Pages

Sunday, December 19, 2010

மகள்...!


காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!!

என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்.....

எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை.....

வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்.....

இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....?

மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே...

இறந்தால் நாம் எங்கு போவோம்.....

இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்?

கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....?

வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையாட அவளுக்குத் துணை ஒரு ப்ளாக்கி (டெரி ப்யர்), ஒரு சோனு...(ஒரு பையன் பொம்மை) ஒரு...டோனி...(ஒரு குட்டி பொம்மை நாய்) மேலும் ஒரு...சின்ரலா.....

இவளின் உலகம் அதுதான்......! ஒரு நாள் இரவு அவளை உறங்க வைத்த பின்பு....ஹாலுக்கு வந்து பார்த்த நான் .. எதேச்சையாக கவனித்தேன்.....இந்த நான்கு பொம்மைகளும்... சோபாவில் படுக்க வைக்கப்பட்டு அதற்கு அவளின் துண்டினால் போர்த்தி விடப்பட்டு இருந்தது....! அதுவும் வரிசையாக.....! அவர்களை உறங்க வைத்து விட்டுத்தான் அவள் உறங்குவாளாம்...ஏன் அவுங்களுக்கு தூக்கம் வராதா..? இது அடுத்த நாள் அவள் விதைத்த கேள்வி....

ஆச்சர்யமாகத்தான் இருந்தது... அவளின் கடந்த பிறந்தநாள் எனக்கு....! ஆமாம்.....குழந்தை குழந்தை என்று பார்த்து கொண்டிருந்த நான் முதன் முதலாய் அவள் வளர்ந்த சிறுமி என்று உணர்ந்தேன்....! வளர்ந்த முடியில் குதிரை வாலும், ஸ்கை ப்ளூ கலர் குட்டிச் சுடிதாரும்....ஹை ஹீல்ஸ் செருப்பும் என்று அவள் பள்ளிக்கு என்னோடு தயாரான கணத்தில் ஒரு கணம்.. எனக்குள் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் ஒரு வித..பட படப்பும்.....ஆமாம் பிள்ளை வளர்ந்து விட்டாள்...உள்ளே ஒரு மூலையில் ஒரு மணியும் அடித்தது.....

பெண் பிள்ளைகள் சடாரென்று வளர்ந்து விடுகிறார்கள். அவளின் உடைக்கு மேட்சாய், கிளிப், நெயில் பாலிஸ், செருப்பு, மற்றும் இன்னும் பிற பொருட்களும் வேண்டும் என்று கேட்ட பொழுதில்....என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன்.....ஒரு வித கேள்விக் குறியோடு....!!!! எப்படி இவள் இதை எல்லாம் கேட்கிறாள்....இது உன்னுடைய ஐடியாவா என்றூ பார்வையால் கேள்வியை தூக்கி போட்டேன்....அவள் இல்லவே இல்லை என்று தலையாட்டினாள்.....

வாழ்க்கை போகிற போக்கில், தொலைக் காட்சியாகவும், பள்ளித் தோழர்களாகவும், சுற்றுச் சூழலாகவும் பயிற்றுவித்து விடுகிறது. இயற்கையிலேயே அவர்களுக்கு இருக்கும் குணாதியங்களும் கூடி அதற்கு ஏற்றார் போல விருப்பப் பொருட்களின் மீது கவனமும் சென்று விடுகிறது.

என்னுடைய புரிதலில் பெண் ஒரு மிகப் பெரிய பிரபஞ்ச சக்தி....! ஒன்றை ஆக்குவதில் அவள் துணையின்றி எதுவுமே நிகழ சாத்தியமில்லை.....! அதுவும் அந்த சக்தி என் வாழ்க்கையில் பெரும் பங்கைத்தான் ஆற்றிக் கொண்டிருக்கிறது, அம்மா, அக்கா, மனைவி, குழந்தை, அலுவலகத்தில் பாஸ் என்று...அந்த சக்தியின் ஓட்டத்தையும் அதன் வீரியத்தையும்...வேகத்தையும் மிக அருகில் இருந்து படிக்கும் ஒரு அனுபவம் வாய்த்திருக்கிறது.......

உலக இயக்கத்தில் சிவமாய்.. இருக்கும் எதுவமற்ற தன்மை....இயங்க ஆரம்பிக்கும் போது சக்கியாய் மாறுகிறது.....இந்த தத்துவத்தை உணர்த்தும் ஒரு சிம்பாளிக் போஸ்டர்தான்.....அர்த்த நாரீஸ்வரார்.....

சிவம் இல்லையே...சக்தி இல்லை......சக்தி இல்லையேல் சிவம் என்ற ஒன்று இருப்பதே அறிய முடியாது....!


சாக்த வழிபாடு என்று திராவிட தொல்மரபில் சில வழக்க முறையில் இருந்திருக்கின்றன. பெண்ணை தெய்வம் போல நினைத்து வழிபட்டு போற்றக்கூடிய முறை. ஆமாம் பெண் என்பவள் உணர்வு பூர்வமானவள் அன்பின் அடையாளம் அவளை அன்பு செய்து அரவணைத்தல் மூலம் அவளின் சக்தி ஆணுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது...

அது எப்படி.. சக்தி பரிமாற்றம் ஆகும்? பெண்ணை வழிபடுதல் போல ஆணையும் வழிபட்டுள்ளால பெண் என்ற கேள்விகள் எல்லாம் வருதா... அது எல்லாம் விளக்கமா சாக்தம் பற்றி எழுதும் ஒரு நாளில் பார்ப்போம்.. ஆமா அது என்னிக்கு....தெரியலையே....ஏன்னா..

ஆண்டவன் சொல்றான்... .............மீதிய நீங்களே பில் அப் பண்ணிக்கோங்க....

அப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா!!!!!!


தேவா. S

136 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

தேவன் மாயம் said...

என்னுடைய புரிதலில் பெண் ஒரு மிகப் பெரிய பிரபஞ்ச சக்தி....! ஒன்றை ஆக்குவதில் அவள் துணையின்றி எதுவுமே நிகழ சாத்தியமில்லை.....! //

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்து!

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

//இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....?//

துங்கவும், ஆபிஸ் போய் ஆணி புடுங்கவும்.. :)

//மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே...//

அதான் பறக்குதே.. இட்லி குண்டான் மேல..

//இறந்தால் நாம் எங்கு போவோம்.....//

கருமாதி சாப்படு சாப்பிட..:)


//இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்?//

எப்படியும் பசிக்கும்னா ஏன் சாபிடனும்.

//கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....?//

ஏன்னா அவரு புச்சாண்டி இல்லை.. :))

சே.குமார் said...

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்து!
ஆமா... உங்கள் தங்கத்துக்கு இன்று பிறந்தநாளா? அப்படியிருப்பின் என் பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள் அண்ணா.

dheva said...

சே. குமார் @ இல்லை பாஸ்.. அவளுக்கு கடந்த மாதமே பிறந்த நாள் முடிந்து விட்டது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆண்டவன் சொல்றான்... ............./////

அருணாச்சலம் முடிக்கிறான்........

அமைதிச்சாரல் said...

பெண் எத்தனை வடிவங்கள் எடுத்தாலும் மகளென்ற வடிவம்தான் எல்லாவற்றையும்விட முன்னுக்கு நிற்கிறது..

சௌந்தர் said...

வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா////

இதில் என்ன சந்தேகம் நமக்கு அறிவு குறைந்து தான் இருந்தது. நாம் 15 வயதில் ஒரு விஷயத்தை பற்றி தெரிந்து இருப்போம் ஆனால் இப்போது உள்ள குழந்தைகள் அதை 5 வயதில் தெரிந்து கொள்வார்கள்.பெண் பிள்ளைகள் சடாரென்று வளர்ந்து விடுகிறார்கள். அவளின் உடைக்கு மேட்சாய், கிளிப், நெயில் பாலிஸ், செருப்பு, மற்றும் இன்னும் பிற பொருட்களும் வேண்டும் என்று கேட்ட பொழுதில்....என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன்.....ஒரு வித கேள்விக் குறியோடு....!!!! எப்படி இவள் இதை எல்லாம் கேட்கிறாள்....இது உன்னுடைய ஐடியாவா என்றூ பார்வையால் கேள்வியை தூக்கி போட்டேன்....அவள் இல்லவே இல்லை என்று தலையாட்டினாள்..../////

இதையெல்லாம் யாரும் சொல்லி தர தேவையில்லை அவர்களாகவே கற்று கொள்வார்கள் தன் அம்மாவை பார்த்தோ பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர்களை பார்த்து கற்று கொள்வார்கள்...

நீங்கள் சொல்லிஇருப்பது அப்படியே எனக்கு கட்சியாக தெரிகிறது.. பெண் குழந்தை திரும்பி பார்ப்பதற்குள் வளர்ந்து விடுவாள்

என்னுடைய புரிதலில் பெண் ஒரு மிகப் பெரிய பிரபஞ்ச சக்தி....! ஒன்றை ஆக்குவதில் அவள் துணையின்றி எதுவுமே நிகழ சாத்தியமில்லை.....!////

உண்மை தான் ஒரு பெண் நினைத்தால் அந்த குடும்பத்தை தூக்கி நிறுத்தவும் முடியும், அதை கிழே போட்டு உடைக்கவும் முடியும், இது அனைத்து விஷயத்திற்கும் பொருந்தும்...

சேலம் தேவா said...

//வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....!//

சிலிர்ப்பாக இருக்கிறது.இப்படியொரு தந்தை கிடைக்க உங்கள் மகள் கொடுத்து வைத்தவள்..!!

கே.ஆர்.பி.செந்தில் said...

ஓவரா ஐஸ் வைக்கிற மாதிரி தெரியுது .. ...

இம்சைஅரசன் பாபு.. said...

//என்னுடைய புரிதலில் பெண் ஒரு மிகப் பெரிய பிரபஞ்ச சக்தி....! ஒன்றை ஆக்குவதில் அவள் துணையின்றி எதுவுமே நிகழ சாத்தியமில்லை.....! அதுவும் அந்த சக்தி என் வாழ்க்கையில் பெரும் பங்கைத்தான் ஆற்றிக் கொண்டிருக்கிறது, அம்மா, அக்கா, மனைவி, குழந்தை, அலுவலகத்தில் பாஸ்//

ரொம்ப சரியாக சொல்லி இருக்கீறீர்கள் அண்ணா .....ஆக்கல் எல்லாம் ரைட் தான்.............. அளித்தல் என்று சொல்லும் பொது என்னுடைய பர்ஸ் .........கரெக்ட் தானே

சுபத்ரா said...

//அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்.....//

Wonderful...!

//இந்த நான்கு பொம்மைகளும்... சோபாவில் படுக்க வைக்கப்பட்டு அதற்கு அவளின் துண்டினால் போர்த்தி விடப்பட்டு இருந்தது....! அதுவும் வரிசையாக.....! அவர்களை உறங்க வைத்து விட்டுத்தான் அவள் உறங்குவாளாம்...ஏன் அவுங்களுக்கு தூக்கம் வராதா..?//

So Cute :)))

சுபத்ரா said...

//என்னுடைய புரிதலில் பெண் ஒரு மிகப் பெரிய பிரபஞ்ச சக்தி....! ஒன்றை ஆக்குவதில் அவள் துணையின்றி எதுவுமே நிகழ சாத்தியமில்லை.....!//

அப்படியென்றால் ஆண் யார்? அவனது பங்கு என்ன? பெண்ணிலிருந்து ஆண் எவ்வாறு வேறு படுகிறான் என்று விளக்க முடியுமா, தேவா?

சுபத்ரா said...

//பெண்ணை வழிபடுதல் போல ஆணையும் வழிபட்டுள்ளால பெண் என்ற கேள்விகள் எல்லாம் வருதா//

கணவனே கண்கண்ட தெய்வம் என்று ஆண்களை வணங்கும் பெண்கள் அதிகம்..... பெண்களை வணங்கும் ஆண்களை விட, if i am not wrong.

சுபத்ரா said...

////TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

//இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....?//

துங்கவும், ஆபிஸ் போய் ஆணி புடுங்கவும்.. :)////

அப்போ சாப்பாடு?

//எப்படியும் பசிக்கும்னா ஏன் சாபிடனும்//

சாப்பாடு போச்சே...!

dheva said...

சுபத்ரா @ ஆழமான கேள்விதான்...

ஒரு ஆண் என்பவன் இயங்கும் சக்தியின் சீற்றத்தினை கட்டுக்குள்ளும் கொண்டு வரும் சிவமாயிருக்கிறான். சீற்றமான எல்லாம் சிற்றத்தின் போக்கில் போய்க்கொண்டிருந்தால் மிச்சமென்று ஒன்றுமில்லாமல் எல்லாம் மூலமான சிவத்தையே அடையும்.

ஆண் என்பவன் கட்டுப்படுத்தும் அதாவது சக்தியின் சீற்றத்தையும் ஆற்றலையும் கட்டுப்படுத்தவும் அதை ரெகுலேட் செய்யவும் ஆண் என்ற ஒன்றுமற்ற சக்தியை தன்னுள் கொண்ட சிவம் அவசியமாகிறது.

ஆண் பெண் என்ற ஏற்றத்தாழ்வுகள் மட்டுப்பட்ட அறிவுகளுக்கு பிரபஞ்சத்தில் அவை சக்தியாய் மற்றும் சிவானாய் மட்டுமே பார்க்கப்படுகின்றன.

எளிமையான உதாரணம் ஒரு காட்டாறு போன்றவள் பெண் அவளை கட்டுகுள் இறுத்தி நெறிப்படுத்தி வழிமாற்றி பயன்பாடுகளைப் பெறுபவன் ஆண்....


அப்போ வர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா....!

dheva said...

//கணவனே கண்கண்ட தெய்வம் என்று ஆண்களை வணங்கும் பெண்கள் அதிகம்..... பெண்களை வணங்கும் ஆண்களை விட, if i am not wrong.//

உண்மை. பெண் இயல்பிலேயே அன்புவயப்பட்டடள் அங்கே சீராட்டுதலை செய் என்ற வலியுறுத்தலே அவசியமில்லாதது.

TERROR-PANDIYAN(VAS) said...

@கே.ஆர்.பி

//ஓவரா ஐஸ் வைக்கிற மாதிரி தெரியுது .. ..//

பின்னாடி சோறு போடனும் இல்ல தல... :))

சுபத்ரா said...

@ dheva

ஆணுக்கு நீங்கள் அளித்துள்ள கருத்தை முதன் முறையாகக் கேள்விப் படுகிறேன் தேவா. விளக்கத்திற்கு நன்றி..!!

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//ரொம்ப சரியாக சொல்லி இருக்கீறீர்கள் அண்ணா .....ஆக்கல் எல்லாம் ரைட் தான்.............. அளித்தல் என்று சொல்லும் பொது என்னுடைய பர்ஸ் .........கரெக்ட் தானே//

வந்துடாருயா ஒரு பெண்ன பெத்தவருக்கு இன்னும் ஒரு பெண்ன பெத்தவரு சப்போர்ட்... அப்பொ ஆம்பள புள்ள எல்லாம் புளி மூட்டையா? :))) இது பெண்ணாதிக்க பதிவு... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@சுபத்ரா

// Wonderful...//


என்னா Wonderful...? ஸ்கூல் எக்ஸாம்ல பெயிலகிட்டு வாத்தியர்கிட்ட போய் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... அப்படினு சொல்லி பாரு. ஒருத்தர் பதில் தெரியாம முழிச்சதை பெருமையா சொல்றாரு. அதுக்கு Wonderful... :))

சுபத்ரா said...

//எளிமையான உதாரணம் ஒரு காட்டாறு போன்றவள் பெண் அவளை கட்டுகுள் இறுத்தி நெறிப்படுத்தி வழிமாற்றி பயன்பாடுகளைப் பெறுபவன் ஆண்....//

Can u justify this further?

சுபத்ரா said...

//அப்பொ ஆம்பள புள்ள எல்லாம் புளி மூட்டையா? :))) இது பெண்ணாதிக்க பதிவு... :))//

இன்னும் காணோமேனு நினைச்சேன் ராசா :))

TERROR-PANDIYAN(VAS) said...

சுபத்ரா

//கணவனே கண்கண்ட தெய்வம் என்று ஆண்களை வணங்கும் பெண்கள் அதிகம்..... பெண்களை வணங்கும் ஆண்களை விட, if i am not wrong.//

என்னா if i am not wrong? நீங்க கணவனே கண்கண்ட தெய்வம் சொல்லிட்டு தலைல கல்ல தூக்கி போடறிங்க. நாங்க அம்மனை கூட 108 பேர் வச்சி வழிபடறோம். ஆறு, குளம், நாடு, உலகம் எல்லாத்தையும் பெண்னா தான் பாக்கறோம்... :))

சுபத்ரா said...

//ஸ்கூல் எக்ஸாம்ல பெயிலகிட்டு வாத்தியர்கிட்ட போய் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... அப்படினு சொல்லி பாரு//

ஹஹஅஹஹா.. இது மொதல்லையே தெரியாம போச்சே பா :(((

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஊர்ஸ்... நீ எழுதியிருக்க பதிவின் சாராம்சம், அறிவியல் கோட்பாடுகளுடனும் ஒத்துப் போகுது,
http://linguamadarasi.blogspot.com/2010/12/blog-post_17.html
(இது டாக்டர், ஷாலினியோட பதிவு).

தாய்வழி சமுதாயமே மனிதகுலத்தின் ஆரம்பகால வாழ்வியலாக இருந்து வந்தது. (லெமூரியாவில் வாழ்ந்த உலகின் மூத்த குடிகளாகக் கருதப்படும் தமிழர்களின் வாழ்வும் தாய்வழி சமூகமுறையாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.) பிற்காலத்தில் ஆணின் உடல்வலிமையைக் கொண்டு ஏற்பட்ட மாற்றங்களே சமூக அமைப்பில் ஆணின் ஆத்திக்கத்தை ஏற்படுத்தியது.

TERROR-PANDIYAN(VAS) said...

@சுபத்ரா

//Can u justify this further?//

யோ மாப்பு!! நீ நாலு பத்தி அடிக்குபோதே தெரியும் ஒன்னும் புரியாது சொல்லி. இப்பொ நான் சொல்றேன் பாரு..

நீங்க பெட்ரோல் நாங்க வண்டி.. போதுமா??

(காலைல உனக்கு வேலை இல்லை சொல்லிட்டு எதாவது கேள்வி கேட்டு நீ வேற ப்ளாக் படிக்க போடற இது புரியாம இந்த அப்பாவி புள்ள பதில் போடுது...)

சுபத்ரா said...

@ TERROR

//ஆறு, குளம், நாடு, உலகம் எல்லாத்தையும் பெண்னா தான் பாக்கறோம்... :))//

பெண்ணைப் பெண்ணாகப் பார்த்தாலே போதுமே அண்ணா !!!

RAZIN ABDUL RAHMAN said...

அருமை சகோ...பெண்களின் பரிணாமத்தில் குறிப்பாக மகள் என்ற படிநிலையானது ஒரு ஆணுக்கு மிகச்சிறந்த உணர்வுப்பூர்வமான நெருக்கத்தை தருகிறது..அதை அனுபவிக்கும் தங்களின் உணர்வு எழுத்துக்களில் நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்...

மனிதமும்,அதன் சார்ந்த உறவுகளும்,அதில் உள்ள தேவைகளுக்கு அப்பார்பட்ட பிணைப்பும்...என சொல்லிக் கொண்டே போகலாம்...இறைவனின் design இருக்கே..amazing..

இறைவன்...அவனே படைப்பாளி...
--------------------------
ஒரு உதவி

சகோ நானும் இதே டெம்பிளேட்டுதான் யூஸ் பண்றேன்..ஆனால் என்னால் எனது டெம்பிளேட்டில் ஃபாளோயர்ஸ் கேர்கட் ஆட் பண்ண முடியலை..நீங்க எப்டி ஆட் பண்ணுனீங்க...கொஞ்சம் உதவ முடியுமா????

அன்புடன்
ரஜின்

dheva said...

சுபத்ரா....@ ஐ திங்க் ஊர்ஸ் (பன்னிகுட்டி ராமசாமி) போட்டுஇருக்குற கமெண்டல உனக்கு விடை இருக்கும்னு நினைக்கிறென்...

Still you need let me know..............i can expand it......!

TERROR-PANDIYAN(VAS) said...

@சுபத்ரா

//பெண்ணைப் பெண்ணாகப் பார்த்தாலே போதுமே அண்ணா !!!//

நாங்க ஆண தெய்வமா வழிபடறோம் வாதத்த ஆரம்பிச்சது யாரு?? :))

dheva said...

அப்துல் @ கண்டிப்ப சொல்றேன் !

dheva said...

ஆணா தெய்வமா வழிபடுறாங்க... ஏன் தெரியுமா....மாப்ஸ்

கல்லு மாதிரி இருக்கம்ல அதான்.அவ்வ்வ்வ்வ்வ்வ்!

சுபத்ரா said...

@ TERROR

//நீங்க பெட்ரோல் நாங்க வண்டி.. போதுமா??//

அப்போ நாங்க இல்லனா நீங்க வேஸ்டா?

//(காலைல உனக்கு வேலை இல்லை சொல்லிட்டு எதாவது கேள்வி கேட்டு நீ வேற ப்ளாக் படிக்க போடற இது புரியாம இந்த அப்பாவி புள்ள பதில் போடுது...)//

முதல்ல உங்க ப்ளாக் ல ஒரு பதிவை போடுங்க அண்ணா... எந்த விஷயத்தையும் எங்களைக் கத்துக்க விட மாட்டீங்களே. விட்டா நாங்க உங்களையும் மிஞ்சிருவோம்னு தான ;)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஊர்ஸ்... நீ எழுதியிருக்க பதிவின் சாராம்சம், அறிவியல் கோட்பாடுகளுடனும் ஒத்துப் போகுது, //

எலேய்!! நீ ஏன் இப்பொ ரியத் விட்டு லெமூரியா கண்டத்துக்கு போன? :))

சுபத்ரா said...

////TERROR-PANDIYAN(VAS) said...

@சுபத்ரா

//பெண்ணைப் பெண்ணாகப் பார்த்தாலே போதுமே அண்ணா !!!//

நாங்க ஆண தெய்வமா வழிபடறோம் வாதத்த ஆரம்பிச்சது யாரு?? :))////

அது வாதம் இல்லைண்ணா. Fact.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//ஊர்ஸ்... நீ எழுதியிருக்க பதிவின் சாராம்சம், அறிவியல் கோட்பாடுகளுடனும் ஒத்துப் போகுது, //

எலேய்!! நீ ஏன் இப்பொ ரியத் விட்டு லெமூரியா கண்டத்துக்கு போன? :))////

அப்பப்ப பறந்துக்கறதுதான்....

dheva said...

பாச மலர்கள் நடத்துற வாதத்துல பிடிவாதம் அதிகமா இருக்கே...

மாப்ஸ்..@ உன் தங்கச்சிதான் ஆசையா கேக்குதுல்லா ஒரு போஸ்ட்டத்தான் போடேன்... (ஆள போட்டுத்தள்றவன்கிட்ட நல்லா கேக்குறாய்ங்கயா டீட்டெய்லு)

சுபத்ரா said...

@ பன்னிக்குட்டி ராமசாமி

லிங்க்-கும் தகவலுக்கும் மிக்க நன்றி...!!

RAZIN ABDUL RAHMAN said...

இந்த பதிவை படிக்கும் போது,இளையராஜா குரலில் ஒலிக்கும்,

கண்ணே நவமணியே...
உன்னை காணாமல் கண்ணுறங்குமோ...

ஆயிரம் பிச்சி பூவு அரும்பரும்பா பூத்தாலும்
வாசமுள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எப்போது

அப்டீங்ர பாடல் தான் மனசுல ஓடுச்சு...(என் பொம்முகுட்டி அம்மாவுக்கு - படம்ன்னு நெனைக்கிறேன்.)

Chitra said...

I remembered the book, "Mister God, This is Anna!" Cute!

TERROR-PANDIYAN(VAS) said...

@சுபத்ரா

//அப்போ நாங்க இல்லனா நீங்க வேஸ்டா? //

ஹா..ஹா..விரிச்ச வலைல சரியா சிக்கினமா...

பெண்ண எப்பவும் உயர்த்தி பேசரவங்க ஆண். ஆண எப்பவு தாழ்த்தி பேசரவங்க பெண்னா அப்படின்ற கேள்விய உங்கள் பதில் எழுப்புது.. :))

Moreover, வண்டி Battery, Solarல கூட ஓடுது கேள்வி..

சுபத்ரா said...

//பாச மலர்கள் நடத்துற வாதத்துல பிடிவாதம் அதிகமா இருக்கே//

அப்படியா... எப்பவுமே இப்படிதான் :)

TERROR-PANDIYAN(VAS) said...

@சுபத்ரா

//அது வாதம் இல்லைண்ணா. Fact. //

நாங்க நொண்னது தான் Fact. வரலட்ஷிமி நோம்பு அண்ணைக்கு மட்டும் கால்ல விழுந்துட்டு காலம்பூரா நிங்க பூரி கட்டையால அடிக்கிற கதை Facta??? :))

dheva said...

சித்ரா @ என்ன சொல்றீங்க புரியலயே.. :-)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//அப்பப்ப பறந்துக்கறதுதான்...//

அதான நீ சரக்கு கிடைக்கலனா ஆதாம், எவால் வீட்டுக்கு கூட போக அஞ்சாதவனாச்சே... :)

சுபத்ரா said...

////Moreover, வண்டி Battery, Solarல கூட ஓடுது கேள்வி..////

எவ்வளோ நாள் ஓடுதுன்னு பார்ப்போம் :)

//பெண்ண எப்பவும் உயர்த்தி பேசரவங்க ஆண். ஆண எப்பவு தாழ்த்தி பேசரவங்க பெண்னா அப்படின்ற கேள்விய உங்கள் பதில் எழுப்புது.. :))//

தாழ்த்திப் பேசிட்டு நாங்க எங்க போக :) அடிச்சாலும் புடிச்சாலும் போக்கிடம் வேற கிடையாது.. எங்களுக்கும் உங்களுக்கும் :))

dheva said...

பன்னிகுட்டி..@ ஊர்ஸ்... அம்புட்டா சிரமப்படுற சரக்கடிக்க...

இங்க வா என் மாப்ஸ் எல்லாம் பன்னி(ண்ணி) தருவான்...!

dheva said...

//தாழ்த்திப் பேசிட்டு நாங்க எங்க போக :) அடிச்சாலும் புடிச்சாலும் போக்கிடம் வேற கிடையாது.. எங்களுக்கும் உங்களுக்கும் :))//


இதுதான் டேஞ்சர் பாயிண்ட் .அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

dheva said...

எங்களுக்கு போக்கிடம் இல்லேன்னு யாரு சொன்னா?

நிறைய இருக்க்கே!

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

//தாழ்த்திப் பேசிட்டு நாங்க எங்க போக :) அடிச்சாலும் புடிச்சாலும் போக்கிடம் வேற கிடையாது.. எங்களுக்கும் உங்களுக்கும் :)) //

மாப்ஸ்!! ஒரு ஆளு ஜகா வாங்கிடுச்சி.. அடுத்து யாரு கூப்பிடு... இன்னும் ஒரு இரண்டு, முனு பேர எதிர்பாக்கரேன்.. :))

சுபத்ரா said...

//காலம்பூரா நிங்க பூரி கட்டையால அடிக்கிற கதை Facta??? :))//

So Cute...:)) Lovely...:))) Wonderful...:))))

ரெடி ஆகியாச்சு போல?

All the Best அண்ணா :-)

சர்பத் said...

அருமையான, அழகான பதிவு :)

dheva said...

So Cute...:)) Lovely...:))) Wonderful...:))))

ரெடி ஆகியாச்சு போல?

அடிக்கிறது உண்மைன்னு ஊர்ஜிதம் பண்ணிடுச்சு உன் தொங்கச்சி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dheva said...
பன்னிகுட்டி..@ ஊர்ஸ்... அம்புட்டா சிரமப்படுற சரக்கடிக்க...

இங்க வா என் மாப்ஸ் எல்லாம் பன்னி(ண்ணி) தருவான்...!/////

அவ்வளவு நல்லா காய்ச்சுவானா பய? சரி சரி, நாலு பேட்டரி செல்லு எக்ஸ்ட்ரா போட்டு காய்ச்சி வெக்க சொல்லு, வந்து சலம்பிட்டு போறேன்!

dheva said...

டெரர்..@ ஆமாம் மாப்ஸ்


வெயிட் பண்ணுவோம்...!

dheva said...

பன்னி @ ஊர்ஸ் வா வந்து சலம்பு..

மாப்ஸ் எல்லாம் செஞ்சு கொடுத்துட்டு... வேடிக்கை பார்ப்பான் அம்புட்டுதான் நமக்கு ஒரு பிரச்சினையும் இல்ல...!

எஸ்.கே said...

வாழ்க்கையில் நான் அதிகம் பழகிய ஒரே பெண் என் அம்மாதான்! என் இந்த 27 வருட வாழ்க்கையை வாழக் காரணமானவர்கள் என் பெற்றோர்கள்தான்! அடிக்கடி நான் யோசிப்பேன், இந்த வயதிலும் ஒரு மகனுக்கு ஒரு குழந்தையைப் போல எல்லா பணிவிடைகளையும் செய்கிறார்களே, அவர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும். என் அம்மா அடிக்கடி என் நிலை குறித்து எண்ணி அழுவார்கள். நான் அப்படி செய்யாதீர்கள் என சொன்னாலும் அடிக்கடி நடக்கும்! வாழ்க்கையில் எனக்கு எத்தனையோ ஏமாற்றங்கள் தோல்விகள் கிடைத்த போது என்றும் இனிமையான பெற்றோர்கள் எனக்கு கிடைத்திருக்கிறார்கள். உலகிலேயே சிறந்தவர்கள் என் பெற்றோர்கள்தான் என நான் பெருமையாகவே சொல்வேன்!

எஸ்.கே said...

என்னைப் பொறுத்தவரை ஆண் பெண் இருவருமே ஒருவரையொருவர் சார்ந்து வாழ்பவர்கள்தான். வாழ்க்கையே சார்பு விதிகளால் ஆனதுதான்! அவரவர் தனிப்பட்ட பண்புநலன்களே அவர் மீதான மதிப்புகளையும் கருத்துக்களையும் ஏற்படுத்துகின்றன!

சுபத்ரா said...

@ dheva

//எங்களுக்கு போக்கிடம் இல்லேன்னு யாரு சொன்னா?

நிறைய இருக்க்கே!//

லைட்டா சந்தேகப் பட்டேன்.. இப்ப உறுதி ஆகிடுச்சு தேவா....:))

@ TERROR

//மாப்ஸ்!! ஒரு ஆளு ஜகா வாங்கிடுச்சி.. அடுத்து யாரு கூப்பிடு... இன்னும் ஒரு இரண்டு, முனு பேர எதிர்பாக்கரேன்.. :))//

அண்ணன் வேலைய பார்க்கடுமேனு நெனைச்சா விட மாடீங்களே..?

வைகை said...

வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! /////////////


உண்மைதான் தேவா!!

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//அவ்வளவு நல்லா காய்ச்சுவானா பய? சரி சரி, நாலு பேட்டரி செல்லு எக்ஸ்ட்ரா போட்டு காய்ச்சி வெக்க சொல்லு, வந்து சலம்பிட்டு போறேன்!//

அடபாவி!! இதுக்கு ஒட்டகம் மேய்க்கரது பரவயில்லை... சரி சரி வா காய்ச்சி வைக்கிறேன். ஆனா எப்பவும் போல கடன் சொல்லிடாத... :))

சுபத்ரா said...

@ SK

//உலகிலேயே சிறந்தவர்கள் என் பெற்றோர்கள்தான் என நான் பெருமையாகவே சொல்வேன்!//

நானும் அவங்களுக்குத் தலைவணங்குகிறேன் அண்ணா !!

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

//உண்மைதான் தேவா!!//

வா மச்சி!! அப்பொ உனக்கும் ஒரு பெண்ணு இருக்கு. இன்னைக்கு எல்லா கே.டி பசங்களும் ஒரே இடத்துல மாட்டி இருக்கிங்க... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//என்னைப் பொறுத்தவரை ஆண் பெண் இருவருமே ஒருவரையொருவர் சார்ந்து வாழ்பவர்கள்தான். வாழ்க்கையே சார்பு விதிகளால் ஆனதுதான்! அவரவர் தனிப்பட்ட பண்புநலன்களே அவர் மீதான மதிப்புகளையும் கருத்துக்களையும் ஏற்படுத்துகின்றன! //

எலேய்!! நீ ஒரு கும்மி டீமா?? வானம் நீலம் சொன்னா இல்லை பச்சை சொல்லனும். புரியுதா? எங்க காட்டு சொன்னா அண்டார்டிகா போய் பாரு சொல்லனும்.... ராஸ்கள்.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@சுபத்ரா

//அண்ணன் வேலைய பார்க்கடுமேனு நெனைச்சா விட மாடீங்களே..? //

உனக்கு மீசை இல்ல அதனால மண்ணு ஒட்டலை... :))

விட்டா புளிச்சி போன மேட்டர் எல்லாம் கருத்து விவாதம் நடத்துவிங்களே... :)

Anonymous said...

@RAZIN ABDUL RAHMAN

//ஒரு உதவி

சகோ நானும் இதே டெம்பிளேட்டுதான் யூஸ் பண்றேன்..ஆனால் என்னால் எனது டெம்பிளேட்டில் ஃபாளோயர்ஸ் கேர்கட் ஆட் பண்ண முடியலை..நீங்க எப்டி ஆட் பண்ணுனீங்க...கொஞ்சம் உதவ முடியுமா????//

தேவா நல்லவர். உதவினு கேட்டாலே செய்வார். அதுக்காக பதிவை எல்லாம் பாராட்டனுமா?

TERROR-PANDIYAN(VAS) said...

@அனானி

//தேவா நல்லவர். உதவினு கேட்டாலே செய்வார். அதுக்காக பதிவை எல்லாம் பாராட்டனுமா?//

அதான் இங்க நான் ஒருத்தன் இருக்கேன் இல்லை? அப்புறம் என்ன நீ வேற தனியா? போய் பதிவ படிச்சிட்டு வந்து கேள்வி கேளு. நான் பதில் சொல்றேன்... :))

எஸ்.கே said...

@ டெரர்

சிவப்பு காக்கா மஞ்ச கடல்ல தண்ணி குடிச்சாமே! எனக்கென்னமோ, அது மூஞ்சூறாத்தான் இருக்கும்னு சந்தேகம்!


ஏங்க டெரர் இது போதுமா?

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//சிவப்பு காக்கா மஞ்ச கடல்ல தண்ணி குடிச்சாமே! எனக்கென்னமோ, அது மூஞ்சூறாத்தான் இருக்கும்னு சந்தேகம்!
//

குட். இப்படி தான் பேசனும்...:))

சௌந்தர் said...

ஹலோ நம்ம மக்களே இங்க ஒருத்தன் (தி) சிக்கி இருக்கான் வாங்க கும்மி அடிக்கணும் சொன்னா நாங்களும் வருவோம் இல்லையா

இம்சைஅரசன் பாபு.. said...

இங்க என்ன நடக்குது ....யார் ப்ளோக்ல வந்து என்ன கும்மி ....பிச்சு போடுவேன் பிச்சு .....எல்லோரும் வீட்ட பார்த்து ஒடுங்க .....மக்கா டெர்ரர் ...கடைசி வார்த்தை பார்க்கலியா மக்க ....மொத்ததுல இதுனால பர்ஸ் கலி ஆகிரும்னு போட்டு இருக்கேன் ...அத பர்க்கம்மா .....என்ன சவுண்ட் அடிங் .....

எஸ்.கே said...

//முதல்ல உங்க ப்ளாக் ல ஒரு பதிவை போடுங்க அண்ணா... எந்த விஷயத்தையும் எங்களைக் கத்துக்க விட மாட்டீங்களே. விட்டா நாங்க உங்களையும் மிஞ்சிருவோம்னு தான ;)..//

அத்திப்பூக்கள் அடிக்கடி பூக்காது!

(எங்க நானும் ரொம்ப நாளா கேக்கறேன் போடவே மாட்டேங்கிறார்!)

அன்பரசன் said...

என்ன நடக்குது இங்க???

சௌந்தர் said...

//முதல்ல உங்க ப்ளாக் ல ஒரு பதிவை போடுங்க அண்ணா... எந்த விஷயத்தையும் எங்களைக் கத்துக்க விட மாட்டீங்களே. விட்டா நாங்க உங்களையும் மிஞ்சிருவோம்னு தான ;)..//

அவர் குறுஞ்சி பூ வந்தாலும் வெயிடா வரும் இப்போ இந்த பதிவுலகமே டெரர் தான்

அன்பரசன் said...

//வாழ்க்கை போகிற போக்கில், தொலைக் காட்சியாகவும், பள்ளித் தோழர்களாகவும், சுற்றுச் சூழலாகவும் பயிற்றுவித்து விடுகிறது. இயற்கையிலேயே அவர்களுக்கு இருக்கும் குணாதியங்களும் கூடி அதற்கு ஏற்றார் போல விருப்பப் பொருட்களின் மீது கவனமும் சென்று விடுகிறது.//

கண்டிப்பாக..

இம்சைஅரசன் பாபு.. said...

@சௌந்தர் @ டெர்ரர் @எஸ் .கே

குறுஞ்சி பூ பூத்து என்ன பிரயோஜனம் சொல்லுங்க ...அவங்க சொன்ன மாதிரி ஒரு போஸ்ட் போடட்டும் .....இப்படியே டெர்ரர் அ உசுபேத்தி உசுபேத்தி பதிவு போடாம ஆக்கிருங்க ......

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//அவர் குறுஞ்சி பூ வந்தாலும் வெயிடா வரும் இப்போ இந்த பதிவுலகமே டெரர் தான் //

எலேய்!! என்னா இது ஓவர் படமா இருக்கு?? நாம்ம டீம் என்னைக்கு டம்மி பீஸ் தான்...

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//குறுஞ்சி பூ பூத்து என்ன பிரயோஜனம் சொல்லுங்க ...அவங்க சொன்ன மாதிரி ஒரு போஸ்ட் போடட்டும் .....இப்படியே டெர்ரர் அ உசுபேத்தி உசுபேத்தி பதிவு போடாம ஆக்கிருங்க .....//

ஆனா பதிவு போட்டதும் எண்டா போட்டான் சொல்லி குருப்பா உக்காந்து அழுவிங்க... :)))

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@சௌந்தர்

//அவர் குறுஞ்சி பூ வந்தாலும் வெயிடா வரும் இப்போ இந்த பதிவுலகமே டெரர் தான் //

எலேய்!! என்னா இது ஓவர் படமா இருக்கு?? நாம்ம டீம் என்னைக்கு டம்மி பீஸ் தான்...///

நம்ம டம்மி பீஸ் தான் யார் இல்லை சொன்னா ஆனாலும் ஊசி பட்டாசு சில நேரம் அதிக சவுண்ட் வரும்

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//இப்படியே டெர்ரர் அ உசுபேத்தி உசுபேத்தி பதிவு போடாம ஆக்கிருங்க ....//

ஹி..ஹி..டெரர் புகழ்ச்சிக்கு மயங்க மாட்டான்... :))

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆனா பதிவு போட்டதும் எண்டா போட்டான் சொல்லி குருப்பா உக்காந்து அழுவிங்க... :)))//
அது ஆனந்த கண்ணீர் டெர்ரர் ....ட்ரெய்லர் படிச்சி படிச்சி கண்ணீர் எல்லாம் வற்றி போச்சு மக்கா

இம்சைஅரசன் பாபு.. said...

////இப்படியே டெர்ரர் அ உசுபேத்தி உசுபேத்தி பதிவு போடாம ஆக்கிருங்க ....//

ஹி..ஹி..டெரர் புகழ்ச்சிக்கு மயங்க மாட்டான்... :))//

அதுக்கு பேர் புகழ்ச்சி இல்ல மக்கா மறைமுகமா உன்னை காறி துப்பினேன்

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//அதுக்கு பேர் புகழ்ச்சி இல்ல மக்கா மறைமுகமா உன்னை காறி துப்பினேன் //

ஹி..ஹி.. ஜெண்டில் மேன்... நான் சொன்னது அத்தி பூ, குறிஞ்சி பூ இப்படி எல்லாம் சொல்றத புகழ்ச்சி சொன்னேன். நீங்க தான் சொன்னிங்க இதை எல்லாம் கேட்டு நான் பதிவு போடறது இல்லைனு. அதுக்கு தான் அதை எல்லாம் நான் கண்டுக்கா மாட்டேன் சொன்னேன்.அய்யோ அய்யோ இன்னும் சின்ன புள்ளையாவே இருங்க... போங்க போய் ஹரினி கிட்ட பாடம் படிங்க.. :))

சௌந்தர் said...

மறைமுகமா யாருய்யா எங்க சங்கத்து தலைவனை அடிச்சது யாரு (காறி துப்பினது)

இம்சைஅரசன் பாபு.. said...

//ஹி..ஹி.. ஜெண்டில் மேன்... நான் சொன்னது அத்தி பூ, குறிஞ்சி பூ இப்படி எல்லாம் சொல்றத புகழ்ச்சி சொன்னேன். நீங்க தான் சொன்னிங்க இதை எல்லாம் கேட்டு நான் பதிவு போடறது இல்லைனு. அதுக்கு தான் அதை எல்லாம் நான் கண்டுக்கா மாட்டேன் சொன்னேன்.அய்யோ அய்யோ இன்னும் சின்ன புள்ளையாவே இருங்க... போங்க போய் ஹரினி கிட்ட பாடம் படிங்க.. :))//

மக்கா டெர்ரர் இங்க என்ன கட்டுரை போட்டியா நடக்குது பக்கம் பக்கமா எழுதுற ????

எஸ்.கே said...

@ டெரர்

நீங்க புகழ்ச்சிக்கு மயங்க மாட்டீங்கன்னு தெரியும்! இருந்தாலும் தங்களின் வருகைக்காக நாங்கள் என்றென்றும் காத்திருப்போம்!

(சே கட்சி தொண்டன் மாதிரியே பேசறேன்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னிக்கு ஒரு அல்லக்கைய்யி செமயா சிக்கிருச்சு போல? விட்றாதீங்க.....!

வினோ said...

அண்ணா கண் முன் இங்கே நீங்கள் சொல்வது அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது...

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்னிக்கு ஒரு அல்லக்கைய்யி செமயா சிக்கிருச்சு போல? விட்றாதீங்க.....!///

ஆமா ஆமா நீங்களும் வாங்க

அன்பரசன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னிக்கு ஒரு அல்லக்கைய்யி செமயா சிக்கிருச்சு போல? விட்றாதீங்க.....!//

ஹே ஹே...

சௌந்தர் said...

எஸ்.கே said...
@ டெரர்

நீங்க புகழ்ச்சிக்கு மயங்க மாட்டீங்கன்னு தெரியும்! இருந்தாலும் தங்களின் வருகைக்காக நாங்கள் என்றென்றும் காத்திருப்போம்!

(சே கட்சி தொண்டன் மாதிரியே பேசறேன்!)////

@@@எஸ்.கே 16 வயதினிலே மயிலா நீங்க

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//மக்கா டெர்ரர் இங்க என்ன கட்டுரை போட்டியா நடக்குது பக்கம் பக்கமா எழுதுற ???? //

பக்கம் பக்காம எழுதினா கூட நீங்க அதை பக்குவமா புரிஞ்சிக்க மாட்டறிங்களே... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்னிக்கு ஒரு அல்லக்கைய்யி செமயா சிக்கிருச்சு போல? விட்றாதீங்க.....!///

ஆமா ஆமா நீங்களும் வாங்க/////

ஆட்ட நல்லா கலகலகலன்னு வெள்ளாடவிட்டு டயர்டா ஆக்கி வைங்க, நான் வந்தததும் போட்டுடலாம்.....!

எஸ்.கே said...

@ சௌந்தர்

நான் மயில்னே வச்சுப்போம்! அப்ப சப்பாணி யாரு? பரட்டை யாரு?

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//இன்னிக்கு ஒரு அல்லக்கைய்யி செமயா சிக்கிருச்சு போல? விட்றாதீங்க.....!//

நேத்தே உன்னை போட்டு இருக்கனும். சிக்கன் 65 பத்தி எழுதற நீ... எட்டாங் கிளாஸ் பாஸ் பண்ண துப்பு இல்லை டாக்டர் ரேஞ்சிக்கு.. ராஸ்கள்.

இம்சைஅரசன் பாபு.. said...

//நீங்க புகழ்ச்சிக்கு மயங்க மாட்டீங்கன்னு தெரியும்! இருந்தாலும் தங்களின் வருகைக்காக நாங்கள் என்றென்றும் காத்திருப்போம்!

(சே கட்சி தொண்டன் மாதிரியே பேசறேன்!)//

யாரு டெர்ரர் அ புகழ்ச்சிக்கு மயங்க மாட்டார் .....வருஷ கடைசில வந்து சூப்பர் ஜோக் சொல்றீங்களே மக்கா ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//இன்னிக்கு ஒரு அல்லக்கைய்யி செமயா சிக்கிருச்சு போல? விட்றாதீங்க.....!//

நேத்தே உன்னை போட்டு இருக்கனும். சிக்கன் 65 பத்தி எழுதற நீ... எட்டாங் கிளாஸ் பாஸ் பண்ண துப்பு இல்லை டாக்டர் ரேஞ்சிக்கு.. ராஸ்கள்./////

அட ஆட்டுக்குத் தண்ணிய வைங்கப்பா..காலைல இருந்து கத்திக்கிட்டு கெடக்குது

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்னிக்கு ஒரு அல்லக்கைய்யி செமயா சிக்கிருச்சு போல? விட்றாதீங்க.....!///

ஆமா ஆமா நீங்களும் வாங்க/////

ஆட்ட நல்லா கலகலகலன்னு வெள்ளாடவிட்டு டயர்டா ஆக்கி வைங்க, நான் வந்தததும் போட்டுடலாம்.....!////

இப்போவே அந்த ஆடு டயர்டா தான் இருக்கு வாங்க வெட்டுவோம்

அன்பரசன் said...

100

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//இன்னிக்கு ஒரு அல்லக்கைய்யி செமயா சிக்கிருச்சு போல? விட்றாதீங்க.....!//

நேத்தே உன்னை போட்டு இருக்கனும். சிக்கன் 65 பத்தி எழுதற நீ... எட்டாங் கிளாஸ் பாஸ் பண்ண துப்பு இல்லை டாக்டர் ரேஞ்சிக்கு.. ராஸ்கள்.////

ராஸ்கல்...இந்த 'ல்'லு போடு, போயி இந்த வருசமாச்சும் அஞ்சாப்பு பாஸ் பண்ற வழிய பாரு

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஆட்ட நல்லா கலகலகலன்னு வெள்ளாடவிட்டு டயர்டா ஆக்கி வைங்க, நான் வந்தததும் போட்டுடலாம்.....! //

ஏன்? உனக்கு ஓடர ஆட்ட தொறத்தி புடிக்க தெரியாதா? முட்டி செத்தவனாடா நீ? :))

இம்சைஅரசன் பாபு.. said...

////இன்னிக்கு ஒரு அல்லக்கைய்யி செமயா சிக்கிருச்சு போல? விட்றாதீங்க.....!//

நேத்தே உன்னை போட்டு இருக்கனும். சிக்கன் 65 பத்தி எழுதற நீ... எட்டாங் கிளாஸ் பாஸ் பண்ண துப்பு இல்லை டாக்டர் ரேஞ்சிக்கு.. ராஸ்கள்.//

எங்க ஊர்ல எல்லாம் 8 கிளாஸ் படிச்சவன் தான் பாமௌஸ் டாக்டர் மக்கா .......சிக்கன் 65 பத்தி ஏன் பதிவு பண்ணி போட்டாரு தெரியுமா சிக்கன் குனியா ன்னு ஒரு சுராம் வருதாம் ...அதை ஆராய்ச்சி செய்து போட்டிருக்கார் பன்னி இல்லையா பன்னி சார் .......

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//இப்போவே அந்த ஆடு டயர்டா தான் இருக்கு வாங்க வெட்டுவோம்
//

எலேய்!! ஆட வெட்ட கூட துனைக்கு ஆள் கூப்பிடற.. அவ்வளவு பயமா??

சுபத்ரா said...

@ TERROR

//உனக்கு மீசை இல்ல அதனால மண்ணு ஒட்டலை... :))//

நாங்க பாசத்துக்கு அடிபணிஞ்சு போறவங்க :) அண்டார்டிக்கால வானம் பச்சை கலர்னு அண்ணன் சொன்னா அப்படியானு கூட கேக்காம அப்படியே நம்பிருவோம்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@ஆல்

30 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. சாப்பிட்டு வரேன். அதுக்குள்ள ஆள் இல்லாத கிரவுண்ட்ல நீங்களே நான் ஜெய்ச்சிடேன் ஜெய்ச்சிடேன் கத்தினா செல்லாது... :))

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@சௌந்தர்

//இப்போவே அந்த ஆடு டயர்டா தான் இருக்கு வாங்க வெட்டுவோம்
//

எலேய்!! ஆட வெட்ட கூட துனைக்கு ஆள் கூப்பிடற.. அவ்வளவு பயமா??///

ச்சே ச்சே உன்னை மாறி சின்ன பையனை எல்லாம் நானே வெட்டுவேன் என் பேரு என்னனு உனக்கே தெரியும் ஏதோ ராம் சார் கறி சாப்பிடனும் சொன்னார் அதான் அவரை கூப்பிடுறேன்.... (நடுல வாங்க போங்க போட்டுங்கோ)

இம்சைஅரசன் பாபு.. said...

///உனக்கு மீசை இல்ல அதனால மண்ணு ஒட்டலை... :))//

நாங்க பாசத்துக்கு அடிபணிஞ்சு போறவங்க :) அண்டார்டிக்கால வானம் பச்சை கலர்னு அண்ணன் சொன்னா அப்படியானு கூட கேக்காம அப்படியே நம்பிருவோம்... :))//
வாம்மா மின்னல் ......எங்க உன் பாசாத்த கொஞ்சம் அள்ளி உத்து பாப்போம் .....

சௌந்தர் said...

மக்கா பாசமலர் வந்தாச்சி இனி அண்ணா அண்ணா தான்....

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//ச்சே ச்சே உன்னை மாறி சின்ன பையனை எல்லாம் நானே வெட்டுவேன்//

அதை ஏன் அரை கிலோ மீட்டர் துரத்துல நின்னு சொல்ற.. ஆமாம் ஏன் உன் டவுசர் நனஞ்சி இருக்கு? :))

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@சௌந்தர்

//ச்சே ச்சே உன்னை மாறி சின்ன பையனை எல்லாம் நானே வெட்டுவேன்//

அதை ஏன் அரை கிலோ மீட்டர் துரத்துல நின்னு சொல்ற.. ஆமாம் ஏன் உன் டவுசர் நனஞ்சி இருக்கு? :)///

ஆடு மேல தண்ணி ஊத்தும் போது அப்படி தான் இருக்கும்....இரு அடுத்து வெட்டு தான்

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா தேர்ர்ரர் உனக்கு பதிவுலகத்துல பொம்பள ரசிகை கூடிகிட்டே போகுது ......என்ன வசியம் வச்சு பதிவு எழுதற மக்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@சௌந்தர்

//ச்சே ச்சே உன்னை மாறி சின்ன பையனை எல்லாம் நானே வெட்டுவேன்//

அதை ஏன் அரை கிலோ மீட்டர் துரத்துல நின்னு சொல்ற.. ஆமாம் ஏன் உன் டவுசர் நனஞ்சி இருக்கு? :))/////

நீ எதுக்கு இதுலாம் கேக்குற, பாவம் அவரு இன்னிக்கு பேம்பர்ஸ் போட மறந்திருப்பாரு...!

சுபத்ரா said...

இப்படியே டெர்ரர் அ உசுபேத்தி உசுபேத்தி பதிவு போடாம ஆக்கிருங்க ......////

REPEATUUUU :)

சௌந்தர் said...

@@@@@@பன்னி என்ன இது போரம்லே பேச வேண்டியதை இங்கே பேசுறிங்க...ராஸ்கல்....எடு க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இம்சைஅரசன் பாபு.. said...
மக்கா தேர்ர்ரர் உனக்கு பதிவுலகத்துல பொம்பள ரசிகை கூடிகிட்டே போகுது ......என்ன வசியம் வச்சு பதிவு எழுதற மக்க/////

அதுவா, காரமடை ஜோசியர்கிட்ட போயி முப்பது நாள், காய்ஞ்ச மொளகாய தண்ணில கொதிக்க வெச்சி, அதுல குளிச்சுட்டு, விரதம் இருந்து வசியம் பண்ணிட்டு வந்திருக்காரு... நீயும் போறியா?

சுபத்ரா said...

@ Dheva

Let me read that link first. Thank You!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் said...
@@@@@@பன்னி என்ன இது போரம்லே பேச வேண்டியதை இங்கே பேசுறிங்க...ராஸ்கல்....எடு க..../////

அடடா ஒளரிட்டேனா....சரி சரி விடு, நம்ம பசங்கதானே....அட்ஜஸ்ட் பண்ணிக்குவானுக...!

இம்சைஅரசன் பாபு.. said...

////இம்சைஅரசன் பாபு.. said...
மக்கா தேர்ர்ரர் உனக்கு பதிவுலகத்துல பொம்பள ரசிகை கூடிகிட்டே போகுது ......என்ன வசியம் வச்சு பதிவு எழுதற மக்க/////

அதுவா, காரமடை ஜோசியர்கிட்ட போயி முப்பது நாள், காய்ஞ்ச மொளகாய தண்ணில கொதிக்க வெச்சி, அதுல குளிச்சுட்டு, விரதம் இருந்து வசியம் பண்ணிட்டு வந்திருக்காரு... நீயும் போறியா?//

யோவ் பன்னி நம்ம அங்க போன சரி ஆகாது டெர்ரர் சின்ன பையன் அதுனால அங்க ......நம்ம நேரடியா நித்தியாந்தா கிட்ட தான் போகணும்

இம்சைஅரசன் பாபு.. said...

//Let me read that link first. Thank You! தேவ//

தமிழ் உக்கு கெட்அவுட் அ ....யார் ப்ளோக்ல வந்து ஆங்கிலத்தில் கமெண்ட் .....வெளியே போம்மா மின்னல் ....ஒன்லி தமிழ்.....நோ bad வோர்ட்ஸ்

இம்சைஅரசன் பாபு.. said...

///ச்சே ச்சே உன்னை மாறி சின்ன பையனை எல்லாம் நானே வெட்டுவேன்//

அதை ஏன் அரை கிலோ மீட்டர் துரத்துல நின்னு சொல்ற.. ஆமாம் ஏன் உன் டவுசர் நனஞ்சி இருக்கு? :))///

அசிங்க பட்டான் சௌந்தர்

சுபத்ரா said...

@ இம்சை

////இம்சைஅரசன் பாபு.. said...
மக்கா தேர்ர்ரர் உனக்கு பதிவுலகத்துல பொம்பள ரசிகை கூடிகிட்டே போகுது ......என்ன வசியம் வச்சு பதிவு எழுதற மக்க/////

பதிவே போடாம இருங்க :)

இம்சைஅரசன் பாபு.. said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
மக்கா தேர்ர்ரர் உனக்கு பதிவுலகத்துல பொம்பள ரசிகை கூடிகிட்டே போகுது ......என்ன வசியம் வச்சு பதிவு எழுதற மக்க/////

பதிவே போடாம இருங்க :)//

ஹ ஹ ......ஏற்கனவே அதை தானே செய்கிறோம் .....ஆனா ஆடு வெட்டுவோம் ...பார்த்துமா ஒரே போடா போட்டுருவோம் ...

சுபத்ரா said...

//ஆனா ஆடு வெட்டுவோம் ...பார்த்துமா ஒரே போடா போட்டுருவோம் //

ஆடு வெட்டுறத எல்லாம் என்கிட்டே எங்க சொல்றீங்க :)

(ரொம்ம்ம்மம்ப பயந்துட்டோம்)

விக்கி உலகம் said...

பகிர்வுக்கு நன்றி

விக்கி உலகம் said...

பகிர்வுக்கு நன்றி

இம்சைஅரசன் பாபு.. said...

////ஆனா ஆடு வெட்டுவோம் ...பார்த்துமா ஒரே போடா போட்டுருவோம் //

ஆடு வெட்டுறத எல்லாம் என்கிட்டே எங்க சொல்றீங்க :)

(ரொம்ம்ம்மம்ப பயந்துட்டோம்)//

மக்கா டெர்ரர் ஒரு பீசு ரொம்ப பேசுது.... தேவா அண்ணா போட்ட்ரவா ....

dheva said...

ஆணி கொஞ்ச அதிகமாச்சுன்னு போய்டு வந்தா சொந்தகாரய்ங்களா இருக்கீக...

வாங்க மாக்கா இருந்து சாப்டு கீப்ட் போங்க.....வெள்ளிக்கிழமை நம்ம பங்காளி வீட்ல (டெரர் கும்மி) கடா வெட்டு இருக்கு. சரியா?

dheva said...

பாபு..@ போடுறா தம்பி கேள்வி கேட்டுகிட்டு....

பாரத்... பாரதி... said...

உண்மைதான். குழந்தையின் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடிய வல்லமை இங்கே யாருக்கும் இல்லை.
குழந்தை மனிதனின் தந்தை.

பாரத்... பாரதி... said...

//வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....!//

Mahi_Granny said...

தகப்பன் சாமிக்கு வாழ்த்துக்கள்.

ஹேமா said...

தேவா...நீங்கள் அப்பாவாக உங்கள் மகளுக்கு...என் அப்பாவும் இதே மலைப்பில் இருந்ததாய் சொன்னது ஞாபகம் வருகிறது !

அப்பாவுக்கும் மகளுக்குமான வாழ்த்துகள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@தேவா

சக்தியாய் உங்க மகளும், மனைவியும்... உங்களை ஆக்கிரமிப்பு செஞ்சிருப்பதை.. அழகா சொல்லிட்டீங்க..
பொதுவா மகளை, தந்தைக்குத் தாயாய் உவமைப் படுத்துவாங்க..

உங்க பதிவுல, உங்களுக்கும் அதே நெகிழ்ச்சி,
இருக்கறதை உணர முடியுதுங்க.. :-)

Anonymous said...

"Mahal"..
Alahaana chinna (Dheva)dhai..

By
Maheswari..

அப்பாவி தங்கமணி said...

ஒரு ஆண் தன் பெற்றவளையும் உற்றவளையும் (மனைவி) புரிந்து கொள்ள முனைவது தான் பெற்ற மகளின் முகம் பார்த்தேங்கறது ரெம்ப சரி தான் போல...

குழந்தைகள் பல நேரங்களில் நம்மை மிஞ்சும் அறிவும் தெளிவும் காட்டி "நான் வளர்கிறேனே மம்மி" என்பதை நமக்கு உணர்த்துகிறார்கள்... நாம் தான் கொஞ்சம் தாமதமா புரிஞ்சுக்கறோம்...

நல்ல பதிவுங்க தேவா