Pages

Monday, May 31, 2010

அறைவீடு - பதிவுத் தொடர் முடிவு!

ஒவ்வொரு பதிவிட்ட பின்பும் தோன்றும்..... அட ஜெய்லானியும் ஜெயந்தியும் நமக்கு விருது கொடுத்தார்களே (ஜெ.ஜெ), சக பதிவர்கள் எல்லாம் இதுக்கு விழாவே எடுக்குறாங்களே நாம ஒரு நன்றி கூட சொல்லவில்லையே என்று....விருது கொடுத்து ஊக்குவித்த... நல்ல இதயங்களுக்கு என் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்!

சரி....அறைவீட்டுக்குள் நுழைவோமா......

இதுவரை - http://maruthupaandi.blogspot.com/2010/05/blog-post_28.html


இனி....


தூசு வாசனையும், காற்றுபுக வசதியில்லா அந்த அறையில் நிரம்பி வழிந்த ஒரு நூற்றாண்டு வாசனையும் எனக்குள் ஒரு வித...பயம் கலந்த ஒரு எதிர்பார்ப்பை உருவாக்க இருட்டில் தட்டுத் தடுமாறி....அறையின் சுவிட்ச் போர்டை தேடி...அந்த 60 வால்ட் மஞ்சள் குண்டு பல்புக்கு உயிர் கொடுக்கிறேன்...அது திக்கி திணறி ஒரு மஞ்சள் நிறத்தை சிறிய அறை எங்கும் பரப்ப...அறையின் வலது புற மூளையில் ஒரு மண்ணால் ஆன குதிர் என்று சொல்லக்கூடிய நெல் கொட்டி வைக்கும் பாத்திரம் அதை ஒட்டி ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும் மண்பானைகள்....இடது புற மூளையில்
வரிசையாய் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட ரங்கு பெட்டிகள்....கதவு திறந்தவுடன் அதன் பின்புறத்தில் ஒரு சட்டை மாட்டும் பழைய காலத்து சட்டம்...அதன் ஓரத்தில் ஏதோ ஒன்று கம்பு போல சுற்றி வைக்கப்பட்டு இருந்தது....மெல்ல போய் அந்த துணியால் சுற்றி வைக்கப்பட்டு இருந்த அந்த பொதியை பிரித்தேன்.....அதன் உள்ளே...வேல் கம்புகள்..சுளுக்கி....பெரிய உறையிலிட்ட வாள் என்று ஆயுதங்கள் மொத்தமாய் துணியில் சுற்றப்பட்டு ஒரு ஓரத்தில்......அதற்கு எதி மூலையில் நிறுட்தி வைக்கப்படு இருந்க நெல் அளக்கும் மரக்கா!


பாதுகாப்புக்காய்....ஏராளமான இது போன்ற விசயங்கள் எல்லோரு வீட்டிலும் அந்த கால்த்தில் இருக்குமாம்.....அதன் பயன்பாடு நமக்கு குறைவு அதனால்தான் ரொம்ப காலம் முன்பே பகுதி அழித்து விட்டோம். இது கூட சுமர் ஒரு 70 வருடமாக எடுக்கப்படவில்லை பெரும்பாலும் நெடும் பயணங்களில் கள்வரிடமிருந்து தற்காத்துக் கொள்ள இவை பயன்படும் எனைறு பின்னர் என் அப்பா விளக்கம் கொடுத்தார்.

இப்போது அந்த துணி பொதியை ஓரங்கட்டிவிடுவோம்....அந்த மேலே இருக்கும் ரங்குப்பெட்டியில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம் என்று மனதிட்ட கட்டளையை ...கைகள் செயல் படுத்த தொடங்கி 5 நிமிடம் ஆகிவிட்டன. சிறிய போராட்டத்திறுகு பிறகு அந்த பூட்டு வெட்கிப்போய் வழி கொடுக்க....திறக்கப்பட்ட பெட்டியினுள்... நான் பார்த்ததை எனக்கு முன் போட்டியிட்டு பார்க்க வந்தது எனது கண்ணீர்....அப்பத்தாவின் சீலைத்துணியில் காதோலோடு முடிந்து வைக்கப்பட்ட தாத்தாவின் வைரக்கடுக்கண்...! தாத்த இறந்தபின் பல நேரங்களில் அப்பத்தா உறங்கும் போது இந்த சீலைத்துணியை தலைமாட்டில் வைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்து இருக்கிறேன் வெற்றிலைப் பொதி என்று நினைத்திருக்கிறேன்.....இப்போதுதான் தெரிகிறது.....காமம் பட்டுப் போன சுத்த காதல் அது என்று....! பெரும்பாலும் காதல் உடல் இச்சைகள் தீர்ந்த பின் தான் நெருப்பில் இட்ட தங்கமாய் ஜொலிக்கிறது.

உடம்பு முறுக்கில், உடலில் இருக்கும் சுரப்பிகளின் களியாட்டம் காதலை கைகட்டி வாய்பொத்தி ஒரு மூளையில் உட்காரவைத்து விட்டு நான் தான் காதல் என்ற வேசம் கட்டி தனது இச்சைகளை எல்லாம் தீர்த்துக் கொள்கிறது காமம். அதுவே காதல் என்பதைப் போல் எல்லொரையும் நம்ப வைக்கிறது. உடலில் வலிவு குறைந்து....உடல் ஒடுங்கும் சமயத்த்தில் தள்ளாடிப் போகிறது காமம்....அந்த நேரத்தில்தான் தன் பலம் காட்டுகிறது காதல். காமத்தை புறம் தள்ளி கணவன் மனைவியின் இருப்பில் அர்த்தம் பொதிந்து வாழ்வின் மீதிப்பகுதியில் ஆட்சி செய்து....ஆக்ரோசமாய் வாழ்கிறது காதல்....அந்த காதலின் ஆக்ரோசம் தான் தாத்தாவின் கடுக்கனை அவர் இறந்தபின்னும் தலைமாட்டில் வைத்து தனது ஆளுமையை செய்து அன்பாய் உருகியிருக்கவேண்டும். அதன் பிறகு அப்பத்தாவின் திருமண புடவை, தாத்தாவின் வேட்டி, அங்கவஸ்திரம் அவரின் மூக்கு கண்ணாடி...இப்படி பார்த்த நான் ...அந்த பாவி மக அப்பத்தா தாத்தாவின் பிஞ்ச செருப்ப ஒரு மூலைல வச்சிருந்தத பாத்து நான் விக்கித்துப் போனேன்.

இப்போது எல்லாம் நாகரீகம் என்ற பேரில் புருசனும் பொஞ்சாதியும் எப்பவும் ஒருத்தரை ஒருத்தர் உரசிகிட்டும்...டார்லிங் டார்லிங்ன்னு கொஞ்சுனாலும் அதுல எவ்வளவு எதார்த்தமான அன்பு இருக்கும்னு தெரியலங்க...! ஆனா.....அந்தக்காலத்தில் புருசன் முன்னால பொஞ்சாதி வராம இருந்தாலும் இம்புட்டு காதோலோட இருந்திருக்காங்கனா....வெளி வேசம் போடாமலேயே..உள்ளேயே நேசிச்சு நேசிச்சு......தன்னுடைய நேசிப்பை ஆறு ஏழு பிள்ளைகளா பெத்து காமிச்சு...புருசனுக்கு பணிவிடை செய்வதிலும் வயக்காட்டில் ஒத்தாச செய்வதிலும் காமிச்சு சரிக்கி சமமா ஒரு சம்சாரிய இருக்கிறா பாருங்க....அந்த காதல் என்னவிதம்னு புரியலங்க...!


அடுத்த பெட்டியில் ஒரே கடிதாசிங்க.....ரங்கூன் 1935 என்ற தேதியிட்ட ஒரு கடிதம்...அந்த காலத்தில் பெரும்பாலான் நமது மக்கள் பொருளீட்டிய ஒரு இடம்...."மகா கனம் பொருந்திய ஷிரி ராஜ ராஜஷ்ரி சிரஞ்சீவி மாப்பிள்ளைக்கு உங்களின் மாமனார் ரங்கூனில் இருந்து எழுதி கொள்வது இந்த கடிதத்தை சிவகாமி அம்மையாரிடம் படித்து காண்பிக்கவும் மேலும் இந்த கடிதாசி கண்டியில் (இலங்கை) கடை வைத்திருக்கும் வெங்கடாசலம் முதலியார் வசம் கொடுத்தனுப்புகிறேன்" என்ற ரீதியில்......போனது....! இப்படி நிறைய கடிதாசிகள் பல்வேறு வகையான வாழ்க்கை நிகழ்வுகளை சந்தோசத்தை துக்கத்தை வெளிக்காட்டியதும்....மேலும் நான் கண்ட சில அவர்களின் ஆபரணப்பொருட்களும் இன்ன பிற விசயங்களும் எனக்கு முக்கியாமாக படவில்லை......மாறாக.....

மனிதர்கள் அனைவரும் தமக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் அறியாமல் ஒளித்து வைத்துக்கொண்டு இது என் பிரைவசி என்று வாழ்கிறார்கள் ஆனால் கடைசிவரை அதைக்கட்டிக் காக்க முடியாமல் காலம் எல்லாவற்றையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துபோட்டு விடுகிறது. இதுவரை தன்னுடைய அறை என்று நம்பி கட்டிக் காத்துக் கொண்டிருந்த தாத்தாவும் இல்லை அந்த கட்டிக் காத்தலை தொடர நினைத்த அப்பத்தாவும் இல்லை ஆனால் அவர்களின் பொருட்களும் அந்த அறையும் இப்போதும் இருக்கிறது. பார்த்து பார்த்து கட்டினாராம் வீட்டை பர்மா தேக்கு இத்தனைக்கு இத்தனை அடி...ஏய் அங்க சாந்த ஒழுங்க பூசு அப்படி இப்படி என்று ஆளுமை செய்து கட்டிய வீடு இருக்கிறது ....தாத்தா இல்லை.

கோடி ஆண்டுகள் வாழ மனிதனுக்கு விருப்பம் அதன் பொருட்டுதான் இடம் வாங்கி குவித்தலும், கட்டிய வீடுகளுக்கும் பிறக்கும் பேரக்குழந்தைகளுக்கும் தன் பெயரை வைத்தலும் என்று...தன்னுடைய ஆளுமையை தான் காலம் கடந்து வாழவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறான். ஒரு நாள் எனது கடைசி அத்தை உள்ளே வந்தற்கு சத்தமிட்ட தாத்தாவும் அதை அங்கீகரித்த பாட்டியும் தங்களது உடைமைகளை எல்லாம் பொதுவில் விட்டு விட்டு போய் சேர்ந்து விட்டார்கள் அதை யார் ஆளப் போகிறார்கள் என்று கூட அவர்களுக்குத் தெரியாது.....ஆனால் வாழும் வரை அதன் மீது ஒரு ஆளுமையோடு இருந்துவிட்டார்கள்...இன்று...எல்லாம் பொய்யாய் போனது.....பொதுவில் போனது.....


இன்னும் வாசலில் குடும்பத்தார் பேசிக் சிரித்துக் கொண்டிருந்தனர்.... நான் கொல்லைக்கு வந்து தோட்டத்தில் இருந்த தாத்தா, அப்பத்தாவின் சமாதியை பார்த்துக் கொண்டிருந்தேன்....! வெளியே ஒரு அத்தை " அது நானும் எங்க வீட்டுக்காரருக்கும் சேர்ந்து எங்க விருப்பபடிதான் எங்க பெட்ரூம் கட்டினோம்...அந்த டைல்ஸ் தான் போடணும் நாங்க தேடித் தேடி........" உரக்க பேசிக் கொண்டிருந்தார்கள்......எங்கேயோ இருந்து ஒரு குயில் யாருமே கவனிக்கலயா என்ற ஆதங்கத்தில் மீண்டும் மீண்டும் கூவிக் கொண்டிருந்தது....சிலீர் காற்று என் முகம் தடவிச் செல்ல....மனதோடு சேர்ந்து கையில் கனத்தது அறைவீட்டுச் சாவி!

பளீரென்று திறந்து கிடந்தது....அறைவீடு......!
தேவா. S

15 comments:

விடுத‌லைவீரா said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

வானம்பாடிகள் said...

Very nice indeed:)

Anonymous said...

தேவா அறை வீடு படிச்ச உடன் சொல்ல முடியாது ஒரு வலி என்னுள்ளே நிரம்பியது .அருமையான பதிவு .அறை வீட்டுக்குள்ளே இருக்கற பொக்கிஷம் நீங்களாவது பாது காக்கலாம் இல்லே ?

"இப்போது எல்லாம் நாகரீகம் என்ற பேரில் புருசனும் பொஞ்சாதியும் எப்பவும் ஒருத்தரை ஒருத்தர் உரசிகிட்டும்...டார்லிங் டார்லிங்ன்னு கொஞ்சுனாலும் அதுல எவ்வளவு எதார்த்தமான அன்பு இருக்கும்னு தெரியலங்க..."

சரியா சொன்னிங்க ...எல்லோரும் வேலை பணம் பின்னாடி தான் ஓடிட்டு இருக்கா .

மனோ சாமிநாதன் said...

காலத்தையே வென்றதுதான் காதல்! தாஜ்மஹால் மட்டும்தான் காதலின் சின்னம் என்பது இல்லை! உங்கள் தாத்தா, அப்பத்தா-இவர்களது அன்பின் நினைவுச்சின்ன்னங்கள்கூட அதற்கு சமமான ஒன்றுதான்! வருடங்கள் பல மறைந்தும் இன்று அவர்கள் பேரனான நீங்கள் அவர்கள் காதலைப் புரிந்து ஆராதித்து எழுதும் இந்த பதிவு அவர்களுடைய காலத்தை வென்ற அன்பிற்கு அருமையான சமர்ப்பணம்!!

ஜீவன்பென்னி said...

என் பாட்டியின் சுருக்குப்பையும் அதில் இருந்த ஓட்டைகாலணாவும்,ஒரு பழைய பத்து ரூபாய் நோட்டும் அவர்களின் இருத்தலை இன்றும் நினைவுபடுத்துகின்றன.

soundar said...

இது நல்ல பதிவு படிக்கும் அனைவருக்கும் அவர்கள் தாத்தா பாட்டி ஞபகம் வரும்...

ஜெய்லானி said...

//பெரும்பாலும் காதல் உடல் இச்சைகள் தீர்ந்த பின் தான் நெருப்பில் இட்ட தங்கமாய் ஜொலிக்கிறது.//

உண்மையான காதலுக்கு உடல் இரண்டாம் பட்சமே. பாஸ் , காதல் வேறு காமம் வேறு ரெண்டையும் போட்டு குழப்பிக்கொள்வதால் தான் நம்மால் சரியாக புரிந்து கொள்ள முடிவதில்லை . அதுக்கு காரணம் நமது இன்றைய தமிழ் சினிமா..

இத அடுத்த வரியில அருமையா சொல்லி இருக்கீங்க !!

:-))

Kousalya said...

good one.

நேசமித்ரன் said...

நல்ல பதிவு keep Going!

ஹேமா said...

தேவா....அவர்கள் வைத்திருந்த அன்பில் ஒரு பொட்டு அளவு கூட இப்போதைய நாகரீக வாழ்வில் இல்லையென்றுதான் சொல்லவேண்டும்.எழுதிய விதம் நெகிழ்வு.

LK said...

மிக மிக அருமையான நடை. அந்தக் காலத்தில் அவர்களிடையே இருந்த அன்பு காதல் புரிதல் இன்று இருக்கும் தம்பதிகளிடையே இல்லை

vijay said...

அண்ணா கலக்கி இருக்கீங்க போங்க.....


//உடம்பு முறுக்கில், உடலில் இருக்கும் சுரப்பிகளின் களியாட்டம் காதலை கைகட்டி வாய்பொத்தி ஒரு மூளையில் உட்காரவைத்து விட்டு நான் தான் காதல் என்ற வேசம் கட்டி தனது இச்சைகளை எல்லாம் தீர்த்துக் கொள்கிறது காமம். அதுவே காதல் என்பதைப் போல் எல்லொரையும் நம்ப வைக்கிறது. உடலில் வலிவு குறைந்து....உடல் ஒடுங்கும் சமயத்த்தில் தள்ளாடிப் போகிறது காமம்....அந்த நேரத்தில்தான் தன் பலம் காட்டுகிறது காதல். காமத்தை புறம் தள்ளி கணவன் மனைவியின் இருப்பில் அர்த்தம் பொதிந்து வாழ்வின் மீதிப்பகுதியில் ஆட்சி செய்து....ஆக்ரோசமாய் வாழ்கிறது காதல்.... //


ரொம்ப அழகான வரிகள்... வாழ்த்துக்கள்

dheva said...

விடுதலை வீரா @ நன்றி

வானம்பாடிகள் @ உங்களின் முதல் பின்னூட்டத்திற்கு நன்றி... நிச்சயமாய் என்னை ஊக்கப்படுத்தியது!

சந்தியா - தொடர்சியான வருகைக்கு நன்றிகள் சகோதரி!

மனோ சாமி நாதன் @ முதல் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!

தம்பி ஜீவன்பென்னி @ நன்றிப்பா

தம்பி சவுந்தர் @ நன்றிப்பா!

ஜெய்லானி @ நன்றிகள் தோழரே

கெளசல்யா.... @ நன்றி சகோதாரி!

நேசமித்திரன்.... @ நன்றி தோழரே!

கார்த்திக் (LK) @ நன்றி பாஸ்!

தம்பி தளபதி விஜய் @ நன்றிப்பா!

புனிதா||Punitha said...

படங்கள் சூப்பரா இருக்குங்க...

malgudi said...

காதலையும் காமத்தையும் கவித்துமாக விளக்கிய விதம் அருமை.
தரமான ஆக்கம்.

காலம் தாழ்த்திய பின்னூட்டலுக்கு மன்னிக்கவும்.