Pages

Saturday, November 27, 2010

மாவீரர் நாள்...!

எமக்காக ஆதவன் ஒரு விடியலைப் பரப்புவான்....அப்போது எமக்கான கானங்களும், இசையும், பறவைகளின் சங்கீதமும் ஒலிக்கும்....எமது ஆ நிறைகள் சந்தோசத்தில் தன்னிச்சையாக பால் சொரியும்...! எம் குல பெண்டிரின் முகங்களில் பூரிக்கும் சந்தோசத்தின் வெளிச்சத்தில் வெட்கி கதிரவன் சில கணங்கள் தன் முகம் மறைப்பான்....!

தினவெடுத்த எம்மவரின் தோள்கள் பூமாலைகளை தாங்கி நிற்கும்... தமிழ் தேசமெங்கும் சுதந்திர ஈழக்காற்று சுற்றிப் பரவி தென்றலாய் நடனமாடி மலர்களில் இருந்து நறுமணத்தை காற்றில் பரப்பி எமது தமிழ் ஈழம் முழுதும் பரவவிடும்....

எம்மவர் சிந்திய இரத்தத்துளிகளும்....மண்ணில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் ஆன்மாக்களும் அன்றைய தினத்தில் சர்வ நிச்சயமாய் எமது உணர்வுகளுக்குள் உயிர்த்தெழுந்து...ஆனந்தக் கண்ணீராய்....மண்ணில் வீழ்ந்து அஞ்சலிகளை ஆத்மார்த்தமாக்கும்....

குள்ள நரிகளும் கபட நாய்களும் வெறி பிடித்த மிருகங்களும்...எமது தமிழ்தேசிய கொடியின் பட்டொளி காற்றில் உரசி தெறிக்க வைக்கும் தீப்பொறிகளின் உக்கிரம் தாங்க முடியாமல்....செத்து வீழும் காட்சிகளை எம் மழலையர் கண்டு காரணம் கேட்க எம் குலப் பெண்களும் ஆண்களும் அதன் பின்ணனியில் உள்ள துரோகக் கதைகளை...சொல்லி சொல்லி சிரிப்பர்....

எம் கனவுகள்....அழிந்துவிடவில்லை..
அது கனல் போல் கனன்று கொண்டிருக்கிறது...
வல்லூறுகள் வாழ்வது போலத் தோன்றூம்..
ஆனால் காலத்தின் கணக்குகள்...
எல்லாவற்றையும் கலைத்துப் போடும்...!

ஒரு தொன்மையான இனத்தின் வேர்கள்
அழிந்துவிட்டதாய் நினைப்பதின்
பின்ணணியில் பிழையாமல் விழித்திருக்கிறது
எம் எதிரிகளின் அறியாமை...!

காலமே...காட்சிகளை மாற்றும்...
அன்று மேல் கீழ் ஆகும்...
கீழ் மேல் ஆகும்....
ஆமாம்..மாற்றம் பிரபஞ்ச நியதியன்றோ?

வெகு தூரமில்லை உறவுகளே...! சிங்க நிகர் தலைவனின் கனவுகள் நிறைவேறும்...தமிழும் தமிழனும்...அழியும் என்று உலகம் மகிழும் தறுவாயில் எல்லாம்..எம் இனமும் எம் மொழியும் வெகுண்டு எழுந்து...உலக எண்ணங்களைத் தவிடு பொடியாக்கிவிடுவது வழமையான ஒன்று...!

ஒப்பற்ற ஒரு சீரிய தொல் இனம் நாம்....தொன்மையான செம்மொழியை கொண்டவர்கள் நாம்....!!!!!!! ஈழம் என்பது ஈழத்தில் பிறந்தவர்க்கு மட்டுமின்றி...ஒவ்வொரு தமிழனின் கனவாய்க் கொள்வோம்....!

எம் மக்களுக்காக போராடி.. எமது வாழ்வாதரங்களுக்காக மண்ணில் தலை சாய்த்த வெற்றித் திருமகன்களுக்கும்...மாவீரர்களுக்கும்...இந்த மாவீரர் தினத்தில் (27.11.2010)

எமது வீர வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறோம்....!!!!!!!

வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே!
வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே
படைகள் செல்க செல்கவே!

தேவா. S

36 comments:

விந்தைமனிதன் said...

//எமக்காக ஆதவன் ஒரு விடியலைப் பரப்புவான்....அப்போது எமக்கான கானங்களும், இசையும், பறவைகளின் சங்கீதமும் ஒலிக்கும்....எமது ஆ நிறைகள் சந்தோசத்தில் தன்னிச்சையாக பால் சொரியும்...! எம் குல பெண்டிரின் முகங்களில் பூரிக்கும் சந்தோசத்தின் வெளிச்சத்தில் வெட்கி கதிரவன் சில கணங்கள் தன் முகம் மறைப்பான்....! //

நாளை விடியும் என்கிற நம்பிக்கைதான் எம்மை நடத்திச் செல்கிறது. எமது விடியலின் பூபாளம் இசைக்கும் நேரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன கடியார முட்கள்!

மாவீரர்தின வணக்கங்கள்!

நாகராஜசோழன் MA said...

மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்!!

வெறும்பய said...

மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்!!

அன்பரசன் said...

எமது வீரவணக்கங்கள்...

Kousalya said...

//ஈழம் என்பது ஈழத்தில் பிறந்தவர்க்கு மட்டுமின்றி...ஒவ்வொரு தமிழனின் கனவாய்க் கொள்வோம்....!//

வீரமும், கோபமும் தெறிக்கும் வார்த்தைகள் உணரவைக்கின்றன தமிழனின் மாண்பை...!!
விடியும் நேரம் வெகு தூரம் இல்லை....நம்பிக்கை கொள்வோம்...

எனது வீர வணக்கங்கள் !!

polurdhayanithi said...

//காலமே...காட்சிகளை மாற்றும்...
அன்று மேல் கீழ் ஆகும்...
கீழ் மேல் ஆகும்....
ஆமாம்..மாற்றம் பிரபஞ்ச நியதியன்றோ?//தமிழீழம் என்பது வரலாற்றின் கட்டாயம் ...
ஏனெனில் அது பிச்சை கேட்கவில்லை ...
தன்னுரிமையை நாடி நிற்கிறது .
போளுர்தயாநிதி

ப.செல்வக்குமார் said...

//எம் குல பெண்டிரின் முகங்களில் பூரிக்கும் சந்தோசத்தின் வெளிச்சத்தில் வெட்கி கதிரவன் சில கணங்கள் தன் முகம் மறைப்பான்....//

நிச்சயமா நடக்கும் அண்ணா ., எனது சார்பாகவும் மாவீரர் வணக்கங்கள் ..!!

polurdhayanithi said...

veera vanakkam vera vanakkam
engal thayagam kakka vera savadaintha
maveerar galukku veera vanakkam
polurdhayanithi

எஸ்.கே said...

அவர்கள் அனைவருக்கும் வீர வணக்கங்கள்!

சௌந்தர் said...

ஒரு தொன்மையான இனத்தின் வேர்கள்
அழிந்துவிட்டதாய் நினைப்பதின்
பின்ணணியில் பிழையாமல் விழித்திருக்கிறது
எம் எதிரிகளின் அறியாமை...!////


எனது வீர வணக்கங்கள் !!

sakthi said...

எம் கனவுகள்....அழிந்துவிடவில்லை..
அது கனல் போல் கனன்று கொண்டிருக்கிறது...
வல்லூறுகள் வாழ்வது போலத் தோன்றூம்..
ஆனால் காலத்தின் கணக்குகள்...
எல்லாவற்றையும் கலைத்துப் போடும்...!


சத்தியமான வார்த்தைகள்

இம்சைஅரசன் பாபு.. said...

மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள் !!

ராஜ நடராஜன் said...

எழுத்திலாவது வீரவணக்கம் சொல்லிக்கொள்கிறேன்.

nis said...

:((((((

dheva said...

nis @ ஈழம் பற்றி பகிர உங்களிடம் எதுவும் இல்லையா...! இல்லை சோக உச்சத்தில் வார்த்தைகள் கிடைகக்வில்லையா?

அரசன் said...

நிச்சயம் இந்நிலை மாறும்..
அப்போ நம்மை வெல்ல எவனும் இருக்க கூட மாட்டான்..

வீர வணக்கம்..

ஜீவன்பென்னி said...

வரலாற்றில் எதுவுமே நிரந்தரம் இல்லை. நாளைய பொழுது நமதாகட்டும். வீர வணக்கங்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வீர வணக்கம்..

க.பாலாசி said...

தமிழன் வணங்கிட தகுதியானதொரு மற்றொரு நாள்.. எனது வணக்கங்களும்.

கே.ஆர்.பி.செந்தில் said...

தாயகத்துக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் என் வீர வணக்கம்...

வினோ said...

எனது வீர வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.

madhiyarasu said...

வீரவணக்கங்கள். ஈழம் மலர்வது உறுதி. 27.11.2011 என தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

நன்றி

பாரத்... பாரதி... said...

எமது வீர வணக்கங்கள்.

dheva said...

மதியரசு... @ நன்றிகள். மாற்றப்பட்டு விட்டது.. !

பாரத்... பாரதி... said...

எமது வீர வணக்கங்கள்.

ஜோதிஜி said...

எழுத்திலாவது வீரவணக்கம் சொல்லிக்கொள்கிறேன்.

நியோ said...

இயக்க வேறுபாடுகள் ஏதுமின்றி அனைத்து இயக்கத்தவர்களின் மாவீரர்களுக்கும் போராளிகளுக்கும் எளியோனின் வீர வணக்கங்கள்! ... கடைசி வரி முத்தாய்ப்பு!!! உறுதி கொள்கிறேன் தோழர்!

VELU.G said...

அப்படியே வழிமொழிகிறேன் தேவா

V R said...

துயுளுங்கள் எங்கள் சகோதரர்களே!
மனதுக்குள் இன்னும் இருக்கிறது விடுதலை நெருப்பு.
உங்கள் தியாகத்திற்கு வீர வணக்கங்கள்.

சே.குமார் said...

மாவீரர்தின வணக்கங்கள்!

ஹேமா said...

காலத்தையே வெல்வோம்.
காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.நம்புவோம்.
தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம் !

Anonymous said...

indha sodhaniyum vedhanaiyum nirandharam all.
enadhu veera vanakkangal

Anonymous said...

mannikkavum nirandharam alla enbadhu all endru type aagi vittadhu.

ஜெயந்தி said...

மாவீரர்தின வணக்கங்கள்!

Balaji saravana said...

மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்..

Ananthi said...

எப்போதும் உங்களுக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு,

வீர வணக்கம் சொல்வதிலும் வெளிப்பட்டு இருக்கிறது..

வெல்க நம் நாடு..!!!