Skip to main content

Posts

Showing posts from December, 2014

புத்தாண்டு....!

நிறைய எதிர்பார்ப்புகள் கனவுகளோடதான் ஒவ்வொரு வருடமும் நம்மை நோக்கி வருது. எல்லாமே நல்லபடியா நடக்கணும்ன்ற ஆசையோட ஹேப்பி நியூ இயர்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கை குலுக்கி சிறு புன்னகையோட இந்த டிசம்பர் 31ன எல்லோரும் கடந்து போக நினைக்கிறோம். நியூ இயர்க்கு என்ன ப்ளான்னு என்கிட்ட எப்பவும் நண்பர்கள் கேட்கும் போதும் எல்லாம் ஒரு புன்னகையோட  நான் கடந்து போயிடுறேன். ஏன்னா என்கிட்ட எப்பவுமே எதுக்குமே ப்ளான்ஸ் இருந்ததே கிடையாது. சரியோ தவறோ  கொண்டாட்டங்கள் மனித வாழ்க்கையோட ஆதாரமா இருந்து இந்த வாழ்க்கையோட அர்த்தத்தை சூசகமா தெரிவிக்கிறதாதான் நான் கருதுறேன். சுகமோ, துக்கமோ பிடிச்சவங்க பக்கத்துல இருக்கணும். மனசுக்குப் பிடிச்சவங்க இல்லாத சொர்க்கமும் நரகம்தான். மனசுக்குப் பிடிச்சவங்க கூட இருந்தா நரகமும் நமக்குச் சொர்க்கம்தான். எல்லா புது வருசத்தையும் விட நான் சென்னையில வேலை தேடிக்கிட்டு இருந்த  1998ம் வருசம் பொறந்த அந்த வருசத்தை மறக்கவே முடியாது. யாருமே இல்லாம தனியா மொட்டை மாடியில பசியோட படுத்துக்கிட்டு நட்சத்திரங்களைப் வெறிச்சு பார்த்துக்கிட்டு இருந்தேன். என்னை சுத்தி சென்னை அல்லோலகல்லோலப்பட்டு

பிசாசு....!

படத்தின் வரும் அந்தப் பாடல், உயிரை மீட்டும் அந்த வயலின் ஒலி, முதல் காட்சியிலேயே கதாநாயகனின் பிடித்த கையை விட்டு விட்டு ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா....என்ற அழுத்தமான குரலோடு மரணிக்கும் கதாநாயகி, இறப்பதற்கு முன் ஸ்ரெட்ச்சரில் வைத்துக் கொண்டு வரும் போது காதலோடு அவள் கதாநாயகனைப் பார்க்கும் அந்தப் பார்வை, இறப்பதற்கு முன்பு அவளுக்கு ஏற்படும் அந்தக் காதல், இறந்து போன கதாநாயகியின் அப்பாவாய் நடித்திருக்கும் ராதாரவியின் உயிரை உருக்கும் நடிப்பு, அட்டகாசமான கேமரா, நேர்த்தியான இயக்குனரின் கதை சொல்லும் திறன் என்று எல்லாமே சூப்பர்தான் என்றாலும்.... இன்னும் அழுத்தமாய் இந்தக் கதையின் கரு கையாளப்பட்டிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது. இன்னும் இன்னும் வலி வேண்டும், இது எல்லாம் பத்தாது என்ற ஒரு மனோபாவம் இருப்பதால் அப்படித் தோன்றி இருக்கலாம். எந்த ஒரு திரைப்படத்தைப் பற்றி நான் எழுதும் போதும் அந்த திரைப்படத்தில் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் பற்றியும் என்னைச் சுற்றி இருப்பவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதையும் நான் அளவு கோலாக வைத்துக் கொண்டு அந்தப் படைப்பை எப்போதும் அணுகுவதில்லை. அந்த படைப்பு எ

எதுவமற்றதின் குரல்...!

யார் உருவாக்கினார் நியதிகளை? நேற்றைய பகலைப் போலத்தானே இருக்கிறது இன்றைய பகலும் அதைத் தொடர்ந்து  வரும் இரவும்... இருக்கிறது.. குளிரையும் வெப்பத்தையும் தவிற வேறெதுவையும் உமிழ்ந்திருக்கிறதா காலம்...? சூரியனைச் சுற்றி வரச் சொல்லி பூமியிடம் சொன்னது யார்? சூரியனுக்கு அப்பாற் எத்தனை கோடி பூமிகள் மொத்தமிருக்கும்...? இருப்பதற்கு ஏன் இவ்வளவு சங்கடம்...? அந்த குயிலுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை..., மத்தியானத்திலிருந்து கூவி விட்டு இப்போதுதான் பறந்து செல்கிறது... நிசப்தத்தில் மிதந்து கொண்டிருக்கும் அதன் சப்தத்தைப் போல... எப்போதும் இசைத்துக் கொண்டிருக்கிறது ஒரு இன்னிசையை காலமெப்போதும்... காரம்பசுக்கள் கழுத்தின் மணி அசைய வீடு திரும்பத் தொடங்கி விட்டன... முதல் பனி ஒன்று மெல்ல ஒரு புல்லின் நுனியில் வந்தமர்கிறது... இந்த குளிர் இரவில் யாரோ ஒரு வழிப்போக்கன் எங்கிருந்தோ வாசிக்கிறான் தன் புல்லாங்குழலை... வெதுவெதுப்பான கனவுகளோடு கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டு என்னோடு புரண்டு கொண்டிருக்கிறது வாழ்க்கை...! தேவா சுப்பையா....

லிங்கா.....ஒரு பார்வை...!

சாதாரணமாய் தமிழ்த் திரைப்படங்கள் வெறும் திரைப்படங்களாய் வெளியான காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது . தமிழ் நாட்டு அரசியலில் பெருந்தாக்கத்தைக் கொடுத்ததாலேயே இன்றைக்கு திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களின் திரைப்படங்களின் வெளியீடும் அது குறித்த பார்வைகளும்   தற்போதெல்லாம் பெரும் அரசியலாக்கப்படுகின்றன . இந்த அரசியலின் உச்சம் சமீபத்தில் ரஜினி நடித்து வெளியான லிங்காவிற்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது . முதலில்  லிங்கா வழக்கமான ஒரு ரஜினி படம் கிடையாது என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் . இத்தனை சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த ரஜினி நான்காண்டுகள் இடைவெளிக்குப் பிறகு லிங்காவில் தனது சூப்பர் மாஸுக்கு ஈடு கொடுக்கக் கூடிய காட்சிகள் ஏதும் இல்லாத   கதைக்குள் தன்னைப் பொறுத்திக் கொண்டு நடித்திருப்பதன் மூலம் ரஜினி ரசிகர்கள்தான் உண்மையில் ஏமாந்து போய் ...  காரசாரமான பாட்சா போன்ற , படையப்பா போன்ற அதிரடியான சூப்பர் பழிவாங்கும் கதை இது இல்லையே என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும் ஆனா

லிங்கா... த மாஸ் - 1

வேறு எந்த ஒரு நடிகனின் படமும், வாழ்க்கையும் இந்திய சினிமாவுலகில் ரஜினி அளவுக்கு அரசியலாக்கப்பட்டிருக்க முடியாது. எந்திரனுக்கு பிறகு சுமார் நான்காண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இப்போது லிங்கா வெளியாகி இருக்கிறது. இடையில் ரஜினிக்கு உடல் நலமில்லாமல் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயம் வேறு இருந்தது. இதற்கு இடையில் 64 வயதைக் கடந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் ரஜினி எப்படி ஈடு கொடுத்து நடித்திருப்பார்? அவரது சூப்பர் ஸ்பீடும், மாஸ் ஸ்டைலும் இன்னமும் அப்படியேதான் இருக்கிறதா? மொத்தத்தில் ரஜினி ரசிக தரிசனம் எனப்படும் அந்தப் பரவச நிகழ்வை லிங்காவும் கொடுக்குமா...? இன்னொரு ரஜினியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தில் அவரது ரசிகர்கள் யாரும் கிடையாதே..? ரஜினியில் தொடங்கி, ரஜினியில் ஆர்ப்பரித்து ரஜினியோடு அடங்கப் போகும் பெருங்கூட்டமல்லவா இது...? வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்றரைக்கு தலைவர் தரிசனத்துக்காக நான் பார்க்கிங்கில் இருந்து காரை உருவிய போது மணி 2:40. சார்ஜா நேஷனல் பெயிண்ட்ஸில் இருந்து உறங்காத அந்த நகரத்தின் பரபரப்பில்லாத சாலையில் வழுக்கிக் கொண்

ஆதியின் பாடல்....!

பெ யர்த்தெடுக்க முடியாத பெரு மெளனமொன்று  சடாரென்று முகமறைந்து  அகம் நிறைத்து.... ஒற்றைப் புள்ளிக்குள்  ஒடுங்கி எழுதிக் கொண்டிருக்கிறது பிரபஞ்சத்தின்... ஆதி பாடலொன்றை..., திசைகளில்லா பயணமொன்றுக்கு  சிறகுயர்த்தி எழும்புகிறது செந்நாரை ஒன்று... எங்கோ அடித்துப் பெய்கிறது மழை...! தேவா சுப்பையா...

எப்படி ஜெயித்தாய் ரஜினி...?!

ரஜினிய ஏன் பிடிக்குதுன்னு சொல்ல குறிப்பிட்டு சொல்லும்படியான வார்த்தைகள் என்கிட்ட கிடையாது. சின்ன வயசுல இருந்து உள்ளுக்குள்ள பத்திக்கிட்ட நெருப்பு இந்த ரஜினி. ஏதோ படத்துல பிடிச்ச மாதிரி நடிக்கிறாங்க அதுக்காக அவுங்க ரசிகனா கண்மூடித்தனமா அவுங்கள ரசிக்கலாம் அப்டீன்ற அளவோட ரஜினிய ஒரு நாளும் என்னால நிறுத்திட முடியாது...! எட்டு வயசுல ராகவேந்திரா மந்த்ரத்தை எதிர்வீட்டு சுகுணா அக்கா கிட்ட எழுதி வாங்கி மனப்பாடம் பண்ணினது மூலமா ராகவேந்திராவ உள்ளுக்குள்ள கொண்டு வந்தது ரஜினி...., ஆன்மீகத்தை பத்தி விபரம் தெரிஞ்ச பிறகு புத்தகங்கள்ல படிச்சு தெரிஞ்சுக்கிட்டாலும் ராகவேந்திரர் படம் நடிக்கிறதுக்கு முன்னாடி அதாவது அடுத்த வாரிசு படம் நடிச்சு முடிச்ச உடனே எனக்கு எதுவும் வேணாம் நான் சாமியாரா போகப் போறேன்னு சொன்ன சூப்பர் ஸ்டார் எனக்கு ரொம்ப ஆச்சர்யமாவே தெரிஞ்சார்... அப்போ ஒண்ணும் புரியலேன்னாலும் நிலையாமை நிறைஞ்ச இந்த வாழ்க்கையில ஒண்ணுமே இல்ல...டக்குன்னு ஒரு நாள் எல்லாம் முடிஞ்சு போயிடும்ன்ற விதையை எனக்குள்ள முதன் முதல்ல விதைச்சது சூப்பர் ஸ்டார்தான்....! ஏன் சார் வருசத்துக்கு ஒரு படம் பண்ணீங்க அப்

வேங்கைகளின் மண்....6!

வேங்கைகளின் மண் - 1 வேங்கைகளின் மண் - 2 வேங்கைகளின் மண் - 3 வேங்கைகளின் மண் - 4 வேங்கைகளின் மண்  - 5 இனி... திருப்பா…. நமது காளையார்கோயில் வருகை ரகசியமாகத்தானே வைக்கப்பட்டிருக்கிறது… மீண்டுமொருமுறை கேட்டு மன்னர் முத்துவடுகநாதர் உறுதி செய்து கொண்டார். ஏன் தேவரே யாருக்கும் உங்கள் வருகை தெரியக்கூடாது என்பதில் இவ்வளவு உறுதியாய் இருக்கிறீர்கள்…? கெளரி நாச்சியாரைத் திரும்பிப் பார்த்தார் மன்னர் முத்துவடுக நாதர். சிறிது நேரம் மெளனமாயிருந்த மன்னர்…. கெளரி இப்போதுதான் ராமநாதபுரத்தில் கும்பினியர்களோடு நமது சீமை மறவர்கள் மோதி அவர்களைத் தோற்கடித்து விரட்டினார்கள். எல்லா பாளையக்காரர்களையும் அடக்கி ஒடுக்கி கட்டுக்குள் கொண்டு வந்த கும்பினியர்களுக்கு இது ஒரு பெரிய பின்னடைவுதான். இந்தத் தோல்வியை மனதில் வைத்துக் கொண்டு இனி வரும் நாட்களில் யாதொரு அசம்பாவிதத்தையும் வெள்ளைக்காரர்கள் நம் சீமைக்குள் நடத்தி விடக்கூடாது என்றுதான் அவர்கள் கூறிய சமரசத் திட்டதிற்கு நானும் ஒத்துக் கொண்டேன். இனி அவர்கள் சீமையை ஆக்கிரமிக்க முயலமாட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆக்கிரமிப்பு செய்வது

வேங்கைகளின் மண்...5!

வேங்கைகளின் மண் - I வேங்கைகளின் மண் - II வேங்கைகளின் மண் - III வேங்கைகளின் மண் - IV இனி.... ஆடிக் கொண்டே இருந்த வீரமுத்தானந்தம் விடு விடுவென்று கொல்லன்குடி காட்டிற்குள் ஓட ஆரம்பித்தார். உச்சிவெயில் மெலிதாய் சாய ஆரம்பித்திருந்த அந்தப் பொழுதில் ஒரு மோனநிலையில் மெளனமாய் படுத்துக் கிடந்த காடு மெல்ல கண் விழித்து வீரமுத்தானந்தத்தின் ஓட்டத்தைக் கவனிக்க ஆரம்பித்தது. கருவேல மரங்களும், சிறு ஈச்சைப் புதர்களும் மண்டிக்கிடந்த அந்தக் காட்டிற்குள், பூவரசு, மா, வேப்பம், உதயன், ஆலம், அரச மரங்களோடு பேய்ப் புளிய மரங்களும் நிறையவே இருந்தன. புளியமரத்தை மட்டும் ஏன் பேய்ப்புளியமரம் என்று சொல்கிறார்கள்...? இரவினில் எல்லா மரங்களும் ஏதோ ஒரு சீரில் நின்று கொண்டிருக்க புளியமரம் மட்டும் தலைவிரித்து நிற்கும் பிரம்மாண்ட பிசாசைப் போல இருக்கிறது. புளிய மரத்தின் வடிவத்தை உற்று நோக்கினாலே இது பிடிபடும். வளைந்து நீண்டு இருக்கும் கிளைகள் எல்லாம் கோரமாய் நீட்டிக் கொண்டிருக்கும் முரட்டுக் கரங்களைப் போல இருக்கும். ஆழமாய் வேரூன்றிய வயதான புளியமரம் தளர்ந்து போன ஒரு மூதாட்டியைப் போல கிளைகளைத் தாழ்த்த