Pages

Thursday, November 25, 2010

எளிது....!ட்ரெய்லர் VII

எங்கேயோ ஆரம்பிக்கிறோம் விசயங்களை, எதன் பொருட்டோ நடத்துகிறோம் விவாதங்களை ஆனால் அதன் அடித்தளம் என்ன என்பதை மறந்து விட்டு ஏதேதோ பேசிக் கொண்டு இருப்போம். இப்படி பல நேரங்களில் ஆகிவிடும். விவாதங்கள் என்பது புதிய விசயங்களை அறிய நாம் நடத்தும் கருத்துக்களின் போர். இங்கே கருத்துக்கள் பரிமாறிக் கொள்வதில் உச்ச பட்ச நாகரீகம் வேண்டும்.

நாகரீகம் பற்றி விவாதித்துக் கொண்டு எப்படி எல்லாம் மரியாதையாக பேச வேண்டும் என்று கருத்துப் போர் செய்து கொண்டிருந்த இருவர்..கிண்டலும் கேலியுமாய் ஒருவரை ஒருவர் நையாண்டி செய்து... தனிப்பட்ட முறையில் பேசி கேவலமான உபோயோகம் கொள்ள முடியாத வார்த்தைகளை பயன்படுத்தி சண்டையிட்டு சட்டைகளை கிழித்துக் கொண்டு ரத்தக்களறியாய் விவாதத்தை முடிவுக்கு கொண்டு வராமல்...அதை ... வேறு வகைக்கு திருப்பி விட்டுவிட்டனர்.....!

மொத்தத்தில்... அடிப்படை நோக்கம் சிதைந்து தானே போய்விட்டது?????

பேச்சில், எழுத்தில், கருத்தில், செயலில் கொஞ்சம் இல்லை அதிகமாகவே.. நாகரீகம் தேவைப்படுகிறது. நான் எப்படி வேணா பேசுவேன்...எவ்ளோ அசிங்கமா வேணுமானாலும் பேசுவேன்....என் எதுத்தாப்ல இருக்கவன் எல்லாம்..சும்மா ஜுஜுபின்னு நினைக்கிற மனோ பாவத்துக்குப் பின்னால இருக்குற அகங்காரம்...சர்வ நிச்சயமாய் அந்திமத்தில் கர்ண கொடூரமாய் அவர்களையே திருப்பி அழிக்கும்.

உன் வீட்டுக்குள்ள நீ எப்டி வேணா இருந்துக்கோங்க.. என்ன வேணா பேசிக்கோங்க...அப்போ கூட...கூட இருக்க மனுசங்களுக்கு அதுல உடன்பாடு இருக்கணும், ஆனா வெளில வந்துட்டா ஒரு காமன் கல்ச்சர் (இங்கிலிபீசுலயே சொல்றேன்....தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை.. சோ..அண்ட் சோன்னு சொல்லி விஜயகாந்த் ரேஞ்சுக்கு பாயாதீங்க..ப்ளீஸ்..மீ ஹியூமன் பீயிங்னோ...)இருக்கு...! எப்டி சிரிக்கணும்... எப்படி உட்காரணும் எப்படி உடுத்தணும் எப்படி சாப்பிடணும்.....

இப்டி...பலப்பல மேட்டர்ஸ் இருக்கு...மக்கா!!!!! தொலைபேசில பேசும் போது எப்டி பேசணும்..போன எப்டி பிடிக்கணும்...எப்போ தேங்க்ஸ் சொல்லணும்...எப்போ சாரி சொல்லணும்..எதுக்கு எவ்ளோ வாய்ஸ் ரெய்ஸ் பண்ணனும்...(இது எல்லாம் பப்ளிக்ல பப்ளிக்ஸ்...சும்மா உங்க ஆத்துக்குள்ள எப்டி வேணா இருங்க...) இப்டி எல்லாம் இருக்கு....! அட இருக்கா இல்லையாங்க....?????

வெளில வந்து நின்னு காச் மூச்சுனு நான் கத்தினா....சட்டைய தொறந்து விட்டுட்டு..நடக்குறதுக்கு பதிலா ஓடினா...எனக்கு இன்னாங்கோ பேரு?...................

யெஸ்.. யெஸ்.. யூ ஆர் கரெக்ட் யுவர் ஆனர்....! அதேதான்.... !

இது பொதுவெளில, அது போக கார்பரேட் கல்ச்சர்னு (மறுபடியும் இங்கிலிபீஸ்...தமிழ்ல வருவனாங்குதே...!!!!!! அவ்வ்வ்வ்வ்) சில மேட்டர்ஸ் இருக்கு அது.. பத்தி பேசுனா நான் மெய்ன் பிக்சர் போடவே முடியாது மக்கள்ஸ்....ட்ரெய்லர மட்டுமே சிந்துபாத் கதை மாதிரி எழுதிகிட்டே போக வேண்டியதுதான்....

இப்டி எல்லா இடத்துலயும் ஒவ்வொரு சென்ஸ் அப்ளை பண்ணனும்...அதுக்கு பேருதான்...காமன்சென்ஸ்...!(அடச்சே..நம்ம மன்மதனை குறிகிற காமன் இல்லீங்கோ..இது இங்கிலிபீசு காமன்) அந்த காமன் சென்ஸ் அவுட்டயிட்டா.....மிச்சத்த பப்ளிக் நீங்களே சொல்லிடுங்கோ...!

ஏன் பப்ளிக் பப்ளிக்னு சொல்றேன்னா...நம்ம மூஞ்சில காறித்துப்பி அசிங்க அசிங்கமா திட்டும் போது கூட .... அதைபத்தி கவலைப்படமாம மேலே சொல்லுங்கோன்னு கேட்டுட்டு.. உங்க வந்தாரை வாழ வைக்கும் கான்ஸப்ட ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணிட்டு கண்டுக்காம நிக்குறீங்களே....!!!நம்ம கல்ச்சர்...(ம்ம்கூம் பயபுள்ள கடைசி வரை தமிழ்ல சொல்லமட்டேங்குதே..) பாதகத்தை எல்லாம் கண்டுக்காம போங்கன்னு சொல்லிலீங்கோ....!!!!!! ஆரார்க்கு எப்டி பாடம் எடுக்கணுமோ அப்டி எடுக்கச் சொல்லுதுங்கோ.....

ஆமாங்க....சாத்வீகம் போதிச்சு ஆன்மீக வழி...அமைதின்னு சொன்ன அதே நம்ம கல்ச்சர்..ரத,கஜ,துரக பதாதிகள் எல்லாம் வச்சு இருந்தங்க....!!!!! இந்தோனேசியா வரைக்கும் போய் சூட் பண்ணிட்டு வந்திருக்காங்க...கங்கை கொண்டான், கடாரம் கொண்டானு பேரு எல்லாம் வாங்கி இருக்காங்க....

கண்ணகி கோவில் எப்டி சேர மகராஜா கட்டுனார்னு தெரியும்ல.....! பிச்சைகாரங்க இல்ல பாஸ் நாம எல்லாம்... நீங்க வேணும்னா.. கஜினி முகமதுவோட சொந்தகாரங்க யாராச்சும் இருந்த... கேட்டுப்ப்பாருங்களேன்...எப்டி வசதியா இருந்தோம் நாமன்னு......(அட கேட்டுதான் பாருங்களேன்...)

செம காமெடியா இருக்கு பாஸ் ராஜாங்க கதை சொல்றதுக்கே....நாம தெக்கு தெக்குனு கத்தினா எப்டி சில பேருக்கு வடக்கு வடக்குனு காதுல விழுதுன்னு தெரியலேன்னு நம்ம ஊர்ப்பக்கத்துல சொல்லுவாங்க.....

ரமண மகரிஷின்னு ஒருத்தர் இருந்தாருன்னு சொன்னா.... அவரையும் அவர்கிட்ட இருந்து கிடைக்கப் பெற்ற ஞானத்தையும்...தத்துவங்களையும் பாக்குறத விட்டுப்புட்டு...அவரின் புறத்தை பத்தி விமர்சனம் செஞ்சா எம்புட்டு ஒரு அறியாமை அது......

ஆமாம்....சரி விடுங்க..நமக்கு கெட்டதுல கூட நல்லது தெரியும்.....அதே நேரத்துல கெட்டது எப்டி நல்லா வரலாம்னு சொல்யூசனும் கொடுக்கத் தெரியும்..ஏன்னா நம்ம பார்வை அப்டி....!!!!! ஆனா எல்லோருக்கும் அப்டின்னு சொல்ல முடியாதுங்களே.. சில பேர்கள் குற்றங்களை பெரிய பூதக்கண்ணாடி வச்சு தேடிட்டே இருப்பாங்க எப்டி கொற சொல்லாலாம் எங்க குத்திகாட்டலம்..எப்டி அசிங்கப்படுத்தலாம்னு யோசிச்சு யோசிச்சு அதுல எக்ஸ்பர்ட் ஆக இருப்பாங்க...

இப்போ என்னா மேட்டர்னா எப்டி வேணா நினைக்கட்டும்..ஆனா அந்த பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர....அமைதியான உறுத்தாத சொல்யூசன் கொடுக்க முடியுமா....அவுங்களால? இந்தக் கேள்விதான் இப்போதைக்கு எனக்கு எழுகிறது...

IF WE ARE NOT PART OF THE SOLUTION THEN WE ARE THE PROBELEM!!!!!

பாரதி சொல்லியிருக்கிறார்...." படிச்சவன் சூதும் வாதும் பண்ணினா........." நான் பேலன்ஸ் லைன்ஸ் முழுமை பண்ண விரும்பல....அது நான் கற்ற நாகரீகம். என்னா நீ ட்ரெய்லர் ட்ரெய்லர்னு போட்டுகிட்டே போற எப்போ மெய்ன் பிக்சர்...?னு நம்ம பங்காளில ஒருத்தன் கேட்டுப்புட்டான்...பதில் சொல்லாம இருக்க முடியுமா.....சொல்லித்தானே ஆகணும்....

பங்காளி...ஊர்ல இருக்குற எலிய எல்லாம் பிடிக்க ஒருத்தன்...குழல் ஊதிகிட்டே....எலி எல்லாம் ஃபாலோ பண்ணி வர வச்சு....கடைசில கொண்டுபோய் தண்ணிக்குள்ள தள்ளி விடுவான்னு படிச்சு இருக்கோம்ல....

அப்டித்தான்...ட்ரெய்லர்னு....சொல்லி ஊதிகிட்டு போய்கிட்டே இருப்போம்...மொத்தமா தண்ணிக்குள்ள் தொபுக்குனு குதிக்க போறேன்னு சொல்லல...நெருப்புக்குள்ள குதிச்சுடுறேன்....பங்காளி...! அச்சச்சோ....... நீ நெருப்புக்குள்ள போனா நீயும் போய்ச் சேந்துடுவியேன்னு பதறுறியா....போவோம் பங்காளி...முடிஞ்ச வரைக்கும் ஏதோ உளறிட்டு செத்துப் போய்ட்டான் லூசுன்னு யாராச்சும் சொன்னா சொல்லிட்டுப் போறாங்க....

நாம் வாழ்ற வரைக்கும்...நமக்கும் அடுத்தவங்களுக்கும் உபோயோகமா நாகரீகமா ஒழுக்கமா வாழ்ந்த போதும்....சரிதானுங்களே....! வாழ்க்கை ரொம்ப எளிதானது நேரானது...மனுசங்க நாம காம்ளிகேட் பண்ணிக்கிறோம்....!!!!அன்பா எல்லோரையும் பாருங்க...எல்லாமே. எளிதுதான்....!!!!!

இன்னும் விரிவாக பேசுவோம்......தொப்புள் கொடி உறவுகளே....காத்திருங்கள்....!


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்டா...!


தேவா. S

19 comments:

LK said...

உண்மை தேவா. வாழ்க்கை ரொம்ப எளிதானது. நாம்தான் அதை கடினமாக்கி கொள்கிறோம். அப்புறம் அதென்னே கார்பரேட் கல்ச்சர் அதெல்லாம், ஆபிஸ்ல மட்டும்தான் மக்க உபயோகிப்போம். எங்களுக்கு எங்க சாதகமோ அங்கதான் அதெல்லாம்.

நாகராஜசோழன் MA said...

//
நாம் வாழ்ற வரைக்கும்...நமக்கும் அடுத்தவங்களுக்கும் உபோயோகமா நாகரீகமா ஒழுக்கமா வாழ்ந்த போதும்....சரிதானுங்களே....! வாழ்க்கை ரொம்ப எளிதானது நேரானது...மனுசங்க நாம காம்ளிகேட் பண்ணிக்கிறோம்....!!!!அன்பா எல்லோரையும் பாருங்க...எல்லாமே. எளிதுதான்....!!!!!//

ஆம் அண்ணா! நாம் தான் நம்ம வாழ்க்கையை காம்ளிகேட் பண்ணிக்கிறோம்.

பிரியமுடன் ரமேஷ் said...

கரெக்டுங்க தேவா.. வாழ்க்கை நம்ம தலை முடி மாதிரிதான்.. ஒழுங்கா சீவற வரைக்கும்தான் நமக்கு அழகு கொடுக்கும்.. ஒழுங்கா பராமரிக்காம விட்டோம்னா.. சிக்கு புடிச்சு அசிங்கமா போயிடும்.. அருமையான பதிவு...

Balaji saravana said...

அண்ணே அங்கங்க அம்சமா பஞ்ச் வச்சுக்கிட்டே போறிங்களே சூப்பர்.. :)

சே.குமார் said...

//நாம் வாழ்ற வரைக்கும்...நமக்கும் அடுத்தவங்களுக்கும் உபோயோகமா நாகரீகமா ஒழுக்கமா வாழ்ந்த போதும்...//

கரெக்ட்டா சொன்னீங்கண்ணா (நீங்க மட்டும்தான் பதிவு பூரா இங்கிலிபீஸ் யூஸ் (ஹையா) பண்ணுவீங்களோ...).
வாழும் காலங்கள் வரும் சந்ததிக்கு நாம் வாழ்ந்ததைச் சொல்லட்டும்...
நல்ல பகிர்வு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உண்மைதான் மாப்ஸ்...!

சௌந்தர் said...

உன் வீட்டுக்குள்ள நீ எப்டி வேணா இருந்துக்கோங்க.. என்ன வேணா பேசிக்கோங்க...அப்போ கூட கூட இருக்க மனுசங்களுக்கு அதுல உடன் பாடு இருக்கணும், ஆனா வெளில வந்துட்டா ஒரு காமன் கல்ச்சர் //////

நீங்க சொல்றது சரி தான் வீட்டுக்குள்ள நீ ......... எப்படியும் இரு ஆனா வெளிய ........இப்படி தான் வரணும் .....அதை செய்யமா நான் இப்படி தான் வருவேன் சொன்ன என்ன பண்றது பைத்திய காரன் தான் சொல்வோம்

மங்குனி அமைச்சர் said...

நாம் வாழ்ற வரைக்கும்...நமக்கும் அடுத்தவங்களுக்கும் உபோயோகமா நாகரீகமா ஒழுக்கமா வாழ்ந்த போதும்....சரிதானுங்களே....!///

அதான் தெளிவா அழகா சொல்லிட்டிங்களே ??? நைஸ்

Arun Prasath said...

நாம் வாழ்ற வரைக்கும்...நமக்கும் அடுத்தவங்களுக்கும் உபோயோகமா நாகரீகமா ஒழுக்கமா வாழ்ந்த போதும்....சரிதானுங்களே....!

சரிதானுங்க

TERROR-PANDIYAN(VAS) said...

நாம் வாழ்ற வரைக்கும்...நமக்கும் அடுத்தவங்களுக்கும் உபோயோகமா நாகரீகமா ஒழுக்கமா வாழ்ந்த போதும்....சரிதானுங்களே....!

சரிதானுங்க

Kousalya said...

இப்படிதான் வாழணும் என்று ஒரு வரைமுறையுடன் வாழ்வது ஒரு வகை...... இல்லை நான் எப்படி வேண்டுமென்றாலும் வாழ்வேன் என்பது மற்றொரு வகை..... ஆனால் இது அவர்கள் வீட்டிற்குள் இருக்கும் போது மட்டும் தான்.

குறைந்த பட்ச நாகரீகம் கூட தெரியாமல் வாழ்பவர்களை என்ன வென்று சொல்வது....??

மெயின் பிக்சர் எப்பதான் போடுவீங்க....??

Gayathri said...

trailerey nalla iruke, unga karuththukalum neenga solra vidhamum nalla irukku

எஸ்.கே said...

நாம் வாழ்ற வரைக்கும்...நமக்கும் அடுத்தவங்களுக்கும் உபோயோகமா நாகரீகமா ஒழுக்கமா வாழ்ந்த போதும்....சரிதானுங்களே....! // இதுதான் நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று!

ப.செல்வக்குமார் said...

//
இப்டி...பலப்பல மேட்டர்ஸ் இருக்கு...மக்கா!!!!! தொலைபேசில பேசும் போது எப்டி பேசணும்..போன எப்டி பிடிக்கணும்...எப்போ தேங்க்ஸ் சொல்லணும்...எப்போ சாரி சொல்லணும்..எதுக்கு எவ்ளோ வாய்ஸ் ரெய்ஸ் பண்ணனும்..//

இத கூட நான் என்னோட சிறுகதைல சொல்லிருப்பேன் ., ஹி ஹ ஹி ..

ப.செல்வக்குமார் said...

//பங்காளி...ஊர்ல இருக்குற எலிய எல்லாம் பிடிக்க ஒருத்தன்...குழல் ஊதிகிட்டே....எலி எல்லாம் ஃபாலோ பண்ணி வர வச்சு....கடைசில கொண்டுபோய் தண்ணிக்குள்ள தள்ளி விடுவான்னு படிச்சு இருக்கோம்ல../

ரிலையன்ஸ் விளம்பரத்துல ஹிரித்திக் ரோசன் பண்ணுவாரே அது மாதிரி ..!!

இம்சைஅரசன் பாபு.. said...

இன்னைக்கு டாப்பு தேவா அண்ணா......நல்லா இருக்கு .........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

present sir

ஹரிஸ் said...

சரிதான்..

Chitra said...

வாழ்க்கை ரொம்ப எளிதானது நேரானது...மனுசங்க நாம காம்ளிகேட் பண்ணிக்கிறோம்....!!!!அன்பா எல்லோரையும் பாருங்க...எல்லாமே. எளிதுதான்....!!!!!


...Very true. :-)