Skip to main content

Posts

Showing posts from August, 2015

ப்ரியப் பெரும் பொழுது....!

எதைப் பார்க்கிறோமோ அதை எப்படி பார்த்தோமோ அப்படியே விளங்கிக் கொண்டு, அது எதுவாக இருக்கிறதோ அதாக புரிந்து கொள்ளுதல் என்பது ஒரு கலை. அபிப்பிராயங்களோடுதான் நாம் ஒவ்வொரு விசயத்தையும் அணுகுகிறோம், ஒன்றை பற்றி விமர்சிக்க அல்லது அதை பற்றி கருத்து சொல்ல நமது விருப்பு வெறுப்புகளையும், ஏமாற்றங்களையும், எதிர்ப்பார்ப்புகளையும் நம்மை அறியாமல் திணித்தே அது பற்றி ஒரு அபிப்பிராயம் கொள்கிறோம். நிஜத்தில் எது எதுவாக இருந்ததோ அல்லது இருக்கிறதோ அது பற்றிய யாதொரு அக்கறைகளுமின்றி தத்தமது மனதில் வரைந்து கொள்ளும் பிம்பங்களாகவே மிகைப்பட்டவர்களின் வாழ்க்கை இங்கே இருக்கிறது. நாம் வெளியே காண்பதும், அது பற்றிய அபிப்பிராயங்களைச் சொல்வதும், நமது சொந்த யோக்கியதையே அன்றி வேறு ஒன்றுமே அல்ல... எதை அறிந்தோமோ அது அறிந்ததன்று.... சத்தியத்திடம் போதனைகளென்றே ஒன்று இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? வெகுளியாய் பூத்துச் சிரிக்கும் பூக்களிடம் சொல்வதற்கு மலர்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லைதானே....?! மலர்தலும்...காய்ந்து சருகாகி வீழ்தலும் முழுமையில்தானே நிகழ்கிறது...? யார் எழுதி வைத்தார்கள்... இந்த வாழ்க்கைச் சமன