Pages

Monday, September 30, 2013

தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 6இதுவரை....


இனி...

பூர்ணா தலை முடியைச் சரி செய்த படியே என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்....

அவள் பார்வை எனக்குள் ஊடுருவி ஏதேதோ இம்சைகள் செய்தது...

சொல்லு பூர்ணா............மீண்டும் அவள் மெளனம் கலைத்தேன்...

இனக்கவர்ச்சின்னு சொல்லிக்கிற வயச ரெண்டு பேரும் தாண்டிட்டோம். கடைசி நிமிசம் வரைக்கும் காமம் வேணும்னு ரெண்டு பேருமே நினைக்கல...

அவள் இடை மறித்தாள்...அதான் சொல்லிட்டேனே முகில்... இது நடந்தது அல்ல... நிகழ்ந்தது. 

ஒரு கவிதை எப்போது
ஜனிக்குமென்று கணித்து
எழுதினால்...
அது எப்படி கவிதையாயிருக்கும்
எழுதியவன் எப்படி 
கவிஞனாய் இருப்பான்...?

டேய்.. நிறைய யோசிக்காதடா....பசிக்குது...ஏதாச்சும் இருக்கா...? இல்லை செய்யணுமா.... கொஞ்சம் சாப்டுட்டு நிறைய நடக்கலாம் நிறைய பேசலாம்...!

அவளைப் பார்த்து புன்னகைத்தேன். பூர்ணா.. எனக்கு கொஞ்சம் கெல்ப் பண்ணு...வா என்று அவளை அழைத்தேன்.

மதியம் இரண்டரை என்று கடிகாரம் சொன்ன போது மனதைப் போலவே வயிறும் நிறைந்திருந்தது எங்களுக்கு...

நாளைக்கு காலையில நாங்க திரும்பிப் போறோம்டா சென்னைக்கு... நீ எப்போ வர்ற...? கேட்டபடியே என் கை கோர்த்துக் கொண்டாள்..

நான் நிதானமாய் நடந்து கொண்டிருந்தேன்...!

எத்தன மணிக்கு போற பூர்ணா...?

நாளைக்கு மத்யானம் 3 மணிக்கு...சாப்டுட்டு கிளம்புறோம்....நாளை மறுநாள் டூட்டி ஜாய்ண் பண்ணனும்....நாங்க வந்து நாலு நாளாச்சுடா...

சுற்றிலும் நிலவிய நிசப்தத்தையும், விரிந்து பரந்து கிடந்த இயற்கையையும் அனுபவித்தபடியே யோசித்தேன். மறுபடி பூர்ணாவை பார்த்தேன்...ஏன் பூர்ணா இனிமே நம்ம உறவு எப்டி கண்டினியூ ஆகணும்னு நீ நினைக்கிற....?

எதுக்குமே அதிகம் அழுத்தம் கொடுக்காத முகில். எனக்கு எந்த விதமான குற்ற உணர்ச்சியும் கிடையாது. இப்போ ரெண்டு பேருக்கு ஏற்பட்ட அனுபவத்துக்கு உடனடியா ஒரு தீர்வு அல்லது கமிட்மெண்ட் வச்சுக்கணும்னுதான் தோணும்...

அவளை இடைமறித்தேன்........அப்டீ இல்ல பூர்ணா...சமூகம் ஏற்படுத்தி வச்சு இருக்க ஒரு ஒழுக்க கோட்பாடுகள் முன்னால நாம தப்புதானே செஞ்சுட்டோம்....? இந்த பந்தம் திருமணம் வரை போனால்தானே முழுமையா இருக்கும் இல்லேன்னா, ரெண்டு பேர்ல ஒருத்தர், யாரையோ ஏமத்திட்டோம் அப்டீன்ற எண்ணம்தானே வரும்...?

வாழ்க்கைன்ற விசயம் ஒரு கமிட்மெண்ட்லதான பயணிச்சுட்டு இருக்கு...! இந்த நிமிசம், இந்த அமைதி..இந்த சூழல் இது இப்படியே இருக்கக் கூடாதான்னு கூட எனக்குத் தோணுது. ஆனா இந்த வாழ்க்கையில மிகப்பெரிய ஆட்டம் ஒண்ணு நடந்துகிட்டு இருக்கு. இங்க உயிர் வாழத்தான் எல்லோருமே ஓடிக்கிட்டு இருக்காங்க. எந்த கஷ்டமும் இல்லாம நான் வாழணும்னு ஆசைப்படுறதோட அடுத்த ஸ்டெப்பா என்னை சார்ந்தவர்களும் வாழணும்னு நான் நினைக்கிறேன். ஒரு தாளம் தப்பாத வாழ்க்கை கிடைச்சதுக்கு அப்புறம்  அடுத்தவனை விட நான் பெஸ்ட்டா இருக்கணும்ன்ற யோசனை வருது..., அதுக்கு அடிச்சு பிடிச்சு ஏதேதோ செஞ்சு ஓட வேண்டி இருக்கு...இந்த வட்டத்துக்குள்ள சிக்கிக்க கூடாதுன்னுதான்...

நான் 35 வயசு ஆகியும் கல்யாணம் பண்ணிக்கலை. திருமணம் அப்டீன்ற வசீகர முகத்துக்குப் பின்னால நிறைய பார்க்க சகிக்காத கோரங்கள் இருக்கு. வசீகரத்தை வாங்கும் போது கோரத்தையும் சேர்த்தேதான் வாங்கிக்கிறோம். கோரம் வேண்டாம்னு முடிவு பண்ற ஒவ்வொருத்தனும் வசீகரத்தையும் சேர்த்தேதான் இழந்து ஆகணும். சந்தோசம், துக்கம், அழகு, அசிங்கம், இப்படி ஏதோ ரெண்டைப் பத்திதான் எல்லோரும் பேசிட்டு இருக்காங்க...ஒண்ணு இந்த கடைசி இல்ல அந்தக் கடைசி...

ஒண்ணு காவி உடுத்திக்கிட்டு சாமியாரா போய் இந்த வாழ்க்கைக்கு தூரமா போறாங்க...இல்லை... இந்த வாழ்க்கையை தலைமேல வச்சு கொண்டாடிக்கிட்டு நான், நான்னு ஈகோவோட வாழ்ந்து தான் வாழ்றதுக்காக சுத்தி இருக்குற எல்லா அழகுகளையும் சிதைக்கிறாங்க...நான் தனிமையா இருக்கும் போது மட்டுமே உயிரோட இருக்குற ஒரு ஜீவனா ஃபீல் பண்றேன் பூர்ணா...

பூர்ணா எதுவும் பேசவில்லை அவளுடைய ஸ்வெட்டருக்கு மேல் கைகளை  குறுக்காக கட்டிக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள். நீல வண்ண ஸ்வெட்டருக்குள் இருந்த  வெள்ளைச் சுடிதார் கொஞ்ச நேரம் முன்பு -ஹாலின் ஒரு மூலையில் கிடந்தது ஏனோ என் நினைவுக்கு வந்தது.  காற்றில் பறந்த கேசத்தை ஒதுக்கியபடியே எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள் பூர்ணா. எனக்கு ஒரு மணி நேரத்துக்கு முந்திய நிகழ்வுகள் புத்திக்குள் ஏறி தாண்டவமாடிக் கொண்டிருந்தன. உடை இல்லாத பூர்ணா மூளையில் நெளிந்து கொண்டிருந்தாள்...


பேரிஜம் லேக் செல்லும் வழி என்ற போர்டு காட்டிய திசையில் வெறுமனே நடந்து கொண்டிருந்தோம். பச்சை பசேலென்று உயரமாய் மரங்கள் வளர்ந்திருந்த அடர்த்தியான காடு அது. எனக்கு ஏனோ பசுமையான மரங்களைப் பார்த்த போது உள்ளுக்குள் காமம் எட்டிப் பார்த்தது. சாலையை விட்டு தள்ளி அடர் மரங்களுக்குள் நடந்து அதன் நடு மையத்தில் போய் தரையில் இருவரும் அமர்ந்து கொண்டோம்...! சில்லென்ற சருகள் கிடந்த தரையில் அமர்ந்து மரங்களினூடே எட்டிப்பார்த்த வானத்தைப் பார்த்தேன். கண்கள் என்னைச் சுற்றிய சூழலைப் புணரத் தொடங்கி இருந்தது. ஒட்டு மொத்த பூமியும் எனக்கு பெண்ணாய் தோன்றியது. பூமி தாண்டி பரவிக் கிடக்கும் அந்த பெண்ணின் எல்லா வளைவுகளுக்குள்ளும் உணர்வாய் பயணித்துக் கொண்டிருந்தேன்....

கூடல் தொடங்கி  இருந்தது. பக்கத்தில் பூர்ணா இருக்கிறாள் என்ற பிரக்ஞை இன்றி வெறித்தபடி இருந்தேன். உடல்  என்ற தடுப்பு உடைந்து போய்  காமம் வேறு வடிவத்தில் என்னை ஆட்கொண்ட பொழுதில்...அதற்கு மேல் அமர முடியாமல் கீழே சாய்ந்தேன்...

முகில்...கெட்..அப்...போலாம்டா...பூர்ணா என்னை உலுக்கினாள். மெல்ல அரை விழியால் பூர்ணாவைப் பார்த்தேன். அவள் மடியில் என்னை படுக்க வைத்திருந்தாள். அவள் விரல்கள் என் தலையைக் கோதிக் கொண்டிருந்தன. வாழ்க்கையில் அற்புதமான தருணங்களில் ஒன்று ப்ரியத்தோடு யாராவது நம்மை மடியில் கிடத்தி தலை வருடிக் கொடுப்பது. அதை விட அதி அற்புதமானது அப்படியான ப்ரியமானவரை நாமும் ப்ரியத்துடன் நேசிப்பது.

எழுந்து அமர்ந்தேன்.

போகலாம் முகில். உன்னை பார்த்தது, பேசினது, அப்புறமா நடந்தது இது எல்லாமே ஆச்சர்யம்தான். ஒரு அழகிய கனவு மாதிரி இருக்கு. இந்த கனவுக்கு அர்த்தம் நீயும் கொடுத்துடாத நானும் கொடுக்கல...

இதை பத்தி கேள்வி நீ கேட்டு நான் பதில் சொல்லி திட்டமிட்டு நாம இந்த அழகை சிதைச்சுக்க வேண்டாம். இன்னிக்கு நடந்தது தற்செயலா நடந்தது அப்டீன்றத நாம நம்பினா தற்செயலாவே அடுத்து எல்லாமே நடக்கும் வரை காத்திருக்கலாம்...தண்ணிக்கு அடியிலும் நாம போய்டல தரைக்கும் நாம போய்டல... கொஞ்ச நாள் மிதக்கலாம்....மிதந்துட்டே இருக்கலாம்....இன்னொரு நாள் தற்செயலா இதே போல ஏதோ ஒண்ணு நம்ம உள்ளுணர்வோட உந்துதல்ல நடக்கலாம்....இப்போதைக்கு இந்த நினைவுகல ரசிச்சு அனுபவிச்சு லயிச்சுக் கிடக்கறதுதான் சரின்னு என் புத்திக்கு தோணுது...

பூர்ணா என்னைப் பார்த்தாள்...

ஹா.. ஹா ஆமாம் பூர்ணா தற்செயலா தோன்றியதுதானே இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும்...

அதே.. அதே... என்றபடி கழுத்தில் கை போட்டுக் கொண்டாள்.

பறவைகள் கூடு திரும்பிக் கொண்டிருந்தன. ஒரு நாள் ஆரம்பிப்பதும் முடிவதும் எதுவும் அவற்றுக்குத் தெரியாது. இன்னும் சொல்லப் போனால் ஒரு நாள் என்றால்  என்னவென்று கூடஅவற்றுக்குத் தெரியாது. விடியலில் அவை திசைகளை தீர்மானித்து பறப்பது இல்லை. மீண்டும் கூடு திரும்புகையில் கூடென்ற ஒன்று இருக்கும் என்பதற்கும் யாதொரு உறுதியும் இல்லை...

அவை எப்போதும் சிறகடிக்கின்றன...உயிர் என்ற ஒன்றின் ஒற்றை உணர்வை ஏந்தியபடி...!  வாழ்க்கையோ, இயற்கையோ, கடவுளோ, இல்லை சட்ட திட்டங்களோ, கட்டுப்பாடுகளோ, கவலைகளோ அவற்றுக்கு கிடையாது...
.....
.....
.....
பூர்ணா பேருந்திலிருந்து ஜன்னல் வழியே கை அசைத்தாள். 

கொஞ்சம் கண்ணீரும்
நிறைய வலிகளும்
இல்லாமல் இருக்கும்
காதல் எப்படி காதலாய்
இருக்க முடியும்...?

அவள் விழிகளில் வழிந்த நீரை என் கண்களில் இருந்து துடைத்துக் கொண்டேன். மீண்டும் அவளை சந்திக்கலாம் சந்திக்கையில் இப்போது இருக்கும் மனோநிலை எங்கள் இருவருக்குமே இருக்கலாம். இல்லாமலும் போகலாம் அல்லது ஒருவருக்கு இருந்து இன்னொருவருக்கு அப்படி இல்லாமலும் இருக்கலாம்....

எது எப்படி இருந்தாலும் அது சுகமான நினைவுகளை யாராலும் அழித்து விடமுடியாது. நான் என் காட்டேஜை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்......


என் காலடி பட்டு சருகுகள் நொறுங்கிக் கொண்டிருந்தன....!!!!

                                             
                                                       .... முற்றும் ....


தேவா சுப்பையா...Sunday, September 29, 2013

தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 5


இதுவரை...

இனி...


என்னைப் பாத்தா உனக்கு ஏதாச்சும் தோணுதா..? கேட்டாள்....

என்ன சொல்வது..என்று நான் உள்ளுக்குள் தடுமாறிக் கொண்டிருந்தேன்.....கொடைக்கானல் மிரட்டத் தொடங்கி இருந்தது....

ஒண்ணும் தோணலை...அவளிடம் நிதானமாய் சொன்னேன்.

நீ ஒரு ஆண். நான் ஒரு பெண்..எதாச்சும் நடந்துடும்னு பயப்டுறியா..?

இல்லை பயப்படல....சலனமில்லாமல் சொன்னேன்.

இந்தத் தனிமை ஏதாச்சும் பண்ணச் சொல்லுமா நம்மளை...முகில்?....கேட்டாள்.

என்ன பண்ணிடும்...ஒண்ணும் பண்ணாது...நமக்குத்தான் புரிதல் இருக்கு,  தெளிவு இருக்கு...ஆனா கட்டுப்பாடுகள் கிடையாதுன்னு நினைக்கிறேன்....

அப்புறம் ஏன் கை கட்டி பவ்யமா என் எதிர்த்தாப்ல உட்காந்து இருக்க....?  என் பக்கத்துல வந்து உட்காரலாமே...? ஏதோ ஒரு பயம்தான உன்ன அப்டி உட்காரச் சொல்லுது..... இல்லையா....முகில்...?

பயம் இல்ல.. எனக்கு என்ன பயம்...நாம விழிப்புணர்வோடதானே இருக்கோம்...! காற்றில் ஆடாத ஒரு தீபம் மாதிரியான தெளிவுதானே இது..

அப்போ வந்து என் பக்கத்துல உட்கார முடியுமா உன்னால....?

வொய் நாட்....அவள் அருகில் போய் அமர்ந்தேன். ஹ்ம்ம்ம்ம் சொல்லு பூர்ணா...நிறைய பேசுற...நீ  கடவுள் மறுப்பாளர்களை எல்லாம் வாசிச்சு இருக்க,  அடிப்படையில நம்பிக்கை இல்லாத ஒரு தன்மைய அந்த கட்டமைப்பு கொடுத்துடும் இல்லையா..? என்னை எப்டி நம்புற நீ...?

அட நீ வேற முகில்......நம்பிக்கைன்றது....மனசு சம்பந்தப்பட்டது மட்டும் இல்லை தனி மனித விருப்பம். எனக்கு ஓ.கேன்னு தோணிச்சு....தட்ஸ் ஆல்....

பூர்ணா ரொம்ப பவ்யமா உட்கார்ந்து இருக்கியே எங்கடா கைகால் மேல பட்டா தப்பு நடந்துடும்னு பயப்புடுறியா..?

டேய்... எனக்கு ஒரு பயமும் இல்லடா...உன் கையை எடுத்து இப்டி என் கையோடு கோர்த்துக்கிட்டு பேசினா கூடா எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை....கைகளைக் கோர்த்துக் கொண்டாள்...

இப்போது....கொடைக்கானல் குளிர் கொஞ்சம் மிரளத் தொடங்கி இருந்தது.....

நிஜமாதான் எல்லாமே மனசுதான்.... பூர்ணா நாம கட்டுப்பாடா இருந்தா என்ன நடந்துடும்.. நான் உன் தோள்ள கை போட்டு இப்டி இறுக்கினா கூட ஐ நெவர் கேவ் எனிதிங் இன் மை மைண்ட்....

தோளில் கை போட்டேன்.

யா....யா.... யூ ஆர் கரெக்ட்....!!!!!!!! உடல்கள் உரசினால் என்ன தவறு நடக்கப் போகிறது. இன்ஃபாக்ட் நமக்குள்ள இருக்குற புரிதல் கண்டிப்பா எல்லை தாண்ட விடாது இப்டி நான் உன் மூக்கோடு என் மூக்கு உரசினால் கூட....

அவளின் உதடு என் உதட்டை உரச அனிச்சையாய் அவளின் உதட்டினை இழுத்து உறிஞ்சத் தொடங்க..அவள் என் தலை கலைக்க ஆரம்பித்தாள்...

ஜஸ்ட்....லைக் தட் தான் உன்னைக் கட்டிப்பிடிச்சு இருகேன் பூர்ணா...! தப்பு இல்லையே...

நானும் அப்டிதாண்டா....அவள் வார்த்தைக் குழறியதைக் கவனித்தேன்...ஏதோ ஒரு உணர்வு விழித்துக் கொள்ள....அதைக் கவனிக்கத் தொடங்கினேன்...

நான் கூடத்தான் முகில்...இப்போ உன்னை தொட்டுக் கொண்டிருக்கிறேன் அவ்ளோதான் எனக்கு வேறு ஒண்ணும் தப்பாத் தெரியல......

அவள் என் காது கடித்தாள். 

உள்ளுக்குள் ஏதோ தடம் புரள அவளை இறுக்க அணைத்தேன். இருவர் உடம்புக்குள்ளும் சூடு பரவத் தொடங்கியது.

மூச்சிறைக்க....அவளின் முகம் பார்த்தேன். பூர்ணா...ஆர் யூ ஓ.கே.......இயங்கிக் கொண்டே கேட்க....

பாதி விழிகள் சொருக...அப்சல்யூட்லி...வீ ஆர்......முகில்...

ஒரு வீணையை எப்படி மீட்டுவது என்பது கலை. விபரமறியாமல் அதன் தந்திக் கம்பிகளில் விளையாடும் போதும் ஏதேதோ சப்தங்களை அது அபஸ்வரங்களாய்  வெளிப்படுத்துகிறது ஆனால் எந்தக் கம்பியை எப்படி மீட்டவேண்டும் என்ற அறிவோடு அதை அணுகும் போது அங்கே தெய்வீக இசை பிறக்கிறது.

காமம் என்பதை எப்போதும் இனப்பெருக்கத்தோடு தொடர்புபடுத்தியே இந்த சமூகம் அறிந்து வைத்திருக்கிறது. இடைவிடாமல் கேட்கும் சங்கீதம் என்ற ஒன்று இல்லை என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். மனிதர்களின் சுவாரஸ்யம் எப்போதுமே இரண்டில்தான் ஒன்று ஆரம்பம், இரண்டாவது முடிவு. ஆரம்பமும் முடிவும் இல்லாத அனாதியான ஒரு சுயத்தைக் கொண்டவர்கள்  இப்படி தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையில் மாட்டிக் கொண்டதுதான் அவித்தை அல்லது மாயா. எந்த ஒரு விசயமும் ஆரம்பிப்பதோ அல்லது முடிப்பதோ அல்ல இந்த பிரபஞ்சத்தின் ரகசியம் என்பது....அது எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பது என்பதைக் கடந்து வேறு எதுவும் அங்கே முக்கியமில்லை.

இயங்குதல் மட்டுமே இங்கே சத்தியம். எப்போது..இயங்க ஆரம்பித்தது...? எப்போது முடியும் இந்த இரண்டு கேள்விகளுமே படு அபத்தமானவை.

காமம் என்பது மனித அகந்தை கரைந்து பிரபஞ்ச மூலத்தை தொடும் ஒரு நிலை. அதன் உச்சம் என்பது மீண்டும் நாம் கடவுள் தன்மையிலிருந்து சரேலென சறுக்கி விழுந்து மனமென்னும் கூட்டுக்குள் மனிதனாய் ஒடுங்கும் நிலை. மலை முகட்டில் ஏறுவதும், அதன் உச்சியில் இருந்து எல்லாவற்றையும் ரசிப்பது சுகம் என்றால்....அதன் உச்சியிலிருந்து மீண்டும் தரை நோக்கி விழுதல் சுவாரஸ்யம். சில கணங்கள் நீடிக்கும் அந்த சுவாரஸ்யம் நீடிக்காமல் தரை தொட்டவுடன் முடிந்து போகிறது. பின் மீண்டும் மலையேறுதலும், மேலிருந்து கீழே விழுதலும்..என்பது போல்தான் காமம் இங்கே கையாளப்படுகிறது.  உச்சம் தொடுவது என்பது உச்சத்தில் நிற்பது. அதிலிருந்து கீழே விழுவது அல்ல. இப்படியாக உச்சம் தொடாமல் நகர்ந்து, நகர்ந்து நெருப்பாய் எரியும் காமம் முடியவேண்டும் என்றொரு அவசியமில்லாத  நிலையில்.....

பூர்ணாவோடு இயங்கிக் கொண்டிருந்தேன். எங்கிருந்தோ வந்த ஒன்று தன்னை மீண்டும் அங்கே கொண்டு செல்லும் நிகழ்வொன்றை நிகழ்த்திக் கொள்ள இரு உடல்கள் சேர வேண்டிய நிர்ப்பந்தமே திருமண பந்தமென்னும் கட்டுப்பாடாய் முறைப்படுத்தி மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. தன்னை தானே பல்கிப் பெருகி விருத்தி செய்து கொள்ளும் அதே நேரத்தில் தன்னை யாரென்றும் உணர்ந்து கொள்ள தனக்குத் தானே வைத்துக் கொண்ட உச்ச வசியம் காமம். காமத்தை அறிய முடியாமல் வழுக்கி விழுந்து விட்டு அது கொடுக்கும் உச்சத்தை மட்டும் கற்பனை செய்து கொண்டே இங்கே காமத்தை வரையறுத்துக் கொள்கிறார்கள்.


தந்த்ரா காமத்தைப் பெண்ணைக் கொண்டு ஆணையும்,  ஆணைக் கொண்டு பெண்ணையும் பயிலச் சொல்கிறது. பிறிதொரு நாளில் ஆணுக்கு பெண்ணாயும், பெண்ணுக்கு ஆணாயும் பிரபஞ்சமே ஆகிப் போகையில் அங்கே யாதொரு துணையும் தேவையில்லாமல் போகிறது.  பிரபஞ்சத்தோடு சல்லாபித்து சல்லாபித்து மனம் கழிந்துப் போய் யாராலும் தடுக்க முடியாத மிகபெரிய உணர்வு நிலையில் மூழ்கிப் போய் தன்னை கரைத்துக் கொண்டு பிரபஞ்சத்தில் காணாமல் போய் விடவும் முடிகிறது. ஆதி உணர்வு என்பது கோடாணு கோடி கூடலின் உச்ச சுகத்தை ஒத்தது என்று நான் சொல்லுமிடம் கூட மட்டுப்பட்டதுதான்.  அதைப் பற்றி அதிகம் விவரித்தால் அது ஒரு கேலிச் சித்திரமாய்ப் போய்விடும்....

பேச்சற்று கிடந்த அந்த பொழுதில் சமூகக் கட்டுப்பாடுகளும் ஒழுக்க நெறிகளும் வெற்று மாயபிம்பமாய்த் தெரிய மூச்சு இறைத்துக் கொண்டிருந்தது இருவருக்கும். போதும் என்று தோன்றிய போது....எழுந்து அமர்ந்த அந்த நிலையில் காமத்தை சட் டென்று முடித்துக் கொள்ள தோன்றாமல் அந்த உணர்வினை அணைந்து விடாமல் மெல்ல அப்படியே உடல்களுக்குள் தேக்கிக் கொண்டு நீரிலிருந்து நீர் விலகுவது போல விலகிக் கொண்டோம்.

பேசுவதற்கு ஒன்றும் இல்லாமல் இருந்தது. சப்தமில்லாமல் விழிகள் மூடி கிடந்த சூழலை மெதுவாய் கண் திறந்து நான் கலைத்த போது உடை மாற்றிக் கொண்டு  தரையில் அமர்ந்தபடியே பூர்ணா என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்....நிமிர்ந்து அவள் முகம் பார்த்தேன்....

உடலுக்குள் இருந்த அதிர்வுகள் கூடாமல், குறையாமல் மூளையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தன. மூளையைத் தொடத் தொட அவை அனுபவமாகி நினைவுப்பகுதிகளில் நிறைந்து கொண்டிருந்தன. 

பூர்ணா இப்போ  நடந்த விசயம் உடல் ஈர்ப்பா? முதல்ல இது சரியா, தப்பா...?

நேத்துதான் உன்னைப் பாத்தேன்....அடுத்த நாள் இப்டி ஒரு சூழலுக்குள்ள நாம வந்து விழுந்துடுவோம்னு நினைச்சுக் கூட பாக்கலை...ஏதோ படம் பாத்தது மாதிரி, கதை படிச்ச மாதிரி என்னால....நம்பவே முடியலை....ஆக்சுவலா....திட்டமிடாமலே இது நடந்துடுச்சு....

பூர்ணா ஆழமாய் என்னைப் பார்த்தாள். முகில் மழை பெய்யறதுக்கு என்ன காரணம் இருக்க முடியும் இல்லை அதுக்கு காரணம் வச்சுக்கிட்டு மேகங்கள் சூல் கொண்டு மழையா பெய்யணும்னு ஆசைப்பட்டா மட்டும் மழை பெஞ்சுடுமா என்ன.... 

எப்போ மழை பெய்யணுமோ அப்போ பெய்யும்...!!!!

ஒரு மழை பெய்வதற்கு முன்னும் பின்னும் அந்த மழையை பத்தி சொல்ல ஒண்ணுமே இல்லை.  மழை பெய்யும் போது மட்டும் மழை, மழையாகிறது. விரும்பினால் நனையலாம், விரும்பாவிட்டால் நனையத் தேவையில்லை. விரும்பாமல்  இருப்பவர்களை இழுத்துக் கொண்டு போய் நனைய வைத்தாலும் தப்பு...நனைய விரும்புபவர்களை தடுத்து நிறுத்தினாலும் தப்பு....

நான் நனைய விரும்பினேன்...நனைந்தேன்.  மீண்டுமொரு மழை வேண்டுமென இப்போது நான் ஆசைப்பட மாட்டேன்...

இன்னொரு பொழுதினில்
முகிலோடு காற்று கூடலாம்
கனத்த மழையொன்றும் பெய்யலாம்
சப்தங்கள் செய்து கொண்டே
பூமியைப் போன்று 
சந்தோசத்தில் நனைந்தும் கிடக்கலாம்...
எப்போதும் வாய்ப்பதில்லை
மழையில் நனையும் வாய்ப்பு....
நனைந்தபின்பு எப்போதும்
நகராத நினைவுகளைப் போல....!

முகில் நனைத்த மழையில் இந்த பூரணமானாள் பூர்ணா...சொல்லிவிட்டு தன்னை முழுதுமாய் சரி செய்து கொண்டு சோபாவில் விழுந்தாள்.

நான் உனக்கு இப்போது யார் பூர்ணா? நீ என் காதலியா? உறவு கொண்டதால் நான் உன்னை மணம் முடிக்க வேண்டுமா? உன்னை இப்படியே விட்டு விலகினால் நான் செய்தது தவறா? நிறைய கேள்விகள் எனக்குள்ள அலை மோதுது....

பூர்ணா தலை முடியைச் சரி செய்த படியே என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்....

அவள் பார்வை எனக்குள் ஊடுருவி ஏதேதோ இம்சைகள் செய்தது...

சொல்லு பூர்ணா............மீண்டும் அவள் மெளனம் கலைத்தேன்...                                            ... பாடல் தொடரும் ....தேவா சுப்பையா...

Saturday, September 28, 2013

தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 4


இதுவரை...
இனி....

சிரித்துக் கொண்டே கேட்ட பூர்ணாவின் ஊதாக்கலரில் சிறு பூக்கள் சிதறிக் கிடந்த வெள்ளை நிறச் சுடிதார் அவளுக்கு கூடுதல் வசீகரம் கொடுக்க...அவள் உள்ளே வருவதற்கு முன் நான் மறைக்க நினைத்த மது பாட்டில்கள் எங்கே இருக்கின்றன..வரவேற்பரையிலா..ப்ரிட்ஜிலா இல்லை கிச்சனிலா..புத்திக்குள் கணக்குப் போட்டபடியே..யோசித்துக் கொண்டிருந்தேன்...

நோ.. நோ.. வாங்க.. வாங்க.. வழிந்த படியே வீட்டுக்குள் அவளை அழைத்தேன்..! மது அருந்துதல் எப்போதுமே ஒழுக்க நெறிமுறைகளுக்கு எதிராய்த்தான் பார்க்கப்படுகிறது. மது அருந்தி விட்டு குடித்தேன் அதனால் இப்படி ஆனது, அப்படி ஆனது என்று சொல்லி தப்பித்துக் கொள்ளும் கோழை மனிதர்களின் விழிப்புணர்வில்லாத தன்மையால் குடி குடியை கெடுக்கவும் செய்தது. புரிந்து தெளிந்து அளவாய் அருந்துகையில் மது மிகப்பெரிய சந்தோசமாகிறது. அறிதலும் புரிதலும் இருந்தால் வாழ்க்கையே சுகம்தானே...அதுதானே இங்கே இல்லாமல் இருக்கிறது.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா... பிரிட்ஜில்தான் இருக்கிறது. பெரு மூச்சு விட்டபடியே... ஒரு பத்து நிமிடம் கொடுத்தால் பிரஷ் அப் ஆகிட்டு வந்துடுவேன்...அவளிடம் சொன்னேன். 

பத்து மணி வரை உங்களுக்கு ஒரு பத்து நிமிடம் கிடைக்கவில்லையா...

கேள்வி கேட்டாளா இல்லை ஏதேனும் அடுத்து கவிதை சொல்கிறாளா?  இரண்டு நொடிகள் அவளின் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டு....கிவ் மீ 10 மினிட்ஸ்...வில் ஹேவ் ஷவர் அண்ட் கம்....பாத்ரூமிற்குள் ஓடினேன்....

ஆண்களின் உலகம் எப்போதுமே கதாநாயக மனோபாவத்தில் கட்டமைக்கப்பட்டு வார்க்கப்பட்டது. தாய்வழிச் சமூகம் என்றறியப்படும் திராவிட சமூகத்தில் பெண் தான் எல்லாமாய் இருந்திருக்கிறாள். அவள்தான் ஒவ்வொரு குழுவாய் வாழ்ந்த ஆதி மனிதர்களை வழி நடத்தி இருக்கிறாள். உணவு தேடுவதிலிருந்து, தங்களின் குழுவுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் தலைமை தாங்கி எதிரிகளிடம் சண்டையிடுவதிலிருந்து, திட்டங்கள் தீட்டி பருவகாலங்களுக்கு ஏற்றார் போல தங்களின் இருப்பிடத்தை மாற்றிக் கொள்வதிலிருந்து எல்லாமே பெண்தான்.

ஒரு பெண்தான் தனது துணையை தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள்.  ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை தனது துணையாகக் கொண்டு அவள் நகர்ந்த ஆதி சமூகத்தில் உறவுகள் என்று யாதொரு வரைமுறையும் இருந்திருக்கவில்லை பருவம் எய்திய பின்பு புணர்ச்சி...என்று உள்ளுணர்வு என்ன சொன்னதோ அதை செய்து நகரும் ஒரு இயல்பான வாழ்க்கை முறை இருந்தது. அங்கே குற்ற உணர்ச்சி என்ற ஒன்று இருந்திருக்கவே இல்லை...மிருகங்களை கீழ்த்தரமாக மனிதன் நினைக்க ஆரம்பித்தது எல்லாம் அவன் குறுகலான மனோநிலையில் சிந்திக்க ஆரம்பித்த பின்புதான்...

ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு இயல்பு இருந்தது. ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்றார் போல மாறி மாறி சிந்தித்து தங்களை தற்காத்துக் கொள்தல் ஒன்றே உயிர்க் கொள்கையாய் இருந்தது. வாழவேண்டும் என்பதும் இனப்பெருக்கம் செய்யவேண்டும் என்பது மட்டுமே உயிர்களின் தலையாய நோக்கமாய் இருந்தது. இப்படியான ஒரு காலச்சூழலில் பெண் மட்டுமே எல்லாவற்றையும் அரவணைப்பவளாக, எதிர்த்து நிற்பவளாக, திட்டமிடுபவளாக ஒரு சூப்பர் பவராக இருந்திருக்கிறாள்....

இதில் எப்போது ஆண்கள் கதாநாயக கட்டமைப்பை உருவாக்கி தங்களை இனத்தின் தலைவர்களாகவும், குழுக்களின் தலைவர்களாகவும் ஆக்கிக் கொண்டார்கள் என்றுதான் தெரியவில்லை. பெண்களை அவர்கள் குறுக்குப் புத்தியால் அடக்கி ஆண்டதைத்தான் வரலாறு முழுதும் பதிந்து வைத்திருக்கிறார்கள்....ஆனால் பெண் தோற்கடிக்கப்பட வில்லை..அவள் விட்டுக் கொடுத்திருக்கிறாள் அவ்வளவே....!

குளித்து விட்டு வெளியே வந்து ஷார்ட்ஸ் டீ சர்ட்டுக்குள் நுழைந்து பூர்ணாவிற்கும் எனக்கும் காஃபி போட்டு கொண்டு வந்து அவளின் முன் காபியை வைத்து...ஹேவ் இட்.. பூர்ணா...என்றேன்...

ஓ...இவ்ளோ சீக்கிரம் குளிச்சுட்டீங்க...காக்கா குளியலா...? கண்ணடித்து கிண்டல் செய்தாள்....

குளிருக்கு இதமாயிருந்த காபியை உறிஞ்சியபடியே அவளின் கண்ணடிப்பை ரசித்தேன். பெண்களின் வசீகரமே அவர்களிடம் குடி கொண்டிருக்கும் நளினம்தான். ஒரு ஆணுக்கு பெண்ணின் மென்மையான எல்லா செயல்களுமே பிடித்துப் போகிறது. அவள் பேசுவதிலிருந்து, அழகாய் முடி ஒதுக்குவதிலிருந்து, சிரிப்பதிலிருந்து எல்லாவற்றிலுமே அவர்கள் நளினமாய் நடந்து கொள்கிறார்கள். பூர்ணா சோபாவில் அமர்ந்திருந்த விதமும் அவள் காஃபியை உறிஞ்சிய விதமும் ஒரு ஸென் ஹைக்கூவை வாசிப்பதைப் போலிருந்தது....

ஆள் அரவமற்ற 
சாலையோரங்களை
அலங்கரிக்கும் மரங்கள்
எல்லாம் பூக்கின்றன
பிறகு ஒன்றன் பின்
ஒன்றாக விழுகின்றன...
ஒன்று விழுகிறது..
பின் சிறிது நேரம்...
எதுவும் விழுவதில்லை....
பின் மற்றொன்று விழுகிறது...

சந்தோசம் என்பது நிகழ்வு அல்ல. நிகழ்விற்குப் பின்னான நினைவு.......

ஹேய்.......முகில்...வேர் ஆர் யூ மேன்.....?

கனவைக் கலைத்தது கவிதை. தெளிந்த நீரில் அழுந்தாமல் விழுந்த ஒரு சிறு பூவாய் என்னை சலனப்படுத்திக் கொண்டிருக்கும் உன்னைத்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று எப்படி அவளிடம் சொல்வது...


தேவதைகள் வெள்ளை உடைதான் அணியுமாம் பூர்ணா..உன்னை மாதிரி இருக்கவேண்டும் என்றா...?

ஹா.. ஹா சட்டென்று சிரித்தவள்.....வைரமுத்து  எல்லோரையும் கெடுத்து வைத்து விட்டார் என்றாள்.....

வைரமுத்துவின் வார்த்தைகள்தானே பெரும்பாலான இளைஞர்களை காதலூருக்கு கூட்டிச் சென்று கற்பனைப் பால் புகட்டிய தாய்.....

கவிதைகள் என்றாலே கிளர்ச்சியூட்டுபவையாய் இருக்கவேண்டும். இரண்டு வரியை வாசித்து விட்டு இரவும் பகலும் நாம் உறக்கம் தொலைக்க வேண்டும். வைரமுத்து கற்பனைகளுக்கு சிறகு கொடுத்தவர் என்றால் கலீல் ஜீப்ரான்....என் கனவுகளுக்கு வர்ணம் தீட்டியவர்....

முறிந்த சிறகுகள் வாசித்து மூன்று இரவு இரண்டு பகல்கள் நான் எங்கோ தொலைந்து போயிருந்தேன்...நான்காம் நாள்...ரிச்சர் டாக்கின்ஸைப் படித்து மீண்டெழுந்து வந்தேன். .....

ரிச்சர் டாக்கின்ஸ்... யார் அவர்...? அவளிடம் கேட்டேன்...

ஓ.. ..நீங்கள் த காட் டெலுயூசன்ற ( The God Delusion) புக் படிச்சது இல்லையா ? பேசிக்கலி அவர் ஒரு எத்தாலிஜிஸ்ட்....கனவுகளுக்கு அவர் வேலை கொடுப்பதே இல்லை. நிகழ்வுகளுக்கும் அர்த்தம் கொடுப்பதும் இல்லை...

நீங்க சென்னை வரும் போது அந்த புத்தகமும் த  கிரேட்டஸ்ட் ஷோ  ஆன்  எர்த்  (The Greatest Show on Earth) இந்த ரெண்டு புத்தகமும் தர்றேன் மறக்காம வாங்கிப் படியுங்க...

டார்வின் தியரிய பேஸ்பண்ணி நிறைய நிறைய விசயம் அதில பேசி இருப்பாங்க முகில்...

கடவுள் இல்லேன்னு சொல்றீங்களா...பூர்ணா...?

இந்த "ங்களா"  போடுறத கொஞ்சம் ஸ்டாப் பண்றீங்களா சார்...?  நான் உங்கள விட சின்னப் பொண்ணுதான்....தலை முடியைப் பின்னுக்குத் தள்ளியபடியே நாக்கு காட்டி பளிப்பு காட்டினாள்...

ஆல்ரைட்... கடவுள் இல்லேன்னு சொல்றியா...நீ..? கேட்டேன்

இருக்க வேண்டிய அவசியம் இல்லேன்னு நினைக்கிறேன்....பதிலினாள்..

ஏன் அப்டி நினைக்கிற...?

கடவுள் உனக்கு எதுக்கு தேவைப்படுறார் முகில்..? வாழ்க்கைக்கு கடவுளின் அவசியம்தான் என்ன....? அதை சொல்லு முதல்ல....ஒழுக்கமா இருக்கறதுக்கு, இன்னொரு மனுசன துன்பப்படுத்தாம இருக்கறதுக்கு, மொத்ததுல அடுத்த மனுசன தொந்தரவு பண்ணாம நிம்மதியா வாழ்றதுக்கு ... வேற எதுக்கு கடவுள் தேவைப்படுறார்..? கடவுள் மனிதர்களுக்கு ஒரு பெரிய டைம் பாஸ்....அவர் நிஜமா இருக்கணும்னு  அவசியமில்லை...ஹா... ஹா... சிரித்தாள்.

யூ  நோ முகில்...நான் ஒரு ஆன்மீகவாதி..ஆனால் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவள் இல்லை. கடவுள் இல்லை என்றும் சொல்கிறவளும் இல்லை. நான் இருக்கிறேன்,  நீ இருக்கிறாய்.. இந்த வாழ்க்கை இருக்கிறது....அவ்வளவுதான்....

என்ன பூர்ணா ஓஷோவுக்குள் வழுக்கி  விழுகிறாயே....? அவள் விழிகளை பார்த்துக் கொண்டிருந்தேன்...

இஸ் இட்... ?ஆக்சுவலி.. நான் அதிகம் ஓஷோவைப் படிச்சது இல்லடா.......ஐயம்..சாரி...டா போட்டுட்டேன்...உனக்கு ஒண்ணும் பிரச்சினை இருக்காது இருந்தாலும் பரவா இல்ல...

இட்ஸ் ஓ.கே.. நோ. ..ப்ராப்ளம் அட் ஆல்..எல்லா ஆண்களையும் போல நானும் சொல்லி வைத்தேன்....


வாழ்க்கையின் எல்லா தருணங்களும் மிக மிக அழகானவை முகில். இங்கே ஆராய்ச்சி செய்து பொழுதைக் கழிப்பதை விட  அனுபவித்து வாழ்வதே மேல்...நிறைய புத்தகங்களை வாசித்து, நல்ல திரைப்படங்களைப் பார்த்து, அற்புதமான உறுத்தாத இசையைக் கேட்டு  என் வாழ்க்கையை நகர்த்திக்கிட்டு இருக்கேன் முகில்...

தாஸ்தோயெவெஸ்கியோட "வொயிட் நைட்ஸ் "(White Nights) படிச்சிருக்கியா....?

இல்லை பூர்ணா.. என் வாழ்க்கை முழுதும் இயற்கை, தேடல் இப்டியேதான் போய்ட்டு இருக்கு, சுஜாதா, பாலகுமரான், ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், கி.ராஜநாரயணன், கல்கி, இப்போ அப்போ அப்போ ஜெயமோகன் நிறைய ஓஷோ....போதும்ன்ற அளவுக்கு சென்  ஹைக்கூக்கள் பற்றிய  ஆராய்ச்சி, சேகுவரா, பிரபாகரன், மாவோ, லெனின், காரல் மார்க்ஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ, லாவோட்சூ, கன்பூசியஸ், சிக்மண்ட் பிராய்ட் இப்டி...ஏதோ ஒரு வழியில நான் பயணிச்சாலும்.... சிவம் அப்டீன்ற வெற்றிடம்தான் இடம்தான் என்னோட பூர்வீகமான உள்ளமையா இருக்கு...

ஏதோ ஒரு தேடல் எனக்குள்ள இருக்கு அந்தத் தேடலை நான் வலியோட செய்யாம அனுபவிச்சு செய்றேன் பூர்ணா..எனக்கு  வாழ்க்கை ரொம்ப அழகான ஒரு விசயம். இந்த அழகை அனுபவிக்கிற அதே நேரத்துல இதை அனுபவிக்கிறது யாரா இருக்கும்னு ஒரு கேள்வி எப்பவும்  எனக்குள்ள இருந்துட்டே இருக்கு...

நான் அவளைப் பார்த்தேன்....

வொயிட் நைட்ஸ் படிச்சுட்டு ஒரு இரவு முழுதும் பிரமிச்சுப் போய் உட்கார்ந்து இருந்தேன்.  வாழ்க்கையோட அழகு அதுல இருக்குற முரண்கள்தான்னு தெளிவா புரிய ஆரம்பிச்சுது... எப்பவுமே தனிமையில இருந்து அவஸ்தப்பட்டுக்கிட்டு இருக்க ஒருத்தன் நாஸ்டென்கான்னு ஒரு பெண்ணை சந்திக்கிறான்...அவளோட காதலனை அவ கண்டிபிடிக்க நிறைய கடிதங்கள் எழுதிக் கொடுத்து உதவுறான்.. ஒரு கட்டத்துல இரண்டு பேருமே காதலிப்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் வரும் போது நாஸ்டென்காவோட லவ்வர் வந்துடுறான், அவ அவன் கூட போய்டுறா....நம்ம ஹீரோ மீண்டும் தனிமைக்கு தள்ளப்படுறாரு...

அவனோட வாழ்க்கையில காதலும் கிடையாது. வேறு துணையும் கிடையாது. தனியாதான் நகரணும் அப்டீன்றது அவனுக்கு விதியாகிப் போகுது...! குறிப்பா ரஷ்யன் நாவல்கள் பயணிக்கிற தளங்களே அலாதியானவை அது நாம் எப்போதும் பயணித்திராத ஒரு உலகத்துக்குள்ள நம்மள கொண்டு போய் சேத்துடும்..முகில்..அதுதான் அந்த எழுத்துக்களோட ஸ்பெசாலிட்டி அதுவும் தாஸ்தோவெஸ்கியோட எழுத்துக்கள் நாம் பார்த்திராத வர்ணங்களால் நமக்கு புதுப்புது ஓவியங்களை  படைத்துக் காட்டும்...அந்த ஆச்சர்யத்தை விவரிக்க முடியாது வாய் பிளந்து ரசித்துக் கிடக்க மட்டுமே நம்மால் முடியும்...

காதல் அப்டீன்ற வார்த்தை காமத்துக்கான துருப்புச் சீட்டா மட்டும் இருக்குமோன்னு கூட  பல தடவை நான் நினைச்சு இருக்கேன்டா....நீ என்ன நினைக்கிற....? .என்னைச் சீண்டினாள்...

ஹ்ம்ம்ம்ம்ம்ம் நான் பெருமூச்சு விட்டேன்...எப்டி...பூர்ணா இப்டி எல்லாம்...?! ஒரு பெண்ணை அறிவு சார்ந்து பார்க்கும் பார்வையும் அதனைச்  சார்ந்து எழும் உணர்வுகளும் எப்படி இருக்கும்னு இப்போ எனக்குப் புரியுது...யூ ஆர் கிரேட்....

காதல், காமம் எல்லாமே நாம எதுவுமற்றுப் போவதற்கான கேட்டலிஸ்ட்ஸ் அப்டீன்னு நான் நினைக்கிறேன்...

எதுவுமற்றுன்னா...? திரும்பக் கேட்டாள்...

நீ கேட்டியே ஆரம்பத்துல கடவுள் ஏன் இருக்கணும்னு அந்த கேள்வியை உடைக்கத்தான்....என்றேன்...

புரியல.. அவள் புருவம் உயர்த்தினாள்.

கடவுள் எதுக்கு இருக்கணும்னு அல்லது கடவுளின் அவசியம் என்ன?ன்னு கேட்டீல்ல அந்த கேள்வி காமத்தைப் புரிஞ்சுக்கிட்டா உடைஞ்சு போகும்னு நினைக்கிறேன். மரணம், ஜனனம் இது ரெண்டுதான் மனித வாழ்க்கையின் சூட்சுமம். மரணம் அப்கோர்ஸ் நாம செத்ததுக்கு அப்புறம் பெறப்போகுற ஒரு அனுபவம் அதை மறுபடி வந்து மனுசங்க கிட்ட பேச முடியாது...பட் ஜனனம்....நாமதான் அதுல பங்கெடுத்துக்கிறோம்...ஒரு உயிர் உருவாகும் மிக நுட்பமான இடம் காமம்....சோ.. காமத்தை விளங்கிக்க ஆரம்பிச்சா ஏதோ ஒண்ணு புரியும்னு தோணுது...

என்னைப் பாத்தா உனக்கு ஏதாச்சும் தோணுதா..? கேட்டாள்....

என்ன சொல்வது.. என்று நான் உள்ளுக்குள் தடுமாறிக் கொண்டிருந்தேன்.....கொடைக்கானல் மிரட்டத் தொடங்கி இருந்தது....                                                     ... பாடல் தொடரும்....தேவா சுப்பையா...Friday, September 27, 2013

தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 3இதுவரை...இனி...

அது ஒண்ணும் பிரச்சினை இல்லை முகில்...பார்க்கலாம்...நாளைக்கு காலையில  வர்றேன்... ஐ வில்  நாட் கோ வித் மை ப்ரண்ட்ஸ்...அங்க நான் உங்களை கூப்டப்ப பின்னால் இருந்த்துச்சே அதுதானே உங்க வீடு....நீங்க வீடு விட்டு வெளியில வரும் போதே நான் தூரத்துல பார்த்தேன்....

இப்போ கிளம்புறேன்......

கை அசைத்தபடியே ஓடியவளை பார்த்துக் கொண்டிருந்தேன் அவள் போகும் வரை...

பெண்கள் எப்போதும் ஒரு விசயத்தை முடிவு செய்ய ஆண்களைப் போல பல்வேறு தரப்பட்ட ஆலோசனைகளைக் கேட்பது கிடையாது. அவர்களுக்கு விசாரித்து அறிதல் என்னும் ஒரு விசயம் பற்றி அதிகம் தெரியவே தெரியாது. இயல்பாகவே பெண்களின் உள்ளுணர்வு பிரபஞ்சத்தின் ஆதி உணர்வோடு முடிச்சிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு உடல் எடுக்கும் ஆன்மா பெண்ணாய் பிறக்கவேண்டும் எனில் பூர்வஜென்மத்தில் இருக்கும் பக்குவ நிலையைப் பொறுத்தே அந்த நிகழ்வு நிகழ முடியும்.

ஆன்மாவில் ஆண் பெண் கிடையாது ஆனால் ஒரு பெண்ணின் உடலுக்குள் ஆன்மா நுழைய வேண்டுமெனில் நிறைய சகிப்புத்தன்மைகள் கொண்ட பூர்வ ஜென்ம அனுபவங்கள் அதற்கு அவசியமாகிறது. இயல்பிலேயே பெண்கள் மனமற்ற நிலைக்கு எழுதில் செல்லக் கூடிய வகையில்தான் அவர்களின் உடற்கூறுகளும், அனுபவங்களும் அமைந்து போகின்றன. சரணாகதி என்ற வார்த்தை பெண்களின் இயல்பிலிருந்து உணர்ந்து சமைக்கப்பட்ட வார்த்தை. கேள்விகள் கேட்காமல் உள்ளுணர்வு அவர்களுக்கு சரி என்று சைகை செய்த உடன் சரணாகதி அடையும் பெண் தான் ஏற்றுக் கொண்ட விசயம் தவறாகவே போனாலும் அதைச் சரி செய்து தனக்கு ஏற்றவாறு மாற்றியும் கொள்கிறாள்.

உலகில் இருக்கும் பெரும்பான்மையான மதங்களில் பெண்கள் இறைத்தூதராகவோ அல்லது ஞானியர்களாகவோ இருந்தது கிடையாது. பெண்கள் ஆண்கள் சொல்வதை ஏற்று நடப்பதாகவே பெரும்பாலும் அவர்களின் மதக்கோட்பாடுகள் போதிக்கின்றன. இவை எல்லாம் ஆணாதிக்கம் கொண்ட ஒரு சமூகம் பெண்களை போகத்தை மையப்படுத்தி பார்த்ததின் விளைவுகள்தான். பெண்ணுக்கு சட்டங்கள் தீட்டி அவள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கூறும் ஆண்களே..நீங்கள் யார் அவர்களுக்கு உரிமைகள் கொடுக்க....? நீங்கள் யார் அவர்களுக்கு வரைமுறைகள் படைக்க.....உங்களைப் போலவே அவர்களும் இந்த பூமிக்கு வாழ வந்த சரிபாதிகள்...என்றெல்லாம் கேள்விகள் கேட்டுப்பார்க்கையில் அவற்றை மறுக்க கடவுளை துணைக்கு அழைத்து வந்து பயமுறுத்தும் பல சமூகங்கள் இந்த பூமியில் இருக்கின்றன.

ஒரு ஆணுக்கு பிடித்த ஒன்று கொஞ்சம் முரண் பட்டாலும் அதை விட்டு நகர்ந்து விடுவான் ஆனால் ஒரு பெண்ணுக்கு பிடித்த ஒன்றை அவள் ஏற்றுக் கொண்ட பின்பு கோடி முரண்கள் அங்கே வந்தாலும் அதை விட்டு அவள் எளிதில் நீங்குவது கிடையாது. அதை சரியாக்கி தன்னுடன் வைத்துக் கொள்வாள்..இல்லையேல் அதை சரியாக்குவதிலேயே போராடி மடிந்து போவாள்...

சூழல் மாறினால் ஆண்கள் எளிதில் மாறிவிடுவார்கள் ஆனால் பெண்கள் அப்படி அல்ல...எப்போதும் பற்றியதை விடுதல் அவர்களுக்கு மிகக்கடினம். அப்படியே விட்டாலும் பற்றியதை மறப்பார்கள் என்று சொல்லவே முடியாது. ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவள் எப்படிப்பட்டவள் என்று ஒரு ஆணால் கணிக்க முடியாது. அப்படி கணிக்க அவன் வெகுதூரம் பயணிக்க வேண்டிவரும். ஒரு பெண் பார்த்த மாத்திரத்திலேயே ஒருவனைக் கணித்து விடுகிறாள். தவறான ஆண்களைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு வாழ்ந்து ஏமாந்து போகும் பெண்கள் கூட அறிந்தே ஏமாந்து போகிறார்கள்....

அப்போதும் அவனுடனே வாழ்வேன் என்றும் கூறுகிறார்கள். மேலோட்டமாக பார்த்தால் அது முட்டாள்தனமாக தோன்றும் ஆனால் அவர்களுக்கு தெரியும் அவர்களால் முரண்களையும் மாற்றி சரியாய் ஆக்க முடியும் என்று...! பெண் மென்மையானவள் ஆனால் வலிமையானவள். தாய்வழிச் சமூகமாய் இருந்த நமது ஆதி நாகரீகத்தில் அவளே தன் இனக்குழுக்களை வழி நடத்தும் தலைவி. அவளே உணவு தேடிச் செல்கையில் வழி நடத்துவாள். எதிர்களிடம் இருந்து தனது கூட்டத்தைக் காக்க வியூகங்கள் வகுத்து போரிடுவாள். ஆண் அவளின் பின்னால்தான் அப்போதெல்லாம் இருந்திருக்கிறான்.

ஆண் அறிவினால் சிந்திப்பவன். பெண் உணர்வினால் சிந்திப்பவள். அறிவு அழியக்கூடியது. உணர்வு அழியாதது. உணர்வுதான் இந்த பிரபஞ்சத்தை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பது. சட்டென்று ஒரு பாதுகாப்பு உணர்வு வராமல் ஒரு பெண் எந்த ஒரு ஆணையும் அணுகுவதே இல்லை....அவள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனே பெரும்பாலும் நடந்து கொள்கிறாள்.

பூர்ணாவை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்...வரவேற்பரைத் தாண்டி வெளிவாசலுக்குச் செல்லும் படிக்கட்டில் அமர்ந்திருந்தேன். இருள் என்பதன் அர்த்தம் நகரத்தில் வாழ்பவர்கள் என்று மட்டுமில்லை கிராமங்களும் கூட அறிவதில்லை. அவர்கள் இருள் என்பதை வெளிச்சமின்மை என்று மட்டுமே கருதுகிறார்கள். இருள் வெளிச்சமின்மை மட்டுமல்ல. அது சப்தமின்மை, சிந்தனையின்மை, பொருளின்மை, இப்படி பல இன்மைகளைக் கொண்ட கருமை சூழ் இருளை அனுபவிக்க சப்தமின்றி புலனடக்கி இருக்கவேண்டி இருக்கிறது. இருள் என்பது ரகசியம்.


பூச்சிகள், பறவைகளின் சிற்சிறு சப்தங்களும் அடங்கிப் போய் பின்னிரவு தொடங்கி இருந்த அந்த மலைப்பிரதேச கானகத்தின் அனுபவம் அதி சுவாரஸ்யமாய் இருந்தது. இருளில் உறங்கும் மலைகளும், இருண்ட வானிலிருந்து எட்டிப்பார்த்து சிரிக்கும் நட்சத்திரங்களும், இன்னும் பதினைந்து நாளில் பார் நான் எவ்வளவு புஷ்டியாய் மாறிக் காட்டுகிறேன் என்று சவால் விடும்...சிறு நிலவும், பேரமைதியை வருடிக் கொடுக்கும் நீண்ட நெடிய மரங்களும் என்று..என்னைச் சுற்றிக் கிடந்த சூழ்நிலையை விழிகளால் வாங்கி எனக்குள் நிறைத்து பேச்சற்று கிடந்தேன்.

யார் இருக்கிறார்...
யாருக்கு இங்கே...?
மனிதர்கள் மாறி மாறி
வந்து செல்லும்
பெரும் பூமியில்
யோனிகள் வழியே 
குதித்து வெளிவரும்
பிண்டங்கள் எரிந்து
சாம்பலாகும் போதும்
மட்கி மண்ணாகும் போதும்
யார் இருக்கிறார் 
யாருக்கு இங்கே...?

முட்களாய் தைத்த வார்த்தைகளை புத்தியிலிருந்து பிடுங்கிப் போட்ட படியே நான் புகைத்த சிகரெட் கையைச் சுட்டவுடன்...உதறி கீழே போட்டேன்...! ஒவ்வொரு முறையும் தனியே வரும் போதும் ஏதேதோ அனுபவங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது வாழ்க்கை. எப்போதும் நான் கொடைக்கானலை தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள்தான்...ஒன்று தெரிந்த இடம்... இரண்டாவது மலைப்பிரதேசம். கொடைக்கானல் தென் தமிழகத்தின் மிகப்பெரிய சுற்றுலாப் பிரதேசமாக இருந்தாலும், எத்தனை கூட்டம் வந்தாலும் அது குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே பிதுங்கி வழிகிறது. பழனி கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மனிதர்களின் காலடி படாத இயற்கையின் ரகசியங்களை உள்ளடக்கிய பல இடங்கள் இருக்கின்றன. உயரமான இடத்தில் இயற்கை சூழ்ந்த வாழ்க்கைக்கு நடுவே பரபரப்பான சமப்பட்ட நிலத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கை ரொம்பவே அன்னியப்பட்டுப் போகிறது. மாடியிலிருந்து தெருவை வேடிக்கைப் பார்க்கும் ஒரு உணர்வு நமக்கு இயல்பாகவே தோன்றுகிறது.

வேடிக்கைப் பார்த்தல் என்பது தொடர்பற்று இருத்தல். நிகழும் யாவையும், பார்த்து, கேட்டுக் கொண்டிருந்தாலும் அந்த நிகழ்வோடு நமக்கு யாதொரு தொடர்பும் இருப்பதில்லை..!

உறக்கம் மெல்ல தோளில் கை போட்டு தலை தடவி....முதுகு தடவி என்னை இழுக்க...பாதி மூடிய இமைகளோடு படுக்கை அறையை நோக்கிச் சென்றேன்.....இந்த இரவுக்கு எனக்கு மது அவசியமில்லாமல் இருந்தது.....படுக்கையில் தொப் என்று விழுந்தேன். பாதி உறக்கத்தில் அம்மாவின் மார்பகம் தேடும் குழந்தை போல எழுந்து இரண்டு பெக் அடிக்கலாமா என்று தோன்றியது. தோன்றிய கேள்வியை ஆழமான நிசப்தத்துக்குள் உறக்கம் இழுத்துச் செல்ல....மீண்டும் உறங்கிப் போனேன்.

டக் டக் என்று யாரோ கதவு தட்டும் சப்தம் கேட்க....திடுக்கிட்டு விழித்த போது நல்ல வெளிச்சம் வீட்டுக்குள் பரவி இருந்தது. இது என்ன நேற்று மழை வந்து என் ஜன்னல் தட்டியது இன்று புயல் வந்து கதவு தட்டுகிறது என்று யோசித்த படியே கதவினை திறக்க....வாசலில் நின்றிருந்தது புயல் அல்ல...

தென்றல்...

பூர்ணா பூங்கொத்தாய் நின்று கொண்டிருந்தாள். என்னங்க பூர்ணா நேத்து ஒரு குத்து மதிப்பாதான் வீடு தெரியும்னு சொல்றீங்கன்னு நினைச்சேன்.... வீட்டைக் கரெக்டா கண்டு பிடிச்சுட்டீங்க....பொய்யாய் ஆச்சர்யம் காட்டினேன்....

வண்டுகளைத் தேடிப் பூக்கள்
செல்லும் காலங்களில்
மன்மதனின் கரும்பு விற்களுக்கு
வேலையில்லாமல் போகுமாம்....

சொல்லிவிட்டுச் சிரித்தாள். 

நீ கவிதை கூட சொல்வியா...?  என்று கேட்டு விட்டு....

கவிதை சொல்லும்
கவிதைகளைக் கேட்டுக் கொண்டே
பார்க்கவும் முடியும்....
என்பது வரம்தானே...?

நான் சொல்லி முடித்தேன்...

ஓ..கோ....
கவிதைகளை வாசலிலேயே 
நிற்க வைக்கும் கவிஞர்களை
நான் வரம் என்பதா...
சாபம் என்பதா..?

சிரித்துக் கொண்டே கேட்ட பூர்ணாவின் ஊதாக்கலரில் சிறு பூக்கள் சிதறிக் கிடந்த வெள்ளை நிறச் சுடிதார் அவளுக்கு கூடுதல் வசீகரம் கொடுக்க...அவள் உள்ளே வருவதற்கு முன் நான் மறைக்க நினைத்த மது பாட்டில்கள் எங்கே இருக்கின்றன..வரவேற்பரையிலா..ப்ரிட்ஜிலா இல்லை கிச்சனிலா..புத்திக்குள் கணக்குப் போட்டபடியே..யோசித்துக் கொண்டிருந்தேன்...


                                             
                                                      ... பாடல் தொடரும் ...
தேவா சுப்பையா...
Thursday, September 26, 2013

தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 2
இனி....

ஹலோ...எக்ஸ் க்யூஸ் மீ....ஹலோ சார்....

எனக்கு வெகு பக்கத்தில் மூச்சிறைக்க அழைத்த அந்தப் பெண்ணை திரும்பிப் பார்த்த நொடியில் ஸ்தம்பித்தேன்....!

யார் வரைந்து வைத்த ஓவியம் இது...
கால் முளைத்து நடந்து வருகிறது...?
கவிதையொன்று காற்றில்
ஒரு பட்டாம் பூச்சியென பறந்து வருகிறது...

என்று யோசித்த படியே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

நான்.....பூர்ணா...பிரண்ட்ஸ் கூட வந்தேன் வழி மாறிட்டேன்....தனியா வந்தேனா கொஞ்சம் பயந்துட்டேன்...அதான் உங்களை டக்குனு கூப்ட்டேன்.....

மனம் மயக்கும் ஒரு இசையொன்று
புத்திக்குள் பரவி
எண்ணத்தை கிளர்ச்சியூட்டி
ஒரு ஏகாந்த உலக்குக்கு கூட்டிச் செல்லுமே...

அப்படியான உணர்வு நிலைக்கு பயணித்துக் கொண்டிருக்கையில்...ஹலோ...சார்....அவள் என் கனவு கலைத்தாள்...! சொல்லுங்க பூர்ணா...நோ..இஸ்யூஸ்...நான் உங்களை பக்கத்துல மெயின் ரோட்ல கொண்டு விடுறேன்.  நான் சும்மாதான் நடந்துட்டு இருக்கேன்....

தேங்க் யூ சார்...? என்ன தனியா வந்து இருக்கீங்களா இல்லை பேமிலி கூடயா...? இல்லை ப்ரண்ஸ் கூடயா... என் முகம் பார்த்து பேசினாள். எனக்கு  ஏனோ பேசவே பிடிக்கவில்லை. அந்த சூழலும் அவள் தலையில் வைத்திருந்த மல்லிகையின் வாசமும் என்னைத் தொந்தரவு செய்ய...எனக்குள் இருந்த உணர்வு நிலை மனமாக திடப்பட்டுக் கொண்டிருந்தது.

இல்ல நான் மட்டும்தான் தனியா வந்தேங்க...எனக்கு எனக்கு...இன்னும் கல்யாணம் ஆகலை...சொல்லிவிட்டு நீங்க உங்க பேமிலி கூட வந்தீங்களா...? ப்ரண்ட்ஸ் கூட வந்திருக்கிறேன் என்று அவள் சொன்னது தெரிந்திருந்தும்...வேண்டுமென்றே கேட்டேன்.  இல்லை சார் நாங்க ஸ்டே பண்ணி இருக்க ஸ்பின்ஸ்டர் ஹாஸ்ட்டல்ல இருந்து பிரண்ட்ஸ் கூட வந்து இருக்கேன். நான் சென்னை டி.சி. எஸ்...ல வொர்க் பண்றேன்..நேட்டிவ்....

அவளை பற்றி சொல்லி முடித்ததும் என்னுடைய தொழில் பற்றி கேட்டுக் கொண்டாள்.  ப்ராப்பர் ரோடு வந்தவுடன் தூரத்தில் அவளின் தோழிகள் வாகனத்தோடு நின்று கொண்டிருந்தார்கள்.

ஏன் சார் தனியா வந்தீங்க...? கண்களால் என்னை அளந்தவளை சார்னு ஏன் பூர்ணா கூப்டுறீங்க....முகில்னு கூப்பிடுங்க...

ஓ.. சாரி முகில்...தனியா எதுக்கு வந்தீங்க.. மறுபடி பூர்ணா கேள்வியைக் கேட்டு விட்டு கண்களால் ஆவலாய் பார்த்தாள்...

தனியா இருக்கணும்னு இப்டி அடிக்கடி வருவேன் பூர்ணா...என் முப்பதாறு வயது அவளின் இருபத்தேழுக்கு புரியுமா என்று நான் யோசிக்கவில்லை...! ஓ... தனிமை விரும்பியா நீங்க நான் கூடத்தான் என்று அவள் சொல்லி முடித்ததை நான் கேலியாக பார்த்தேன்.....அவளுக்கு பின்னால் வெகு தூரத்தில் நின்று கொண்டிருந்த பட்டாளத்தைப் பார்த்தபடி.....

நோ..நோ..இப்போ வேற வழி இல்ல அதான் எல்லோர் கூடயும் வந்தேன்.. அதோட இல்லாம கல்யாணம் ஆகாத பொண்ணு தனியா வர்ற மாதிரியா இருக்கு முகில் நம்ம நாடு...? சமூகம் பற்றி பேசினாள்....

ஹ்ம்ம்ம் நிறைய பேசணும் உங்க கிட்ட அப்டீன்னு தோணுது...பட் டக்குன்னு ஒரு ஆம்பளைய எப்டி நம்புறதுன்னு ஒரு பொதுபுத்தி கேள்வி கேட்கவும் சொல்லுது....? 


ஏன் தனியா என் கூட அந்த மண் ரோட்ல வரும் போது அந்த பயம் வரலையாக்கும் உங்களுக்கு...?  பயம் மட்டும் இல்லை பூர்ணா இந்த உலகத்துல மனித உறவுகளே மனித வசதிதான். பிடிச்ச ஆணா இருந்தாலோ இல்லை பெண்ணா இருந்தாலோ எல்லாமே ஓ.கே தானே....? பிடிக்காத போது எல்லாமே தப்புதான்..! என்னைப் பொறுத்த வரைக்கும் உறவுகள் எல்லாமே..கொஞ்சம் இப்டி அப்டின்னு இருக்கதாலதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணவே இல்லை...

அட...முகில்..ரொம்ப அழகா பேசுறீங்க...

வழக்கமாய் பெண்களுக்கு ஒரு ஆணைப் பிடிக்க ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் அவளிடம் தென்பட்டன. நானும் உங்களை மாதிரிதான் முகில்...எனக்கும் இப்டி, அப்டி நிறைய எதிர்ப்பார்ப்புகள் இருக்கு... கட்டுக்குள் வாழுற வாழ்க்கை எனக்கும் பிடிக்காது. என்னை ஒரு பட்டாம் பூச்சியா சிறகடிச்சு பறக்க விட்டு ரசிக்கிற ஒரு இடியட்டை தேடித் தேடி இதுவரைக்கும் கிடைக்கவே இல்லை...

வீட்ல பொண்ணு பாக்குறேன்னு சொல்லிட்டு வந்துட்டுப் போற தடியன்கள் எல்லாம் ....வந்து காபி, டீய குடிச்சுட்டு...மூக்கு நல்லா இருக்கா..., மார்பு எடுப்பா பெருசா இருக்கா...இடுப்பு கைக்கு அடக்கமா இருக்கா,  பிருஷ்டம் பெருசா இருக்கா, மொத்தத்துல அழகான முகத்தோட வக்கனையா செக்ஸ் வச்சுக்க சரியான ஆளான்னு முதல்ல பாக்குறாங்க...

அப்புறம் எவ்ளோ பணம் தேரும், ஆளுங்க கூட்டம் எப்டின்னு கணக்குப் போட்டுப் பாத்துட்டு அப்புறமா பிடிக்குது பிடிக்கலேன்னு அவுங்க வீட்டு ஆளுங்கள விட்டு சொல்லச் சொல்லுவானுங்க...இதுதான் கலாச்சாரம்னு வெக்கம் இல்லாம சொல்ற சமூகம்தான் இங்க எல்லாருக்குமே பெருசு...

அதையும் தான்டி கல்யாணம் நடந்து அன்னிக்கு ராத்திரியே வேட்டியையும் சேலையும் அவுத்து எறிஞ்சுட்டு அது வரைக்கும் கட்டிக் காப்பாத்தி வச்சிருந்த காமத்தை தீத்துக்கிட்டுதான் இங்க எல்லோருடைய வாழ்க்கையும் ஆரம்பிக்குது...

3 மாசத்துக்கு முன்னாடி நிச்சயம் பண்ணி மூணு மாசம் போன் பேசி அப்புறம் கல்யாணம் பண்ணி...உடம்பை மையமா வச்சு இவுங்க எல்லோரும் காதலிக்க ஆரம்பிக்கிறாங்க...., போன் கூட சில பேர் பேசுறது கிடையாது அவுங்க எல்லாம் பொண்டாட்டிய ஸ்ட்ரெய்ட்டா பாக்குற இடம் பெட்ரூம்தான்....

ஆக்சுவலா எனக்கு இது எல்லாம் பிடிக்கல...! காமம்ங்கிறது திட்டம் போட்டு வரக்கூடாது, அது ஒரு பூ பூக்குற மாதிரி இயல்பா நிகழணும். கல்யாணம் பண்ணியாச்சு அதனால இன்னிக்கு நைட் அது வேணும் அப்டீன்றது என் அறிவுக்கு எட்டல....! வீட்ல கடைக்குட்டி நானு அப்பா ரிட்டையர்ட் ஆன தாசில்தார்...நாலு அக்காவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு ஒரு அண்ணா ஒரு சிட்பண்ட் கம்பெனில குப்பைக் கொட்றான். நான் என் இஷ்டம் எப்டிவேணா இருந்துப்பேன் கொஞ்சம் பொறுங்கடான்னு சொல்லிட்டேன்...

அப்பா செல்லம் ஜாஸ்தி அதனால யாரும் ஒண்ணும் சொல்லமுடியாது....! பாக்கலாம் சார்....சாரி சாரி முகில்....

காதல் என்பது கொடுப்பதுமல்ல...
பெறுவதுமல்ல...
அது நிகழ்வது....

அப்டீன்னு படிச்சிருக்கேன் முகில்....! 

அவள் பேசி முடித்தவுடன் ..பெருமூச்சு விட்டேன்....ஓ. மை.. காட்...பூர்ணா யூ ஆர் சான்ஸ் லெஸ்....வைரமுத்து கவிதை எல்லாம் சொல்றீங்க...நீங்க புத்தகம் எல்லாம் படிப்பீங்களா....

என்ன கொடுமை சார் இது...ஏன் நாங்க படிக்க மாட்டோமா? ரொம்பத்தான்...நீங்க எப்டி...?

ரசனையுடன் நேசிப்பாய்
தொடங்கிய அந்த நாள்...
சரியாக நினைவிலில்லை....
அது முழுதாய் என்னை...
உள்வாங்கிக் கொண்ட..
அந்த கணத்தில் தான்...
என் உயிர் நகரும்...
ஓசையினை உணர்ந்தேன்.....

புத்தகத்துக்குள் ஊடுருவி...
என் விழிகள் உறவாடிய
பின் தான்...இமைகள்...
கவிழ்ந்து.....உறக்கம் சூழ்கிறது...!
அப்போதும் கூட...
என் நெஞ்சினில்..தலை சாய்த்து...
அது உறங்கும் அழகினை ...
கலைக்க விரும்பாமல்..
அணைத்துக் கொண்டே.....
கடத்தியிருக்கிறேன்..
என் அநேக இரவுகளை....

நான் சொல்லி முடித்ததும் கை தட்டிச் சிரித்தாள் பூர்ணா...! எக்ஸளண்ட் முகில்...நீங்க பெண்களை பற்றி என்ன நினைக்கிறீங்க....என்று அவள் கேட்க ஆரம்பித்த பொழுது...

" பூர்ணா கெட்டிங் லேட்.....ஹோட்டல் போகலாம் வா...." தூரத்திலிருந்து கேட்ட தோழிகள் கூட்டத்தைக் கடிந்து கொண்டே...அச்ச்சச்சோ நேரம் ஆச்சு முகில்....நாளைக்கு வேணா மீட் பண்ணலாமா.....

பூர்ணா அவசரமாய் கேட்டாள்....

நான் எங்கயும் சுத்திப்பார்க்க வரல பூர்ணா..ஜஸ்ட் டு ஸ்டே அலோன்....ஐ கேம்...,  சோ என் கூட வந்தா யூ  கேனாட் சீ மோர் ப்ளேசஸ்.....

அது ஒண்ணும் பிரச்சினை இல்லை முகில்...பார்க்கலாம்...நாளைக்கு காலையில  வர்றேன்... ஐ வில்  நாட் கோ வித் மை ப்ரண்ட்ஸ்...அங்க நான் உங்களை கூப்டப்ப பின்னால் இருந்த்துச்சே அதுதானே உங்க வீடு....நீங்க வீடு விட்டு வெளியில வரும் போதே நான் தூரத்துல பார்த்தேன்....

இப்போ கிளம்புறேன்......

கை அசைத்தபடியே ஓடியவளை பார்த்துக் கொண்டிருந்தேன் அவள் போகும் வரை...!


                                              ...பாடல் தொடரும்...
தேவா சுப்பையா....

Wednesday, September 25, 2013

தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 1


இந்த தடவை கொடைக்கானல்  வருவதற்கு ஐந்து வருடம் ஆகி விட்டது. ஐந்து வருடத்திற்குள் ஏதேதோ நிகழ்வுகள் நிகழ்ந்தேறி விட்டன..! பெருமூச்சு விட்டபடி மெதுவாய் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். " தாஜ்மகாலின் காதிலே ராம காதை ஓதுவோம்..." என்று ராஜா சார் காருக்குள் ஆசிர்வதித்துக் கொண்டிருந்தார். துரத்தும் வாழ்க்கையை தொலைவில் நிற்க வைத்து விட்டு, சமப்பட்ட  பூமியை விட்டு மலையேறும் அனுபவம் அலாதியானது. சூட்டில் எப்போதும் சுருங்கிக் கிடக்கும் புத்தி மெல்ல மெல்ல மலர்ச்சியடைய புலன்கள் எல்லாம் புதுக்கவிதை வாசிக்கத் தொடங்கி விடுகின்றன. காட்டுக்குள் உயர்ந்த மரங்கள் பச்சை பசேலென்று இருப்பதைப் பார்க்கும் போதே உச்சத்தை எட்டிப் பிடிப்பதற்கு முன்பான காமத்தை ஒத்த உணர்வொன்று புத்திக்குள் கால் உதைத்து தக திமி...தா....தக... தகதமிதா.. தகதிமி தா...என்று ஜதி சொல்ல ஆரம்பித்தது.

உடல் தாங்கும் குளிர் அழகானது. அதாவது அச்சச்சோ குளிர் அடிக்கிறதே என்று சொல்லி கத்திக் கொண்டே தாங்கிக் கொள்ளும் குளிர். டேய்...வலிக்குதுடா என்று சொல்லிக் கொண்டே உதட்டைக் கவ்வும் காதலனை சேர்த்து அணைத்துக் கொள்ளும் காதலி போல இந்தக் குளிரையும் நாம் சிணுங்கி கொண்டே அனுபவிக்கவேண்டும். கொடைக்கானல் 6  கிலோமீட்டர் என்ற அறிவுப்பு பலகை தாண்டி ஒரு கிலோமீட்டரில் நான் வண்டியை காரை ஓரம் கட்டி நிறுத்தினேன். புகைக்க வேண்டும் போன்றிருந்தது. ப்ரண்ட் பானட் மீது வந்தமர்ந்து சிகரட்டை ஆழமாய் உள்ளே இழுத்தேன். நிக்கோடின் துகள்கள் ஆணையிடப்பட்ட இராணுவ வீரர்களாய் இரத்தத்தில் கலந்து புத்திக்குள் சென்று....புத்தியின் பரபரப்பை கட்டுப்படுத்த நெஞ்சுக்குள் ஒரு இதம் பரவியது. 

எவ்வளவு அழகான பூமி இது. எல்லா சுகத்தையும் வஞ்சகமில்லாமல் அது இறைத்து வைத்திருக்கையில் ஏனோ எல்லோருக்கும் எப்போதுமே ஒரு பரபரப்பு இருந்து கொண்டே இருக்கிறது. மேகங்கள் அடர்த்தியாய் எங்கோ நகர்ந்து கொண்டிருந்தன. என்ன இலக்கு இருக்கிறது அவற்றுக்கு...மிதப்பதும், நகர்தலும், கனத்தலும் பின் மழையென பொழிதலும் அன்றி வேறென்ன தேவை இருக்கிறது அதற்கு. மழை வருவதற்கு எல்லா சாத்தியக்கூறுகளும் இருந்தது. நான் செல்போனை எடுத்து பிரதீப்பை தொடர்பு கொண்டேன். என்னைப் பற்றி நன்றாகவே அறிந்த நண்பன் அவன். எல்லோரும் நண்பனைப் பார்க்க வருவதாய் சொல்லி விட்டு கொடைக்கானலைச் சுற்றி விட்டு அவனிடம் ஹாய்...பாய் சொல்லி விட்டு சென்று விடுவார்களாம். நான் மட்டும் கொடைக்கானலைப் பார்க்க வருகையில் அவனை பார்த்து செல்வேனாம்.

ஒவ்வொரு முறையும் என் தனிமைக்கு அவன் கேரண்டி செய்து கொடுப்பான். இந்த முறையும் கூட...ஆள் அரவமற்ற ஒரு தனியான காட்டேஜில் என்னை தனியே விட்டுச் செல்லவேண்டும் என்ற நிபந்தனையை எப்போதும் போல பூர்த்தி செய்யப் போகிறான். என் பயணம் முடிவதற்கு முன்பான கடைசி இரண்டு நாட்கள் அவனோடு தான் சுற்றிக் கொண்டிருப்பேன் என்பன போன்ற பர்சனல் விசயங்களை எல்லாம் நான் யாரிடமும் சொல்ல விரும்புவதில்லை. நிகழ்வுகளை பகிர்பவர்களை எனக்குப் பிடிக்காது. அது கொடுக்கும் உணர்வுகளைப் பகிர்பவர்களையே நான் எப்போதும் ரசிப்பேன்.

" வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ...'" 

என்று சொட்ட சொட்ட நனைத்த இசையோடு காரை நிறுத்தி விட்டு...பிரதீப்பை நெஞ்சோடு அணைத்து பார்மல் பரிமாறல்கள் எல்லாம் முடித்து இதோ ஒரு மணி நேரம் ஆகி விட்டது. பெரிய சைஸ் வீடுதான் இது. ஒரு பெரிய வரவேற்பரை அதன் மையத்தில் ஆட்கள் வந்து அமர்ந்தால் உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும் மூன்று சோஃபாக்கள் எல் சேப்பில், நடு சோபாவுக்கு எதிரே 39 இன்ச்சில் உலகத்தை உன் முன் கொண்டு வரவா என்று இளித்தபடியே ஒரு எமன். வரவேற்பரையில் இருந்து நேரே சென்று இடது பக்கம் திரும்பினால் மாஸ்டர் பெட்ரூம். கிங் சைஸ் பெட் பெரியதா அல்லது கியூன் சைஸ் பெட் பெரியதா என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் வரும் அப்படியே இன்றும் தோன்றிய கேள்வியை ஒடித்துப் போட்டேன். மெத்தை எப்போதும்  முக்கியமில்லை மெத்தையில் படுத்தால் உறங்க முடியுமா என்பதுதான் முக்கியம். பெட்ரூமை அடுத்து ஒரு க்யூட் கிச்சன், கிச்சனின் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து கண்ணடிக்கும் குட்டிக் குட்டி மரங்கள். கிச்சன் வழியே பின்புறக்கதவைத் திறந்து இண்டு நிமிடம் நடந்தால்...ஹோ...என்று விரிந்து  பரந்து கிடக்கும் பசுமைப் பள்ளத்தாக்கு....

கால் நீட்டி மலை முகட்டின் ஓரமாய் அமர்ந்தேன். மதியம் மூன்று மணி சூரியனை சட்டை செய்யாமல் மேகங்கள்  என்னை இழுத்து அணைத்து உச்சி நுகர ஆரம்பித்தன. கைகளைக் விரித்து மெல்ல புற்களின் மீது படுத்தேன்....என் தலைக்கு நேர் உச்சியில் பரந்து விரிந்த ஆகாயம்....கீழே பரந்து விரிந்த புல் வெளி....ஆழமாய் மூச்சினை இழுத்து விட்டேன்....புத்திக்குள் சிரமப்பட்டுக் கொண்டிருந்த என் வார்த்தைப் பறவைகள் மெல்ல மெல்ல என் நினைவு விட்டு இறங்கித் தத்தி தத்தி என்னைச் சுற்றி அமர்ந்து கொண்டன....

கனவுகள் நிரம்பிக் கிடக்கும்
இந்த பெருவெளிக்குள் 
விழுந்து  நான்
கரைந்தே போய்விட முடியாதா...?

புற்களிள் நடுவில் நான் 
ஒடுங்கி ஒளிந்து
சிறுவண்டுகளோடு ஓடிப் பிடித்து
விளையாட சபித்துப் போங்களேன் யாரேனும்...?

என்னைக் கடந்து செல்லும் 
மேகத்திலேறி இந்தப் பள்ளத்தாக்கின்
நடுவே சென்று....ஆழப்பள்ளத்தில்
மெல்லவே விழுந்து பின்
சட்டென மேகத்தின் நுனி பற்றி
மேலேறி வர யுத்திகளேதேனும்
சொல்லித்தான் கொடுங்களேன் எனக்கு...

தனிமை பெரும்பாலும் யாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. மனிதர்களுக்கு எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கவேண்டும். ஒருநாளும் காற்றின் கனபரிமானம் தடவி நீ என்னதான் விரும்புவாய் என்று கேட்பதற்கான அவகாசம் யாருக்கும் இருப்பதில்லை. பெருமரத்தின் கிளைகளிலிருக்கும் குருவிகளுக்கென்று கனவுகள் ஏதேனும் இருக்குமா என்று யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை...சிறு செடியிலிருந்து எட்டிப்பார்த்து சிரிக்கும் குட்டிப்பூவை விழிகளால் வாங்கிக் கொண்டு புன்னகைத்து அவற்றின் வரவை வாழ்த்த யாருக்கும் இங்கே ஆசைகள் இல்லை....

கிடந்த நேரம் எவ்வளவு என்று யோசிக்காமல் எழ வேண்டும் என்ற எண்ணம் வரும் வரையில் கிடந்தேன். மெல்ல நடந்து மீண்டும் வீடு தொட்டேன். ப்ரிஜில் ஏற்கெனவே பிரதீப் வாங்கி நிரப்பி இருந்தான். ஏதேதோ காய்களை வெட்டினேன்....மஞ்சள் பொடி மிளாகாய்ப் பொடி உப்பு, எல்லாம் போட்டு கொதிக்க வைத்து, பின் சாதம் வடித்து என் உணவினை நான் செய்து முடித்த போது மெல்ல மணி பார்த்தேன் இரவு எட்டு ஆக இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. மூன்று ஆஃபாயில்கள் நிரம்பிய தட்டோடு வரவேற்பறை சோபா முன்பு இருந்த டீப்பாயில் அதை வைத்து விட்டு....சிப்ஸ் பாக்கெட்டை உடைப்பதற்கு முன்பு தலை திருகி ராஜதிரவத்தை என் கோப்பையில் ஊற்றினேன்...

நான் சாதாரணமாக நிறைய பேசுவேன். மது அருந்திவிட்டால் எனக்குப் பேச்சு வராது. அது ஏதோ ஒரு அனுபவத்தைக் கொடுக்க அது என்ன என்று கவனமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடுவேன். சமூகம் தவறென்று சொல்லும் ஒரு பழக்கம். என்னைப் பொறுத்தவரையில் அது பழக்கமாகிப் போகாத ஒரு பழக்கம் என்பதால் எனக்கு மது அருந்துவது பற்றி மாற்றுக் கருத்துக்களே இல்லை. அளவுக்கு அதிகமாய் உண்டால்  உணவு கூட தவறுதான்.... ஆக்ச்ச்ச்சுவலி டூ மச் ஆஃப் எனிடிங் இஸ்ஸ்ஸ்ஸ்ஸ் குட் ஃபார்.....

என்று ஆங்கிலத்தில் சொல்லச் சொல்லி புத்தி நச்சரித்த போது மூன்றாவது ரவுண்ட் முடிந்திருந்தது. எப்போது உணவருந்தினேன் எப்போது உறங்கினேன் என்று தெரியாமல் நான் விழித்த போது என் படுக்கை அறையின் ஜன்னலை தட்டி என்னை எழுப்பிக் கொண்டிருந்தது மழை. காலை பதினொரு மணியாயிருந்தாலும் எனக்கு மட்டுமல்ல கொடைக்கானலுக்கே அன்று அது அதிகாலைதான்..இருள் இன்னும் போகவே இல்லை. மெல்ல ஜன்னலைத் திறந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த செடியொன்றுக்கு குட்மார்னிங் சொன்னேன். செம்பருத்தி செடி அது. செம்பருத்தி செடியின் இலையின் இரண்டு பக்கவாட்டிலும் கூறாய் அடுக்கடுக்காய் இருக்கும். மழையில் நனைந்து சொட்டிக் கொண்டிருக்கும் அதன் சுகம் எப்படி இருக்கும்....என்று யோசித்தேன்....

ஒவ்வொரு துளியும் மேலே விழுகையில் சிலிர்த்து சிலிர்த்து....தன்னிலை மறந்து மழையை வாங்குகையில் மழை அங்கே கவிதையாகிறது, கனவாகிறது, காதலாகிறது, கணவனாகிறது, உயிர் கொடுக்கும் தகப்பனாகிறது. ஒரு மழை இந்த பூமி நனைத்து அத்தனை ஜீவன்களுக்கும் உயிராகிறது. கை நீட்டி தாழ்வாரத்தின் மழை நீரை வாங்கி விளையாடினேன். மழை லேசாக தூறிக் கொண்டிருந்த போது நடக்கலாம் என்று ஒரு எண்ணம் தோன்றியது. மணி எத்தனை இருக்கும் என்று பழக்கப்பட்ட நாயாய் மனம் கடிகாரம் பார்க்கச் சொன்னது. உண்மையில் சொல்லப் போனால் இதை, இதை இந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்று துரத்தும் வாழ்க்கைக்கு கடிகாரம் அவசியம் தான். அதைத் தொலைக்கத்தானே இவ்வளவு தூரம் வந்தேன்...நேரம் பார்த்து என்ன செய்யப் போகிறோம்....

உறக்கம் போன உடன் எழலாம். பசிக்கும் போது உண்ணலாம். நடக்கத் தோன்றினால் நடக்கலாம்...வேடிக்கைப் பார்க்கத் தோன்றினால் பார்க்கலாம்....உள்ளுணர்வுதான் எப்போதும் நம்மை வழிநடத்த வேண்டும். அதுதான் இயல்பு. மனம் எப்போதும்  பசித்தவுடன் குரைக்கும் நாயைப் போல கற்பனை செய்ய ஏதுமில்லாவிட்டால் குரைக்கத் தொடங்குகிறது. எதார்த்த வாழ்க்கையில் அதற்கு மனிதர்கள் உணவிட்டுக் கொண்டே இருப்பதால் அது தின்று கொளுத்து விட்டு மனிதர்களை ஆட்டுவிக்கிறது.

என் ஜிம்மி பெரும்பாலும் பட்டினியில் சுருண்டுதான் கிடக்குமென்றாலும், மனிதர் சூழ் ஒரு சமூக வாழ்வில் என்னைச் சுற்றி இருக்கும் யாரோ  அல்லது ஒரு சூழலோ,அல்லது மறந்து போய் நானோ அதற்கு அவ்வப்போது பிஸ்கெட்களைப் போட  அது குலைப்பதும் பின் நான் அதைப் பட்டினி போடுவதும் என்று தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கும். இன்று மனம் பட்டினி கிடந்து கிடந்து மறைந்தே போய்விட உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு நகர்ந்து கொண்டிருந்தேன். எழுந்து ப்ரஸ் அப் ஆகி.. பிரிட்ஜைத் திறந்து பார்த்தேன். பழங்கள் வாங்கி வைத்திருந்த நண்பனை மனதார வாழ்த்திய படியே ஒரு ஆப்பிளை எடுத்துக் கடித்துக் கொண்டே கிளம்பினேன். தனியான வீடு அது. சுற்றும் முற்றும் வேறு காட்டேஜ்களோ இல்லை வீடுகளோ  ஒன்றையும் பார்க்க முடியவில்லை. ஊரை விட்டு ஒதுங்கிய  இடம் அது. 

நடந்து கொண்டிருந்தேன். எனக்கு எதுவுமே தோன்றவில்லை...! அப்போதுதான் பெய்து முடித்திருந்த மழையை வாங்கிக் கொண்டு நாணியபடி ஈரமாய் இருந்த நிலத்தில் கிடந்த சருகுகள் எல்லாம் சப்தமின்றி கிடந்தன....! வாழ்க்கை முழுதும் தனிமையில் இருப்பவனுக்கு மரணம் ஒன்றும் பெரிய விசயம் கிடையாது. என்ன ஒன்று உயிர் இருக்கும் வரை உடல் இருக்கும்...உயிர் போனால் உடல் இருக்காது. உடல் இல்லாமல் அவன் பயணம் இன்னும் பயணம் தெளிவாய் இருக்கும். மனம் என்ற ஒரு மாய வஸ்து இல்லாமல் அங்கிங்கினாத படி பிரபஞ்சம் முழுவதிலும் நாம் ஒரு மல்லிகையின் வாசம் படர்வது போல படர்ந்து கிடக்கலாம்....

ஹலோ...எக்ஸ் க்யூஸ் மீ....ஹலோ சார்....

எனக்கு வெகு பக்கத்தில் மூச்சிறைக்க அழைத்த அந்தப் பெண்ணை திரும்பிப் பார்த்த நொடியில் ஸ்தம்பித்தேன்....!

யார் வரைந்து வைத்த ஓவியம் இது...
கால் முளைத்து நடந்து வருகிறது...?
கவிதையொன்று காற்றில்
ஒரு பட்டாம் பூச்சியென பறந்து வருகிறது...

என்று யோசித்த படியே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்


                                      ... பாடல் தொடரும் ....
தேவா சுப்பையா....
Friday, September 20, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம்...!


சிவகார்த்திகேயன் மாதிரி நடிகர்கள் வேற ஒரு தளத்துக்கு தமிழ் சினிமாவ கொண்டு சேர்க்கப் போறது என்னமோ கண்டிப்பா நிஜம். காம்பியரிங் செய்யும் போது சின்னத்திரையவே கலக்கு கலக்குன்னு கலக்கிட்டு இருந்த புயல் பெரிய திரைய சும்மா விடுமா என்ன..?! அதே வேகம் அதே எனர்ஜியோட அவர் அடிச்சிருக்க அடுத்த சிக்ஸர்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். எந்த சத்தமும் இல்லாம எது தனக்கு வருமோ அதை வச்சு ஆரம்ப காட்சியில இருந்து படம் முடியுறவரைக்கும் பட்டைய கிளப்பி இருக்கார். தமிழ் சினிமாவுல இது வரை மையப்படுத்தி வச்சிருந்த அந்த மாஸ் ஹிரோ பில்டப் இனிமே ஒண்ணும் வொர்க் ஆகாது  போல.

எம்.ஜி.ஆரோட காலத்துல உச்ச கட்டத்துக்கு போன இந்த நடிகன கடவுளா பாக்குற மரபு, அந்த மாயபிம்பம் ரஜினி கமலுக்கு அப்புறமா உடைஞ்சு சரிஞ்சு விழ ஆரம்பிச்சு ரொம்ப காலமாச்சு. கைய சுண்டிக்கிட்டு பஞ்ச் டயலாக் பேசுற பில்டப்ஸ் எல்லாம் இனிமே வியாபாரம் ஆகாது. திரையப் பாத்து தலைவா அப்டீன்னு தமிழ் ரசிகன் தொண்ட வலிக்க கத்திக் கத்தி கொழு மோர் காச்சி குடிச்சதுதான் மிச்சம். இன்னும் சொல்லப் போனா தமிழ்நாட்ல அரசியல்வாதிகள்ன்ற பேர்ல மகாராஜாக்களும் மகாராணிகளும் அரியணை ஏற தமிழ் ரசிகர்களோட வரைமுறை இல்லாத சினிமா மோகம்தான் காரணம்னு அடிச்சு கூட சொல்லலாம். திரையில ஏழைங்கள இழுத்து வச்சு கொஞ்சுன எம்.ஜி.ஆர் நிஜத்துலயும் அப்டியே இருந்து பாட்டாளி வர்க்கத்தை காப்பாத்திடுவாருன்னு ஒவ்வொரு ரசிகனும் நம்பி தொண்டனா மாறின இடம் தமிழகத்துக்கு ப்ளஸ்ஸா இல்லை மைனஸ்ஸான்னு எனக்குச் சொல்லத் தெரியல....

ஓப்பனா சொல்லப்போனா அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு மிகப்பெரிய புரட்சி ஒன்றும் தமிழகத்தில் நடந்துடல!  மூணு ரூபாய்க்கு திட்டத்தை அறிவிச்சுட்டு 2 ரூபாயை பாக்கெட்ல போட்டுக்கிட்ட ஆளுங்கதான் இங்க அதிகம். எம்.ஜி.ஆரின் திரையும் நிஜமும் ஓரளவிற்கு ஒன்றாய் இருந்துச்சு. எம்.ஜி.ஆரை பாத்து அதே மாதிரி அரசியலுக்கு வந்து மக்கள் ஆதரவைப் பெறலாம்னு நினைச்ச சிவாஜிய தமிழக மக்கள் ஏத்துக்கல...ஆனா எம்.ஜி.ஆர் ஃபார்முலாவ  நேத்திக்கு வந்த விஜய் வரைக்கும் பின்பற்ற நினைச்சு அப்போ அப்போ கை கால்ல கட்டு போட்டுக்கிட்டு இப்போ மூக்கு முகறை எல்லாம் பேந்து போய் தலைவாக்கள் கொடுத்த அனுபவத்துல சுருண்டு கிடக்குறாங்க.

ரஜினிதான் இதுல உஷாரா எஸ்கேப் ஆன ஆளு. அவர் இந்த தலைவர் மாயையில இருந்து வெளியில வர அவருக்கு அவரோட ஆன்மீகம் கடுமையாக உதவியது. பற்று இருந்திருந்தால் இந்நேரம் தேரை இழுத்து தெருவுல விட்டு இருந்திருப்பாய்ங்க.. நிம்மதியா அவர் இருந்திருக்க முடியாது. ரஜினிக்கு இருந்த சினிமா மாஸ் சினிமாவுக்குன்னு அவர் உணர்ந்து விலகினார். ரஜினிக்குப் பிறகு பஞ்ச் டயலாக்ஸ், அப்புறம் திரையில தலைவன தேடுற ஒரு மனோபாவம் உடைஞ்சு விழத்தான் ஆரம்பிச்சுது. மக்கள் மனம் மாறிக் கொண்டிருந்த போது தப்பித்த ஒரு நடிகர் ரஜினி, வகையாய் மாட்டிக் கொண்டவர் விஜயகாந்த். விஜய்காந்த் இன்னிக்கு எதிர்கட்சி வரிசையில் உட்கார்ந்து இருப்பதற்கு காரணம் அம்மாதான் அப்டீன்றது நேத்து பொறந்த கொழந்தைக்கு கூட தெளிவா தெரியும். ஆட்சிய பிடிக்கிற அளவுக்கு அவரோட சினிமா இமேஜ் கண்டிப்பா அவருக்கு உதவாது. ஏதாவது அதிசயம் நடந்தாதான் உண்டு. தொழில் நுட்ப வளர்ச்சி இப்போ அசுரத்தனமா இருக்கு...

பட்டிகாட்ல குடிசையில இருக்க ஏழை ஜனங்களுக்கு மத்தியில நாட்டு நடப்பு எப்டியோ போய் சேந்துடுது. நியூஸ் பேப்பர் பாத்து, ரேடியோல நியூஸ் கேட்டு, டிவில நியூஸ் பாத்து அரசியல் கட்சியோட மீட்டிங் போய் உட்கார்ந்து, அரசியல் நிலவரம் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமே இப்போ இல்லாமப் போச்சு. எல்லா மொபைல்லயும் கேமரா இருக்கு. செய்தி பரிமாற்றம் ரொம்ப வேகமா நடந்துகிட்டு இருக்கறதாலதான்....இணையத்தை இன்னிக்கு எல்லா அரசியல் கட்சிகளும் சூழ்ந்துகிட்டு இங்கே அதிகாரப்பூர்வமா நியமிக்கப்பட்டிருக்க தங்களின் பரப்புரையாளர்கள வச்சுக்கிட்டு....ரொம்ப வேகமா தொடர்ச்சியா தங்களோட கட்சிகளுக்கு பரப்புரைகள் செஞ்சுட்டு இருக்காங்க..!

என்னதான் கூவி கூவி விளம்பரம் செஞ்சாலும் தலைவா புட்டுக்கிட்ட மாதிரி நிறைய அரசியல் கட்சிகள மக்கள் தூக்கி எறியப் போறாங்க. பழைய பருப்பு இனி வேகவே வேகாது. வீட்டுக்கு ஒரு பய 17 வயசு தாண்டின இளைஞனா இருக்கான், அவன் கையில கணிணி இருக்கு. அவனை யாராலும் வசியம் செய்ய முடியாது. க்வாட்டருக்கும் பிரியாணிக்கும் கட்சியில சேந்தவைங்களுக்கும், கூட்டங்களுக்குப் போயி வாழ்க  ஒழிக கோஷம் போட்டவனுக்கும் இப்போ வயசாயிப் போயிடுச்சு ... இது இளைஞர்களின் காலம்.

அதனலாதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாதிரி படங்கள் அட்டகாசமா ஓடுது. சிவகார்த்திகேயன் மாதிரி நம்ம பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி பசங்க ஹீரோவா நடிக்க முடியுது.  ஆபத்பாண்டவன், அனாதை ரட்சகன் மாதிரியான ஹீரோவை மையமா வச்சு வந்த படங்கள பாத்து, பாத்து ரொம்பவே போரடிச்சுப் போன தமிழ் சமூகத்துக்கு இந்த மாதிரி படங்கள் ரொம்ப சிம்பிளா ரெண்டு ரோஸ்ட், சாம்பார், ஒரு காரச் சட்னி, கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி வச்சு சாப்டுட்டு ரொம்ப ஹெவியா இல்லாத நிதானமான வயித்தோட எழுந்து வரமுடியுது.  

ஹீரோக்கள் காமெடின்ற பேர்ல பண்ற அட்ராசிட்டிய எல்லாம் ஏப்பம் விட்டு முழுங்கிட்டு  இயல்பான தன்னோட நகைச்சுவை உணர்வுகள் ததும்பிய ஹீரோ தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதுசு. சீன் பை சீன்  சூரியோட சேர்ந்துகிட்டு சிவகார்த்திகேயன் அடிக்கிற லூட்டி ரொம்பவே சூப்பர். இந்த மாதிரியான படங்கள்ல நடிச்சு கொண்டு போற தில்லு சமகாலத்துல சிவகார்திகேயன விட்டா ரேடியோ மிர்ச்சி சிவாவுக்கும் வாகை சூடவா சற்குணத்துக்கும் இருக்கும்னு நான் நினைக்கிறேன்.

இந்தப்படத்துல ஒரு பஞ்சாயத்து சீன் வரும். ஊர்ல திருவிழாவுக்கு திண்டுக்கல் ரீட்டாவா வச்சு ஆடல், பாடல் நடத்த ஊர்பெருசுகளான சத்யராஜ் & கூட்டணி கூட சிவகார்திகேயன் & டீம் மோதுற இடம்.....நிஜ சீரியசான பஞ்சாயத்து மாதிரியே ட்ராவல் ஆகி பட்டைய கிளப்புற காமெடி சீனா மாறியிருக்கும். சத்யராஜ் ரொம்ப சீரியசான வில்லனா இருப்பாரோன்னு நாம நினைச்சுக்கிட்டு இருக்கும் போது கதையோட போக்குல அந்த கேரக்டரையும் இயல்பா காமிச்சு இருக்க இயக்குனரை கண்டிப்பா பாராட்டியே ஆகணும். 

ரகுமானோட இசை உலகதரத்தை நோக்கி பயணிச்சு ரொம்ப காலமாயிடுச்சு, இளையராஜா சார் இசையமைக்க சரியான கதையம்சம் கொண்ட படங்கள் கிடைக்கிறது இல்லை. இந்த கேப்ல இமான் கும்கி மாதிரி படங்களுக்கு மண்ணின் மணத்தோட இசையமைச்சு பட்டி தொட்டி எல்லாம் பாடல்களைக் கொண்டு போய் சேர்த்தார். இந்த படத்துலயும்...செம குத்துப் பாட்டுக்கு சிவகார்த்திகேயனையும் பாடவச்சு இருக்கார். படம் பாக்குறவங்கள எழுந்து குத்தாட்டம் போட வைக்கிறதுக்கு இந்தப்பாட்டுனா... ஊதாக் கலரு ரிப்பன்னு இன்னொரு பாட்டு மனசுக்குள்ள தாளம் போட வைக்குது. இந்த மாதிரி மினி பட்ஜெட் படங்களோட சக்கரவர்த்தியா இமான் வளர்ந்துட்டு இருக்கார் என்பது உண்மை. படம் முழுசுமே சிவகார்த்திகேயனும் சூரியும் பூந்து விளையாண்டு இருப்பாங்க.. " சர்க்கஸ்னு சொன்னா சிங்கம் இருக்கணும்......சபைன்னு சொன்னா சங்கம் இருக்கணும் " போன்ற வசனங்கள்.. பஞ்ச் டயலாக் கதாநாயகர்களை நன்றாகே பஞ்சர் பார்த்திருக்கின்றன.

ஒரு நடிகனுக்காக படம் போய் பாத்து அந்த படம் நல்லா இருந்த காலங்கள் எல்லாம் மலையேறிப் போச்சு. மூணு மணி நேரம் அந்த திரைப்படம் நமக்கு ஏதோ கட்சிக் கூட்டதுக்கு போனது மாதிரியான பீலைக் கொடுக்காம, ஏதோ தேவன் எழுந்தருளி இருக்கிறார் பாவிகளே அவரைச் சந்தித்து உங்கள் பாவங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் அப்டீன்ற ரேஞ்சுக்கு விளம்பரம் செஞ்சுக்காத இயல்பான திரைப்படங்கள்தான் இனிமேல் தமிழ்நாட்டில் சக்கைப் போடு போடப் போகிறது....! நடிகனை நடிகனாய் பார்த்து சினிமாவை தியேட்டரோடு விட்டு விட்டு வரும் ரசிகர்ளுக்கு மத்தியில் சிவகார்த்திகேயன்கள் வருங்காலத்தில் சூப்பர் ஸ்டார்களாய் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...!

சினிமா தியேட்டரும் தேர்தலில் வாக்களிக்கும் வாக்குச்சாவடியும் வெவ்வேறு என்று என் தமிழ் மக்கள் விளங்கி ரொம்ப நாளாச்சு....பாஸ்...!!!!

வாழ்த்துகள் சிவகார்த்திகேயன்....!!!!!தேவா சுப்பையா....

Tuesday, September 17, 2013

நித்ய கன்னியே... கண்ணம்மா...!


இறக்கி வைக்க முடியாத சுகங்களை எல்லாம் சுமந்து செல்லும் வழிப்போக்கனாய் பயணித்துக் கொண்டிருக்கிறது என் நினைவுகள். காவியங்கள் என்று தம்மை இயம்பிக் கொள்பவைகள் எல்லாம் அழுத்தமான வலிகளையே காலங்களாய் இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றன. வலிகளோடு கூடிய தனிமையின் சுகம்தான் ஆதி பிரபஞ்சமாய் இருந்திருக்குமோ..? உறக்கத்தின் போது காணும் கனவுகள் எப்போதுமே நமது கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. உணர்வோடு காணும் கனவுகள் எப்போதுமே அலாதியானவை...அவற்றுக்கு யாதொரு கட்டுப்பாடுகளும் கிடையாது.

ஒரு அழகிய பாடலை கேட்டு ரசிக்கையில் சப்தத்தை ஏற்றி இறக்கி வைத்துக் கொள்வது போல, ஒரு விருப்ப ஓவியத்தை வரையும் போது நமது இஷ்டப்படி கோடுகளை நீட்டி மடக்கி நகர்வது போல, யாருமற்ற சாலையில் அதிகாலையில் வாகனத்தில் ராஜாசாரின் துணையோடு புரண்டு படுத்து எழும் அதிகாலையை எதிர் கொள்வது போல, உணர்வோடு கால் உதைத்து எழும் நினைவுகளின் முதுகு தட்டி ஒரு புரவியில் பயணிக்கும் சுகத்தோடு கனவுகளை நாம் முடுக்கி விட்டுக் கொள்ள முடியும்.

எப்போதும் நிஜம் கொடுமையானது. அது பல கோரங்களை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு வெளியே அஷ்ட கோணலாய் நடித்துக் கொண்டிருப்பது. சரிகளுக்குள் தவறுகளும், தவறுகளுக்குள் சரிகளும் என்று எப்போதும் ஒரு புதிர் விளையாட்டைப் போல நிஜம் நம்மை ஏற்றி, இறக்கி நகர்கிறது ஆனால் கனவுகள் எப்போதுமே வரையறை செய்யப்படாத, யாரென்றே அறிந்திராத ஒரு கற்பனைக் காதலியை ஒத்த சுகத்தைக் கொடுக்கக் கூடியது. அது என்ன வரையறுக்கப் படாத காதலி என்று கேட்கிறீர்களா? காதல் என்பது கட்டுகளற்றது என்று உணர்ந்த பின்பு காதலியை மட்டும் ஏதோ ஒரு உடலுக்குள் சூழலுக்குள் அகப்பட்ட ஒரு பெண்ணாய் தேடிக்கொள்வது அபத்தம்தானே..? காதல் புலனறிவுக்கு அப்பாற்பட்டது.....அது எல்லைகளற்ற பெருவெளி.

வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பாருங்கள் ஒப்பற்ற கவிதைகளை எழுதியவர்கள் எல்லாம் ஏதோ ஒரு காதலியை தன் முன் வைத்துக் கொண்டு எழுதி இருந்திருக்க மாட்டார்கள். நித்ய கன்னியாய் கண்ணம்மாவை எங்கேனும் கண்டேன் என்று ஒருபொழுதும் பாரதி நம்மிடம் பகிர்ந்திருக்க மாட்டான். கண்ணம்மா அவனின் கனவுக் காதலி. அவள் பாரதியின் ஏகாந்தக் கனவுகளுக்கு எப்போதும் துணையாயிருக்கும் லெளகீக கட்டுக்கள் அற்ற ஒரு முழுமை. பாரதி இமை மூடினால் கண்ணம்மா அவனுள் உதயமாவாள். அவனின் எல்லா செயல்களுக்கும் அவனுக்கு துணை இருந்தது ரத்தமும் சதையுமான மனிதர்கள் அல்ல...

அவன் கற்பனைக் கடவுள் அவனுக்குப் படைத்தளித்துக் கொடுத்த கண்ணம்மாதான் பாரதியோடு எப்போதும் இருந்தாள். பாரதி சோகமாய் இருந்த போதெல்லாம்  அவன் தலை தடவி அவள்தான் ஆறுதல் சொல்வாள். அவன் எழுதிய எல்லா கவிதை வரிகளையும் முதலில் வாசித்து பாரதிக்கு சொல்வதும் அவள்தான்.... உலகமே நிராகரித்தாலும் கண்ணம்மா பாரதியின் கை பிடித்து கொண்டு கம்பீரமாகச் சுற்றித் திரிவாள். அவன் காக்கை குருவி எங்கள் ஜாதி என்று எழுதினாலும் சரி,  மானங்கெட்ட மாயையே நீ மாயாயோ..? என்று மாயையைப் பழித்தாலும் சரி..., அச்சமில்லை அச்சமில்லை என்று வீரமுழக்கமிட்டாலும் சரி...

கடைசியில் இதுவன்றோ தலைமை இன்பம் ஆதலால் காதல் செய்வீர் என்று அவனை அறைகூவல் விடுக்க அவள்தான் காரணமாவாள்.

காதலிகளை பெரும்பாலும் படைப்பாளிகள் தங்களின் கற்பனையில் இருந்து ஜனிப்பித்துக் கொண்டார்கள். எதார்த்தத்தில் அவர்களின் எதிர்ப்பார்ப்புகளை அவர்கள் விரும்பும் ஒரு ஆணிடம் இருந்தோ, பெண்ணிடம் இருந்தோ அவர்களால் பெற முடிவதில்லை. மனித மனங்கள் மிகவும் குழப்பமனாது அது எப்போதுமே சிக்கலை கருத்தரித்துக் கொண்டு அமைதியை பிரசவிக்க போராடிக் கொண்டிருக்கும். ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ நிஜத்தில் காதலிக்கத் தொடங்கும் போதே அங்கே பல்வேறுபபட்ட சூழல்களுக்கு ஒரு படைப்பாளி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. விரும்பினால் பொறியைத் தட்டி மின்விசிறியை ஓடவிடவும் வேண்டாமென்றால் அதை நிறுத்திக் கொள்ளவும் ஒரு படைப்பாளி விரும்புவதே இல்லை...

அவன் தோட்டத்தில் எப்போதுமே பூக்கள் பூத்துக் குலுங்கும், நின்று விடாத தென்றல் காற்று பட்டு தலையாட்டிக் கொண்டிருக்கும் மரங்களில் பட்சிகளின் ஒலி இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருக்கும்....நட்சத்திரங்கள் நிரம்பிக் கிடக்கும் வசீகர இரவுகளின் பேரமைதியில் அவனுக்கான தாலாட்டை எப்போதும் இந்த பிரபஞ்சம் இசைத்துக் கொண்டிருக்க...அவன் விரும்பிய ஓவியங்களை எல்லாம் இயற்கை பகல் முழுதும்  அவனுக்கு காட்சிகளாக்கி வைத்திருக்கும்.

நிஜம் கட்டுப்பாடுகள் கொண்டது. கற்பனைகள்...எல்லைகளற்றது.

நிஜத்தில் வாழ்ந்து கொண்டே கற்பனைகளில் சிறகடிக்கும் மனோநிலை கொண்டவனுக்கு எதற்கு புறத்தில் ஒரு காதலி? ஏதோ ஒரு நல்ல புத்தகம், திரைப்படம், சூழல் அல்லது நல்ல ஒரு இசை என்று சுற்றிச் சுற்றி அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க ஓராயிரம் விசயங்கள் இருக்கும் போது எல்லாவற்றையும் தன் கற்பனைக் காதலியோடு கை கோர்த்தபடியே அவனால் லயித்து விட முடியாதா என்ன....?

ஒரு பெருமழைக்குப் பின்னான
நனைந்து கிடக்கும் நிலமாயிருக்கும்
என் கற்பனைகளில் சம்மணமிட்டு
அமர்ந்திருக்கும் பெண்ணொருத்தி
என் வார்த்தைகளைக் கொண்டு
எப்போதும் எழுதிக் கொள்கிறாள்
அவளுக்கான கவிதை வரிகளை...

பாரதிக்குள் விழுந்து கண்ணம்மாவிடம் சரணடைந்து மீளமுடியாமல் போனதற்கு பரிகாரமாய் இந்த கட்டுரையை எனக்குள் இருக்கும் கண்ணம்மாவிற்கு சமர்ப்பித்துதான் ஆகவேண்டும். நீங்களும் பாரதியைக் கேட்டு மீள முடியாமல் போகக் கடவீர்களாக;தேவா சுப்பையா...