Pages

Monday, November 22, 2010

பெண்...!ட்ரெய்லர் V

சிலிர்த்து போய் நிற்கிறேன்...எப்படி வாழ்வின் சில உணர்வுகளை பகிர்ந்து கொள்வது என்று....காலங்கள் ஓடி கொண்டே இருக்க அதை வயது என்று கணக்கிட்டு உலகம் சொல்ல நம்மைச் சுற்றிய மாற்றங்கள் எல்லாம் தவிர்க்க முடியாததாகிப் போய்விடுகிறது.

சட்டென்று கொண்டு வந்து எங்கேயோ நிறுத்தி விட்ட வாழ்க்கையை பின்னோக்கி பார்க்கிறேன். 2004ன் பிப்வரி 5 அது ஒரு அழகான மாலை வேளை...என்னை ஏர்போர்டில் ஊருக்கு அனுப்புவற்காக வந்த நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டும் ...பயணத்திற்கான வாழ்த்துக்களை தொலைபேசி வழியே தொடர்ந்து கேட்டுக் கொண்டும் சார்ஜா ஏர்போர்ட்டை நோக்கிய அந்த பயண மகிழ்ச்சியின் உச்சத்தின் பின்ணனியில் என் திருமணம் மறைந்திருந்தது.

பெண்ணுக்குப் பிடிக்கிறதா என்று கேட்டு....மாப்பிள்ளைக்கு பிடிக்கிறாத என்று உறுதி செய்து....பெண்ணோடு மாப்பிள்ளை தொலை பேசியில் பேசித்தான் ஆகவேண்டும் என்று உறவுகள் எல்லாம் நிச்சயதார்த்தத்துக்கு முன்னால் ஒற்றைக் காலில் நிற்க....எனக்குள் ஆச்சர்யம் பரவியது.

எப்படி ஒரு காலத்தில் பெண்ணை கல்யாணத்திற்கு முன்னால் சந்திக்கவும் பேசவும் தடைகள் விதித்த எம் சமுதாயமா...????? மாற்றத்தை உள்வாங்கி அதன் பின்ணனியில் இருக்கும் உண்மைகளை அலசி அதை ஏற்றுக் கொண்டாலும் இன்னும் நேர்த்தியாக பயணித்துக் கொண்டே இருக்கிறதே... என்று ஒரு கணம் என்னை ஸ்தம்பிக்க வைத்தது...பழைய பஞ்சாங்கம் என்று சொல்லக் கூடிய உறவு முறை பாட்டிகளும், தாத்தாக்களும் இதை ஆதரித்துப் பேசியது இன்னும் ஆச்சர்யமாக இருந்தது எனக்கு.....!

இது ஒரு பக்கம் இருக்க....நான் பணி புரிந்த அலுவலகத்தில் இருந்த இந்திய தோழர்களும் தோழிகளும், நான் தொலைபேசியில் பேசும் வரை....என்னை விடவில்லை... !!!!! அது எல்லாம் அந்தக் காலம்..இப்போது 21 ஆம் நூற்றாண்டில் எவ்வளவோ மாறிப் போய்விட்டது. பெண் பற்றிய புரிதல் வேண்டும்..அந்த பெண்ணுக்கு உன்னைப் பற்றி தெரிய வேண்டும்..........என்று வலியுறுத்தலும் சேர்ந்தே என்னை உந்த....திருமணத்திற்கு முந்தைய எங்கள் பேச்சு ஆர்ப்பாட்டமாய் ஆரம்பித்தது..

சென்னையின் பட்டப்படிப்பும்...சுற்றுப்புறமும் தெளிவாய் சிந்திக்க வைத்திருந்தாலும்...சீரான சிந்தனையோடு குடும்ப சூழலையும் உணர்ந்தவராய் எனக்கு வரவிருந்த வாழ்க்கை துணை இருந்தது. ஆண்கள் பெரும்பாலும் ஏதேதோ ஒரு கற்பனையில் கொஞ்சம் கூடுதல் ஹீரோ தனத்தோடுதான் திருமணத்தை எதிர் கொள்கிறார்கள்.

அப்படித்தான் நானும்....நானும் என் உத்தியோகமும், என் கல்வியும், வாசித்த புத்தகங்களும்...என் தலை மீது ஏற்றி வைத்துக் கொண்டு அதை இடைக்கு இடை பேச்சில் கொண்டு வந்து எனது ஆளுமையை சமையம் கிடைக்கும் போது எல்லாம் காட்டிக் கொண்டு இருந்தென்.

இங்கே ஒரு விசயம் கவனிக்க வேண்டும்....ஆணின் ஆளுமை என்பது வேண்டுமென்றே போடும் வேசமல்ல....அது அவன் உடலின் சுரப்பிகளில் உள்ள கோளாறு. 10 வயது பையன் 30 வயது பெண்ணிடம் பேசினால் கூட அவனிடம் அந்த ஒரு ஹீரோத்தனமும், நான் இருக்கிறேன் எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்வேன் என்று சொல்லக் கூடிய ஒரு தன்மையும்வந்து விடும். இது குறை அல்ல..அவன் அப்படிப்பட்ட குணாதிசயங்கள் கொண்டவன்...

இன்னும் சொல்லப்போனால்..ஒரு குதிரை கனைப்பதும், ஒரு யானை பிளிறுவதும் எப்படி அதன் குணாதிசயமோ அது போலத்தான் இதுவும் குணாதிசயம். இதை சமப்படுத்தவும் தீர கர்வமும் அற்றுப் போகவும் திருமணங்கள் மிக அவசியம். (யாரோ கேட்கிறார்கள்....அப்போ பெண்கள் ....???? என்று ... ஆமாம் இதே போல அவர்களுக்கும் இயல்பிலேயே குணாதிசயங்கள் இருக்கின்றன....)

இந்த இடத்தில்தான் ஒரு மிகப்பெரிய உண்மையை உணர வேண்டும்....அதாவது ஆணோடு பெண்ணை எந்த காலத்திலும் ஒப்பிட்டு பார்த்து பேசக் கூடாது. இரண்டும் வேறு வேறான குணாதிசயங்கள் கொண்ட மனித படைப்புக்கள். ஆணை ஆணாகவும் பெண்ணை பெண்ணாகவும் பார்த்தல் தான் சிறப்பு.

ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லும் வார்த்தையில் கொஞ்சம் ஆதிக்கவாதிகளின் குரலும் கலந்து இருக்கிறது. ஆணும் பெண்ணும் இரு வேறு சக்திகள்....

ஆணின் சக்தி ஒரு வகையில் சிறப்பு.....என்றால்....

பெண்ணின் சக்தி இன்னொரு வகையில் சிறப்பு.......

ஒரு சகோதரியின் வலைத்தளத்தில் நான் படித்து ரசித்த ஒரு கவிதை வரியை உங்களோடு பகிர்வது நலம் என்று நினைக்கிறேன்.......

" பெண் ஆணை விட....
மேலானவளும் அல்ல....
கீழானவளும் அல்ல....
அவள் வேறானவள்......"

உலக இயக்கத்தில் சிவமாய்.. இருக்கும் எதுவமற்ற தன்மை....இயங்க ஆரம்பிக்கும் போது சக்கியாய் மாறுகிறது.....இந்த தத்துவத்தை உணர்த்தும் ஒரு சிம்பாளிக் போஸ்டர்தான்.....அர்த்த நாரீஸ்வரார்.....

சிவம் இல்லையேல்...சக்தி இல்லை......

ஆனால்....சக்தி இயங்கவில்லை எனில் சிவத்தின் இருப்பே தெரியாமல் போய்விடும் என்பதுதானே உண்மை...?

இதுதான் உண்மை. திராவிட கலாச்சாரத்தில் பெண்களுக்கு எப்பவுமே உயரிய இடம்தான். ஆமாம் சங்க காலத்தை எடுத்து புரட்டுங்கள் அதிலிருந்து.....சிவகங்கைச் சீமையின் செம்மண் வரலாறு வரை எடுத்துப் படியுங்கள்....ராணி வீரமங்கை வேலு நாச்சியாரின் ஆட்சியில்தான் வெள்ளையனை முழு வீச்சில் எதிர்க்க போர் முரசு கொட்டப்பட்டது சிவகங்கைச் சீமையில்.

இடையிலே வந்த சில சீர்கேடுகளும்..கபட மூளை கொண்ட மனிதர்களின் தந்திரங்களும்....பெண்ணை அடக்கி ஆயிரெத்தெட்டு சடங்குகள் சடங்குகளையும் உட்படுத்தி இன்றளவும் அந்த சீர்கேட்டினை தாக்கம் இருக்குமளவிற்கு செய்துவிட்டனர்.

இயல்பிலேயே அன்புவயப்பட்ட பெண்ணை அதே உணர்வின் பால் கட்டுப்படுத்தி அடக்கு முறைகளை கொண்டு வந்தனர். இராசாராம் மோகன்ராய் முதல் புரட்சிக் கவி பாரதி வரை எதிர்த்து எதிர்த்து...இன்று அந்த தீமையின் வேர்கள் வரை வந்து மாய்த்துவிட்டோம்.....!!!!!! இன்று பெண்ணடிமைக்கு எதிராய் ஆயிரம் மகளிர் நல அமைப்புகளும், காவல் துறையில் தனிப்பிரிவுகளும் வந்து விட்டன...!!!!

இன்னும் சொல்லப்போனால்... தேசத்தை ஆளும் கட்சியின் தலைவியும், இந்திய முதல் குடிமகனாய் இருக்கும் ஒருவரையும் பெண்ணாகக் கொண்ட ஒரு தேசத்தின் குடி மக்கள் தாம் நாம்....

இனி பெண்ணடிமை பற்றி பேசுவது என்பது முற்போக்கு வாதம் அல்ல....அது பிற்போக்கு வாதம்....சரிதானே...? ஆமாம் நாம் அதை கடந்து வந்து விட்டோம்....!! ஆங்காங்கே நடக்கும் தீமைகள் சர்வ நிச்சயமாய் மேலும் கருவறுக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றமில்லை.

அட எங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறேன்.. அப்டியே ஒரு யு டர்ன் பண்ணி மீண்டும் திருமண வாழ்க்கைக்குள் வாருங்கள்...

எனக்கும் எல்லா ஆண்களைப் போலத்தான் கர்வம் அழியும் ஒரு நிகழ்வாக திருமணம் அமைந்தது. இதில் உண்மை இருப்பது எல்லோருக்குமே தெரியும்.. இரு வேறு குணாதிசங்கள் கொண்ட மனித படைப்புகள் ஒன்றாய் வாழ வேண்டும். இந்த வாழ்க்கையில் நிச்சயமாய் எல்லாம் ஒத்துப் போய் விடும் என்று சொல்ல முடியாது.

இன்னும் சொல்லப் போனால் இரண்டு ஒத்த மனோ நிலை கொண்ட ஆண்களோ அல்லது பெண்களோ இல்லை ஆண் பெண்களோ இருப்பதற்கான சாத்தியமே கிடையாது. அதிக பட்சம் ஒத்துப் போகக் கூடியவர்கள் கூட 60 - 60%தான் இருக்க முடியும்.

100% சதவீதம் என்னோடு ஒத்து போகும் ஒரு மனிதனை கண்டுபிடித்தல் சாத்தியமில்லைதானே.....???? இன்னும் சொல்லப்போனால் நம்மோடு நாமே ஒத்துப் போக முடியாத தருணங்கள் பல இருக்கும் போது....மற்றவரிடம் எப்படி?

இப்போது வாருங்கள் திருமண வாழ்க்கைக்கு....

எனக்கு டீ பிடிக்கும், அவளுக்கு காபி பிடிக்கும்..... - நான் அவளுக்கு காபி பிடிப்பதை ரசிக்கிறென்.....அவளும் நான் டீ குடிப்பதை ரசிக்கிறாள்.....

எனக்கு புத்தகம் படிக்க பிடிக்கும் - அவளுக்கு பாட்டு கேட்க பிடிக்கும், நான் அவள் பாட்டுக் கேட்பதை அனுமதித்து ரசிக்கிறேன்...அவள் என் புத்தகம் படித்தலை அனுமதித்து ரசிக்கிறாள்....

ஆழமான கம்பீரமான காதல் இந்த விட்டுக் கொடுத்தலையும்...புரிதலையும் கொடுத்திருக்கிறது. திருமணமான புதிதில் ஒரு வருட காலத்தில் முரண்பாடுகள்....அதிகம் இருந்தது...ஆனால் உற்று பார்த்து உற்றூப் பார்த்து.... தெளிவுகளுக்கு வந்தோம்.....

ஒரு தினத்தில்....எனக்கு கவிதை பிடிக்கும்....அவளுக்கும் ஏன் கவிதை பிடிக்கவேண்டும் என்ற புரிதல் என்னிடமும்.....

எனக்கு........கதைகள் பிடிக்கும் அது ஏன் அவருக்கும் பிடிக்க வேண்டும் என்ற புரிதல் அவளிடமும்...

மலர்ந்த தருணத்தில்....அழகான ஒரு இல்லறம் பிறந்தது அங்கே....!!!!!! கோடி பேர்களை மாற்றி வாழ்வதில் மீண்டும் இது போல அல்லாமால் வேறு பிரச்சினைதானே வெடிக்கும் இல்லை என்றால் அக்கறை இல்லாத மேம்பாக்கான ஒரு துணைதானே அமையும்...

எங்களுக்குள் சண்டைகள் வந்த போது எல்லாம்...இது என்ன வாழ்க்கை என்று ஒதுங்கிப் போய் விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய போது எல்லாம்....எம் முன்னோர்கள் திருமணமென்ற மாயவிலங்கிட்டு.... 2000 பேர் முன்னிலையில் ஒப்புக் கொண்ட வாழ்க்கையை மீறப்போகிறேனா நான்? எமது சமுதாயத்திடம் சொல்லப்போகும் நான் விலகியதற்குப் பின்னால் இருக்கும் காரணம் சரிதானா....? என்று எனக்குள் கேள்விகள் கேட்கத் தொடங்கினேன்....

அப்படி கேள்விகள் எழுந்த போது எல்லாம்....இருவரும் வாழ்க்கையை ஆராயத்தொடங்கினோம்....அதில் இருந்த பிரச்சினைகள் புரிதலில் உடைந்து போயின. இப்படி சிந்திக்கவும் எமக்குள்ளே பகுத்து ஆய்வு செய்து கொள்ளவும் ஒரு காரணியாய், மேலும் யாரும் கேட்க மாட்டார்கள்...கேட்டாலும் என் வாழ்க்கை என்று சொல்லவும் வாதிடவும் அறிவுகள் இருந்தாலும்...உறவுகளை அறுத்தெறியும் முன் ஒரு உள்ளப் பகுப்பாய்வு.....ஒரு மாயையான பயம் வேண்டும் என்று.....எம் சமுதாயம் ஏற்படுத்தி வைத்திருந்த திருமணம் என்ற பந்தத்தின் மீது அந்த நிகழ்வின் மீது..... ஒரு மரியாதை வந்தது....

ஒரு சகிக்க முடியாத வேதனைகளை தரும் கணவனையோ அல்லது மனைவியையோ....பொறுத்து பொறுத்து சகிக்க முடியாமல் வாழ்வதை விட பிரிதல் நலம் என்ற கருத்தை இந்தக் கட்டுரை ஆதரிப்பதோடு...அப்படி பிரிவதின் பின்ணனியில் தீர உங்கள் துணையினைப் பற்றி நீங்கள் எடுக்கும் முடிவு சரிதானா என்று....முடிந்த வரை சுற்றங்கள் நட்புக்களிடம் ஆலோசனை செய்து....இந்திய சட்டங்களின் படி விவகாரத்து பெறலாமே.....!!!! அதற்கு எந்த தடைகளும் இல்லைதானே....?

மேலும் அப்படி பிரிந்தவர்கள்...மீண்டும் தமக்கு ஒத்த துணையைக் கொண்டு வாழ்வதையும் இந்தக் கட்டுரை ஆதரிக்கிறது!!!!!!!!!!!

பிரிவதற்கு முன்னால்......ஒராயிரம் முறை யோசிக்கத்தான்....திருமணம் என்ற....கோட்பாடு வரையறுக்கப்பட்டது....இயல்பிலேயே...சந்தர்ப்பவதாமாக சிந்திக்கும் மனித மனதினை தடுத்து சிந்திக்க வைக்கும் ஒரு உபாயம்தான் திருமணம் என்னும் வாழ்க்கை சேரும் முறை....

திருமணம் என்ற கோட்பாட்டினை சிலர் துஷ்பிரோயோகம் செய்திருக்கின்றனர்...அதைக் கொண்டு ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் துன்புறுத்தி இருக்கிறார்கள்.....அவர்கள் எல்லாம் சர்வ நிச்சயமாய் தண்டிக்கப்பட வேண்டியவர்களே அன்றி தவிர்க்கப்பட வேண்டியது....திருமணம் என்னும் மனோதத்துவ மந்திர சாவி இல்லைதானே...?

இந்தியாவை விடுங்கள்...வேறு எந்த நாட்டில் அல்லது எந்த கலாச்சாரத்தில் அல்லது எந்த மதத்தில் திருமணம் இல்லை?.........இது எல்லா நாட்டு மனிதர்களும் வட்ட மேசை மாநாடு போட்டு எடுத்த தீர்மானமா? இல்லை....இல்லை இது ஆழ்மனதின் (கவனிக்க!!!!!) வெளிப்பாடு.....


காத்திருங்கள் தோழர்களே...இன்னும் விரிவாக பேசுவோம்.....!


தேவா. S


பின் குறிப்பு: நான் வாழ்க்கையில் எப்போதும் வாசித்துக் கொண்டே இருக்கும் கவிதையான என் குட்டி தேவதைக்கு வாழ்த்துச் சொன்ன தம்பி விஜய், தோழி கெளசல்யா மற்றும் அத்தனை நட்புகள் மற்றும் உறவுகளுக்கு என் அன்பான நன்றி மற்றும் நமஸ்காரங்கள்......!

23 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

me the firstuuuuu

எல் கே said...

புரிதலிலும் விட்டுக் கொடுத்தாலும் தான் வாழ்க்கை. தனக்காக வாழ்வது வாழ்க்கை அல்ல ... மீண்டும் உங்கள் குட்டி தேவதைக்கு என் வாழ்த்துக்கள்

கருடன் said...

@தேவா

இது போன்ற நீண்ட கட்டுரைகள் பதிவுலக அமைதிக்கு மிக அவசியம். படிக்க எவனுக்கும் பொறுமை இருக்காது அதனால எதிர் கருத்து யாரும் சொல்ல மாட்டாங்க. சண்டை வராது. மறக்காம கமெண்ட்டும் பெருசு பெருசா போடனும் சொல்லிட்டேன்.... :)))

S Maharajan said...

//சிவம் இல்லையேல்...சக்தி இல்லை......//

இது ஒன்றே போதும் இரு மனமும் புரிந்து கொள்ள!

அக்ஷயா குட்டிக்கு மீண்டும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இம்சைஅரசன் பாபு.. said...

நல்லா இருக்கு தேவா அண்ணா ......அக்ஷயாவிர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்பரசன் said...

அருமையான கட்டுரைங்க.

தங்கள் மகளுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Arun Prasath said...

காத்திருங்கள் தோழர்களே...இன்னும் விரிவாக பேசுவோம்.....!

இதுக்கு மேல விரிவா சொல்ல முடியாது தல... ஆழ்ந்த கருத்துக்கள். அனுபவம் பிரதிபலிக்கிறது

ராஜகோபால் said...

ஆண் பெண்ணை விட....
மேலானவனும் அல்ல....
சமமானவனும் அல்ல....
அவன் புரியாத புதிர் - அவனுக்கும்.

Unknown said...

அருமையான கட்டுரை.தங்களின் செல்ல மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எனக்கு டீ பிடிக்கும், அவளுக்கு காபி பிடிக்கும்..... - நான் அவளுக்கு காபி பிடிப்பதை ரசிக்கிறென்.....அவளும் நான் டீ குடிப்பதை ரசிக்கிறாள்.....

எனக்கு புத்தகம் படிக்க பிடிக்கும் - அவளுக்கு பாட்டு கேட்க பிடிக்கும், நான் அவள் பாட்டுக் கேட்பதை அனுமதித்து ரசிக்கிறேன்...அவள் என் புத்தகம் படித்தலை அனுமதித்து ரசிக்கிறாள்....////

ரொம்பச் சரியா சொல்லியிருக்கே பங்காளீ. இதுதான் நிஜமான காதல், நிஜமான வாழ்க்கை........!

உனக்கு ஒரு சல்யூட்யா......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்புறம் உங்க வீட்டு இளவரசிக்கு என்னோட வாழ்த்துக்கள சொல்லிடு பங்காளி!

Unknown said...

குட்டி தேவதைக்கு என அன்பு வாழ்த்துக்கள்...

சேலம் தேவா said...

உண்மையான வாழ்க்கையின் புரிதல்..!! குட்டி தேவதையை கேட்டதாக சொல்லுங்கள்..!!

வினோ said...

புரிதல் வேனும்.. புரிஞ்சுப்போச்சு அண்ணே...

ஜெய்லானி said...

அக்ஷயாவிர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..!!

Mahi_Granny said...

குட்டி தேவதையின் அம்மாவிற்கு நன்றி சொல்ல இந்த பதிவா ? நல்ல புரிதல் . நல்ல இருங்க மக்களே.

ஹரிஸ் said...

குட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,,,அருமையான பதிவு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Present sir

Anonymous said...

மிக விரிவாக அலசி இருக்கீங்க அண்ணா திருமண பந்தத்தைப் பற்றி..

Anonymous said...

Excellent Dheva sir.

Birthday wishes to the little one.

ஜெயந்தி said...

ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் அவரவர்களின் விருப்பத்திற்கு மதிப்புக்கொடுத்து விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள். 100% உண்மை.

vinthaimanithan said...

//பிரிவதற்கு முன்னால்......ஒராயிரம் முறை யோசிக்கத்தான்....திருமணம் என்ற....கோட்பாடு வரையறுக்கப்பட்டது....இயல்பிலேயே...சந்தர்ப்பவதாமாக சிந்திக்கும் மனித மனதினை தடுத்து சிந்திக்க வைக்கும் ஒரு உபாயம்தான் திருமணம் என்னும் வாழ்க்கை சேரும் முறை....
//

இது... இது... இதுதான் மையநாடியே! கரெக்டா பிடிச்சிட்டீங்க!

Unknown said...

இதில் எனக்குப் பிடித்த வரிகளைப் பின்னூட்டமிடுவதற்காக நோட்பேடில் எடுத்துப் போட்டேன்.. ஆனால்.. வரிக்கு வரி அப்படியே ஒத்துப்போகிறேன்.. தேவா.

அருமையான பதிவு.. உங்கள் பதிவுகளில் இது மேலானது அப்படின்னு நான் சொல்ல மாட்டேன்.. ஏன்னா இது வேறானது..

என்ன இவ்ளோ பதிவு போட்டுட்டீங்க.. ரொம்ப வேலை படிக்கவே முடியலை.. உங்க பதிவெல்லாம்.. பொறுமையா வேற படிக்கனும்.. அதான் படிக்க முடியலை.. நாலஞ்சு நாளா..