Pages

Sunday, November 7, 2010

முரட்டுக் காளை....!தலைவரை பத்தி எழுத சொல்லிட்டு தம்பி அருண் பாட்டுக்கு போய்ட்டான்....! நாம ஏற்கனவே ரஜினினு சொன்னாலே பத்திகிட்டு எரிவோம்....இதுல பெட்ரோல வேற ஊத்துன எப்டி? ....சும்மா பத்திகிட்டு எரியும்ல..எரிமலை மாதிரி..ஹா...ஹா..ஹா...!

தலிவர் படத்த லிஸ்ட் எல்லாம் பண்ண முடியாது.. என்ன பொறுத்த வரைக்கும்....எல்லாமே... நம்பர் 1 தான்...!!! இது எப்டி இருக்கு....ஸ்ட்ரெய்ட்டா மேட்ருக்குள்ள போவமா....இப்டிச் சூடு.....

முரட்டுக்காளை (1980)

படம் போட்ட கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன்....! ஒரு காளை மாடு முரட்டுத்தனமா நிக்கும் போது.. அத அடக்க சிங்கம் மாதிரி நம்ம சூப்பர் ஸ்டார்.....! என்னோட கவலை எல்லாம் தலிவருக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுன்னுதான்....அது எப்டி ஆகும் தலைவர் சும்மா பிரிச்சு மேஞ்சு காளைய அடக்குற வரைக்கும் பக்கத்து சீட்ல இருந்த ஆள டேமேஜ் ஆக்கிட்டேன்...ஜு ஜு பி....!எப்பவுமே தலிவர் படம்னா...அப்டிதான்...இஹ் ஹா...ஹா ஹா..! அதுக்கு அப்புறம் வர்ற பாட்டு...நான் சொல்ல தேவயில்ல..உங்க ஹிட் இல்ல எங்க ஹிட் இல்ல.. உலக ஹிட்....

தமிழ் சினிமாவுக்கே பஞ்சர் பாத்த படம்.... ! எங்க ஊர்..(எந்த ஊர்னு கேட்டா ரூட்டு மாறிடும்...ட்ராக்க புடிங்க....) தியேட்டர்லயே.. 200 நாள் ஒடினிச்சு.....தலிவர் எல்லாம் வந்ததா சொல்லிக்கிட்டாங்க.. ! ஏன் நான் போகலியான்னு கேக்குறீங்களா.அப்போ எனக்கு 4 வயசோ இல்ல 5 வயசோ தெரில...இது எப்டி இருக்கு...? ஹா.. ஹா..ஹா..!

முரட்டுகாளை..யாராலும் இதுவரையும் அடக்க முடியாத காளை...!

பாயும் புலி (1983)


ஃபர்ஸ்ட் சீன்ல தலைவர் அடி வாங்கி கார் ஆக்ஸிடண்ட்ல தூக்கி வீசும்.....அழுது கிட்டே....நான் அப்பா கைய பிடிச்சு கெஞ்சினேன்.. என்ன வீட்டுக்கு கூட்டிடு போங்க... எனக்கு படம் பிடிக்கலேன்னு..! . கொஞ்சம் இருடான்னு கெஞ்சி உக்கார சொல்லி.. கஷ்டப்பட்டு உக்காந்து....அதுக்கபுறம் பாலாஜி சார் கிட்ட சண்டை கத்துகிட்டு.....அவரு வக்கிற பரீட்சை எல்லாம் ஒவ்வொரு கட்டமா தாண்டும் போது........நெஞ்சுகுள்ள ஒரே திக்.. திக்..திக்........மறுபடியும் குதிச்ச குதில தியேட்டர் சீட் நெட் கழண்டு விழாததுதான் கொற....

தலைவர் பழிக்கு பழி வாங்கும் இடம் எல்லாம்....சும்மா ஜிவ்வுனு மேலே தூக்கிட்டு போகும்....! .மன்ணுல கைய குத்துற சீன பாத்துட்டு வீட்டுக்கு வந்தும் ஹூ.. ஹான்னு சத்தம் போட்டுஅலும்பு பண்ணினத நினைச்சா... ஹா...ஹா..ஹா.

பாயும் புலி... தலைவர்....கொளுத்து கொளுத்துனு கொளுத்தி எரிஞ்ச படம்.....!

புவனா ஒரு கேள்விக் குறி (1977)

அண்ணே.. நாகராஜண்ணே.... நமக்கு எல்லாம் இது ஒத்து வராதண்ணே.. நீங்க போங்க..போங்கனு சொல்லிட்டு சம்பத் அப்டீன்ற ஒரு கேரக்டர் ஆகவே வாழ்ந்து இருப்பாரு தலைவர். ஒரு கிளியர் கேரக்டர்.... தன்னுடைய காதலி இறந்து போயிருக்கும் சோகத்தை தாடிக்குள் மறைத்து வைத்துக் கொண்டு... இருப்பதாகட்டும், நண்பன் தவறு செய்யும் போது பதறும் இடமாகட்டும்...தானே ஒரு தனிக்கட்டை தன்னால எந்த பாதிப்பும் வராம சுமித்ராவ காப்பாத்த முடியும்னு உறுதி கொடுக்குற இடம் னு எல்லாம்..... பின்னி எடுத்து இருப்பார்….

உங்களுக்கு எல்லாம் ஒண்ணு சொல்றேன் என்ன தெரியுமா? ரஜினி வெறும் மசா லா படம் மட்டும் கொடுத்ததால சூப்பர் ஸ்டார் இல்லீங்க..... எல்லா மசாலவுக்கும் முன்னால அவர் நடிச்ச படம் எல்லாமே காவியம்...

புவன ஒரு கேள்விக் குறி.....ரஜினிக்கு எப்டியெல்லாம் நடிக்கத் தெரியும்னு டீட்டெய்ல் நோட்ஸ் கொடுத்த படம்....!

ஆறிலிருந்து 60 வரை (1979)

சராசரியா இந்த படம் பாத்துட்டு கண் கலங்காதவங்க யாரும் இருக்க முடியாது. பொறுமையான ஒரு ஏழை ஏமாறும் அண்ணண் எப்டி இருப்பாரு...? அவர் வாழ்க்கைல வந்து போன காதல் சுவடுகள் வலி.. எல்லாத்தையும் ஒரு உணர்வா உள்வாங்கி பிழிஞ்சு எடுத்து....கொடுத்து இருப்பார்.....!

தலைவரோட காதல் காட்சிகளும் சரி, ஒரு குடும்பத்தலைவனா வாங்கிக் கொள்ளும் வலிகளும் சரி...எல்லாமே க்ளாஸ்தான்....!

தலைவர்னா ஸ்பீடுதான்... லேட்டஸ்டா கூட ஒரு ஜோக் படிச்சேன்....

சென்னைல தலைவர ஓவர் ஸ்பீடுனு சொல்லி அரஸ்ட் பண்ணிட்டாங்களாம்....போலிஸ்.....! ஆனா ஆக்சுவலா தலைவர் வாக்கிங்தான் போயிருக்கார்.....ஹா..ஹா...ஹா...! அப்டி ஒரு ஸ்பீட் இருக்குற பவர் புல் மேன்... ஒரு தென்றலா வாழ்ந்து காமிச்சு இருப்பார்.. இந்தப் படத்துல..!

ஆறிலிருந்து அறுபது வரை....அமைதியான ஓடம்....!

பில்லா (1980)


ஒரு டான்...ஒரு பெரியா கடத்தல்காரன் எப்டி இருப்பாங்க? எவ்ளோ திமிரு இருக்கும்? எவ்ளோ தில்லு இருக்கும்... எப்டி சீரியஸா இருப்பாங்க... அவுங்க காதல் எப்டி இருக்கும்? ஹா.. ஹா.. பட்டாசு கிளப்பி இருப்பாரு தலைவர்......

அதுக்கு நேர் மாற ஒரு கேரக்டர் ராஜப்பா... சும்மா வெத்தலை போட்டு எச்சி துப்புறதுல கூட ஒரு ஸ்டைலுன்னு அசத்திருப்பார்...! பில்லாவ சூட் பண்ணி பின்னால ராஜாப்பா பில்லாவா மாறி.. .செம ஸ்பீட் ட்ராக்ல போகும் படம்...அப்ப பட்டி தொட்டி எல்லாம் வசூல அள்ளி குவிச்சது....சாதாரணமா எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம்....

ஆமா பாஸ்.. வெத்தலைய போட்டேன்டி பாட்டு.. தெருக்கு தெரு பாடிச்சு....! நாம எல்லாம் சட்டை பட்டன தொறந்து விட்டுகிட்டு.... குட்டி பில்லாவா திரிஞ்ச காலம் அது....

பில்லா .....புல்லட்....!

நெற்றிக் கண் (1981)


ஹீரோ ஒருத்தர்.. அவரோட அப்பா சபலம் நிறைஞ்ச ஒரு தொழிலதிபர்.... தீராத விளையாட்டுப் பிள்ளை.....! நவரசத்தையும் கொட்டி சிருங்காரம்ங்கிற ஒரு பாவத்த அப்டியே தட்ல வச்சி ஜூஸ் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுக்குற மாதிரி அலேக்கா அலம்பல .....செஞ்சு இருப்பரு...! பொண்ணுக கிட்ட வழியிறது ஒரு கேரக்டர்.. இதுல தலைவர் வழிய மாட்டர்....ரொமாண்டிக்கா மூவ் பண்ணுவார்... அது.. வழிசலுக்கும் கொஞ்சம் மேல....நார்மலுக்கு கொஞ்சம் கீழ....

வெக்கப்படுறது எப்டின்னு தலைவர பாத்துதான் பொண்ணுகளே கத்துக்கணும்...! யாரயும் விட்டு வைக்காத ஒரு எப்பவுமே டீன் ஏஜ் மைன்ட் செட்ல இருக்குற ஒரு ம னுசன கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி இருப்பார்.....! இந்த பக்கம் மகன் ரஜினி.. மைல்ட் அன்ட் ரொமண்டிக் ஹீரோ..... ! பாட்டு எல்லாமே சூப்பர்ப்.. அதுவும் ராமனின் மோகனம்.... பாட்டு... இன்னிக்கு வரைக்கும் ... எப்போ கேட்டாலும் ஒரு நிமிசம் உங்கள உள்ள இழுத்துப் போட்டுடும்.....!

நெற்றிக் கண்... நெருப்பு!

எங்கேயோ கேட்ட குரல் (1982)


போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா, ரங்கா இப்டி ஆக்சன் மசால படமா கொடுத்துகிட்டு இருந்த சூப்பர் ஸ்டார் இமேஜ் பாக்காம நடிச்ச படம் இது. தன்னுடைய மனைவி பாதை தவறிப் போய்ட்டான்றத எதார்த்தமா உள்வாங்கி அதுல இருக்குற நிதர்சனத்த விளங்கிக்கிட்டு அவருக்குள் இருக்கிற காதல காதலா உள்ளதானே தேக்கி வச்சுகிட்டு ஒரு நிதானமான நடிப்புல கலக்கி இருப்பார்.

ரஜினின்ற ஒரு மிகப்பெரிய நடிகனை எல்லோரும் நடிக்கத் தெரியாதவர்னு முத்திரை குத்தி ஒரு வட்டத்துக்குள்ள தள்ள முயன்ற போது.. அதை உடைச்சுகிட்டு வெளில வந்து ஒரு சிங்கம் மாதிரி இந்த படத்துல வாழ்ந்து காட்டியிருப்பார்......!

எங்கேயோ கேட்ட குரல்.........எப்பவுமே கேட்கும் குரல்!

நல்லவனுக்கு நல்லவன் (1984)


வச்சிக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள....என்று ஒரு செம் பீட் பாட்டோட தொடங்குற படம்.. ஒரு ரெளடியா இருக்குற தலைவர இடையில் வர்ற ராதிகா திருத்துறதும் அதுக்கு அப்புறம் கதை சூடு பிடிச்சு தலைவர் தொழிலதிபர் ஆகுற வரைக்கும் கதை போய்கிட்டே இருக்கும்....

என்ன ஸ்பெசல்னா...தலைவர் இளம் வயசுல ரெளடியா இருப்பதில் இருந்து ஒரு பொறுப்பான கணவன, தொழிலதிபரா, அப்புறம் ஒரு அப்பாவான்னு எல்லா இடத்துலயும் சிக்ஸர் அடிச்சு இருப்பாரு....கூடவே இருக்கும் ராதிகா கூட வாழ்ந்து இருப்பாங்க....!

ஏன் இவர் சூப்பர் ஸ்டாரா இன்னும் மின்றாருன்னா.... எல்லாவிதமான பரிமாணங்களும் நடிப்பில காட்றதலதான்..

நல்லவனுக்கு நல்லவன்....மைல்கல்!

எஜமான் (1993)


எல்லா நடிகரும் பஞ்சாத்து தலைவர்கள் மாதிரி வேஷ்டி சட்டை கட்டி நடிச்ச போது அடா அடா.. நம்ம தலைவர் இப்டி நடிச்சு ரொம்ப நாளாச்சேன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்.....! அப்டிப்பட்ட நேரத்தில என் வயித்துல பால வார்த்த மாதிரி வந்த படம்தான் எஜமான்.

வானவராயர்.........பேர சொல்லும் போதே ஒரு திமிரு வந்து உக்காந்துக்குது மனசுல....! தலைவர் பில்டப்ஸ் எல்லாம் இல்லாம பஞ்ச் டயலாக்ஸ் கம்மிய ஒரு ஆன ஸ்டைல் நிறைய இருக்கும் ஒரு எதார்த்தமான படம் அது. துண்டா கொடுக்கிறீங்க துண்டு... கொய்யாலா.. பாருங்க.. அத என்ன பண்றேன்னு.. அதுல ஒரு ஸ்டைல வச்சு சும்மா சுத்தி தோள்ள போடுற ஸ்டைல் இருக்கே....சான்ஸே இல்ல...! செய்றது சாதரணம் ஆன செய்யணும்னு தோணுறது இருக்குல்ல அதன் சூப்பர் ஸ்டார்.....!

நகைச்சுவை, பைட், அப்புறம் சோகம்னு, காதல்னு சும்மா பிரிச்சு மேஞ்சு இருப்பாரு தலைவர்.

எஜமான்...........ஆளுமை!


படையப்பா (1999)

படையப்பாவில் தலைவர ரசிக்க நிறைய காரணங்கள் இருக்கு.. ஆரம்பம் முதல் முடியுற வரைக்கும் படம் முழுதும் ஒரு நெருப்பு இருந்துகிட்டே இருக்கும்..டயலாக் டெலிவரியும் சரி.. வசனத்தில் இருக்கும் கூர்மையும் பாக்குற ரசிகன கொஞ்சம் கூட சோர்வடைய வைக்காது.

ஆக்சன் கூடவே கதை, ஸ்டைல் மியூசிக்னு மல்டி வே ல ஸ்கோர் பண்ணின படம். ரம்யா கிருஷ்ண் இதுல சிக்ஸர் அடிச்சு இருப்பாங்க.. இன்னும் சொல்லப் போனால் ரம்யாகிருஷ்ணன் இந்த படத்துக்கு அப்புறம்தான்..ரொம்ப பாப்புலர்.....

" அழகும் ஸ்டைலும் கூடவே பொறந்தது.. அது எப்பவுமே விட்டுப்போகாது...." இப்படி எத்தனையோ டயலாக்ஸ் சொல்லலாம்.. நடிகர் திலகமும் இதில் நடித்திருப்பது சிறப்பு.....!

படையப்பா.....பயர்.....!

இதிலிருந்து விடுபட்ட படங்கள் நிறைய.. என்ன கேட்டா எல்லா ரஜினி படமும் சூப்பரா பிடிக்கும்னு சொல்லிட்டு போய்ட்டே இருப்பேன். இருந்தாலும் ஒரு தொகுப்புனு பாத்தா இது எல்லாம் பிடிக்கும்... அவ்ளோதான்..!

அன்னில இருந்த இன்னிக்கு வரைக்கும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத முரட்டுக் காளையாக ரஜினி இருப்பதற்கு காரணம்....தலைக்கனம் இல்லாம தான் வேலைய தான் பாக்குறதுதான்....

அப்புறம் ஒரு விசயம்.. கண்டிப்பா இத தொடர 4 பேர கூப்பிட சொல்லிட்டான் தம்பி அருண்...ம்ம்ம் சரி.. நான் யார கூப்பிடுவேன்..........சரி..... தம்பி செளந்தர்,ஜீவன் பென்னி,கோமாளி செல்வா அப்புறம் டேஞ்சர் டெரர் பாண்டியன்.....அருணுக்காகவும் தலைவருக்காவும்.. கொஞ்சம் டைம் கொடுங்க மக்கா....!

" நெஞ்சுக்குள் அச்சமில்லை....
யாருக்கும் பயமுமில்லை.....
வாராதோ வெற்றி என்னிடம்.....
விளையாடுங்க உடல் பலமாகுங்க...
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்
ஆனந்தம் காணலாம் எந்நாளுமே....!"


அப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா....!


தேவா. S

68 comments:

ஜில்தண்ணி said...

kaaala kaala...murattu kaaaala

'பரிவை' சே.குமார் said...

rajiniyin nalla padngalai varisaip paduththi irukkirerkal enthiran puyal thakkamal. atharkku vazhththukkal.

ஜில்தண்ணி said...

பாயும் புலி....என்னா படம்...தலிவர் சான்சே இல்ல

அதுவும் ஜெய்ஷங்கர் சாருடம் போடும் கிளைமாக்சு சண்டை திக் திக்...

Chitra said...

ஏன் இவர் சூப்பர் ஸ்டாரா இன்னும் மின்றாருன்னா.... எல்லாவிதமான பரிமாணங்களும் நடிப்பில காட்றதலதான்..


...... உய்...... உய்....உய்...... ஓ!!!!
கலக்கல்!!! தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி இங்கேயும் தொடர்ந்து இருக்கிறது. அசத்தல்!

அருண் பிரசாத் said...

கலக்கல் தொகுப்பு! ஒவ்வொரு படத்தை பத்தியும் ஒரு தீவிர ரசிகனின் உணர்வை சொல்லி இருக்கீங்க....


அண்ணனுக்கு ஜே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

புல்லா படிச்சிட்டு வர்ரேன்!

செல்வா said...

படையப்பாவுக்கு முதல் இடமா ..? எனக்கும் படையப்பா ரொம்ப பிடிக்கும் ..
கூடவே பாட்சாவும் பிடிக்கும் ..!!

Anonymous said...

செம தொகுப்பு அண்ணே..

// கோமாளி செல்வா //

ரைட்டு.. ஒரு கமல் ரசிகனின் பார்வையில் ரஜினி படங்கள்.
தேவா அண்ணா இது தான் நீங்க! சூப்பர் :)
செல்வா உன் பதிவுக்காக வெய்டிங்... :)

எஸ்.கே said...

நல்ல தொகுப்பு!
ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் என் ஃபேவரிட்!

வெங்கட் நாகராஜ் said...

இந்த பட வரிசையிலேயே என்னுடைய முதல் விருப்பம் - எங்கேயோ கேட்ட குரல் - “பட்டு வண்ணச் சேலைக்காரி” பாட்டுக்காகவே இரண்டு மூன்று முறை படம் பார்த்திருக்கிறேன்.. நல்ல பகிர்வு. நன்றி.

கருடன் said...

முஸ்கி : என்னை தொடர் பதிவுக்கு அழைத்த தேவா அவர்களுக்கு நன்றி!!

பதிவு : தலைவனை பற்றி இன்னைக்கு புல்லா பேசலாம். எனக்கு பிடித்த படங்கள் வரிசை இங்கு படிக்கவும். இதை தொடர்ந்து எழுத தமிழ முதல்வர் கலைஞர், நவரச நாயகன் கமல், டாக்டர் விஜய் ஆகியோரை அழைக்கிறேன்.

டிஸ்கி : ப்ளாக்ல பதிவு எழுதரது எல்லாம் ஓல்டு ஸ்டைல் மாப்ஸ்.

அன்பரசன் said...

அருமையான தொகுப்பு.

dheva said...

தம்பி அருண்.. நீ டென்சன் ஆகாத... பேசாம அந்த அரிவாள எடு... டெரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யோவ் மாப்ஸ் உன் ரத்தம் பாக்காம விடமாட்டேன்.....!

செல்வா said...

// இதை தொடர்ந்து எழுத தமிழ முதல்வர் கலைஞர், நவரச நாயகன் கமல், டாக்டர் விஜய் ஆகியோரை அழைக்கிறேன். //

இதே மாதிரி நாமளும் எழுதலாமே ., நம்மல கூட தொடர் பதிவு எழுத சொல்லுறாங்களே ..? என்ன பண்ணுறது ..? இங்கே எழுதிடுவோமா ..?

dheva said...

மாப்ஸ் டெரர்.. டெரர் தனமாக எஸ்கேப் ஆகிவிட்டதால்...

இராமநாதபுரம் தங்கம்.. என் பங்காளி பன்னிக்குட்டி ராம்சாமி .. தொடர்பதிவு எழுதுவாருங்கோ......!

dheva said...

செல்வா.. @ தம்பி உணர்ச்சி வசப்படாத...

பயவுள்ள எஸ்கேப் ஆக இம்ம்புட்டு பில்டப்பு...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) said...
முஸ்கி : என்னை தொடர் பதிவுக்கு அழைத்த தேவா அவர்களுக்கு நன்றி!!

பதிவு : தலைவனை பற்றி இன்னைக்கு புல்லா பேசலாம். எனக்கு பிடித்த படங்கள் வரிசை இங்கு படிக்கவும். இதை தொடர்ந்து எழுத தமிழ முதல்வர் கலைஞர், நவரச நாயகன் கமல், டாக்டர் விஜய் ஆகியோரை அழைக்கிறேன்.

டிஸ்கி : ப்ளாக்ல பதிவு எழுதரது எல்லாம் ஓல்டு ஸ்டைல் மாப்ஸ். ///

அது எப்பிடியா என் பர்மிசன் இல்லாம டாகுடர நீ அழைக்கலாம்? படுவா தொலச்சிபுடுவேன்!

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
முஸ்கி : என்னை தொடர் பதிவுக்கு அழைத்த தேவா அவர்களுக்கு நன்றி!!

பதிவு : தலைவனை பற்றி இன்னைக்கு புல்லா பேசலாம். எனக்கு பிடித்த படங்கள் வரிசை இங்கு படிக்கவும். இதை தொடர்ந்து எழுத தமிழ முதல்வர் கலைஞர், நவரச நாயகன் கமல், டாக்டர் விஜய் ஆகியோரை அழைக்கிறேன்.

டிஸ்கி : ப்ளாக்ல பதிவு எழுதரது எல்லாம் ஓல்டு ஸ்டைல் மாப்ஸ்////

ரீப்பிட்டு....

கருடன் said...

@தேவா

//மாப்ஸ் டெரர்.. டெரர் தனமாக எஸ்கேப் ஆகிவிட்டதால்...//

அப்பொ நான் எழுதியது பதிவு இல்லையா? என் பதிவில் என்ன குற்றம் கண்டிர்?? உண்மைலே இதான் தொடர் பதிவு.. உன் பதிவ தொடர்ந்து வருது பார் மாப்ஸ்... :)))

செல்வா said...

//பயவுள்ள எஸ்கேப் ஆக இம்ம்புட்டு பில்டப்பு...!//

ஹா ஹா ., நான் எழுதிடுவேன் , ஆனா நீங்க அழுவீங்க .. எனக்கு நினைத்தாலே இனிக்கும் படம் பிடிக்கும் ., அப்புறம் அப்புறம் ..

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

புல்லா படிச்சிட்டு வர்ரேன்!
////

வரும்போது நிதானமா வா

dheva said...

//அது எப்பிடியா என் பர்மிசன் இல்லாம டாகுடர நீ அழைக்கலாம்? படுவா தொலச்சிபுடுவேன்!
//
ROFL

Ramesh said...

செம அசத்தல் தொகுப்பு.. அதனை நீங்கள் விவரித்திருந்த விதம் மிக அருமை..

மங்குனி அமைச்சர் said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

பாயும் புலி....என்னா படம்...தலிவர் சான்சே இல்ல

அதுவும் ஜெய்ஷங்கர் சாருடம் போடும் கிளைமாக்சு சண்டை திக் திக்...
////

என்னா டெக்னிக்கலா கிண்டல் பண்றான் பாரு ???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dheva said...
மாப்ஸ் டெரர்.. டெரர் தனமாக எஸ்கேப் ஆகிவிட்டதால்...

இராமநாதபுரம் தங்கம்.. என் பங்காளி பன்னிக்குட்டி ராம்சாமி .. தொடர்பதிவு எழுதுவாருங்கோ......! ////

நன்றி ஊர்ஸ்.....! (நாங்கள்லாம் ஊர்க்காரங்கெலாக்கும்!)

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dheva said...
மாப்ஸ் டெரர்.. டெரர் தனமாக எஸ்கேப் ஆகிவிட்டதால்...

இராமநாதபுரம் தங்கம்.. என் பங்காளி பன்னிக்குட்டி ராம்சாமி .. தொடர்பதிவு எழுதுவாருங்கோ......! ////

நன்றி ஊர்ஸ்.....! (நாங்கள்லாம் ஊர்க்காரங்கெலாக்கும்!)
///

yentha ooru?

சிறுகுடி ராம் said...

இதுல தம்பிக்கு எந்த ஊரு படத்த மிஸ் பண்ணிட்டியே மாப்பு..! எனக்கு ரொம்ப பிடிச்ச படம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dheva said...
மாப்ஸ் டெரர்.. டெரர் தனமாக எஸ்கேப் ஆகிவிட்டதால்...

இராமநாதபுரம் தங்கம்.. என் பங்காளி பன்னிக்குட்டி ராம்சாமி .. தொடர்பதிவு எழுதுவாருங்கோ......! ////

நன்றி ஊர்ஸ்.....! (நாங்கள்லாம் ஊர்க்காரங்கெலாக்கும்!)
///

yentha ooru? ////

எங்க ஊரு....!

dheva said...

அப்பு.. ஒரே ஊர்ர்க்கார்ரய்ங்க அப்பு..... (கடைசி வரைக்கும் எந்த ஊருன்னு சொல்லமாட்டோம் ) ஏனா ஊர்ஸ் நான் சொல்றது...?

சௌந்தர் said...

இருங்க நான் ரஜினி தொடர் பதிவுக்கு என்ன படம் போடலாம் பார்கிறேன் ஏன் 10 படம் தான் போடனுமா 150 படம் போட கூடதா...?

dheva said...

செளந்தர்....@ தம்பி... தல ரசிகர்னு ப்ரூஃப் பண்ணி புட்டியே... !

யோவ் மாப்ஸ் டெரரு.. பாருய்யா உன்ன ரஜினி போஸ்ட் போடச் சொன்னா யாரு ரஜினின்னு கேக்குற....?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா ஊர்ஸு என்ன ஊர்னு சொல்லிடாதீங்க, இவிங்க சரியான கிருதுருவம் புடிச்சவனுங்க!

dheva said...

ஊர்ஸ்...@ அது மட்டும் சீக்கிரட்....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//படையப்பாவில் தலைவர ரசிக்க நிறைய காரணங்கள் இருக்கு.. ஆரம்பம் முதல் முடியுற வரைக்கும் படம் முழுதும் ஒரு நெருப்பு இருந்துகிட்டே இருக்கும்..//

அப்ப ஸ்க்ரீன் தீப்பிடிச்சிடாது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வசனத்தில் இருக்கும் கூர்மையும் பாக்குற ரசிகன கொஞ்சம் கூட சோர்வடைய வைக்காது.//

ரசிகன்னா நம்ம சௌந்தரா?இல்லை டாக்டர் விஜயா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆக்சன் கூடவே கதை, ஸ்டைல் மியூசிக்னு மல்டி வே ல ஸ்கோர் பண்ணின படம். ரம்யா கிருஷ்ண் இதுல சிக்ஸர் அடிச்சு இருப்பாங்க..//

ஒ அந்த படத்துல அவங்க கிரிக்கெட் பிளேயரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//வசனத்தில் இருக்கும் கூர்மையும் பாக்குற ரசிகன கொஞ்சம் கூட சோர்வடைய வைக்காது.//

ரசிகன்னா நம்ம சௌந்தரா?இல்லை டாக்டர் விஜயா? ////

எல்லாரும் அங்கேயே வாங்கடா......!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பாயும் புலி (1983)//

ஆப்பக்கட அன்னக்கிளி

S Maharajan said...

அனைத்தும் அருமையான படங்கள்
அப்புறம் நண்பா படையப்பா (1999)
தவறுதலாக உள்ளது மாற்றி கொள்ளவும்

dheva said...

ஊர்ஸ்..@ டாகுடர போய் இழுக்க்க முடியமா....? தம்பின்னே வச்சிக்கோங்க...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dheva said...
ஊர்ஸ்..@ டாகுடர போய் இழுக்க்க முடியமா....? தம்பின்னே வச்சிக்கோங்க...! ////

சரி சரி.... நீங்க சொல்றதுன்னால விடுறேன்!

சௌந்தர் said...

என்ன இங்கே சண்டை என்ன இங்கே சண்டை..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சௌந்தர் said...
என்ன இங்கே சண்டை என்ன இங்கே சண்டை.. ////

வந்துட்டாருய்யா கெவர்னரு....!

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///சௌந்தர் said...
என்ன இங்கே சண்டை என்ன இங்கே சண்டை.. ////

வந்துட்டாருய்யா கெவர்னரு....!/////

@@@பன்னிக்குட்டி ராம்சாமி

பிரதமர் இங்க தான் இருக்காரா....?அப்போ சரி

dheva said...

மகராஜன்..@ டைப்பிங் மிஸ்டேக்.. மிக்க நன்றி .. மாத்திட்டேன்...!

கருடன் said...

@பன்னி & தேவா

//ஊர்ஸ்..//

என்னாங்கயா இரண்டு பேரும் ஊர்ஸ் ஊர்ஸ் டகால்டி வேலை காட்டறிங்க?? ஊர்ஸ்னா நல்லா சொறிஞ்சி விடுங்க... :)))

dheva said...

பன்னி @ ஊர்ஸ் நீ பதில் சொல்லு .. மாப்ஸ்சுக்கு.. உன் பாசைதான் புரியும் அவனுக்கு...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னி & தேவா

//ஊர்ஸ்..//

என்னாங்கயா இரண்டு பேரும் ஊர்ஸ் ஊர்ஸ் டகால்டி வேலை காட்டறிங்க?? ஊர்ஸ்னா நல்லா சொறிஞ்சி விடுங்க... :))) /////

என்ன ரொம்ப ஊருதா ஒனக்கு? நம்ம கரடியும் நமைச்சல் எடுத்துப் போயிதான் சுத்திக்கிட்டு இருக்கு போயி காட்டு, நல்லா கடிக்கக் கூடாத எடத்துல கடிச்சி வெக்கும்!

கருடன் said...

@பன்னிகுட்டி

//பன்னி @ ஊர்ஸ் நீ பதில் சொல்லு .. மாப்ஸ்சுக்கு.. உன் பாசைதான் புரியும் அவனுக்கு...!//

பதிவுலக பண்பாலர் பன்னிகுட்டி மேடைக்கு வரவும்.. செந்தமிழில் விளக்கம் தரவும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன மேல கொடுத்த வெளக்கம் பத்தலியா?

கருடன் said...

@பன்னிகுட்டி

//என்ன ரொம்ப ஊருதா ஒனக்கு? நம்ம கரடியும் நமைச்சல் எடுத்துப் போயிதான் சுத்திக்கிட்டு இருக்கு போயி காட்டு, நல்லா கடிக்கக் கூடாத எடத்துல கடிச்சி வெக்கும்!//

நான் ஏன் கரடி கிட்ட போகனும்?? ஊர்ஸ் ஊர்ஸ் சொல்லிட்டு திரிஞ்ச பசங்க நீங்கதான்.. படவா ராஸ்கல்...பிச்சிபுடுவேன் பிச்சி... :))). டெயிலி சோப்பு போட்டு குளி சொன்னா கேக்கனும். இல்லை என்ன மாதிரி குளிக்காம இருக்கனும். இப்படி வெறுமனே தண்ணி மேல ஊத்திகிட்டு வந்தா ஊர தான் செய்யும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

@TERROR-PANDIYAN(VAS)

யோவ் நாஞ்சொன்னது காட்டுல நிக்கிற கரடி இல்ல, சென்னைல கோடம்பாக்கத்துல இருக்க கரடி (அதான்யா உன் பேவரரிட்டு, டீஆரு...!) இப்போ ஓக்கேயா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முரட்டுக்காளை. ஆணாதிக்க டைட்டில்

என்னது நானு யாரா? said...

பதிவும் சூப்பரா இருக்கு! அதோடுக் கூட நம்ப போலீசு கமெண்ட் படு ஜோர்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//ஆக்சன் கூடவே கதை, ஸ்டைல் மியூசிக்னு மல்டி வே ல ஸ்கோர் பண்ணின படம். ரம்யா கிருஷ்ண் இதுல சிக்ஸர் அடிச்சு இருப்பாங்க..//

ஒ அந்த படத்துல அவங்க கிரிக்கெட் பிளேயரா?
November 8, 2010 1:20 PM//

சிரிப்பு தாங்கல போலிசு! அசத்தல் தான் போங்க!

Balaji.D.R said...

முள்ளும் மலரும் (1978) - அத வுட்டுடீங்கலே தேவா

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல தொகுப்பு அண்ணா...

இம்சைஅரசன் பாபு.. said...

இன்னைக்கு நான் ரொம்ப லேட்..சரி நல்ல தொகுப்பு தேவா அண்ணா

nis said...

interesting
ஆரம்ப கால படங்களின் தகவல்களை அறிய கூடியதாகவும் இருந்தது. சிறப்பான தொகுப்பு அண்ணா.

Unknown said...

ஓட்டு போட்டாச்சி,

அவருக்கும் சீக்கிரத்துல ஓட்டு போடுற வாய்ப்பு வந்தா சரி.

Ravi kumar Karunanithi said...

i like murattukkalai...

எல் கே said...

அருமை பாஸ்.. நெற்றிக்கண் அப்பா வேடம் அசத்தலான வேடம் . அதே போல் பில்லா ரெண்டு வேடத்தில் கலக்கி இருப்பார்.

Unknown said...

பொங்கி வழிஞ்சிட்டிங்களேண்ணே :)

Unknown said...

கை கொடுக்கும் கை பத்தி சொல்லலியே நீங்க.. அதுலயும் நடிச்சிருப்பாப்ல நல்லா :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என்னது நானு யாரா? said...

பதிவும் சூப்பரா இருக்கு! அதோடுக் கூட நம்ப போலீசு கமெண்ட் படு ஜோர்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//ஆக்சன் கூடவே கதை, ஸ்டைல் மியூசிக்னு மல்டி வே ல ஸ்கோர் பண்ணின படம். ரம்யா கிருஷ்ண் இதுல சிக்ஸர் அடிச்சு இருப்பாங்க..//

ஒ அந்த படத்துல அவங்க கிரிக்கெட் பிளேயரா?
November 8, 2010 1:20 PM//

சிரிப்பு தாங்கல போலிசு! அசத்தல் தான் போங்க!
///

Thanks

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அடடா.. ஆரம்பமே.. பின்னிட்டீங்க..
என்ன ஒரு செலக்சன்...!! தலிவர்.. படமே பாதி போஸ்ட் பேசுதே....!! :-))

//அது எப்டி ஆகும் தலைவர் சும்மா பிரிச்சு மேஞ்சு காளைய அடக்குற வரைக்கும் பக்கத்து சீட்ல இருந்த ஆள டேமேஜ் ஆக்கிட்டேன்...//

ஹா ஹா ஹா.. சூப்பர் சூப்பர்.. நானும் அதே அதே..
என்னோட உக்காந்து படம் பாக்கவே யோசிப்பாங்க.. :D :D

ஜெய்லானி said...

புவனா ஒரு கேள்விக்குறி , எங்கேயோ கேட்ட குரல் ,ஆறிலிருந்து 60 வரை , ஓக்கே தான் . கலக்கல் படம் ,

”நான் அடிமை இல்லை”ன்னு ஒரு படம் வந்துச்சே பாக்கலையா..? கிளைமாக்ஸ் கண்கலங்கி விடும் பார்ப்பவர்க்கு ..!! :-))

ஜெய்லானி said...

இதுக்கும் ஒரு மைனஸ் ஓட்டா....?

R.Gopi said...

தலைவா....

ரஜினியோட டாப்-10 படங்கள்ல “பாட்சா” இல்லையா?

இந்த லிஸ்ட் ரிஜக்டட்பா.....

“பாட்சா” சேர்த்து இன்னொரு லிஸ்ட் ரெடி பண்ணுங்க..