Pages

Monday, November 21, 2011

அரிதாரம்...!




















யாரோ பேசியதை
திரும்ப நான் யாரிடமோ
பேசுகிறேன்...!

எல்லோருக்கும் பிடித்த
ஒரு இசையை
வலுக்கட்டாயமாய்
எனக்குப் பிடித்ததாய் கொண்டு
மீண்டும் மீண்டும் கேட்கிறேன்!

மிகைப்பட்ட சரிகளின்
பக்கம் தவறென்றாலும்
சாய்ந்து, குறையாயிருக்கும்
சரிகளை தவறென்கிறேன்!

யார் யாரோ ஏதேதோ சொல்ல
கேட்டு கேட்டு...
என் சுயம் தொலைந்து
அரிதாரப் பூச்சுக்களுக்குள்
என் அடையாளம் அழிந்து...
தொலைந்தே விட்டேன் நான்...!!!


தேவா. S

3 comments:

rufina rajkumar said...

தொலைந்து விடாமல் இருக்க எடுக்கும் பெரும் சக்திதான் நம்மை பலவீனமாக்குகிறது

jmbatcha said...

super

சுபத்ரா said...

ம்ம்ம்...அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..