Pages

Friday, November 25, 2011

பதிவர் திலகம் பப்பு.....ரிடர்ன்ஸ்!!!!


ரொம்ப நாளு ஆச்சு பப்பு கிட்ட பேசி, சரி பப்பு இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்கான்? ரொம்ப நாளாச்சு பப்புவ பாத்துன்னு சொல்லிட்டு பப்புவுக்கு போன் பண்ணி பப்பு இருக்காருங்களான்னு கேட்டா....யெஸ் பதிவர் திலகம் பப்பு ஹியர்னு ஒரு முரட்டுக் குரலு கேட்டுச்சு.....? என்னது பதிவர் திலகம் பப்புவா...? கொஞ்சம் ஷாக்காகி என்ன பப்பு சார் இப்போ எல்லாம் உங்கள புடிக்கவே முடியலை...பெரபலம் ஆனவுடனே கண்டிகிடுறதே இல்ல சார் நீங்கன்னு சொன்னேன்....

ஆமா யாரு நீங்க... ஓ....ஹோ அவரா ...? இப்ப என்ன வேணும் ஒங்களுக்கு என்ன பத்தி எழுதி மறுபடியும் நீங்க பப்ளிசிட்டி ஆகணுமா? நோ ப்ராப்ளம் இந்த பதிவர் திலகம் பப்புவ வச்சி மேல வந்தவங்க கோடி பேரு...அந்த கோடியில நீங்க ஒரு கோடியில இருந்துட்டு போங்க... ! முன்ன மாதிரி என்ன நீங்க நினைக்க முடியாதுன்றத மட்டும் மனசுல வச்சிக்கிடுங்க....இந்த பதிவுலகத்துல பதிவுகள எழுத வந்து பல்டி அடிச்சு போனவங்க கோடி பேரு.....ஆனா இந்த பப்புவோட ட்ராக்கே தனி....எப்டின்னு கேக்குறீங்களா.....?

ஏதாச்சும் எழுதணும்னா நான் சொந்தமா யோசிச்சு கிரியேட்டிவிட்டியோட எழுதணும்னு தப்பு தப்பா சில நல்ல ச்சே ச்ச்சே நொள்ளை பதிவர்ங்க எனக்கு தப்பா வழி காட்டீட்டாங்க....இன்னிக்கு தேதில ஆன்லைன் சப்ஸ்கிரிசன்ல இருக்குற அம்புட்டு சைட்லயும் துட்டு கொடுத்து நான் மெம்பரு.....ஹா..ஹா.. ப்ரீயா கிடைக்கிற தினத்தந்தியா இருக்கட்டும்..இல்ல தினமலரா இருக்கட்டும்..தமிழ் நாட்ல வர்ற அம்புட்டு வார, மாத இதழ் எல்லாம் அடிச்சு புடிச்சு படிச்சு...அதை கண்ட்ரோல்....எக்ஸ் கொடுத்து ச்சும்மா அப்டியே நவுத்திகிட்டு வந்து நம்ம ப்ளாக்க ஓப்பன் பண்ணி...கண்ட்ரோல் வி... கொடுத்துட்டா போச்சு....

நமீதாவின் இடுப்பளவு தெரியணுமான்னு கேட்டு ஒரு போஸ்ட் போட்டேன்...ங்கொய்யால எம்புட்டு ஹிட்ஸ் தெரியுமா? எம்புட்டுன்னு சொன்னா ஷாக் ஆகிடுவீங்க....10,000 பேரு ராத்திரியும் பகலும் கண்ண முழிச்சு நமீதா இடுப்பளவு எம்புட்டுனு தெரிஞ்சுக்க மெனக்கெட்டு நம்ம ப்ளாக்குக்கு வந்துகிட்டே இருந்தாங்க...

நான் நமீதா இடுப்பளவும் எம்புட்டுன்னு அந்த போஸ்டல் சொன்னேன்னு நினைக்கிறீங்க...நெவர்....பாஸ்....! கடைசியில வச்சேன் பாருங்க ஒரு டின்ச்... நமீதாவோட சரியான இடுப்பளவு வேணும்னா ங்கொய்யால நமீதாவுக்கு துணி தைக்கிற டைலர் கிட்ட கேளுங்க.. கரீக்ட்டா சொல்லுவாருன்னு போட்டேன் பாருங்க ஒரு போடு...300 கமெண்ட்....டெய்லி 40 இல்ல அம்பது பேரு ஆன்லைன்ல நம்ம சைட்குள்ளன்னு ஒரு ரகளையே பண்ணிட்டோம்ல...

இந்த முன்னூறு கமெண்ட் மேட்டர் எப்டின்னு கேக்குறீங்களா...? என்னா பாஸ் பச்ச மண்ணா இருக்கீங்க....இந்த பதிவர் திலகத்தை என்ன அம்புட்டு சாதாரணமாவா நினைக்கிறீங்க? எதுக்கு இருக்கு பேஸ்புக்....ஒரு மூணு நாளு க்ரூப்ப அதுல ஆரம்பிச்சு....இருக்குற எல்லா ப்ரண்ட்ஸ்களையும் அவுங்களை கேக்காமலேயே க்ரூப்ல சேத்து மூணு க்ரூப்லயும் மொத்தம் 1000 பேருக்கு (ஆயிரம் ப்ரண்ஸ் எப்டி வந்தாங்கான்னு கேக்குறீங்களா....?அதான் ராத்திரியும் பகலுமா கண்ணு முழிச்சு ப்ரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்துகிட்டே இருக்கோம்ல.....!!!!) மேல இழுத்து விட்டு....

அந்த ஆயிரம் பேர்ல பப்ளிகுட்டிக்கு என்ன மாதிரி டப்பா டான்ஸ் வைச்சாலும் ஆட ரெடியா இருக்குற ஒரு 300 பேர அப்டியே கேன்வாஸ் பண்ணி கையில வச்சிகிட்டு அண்டர் கிரவுண்டல ஒரு அக்ரீமெண்ட் போட்டு வச்சிடுவோம்...

எந்த திரட்டியில என்னோட பதிவ நான் இணைச்சாலும் சரி .... அவுங்க பதிவுகள இணைச்சாலும் சரி....ச்ச்ச்சும்மா சராமாரியா ஓட்டுகள போட்டு எப்பவுமே...நம்மள கீழ விடவே மாட்டாங்க...!!!!நாங்க என்ன எழுதுறோம்னு யாரும் கவலைப் படவேத் தேவையில்லை...ஏன்னா எங்க எடுக்குறோம்..எப்டி கோர்க்கிறோம்..எப்டி சேர்க்கிறோம்ன்றது எல்லாம் எங்க பிரச்சினை....ச்ச்சும்மா வந்தமா பாத்தமா ....பாரட்டினமான்னு போறது மட்டும் உங்க வேலை...

என்ன சார் நீங்களே சொல்லுங்க இந்த பப்பு பதிவர் திலகமா இல்லையா? கூட்டம், கூட்டமா சேந்து நாங்க நடந்துற இந்த சரவெடி திருவிழாவால நல்லா எழுதுற சில பல பேர்களை பொதுவான சனங்க வாசிக்காமா போயிடுறாங்கதான்...போகட்டும் அதைப் பத்தி எங்களுக்கு என்ன கவலை...எங்க வேலை பரபரப்பு கொடுக்குறது..பக்காவா எங்க பேர மெயின்டெய்ன் பண்ணிகிட்டு போய்கிட்டே இருக்கறது அம்புட்டுதான்...

எல்லோரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவுன்னா...நாங்க எதித்து எழுதுவோம்....! எல்லோரும் ஜெயலலிதாவ திட்டினா நாங்க சப்போர்ட் பண்ணி எழுதுவோம்...ச்ச்சே..ச்ச்சே சப்போர்ட்டா இருக்குற மாதிரி விசயங்கள...கண்ட்ரோல் எக்ஸ்.... அன்ட் கண்ட்ரோல்....வி பண்ணுவோம்....

இப்ப கூட பாருங்க டாம்999க்கு தமிழ் நாட்ல எதிர்ப்பு அதிகமா இருக்கா? இந்த நேரம் பாத்து முல்லைப் பெரியாறு அணைய உடைச்சு கட்டினாதான் நல்லதுன்னு அழிச்சாட்டியமா ஒரு போஸ்ட் போடுவோம்..எங்களுக்கு என்ன கவலைய் மண்ணாங்கட்டி எல்லாம்...முல்லைன்னாலும் என்னனு தெரியாது..., பெரியாருன்னு சொன்னாலும் தெரியாது, வைகை நதின்னா என்னனு கேப்போம்...?

பென் குவிக் அப்டீன்ற வெள்ளைகாரன் எப்டி இந்த அணைய கட்டினார்...? ஏன் கட்டினார்னு எல்லாம் சொல்ல மாட்டோம்....! வேணும்னு சொல்லாம இருக்கறது இல்ல... ஆனா எங்களுக்கு படிச்சு தெரிஞ்சுகிற அளவுக்கு பொறுமை இல்லை பாஸ்...எங்க நோக்கம் எங்க பேரு வெளியில வரணும்....

இப்ப கூட இந்த பப்புவ ஏதாச்சும் சொல்லிட்டு எவனும் எங்கிட்டும் எகிறிட முடியாது....பப்பு இப்ப ஒரு குட்டி பாட்சா....! மொத்ததுல எங்கள மாதிரி ஒரு ஹைடெக் க்ரூப் யாரும் இப்ப இல்லனு நீங்க தைரியமா எல்லோருக்கும் சொல்லலாம்....! நாங்க டெக்குனிக்களா செம எக்ஸ்பர்ட்டாக்கும்....நெட்வொர்க்கிங் கிங்கு....ஆன்லைன் புலி...ஹி ஹி..நான் என்ன படிச்சு இருக்கேன்னு கேக்குறீங்களா...அது எல்லாம் எதுக்குங்க...ச்ச்ச்சுமா குரைச்சுட்டே இருந்தாதான் பயம் இருக்கும்...ஆமா..!

இன்னொரு முக்கியமான விசயத்தையும் சொல்லிடுறேன்..சமுதாயத்து மேல எங்களுக்கு அக்கறை இருக்கோ இல்லையோ....எங்க பக்கத்து வீட்டுகாரன் கிட்ட நாங்க ஸ்னேகமா இருக்கோமோ இல்லையோ....ஆனா நாங்க ரொம சமுதாய அக்கறைக்காக போர்க்குரல் கொடுத்து கிட்டே இருப்போம்.

எங்க அம்மா கடைக்குப் போயி ஒரு கிலோ வெல்லம் வாங்கிட்டு வான்னு சொன்னா நாங்க போக மாட்டோம்...! வீட்டுக்கு ஏதாச்சும் வேலை செய்யணும்....அப்புறம் பக்கத்து வீட்டு தாத்தாவுக்கு ஒடம்பு சரியில்லனு இருமல் மருந்து வாங்கியாந்து கொடுக்கணும்னு யாரச்சும் உதவி கேட்டா.. வரும் பாருங்க எங்களுக்கு கோவம்...பப்பு என்ன சொம்பா...........பப்பு சும்ம்மாவா இருக்கான் எம்புட்டு பிஸி....?

முடியாதுன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டு...உதவின்னா என்ன மனித நேயம்னா என்னனு எங்காயாச்சும் அடிச்சு பிடிச்சு படிச்சுபுட்டு அதை உல்டா பண்ணி ஒரு போஸ்டா போட்டுடுவோம்.....ஆனா வூட்டுக்குள்ள இருக்குற ஒரு சொம்ப நவுத்தி அந்தப் பக்கம் வைக்க மாட்டோம்.....

பொரட்சி பண்ணனும்...பொரட்சி பண்ணம்னு எழுதிகிட்டே இருப்போம்....ஆனா தெருமுனையில இருக்குற குப்பைத் தொட்டியில போயி குப்பைய கொட்டுங்கன்னு எங்க தெருவுல இருக்க ஆளுங்க கிட்ட கூட சொல்ல மாட்டோம்....ஏன்னா பொரட்சின்றது ஒன்லி ப்ளாக்ஸ்லயும், பேஸ்புக் ட்விட்டர் இந்த மாதிரி சமூக வலைத்தளங்கள்ளயும் மட்டும் பண்றதுன்னு சொன்னா ங்கொய்யால ஒருத்தரும் புரிஞ்சுக்கறதே இல்லை....

போனவாரம் ஒருத்தன் நீ தெருவுல இறங்கி வேலை செஞ்சு இருக்கியா...இல்ல யாருக்கும் உதவி பண்ணி இருக்கியான்னு கேட்டுப்புட்டானேன்னு சொல்லி பக்கத்து வீட்டு பாலு பையனோட லெட் பேனாவுக்கு ரீபிள நம்ம நாடார் கடையில கடனா வாங்கி கொடுத்தேன்....இந்த அரும் பெரும் செயல மூணு பார்ட்டா போட்டேன்...ஒலக தமிழர்கள்ள ஆர்வமா இருக்கவங்க எல்லாம் பாத்துட்டு எம்புட்டு பாராட்டுத் தெரியுமா?

பப்பு மூச்சு விடாமல் பேசிக் கொண்டே இருந்தான்.....கொஞ்சம் கேப் விட்டு மறுக்கா ஆரம்பிச்சான்...

நீங்க ஒரு பிளாக் ஓப்பன் பண்ணிக்கோங்க...நியூஸ் பேப்பர் எல்லாம் படிங்க படிச்சு முடிச்சு மடிச்சு சிஸ்டம் பக்கத்துல வச்சுகிட்டு அதுல படிச்ச விசயங்கள கொஞ்சம் உல்டா பண்ணி எழுதி பரபரப்பா ஒரு தலைப்ப வச்சு போஸ் போடுங்க....நம்ம க்ரூப்ல சேந்துக் கோங்க...உங்களையும் திலகம் ஆக்கி விடுறேன்...ஆனா ஒரு கண்டிசன்...நம்ம புள்ளைங்க சொல்ற எல்லா எடத்துலயும் கைய கட்டிகிட்டு ஓட்டும், கமெண்டும் போடணும் என்ன சரியா?

அம்புட்டுதான்...இந்த டெக்குனிக்கு எல்லாம் தெரியாம இன்னமும் கவிதை எழுதுறேன்...கதை எழுதுறேன்....மெய்யாலுமே விழிப்புணர்வா கட்டுரை எழுதுறேன்.....படைக்கிறேன் உடைக்கிறேன்ன்னு சொல்லிகிட்டு ஒவ்வொரு தபாவும் மூளைய கசக்கி கிட்டு சில பேரு எழுதவும் செய்றாங்க...என்ன பிரயோசனம்....அவுங்க கவித்துவமாவும் காவியத்துவமாவும் எழுதுனா கூட்டம் கூடுமா என்ன...? ரோசிங்க சார் ரோசிங்க...

காரசாரமா, பைட்டு, திட்டு, கவர்ச்சின்னு எழுதும் போதும் சினிமா நடிகர்கள பத்தி சொல்லும் போதும் மொத்ததுல அடுத்தவன் சேதிய பேசுற எடத்துல கூட்டம் அதிகமா கூடுது...அது தப்புன்னு நாங்க எதுக்கு சொல்லணும்...நாங்களும் அதையே சொல்லி பேசி எங்க மார்க்கெட்ட ஏத்திக்கிறோம்...

ஆபிசுல நெதமும் வேலைய முழுசா செய்யாமா திட்டு வாங்கிகிட்டு....எப்ப வேலை போகுமோன்னு பயந்து கிட்டு...சொந்த வேலை எதுவும் உருப்படியா செய்யாம நாங்க எம்புட்டு இன்னல்களுக்கு நடுவுல போராடுறோம்னு யாருக்கும் புரியாது சார்..அப்டி எல்லாம் கஷ்டப்பட்டதால..தான் இந்த பப்பு இன்னிக்கு ஒரு பதிவர் திலகமா சுடர் விடுறான்...

பப்பு நெவர் கோ சார்........பப்பு எப்பவும் பப்ளிக் பிகருதான்....! நீங்க வேணாம் நம்ம ட்ராக்கை எல்லாம் ரோச்சு சொல்லுங்க...ஒங்க பேர்லயும் ஒரு கொடிய ஏத்திடுவோம்.....

பப்பு பேசி முடிக்கும் முன்னதாகவே போனை நழுவ விட்ட படி நான் மயக்கமாகி கீழே விழுந்தே விட்டேன்...!


தேவா. S


11 comments:

சௌந்தர் said...

அப்போ பப்புக்கு நமீதா இடுப்பு சைஸ் என்னனு தெரியாதா..??

ஆமா இந்த பப்பு யாரு ஒரே பப்பு கூட்டமா இருக்கே...

சௌந்தர் said...

எல்லாம் தெரியாம இன்னமும் கவிதை எழுதுறேன்...கதை எழுதுறேன்....மெய்யாலுமே விழிப்புணர்வா கட்டுரை எழுதுறேன்.....படைக்கிறேன் உடைக்கிறேன்ன்னு சொல்லிகிட்டு ஒவ்வொரு தபாவும் மூளைய கசக்கி கிட்டு சில பேரு எழுதவும் செய்றாங்க...என்ன பிரயோசனம்....அவுங்க கவித்துவமாவும் காவியத்துவமாவும் எழுதுனா கூட்டம் கூடுமா என்ன...? ரோசிங்க சார் ரோசிங்க...///

கவிதை கதைநு எழுதினா ஒன்னும் வேலைக்கு ஆகாதா அவ்வ்வ்வ்வ்வ்வ் அது எனக்கு தெரியாதே..!!

வெளங்காதவன் said...

:-)

Prabu Krishna said...

ஹா ஹா ஹா இது உலகமகா உள்குத்து போல.

வைகை said...

அது என்ன ரிட்டன்ஸ்? அவங்க எல்லாம் எப்பவுமே இங்கதான் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் :-)

சந்திரகௌரி said...

என்ன பாருங்க போட்டுத் தாக்கிறாங்க. அளவானவங்க தொப்பியப் போட்டுக்க வேண்டியதுதான். இடையில இடையில சிரிப்பாகவும் இருந்தது.மிக்க நன்றி

dheva said...

செளந்தர் @ பப்பு ஒரு தனி ஆளு கிடையாது தம்பி...அவன் ஒரு கூட்டம்..!!!!

dheva said...

பிரபு @ உள்குத்தா....?????? ச்ச்சே ச்ச்சே அப்டி எல்லாம் இல்ல தம்பி....இது ஸ்ட்ரெய்ட் டு கட்...!

dheva said...

வைகை...@ பப்புவ ரொம்ப நாள் கழிச்சு பாக்குறோமா அதான் மீண்டும் பப்பு...! ஆனா பப்பு அங்கேயேதான் இருக்காப்ல...!

dheva said...

சந்திர கெளரி @ நன்றிங்க!

rufina rajkumar said...

ENJOYED