Pages

Friday, November 19, 2010

போர்...!

ட்ரெய்லர் III

இம்மையில் யாம் எதைக் கொண்டு தெளிவது எம் பரம் பொருளே....! சுற்றி சுற்றியிருக்கும் சுற்றலில் விரிந்து பரந்திருக்கும் மாயையின் ஆட்சியில் வெருண்டு மருண்டு ஒடுங்கி ஒழிவதைத் தவிர வழியற்றுப் போயிருக்கும் எமது யாக்கைகளுக்கு ஏதாவது ஒரு ஊன்று கோல் கொடு.....

விடுபட்டு விடுபட்டு....விலகி விலகி வாழும் வாழ்வில் பெறும் நிம்மதிகள் சர்வ நிச்சயமாய் நிம்மதியின் சாயலில் இருப்பதாகவே படுகிறது. இங்கே இன்னொரு குருசேத்ர போர் தேவை.....

எங்கே....அர்சுனன்...எங்கே.....பரமாத்மா..???? பாரதத்தோடு பணி முடிந்து விட்டது என்று போய்விட்டீர்களா? எங்கே எங்கள் ரசூல்(ஸல்).....எமக்கான போர்களுக்கு நீங்கள் மீண்டும் தேவை என்பதை மறந்து விட்டீர்களா? எங்கே ஜீசஸ்...... சிலுவையை சுமந்து மனித பாவங்களை ஒழிக்க நீங்கள் வாழ்ந்து காட்டியதால் வலிஅறியாது.... நிகழ்கிறது இங்கே....ஓராயிரம் அட்டூழியங்கள்........!!!!

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

பரமாத்மா நீங்கள் வந்து தேரோட்டினாலும் சரி...இல்லை..ரசுலே (ஸல்), நீங்கள் முன்னின்று வழி நடத்தினாலும் சரி அல்லது எங்கள் தேவனே......நீர் வந்து வழி நடத்தினாலும் சரி...இங்கே....மாய்க்கப்பட வேண்டிய விடயங்கள் குவிந்து கிடக்கின்றன....மூலைக்கு மூலை....

வேலையில்லாமல் வீதிக்கு வீதி அலையும் எம் இளைஞர் கூட்டம் ஒரு பக்கம்,விலை வாசி ஏற்றத்தால் குரல்வளைகள் பிடிக்கப்பட்டு விழி பிதுங்கும் எம் மக்கள் ஒரு பக்கம்....., விவாசாயத்தை நம்பி நம்பி...வானமும் பொய்க்க....வாக்களித்த படி வரத்து நீரும் வராமல் பொய்க்க.... வாடிப்போய் காலியாகும் எம் கிராமங்கள் ஒரு பக்கம்.....எமது வறுமையை சாதகமாக்கி , எமது சூழ் நிலைகளை சூத்திரங்களாக்கி....வழிகெடுக்க மூட நம்பிக்கை ஆன்மீகங்கள் ஒரு பக்கம்.......

வயிற்றுப் பசியில் போராடும் எம்மக்களுக்கு வாக்களிக்க வாய்க்கரிசி போடும் அரசியல் வாதிகள் ஒரு பக்கம்...கற்றாலும் விசால பார்வையற்று சுயநலமாய பொதுநலம் பேசும்....இருண்ட மூளைகள் ஒரு பக்கம்....என்று சூறாவளியாய் சுழன்று கொண்டிருக்கிரது எமது வாழ்க்கை.........

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

வாழ வழி சொல்லா......நிமிர்ந்து நிற்க கைகொடுக்கா வாய்கள்...இன்று கதைக்கும் கதைகளின் பின்ணனியில் தம்மின் அறிவுகளை கடை பரப்பு முயற்சிகள்தானே இருக்கிறது...? எமது தேசம் எமது மாண்பு எமது பிரச்சினைகள்......எமது வலிகள்....மருந்து கொடுக்க கரங்களைத்தானே கேட்கிறோம் நாங்கள்? எமக்கு அறிவுரைகள் வேண்டாம்....அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் ...வலிக்க வலிக்க பேச வாய்களும்.....கருத்துக்களையும், புத்தக உதாரணங்களையும் கூற எம்மிடம் மூளைகளும் நிறையவே இருக்கின்றன.....நாங்கள் கேட்பது வாழ்க்கை கல்வி........ஏதேனும் வழி உண்டா அதற்கு....?

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

மழையில் ஒழுகும் எமது கூரைகளை எப்போது மாற்றுவோம்.....? வயதுக்கு வந்த எம் பெண்ணின் திருமணத்தின் செலவுகளுக்கு என்ன செய்வோம்.....? வளர்ந்த பையனின் கல்விக்கு என்ன செய்வோம் என்று கணக்குப் போடுமா எங்கள் மூளைகள் இல்லை...உங்களின் வெற்று வியாக்கினங்களையும்.....கர்வ அறிவுகளின் கூவல்களையும் வேடிக்கைப் பார்க்குமா.....? எங்களது இப்போதைய கவலை எல்லாம்..தக்காளி விலை குறையுமா....வெங்காயத்தின் விலை ஏன் ஏறிக் கொண்டே போகிறது ஏன்?.. பெட்ரோல் இல்லாமல் வண்டி ஓடுமா என்பதுதான்..........

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

காலங்கள் தோறும் செருப்பு இன்றி சகதியில் உழவு வேலை செய்கிறாரே...அந்த முத்துசாமி......அவரின் வாழ்க்கை மாற ஒரு உபாயம் சொல்லுங்கள்....? படித்து முடித்து வெளிநாடுகளுக்கு பறக்க வேண்டிய குடும்பச் சூழலால் குடும்பத்தை விட்டு வெளிநாடுகளில்...

பொருளாதரம் வேண்டு முடங்கிக் கிடக்கிறதே இந்திய இளைஞர் கூட்டம்...அதுவும் திருமணம் செய்து விட்டு......குடும்பச் சூழல் காரணமா மனைவியைப் பிரிந்து அவன் வெளிநாடுகளில் வாழ்கிறானே ஒரு இரத்த வாழ்க்கை அது பற்றி உங்களுக்கு ஏதேனும் ஒரு கற்பனையாவது இருக்கிறதா?

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

வியாக்கியானம் பேசும் மூளைகள் கொஞ்சம் என்னுடன் சென்னையின் சேரிப் பகுதிக்ளை சுற்றிப் பார்க்க வருமா? செருப்பில்லாமல் கூவக்கரையோரம் குவிந்து கிடக்கும் வாழ்க்கையை வாசிக்க முடியுமா? மூக்குகளை பொத்திக் கொள்ளாமல்....அவர்களின் ஒரு நாள் வாழ்க்கையை பங்கு போட முடியுமா? காலம் காலமாய் கலைந்து போயிருக்கும் எம் மக்களின் வாழ்க்கைகு தீர்வு இல்லை.....ஆனால் காமத்தை எப்படி அடுக்கி வைப்பது....? வாழ்க்கையில் எப்படி திமிர்கள் கொள்வது என்று வழிமுறை சொல்கிறீர்கள்.....

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

இடுப்பெலும்பில் சக்கியற்று நிற்கிற மக்களிடம் வந்து போர்ப்பயிற்சிகள் கொடுக்கிறீர்கள். ஒரு எழுத்தாளனும், அரசியல்வாதியும், கவிஞனும் பத்திரிக்கையாளனும் நான்கு சுவர்களுக்குள் மண்டியிட்டு போதை மாத்திரைகளை விழுங்கிவிட்டு எழுதுவது போல கற்பனையில் எழுதிக் கொண்டே இருந்தால் எதார்த்தப் பக்கங்களில் துருத்திக் கொண்டு இருக்கும் எலும்புகளை எப்படி பார்ப்பது.....?

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

தெளிந்த மானுடனாய் வாழவும்....சிந்தனைகளை கூட்டிக் கழித்து தீர்மானங்கள்
எடுக்கவும், வறுமையை துரத்தவும், கிராமப்புற பட்டதாரி இளைஞர்களை....சம காலத்து நிகழ்வுகளோடு கூடிய ஒரு சர்வதேச சமுதாயத்தை எதிர் கொள்ளும் பயிற்சி அளித்தலும், விவசாய தொழில் நுட்பத்தில் புரட்சி செய்தலும், கிராமங்கள் என்ற நமது உயிர்துடிப்புக்ளை பாதுகாப்பதும்....மூத்த குடிமக்களை மரியாதையாகவும் அவரவர் குடும்பத்துடன் வாழும் வகையில் குடும்பங்களுக்கு தெளிவு கொடுப்பதும்........

முதியோர் இல்லங்கள் எல்லாம் எதிர்காலத்தில் இல்லாமல் போக ஒரு பெரும் புரட்சி செய்வதும் செய்வதும்,வாக்களிக்கும் போது நேர்மயாக வாக்களிப்பதோடு தெருவோரங்களில் வீடுகளின்றி முடங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெரும்பானமை மக்களுக்கு வாக்களிக்க அதிகாரம் பெற்றுக் கொடுப்பதும்....என்று ஓராயிரம் வேலைகள் இருக்கிறது..... நமக்கு.......


எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

முதலில் எம் உயிர் உடலில் தங்கட்டும்.....! எம் சந்ததி தழைக்கட்டும்...குறைந்த பட்சம் வாழ வழி பிறக்கட்டும்.....ஆமாம் உயிரோடு முதலில் இருந்தால்தானே...மனிதனுக்கு கலாச்சாரமும் ,திருமணமும் இன்ன பிற....விவரிப்புகளும்

வாழவே வழியற்று போராடிக் கொண்டிருக்கும் அன்றாடாட சராசரி மக்களுக்கு தீர்வு சொல்ல நாவுகள் இருக்கின்றனவா...? .மூளைகள் இருக்கின்றனவா..........?

வாருங்கள் நமக்குத் தேவையான உளவியல் போரைத் தொடங்குவோம்.. ...! இந்த வலைப்பூ என்ற ஒப்பற்ற ஊடகம் மூலம்.............


விரிவாக பேசுவோம் இன்னும் காத்திருங்கள்.......!அப்போ வார்ர்ர்ர்ட்ட்ட்டா......!!!!!!!தேவா. S

36 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//போர்...!//

அதை நாங்க படிச்சதுக்கப்புறம் சொல்லுவோம்ல. என்ன அவசரம். ரொம்ப போர் இந்த பதிவு. ஹாஹா

எஸ்.கே said...

மனித மனம் மாற்றங்களை எதிர்கொள்ள விரும்பும் அதே வேளையில் அதனால் வரும் பிரச்சினைகளையும் சந்திக்க பயப்படுகிறது. இதுவே மாற்றங்கள் நிகழ்வது குறைவாக இருக்க காரணம். ஆனால் நிச்சயம் இந்நிலை மாறும்!

LK said...

உண்மைதான் பாஸ்.. சாப்பிடவே வழியில்லாத பொழுது வேறு எதை சிந்திக்கும் மனம் ?

நாகராஜசோழன் MA said...

//எமக்கு அறிவுரைகள் வேண்டாம்....அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் ...வலிக்க வலிக்க பேச வாய்களும்.....கருத்துக்களையும், புத்தக உதாரணங்களையும் கூற எம்மிடம் மூளைகளும் நிறையவே இருக்கின்றன.....நாங்கள் கேட்பது வாழ்க்கை கல்வி........ஏதேனும் வழி உண்டா அதற்கு....?//

உண்மை தான் அண்ணா! யாருமே எதையும் ஆராய்ந்து சொல்வதில்லை. ஞானிகள் போல் முனிவர்கள் போல் வாழ்க்கையை உணர்ந்தவர்கள் யாரும் இப்போது இல்லை. அதனால் தான் அறிவுரைகள் சொல்லப் படுகின்றன இல்லையென்றால் அறிவுரைகள் உணர்த்தப்படும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஒடுங்கி ஒழிவதைத் தவிர//

தயவு செஞ்சு எவ்ளோ கடன்னு சொல்லுங்க. நான் வேணா கட்டுறேன். எப்ப பாத்தாலும் ஓடி ஒளிஞ்சிகிட்டு...

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

// எமக்கு அறிவுரைகள் வேண்டாம்....அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் ...வலிக்க வலிக்க பேச வாய்களும்.....கருத்துக்களையும், புத்தக உதாரணங்களையும் கூற எம்மிடம் மூளைகளும் நிறையவே இருக்கின்றன.....நாங்கள் கேட்பது வாழ்க்கை கல்வி........ஏதேனும் வழி உண்டா அதற்கு....?//


நல்ல கேள்வி... :)

இம்சைஅரசன் பாபு.. said...

சபாஷ் நல்ல இருக்கு தேவா அண்ணா
குறிப்பா இந்த வரிகள்
//முதலில் எம் உயிர் உடலில் தங்கட்டும்.....! எம் சந்ததி தழைக்கட்டும்...குறைந்த பட்சம் வாழ வழி பிறக்கட்டும்.....ஆமாம் உயிரோடு முதலில் இருந்தால்தானே...மனிதனுக்கு கலாச்சாரமும் ,திருமணமும் இன்ன பிற....விவரிப்புகளும்//

இம்சைஅரசன் பாபு.. said...

//விரிவாக பேசுவோம் இன்னும் காத்திருங்கள்//

சீக்கிரம் ஏற்ப்பாடு பண்ணுங்கள் ஒரு LIVING TOGETHER க்கு ........சீ தூ .......போ ..இத பேசி பேசி தப்பா வாய் ல வந்துருச்சி ........GET TOGETHER க்கு எல்லோரும் விரிவாக பேசுனும் ல ........எங்க? எப்போ ?ன்னு சொல்லுங்க

இம்சைஅரசன் பாபு.. said...

மைக் 1
,மைக் 2
மைக் 3 ............எஸ் பாஸ் ..........
இந்த உளவியல் போர் ,உளவியல் போர் ன்னு சொல்லுறாரே அப்படினா என்ன ?

அருண் பிரசாத் said...

எதிரிகள் அட்டாக்கிங்...

பாட்டாலியன்ஸ் கெட் ரெடி....

குண்டு நிரப்புங்க...

சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ஜ்....

(டுமீல்... டமால்... டும்... டிஸ்யூம்.... )போர் ஆரம்பிச்சுடுங்க

அப்போ வர்ட்டா...

இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை

dheva said...

இம்சை...@ தம்பி உன் கேள்விக்கு தம்பி. சி.போ. பதில் சொல்லலாம்.....


விரிவா பேசுவோம் தம்பி...பேசி முடிக்கும்போது கேட்ட கேள்களும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளும்...ஒண்ணுமே இல்ல அதை விட நிறைய வேலைகல் இருக்குன்னு தெரிஞ்சுக்குவோம்.....!

dheva said...

ஈ...யாருட தம்பி...? அருண்...ஹா..ஹா..ஹா..!

dheva said...

எல்.கே...@ ஆமாம் தார்மீக வாழ்வாதர பிரச்சினைகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு நம்ம ஈகோவை திருப்தி படுத்திகிற மாதிரி எப்டி பாஸ் எழுதறது வாழ்றது....?

dheva said...

எஸ். கே...@ உண்மைதான் எஸ்.கே....மாற்றம் மனித மனங்களில் வர வேண்டும் ஆனால் மனித மனம் எதை அலசுகிறது எதை ஆராய்கிறது.....

Nothing neither moving ahead nor........productive things are happening.........we all addicted to focus the rubbish and filthy things......!

சே.குமார் said...

நல்லாயிருக்கு தேவாண்ணா....
உளவியல் போர் உங்களை அதிகம் படுத்திருச்சோ...?

dheva said...

குமார்...@ ஹா..ஹா..ஹா. அப்டி இல்லா மெயின் பிக்சர்குள்ள வர்றதுக்கு முன்னால இவ்ளோ ட்ரைலர் பாக்க வேண்டியது இருக்கு.....!!!!!!!

சிங்கங்களை சிங்கங்கள் என்று நம்பவைக்க இங்கே போராட வேண்டியிருக்கிறது.....!!!!!!!

Balaji saravana said...

போருக்கு நாங்க ரெடி..
வழி நடத்த நீங்க ரெடியாயிட்டீங்களா அண்ணே ;)

dheva said...

பாலாஜி சரவணா....@ தம்பி....

நமது இலக்கு நமக்கு தெரியும்தானே....எல்லோரும் ஒன்று கூடி போர் புரிய வேண்டியதுதான்.....வழி நடத்தல் எதற்கு....? இங்கே தேவை ஒரு சமுதாய கோபமும் அனல் பறக்கும் உங்கள் படைப்புகளும்தானே தம்பி.....!

Balaji saravana said...

இலக்கு தெரிந்தாலும் தலைமை இல்லாமல் அடைவது எப்படி அண்ணா?
சோர்வுறும் போது நம்பிக்கை கை கோர்ப்புகள் வேண்டுமே.. :)

ஹரிஸ் said...

போர்..போர் னு பயங்காட்டுறீங்களே..

ஹரிஸ் said...

//அன்றாடாட சராசரி மக்களுக்கு தீர்வு சொல்ல நாவுகள் இருக்கின்றனவா...? .மூளைகள் இருக்கின்றனவா..........?//

சரியான அவசியமான கேள்வி..

dheva said...

பாலாஜி சரவணா...@ சரி தலைமைன்ற வார்த்தையை தகர்த்து விடுகிறேன்..

ஆனால் நம்பிக்கையும் உற்சாகமும் நான் கொடுக்கிறேன் தம்பி....! பலியில் முதலாய் என்னைக் கொடுக்கிறேன் தம்பி.. இப்போது ஓ.கேவா...!!!!!!

ஹரிஸ் said...

//உளவியல் போரைத் தொடங்குவோம்.. ...! இந்த வலைப்பூ என்ற ஒப்பற்ற ஊடகம் மூலம்//
சொல்லீட்டீங்கள்ள.. நான் தொடங்கீட்டேன்..

dheva said...

ஹாரிஸ்....@ போர் கண்டு பயப்படுற கூட்டமா தம்பி நாம்....அல்ல அல்ல..போரில் ஜனித்த வேங்கைகள் நாம்....!

சரி விடுங்க.. ரிலாக்ஸ் ஆகிட்டு இந்த காஃபி குடிங்க... வருகைக்கு நன்றிகள் தம்பி!

dheva said...

ஹாரிஸ்....@ வரவேற்கிறேன் தம்பி.......மகிழ்ச்சியோடு.....!

சௌந்தர் said...

என்னது போர்ரா... இப்போ இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் போர் தேவை இல்லை

சௌந்தர் said...

யாராவது ஒரு புறா பிடித்து கொண்டு வாங்க... பெண் புறவா ஆண் புறவா தேவா சார் கேக்க கூடாது

dheva said...

செளந்தர்....@ உளவியல் போர்னு சொன்னத கவனிக்கலியா...


தேவா..சாரா? அது சரி................

சௌந்தர் said...

செளந்தர்....@ உளவியல் போர்னு சொன்னத கவனிக்கலியா...


தேவா..சாரா? அது சரி..............///

உளவியல் போர் தெரியும்...தெரியும்....இந்த பதிவில் நிறைய உள்குத்து இருக்கே

Kousalya said...

தேவையற்ற வாதங்களும், விதண்டாவாதங்களும், உங்களின் இந்த பதிவை படித்த பின்னாவது மாற்றி கொள்ளட்டும் தங்களின் இயல்பை....!!? எது அவசியம் என்பதை மறந்து தனக்கும் ஞானம் இருக்கிறது என்று தம்பட்டம் அடித்து கொண்டு பேசும் கூட்டங்களின் காதில் விழட்டும் உங்களின் இந்த அறைகூவல்.

இங்கே நீங்கள் பட்டியல் இட்டு இருக்கும் ஒவ்வொன்றும் கழுத்தின் அருகில் இருக்கும் கத்தியை போன்றது.....! இவையே இப்போது சீர் படுத்தவேண்டியவை, இதை கவனிப்போம் முதலில்....மற்றதை எறிவோம் பரணில்......அங்கேயே இருக்கட்டும் தேவை படும் போது எடுத்து கொள்ளலாம்.....!

தேவா உங்களின் வார்த்தைகள் நிச்சயம் பேசும் எல்லோரின் மனதிலும், என் மனதில் இப்போது பேசியதை போல....

மெதுவாய் தொடங்கி வேகமெடுக்க தொடங்கி உள்ளது ட்ரெய்லர்.....!

ப.செல்வக்குமார் said...

//வலிக்க வலிக்க பேச வாய்களும்.....கருத்துக்களையும், புத்தக உதாரணங்களையும் கூற எம்மிடம் மூளைகளும் நிறையவே இருக்கின்றன.....நாங்கள் கேட்பது வாழ்க்கை கல்வி...//

//.மனிதனுக்கு கலாச்சாரமும் ,திருமணமும் இன்ன பிற....விவரிப்புகளும்///

உங்களுடைய இந்த வரிகளை விட எனக்கு வேறு பின்னூட்டம் தோன்றவில்லை அண்ணா ..!! நம்மிடம் மூளைகள் இருக்கின்றன , அதைக்கொண்டு வீண் விவாதங்கள் மூலம் என்னிடம் இருக்கும் அறிவை வெளிப்படுத்துவதை விட நீங்கள் சொன்னது போல ஒரு மாற்றம் உருவாக்குவதே நமது தேவை ..!!

விந்தைமனிதன் said...

அன்பென்று கொட்டு முரசே!

அன்பரசன் said...

//விவாசாயத்தை நம்பி நம்பி...வானமும் பொய்க்க....வாக்களித்த படி வரத்து நீரும் வராமல் பொய்க்க.... வாடிப்போய் காலியாகும் எம் கிராமங்கள் ஒரு பக்கம்.....//

ரொம்ப சரி

விக்கி உலகம் said...

போர் - மனங்களை மாற்றாமல் விடுமா!!!!!!!!!

ஹேமா said...

போர்....மனதுக்குள் கொட்டுமுரசாகிறது !

Rathi said...

//இந்த வலைப்பூ என்ற ஒப்பற்ற ஊடகம் மூலம்....//

வலைப்பூ மூலம் சொல்லும் கருத்துகள், செய்திகள் இன்னும் நிறையப்பேரை சென்றடைய மேற்கத்திய நாடுகள் போல் கணணி என்பது வளர்ந்துவரும் நாடுகளில் (இந்தியா, இலங்கை) ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடப்பாவனைப் பொருள் போல் அதை வாங்கும் வசதியும் வரவேண்டும்.