Pages

Sunday, May 2, 2010

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா....

இது ஒண்ணும் சொந்தக் கதை சோகக் கதை இல்லங்க முடிக்கிறதுக்கு முன்னால கண்டிப்பா பஞ்ச் பண்ற மாதிரி மேட்டர் இருக்குன்னு..உறுதியா சொல்லிக்கிறேன்.... தைரியமா...மேலே படிங்க....!எந்த வயசுல இருந்து நான் ரஜினி ரசிகன்னு எனக்கு தெரியல இப்போ கூட நினைச்சு பாக்கும் போது சரியா ஞாபகம் இல்ல.....யாராவது விருந்தாளி வரும் சமயதுல..அம்மாவும் சரி அப்பாவும் சரி...ரஜினி மாதிரி...சிரிப்பான்னு சொல்லுவாங்க... நானும் இடுப்புல ஒரு கைய வச்சுகிட்டு ஹா...ஹா.......ஹா...ன்னு விபரம் தெரியாம சிரிச்சு வைப்பேன்.... இடுப்புல கைய வச்சுக்கிறதும்...தலை முடிய கோதி விட்டுக்கிறதும்....என்னைய கேக்காமலேயே...எனக்கு வந்துடுச்சு.....


ஏதாவது ரஜினி படம் வந்துச்சுன்னா ரஜினி பேண்ட் போட்டு நடிக்கிறாரா..இல்லை...வேஷ்டி கட்டி நடிக்கிறான்னு...யாரவது பெரியவங்ககிட்ட....இல்ல சினிமா போஸ்டர்னு என்னோட முதல் ஆர்வம் அதில்தான் இருக்கும்....ஏன் தெரியுமா? வேஷ்டி கட்டி நடிச்ச....சண்டை அவ்வளவா இருக்காது அப்படீன்றது...அப்போ என்னோட எண்ணம்....அதனாலதான் அப்போ வந்த முரட்டுக்காளை எல்லாம் எனக்குப் பிடிக்காது....பாயும் புலி, தனிக்காட்டு ராஜா, துடிக்கும் கரங்கள்ன்னு ரஜினியோட சூப்பர் பைட் படமெல்லாம்..என் கனவுல எல்லாம் வரும்.....

நானும் பாபுவும்...(என்னோட....பக்கத்து வீட்டு ஸ்னேகிதன்) ரஜினி மாதிரியே...தலை சீவுறது....சட்டை பட்ட்டன் எல்லாம் தொறந்து விட்டுக்கிறதுன்னு சொல்லிட்டு ஒரு பெரிய போட்டியே நடக்கும் ...எனக்கும் 7 வயசு பாபுவிற்கு....8 வயசு....! ரஜினி படம் சேர்க்குறதுல எங்க ரெண்டு பேருக்கும் பயங்கர போட்டியே நடக்கும்....எந்த புக்குல ரஜினி படம் இருந்தாலும்....கிழித்து.....உடனே என்னோட கலெக்க்ஷன்ல வச்சுடுவேன்....! தெருவுல....போகும் போது எல்லாம் குப்பையை எல்லாம் கிளறிக்கிட்டே போவேன்.....ஏதாவது ரஜினி படத்தை பார்த்தல்....ரெண்டு பேரும் புலிப் பாய்ச்சல் பாய்ஞ்சு.....எடுப்போம்.....! என் மனசுல..... நான் ரஜினி ரசிகன் இல்ல.... நான் தான் ரஜினியே....பாபுவும் அப்படித்தான்.....!

பொங்கல் பண்டிகை வருதுன்னு வச்சுக்கங்க....எங்க தெருவுல....இருக்கிற எல்லா வீட்டுக்கும் போய் கெஞ்சி கெஞ்சி....சொல்லிட்டு வருவேன்....அண்ணா அண்ணா என்க்கு ரஜினி படம் போட்ட அட்டி அனுப்புங்கண்ணா.....அக்கா...அக்கா...ப்ளீஸ்க்கா மறந்திடாதீங்கன்னு சொல்லிட்டு வருவேன்.....போஸ்ட்மேன் வந்து குடுக்கும் போது ரஜினி படமா எனக்கு வரணும்....ஹா...ஹா....ஹா....ஆனா இந்த பாபு பயலுக்கு வர்ற வாழ்த்து அட்டை....எல்லாம் வேறு ஏதாச்சும் வரணும்....அவன் முன்னாடியே.... என்க்கு பாத்தியா...எல்லாமே....ரஜினி படம்னு தம்பட்டம் அடித்து பந்தா பண்ணணும்.....!

ஆனா...போஸ்ட்மேன் வந்தார்....வரிசையா எல்லோருக்கும் வாழ்த்து அட்டைகளை கொடுத்துக் கொண்டே வந்தார்.......அப்போ.....(தொடர்ந்து வருவான் ரஜினி ரசிகன்....)தேவா. S


பின் குறிப்பு: எல்லோரை விடவும் சித்ரா இந்த பதிவினை விரும்பி படிக்க போகிற பதிவர் என்று சகலமானவர்களுக்கும் அறிவித்துக் கொள்கிறேன்.

9 comments:

Chitra said...

///எல்லோரை விடவும் சித்ரா இந்த பதிவினை விரும்பி படிக்க போகிற பதிவர் என்று சகலமானவர்களுக்கும் அறிவித்துக் கொள்கிறேன்.///


.....உண்மையை சொல்லி இருக்கீங்க...... ஹா....ஹா.....ஹா....... எரிமலை பற்றி இருக்கும் என்று வந்தேன்...... அண்ணாமலை பற்றி எழுதி இருக்கீங்க...... கூல்!

Ananthi said...

எஸ் எஸ்.. இருநூறு பெர்சென்ட் நீங்க சொன்னது கரெக்ட்..சித்ரா.. கரெக்டா ஆஜர் ஆயிருவாங்க..

அப்புறம்.. இப்படியா முக்கியமான டைம்ல கரண்ட் கட் பண்றது..???

போஸ்ட் கார்டு வந்ததா இல்லியா..சீக்கிரம்
சொல்லுங்கப்பா..

ரமேஷ் கார்த்திகேயன் said...

//.ஏன் தெரியுமா? வேஷ்டி கட்டி நடிச்ச....சண்டை அவ்வளவா இருக்காது அப்படீன்றது...அப்போ என்னோட எண்ணம்
//
nanum thanum thanka

V.S.SUNIL KUMAR PILLAI said...

தம்பி உண்மையாகவா? எனக்கு இதல்லாம் நினைவில் இல்லையே.

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

நல்ல நினைவலைகள்...!

///நானும் இடுப்புல ஒரு கைய வச்சுகிட்டு ஹா...ஹா.......ஹா...ன்னு விபரம் தெரியாம சிரிச்சு வைப்பேன்.... இடுப்புல கைய வச்சுக்கிறதும்...தலை முடிய கோதி விட்டுக்கிறதும்....என்னைய கேக்காமலேயே...எனக்கு வந்துடுச்சு.....///

ஆஹா ...! இதயெல்லாம் நான் பார்த்தது இல்லையே..!;)

soundarapandian said...
This comment has been removed by a blog administrator.
dheva said...

சித்ரா.... நீங்கதான் அக்மார்க் ரஜினி ரசிகை ஆச்சே....விசில் எல்லம் எடுத்து அதான் கண்ண மூடிகிட்டு...சொல்றேன்!

ஆனந்தி....சஸ்பென்ஸ்ல கொஞ்ச நேரம் இருங்க...ஆனந்தி....ஒரு நெடுந்தொலைக்காட்சி தொடர்ன்னா எப்படி காத்திருக்கீங்க...


தமிழ்.....பாபு உங்களுக்கு தெரியும் தமிழ்... நாம எல்லாம் கிரிக்கெட் விளையாடி இருக்கோம்....!உங்களுக்கு எல்லாம் தெரியாமதான் இந்த வேலையெல்லாம்....ஹா...ஹா...ஹா...

சுனில்.... அண்ணா.....உனக்கு நல்லா தெரியும் ரஜினி ரசிகன்னு..அப்புறம் என்ன...கிண்டல் வேண்டி கிடக்கு!

Anonymous said...

why suspense?

vijay said...

seekiram sollunka anna