எவ்வளவோ திறமைகள் தன்னிடம் இருந்தும், திடமான குடும்பப் பின்னணி இருந்தும் விளையாட்டுத்தனத்தால் சரியான சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் சிம்புவைப் பார்த்தால் பாவமாய்த்தானிருக்கிறது. தெருவில் நடந்து சென்றால் வீதிக்கு நாலு பேரின் வாயிலிருந்தாவது சிம்பு பிரயோகம் செய்த வார்த்தை வந்து வெளியே விழும்தான்,, என்னதான் மேல் தட்டு வர்க்கமென்றும், நடுத்தர வர்க்கமென்றும் எக்ஸ்ட்ரா டீசண்ட்டாய் பொதுவெளியில் வெள்ளைச் சட்டை போட்டு திரியும் மனிதர்களும் கூட கோபம் கொப்பளித்தால் உடனே உச்சரிக்க கூடிய வார்த்தைதான் என்றாலும்... ஒரு திரைப்படக் கலைஞராய் பொதுவெளியில் எல்லோரும் அறிந்தவராய் இருக்கும் சிம்பு விளையாட்டாய் பாடி வீட்டுக்குள் பத்திரமாய் வைத்திருந்த பாடலை காக்கா தூக்கிக் கொண்டு வந்து இணையத்தில் போட்டு விட்டது என்று சொல்லும் கதை கேட்பதற்கு நன்றாய்த்தானிருக்கிறது. விளையாட்டுத்தனமாய் பாடியது வீட்டுக்குள்ளேயே இருந்திருந்தால் இந்த விபரீத வினை அவருக்கு வந்திருக்கவே வந்திருக்காதுதான் என்பதோடு மட்டுமில்லாமல் அவர் வீட்டுக்குல்ளேயே அந்தப் பாடல் இருந்திருந்தால் அதைப்பற்றி பேச என்ன இருக்கிறது மக்களுக்கு...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....