Pages

Saturday, April 10, 2010

இனி ஒரு விதி செய்வோம்


சமீபத்திலொரு தோழி என்னிடம் கேட்டார் நீங்கள் ஏன் மனித வாழ்வின் அவலங்களைப் பற்றி மட்டும் எழுதுகிறீர்கள்...வாழ்வில் எவ்வளவோ நல்ல விசயங்கள் நிகழ்வுகள் இருக்கின்றனவே....ஏன் ஒரு பெஸிமிஸ்ட் (Pessimist) போல எழுதுகிறீர்கள் என்றும் கேட்டார். அவருடைய கேள்வியை மறு பரிசீலனை செய்யாமல் நானும் ஒத்துக்கொண்டேன்.

அதாவது மனித அவலஙகள் பற்றிதான் எழுதுவது என்ற எந்த ஒரு தீர்மானமும் எடுத்துக் கொண்டு எழுத உற்காருவதில்லை....அதே நேரத்தில் பதிவு எழுதவேண்டுமே என்று கடமைக்காகவும் எழுதுவதில்லை...ஏதாவது ஒரு செய்தி நம்மை பாதித்து பதறவைக்கும் நேரத்தில் நமது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிகால் தான் பதிவுகள்! காயங்களுக்குத்தானே...மருந்து தேவை......கை குலுக்க ஓராயிரம் கைகள் இருந்தாலும்...கவலையை துடைப்பது என்னவோ சில கைகள் தானே....அவர்கள் எல்லாம் நேர் நோக்காளர்கள்தானே(optimist).....?

மேலும்..... நல்ல சுகாதாரமான இடத்தை சுற்றி கோடி பேர் இருப்பார்கள் ...சாக்கடையை சுத்தம்செய்வது எல்லாரும் செய்யும் காரியமல்ல....அவலங்கள் பற்றி பேசுவது அதை மிகைப்படுத்துவதற்கு அல்ல....அவலங்களை களைவதற்காகத்தான் .....! சந்தோசங்களை மட்டும் பேசுவதும் எழுதுவதும்....உண்மையான சந்தோசமல்ல.....அது ஒரு ஓடி ஓளியும் முயற்சி....உண்மையை நேருக்கு நேர் சந்திக்க முடியாத திரணியற்ற செயல்.

ஏதாவது ஒரு சினிமா நடிகையின் அந்தரங்கத்தைப் பற்றி எழுதினால் நிறைய பேர் வந்து படிப்பார்கள்...சானியா மிர்சாவின் திருமணத்தைப் பற்றி...அக்கு வேறு ஆணிவேர் வரை அலசி ஆராய்ந்தால் கூட நிறைய பேர் படிப்பார்கள்.....ஆனால் அது ஆரோக்கியமான விசயமா? நல்ல கருத்துக்களை வித்துக்களை விதைக்கிறோமா? சிந்தித்து பாருங்கள்...அடுத்தவன் வீட்டு அந்தரங்கத்தை பற்றி விவரிக்கவும் விவாதிக்கவும் நாம் அனைவரும் நமது மூளைகளை நாய்க்குட்டி போல பழக்கி இருக்கிறோம். இந்த நிலை மாறவேண்டாமா?

கடந்த 6 ஆம் தேதி....சட்டீஸ்காரில் மாவோயிஸ்ட்களின் கண்ணிவெடி தாக்குதலில் 75 ரிசர்வ் போலிசார்கள் பரிதாம்பாமாக உயிரிழுந்திருக்கிறார்கள். நம்மில் எத்தனை பேர்கள் இந்த செய்தியை முன்னிலைப்படுத்தி தீவிரவாத்தின் கொடுமையை மக்களுக்கு போகஸ் செய்து காட்டி இருக்கிறோம். பொழுது போவதற்காய் ஏதாவது செய்கிறோம் என்றாலும் அதில் ஒரு ஆழ்ந்த சிந்தனையை பரவவிட வேண்டாமா? நமது எழுத்துக்களை படிக்கிறவர்களை உங்களின் எண்ணோட்டம் புரட்டிப்போட வேண்டாம? சமூக பிரஞ்ஞை உள்ள ஒரு கலம்...அதை கவனமாய் கையாளவேண்டாமா.....

மக்கள் படிக்கிறார்கள் விரும்புகிறார்கள் என்பதற்காஅக நமது எழுத்தின் ஓட்டத்தை மாற்றி.....கட்டுரைகளை கவர்ச்சிப்பொருளாய் ஆக்கலாமா? நடிகை நமீதாவின் ரகசிய காதல் காட்சிகள் என்று போட்டால் அதிக அளவில் அதை பார்க்க கூட்டம் வரும்...கூட்டம் வரும் என்பதால் நாம் பிரபல எழுத்தாளர் ஆகி விடுவோமா? நல்ல எழுத்தை இரண்டு பேர் படித்தால் போதும் அப்படி ஒரு கொள்கையோடு எழுத வந்துவிட்டால் நல்ல எழுத்துக்களை படிக்கும் வாசகர் கூட்டம் அதிகரிக்கும். அதை விட்டு விட்டு...பாம்பு வைத்து வித்தை காட்டும் மோடி மஸ்தான் போல கூட்டம் சேர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை....

வலைப்பக்கங்கள் இலவசமாக கூகுள் வழங்குகிறது.....வாய்ப்பு தரப்படாத.... திறமையை வெளிக்காட்டமுடியாத....அத்தனை எழுத்தாளர்கள்...கவிஞர்கள்...சமூக பிரஞ்ஞை உள்ள சக்தி மிகுந்த அனைவரும்....ஒன்று கூடி தேரிழிப்போம்.... நல்ல ஒரு சமுதாயம் பிறக்க...விதையாய் இருப்போம்.....! நம்மால் முடிந்த அளவிற்கு.....வலுவான ஒரு சமுதாயத்தின் அங்கமாவோம்!


"இனி ஒரு விதி செய்வோம் அதை எந் நாளும் காப்போம்......தனி மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகக்தினை அழித்திடுவோம்.....! "


தேவா. S7 comments:

Chitra said...

கூட்டம் வரும் என்பதால் நாம் பிரபல எழுத்தாளர் ஆகி விடுவோமா? நல்ல எழுத்தை இரண்டு பேர் படித்தால் போதும் அப்படி ஒரு கொள்கையோடு எழுத வந்துவிட்டால் நல்ல எழுத்துக்களை படிக்கும் வாசகர் கூட்டம் அதிகரிக்கும். அதை விட்டு விட்டு...பாம்பு வைத்து வித்தை காட்டும் மோடி மஸ்தான் போல கூட்டம் சேர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை....

வலைப்பக்கங்கள் இலவசமாக கூகுள் வழங்குகிறது.....வாய்ப்பு தரப்படாத.... திறமையை வெளிக்காட்டமுடியாத....அத்தனை எழுத்தாளர்கள்...கவிஞர்கள்...சமூக பிரஞ்ஞை உள்ள சக்தி மிகுந்த அனைவரும்....ஒன்று கூடி தேரிழிப்போம்.... நல்ல ஒரு சமுதாயம் பிறக்க...விதையாய் இருப்போம்.....! நம்மால் முடிந்த அளவிற்கு.....வலுவான ஒரு சமுதாயத்தின் அங்கமாவோம்!


...... பொன்னான வரிகளும் கருத்துக்களும். பாராட்டுக்கள், தேவா.
என் பதிவுகளில், எப்பொழுதும் ஒரு positive feeling இருக்கும் படியே எழுத முயற்சி செய்கிறேன். . எல்லாம், இறை அருள்.

dheva said...

மிக்க நன்றி ...சித்ரா....! உங்களின் மின்னஞ்சலை தேடினேன் கிடைக்கவில்லை....தொடர்ச்சியான உங்களின் பின்னூட்டங்கள் மேலும் மேலும் எழுத தூண்டுகிறது மீண்டும் நன்றிகள்!

ஈரோடு கதிர் said...

மிக நியாயமான கருத்துப் பகிர்வு தேவா...

//வலைப்பக்கங்கள் இலவசமாக கூகுள் வழங்குகிறது.//
இதுதான் சிலருக்கு பலம் / பலருக்கு பலவீனம்

என் மின்முகவரி : kathir7@gmail.com

ராம்மோகன் said...

///நல்ல ஒரு சமுதாயம் பிறக்க...விதையாய் இருப்போம்.....! நம்மால் முடிந்த அளவிற்கு.....வலுவான ஒரு சமுதாயத்தின் அங்கமாவோம்!/////
நல்ல நோக்கம்...இதே நோக்கத்துடன் எழுத வந்தவன் தான் நானும்...http://rammohan1985.wordpress.com/2010/03/17/quit-smoking/ என்ற பதிவில் புகைப்பழக்கத்தினை ஒழிப்பதற்கான போரில் குதித்துள்ளேன்..ஆதரவு நல்குக!

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

பொறி தெறிக்கும் வார்த்தைப் பிரயோகம்..

பின்னி எடுத்திருக்கிறீர்கள்..

//அதாவது மனித அவலஙகள் பற்றிதான் எழுதுவது என்ற எந்த ஒரு தீர்மானமும் எடுத்துக் கொண்டு எழுத உற்காருவதில்லை....அதே நேரத்தில் பதிவு எழுதவேண்டுமே என்று கடமைக்காகவும் எழுதுவதில்லை...ஏதாவது ஒரு செய்தி நம்மை பாதித்து பதறவைக்கும் நேரத்தில் நமது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிகால் தான் பதிவுகள்! காயங்களுக்குத்தானே...மருந்து தேவை......கை குலுக்க ஓராயிரம் கைகள் இருந்தாலும்...கவலையை துடைப்பது என்னவோ சில கைகள் தானே....அவர்கள் எல்லாம் நேர் நோக்காளர்கள்தானே(optimist).....?
//

என் மனதோடு ஒத்த வரிகள்..

நன்றி..

Dr. Srjith. said...

அருமை நண்பரே

மைதிலி கிருஷ்ணன் said...

உங்களை போலத்தான் தேவா நானும். வெகு சிலருக்காகவே எழுதுகிறேன். நல்லா சொல்லி இருக்கீங்க. சமயம் கிடைத்தால் என்னுடைய blog வந்து படித்து பாருஙள். பகிர்வுக்கு நன்றி.