Skip to main content

Posts

Showing posts from November, 2013

கடல்...!

கடற்கரை காற்று தலை முடியைக் கலைத்துக் கொண்டிருந்தது. கடற்கரை மனதின் சுமைகளை இறக்கி வைக்கும் ஒரு இடமாகத்தான் எனக்கு எப்போதும் இருக்கிறது. கடலை நெருங்கும் போதே ” ஹோ ” என்று பரந்து விரிந்து கிடக்கும் மண்ணை பார்க்கும் போதே ஒரு வித சந்தோசம் உள்ளுக்குள் விசிலடிக்கத் தொடங்கி விடும். பெரும்பாலும் கடற்கரைக்கு யாரோடும் நான் வருவதில்லை. கடலே துணை, கரையே எனக்கு இணை பிறகெதற்கு ஒரு துணை. கால் நீட்டி கடற்கரை மணலில் அமந்து கொண்டு இரைச்சலாய் கரையை நோக்கி வந்து பிறகு திரும்பும் அலைகளையும், பரந்து விரிந்த வானத்தையும் அதில் மிதக்கும் மேகங்களையும் பார்த்துக் கொண்டு வெறுமனே அமர்ந்திருத்தல் சுகம். எந்த எண்ணமுமற்று அந்த சூழலில் கரைந்து கிடப்பது தவம். நிறைய பேர் ஒவ்வொரு காரணத்திற்காக கடற்கரைக்கு வருகிறார்கள். கூட்டம் கூட்டமாய் வந்து அமர்ந்து உணவருந்துகிறார்கள். பேசிச் சிரிக்கிறார்கள். ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள். பட்டம் விடுகிறார்கள். குதிரை சவாரி செய்கிறார்கள். அனுமதிக்கப்பட்ட பகுதிவரை கடலில் சென்று குளிக்கிறார்கள். கடலில் கால் நனைத்து சிலாகித்துப் போகிறார்கள்.  கடற்கரையில் வியாபாரம் செய்யும

தேடினேன் தேவ தேவா...!

இரண்டு மூன்று நாட்களாகவே மனதை ஏதோ செய்து கொண்டிருக்கிறது எனக்கு. அது ஒரு மாதிரியான பரவசம், ஆர்வம், இயலாமை எல்லாம் சேர்ந்து ஒரு நிலைக்குள் என்னை தள்ளி விட்டிருந்தது. ஆமாம் பாலகுமாரன் சார் பேஸ்புக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறார் இப்போது. நண்பராக முயற்சி செய்தேன். அவரது கணக்கில் நண்பர்கள் நிறைந்திருப்பதால் உங்களால் அவரை பின்பற்ற மட்டுமே முடியும் என்று பேஸ்புக் சொல்லி என்னை அவரது ஃபாலோயர் ஆக்கியது. உண்மைதான் நான் என் குருவோடு எப்படி நண்பராக முடியும். பின்பற்றுபவனாய்த்தான் இருக்க முடியும்.  இன்றைக்கு நேற்றா நான் அவரைப் பின்பற்றுகிறேன். என்றைக்கு பதின்மத்தின் இறுதி முடிந்து வாலிபத்தில் அடி எடுத்து வைத்தேனோ அன்றிலிருந்து அவரைத்தானே பின்பற்றுகிறேன். இரண்டாவது சூரியன் என்னும் புத்தகத்தை என் 20 வயதில் தட்டுத் தடுமாறி வாசிக்கத் தொடங்கினேன். கதையின் ஓட்டத்தில் கரைந்து கிடக்கும் வாழ்க்கையின் போக்கும் எப்படி எங்கே நடந்து கொள்ள வேண்டும் என்ற பண்பாட்டு முறைகளும், இதை எல்லாம் கடந்த ஒரு உள்நோக்குப் பார்வையையும் அவரின் கதைகள் எல்லாம் கொண்டிருந்தன. அவை வெறும் கதைகளாக மட்டும் எனக்குள் பதியவில்லை.