Skip to main content

நீ.....!















தெருவெல்லாம்
இறைந்து கிடக்கிறது
உன்னோடு சுற்றித் திரிந்த
ஞாபகங்களின் சுவடுகள்...!

காதலோடு கை சேர்த்து
சிரித்து எழுப்பிய...
ஒலிகளின் அதிர்வுகள்
கலைத்துப் போடுகின்றன
சம கால நினைவுகளை...!

காதலா? நட்பா..?
என்று தீர்மானிக்க முடியாமல்
மத்திமத்தில் கிளைத்த
உணர்வுகளின் தெளிவற்ற...
பிம்பங்களால் இதோ...
நிகழ்ந்தே விட்டது நம் பிரிவு...!

உன்னைப் பற்றிய...
நினைவுகளோடும் செரிக்க முடியா...
ஆசைகளோடும் இறுக்கத்தில்..
மூடிக் கிடக்கிறது தீர்மானித்தல்களில்...
தோற்றுப் போன மனது....!

ஒரு மழையின் ஸ்பரிசம் போல
தீண்டாமல் தீண்டிச் சென்ற
உன் இயல்புகளின் விருப்பங்கள்
ஒரு தென்றலைப் போல
வருடி மறைந்துதான் போனது...!

ஒரு கோப்பை தேநீரும்...
ஒரு மழை நேரத்து மாலையும்
என்னை சுற்றி பரவிக் கிடந்த
உன் நினைவுகளும்....
என்னிலிருந்து சிணுங்கலாய்
உதிரத் தொடங்கியிருந்த...
கவிதைகளும், சொல்லாமல்...
சொல்லிக் கொண்டிருந்தன...
உன் மீதான என் காதலை...!

என் பெயர் சொல்லி...
நீ அழைத்த தருணங்களும்...
என் முகம் பார்த்து நீ ....
மறைத்த வெட்கங்களும்....
காற்றிப் பறந்த உன் கூந்தலை..
ஒதுக்கிவிட்டு..நீ பார்த்த பார்வையும்...
குவித்துப் போட்டிருக்கின்றன்...
எனக்குள் ஏதேதோ உணர்வுகளை...!

படாமல் படும் பனியாய்
தொடாமலேயே நிறைந்திருக்கும்
உன் நினைவுகள் கொடுத்த...
வெளிச்சத்தில் துளிர்த்து நிற்கிறது
சொல்லாத காதலின் ஒரு தளிர்.....!!!

பிரிவோம் என்று தெரிந்தே...
பழகிய நாட்களின் ஓரங்களில்
ஒட்டியிருந்த காதலின்
படிமாணங்களை பகுத்தெடுத்து
வைத்திருக்கிறேன்..என் உள்ளங்கையில்
உன் நினைவுகளின் எச்சங்களோடு...!

உனை தேட எடுக்கும்
முயற்சிகளை மனதுக்குளேயே
மரித்துப் போகச் செய்து.....
இந்தக் கணம் வரை..
விளையாடிக் கொண்டிருக்கிறேன்....
நீ என் மீது வைத்திருந்த...
காதல் என்ற பெயருக்குள்
ஒளிந்திருக்கும் ஒரு நிஜக்காதலோடு....!

தேவா. S

Comments

சொல்லாத காதலின் வலி அருமை
Chitra said…
என் பெயர் சொல்லி...
நீ அழைத்த தருணங்களும்...
என் முகம் பார்த்து நீ ....
மறைத்த வெட்கங்களும்....
காற்றிப் பறந்த உன் கூந்தலை..
ஒதுக்கிவிட்டு..நீ பார்த்த பார்வையும்...
குவித்துப் போட்டிருக்கின்றன்...
எனக்குள் ஏதேதோ உணர்வுகளை...!


.... romantic!
Arun Prasath said…
//காதல் என்ற பெயருக்குள்
ஒளிந்திருக்கும் ஒரு நிஜக்காதலோடு....!//

அட!!! செம
//ஒரு கோப்பை தேநீரும்...
ஒரு மழை நேரத்து மாலையும்
என்னை சுற்றி பரவிக் கிடந்த
உன் நினைவுகளும்....
என்னிலிருந்து சிணுங்கலாய்
உதிரத் தொடங்கியிருந்த...
கவிதைகளும், சொல்லாமல்...//

இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா .., ஆனா என்ன செய்வது எனக்குத்தான் வடை போச்சே ..!!
@தேவா

கமெண்ட் போட முடியாது... எனக்கு பிடிச்ச லைன் சித்ரா மேடம் போட்டாங்க...கிர்ர்ர்ர்ர்
நானும் வந்துட்டேன்....
//என் பெயர் சொல்லி...
நீ அழைத்த தருணங்களும்...
என் முகம் பார்த்து நீ ....
மறைத்த வெட்கங்களும்....
காற்றிப் பறந்த உன் கூந்தலை..
ஒதுக்கிவிட்டு..நீ பார்த்த பார்வையும்...
குவித்துப் போட்டிருக்கின்றன்...
எனக்குள் ஏதேதோ உணர்வுகளை...!//

எனக்கும் இந்த வரிகளே மிக பிடித்திருக்கின்றன.
Repeattttttteeeeeeeee ANBARASAN..,

Nice Kavithai.
Anonymous said…
தயக்கங்களும் தவிப்புகளும் நிறைந்த காதலின் வடிவம் அழகு..
சூப்பர் அண்ணா
அழகான கவிதை!
வினோ said…
/ பிரிவோம் என்று தெரிந்தே...
பழகிய நாட்களின் ஓரங்களில்
ஒட்டியிருந்த காதலின்
படிமாணங்களை பகுத்தெடுத்து
வைத்திருக்கிறேன்..என் உள்ளங்கையில்
உன் நினைவுகளின் எச்சங்களோடு...! /

எனக்கும் இருக்கு இந்த உணர்வு அண்ணா...
dheva said…
வினோ...@ தம்பி...கேட்ச் பண்ணிக்கிட்டியா இந்த உணர்வா...சரி நாம இது பத்தி போன்ல பேசுவோம்...!!!!!!
NaSo said…
//இந்தக் கணம் வரை..
விளையாடிக் கொண்டிருக்கிறேன்....
நீ என் மீது வைத்திருந்த...
காதல் என்ற பெயருக்குள்
ஒளிந்திருக்கும் ஒரு நிஜக்காதலோடு....!//

நம்பிக்கையை உணர்த்தும் இந்த வரிகளை நான் ரொம்ப ரசித்தேன்!!
தெருவெல்லாம்
இறைந்து கிடக்கிறது
உன்னோடு சுற்றித் திரிந்த
ஞாபகங்களின் சுவடுகள்...!///

சரி சரி அது தான் காலசுவடுகள்

காதலோடு கை சேர்த்து
சிரித்து எழுப்பிய...
ஒலிகளின் அதிர்வுகள்
கலைத்துப் போடுகின்றன
சம கால நினைவுகளை...////

ஓஹ சரி சரி மீண்டும் அடுக்கி வையுங்கள்

காதலா? நட்பா..?
என்று தீர்மானிக்க முடியாமல்
மத்திமத்தில் கிளைத்த
உணர்வுகளின் தெளிவற்ற...
பிம்பங்களால் இதோ...
நிகழ்ந்தே விட்டது நம் பிரிவு...!///

ஓஹ பிரிந்து போயடாங்களா...

உன்னைப் பற்றிய...
நினைவுகளோடும் செரிக்க முடியா...
ஆசைகளோடும் இறுக்கத்தில்..
மூடிக் கிடக்கிறது தீர்மானித்தல்களில்...
தோற்றுப் போன மனது....!/////

அதுக்கு தான் நல்ல தீர்மானம் போடனும்

ஒரு மழையின் ஸ்பரிசம் போல
தீண்டாமல் தீண்டிச் சென்ற
உன் இயல்புகளின் விருப்பங்கள்
ஒரு தென்றலைப் போல
வருடி மறைந்துதான் போனது...!////

தீண்டமையே இப்படி இன்னும் தீண்டினால் அவ்ளவுதான்

ஒரு கோப்பை தேநீரும்...
ஒரு மழை நேரத்து மாலையும்
என்னை சுற்றி பரவிக் கிடந்த
உன் நினைவுகளும்....
என்னிலிருந்து சிணுங்கலாய்
உதிரத் தொடங்கியிருந்த...
கவிதைகளும், சொல்லாமல்...
சொல்லிக் கொண்டிருந்தன...
உன் மீதான என் காதலை...!////

நல்லா தெரிகிறது உங்கள் சிணுங்கள்


என் பெயர் சொல்லி...
நீ அழைத்த தருணங்களும்...
என் முகம் பார்த்து நீ ....
மறைத்த வெட்கங்களும்....
காற்றிப் பறந்த உன் கூந்தலை..
ஒதுக்கிவிட்டு..நீ பார்த்த பார்வையும்...
குவித்துப் போட்டிருக்கின்றன்...
எனக்குள் ஏதேதோ உணர்வுகளை...!////

என்ன என்ன எல்லாம் நோட் பண்ணி இருக்கார்

படாமல் படும் பனியாய்
தொடாமலேயே நிறைந்திருக்கும்
உன் நினைவுகள் கொடுத்த...
வெளிச்சத்தில் துளிர்த்து நிற்கிறது
சொல்லாத காதலின் ஒரு தளிர்.....!!!/////

இனி சூரியனே தேவை இல்லை


பிரிவோம் என்று தெரிந்தே...
பழகிய நாட்களின் ஓரங்களில்
ஒட்டியிருந்த காதலின்
படிமாணங்களை பகுத்தெடுத்து
வைத்திருக்கிறேன்..என் உள்ளங்கையில்
உன் நினைவுகளின் எச்சங்களோடு...!////

உள்ளங்ககை தாங்குதா...

உனை தேட எடுக்கும்
முயற்சிகளை மனதுக்குளேயே
மரித்துப் போகச் செய்து.....
இந்தக் கணம் வரை..
விளையாடிக் கொண்டிருக்கிறேன்....
நீ என் மீது வைத்திருந்த...
காதல் என்ற பெயருக்குள்
ஒளிந்திருக்கும் ஒரு நிஜக்காதலோடு....!//////

அப்போ தேடுறேன் தேடுறேன் சொன்னது இது தானா...?
Kousalya Raj said…
ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு அர்த்தம் வருகிறது தேவா....! இப்பதான் புரிகிறது காதல் தான் அவஸ்தை என்று பார்த்தால் காதல் கவிதை படிப்பதும் பெரிய அவஸ்தைதான் போல....!!

படிக்க படிக்க சலிப்பதில்லை காதலும், கவிதையும்....!!

சில்லுனு ஒரு காதல்......சூப்பர்...
என்னன்னு சொல்ல... நான் வந்திட்டு ஞாபகம் இருக்கட்டும்..
//படாமல் படும் பனியாய்
தொடாமலேயே நிறைந்திருக்கும்
உன் நினைவுகள் கொடுத்த...
வெளிச்சத்தில் துளிர்த்து நிற்கிறது
சொல்லாத காதலின் ஒரு தளிர்.....!!!///



காதலியின் நினைவுகளை...
கதிரவனுக்கு ஒப்பிட்டு
அந்த நினைவில் துளிர்க்கும்
உங்கள் காதல் அருமை... :-))))

செமையா இருக்கு தேவா... :-))
ஹேமா said…
அனுபவித்துக்கொண்டிருக்கும் உணர்வு அப்படியே !
Ramesh said…
அருமையா எழுதியிருக்கீங்க தேவா..
Anonymous said…
ஒரு கோப்பை தேநீரும்...
ஒரு மழை நேரத்து மாலையும்
என்னை சுற்றி பரவிக் கிடந்த
உன் நினைவுகளும்....
என்னிலிருந்து சிணுங்கலாய்
உதிரத் தொடங்கியிருந்த...
கவிதைகளும், சொல்லாமல்...
சொல்லிக் கொண்டிருந்தன...
உன் மீதான என் காதலை...!// lovely poem.. can feel the touch of true love.. by: sriviji
Unknown said…
கருத்தாழமும் நல்ல காதலும்
பொருத்தமாய் வந்துள்ள கவிதை
அருமை
தொடர வாழ்த்துக்கள்

புலவர் சா இராமாநுசம்
புலவர் குரல்

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...