Skip to main content

Posts

திருத்தப்பட்ட பிழைகள்...!

பள்ளங்களில் இறங்கியும் மேடுகளேற காத்திருந்தும், வளைவுகளின் போக்கிற்கேற்றபடி வளைந்தும் சரேலென்று விழவேண்டிய இடத்தில் அருவியாய் விழுந்தும் எல்லா வித அசெளகர்யங்களையும்  தனது செளகர்யமாக்கிக் கொண்டு நகரும் நதிதான் எத்தனை அழகானது.... வசீகரமானது..!வற்றிப் போனாலும் மீண்டும், மீண்டும் தனது தடங்களில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு கடந்த காலத் தழும்புகளை வெளிக்காட்டாமல் உற்சாகமாய் கரை புரண்டோடும் நதியின் வாழ்வோடு எத்தனையோ உயிர்களுக்கு தொடர்பு உண்டுதானே....? நதி என்று ஒன்றும் கிடையாது, நதித்தல் என்ற ஒன்று மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நதியின் பிரவாகத்தில் கணத்திற்கு கணம் அங்கே புதிய வாழ்கை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஓடிக் கொண்டே இருக்கும் நதியை இதுதான் இன்னதுதான் என்று வரையறை செய்து விட முடியாது, அது நிகழ்ந்து கொண்டிருப்பது, தேங்கிக் கிடப்பதல்ல...அது எப்போது புதியது, சற்று முன் நீங்கள் பார்த்தது அல்ல இப்போது பார்த்துக் கொண்டிருப்பது என்று ஓஷோ சொல்வதைப் போல... நதிகள் வாழ்க்கையின் மையக் கூறினை, அதன் அடித்தளத்தைத் தானே நமக்கு எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. எழுதும் போ...

தாய்மை...!

என்னுள் உயிர் துடிக்குமொரு சொப்பனம் கண்டேன்... பால் சுரக்கையில் குறுகுறுக்கும் மார்பெனதாய் இருந்து தேகம் முழுதும் பூரித்திருந்ததப்போது; யான் எனதெண்ணிக் கொள்ளும் மமதை அழிந்து இன்னொரு உயிர் சுமக்கும் பெருமிதத்தில் வீங்கிப் பெருத்திருந்ததென் வயிறப்போது... பசி இரண்டென்றெண்ணி நிறைய உண்டேன்; தாகமிரண்டென்றெண்ணி அதிகம் குடித்தேன்.... தனிமையிலிருந்த போது அதை தவமாய் கருதி கண்மணி என் உயிரோடு வயிறுதடவி பேசிச் சொக்கிக் கொண்டிருக்கையில் பாவியென் சொப்பனம் கலைந்ததென்ன...? இப்பிறவியிலொரு ஆணாய் என்னை மீண்டும் நிலைக்கும் படி ஊழ்வினையென்னைச் சபித்துச் சென்றதென்ன...? எப்பிறப்பில் இனி நான் பெண்ணாவேன்...? என்னுளிருந்தென் சிசு உதைக்கும் சுகமறிவேன்...? கனவாகிப் போன என் கனவாவது வாய்க்குமா மீண்டுமொரு முறை.. இனியென்றெண்ணி ஏக்கத்தில் ஊர்ந்து கொண்டிருக்கிறேன்... இவ்வரிகளினூடே............. தேவா சுப்பையா....

கொட்டுச் சத்தம்...!

எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும் சுப்ரமணி மாமா சிவனே என்று படுத்துக் கிடந்தார். அத்தையைப் பார்த்தால்தான் பாவமாயிருந்தது. தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தது. பவானியும், பார்கவியும் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், உறவுகள் எல்லாம் சுற்றி அமர்ந்து இருந்தது அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. மணிதான் வாசலில் நின்று கொண்டு துக்கம் விசாரிக்க வருபவர்களுக்கு கை கொடுத்துக் கொண்டிருந்தான்.... அஞ்சு பைசாவுக்கு பிரயோசனம் இல்லாதவண்டா என்று மணியைப் பற்றி மாமா என்னிடம் புலம்பிக் கொண்டே இருப்பார். பன்னென்டாவதைக் கூட ஒழுங்க முடிக்க முடியாத தண்டச் செம்மம்டா அவன்...ஆளும் கிராப்பும், சைக்கிள் கம்பெனியும்னு அவனை அப்டியாடா நான் நினைச்சுப் பாத்தேன்...ஒரு டாக்டராவோ, எஞ்சினியராவோ....மாமா பொறுமுவார்... சரி விடுங்க மாமா என்று ஆறிப்போன டீயை குடிக்கச் சொல்வேன் நான்... பார்கவியைப் பத்தி கவலை இல்லடா எனக்கு எம்.ஏ பிஎட் எப்டியும் ஏதாச்சும் ஒரு கவர்மெண்ட் ஸ்கூல்ல வேலை கிடைச்சுடும், அதுக்குதான் ஆரம்பத்துல ஸ்கூல்ல சேக்கும் போதே எம்பிசின்னு சொல்லி சேத்து வைச்சேன் உண்மையில நாமல்ல...

தேடல்...16.04.2015!

எழுதுவதற்கான எல்லா சூழல்களும் இன்று இருப்பதாகத் தோன்றியது எனக்கு. மழை வரப் போகிறது என்று  எப்படி யூகிக்க எப்படி முடியுமோ அப்படித்தான். கருத்த மேகங்கள் இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்க குளிர்ந்த காற்று வீசி சூழலை ரம்யமாக்க இதோ எந்த நொடியிலும் கனிந்து விழுந்து விடும் தூறல் மழை என்று தோன்றுமல்லவா அப்படித்தான். சட சடவென்று புறச் சூழல்கள் அறுபடத் தொடங்கிய அந்த கணத்தில் பேனாவோடும் பேப்பரோடும் பரந்து விரிந்த வான் பார்க்கும் வசதி கொண்ட இந்த சாமானிய எழுத்தாளனின் பால்கனிக்கு நீங்களும் வந்தமர்ந்து பார்த்தீர்களானால் இதைப் புரிந்து கொள்வீர்கள்... கடந்த வாரத்தில் மலைகள் சூழந்த ஒரு சாலையில் பயணித்துக் கொண்டிருந்தேன். அவை ஒன்றும் என்னிடம் பேசவில்லை. பெருந்தவத்திலிருக்கும் யோகிகளைப் போல வாழ்க்கையை பற்றிய எந்த ஒரு அக்கறையுமின்றி ஆங்காங்கே அவை படுத்துக் கொண்டிருந்தன. சாலையோரமாய் வாகனத்தை நிறுத்தி விட்டு மலைகளோடு மலைகளாய் படுத்துக் கொள்ளலாமா என்று அவ்வளவு ஆசையாயிருந்தது எனக்கு. வெயிலோ, மழையோ, குளிரோ, பெருங்காற்றோ அவை அப்படியேதான் இருக்கின்றன. எல்லாவற்றையும் அவை முழுமையாய் வாங்கிக் கொள்கின்...

சுவடுகள்...!

திசைக்கொன்றாய் என் கனவுகளைப் பிய்த்தெறிந்து விட்டேன் எழுதிக் கொண்டிருந்த கவிதையொன்றின் குரல்வளையைப் பிடித்து துடிக்க துடிக்க அதனை கொன்று முடிப்பதற்கு முன்பாக நெருப்பில் என் ஆசைகளை எரித்து விட்டேன், இனி எப்போதும் நான் முன்பு போல் இருக்கப் போவதில்லை..என்று என் கடைசி சொட்டு இரத்தம் மண்ணில் விழும் போது எனக்கு தோன்றியதுதான் எனது கடைசி ஞாபகம், முன்பொரு நாள் நான் நானாயிருந்த போது யார் யாரோ வந்தார்கள், ஏதேதோ கேட்டார்கள், பேசிச் சிரித்தார்கள், பூக்களை சிலர் பரிசளித்தார்கள், புன்னகையை சிலர் என்னிடமிருந்து பறித்துச் சென்றார்கள், கோபித்துக் கொண்டார்கள், ஏமாற்றினார்கள், ஏமாந்தேன் என்றார்கள்.... சில பிணந்தின்னி கழுகுகள் என் மீது வந்தமர்ந்தன என் கண்ணில் ஒளி இருப்பதாய் சொல்லி ஒரு கழுகு என் கண்ணைக் கொத்திய போது என் உதடுகளிலிருக்கும் புன்னகை பிடித்திருப்பதாகக்கூறி இன்னொரு கழுகு என் உதடுகளைக் கொத்தியது... அப்போதும் துடித்துக் கொண்டிருந்த என் இதயத்தில் நிரம்பிக் கிடந்த காதல் யாருக்கானதாய் இருக்கும் என்று இருவர் வாதிட்டுக் கொண்டே சராலென்று என் இதயத்தைப் பிடுங்கி நெருப்பிலிட...

நினைவுப் பறவை...!

உனக்காய்....ஏங்கிக் கொண்டிருக்கும் என் எழுத்துக்களை அடைத்து வைத்து, அடைத்து வைத்து எத்தனை நாட்களைத்தான் நான் நகர்த்த முடியும்..? தூரத்தில் பறக்கும் பருந்தின் நிழலைப் போல இப்போதும் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் உன் நினைவுகள் மட்டுமே எனக்கு சொந்தமாயிருக்கின்றன... மறந்து போன அழகிய கனவின் தெளிவில்லாத பிம்பமாய் ஏதேதோ ஞாபகங்கள் இன்னதென்று சொல்ல முடியாத உணர்வுகளென்று மீண்டும் மீண்டும் நினைவுகளில் உன்னைத் தேடிப் பிடிக்கும் முயற்சிகளில் சலிப்புற்று சரிகிறேன் நான்... தூரத்து வானில் சிறகடிக்கும் பட்டமொன்றின் வர்ணக் கலவையில் என்னை தொலைத்துக் கொண்டே உனக்கும் எனக்கும் பிடித்த பாடலொன்றை நினைவுகளால் பாடிக் கொண்டிருக்கும் போதே எல்லாம் நின்று போகிறது... நூலறந்த பட்டம் திசையறியாமல் காற்றில் எங்கோ பறந்து செல்ல... பகிர செய்திகளின்றி நீல வானத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன வெண் மேகங்கள்.... வலிக்கும் சிறகுகளை இழுத்துக் கொண்டு மெல்ல மெல்லத் தாழிறங்கிக் கொண்டிருக்கிறது என் நினைவுப் பறவை.... ..... ..... .... நான் உனக்காக கவிதை ஒன்றை எழுதத் துவங்குகிறேன்... தேவா ...

வாழ்வே தவம்....!

சுமக்க முடியாமல் புத்தகக் கட்டை சுமந்து பள்ளி சென்ற பாதைகள், வெறிச்சோடி கிடக்கும் திருவிழா சமயங்களில் வள்ளி திருமணம் நடக்கும் அந்த  மிகப்பெரிய பொட்டல், காய்ந்து தேய்ந்து கிடக்கும் கண்மாய், முதுகு பிடித்து இழுக்கும் கருவேலஞ் செடிகளுக்கு நடுவே ஊர்ந்து செல்லும் ஒற்றையடிப் பாதை, மூன்று குச்சிகளை ஊன்றி வைத்து தடித்த விறகினை மட்டையாக்கி நெருஞ்சி முள் குத்த ஓடி விளையாடிய சலசலக்கும் அந்தப் பனங்காடு, இன்னமும் உச்சி பொழுதினில் ஆங்காங்கே நிழலை விரித்து வைத்தபடி வெறுங்காலோடு சூடு பொறுக்க முடியாமல் வரும் மனிதர்களை நேசமுடன் எதிர் நோக்கும் கருவேல மரங்கள்........ பொட்டல் காட்டில் காய்ந்து போன புல்லினை இழுக்க முடியாமல் ஆங்காங்கே இழுத்து பசி தீர்த்துக் கொள்ள முயலும் ஆடு, மாடுகள், அதை இன்னமும் மேய்த்துக் கொண்டிருக்கும் அரைஞான் கொடியால் டவுசரை இழுத்துக் கட்டிக் கொண்டிருக்கும் பையன்கள், பாவாடையை வயிற்றுக்கு மேல் இழுத்து கட்டி சுருங்கிப் போன மேல் சட்டையை மறைக்க முயலும் சிறுமிகள்...., தொள தொள முண்டா பனியனோடு மடித்துக் கட்டிய லுங்கியோடு கண்கள் சுறுக்கி எதிரே வருபவர்களை வெள்ளந்தியாய் ...