் மோன மொழியின் போதையில் கிறங்கியே கிடக்கும்! தன் சுயமே இல்லாமல் வற்றிப் போகும் கோடையிலும் கூட தடத்தினை நியாபகமாய் விட்டுச் செல்லும்...! நிலவின் கிரகணங்களில் ஜொலிக்கும் அலங்காரமாகட்டும் அமாவசை இரவுகளின் அடர்த்தியான அமைதியாகட்டும் சப்தமான ஆழங்களை தன்னுள் தேக்கி... சலனமற்றுதான் நகர்கிறது இந்த நதி!!!! தேவா. S

எப்படித்தான் மறப்பதாம்....?

இசைக்குள் ஒளிந்து கொண்டு பாடலாய் சில்மிஷமூட்டுகிறாய்... ஒரு மழையின் கனத்த அடர்த்தியின் ஓரங்களில் சாரலாய் நின்று மெல்ல சிரிக்கிறாய் எப்போதும் தனிமைகளில் ஆராவாரமாய் மனதில் இரைகிறாய்! ஆழமான சுவாசங்களில் அடி வயிறு வரை சென்று இதமாய் நெஞ்சு நனைக்கிறாய் தோட்டத்து செடிகளின் துளிர் இலைகளில் மெலிதாய் எட்டிப்பார்த்து கண்ணடிகிறாய் கட்டியணைத்தே விடலாம் என்று கை சேர்த்து அணைக்கும் போது ஒரு காற்றாய் என்னை.. கடந்தே போகிறாய்....! விளக்கணைக்கும் வரை விழிகளுக்குள் வசிக்கிறாய் விளக்கணைத்து இமை மூடும் போது நெஞ்சத்தில் நினைவுகளாய் படருகிறாய் சுற்றி சுற்றி எல்லாமாய் நீயிருந்தால் எப்படித்தான் உன்னை மறப்பதாம்? தேவா. S

அரிதாரம்...!

யாரோ பேசியதை திரும்ப நான் யாரிடமோ பேசுகிறேன்...! எல்லோருக்கும் பிடித்த ஒரு இசையை வலுக்கட்டாயமாய் எனக்குப் பிடித்ததாய் கொண்டு மீண்டும் மீண்டும் கேட்கிறேன்! மிகைப்பட்ட சரிகளின் பக்கம் தவறென்றாலும் சாய்ந்து, குறையாயிருக்கும் சரிகளை தவறென்கிறேன்! யார் யாரோ ஏதேதோ சொல்ல கேட்டு கேட்டு... என் சுயம் தொலைந்து அரிதாரப் பூச்சுக்களுக்குள் என் அடையாளம் அழிந்து... தொலைந்தே விட்டேன் நான்...!!! தேவா. S

கருவறை....!

எங்கும் பரவிக் கிடக்கும் எண்ண ஓட்டங்களுக்கு மத்தியில் நகர்ந்து செல்வது சிரமமாக இருக்கிறது. குறுக்கும் நெடுக்குமாய் செல்லும் எண்ணங்களையும், அதிக அதிர்விலான முரண்களையும் சுமந்து செல்லும் மனிதர்கள் எம்முள் பெரும் இரைச்சலை ஏற்படுத்திச் செல்வதை தவிர்க்க முடியவில்லை. சற்றே உற்றுப் பார்த்து எமது இருவிழிகளையும் உருட்டி நிறுத்தி புருவமத்திக்கு அரை விரற்கடை மேலிருக்கும் எமது மூன்றாவது விழியை திறந்து முரண்பாட்டு மூட்டைகளை எரித்துப் போட்டுவிடலாம் என்று கருதுகையில் எம்முள் எப்போதும் கேட்கும் ஒரு தாலாட்டுப் பாடல் எல்லாவற்றையும் சாந்தப்படுத்தி கருணை கொள்ளச் சொல்கிறது. ஜனனத்திற்கும் மரணத்திற்கும் இடைப்பட்ட நாளில் இந்த தோல் துருத்தி பையை சுமக்கும் எம்மின் பகுதிகள் மயக்கத்தில் நடத்தும் குழப்பங்களுக்காக.... ஒரு பெருங்கருணை எம்மையறியாது எமது இயல்பினிலிருந்து சுரந்து மன்னிக்க முயன்று, பின் மன்னிப்பின் சுவடு சுமக்க வேண்டுமே என்ற புரிதலில் மறந்து போகச் சொல்கிறது. புத்தி என்ற ஒன்றினை இயறகையாய் நின்று யாம் படைத்ததின் அவசியம் யாதென்று மாக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவற்றை சிந்திக்க இயலா நிலையில் நிற

உடையாரின் அதிர்வலைகள்...16.11.2011!

அதிர்வு I அதிர்வு II அதிர்வு III மிகப்பெரிய ஒரு அனுபவத்துக்குள் லயித்துக் கிடக்கிறேன். இதை விட்டு வெளியே வந்து இந்த அனுபவத்தை எழுத்தாக்கவே எனக்கு தோன்றவில்லை. உடையாரை வாசிக்கத் துவங்கும் போது ஒரு அரசன் ஒரு கோவிலைக் கட்டினார். அதைப் பற்றிய ஒரு வரலாற்று கதை என்ற ஒரு எண்ணத்தோடு ஆன்மீக கருத்துக்களை நிறைய எதிர்பார்த்துதான் நான் உள் நுழைந்தேன்....ஆனால் ஒரு கால இயந்திரத்துக்குள் ஏறி பயணப்பட்டு அது பின்னோக்கி சென்று என்னை சோழ தேசத்துக்குள் கொண்டு சென்று இறக்கி விட்டு விடும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை... எனக்குள் இப்போது பெருவுடையத்தேவரின் காலத்தில் நாம் வாழாமல் போய் விட்டோமே என்ற ஒரு ஏக்கம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இல்லை ஒரு வேளை வாழ்ந்திருப்பேனோ என்ற ஒரு எண்ணமும் உடன் கிளைக்கவும் செய்கிறது. இப்படியான எண்ணம் இந்தப் புதினத்தை வாசிக்கும் அத்தனை பேருக்கும் தோன்றத்தான் செய்யும் காரணம்....அது ஒரு ஏக்கம், ஆசை. எப்பேர்பட்ட ஒரு வீரன், எப்பேர்பட்ட ஒரு தலைவன், எப்பேர் பட்ட ஒரு அரசன், எப்பேர் பட்ட புருசன், எப்பேர் பட்ட ஒரு தகப்பன்...., எவ்வளவு சிறந்த சிவ பக்தன்...... மெய் சிலிர்த்துப்

ஹாய்....13.11.2011

நான் எழுத வந்து கொஞ்ச நாளாகி விட்டது என்று நினைக்கிறேன். எதை எழுதினாலும் யாரேனும் வாசிப்பார்கள் என்ற ஒரு அனுமானத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். வியாபரமாய் தொடங்கிய இந்த எழுத்துப் பயணத்தின் ஆரம்பத்தில் கொடுக்கல் வாங்கலாய் கருத்துரைகளும் திரட்டிகளின் வாக்குகளும் இருந்தன. ஒரு கட்டத்தில் அது அலுத்துப் போகவே விரும்பும் வலைப்பூக்களுக்கு மட்டும் செல்வதும் அவ்வப்போது தாக்கத்தின் அடிப்படையில் மட்டும் அவ்வப்போது கருத்துக்கள் இடுதலும் என்று தொடர்ந்து கொண்டிருக்கையில் அது எனக்கு வரும் மறு மொய்களை பாதித்து மட்டறுக்கும் என்று எனக்குத் தெரியும். கட்டுரைகளையும் கருத்துக்களையும் சமகால ஊடகங்களில் வாசித்து விட்டு அதே செய்தியை பகிர எப்போதும் எனது தளத்தில் நான் வருவதில்லை. ஒரு வேளை அவற்றால் பெரும் தாக்கங்கள் ஏற்பட்டு அதன் பொருட்டு ஏதேனும் கிறுக்கி இருப்பேன். வாசகர்கள் மொய்க்கும் ஒரு படைப்பாளி அல்ல நான். வசீகரிக்க என்னிடம் வார்த்தைகளை தவிர வேறு ஒன்றும் கிடையாது. வாசகனின் ரசனைக்கு தீனி போட எப்போதும் எனது கட்டுரைகளோ அல்லது கதைகள் என்று நான் கிறுக்கும் நடை முறைகளோ முயன்றிருக்காது. இந்த தேதி வரையில் ஏதோ கிறுக்க

நானும் தான்...!

கலைத்துப் போட்டு.... விளையாடி விளையாடி... களைத்தே போய்விட்டேன் உன் நினைவுகளோடு.., என்னைச் சுற்றியிருக்கும் எல்லா விழிகளும் வெறுமனே பார்வையைத் தான் என் மீது பதித்துச் செல்கின்றன காதலைப் பதிக்க உன் விழிகளுக்கு மட்டுமே தெரியும்..! என்னைத் தேடிக் கொண்டிருப்பாய் என்று தெரிந்தேதான் என் மெளனத்தைக் கூட மொழியாக்காமல் ஊமையாக்கி வைத்திருக்கிறேன்...! நிஜங்களில் விலகிப் போகையில் கனவுகள் பல கதை சொல்வதை நானும் ரசிக்கிறேன் உன்னை போலவே... ஏதோ ஒரு புத்தகம்...., நீல வானத்தின் வெள்ளை பொதிகளாய் பறக்கும் பஞ்சு மேகங்கள்..., உன் நினைவுகளில் நீந்திக் கொண்டு தனிமையில் நடக்கும் நடை, உனக்காக சேமித்து வைத்திருக்கும் காதலை கவிதையாக்க்கி வைத்திருக்கும் ஒரு நோட்டுப் புத்தகம்..., மெல்ல வீசும் காற்றில் அவ்வப் போது எழுதும் உன்பெயர்..., ஏதோ ஒரு மென்மையான இசை..., நிறைய நிறைய உன்... நினைவுகளின் இம்சை..., என்று... நானும் உன்னைப் போலத்தான் என்னை பற்றி நினைக்காமல் எப்போதும் உன்னை பற்றி... யோசித்துக் கொண்டும்... கனவுகளில் உன்னிடம் காதலை யாசித்துக் கொண்டும்... கரைத்துக்

தமிழா.....என் தமிழா!

ஒரு துள்ளலோட இருக்க வேணாமா இளைஞர்கள் கூட்டம்...? அது ஏன் அரசியல் கட்சிகளுக்குள்ள போயி தஞ்சம் அடைஞ்சுகிட்டு தன்னோட கட்டற்ற ஆற்றலை ஏதோ ஒரு விசயத்துக்குள்ள கட்டுப்படுத்தி வச்சுக்கணும்னு ஸ்ட்ரெய்ட்டா கேட்டுட்டே இதுக்கு மேல கண்டினியூ பண்றேன்...! எந்த அரசியல் கட்சியையும் சாரமால் ஒரு ஜனநாயக நாட்ல வாழ முடியாது தாங்க!ஒத்துக்குறேன். பட்.... ஏன் ஒரு கட்சியையும் ஏதோ ஒரு தலைவனையும் புடிச்சு கிட்டு எப்பவுமே தொங்கணும்னு கேக்குறேன்? சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி யாரு எப்போ நல்லது செய்றாங்களோ அப்போ அவுங்களுக்கு மாலைய போட்டுட்டு.... தப்பு பண்ணும் போது நீங்க செய்றது தப்புன்னு சொல்லக் கூட நம்மளால முடியாதா என்ன? நல்லவன் கெட்டவன்னு ஒருத்தரை முடிவு பண்ண எப்பவும் அளவு கோலா நமக்கு அவுங்களால கிடைக்கிற வசதிகள வச்சுக்குறது எப்படிங்க நியாயம் ஆகும்....? நம்ம தேவைகள் என்ன? சமுதாயத்தின் தேவைகள் என்னனு பகுத்துப் பாத்து நமது விருப்பு வெறுப்புகளை முடிவு பண்ற ஒரு சக்தி ஏன் நம்ம மக்களுக்கு வர்றது கிடையாதுன்னு நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு. ஏதோ ஒரு விசயம் நமக்கு மட்டும் நன்மையா இருக்கும், மிச்ச இருக்குற எல்லோரு

பாரதி....!

பாரதி திரைப்படத்தை மீண்டும் ஒரு முறை அதாவது இரண்டாவது தடவையாக இரண்டு நாளுக்கு முன்னால் பார்த்தேன். ஏற்கெனவே தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டரில் உட்கார்ந்து ஒரு 20 பேர்ல ஒரு ஆளா பத்து பதினோறு வருசம் ஆகிடுச்சுன்னு வச்சுக்கோங்களேன்...! மறுபடி பாத்துட்டு ஒரு மனசு பூரா ஒரு வலியோட ரொம்ப நேரம் யோசிச்சுட்டு இருந்தேன்.... பாரதி புத்திசாலியா? இல்லை ஏமாளியான்னு ஒரு கேள்வி ஓடிகிட்டே இருந்துச்சு... அதே நேரத்துல பாரதி போன்றவர்களை லெளகீகக் கட்டுக்களை கடந்த ஜீவ புருசர்கள் தானேன்னும் தோணுச்சு. பாரதி போன்றவர்கள், பிறக்கும் போதே கிளர்ந்தெழுந்த நிலையில் பிரபஞ்ச இருப்பின் மூலக்கூறுகளை அதிக விகிதாச்சாரத்தில் பெற்று மனித உடலுக்குள் அடைபட்டுப் போய் விடுகிறார்கள். மனோரீதியாக தனது பூர்வாங்க நிலையிலேயே லயித்துக் கிடக்கிறார்கள். லெளகீக சங்கடங்களை சரி செய்வது அவர்களுக்குப் பெரிய விடயம் இல்லை. கண நேரம் உற்றுப் பார்த்தால் அவர்களின் காலடியில் லெளகீகம் மண்டியிட்டுத்தான் கிடந்திருக்கும்.... ஆனால்.... ஒரு மகாகவியின் பார்வை தன் உடல் கடந்தது, தனது குடும்பம் கடந்தது, அவன் உலகத்தினை வார்த்தைகளால் சொடுக்குப் போட்டு திரும்பி பார

மெளன குரு....!

எதன் தாக்கமுமில்லை. எதனையும் எழுத்தாக்க வேண்டும் என்ற எண்ணமுமில்லை. பாய்ந்து சீறும் வரிப்புலியாய் எதையேனும் சாடத் தோன்றவில்லை. வெது வெதுப்பான சமைத்து வெகு நேரமாகி காலியாய் கிடக்கும் ஒரு அடுப்பில் சுருண்டுக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு சுகமாய் உறங்கும் ஒரு பூனையைப் போல அமிழ்ந்து கிடக்கிறேன். பகிர்தலின் அவசியம் என்ன என்று ஒரு கேள்வி வந்து இடையை இடையே ஏற்படும் ஏதோ ஒரு சப்தம் போல என் உறக்கத்தை தொந்திரவு படுத்த அவ்வப் போது கண்கள் திறந்து பார்த்து காது சிலிர்த்து சப்ததத்தையும் உள்வாங்கிக் கொண்டு மீண்டும் பகுதி பிரித்த இமைகளை மூடிக் கொண்டு என் உலகில் பயணிக்கிறேன். பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டா போய் விடும் என்று மனிதர்கள் கேலி பேசலாம். விழித்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருக்கும் மனிதனுக்கு உலகம் இருளத்தான் செய்யாது,. ஆனால் கண்களை மூடிக் கொள்ளும் பூனைக்கு உலகம் இருண்டு போவது உண்மைதான் அதன் லயிப்பு உண்மைதான். அதன் சுகம் உண்மைதான். விமர்சித்தலும், விவாதித்தலும் மனிதர்களின் தீராத இரண்டு வேட்கைகள். வாழ்க்கையின் சிக்கல்களை தீர்த்துக் கொள்வதிலும் தீர்ப்பதிலும் ஒரு மும்முரமான ஓட்ட

விலாசமில்லா முகவரிகள்....!

முகவரி I கடைசியாக நீ .. பகின்ற மொழியின் வீச்சில் முறிந்தே போனது .. நீ வளர்த்து விட்ட சிறகுகள்! வானம் தாண்டும் என் கனவுகள் எல்லாம்... ஏக்கங்களாய் மனதினின் விளிம்புகளில் நின்று... எட்டி எட்டிப் பார்க்கின்றன.. எப்போது நீ வருவாய் என? மீள உயறப்போகும் ஆசைகளில் இருந்து புறப்படும் உத்வேகங்களில்... சிறகசைத்து சிறகசைத்து... அறை முழுதும் நிரம்பிக் கிடக்கிறது உன் நியாபக இறகுகள்..! கேலியாய் பார்க்கும் வானத்தின் பார்வையை சந்திக்கும் திரணியற்று தெருமுனையில் மீண்டும்... விழி பதிக்கிறேன்... கடந்து சென்ற வழியினூடே மீள நீ வருவாயென்று முகவரி II ஏதோ கேட்டாய்.. ஏதோ சொன்னேன்... முடிவில்லா விவாதங்களை பிரிதலுக்கு நியாயம் கற்பிகும்.. ஒற்றை வார்த்தையில் நிரப்பி விலகித்தானே வந்து விட்டேன்.. இது நாள் வரையில் ஒரு கூலியைப் போல உன் நினைவுகளை சுமந்த நான்? எல்லாம் கழிந்த பின்.. என் ஏகாந்த காலத்தில் மெளனத்தில் நான் லயித்திருக்கும் பொழுதுகளில் இரைச்சலாய் தொடரும் உன் நினைவுகளை என்னதான் செய்வது...? தேவா. S

இல்லாமல் ஒரு காதல்....!

நீண்ட நாட்களுக்குப் பிறகு என் அலை பேசியில் வந்த எண்ணை எடுத்து பார்த்து வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு பரிச்சயமான எண் அது...? ஒரு நாளைக்கு எத்தனை தடவை அந்த எண்ணை என் விரல்கள் அழுத்தியிருக்கும்...! என் காதலை எல்லாம் ஒரு குறுஞ்செய்தியாய் எத்தனை முறை கொண்டு சேர்த்திருக்கும் இந்த எண் .... ஆமாம் அவள்தான் அழைக்கிறாள்.. தடம் புரண்ட வாழ்க்கையின் ஓட்டத்தில் அவள் எப்போது தொலைந்தாள். ஏன் தொலைந்தாள் என்றெல்லாம் கூறி உங்கள் நேரத்தை வீணாக்கப் போவதில்லை. கடைசியாய் அவளை நான் சந்தித்தது எக்மோர் ரயில்வே ஸ்டேசன் எதிர்புறம் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் என்று நினைக்கிறேன். நான் என் பணிக்காய் மும்பை செல்லும் வரை அவளுடன் சென்னையை சுற்றி வராத நாட்கள் பாவம் செய்தவை என்றுதான் சொல்ல வேண்டும். உறவினர் ஒருவரின் திருமணத்திற்காய் சொந்தங்களுடன் ஆட்டோவில் எக்மோரை கடக்கும் போது அவளைப் பார்த்தேன்.....! பார்த்த உற்சாகத்தில் உமா என்று கத்த தொண்டையிலிருந்து எட்டிப்பார்த்த வார்த்தைகள் சூழலை உணர்ந்து கொண்டு மீண்டும் குரவளையிலேயே சமாதியாகிப் போயின...அவளும் என்னைப் பார்த்து விட்டாள்...கையை உயர்த்தி ஹேய் என்று ஒரு உற்

சாட்சி...!

மெளனத்தின் ஆழத்தில் தேங்கிக் கிடக்கும் சிற்றோடையாய் சம கால நினைவுகள் புத்தியில் படுத்துக் கிடக்கின்றன. வார்த்தைகள், நேசங்கள், பாசங்கள், உறவுகள் என்று எல்லாவற்றையும் கிழித்துப் போட்டு எதார்த்தம் என்ற வார்த்தையை அனுபவமாக எதார்த்தம் என்றால் என்ன என்று சமகால வாழ்க்கை காட்ட பிரமித்துப் போய் நிற்கிறேன். ஆமாம்...! நான் ஒரு நீண்ட நெடிய பயணத்திற்கு சொந்தக்காரன். எதை எதையோ என் அடையாளமாகக் கொள்வதும், பிறகு ஒரு நாள் காலம் அவற்றை அழித்து விட்டு செல்வதும் வழமையாகிப் போய் விட்டது. பற்று அறுக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன், ஏகாந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருக்கிறேன். எதார்த்தத்தை தாண்டி என் மனம் எங்கோ எப்போதும் லயித்துக் கிடக்கும் அதே நேரத்தில் மிகப்பெரிய பயத்தையும் தவறாமல் கொண்டிருப்பதையும் கவனித்து இருக்கிறேன். வாழ்க்கையை வாழப் பிடிப்பது வேறு....வாழ்க்கையை விட்டு விலக முடியாமல், இதை நான் விட்டு விடக்கூடாது என்று எண்ணும் பிடிப்பு நிலையோடு இருப்பது வேறு. பல்வேறு சூழல்களில் எனக்கு இறக்கக் கூடாது என்ற ஒரு எண்ணம் திடமாக எழ, இறந்தால் என்ன ஆவோம்...? என்ற எண்ணம் அதைவிட வலுவாய் பயமுறுத்த,