Pages

Saturday, June 19, 2010

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V


சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல....


வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்.....

இதுவரை

பாகம் I

பாகம் II

பாகம் III

பாகம் IV


இனி....


மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும் எனக்கு ஆத்திரத்தை அதிகமாக்கி...இயலாமையில் அழுகையில் கொண்டு வந்து நிறுத்தியது. நான் தேம்பி தேம்பி அழுதேன். சுற்றி இருந்த அனைவரும் என்னை தேற்ற முயன்றது எனக்குள் ஒருவித சுயபச்சாதாபத்தை ஏற்படுத்த எனது அழுகை அதிகமானது.....

என் ரஜினி.....தலை கோதும் அழகு..... நடக்கும் அழகு.. எனக்குப் பிடித்த கண்கள், எதிரிகளை பந்தாடும் வேகம்....கடகடவென்று பேசும் ஒரு ஸ்டைல்....என் ரஜினி....இனி நடிக்கமாட்டாரா....ஏன்....? நான் எனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டு ...கன்னத்தில் கைவைத்து வீட்டு வாசப்படியில் அமர்ந்திருந்த போது....என் அழுகை நின்றிருந்தது...என்னை சுற்றிய கூட்டமும் சென்று விட்டது. என்னடா மனுசன் இவர் நடிக்கமா போறேன்னு சொல்றாரு. சாமியார போகப்போறார்னு சொன்னது எனக்கு புரியவே இல்லை. சந்தோசமாத்தானே இருக்காரு...சாமியார போன...எல்லாத்தையும் விட்டுட்டு போகணும் அதில என்ன சந்தோசம் இருக்க போகுது......?

தனியா இருப்பது பைத்தியக்காரத்தனம் தானே... ரஜினிக்கு பயமே இல்லையா... ? இல்லை பாசமே இல்லையா... குடும்பத்தினரை விட்டு தனியா போறன்றாரே... ஐயோ என்னா ஆச்சு ரஜினிக்கு? ரஜினிக்கு புடிச்ச சாமிய எனக்கு புடிச்ச சாமியா ஆக்க்கிகிட்டேன்.

"பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாய ச
பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே!"

சுகுந்தா அக்காகிட்ட பேப்பர்ல எழுதி வாங்கி.... டவுசர் பாக்கெட்ல வச்சுகிட்டு ராத்திரியும் பகலுமா அத நான் மனப்பாடம் பண்ண நான் பட்டபாடு....எனக்குதான் தெரியும்....! கையில ரஜினி மாதிரியே...செப்பு காப்பு பல்வேறு எதிர்ப்புகளுக்கும் நடுவில, ஸ்கூல்ல வாத்தியார் கண்டிப்பையும் மீறி... நான் அணிந்திருந்தேன். ரஜினி....என்னைப் பொறுத்த வரைக்கும் எனக்கு சொந்தம்...அப்படி ஒரு பிரமையில் இருந்தேன்.. திடீர்னு நடிக்கமாட்டார்னா என்ன விளையாட்டா?

கமல் சார், டைரக்டர் பாலசந்தர் சார் எல்லாம் எனக்கு கடவுளா தெரிஞ்சாங்க....ஏன்னா அவுங்கதான் ரஜினிய தனியா சந்திச்சு சாமியார எல்லாம் போகக்கூடாதுன்னு வற்புறுத்தி இருக்காங்க...குமுதத்தில படிச்ச உடனே எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.......

மீண்டும் ரஜினி நடிப்பார்னு செய்தி வந்தபோது என்னவோ....மீண்டும் ஒரு புதுபிறவி எடுத்து ரஜினி வந்த மாதிரி எனக்கு தோணிச்சு ராகவேந்திரர் ரஜினியோட 100வது படம் அதில ரஜினி ராகவேந்திரரா நடிச்சது எனக்குப் பிடிக்கல...ஏன்னா....அப்படி ஒரு ரஜினி எனக்கு பிடிக்காது. அவர் சாதுவா வந்தா சண்டை இருக்காதுல்ல...ஸ்டைல் இருக்காதுல்ல....அதுதான் காரணம் ஆன மீண்டும் நடிக்க வந்தது ரொம்ப சந்தோசமா இருந்தது.

காலச்சக்கரத்தின் சுழற்சியில் ரஜினி எனது வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத மனிதராய் ஆகிபோய்விட்டார். தீபாவளி, பொங்கல் புது ரீலீஸ், அவரின் ஆடியோ ஆடியோ கேசட் ரிலீஸ் என்று ஒவ்வொரு நிகழ்விலும் தொடர்ந்து ரஜினி ரசிகனாய் பயணித்தேன். பதின்ம வயதினை எட்டிப்பிடித்த போது சில நண்பர்கள் ரஜினிக்கு டான்ஸ் ஆடத்தெரியாது.... நடிக்கத்தெரியாது என்று சீரியஸாகவே பேசினார்கள். அப்படி பேசியவர்கள் பெரும்பாலும் கமலின் தீவிர ரசிகர்கள்.....+1 படிக்கும் போதுதான் யோசனை செய்தேன்...ரஜினிக்கு நடிக்கத் தெரியாது என்று இவர்கள் எப்படி சொல்கிறார்கள். எது நடிப்பு? ஒரு வேளை எனக்கு நடிப்பு என்றால் என்ன என்று தெரியவில்லையா? ஆனால் ரஜினி எனக்கு பிடிப்பது வேறு ஏதோ ஒரு காரணத்தால் என்று மட்டும் புரிந்தது. இருந்தாலும் கடுமையாக ஆக்ரோசமாக அவர்களுடன் வாதிட்டு சண்டை போடுவேன்.


" என் தலைவன் நடிக்க வேண்டாம்.... நடந்தாலே போதும்...! ரஜினி சீனுக்குள் வர வேண்டாம் வெறும் ரஜினியின் கையை மட்டுக் காட்டி சுண்டச் சொன்னால் போதும்....படம் சில்வர் ஜூப்ளி" கத்தி கத்தி எனக்குள் இருந்த ரஜினி ரசிகன் வேகமாய் பேசிய காலம் அது.

தளபதி 1991ல் எனது கனவு படம்! மணிரத்னம் படம் வேறு ஆடியோ கேசட். ரீலீஸ் அன்னைக்கு....என்னை சுற்றி கமல் ரசிகர்களாகிய எனது நண்பர்கள் சூழ.......கேசட்டை (லஹரி கேசட்ஸ் வெளியீடு.....என்ன நான் சொல்ரது சரியா பாஸ்..!) உள்வாங்கிக்கொண்ட டேப் ரிக்கார்டர்...ப்ளே பட்டனை பட படப்போடு நான் ஆன் செய்ய.....(உள்ளே பயங்கர டென்ஸன் பாட்டு மொக்கையா இருந்தா என்ன ஓட்டியோ கொன்னுடுவாய்ங்க.....)

கேசட் சுழல ஆரம்பித்தது.....

"டாண்ட ட ட டடண்டன்ன்ன்....ராக்கம்மா கையத்தட்டு....."

பாட்டு முடியவில்லை.... நான் குதித்துகொண்டு இருந்தேன்....வீட்டில் யாரும் இல்லை அம்மா கோவிலுக்கும், அக்கா ட்யூசனுக்கும் ( நான் ட்யூசன் படிக்கலையான்னு கேக்குறீங்களா..தலைவர் பட கேசட் வெளியீடு...ட்யூசனுக்கு மட்டை) போன ஒரு மாலை நேரம்....வீட்டுக்குள் அலறிக் கொண்டிருந்தது...பானோசோனிக் டேப் ரிக்கார்டர். நண்பர்கள் அனைவரும் மொக்கை பாட்டை எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர் (அப்பொ தானெ என்னைய ஓட்ட முடியும்..)....அடுத்த பாட்டும் வந்தது......" காட்டுக்குயிலு...மனசுக்குள்ளே..." நான் சந்தோசத்தில் கத்தினேன்....டேப்ரிக்கார்டர்...சப்தம் தாண்டி என்னுடைய சப்தம் தாண்டி....."

டொக்...டொக்...டொக்...." யோரோ கதவை பலமாக தட்டும் சப்தம் கேட்டது....

அட யார்றா இது......இம்சை என்று ரஜினி ஸ்டைலில் கதவைதிறந்தேன்....


அங்கு.......


(தொடர்ந்து வருவான் ரஜினி ரசிகன்....)


தேவா. S

135 comments:

LK said...

boss as a thalaivar fan i am waiting for moree

நாஞ்சில் பிரதாப் said...

அடுத்த வாரிசுக்கப்புறம் ரஜீனி நடிக்காமலயே இருந்திருந்தா எவ்ளோ நல்லாருந்திருக்கும்னு
தோனுது... :)))


ஓரு வடிஞ்செத்த கமல் ரசிகன்.... :))

vijay said...

அண்ணா ஒரு தீவிர இரசிகன நேர்ல பார்த்த ஒரு உணர்வு உங்க வரிகளில் இருந்து வருதுங்க அண்ணா....ஒரு ரசிகன் அப்டிங்கற அந்த வேலைய சரியா செய்து இருகீங்க....ஆடியோ கேசட். ரீலீஸ் அன்னைக்கு இருக்குற ஒரு உணர்வ எழுத்துல சொல்லி இருகீங்க ...நீங்க கலக்குங்க அண்ணா..........

அகல்விளக்கு said...

நல்லா எழுதியிருக்கீங்க நண்பரே...

இசைவெளியீடு பற்றிய வரிகள் அருமை...

ஜெய்லானி said...

கலக்குங்க பாஸ்..!!

முனைவர்.இரா.குணசீலன் said...

ரஜினியின் அதி தீவிரர ரசிகரா நீங்கள்?

Jay said...

ஆடியோ கேசட். ரீலீஸ் அன்னைக்கு இருக்குற ஒரு உணர்வ எழுத்துல சொல்லி இருகீங்க நாங்களும் அப்படி தான் இருப்போம் பாஸ்......

soundar said...

அந்த வயதில் அந்த படம் புடிக்காது
ரஜினியோட 100வது படம் அதில ரஜினி ராகவேந்திரரா நடிச்சது எனக்குப் பிடிக்கல...ஏன்னா....அப்படி ஒரு ரஜினி எனக்கு பிடிக்காது.

எனக்கும் புடிக்காது அண்ணா

dheva said...

கார்த்தி....@ நன்றி பாஸ்.. அட நீங்களும் ரஜினி ரசிகரா....!

dheva said...

நாஞ்சில்...@ மாப்ள....ஏன் ஏன் ஏன் இந்த வயித்தெரிச்சல்....?

dheva said...

விஜய்.....@ தம்பி....ரஜினி ரசிகன்னு சொன்னாலே...அவன் தீவிரமான ரசிகந்தான்....என்ன...கரீக்ட்கா ரஜினி பேன்ஸ்?

dheva said...

அகல் விளக்கு ராஜா...@ பரீட்சை ரிசல்ட் கூட இப்படி பாத்ததில்ல...ஹா...ஹா...ஹா!

dheva said...

ஜெய்லானி....@ நன்றிங்க...பாஸ்!

dheva said...

முனைவர் குணசீலன்...@ ஹி....ஹி...ஹி...அப்போ அப்டிதானுங்க....!

dheva said...

ஜெய்...@ அட நம்மாளு....! அட நம்மாளு....!

dheva said...

செளந்தர்...@ சண்டை இல்லாம ரஜினி படமா...அப்டீன்ற எரிச்சல் கரெக்டா?

soundar said...

தேவா..@ சண்டை இல்லாம ரஜினி படமா...அப்டீன்ற எரிச்சல் கரெக்டா
ஆமா ரஜினி வந்தா கலக்கல இருக்கனும் அதுதான் ரஜினி

இராமசாமி கண்ணண் said...

அடுத்த வாரிசுக்கப்புறம் ரஜீனி நடிக்காமலயே இருந்திருந்தா எவ்ளோ நல்லாருந்திருக்கும்னு
தோனுது... :)))


ஓரு வடிஞ்செத்த கமல் ரசிகன்.... :))

--- ரிப்பிட்டு :-).

ப.செல்வக்குமார் said...

naan kamal rasikan anna...

dheva said...

யோவ்..மாப்ள... நாஞ்சிலு... நீர் பாட்டுக்கும் ஒரு கமென்ட போட்டுடீரு..வர்ற...ஆளுக எல்லாம் அத வழி மொழியுது.....ரஜினிய பத்தி தப்பாபேசாதீரு... நம்ம கூட்டம் இன்னும் வெளில வரல...வந்துச்சு..... நீங்க எல்லோரும் அம்பேல்...!

dheva said...

தம்பி.....இராமசாமி கண்ணன்....@ ஏம்பா படிக்கிற ஆளுக பூரா இப்படி கமல் ரசிகராவா இருக்கணும் ...செல்வகுமார பாரு....அவனும் கமல் ரசிகனாம்....!

ஏம்பா ரஜினி ரசிகர் யாருமே இல்லையா........அட சப்போர்ட்டுக்கு வாங்கப்பா....என்ன தனியா வச்சு கும்மிரா போறாய்ங்க....!

dheva said...

ஒரு குரூப்பாதாய்யா....கிளம்பி இருக்காய்ங்க...!

ஜெயந்தி said...

இது வேற ஓடுதா? ஓகே ஓகே. எனக்கும் ரஜினி பிடிக்கும்.

dheva said...

ஜெயந்தி....@ நன்றி ...தோழி....வாங்க....!

ஏய்... நாஞ்சிலு..அன் கோ...எனக்கு சப்போட்டுக்கு ஆளு வந்துடுச்சு..இப்ப பேசு...ஏய்...இப்ப பேசு....! நல்லா கேக்குறாய்ங்கய்யா..டீட்டெய்லூ...!

LK said...

யாருலே தலைவர பத்தி தப்பா பேசறது

dheva said...

கார்த்தி...(LK) @ சிங்கம் களம் இறங்கிருச்சே......!

soundar said...

என்ன LK வந்த உடன் யாருன் வரலை இப்போ பேசுங்கோ சிங்கம் ஒன்று புறப்பட்டதே.....

நாஞ்சில் பிரதாப் said...

நான்தாம்லே.... எலே பசுபதி எட்றா என்ட்ற துப்பாக்கியை....

நாஞ்சில் பிரதாப் said...

அட நம்ம எல்கே.. என்ன மச்சி எப்படி இருக்கே...

எலே பசுபதி துப்பாக்கி வேணாம்லே... அது நம்மாளுதான்... துப்பாக்கியை உள்ளவச்சுட்டு சொம்பை வெளில எடு...

LK said...

கண்ணா, குண்டில்லாத துப்பாக்கி சுடாது, அதை தெரிஞ்சக்க முதல்ல

LK said...

//நாஞ்சில் பிரதாப் said...
அட நம்ம எல்கே.. என்ன மச்சி எப்படி இருக்கே...

எலே பசுபதி துப்பாக்கி வேணாம்லே... அது நம்மாளுதான்... துப்பாக்கியை உள்ளவச்சுட்டு //

அது..
நல்ல இருக்கேன் . உன்னைத்தான் வீடு பக்கம் காணோம்

dheva said...

நாஞ்சிலு....@ யோவ் மாப்ள... சொம்பு எதுக்கியா....?

நாஞ்சில் பிரதாப் said...

நாலுபேரு நல்லாருக்கனும்னா குண்டில்லாத துப்பாக்கிய எடுக்கறதுல தப்பே இல்ல...

soundar said...

நாஞ்சில் பிரதாப் @@நான்தாம்லே.... எலே பசுபதி எட்றா என்ட்ற துப்பாக்கியை

அதுல முதல் ரவை, சேமியா போடுங்கள் பாஸ்

dheva said...

நாஞ்சிலு....@ தலிவரு பேர சொன்னா சும்மா அதிருதுல்ல.....! இதோ பார் நாஞ்சிலு....யோவ் உன்னத்தான்ய கூப்பிட்டேன்...டமில் திரியாதா....." தீப்பட்டிக்கு ரென்டு பக்கம் உரசுனாத்தான் நெருப்பு வரும்ம்...இந்த...மானிக் பாட்ச்சாவுக்கு....ஹேய்....ஹேய்....ஹேய்....எங்க வச்சுக்கலாம் சொல்லு.....!

நாஞ்சில் பிரதாப் said...

//dheva said...
நாஞ்சிலு....@ யோவ் மாப்ள... சொம்பு எதுக்கியா....? //

சொம்பு இல்லாம நாட்டாமை என்னிக்கு தீர்ப்பு சொலிருக்காரு மாம்ஸ்...

தமிழ்நாட்டு நடிகனை பிடிக்காமல் கன்னட நடிகனுக்கு எல்லாரும்
சப்போர்ட் பண்றீங்கஙளா???? இருங்க இருங்க சீமான் கிட்ட சொல்லிக்கொடுக்கறேன்... :))

(அப்பாடா இனவெறியை தூண்டற மாதிரி சென்சிட்டிவ் கமெண்ட் போட்டாச்சு... இனி பத்திகிட்ட எரிஞ்சாலும் கவலையில்லை... மாம்ஸ் சமாளிச்சுப்பாரு...)

இராமசாமி கண்ணண் said...

அய்யோ உண்மய சொன்னா எத்தன பேருக்கு கோபம் வருது நாட்டுல :-).

dheva said...

நாஞ்சிலு...@ அட என்னய்யா மாப்ஸ் ட்ராக்கயே மாத்திவிடுறாரு....விட்டா... நாங்க எல்லாம் ராஜபக்ஸே ஆளுங்கன்னு சொல்லுவறு போல... சீமான் இவர நம்பாதீங்க...டமில் வாழ்க...! தலிவர் ரஜினி வாழ்க..வாழ்க...!

நாஞ்சில் பிரதாப் said...

//ஜெயந்தி said...
இது வேற ஓடுதா? ஓகே ஓகே. எனக்கும் ரஜினி பிடிக்கும்.//

ஜெயந்தி... குறுக்கே வராதீங்க... இது ரத்த பூமி...
போங்க போய் வீட்டுல பெரியவங்க இருந்தா வரச்சொல்லுங்க...

soundar said...

இனி பத்திகிட்ட எரிஞ்சாலும் கவலையில்லை//
அட பாவிங்களா இங்க கம்ப்யூட்டர் பத்தி எரியுது

நாஞ்சில் பிரதாப் said...

//அய்யோ உண்மய சொன்னா எத்தன பேருக்கு கோபம் வருது நாட்டுல :-). //

அதானே... விடுங்க ராமசாமி... இட்ஸ் ஆல் இன் தி கேம்....

இராமசாமி கண்ணண் said...

அய்யா நாஞ்சிலு நீ அடிச்சு ஆடு.. நான் இருக்கேன் உன் துணைக்கு.

dheva said...

இராமசாமி கண்ணன்....@ டேய்...மாரி...பாபு..செந்தில்ல்....டேனியல்...அந்தோணி...முஸ்தபா....சிங்கு..எல்லாரும் கிளம்புங்கடா.....


பாத்துடலாம்....கண்ணா...சிங்கம் சிங்கிளா வரும்... நாங்க.....சிங்கிள் சிங்கிளா சேர்ந்து வர்றோம்...வர்ட்டா....தேங்க்யூ..தேங்க்யூ..தேங்க்யூ..!

soundar said...

எங்க தல தான் சூப்பர் ஸ்டார்

dheva said...

செளந்தர்....@ யார்றா அது எடையில புதுக்கட்சி..தல..வாலு...இரத்தம்...மூளைன்ன்னு...! இருப்பா..இருக்குற பிரச்சினைய முதல்ல தீத்துகுறோம்...!

இராமசாமி கண்ணண் said...

நீங்களலாம் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரின்னு டுபாக்ஸ் விடற ஆளுங்க. ஆனா நாஙகளலாம் பார்த்தால போதும் ஒரு தடவை கூட சொல்ல வேணாம் எதயும் :-).

soundar said...

தல, தலைவர் ரசிகர்கள் நண்பர்கள் பாஸ்

dheva said...

இராமசாமி கண்ணன்...@ என்னது பாத்தாலேயேவா...அதான் தெரியுமே.... நீங்க..(கமல்) ரசிகர் எல்லாம்..ஒரு பொம்பளப்புள்ளைய விட மாட்டீங்கண்னு...( நாஞ்சிலு....எவென் பொண்ணு குடுக்குறானு பாக்குறேன்..)

dheva said...

செளந்தர்....@ தம்பி...ஒத்துக்குறேன்.... நீயும் என் கட்சின்னு...ரெடி...சாட்...!

நாஞ்சில் பிரதாப் said...

//.soundar said...
எங்க தல தான் சூப்பர் ஸ்டார் //


பேச்சுமாறப்படாது... இவ்ளோ நேரம் ரஜீனித்தான் சூப்பர் ஸ்டார்னட்டு இப்போ "தல" அஜீத் சூப்பர் ஸ்டார்னு சொல்றாரு...

என்ன மாம்ஸ் இவங்களை எப்படி சப்போட்டுக்கு கூப்பிடறீங்க...

நாஞ்சில் பிரதாப் said...

//நீங்களலாம் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரின்னு டுபாக்ஸ் விடற ஆளுங்க. ஆனா நாஙகளலாம் பார்த்தால போதும் ஒரு தடவை கூட சொல்ல வேணாம் எதயும் :-). //


கண்ணா பின்னா தாறுமாறா... ரிப்பிட்டு அடிக்கிறேன்...

dheva said...

நாஞ்சில்...@ சும்மாயிருக்கிற தோழி ஜெயந்திய சீண்டிறத வேடிக்கை பாத்துட்டு போகமட்டோம்......

வலது கால இடது காலா மாத்தி....இடது கால வலதுகாலா மாத்தி...சும்மா சுத்தி சுத்தி அடிப்போம்....
என்ன கரிக்டா..கண்ணா....? ஹா....ஹா...ஹா!

நாஞ்சில் பிரதாப் said...

மாம்ஸ்... நித்தியானந்தாவுக்கு ரசிகனா இருந்தாத்தான் எவனும் பொண்ணு தரமாட்டான்.
நான்தான் உலகநாயகனுக்கு ரசிகனாச்சே...

dheva said...

நாஞ்சில்...@ மாப்ஸ்...ஒரு பதிவுல...எத்தன மேட்டரையா இழுப்பே...சீமான்னே..தமிழ்னே..கன்னடம்னே..இப்பொ இந்தா ஆளையுமா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

நாஞ்சில் பிரதாப் said...

//வலது கால இடது காலா மாத்தி....இடது கால வலதுகாலா மாத்தி...சும்மா சுத்தி சுத்தி அடிப்போம்....//

மாம்ஸ்... அத கேப்டன் பண்ற வேலையாச்சே... இவ்ளோ நேரம் ரஜீனி ரசிகனா இருந்துட்டு இப்படி திடீர்னு கேப்டன் ரசிகனா அந்தர் பல்டி அடிக்கறீங்க... வொய்??? வொய்???

ராமசாமி என்னை தடுக்காதீங்க...விடுங்க...விடுங்க...

dheva said...

நாஞ்சிலு....@ ''மாம்ஸ்... அத கேப்டன் பண்ற வேலையாச்சே... இவ்ளோ நேரம் ரஜீனி ரசிகனா இருந்துட்டு இப்படி திடீர்னு கேப்டன் ரசிகனா அந்தர் பல்டி அடிக்கறீங்க... வொய்??? வொய்??? ///

இந்த வேலைய நாங்கதாய்யா பாத்துட்டு இருந்தோம்...முதல்ல....!

நாஞ்சில் பிரதாப் said...

நாங்கல்லாம் உலகநாயகன் ரசிகர்கள் மாம்ஸ்,அவர் ஒரு மல்டி ஸ்கில் ஆர்டிஸ்ட் அவரை பாலோ
பண்றோம் அவளோதான்....

dheva said...

நாஞ்சிலு....@ அப்புறம் நித்தி மல்டி ஸ்கிள்ஸ்ல இருந்தா ஏன் கோவம் வருதாம்...?

soundar said...

நாஞ்சில் பிரதாப் @ இப்போ ரஜினி தான் சூப்பர் ஸ்டார்// ரஜினிக்கு பிறகு எங்க ரஜினியே அந்த பட்டதை அவரே கொடுப்பார் நல்லவர் ரஜினி...

இராமசாமி கண்ணண் said...

//வலது கால இடது காலா மாத்தி....இடது கால வலதுகாலா மாத்தி...சும்மா சுத்தி சுத்தி அடிப்போம்....//

பாத்து ரொம்ப ஆட்டிராதீங்க. சுலுக்கிக்க போகுது :-)

soundar said...

நாஞ்சில் பிரதாப்@@உலகநாயகன் யார் அது அப்படி ஒரு நடிகரே கிடையாதே....

thenammailakshmanan said...

ரொம்ப சுவாரசியம் ..அருமை தேவா.. தொடருங்கள்... அடுத்தது எப்போ

dheva said...

செளந்தர்.....@// நாஞ்சில் பிரதாப்@@உலகநாயகன் யார் அது அப்படி ஒரு நடிகரே கிடையாதே.... //

சராமாரிய...உங்கவீடு இல்ல எங்கா வீடு இல்ல...உலக ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்!

soundar said...

கமல் படம் தமிழ் நாடு தாண்டி ஓடாது ரஜினி படம் ஜப்பான், அமெரிக்கா எல்லம் ஓடுது பாஸ்

அன்புடன்-மணிகண்டன் said...

பதிவு.. சூப்பர் ஸ்டார் போலவே.. Stylish... :)

Chitra said...

////ரஜினிக்கு நடிக்கத் தெரியாது என்று இவர்கள் எப்படி சொல்கிறார்கள்.////


....... ஹா,ஹா, ஹா,ஹா,ஹா...... குட் ஜோக்.

Chitra said...

அங்கே பகல் - இங்கே நைட்டுனு நான் தூங்க போன நேரத்துல, என்னை விட்டு விட்டு கும்மி அடிச்சது நல்லா இல்லை, சொல்லிட்டேன்.

Chitra said...

இராமசாமி கண்ணண் said...

/////அய்யோ உண்மய சொன்னா எத்தன பேருக்கு கோபம் வருது நாட்டுல ...... ////


...... அதானே, தேவா ஒரு "உண்மை"யை சொன்னா, உங்களுக்கு ஏன் கோபம் வருது?

Chitra said...

நாஞ்சில் பிரதாப் said...

மாம்ஸ்... நித்தியானந்தாவுக்கு ரசிகனா இருந்தாத்தான் எவனும் பொண்ணு தரமாட்டான்.
நான்தான் உலகநாயகனுக்கு ரசிகனாச்சே...


...... அப்போ மூணு கல்யாணம் (?????!!!!) ....
நல்லா இருங்க, மக்கா!

Chitra said...

தேவா, நல்லா எழுதுறீங்கப்பா..... கூல்!

நாஞ்சில் பிரதாப் said...

//கமல் படம் தமிழ் நாடு தாண்டி ஓடாது ரஜினி படம் ஜப்பான், அமெரிக்கா எல்லம் ஓடுது பாஸ்//

கண்ணா எங்க ஓடுச்சுங்கறது முக்கியமில்லை யாரு பார்த்தாங்கறதுதான் முக்கியம்....

Jeyamaran said...

Rajini the boss பேர கேட்டாலே சும்மா அதிருதுல

dheva said...

மாப்ஸ் நாஞ்சிலு../ தம்பி நாஞ்சிலு....@ தனியா வந்த ஆள...என்ன பின்னு பின்னிஎடுத்தீங்க.....இதோ....எங்களுக்கு சப்போர்டுக்கு ஆளு வந்தாச்சு....

" என்கிட்ட மோதாதே.... நான் ராஜாதி ராஜனடா....! வம்புக்கு இழுக்கதே... நான் சூராதி சூரனடா...."

நாஞ்சில் பிரதாப் said...

//. அப்போ மூணு கல்யாணம் (?????!!!!) ....
நல்லா இருங்க, மக்கா//

அய்...சூப்பர்... சித்ரா உங்க ஆ காட்டுங்க..குலாம் ஜாம்தான் போடனம்....

நாஞ்சில் பிரதாப் said...

உங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு... முதல்ல சூப்பர் ஸ்டாருக்கு ஒரு விக் வாங்கி கொடுங்க பார்க்க சகிக்கலை....

Chitra said...

நாஞ்சில் பிரதாப் said...

உங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு... முதல்ல சூப்பர் ஸ்டாருக்கு ஒரு விக் வாங்கி கொடுங்க பார்க்க சகிக்கலை....

...... உங்கள் ஆளு, ஒரு பேட்டி கொடுத்தார்னா, அந்த நீளஆஆஆஆஆஆஆஆஆ - புரியாத தமிழையும் - பதிலையும் நாங்க சகிச்சிக்கலியா?

Chitra said...

நாஞ்சில் பிரதாப் said...

//. அப்போ மூணு கல்யாணம் (?????!!!!) ....
நல்லா இருங்க, மக்கா//

அய்...சூப்பர்... சித்ரா உங்க ஆ காட்டுங்க..குலாம் ஜாம்தான் போடனம்....

........ ice-cream kodunga.... adhaan enakku pidikkum. :-)

Chitra said...

அய்யோ....... இப்போ பார்த்து, எனக்கு வேலை இருக்கே...... தேவா.... இனி, எனக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கப்பா.... அடுத்த எபிசொட் போடும் போது.... முதலிலேயே ப்ரீ ஆகி வரப் பாக்குறேன். :-)

Anonymous said...

யோவ் நாஞ்சிலு, தலைவரப் பத்தித் தப்பா பேசாதே..
- தலைவரின் தற்கொலைப் படை

இராமசாமி கண்ணண் said...

// நாஞ்சில் பிரதாப் said...

உங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு... முதல்ல சூப்பர் ஸ்டாருக்கு ஒரு விக் வாங்கி கொடுங்க பார்க்க சகிக்கலை....//
நாஞ்சிலு விக் வாங்கி கொடுத்தாலும் ஒன்னும் பருப்பு வேகாது நாஞ்சிலு. ஒட்டறதுதான் ஒட்டும்.

அனு said...

அட.. தலைவர பத்தி தொடர் பதிவு போட்டிருக்கீங்களா?? நான் கவனிக்கவே இல்லயே.. இப்பவே போய் நாலு பார்ட்-டையும் படிச்சுட்டு வரேன்..

எங்க வீட்ல சூப்பர் ஸ்டார் படத்துக்கு மட்டும் தான் தியேட்டருக்கு கூட்டிட்டு போவாங்க (போக வச்சிடுவோம்).. சூப்பர் ஸ்டார் படம்-னா sure entertainment..
DD Metro-ல count down நிகழ்ச்சியில 'ராக்கம்மா கைய தட்டு' பாட்டு பாக்குறதுக்காகவே friends எல்லோரும் ஒரு கூட்டமா சேர்ந்திடுவோம்.. கிட்டத்தட்ட ஒரு வருஷம் No.1ல இருந்திச்சு அந்த பாட்டு..

அனு said...

@நாஞ்சில்

எங்க தலைவர் என்ன மத்தவங்க மாதிரி மாறுவேடமா போட்டு நடிக்க போறாரு??

அவர் இயற்கைலயே ஸ்மார்ட்டுங்க.. விக் வாங்கி உங்க தலைவருக்கு குடுங்க..

dheva said...

நாஞ்சிலு..../ இராமசாமி கண்ணன்....@ யோவ் மாப்பு......என்னய்யா சவுண்ட காணோம்.... நாஞ்சிலு.....தம்பி ராமு....உங்கள எல்லாம் பாத்த எனக்கு பாவமா இருக்கு.....

உங்க ஆள குனிஞ்சு தலைய காமிக்க சொல்லுங்க....இன்னொரு ஏர்போர்ட் கட்டலாம்.....ஆஸ்கார் வாங்கின ரகுமானே....சும்மா இருக்காரு....


எங்க டீம் இறங்கிட்டே இருக்கும்....சித்ரா, அனுவெல்லாம் பாத்தீங்கள்ள...எப்படி டீட்டெய்ல் அட்டக் பண்றோம் 1991 முழுசா ராக்கம்மா கையத்தட்டு தான்....

மறுபடியும் சொல்றேன்...உங்கள எல்லாம் பாத்த எனக்கு பாவமா இருக்கு......!

dheva said...

அனு......@

//@நாஞ்சில்

எங்க தலைவர் என்ன மத்தவங்க மாதிரி மாறுவேடமா போட்டு நடிக்க போறாரு??

அவர் இயற்கைலயே ஸ்மார்ட்டுங்க.. விக் வாங்கி உங்க தலைவருக்கு குடுங்க..//

ரிப்பீட்டோ ரிப்பீட்டு...இப்டி சொல்றதே.....எஙக டலிவர் ஸ்ட!இல்தான்....ரீப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு

நாஞ்சில் பிரதாப் said...

//யோவ் நாஞ்சிலு, தலைவரப் பத்தித் தப்பா பேசாதே..
- தலைவரின் தற்கொலைப் படை//

பார்யா.... தற்கொலை படையாம்.... பேரைபோட்டு கமண்ட் போட தில்லு இல்லை.... இவருஎங்க பாம் வைக்கப்போறாரு... டைகர்பாம் கூட போடமுடியாது....

நாஞ்சில் பிரதாப் said...

//அனு said...
@நாஞ்சில்

எங்க தலைவர் என்ன மத்தவங்க மாதிரி மாறுவேடமா போட்டு நடிக்க போறாரு??

அவர் இயற்கைலயே ஸ்மார்ட்டுங்க.. விக் வாங்கி உங்க தலைவருக்கு குடுங்க..///


த்தோடா..... ஸ்மார்டாம் யாரு.... அப்ப உண்மையிலேய ஸ்மார்டா யாரைவாது பார்த்தா என்னான்னு சொல்வீங்களாம்... என்ன ஒரு ரசனை...

நாஞ்சில் பிரதாப் said...

//அட.. தலைவர பத்தி தொடர் பதிவு போட்டிருக்கீங்களா?? நான் கவனிக்கவே இல்லயே.. இப்பவே போய் நாலு பார்ட்-டையும் படிச்சுட்டு வரேன்.//

நீங்க சும்மா இருக்கீங்கன்னு தெரியுது...இதுக்கு நல்ல திருக்குறள் புக்கை எடுத்துப்படிங்க... பின்னாடி உதவும்...

நாஞ்சில் பிரதாப் said...

//Chitra said...
அய்யோ....... இப்போ பார்த்து, எனக்கு வேலை இருக்கே...... தேவா.... இனி, எனக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கப்பா.... அடுத்த எபிசொட் போடும் போது.... முதலிலேயே ப்ரீ ஆகி வரப் பாக்குறேன்.//

இருங்க இருங்க ஒபாமாகிட்டபோட்டுக்கொடுக்கறேன்....அமெரிக்கா நாசமா போக முதல் காரணம் நீங்கதான்னு....

dheva said...

நாஞ்சில்....@ மாப்பு அழகுதான்....

" நீ நடந்தால் நடை அழகு... நீ பேசும் தமிழ் அழகு...." அப்டீன்னு எங்க தலிவருக்குத்தான் பாட்டு இருக்கு....கருப்பு வைரம் மாப்ஸ்.....கொறச்சு எட போடாதீங்க...!

dheva said...

அனு....@ நமக்கு எல்லாம் தெரியாமப் போச்சே...கமல் ரசிகர் எல்லாம் திருக்குறள் படிப்பாங்கன்னு....அடா..அடா.....புது மேட்டர் சொல்றாரே...மாப்பு....! ஆமா திருக்குறள் படிச்சா....மூணு கல்யாணம் பண்ணனுமா என்ன?

dheva said...

சித்ரா.....@ தலைவர் படம் சூப்பரா ஓடி எப்பவுமே...சூப்பர் ஹிட்..ஆனதுல நம்ம மாப்ஸ் கொஞ்சம் வயித்தெரிச்சலில் இருக்காரு....இன்னொரு விசயம் இவுங்க ஆளு புஷ் வேசம் போட்டதுக்கு பத்து வாட்டி அமெரிக்கவ கொளுத்தணும்....ஹா...ஹா...ஹா...!

அனு said...

//அப்ப உண்மையிலேய ஸ்மார்டா யாரைவாது பார்த்தா என்னான்னு சொல்வீங்களாம்... //

அவர் ரஜினி மாதிரியே ஸ்மார்ட்டா இருக்கார்னு சொல்லுவோம் (அவர மாதிரி ஸ்மார்ட்டா ஒருத்தர் இருப்பாரான்றதே டவுட் தான்..)

எந்த நடிகருக்குமே சூப்பர் ஸ்டார் அளவுக்கு ஸ்டைல் கிடையாது.. உங்க தலைவருக்கு, எங்க தலைவர் அளவுக்கு ஸ்டைல் இல்லை-ன்ற பொறாமைல தானே இப்படி எல்லாம் பேசுறீங்க??

நாஞ்சில் பிரதாப் said...

மாமு.... உங்களுக்கு நல்ல சென்ஸ் ஆப் HUMOUR டி ஆனா உங்க சூப்பர் ஸ்டார் வச்சு ஏன் காமெடி பண்றீங்க

நாஞ்சில் பிரதாப் said...

//அவர் ரஜினி மாதிரியே ஸ்மார்ட்டா இருக்கார்னு சொல்லுவோம் (அவர மாதிரி ஸ்மார்ட்டா ஒருத்தர் இருப்பாரான்றதே டவுட் தான்..)//

அய்யோ... இந்த கொடுமையெல்லாம் கேட்ட ஊர்ல ஆளே இல்லயா.... ராமசாமி அண்ணாச்சி எங்கப்போனீய...வாங்க நம்ம அனு அக்கா பயங்கரமா காமெடி பண்றாங்க...

அனு said...

//இதுக்கு நல்ல திருக்குறள் புக்கை எடுத்துப்படிங்க//

அதெல்லாம் ஸ்கூல் பசங்க படிக்குறது.. அதுக்கு பதிலா நான் என் தலைவரோட 'திரு'க்குரலை (பஞ்ச் டயலாக்ஸ்) கேட்பேன்..

dheva said...

நாஞ்சில்...@ மாப்பு...சீரியஸா....பேசிகிட்டு இருக்கேன் சிரிப்பு போலிஸ் ஆக்குறியே...இதான் வேணன்றது...!

dheva said...

நாஞ்சில்...@ரீப்பீட்டு சொல்லி சொல்லி தொண்ட வறண்டு போச்சு...மாப்பு நாஞ்சில் ஒரு....மெளன்டன் ட்யூ ஆர்டர் பண்ணு....!

அனு said...

தம்பி நாஞ்சில்,

எங்க தலைவர் புகழ் பொறுக்காம நீங்க தான் வயித்தெரிச்சல்ல இருக்கீங்க..

அசந்தா அடிக்குறது உங்க பாலிசி.. அசராம அடிக்குறது எங்க தலைவர் பாலிசி..

நாஞ்சில் பிரதாப் said...

//அனு said...
அதெல்லாம் ஸ்கூல் பசங்க படிக்குறது.. அதுக்கு பதிலா நான் என் தலைவரோட 'திரு'க்குரலை (பஞ்ச் டயலாக்ஸ்) கேட்பேன்..//

இங்கப்பாருங்க அனு ஜெயந்திக்க சொன்னதைத்தான் உங்களக்கு சொல்றேன்... இது ரத்த புமி... இங்க வராதீங்க... போய் பெரியவங்க யாராவது இருந்தா வரச்சொல்லுங்க...

நாஞ்சில் பிரதாப் said...

//ஒரு....மெளன்டன் ட்யூ ஆர்டர் பண்ணு....///

நீங்க ரஜினி ரசிகராச்சே,,, மௌன்டர் ட்யு குடிக்க கூடாது... பீடிங் பாட்டில் வேணா வாங்கித்தர்றேன்....

dheva said...

நாஞ்சில்...@ ரஜினி ரசிகள் எல்லாம் குழந்தை போன்ற மனம் கொண்டவர்க்ள்.....ஏன் மாப்பு அதான சொல்ல வர்றே...!

நாஞ்சில் பிரதாப் said...

//அசந்தா அடிக்குறது உங்க பாலிசி.. அசராம அடிக்குறது எங்க தலைவர் பாலிசி..//

என்னது சிகரெட்டா.....ஒரு நாளைக்கு சுமாரா எத்தனை அடிப்பாரு.... :))))))))))))))))))))))))))))))))))))))))

நாஞ்சில் பிரதாப் said...

எனி ஒன்... இஸ் தெர்---??? நான் ஒருத்தனே போதும் உங்களையெல்லாம் சமாளிக்க....

அனு said...

//இது ரத்த புமி... இங்க வராதீங்க... போய் பெரியவங்க யாராவது இருந்தா வரச்சொல்லுங்க..//

தம்பி.. என்னோட இந்த முகத்த தான் நீங்க பாத்திருக்கீங்க.. எனக்கு இன்னொரு முகம் இருக்கு.. அதை பாக்காதீங்க.. தாங்க மாட்டீங்க.. நொந்திருவீங்க.. (அவ்வளவு அசிங்கமா இருக்குமான்னு கைப்புள்ள டயலாக்ஸ் எல்லாம் விடக்கூடாது சொல்லிப்பிட்டேன்..)

dheva said...

நாஞ்சில்...@ //எனி ஒன்... இஸ் தெர்---??? //


மனசுல ரஜினின்னு நினைப்பு உனக்கு மாப்ஸ்...அதக்கூட ரஜினி ஸ்டைல்ல கேக்குற.....ஹா...ஹா..ஹா..!

அனு said...

//நான் ஒருத்தனே போதும் உங்களையெல்லாம் சமாளிக்க//

தம்பி.. நாங்க குடுத்தா அது வாய்ஸ்..
நீங்க குடுக்குறது எல்லாம் வெறும் நாய்ஸ்..

நாஞ்சில் பிரதாப் said...

ஆஆஆஆஆஆஆ எனி ஓன் இஸ் தெர்...ம்கும்,,ம்கும்... இது நம்ம தலைவர் மாதிரி இருக்கா..---

dheva said...

நாஞ்சில்...@ திக்கி திணறி....முக்கி....முனகி பேசுனா....உங்க தலிவர் மாதிரியே இருக்கு மாப்ஸ்!

நாஞ்சில் பிரதாப் said...

//தம்பி.. என்னோட இந்த முகத்த தான் நீங்க பாத்திருக்கீங்க.. எனக்கு இன்னொரு முகம் இருக்கு.. அதை பாக்காதீங்க.. தாங்க மாட்டீங்க.. நொந்திருவீங்க.. //

இப்போ போட்டிருக்கிறதே... ஏதோ அழகான பொண்ணோட வாடகை முகம்....அப்ப ஒரிஜினல் முகம் எப்படி இருக்கும்னு யுகிக்க முடியுது... நாங்கல்லாம் ஒரிஜினில் போட்டோவை போட பயப்படவே மாட்டோம்...ஏன்னா எங்களுக்கு ஒரே முகம்...ஏறுமுகம்... :)))

அனு said...

//ஆஆஆஆஆஆஆ எனி ஓன் இஸ் தெர்...ம்கும்,,ம்கும்... இது நம்ம தலைவர் மாதிரி இருக்கா.//

கரெக்ட்.. இப்போ தான் உங்க தலைவர் மாதிரியே திக்குவாய் ஸ்டைல்-ல பேசுறீங்க.. இப்படியே மெய்ண்டென் பண்ணுங்க..

நாஞ்சில் பிரதாப் said...

முக்கி முனகி இல்ல, அது நம்ம தலைவரோட ட்ரேட் மார்க்.....

dheva said...

நாஞ்சில்...@ உருப்புடாம பண்றாது எல்லாமே தலிவரோட டிரேட் மார்க்...ஆமாம்..உண்மைதான் மாப்ள...!

அனு said...

@தேவா

எங்க என்னோட பஞ்ச் டயலாக்-க காணும்.. காக்கா தூக்கிட்டு போயிருச்சா??

dheva said...

அனு....@ கலவரத்துல மிஸ் ஆகிடுச்சு...அனு....பாவமா இருக்கு நாஞ்சில பாத்த....அவுங்க தலிவருக்கு வடிஞ்செடுத்த ரசிகனா இருந்தத தவற அவரு ஒரு பாவம் பண்ணல அனு...!

அனு said...

// நாங்கல்லாம் ஒரிஜினில் போட்டோவை போட பயப்படவே மாட்டோம்//

நீங்க எதுக்கு பயப்படனும்? கண்ணாடியில பார்த்து பார்த்து உங்களுக்கு தான் பழகியிருக்குமே.. புதுசா பார்க்கிற நாங்க தானே பயப்படனும் (jus kidding)

நாஞ்சில் பிரதாப் said...

.//நீங்க எதுக்கு பயப்படனும்? கண்ணாடியில பார்த்து பார்த்து உங்களுக்கு தான் பழகியிருக்குமே.. புதுசா பார்க்கிற நாங்க தானே பயப்படனும்//

என்ன காமெடியா....?? ஏய் எல்லாரும் சிரிங்கப்பா... அனு அக்கா காமெடி பண்றாங்களாம்...இனிமே ஜோக் சொல்ல முன்னாடி சொல்லிடுங்க...அப்பத்தான் சிரிக்க வசதியா இருக்கும்...

அனு said...

யாரும் இல்லாத கடைல நான் மட்டும் தான் டீ ஆத்திட்டு இருக்கேனா??

நாஞ்சில் பிரதாப் said...

//எங்க என்னோட பஞ்ச் டயலாக்-க காணும்.. காக்கா தூக்கிட்டு போயிருச்சா??//

உங்க பஞ்ச் டயலாக்க நம்ம மாம்ஸ்சா சகிச்சுக்க முடில அதான் ரிஜக்ட் பண்ணிட்டாரு...பாவம் அவரு ஏற்கனவே உங்க சூப்பர் ஸ்டார் பஞ்சை கேட்டுகேட்டு காஞ்சிப்போய் கிடக்காரு... இதுல நீங்கவேறயா புதுசா,... வௌங்கிரும்...

dheva said...

அனு....@ //யாரும் இல்லாத கடைல நான் மட்டும் தான் டீ ஆத்திட்டு இருக்கேனா?? //ஹா.....ஹா..ஹா...
நாஞ்சிலுக்கும்...இராமசாமிக்கும் கேட்டுச்சா....!

dheva said...

நாஞ்சில்...@ //உங்க பஞ்ச் டயலாக்க நம்ம மாம்ஸ்சா சகிச்சுக்க முடில அதான் ரிஜக்ட் பண்ணிட்டாரு//


போட்டாச்சு மாப்ஸ்....கலவரத்துல மிஸ் ஆகிடுச்சு....சாரி...அனு...ஹா...ஹா...ஹா...!

அனு said...

//என்ன காமெடியா....?? ஏய் எல்லாரும் சிரிங்கப்பா..//

பாத்தீங்களா.. எல்லாத்தையும் மாத்தி மாத்தியே புரிஞ்சுக்குறீங்க..

சீரியஸா சொன்னா காமெடின்றீங்க.. எங்க தலைவர விட உங்க தலைவர்(??) பெருசுன்றீங்க.. ரொம்ப தெளிவா இருக்கீங்க போல..

அனு said...

//உங்க பஞ்ச் டயலாக்க நம்ம மாம்ஸ்சா சகிச்சுக்க முடில அதான் ரிஜக்ட் பண்ணிட்டாரு//

அதையெல்லாம் நீங்க கேட்டா ஆடி போயிருவீங்கன்னு உங்க மேல பாவப்பட்டு publish பண்ணாம விட்டிருப்பார்.. (எங்க கட்சிக்குள்ளயே குழப்பம் உண்டாக்க முயற்சியா?)

நாஞ்சில் பிரதாப் said...

//சீரியஸா சொன்னா காமெடின்றீங்க.. எங்க தலைவர விட உங்க தலைவர்(??) பெருசுன்றீங்க.. ரொம்ப தெளிவா இருக்கீங்க போல///

உலக அறிவு கம்மியா இருக்கே அனு உஙகளுக்கு சின்ன வயசுல நர்சரி ஸ்கூல்லுக்கு போகலையோ,,, போங்க முதல்லஅங்கப்போய் உக்காந்துட்டு வாங்க... அப்பவாச்சும் ஏதாவது தேறுதான்னு பார்க்கலாம்.

நாஞ்சில் பிரதாப் said...

நாட்டுல நிறையபேரு படிச்சவங்கமாதிரி சுத்தறாங்க ஆனா உலக அறிவே இல்ல... அனு நான் உங்களைச்சொல்லலைப்பா...

dheva said...

நாஞ்சில்...@ //நாட்டுல நிறையபேரு படிச்சவங்கமாதிரி சுத்தறாங்க ஆனா உலக அறிவே இல்ல... அனு நான் உங்களைச்சொல்லலைப்பா//


யோவ் மாப்ள.... நீ உலக நாயகன பத்திதானே சொல்றா....ரிப்பீட்டு....!

அனு said...

//உலக அறிவு கம்மியா இருக்கே அனு உஙகளுக்கு சின்ன வயசுல நர்சரி ஸ்கூல்லுக்கு போகலையோ//

ஓ... நர்சரி வரைக்கும் படிச்சதுக்கு தான் இந்த அலம்பலா??

தேவா, பாவம் சின்ன பையன்.. விட்டுடுங்க.. அதான் யாரோ சொல் பேச்சு கேட்டு இப்படி பேசிட்டு இருக்காப்ல..

உலக அறிவு கிடைக்குறதுக்கு நர்சரி போகனுமாம்.. ஹையோ.. ஹையோ..

அனு said...

// நீ உலக நாயகன பத்திதானே சொல்றா....ரிப்பீட்டு....!//

கன்னா பின்னா ரிப்பீட்ட்டு.......

நாஞ்சில் பிரதாப் said...

சரி மாம்ஸ் மிச்ச கும்மியை நாளைக்கு வச்சுக்கறேன்.... பாவம் அனு அக்ககாகிட்ட க்ளுக்கோஸ் குடிச்சுட்டு வரச்சொல்லுங்க... புஸ்ட், போர்ன்விட்டா இப்படி எல்லாத்தையும் குடிச்சு தெம்பா வரச்சொல்லுங்க...பாவம்...

அனு said...

//சரி மாம்ஸ் மிச்ச கும்மியை நாளைக்கு வச்சுக்கறேன்...//

அதுவும் சரிதான்.. எங்க ஊருல பனிரெண்டரை ஆச்சு.. முடிஞ்சா நாளைக்கு பாக்கலாம்.. Good Night..

dheva said...

அனு...@ தலைவர் பத்தி பேசுனா துக்கமாவது மண்ணாவது...மாப்ள நாளைக்கு வரட்டும் அனு...பாத்துக்கலாம்....வர்ட்டா......Good Night...with Rajini Dreams...!

அனு said...
This comment has been removed by the author.
அனு said...

//தலைவர் பத்தி பேசுனா துக்கமாவது மண்ணாவது.//

அதனால தானே நான் இப்பவும் activeஆ இருக்கேன்.. ஆனா, அவர் தலைவர பத்தி பேசும் போது அவருக்கு தானா தூக்கம் வருது போல.. ஸோ, ரெஸ்ட் குடுத்திருவோம்.. :)

//பாவம் அனு அக்ககாகிட்ட க்ளுக்கோஸ் குடிச்சுட்டு வரச்சொல்லுங்க... புஸ்ட், போர்ன்விட்டா இப்படி எல்லாத்தையும் குடிச்சு தெம்பா வரச்சொல்லுங்க...பாவம்..//

பக்கத்து இலைக்கு பாயாசம்..

இராமசாமி கண்ணண் said...

//அனு said...

@நாஞ்சில்

எங்க தலைவர் என்ன மத்தவங்க மாதிரி மாறுவேடமா போட்டு நடிக்க போறாரு??

அவர் இயற்கைலயே ஸ்மார்ட்டுங்க.. விக் வாங்கி உங்க தலைவருக்கு குடுங்க.//

ஹே. ஹே.. ஸ்மார்டுன்ற வார்த்தைய இங்லிஸ், தமிழ் எல்லா லாங்குவேஜ்லேந்தும் தூக்குங்கடா. அது செத்து போச்சுன்னு வெச்சுகலாம்.

soundar said...

அட இந்த உலக நாயகன் யாருப்பா அதை சொல்லுங்கோ முதல்....

கிரி said...

சூப்பர்ங்க! செமையா எழுதி இருக்கீங்க தலைவர பற்றி :-)

அடுத்த பகுதிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..