Skip to main content

Posts

Showing posts from July, 2016

கபாலி... மாற்று சினிமாவின் குரல்!

ரஜினி படத்துக்கு என்றில்லை எந்த ஒரு படத்துக்குமே விமர்சனம் என்று நான் எழுதுவதில்லை. விமர்சன அரசியல் எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. ஒருவரின் புரிதல் இன்னொருவரோடு எப்போதுமே ஒத்துப் போகாது. அதிர்ஷ்டவசாமாய் ஒத்துப்போகும் அலைவரிசைகளே இங்கே குழுக்களாய் மாறுகின்றன. என்னுடைய பார்வை, புரிதல், அனுபவம் இந்த மூன்றையும்தான் எப்போதும் திரைப்படங்கள் பற்றிய பார்வையாக நான் எழுதுவேன். கருத்துப் பகிர்வு, கருத்துத் திணிப்பு இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தில்தான் நாகரீகம் என்ற சொல் எப்போதும் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும். கபாலி தமிழ்ப்படம்தான் என்றாலும் கதையின் களம் வேறு நிலம். முழுமையாய் கபாலியை ரசிக்க கொஞ்சமல்ல நிறையவே மலேசிய தமிழர்களின் பேச்சு வழக்கு, மலேசியாவின் வரலாறு, நிலத்துண்டாடல், தோட்டத் தொழிலார்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, போராட்டங்கள், வர்க்கப் பிரிவுகள் என்று தொடங்கி இன்று வரை அந்த மண்ணில் நடக்கும் எல்லாவிதமான சமூகக் குற்றங்கள் வரை தெரிந்திருப்பதோடு ஓரளவிற்கு அவர்கள் பயன்படுத்தும் வட்டார வழக்குச் சொற்களையும் நாம் தெரிந்திருக்க வேண்டும். இதுவெல்லாம் அதிகம் புரியாத வேறு நிலம் ச

கபாலியும் ரஜினி எதிர்ப்பு அரசியலும்...!

ரஜினி படத்துக்கான ஓப்பனிங் என்பது இன்று நேற்று உருவான விசயம் கிடையாது. ஊடகப் பெருக்கம் நிறைந்த இக்காலத்தில் நம்மைச் சுற்றி நிகழும் எல்லா நிகழ்வுகளுமே அதன் வேர் வரை விபரமாக பல கோணங்களில் இப்போது நமது முன் கடை விரிக்கப்பட்டு விடுகிறது. சேட்டிலைட் டிவிகளைக் கடந்து சோசியல் மீடியாக்களும் விசுவரூபம் எடுத்து நிற்கும் இந்தக்காலக்கட்டத்தில் ஒரு மாஸ் ஹீரோவின் மாஸ் என்டெர்யெனிங் மூவி ரிலீஸ் என்பது கண்டிப்பாய் மிகப்பிரம்மாண்டமானதாய்தான் இருக்கும். ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த முழு வெற்றியையும் படத்தின் மொத்த டீமும் தூக்கிச் சுமக்கும் அதே வேளையில் படம் படு தோல்வியடைந்து விட்டால் அந்த தோல்வியின் சுமையை படத்தின் கதாநாயகனும் அந்தபடத்தின் தயாரிப்பாளரும் மட்டுமே தூக்கிச் சுமக்க வேண்டியிருக்கும். பாபாவாய் இருந்தாலும் சரி லிங்காவாய் இருந்தாலும் சரி அந்த படத்தின் வியாபார ரீதியிலான சுமையை சரி செய்ய வேண்டிய பொறுப்பு ரஜினிக்கு இருந்தது, அதை அவர் செய்தார். கபாலிக்கு இன்றைக்கு இருக்கும் இந்த கிரேட் மாஸ் ஊதிப் பெரிதாக்கப்பட்டதாய் பேசிக் கொள்கிறார்கள் ஆனால் நிஜத்தில் சமகால ஊடகப்பெருக்கமும் ர

யாரோ....யார் யாரோ...?!

நான் யாரென்று கேட்கிறீர்களா? தெரியவில்லை. என் பெயரும், ஊரும் சுற்றமும் என் நினைவிலிருந்து அழிக்கப்பட்டு விட்டது அல்லது யாரோ அழித்து விட்டார்கள். இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் கொஞ்சம் முன்பு படுத்திருந்தேன் அதன் முன்பு எங்கோ போய்விட்டு வந்திருந்தேன். வேறு ஒன்றும் என்னைப் பற்றி எனக்கு சரியாய் சொல்லத் தெரியவில்லை. வெகு காலம் முன்பு இந்த வீதியில் நடந்து பயின்ற ஞாபகமொன்று மட்டும் மெலிதாய் என் நினைவிலிருந்தபடியால் இந்த வீதிக்குள் நடந்து கொண்டிருக்கிறேன். ஒருவேளை இந்த வீதியாய் அது இல்லாமலுமிருக்கலாம் யாரவது வந்து என்னை யார் என்று கேட்டு விடாத வரைக்கும் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஒரு மாடு ஒன்று என் முன்பு வந்து நின்றது. அது முறைத்துப் பார்ப்பது போல தோன்றியது. உற்றுப் பார்த்த போது அதுவும் என்னைப் போலவே வெறுமனே நின்று கொண்டிருக்கிறது என்று புரிந்தது. ஏனோ தெரியவில்லை அதன் கண்கள் என்னைப் பார்த்து நீ யாரென்று கேட்பதாகத்தான் எனக்குத் தோன்றியது. நீ யார் என்று அதனிடம் மெல்ல கேட்டேன். அது மெளனமாய் நின்றது. நீ மாடு என்பது உனக்குத் தெரியுமா? இல்லை நான் உன்னிடம்  நீதான் மாடு என்று