Pages

Saturday, May 8, 2010

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் III


ரொம்ப நாளா விசிலோடு காத்திருக்கும் புலவன் புலிகேசிக்கும்.....என் நண்பன் சிறு குடி ராமுவிற்கும் நன்றி கார்டு போட்டபடி....சீனுக்குள் போவோமா.....


இது வரை
பாகம் I - http://maruthupaandi.blogspot.com/2010/05/blog-post_02.html
பாகம் II -http://maruthupaandi.blogspot.com/2010/05/ii.html

இனி.....

அப்பா உள்ளே வந்து விட்டார்.... நான் நிமிர்ந்து அவர் முகத்தை பாரத்து....தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என் ரஜினியை நினைத்துக் கொண்டு....வாயைத் திறந்து ரஜினிய உங்களுக்கு ஏன் பிடிக்காது என்று .................கேட்க நினைத்து வாயைத் திறந்தால்.....சத்தம் தொண்டையை விட்டு வெளியே வருவதற்குள் மீண்டும் உள்ளேயே சென்று விட்டது....ரேவதி தேவர் மகனில் சொல்வது போல வெறூம் காத்து தான் வருது....!

உலக அப்பாக்களுக்கு ஒரு விசயம் நான் சொல்ல விரும்புகிறேன், தயவு செய்து மீசையை பெரிதாக வைக்காதீர்கள்...! அப்பா கிட்ட வந்து...என்னடா....என்ன ஒழுங்கா படிக்கிறியான்னு அதட்ட...படிக்கிறேன்பா என்று நான் சொன்னது கூட கீச்சுக் குரலில் தான் வந்தது....ச்சே.....எங்கே போச்சு என் வீரம் எல்லாம் என்று நான் குனிந்த படி யோசிக்கும் போது.....

கிச்சனிலிருந்து அம்மா....ஏங்க...தம்பி ( நான் தான்) உங்கள தேடிட்டு இருந்தாங்க....என்று ஞாபமாய் சொல்ல...(ரொம்ப தேவை) விட்டு விட்டுப் போன அப்பா திரும்ப வந்து என்னடா...என்னை தேடுனியாமே....ன்னு கேட்க...சும்மா கேட்டேங்கப்பா..என்று சொல்லி சமாளித்து விட்டேன். இரவு போர்வையை போத்திக் கொண்டு தீவிர யோசனையில் இருந்தேன்...மனசு முழுதும் ரஜினி... எனக்கு ரஜினி பிடிக்கும் என்ற எண்ணமே.... பக்கத்து வீட்டு பாபுவிடமும் அப்பாவிடமும் நான் தோற்று விட்டேன் என்று எண்ணத் தூண்டியது....பதிலடி கொடுக்கணும்....! நல்லவனுக்கு நல்லவன் படம் ஞாபகம் வந்தது....ரஜினி அடிவாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டு...திரும்ப போய் பதிலடி கொடுக்கிற சீன் எல்லாம் என் ஞாபகத்துக்கு வருது....அப்போ ஒரு முடிவு எடுத்தேன்....ரஜினிக்கு லெட்டர் எழுதணும்னு....எனக்கு மட்டும் ரஜினிகிட்டே இருந்து பதில் வ்ந்துச்சுன்னா.....அது போதும்.....இப்படி யோசனை பண்ணிட்டே...எப்போ தூங்கினேன்னு எனக்கு தெரியல....

என்னைச் சுற்றி இருந்த பெரியவர்கள் எல்லாம் என்னைச் சீண்டுவதற்காகவே ரஜினியை பற்றி தாறுமாறாக பேச எனக்கு ஏன் அப்போது கோபம் வந்தது என்று இப்போது எண்ணிப் பார்க்கிறேன், அப்போது ரசனை என்பது அறிவினைக் கொண்டு ஆராய்ந்து வரவில்லை....அது சினிமாவை சினிமாவாகத்தான் பார்த்தது....ரஜினியை நடிகனாகத்தான் பார்த்தது. அது வேறு எது மாதிரியும் விவரித்துப் பார்க்கவில்லை. சினிமா பார்க்க தியேட்டருக்கு சென்றால் சந்தோசமாய்.....படம் நகர்கிறதா நமது பொழுது கழிகிறதா....என்றூ மட்டுமே நினைத்தது....! சினிமா தியேட்டரில் போய்....தமிழக முதல்வரை அது தேடவில்லை....! வாழ்க்கை வேறு பொழுது போக்கு வேறு என்று எண்ணியதுதும் கூட ஒரு காரணம், மேலும் நடிகனுக்கு ரசினகாய் இருக்க ஆசையாய் இருந்தது...தொண்டனாய் அல்ல...

சினிமா சினிமாதான்....அதை வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி பார்க்கும் போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது...இன்று எல்லா நடிகனும் கெட்டு குட்டிச்சுவராய் போனதற்கு காரணம் கேவலமான ரசிகர்கள்தானே? நடிகனைத் தலைவனாக்கும் போதுதான் அபத்தங்கள் ஆரம்பிக்கின்றன...! நல்ல திரைப்படங்கள் வருவது நடிகன் கையிலா இருக்கிறது ... நண்பர்களே...? சிந்தித்துப் பாருங்கள்....அது... நல்ல ரசிகனின் கையில் தான் இருக்கிறது...! சினிமாவின் மூலமாய் தலைவர்களாகத் துடிப்பவார்களை இனம் கண்டு கொண்டு அவர்களை எல்லாம் வீட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டுமா? அரசியல் வேறு சினிமா வேறு.....இரண்டும் இரு வேறு துறைகள் என்று ஏன் தமிழ் நாட்டு சினிமா ரசிகன் இதுவரை உணரவே இல்லை?

சரி.. நம்ம மேட்டருக்கு வருவோம்.....ரஜினிக்கு லெட்டர் எழுத உதவி செய்தது....3 வீடு தள்ளி இருந்த பாப்பா அக்கா தான் அவுங்க சொன்னாங்க ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் ரஜினிக்கு லெட்டர் எழுதுவாங்க...உன்னோட லெட்டர படிச்சி திரும்ப லெட்டர் போடணும்னா... நீ வித்தியசமா ஏதாவது செய்யணும்னு....அதற்கு சொன்ன மலிவான ஐடியா...ரத்ததுல லெட்டர் எழுதுறது.....7 வயசுல அதில இருந்த முட்டாள்தனம் எனக்குத் தெரியல....

வீட்டின் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டேன்....என் எதிரே...டிம்மி சீட் லெட்டர் எழுத....மறு கையில் அப்பா ஷேவ் பண்ண வைத்திருந்த....பிளேடு.....


(தொடர்ந்து வருவான் ரஜினி ரசிகன்....)


தேவா. S

11 comments:

Chitra said...

சினிமா தியேட்டரில் போய்....தமிழக முதல்வரை அது தேடவில்லை....! வாழ்க்கை வேறு பொழுது போக்கு வேறு என்று எண்ணியதுதும் கூட ஒரு காரணம், மேலும் நடிகனுக்கு ரசினகாய் இருக்க ஆசையாய் இருந்தது...தொண்டனாய் அல்ல...


...... உய்..........உய்....... சரியா pointa பிடிச்சிட்டீங்க.....


ரத்தத்தில் கடிதமா??? ஆஆஆஆ........

Ananthi said...

அச்சச்சோ.. என்ன தேவா இது.. திரும்பவும்.. முக்கியமான இடத்துல கட்.. சீக்கிரம் சொல்லுங்க..
//வெறும் காத்து தான் வந்தது... சூப்பர் :)

பி.கு.: யாருப்பா அங்க.. ரஜினிக்கு ஒரு போன்-ஐ போடுங்க..
அந்த புள்ள கையில ப்ளேடு வேற வச்சிருக்கு.. :D :D

LK said...

//..டிம்மி சீட் லெட்டர் எழுத....மறு கையில் அப்பா ஷேவ் பண்ண வைத்திருந்த....பிளேடு//

sirupulla thanamalla irukku

அஹமது இர்ஷாத் said...

(தொடர்ந்து வருவான் ரஜினி ரசிகன்....///

Appadina sari

Anonymous said...

wow....... i am waiting for ur next relese.

Pandian

மதுரை சரவணன் said...

blood stone. good sharing.

அன்புடன்-மணிகண்டன் said...

ஏழு வயசுலேயே நீங்க ரஜினி அவர்களின் ரசிகரா?? கலக்கல் போங்க.. :) அடுத்த பாகத்துக்கு மீ தி வெயிட்டிங்.

dheva said...

சித்ரா @ நீங்க ரஜினி ரசிகைன்னு உறுதி பண்ணீட்டீங்க.... விசில் சத்தம் துபாய் வரைக்கும் கேக்குது!


ஆனந்தி @ ரஜினி போன எடுத்தாரா ஆனந்தி.... நான் வெயிட் பண்ணலாமா?

@ ஆமாங்க... ரொம்ப சின்னபுள்ள தனமாத்தான் இருக்கு இப்போ நினைச்சு பாத்தா....

அஹமது இர்ஸாத்@ உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

@சரவணன் நன்றி


மணிகண்டன்.... @ மிக்க நன்றி உங்களின் ஆர்வத்திற்கும் பின்னூட்டத்திற்கும்!

V.S.SUNIL KUMAR PILLAI said...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா....

அது நீதான் தம்பி

Ananthi said...

Unga viruthukku vazhthukkal.. menmelum kalakkunga Dhevaa :)

Ananthi said...

Dhevaa.. Rajini phone-a eduththu ippadi oru rasigaraanu rombaaaaaaaa peruma pattar.. :)