Pages

Sunday, April 4, 2010

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு I


நிலையாமையை என்னுள் வலுவாய் பதித்து சென்றுள்ள சில விசயங்கள் என் நெஞ்சில் வடுவாய் பதிந்து விட்டன......அந்த வடுக்கள் எப்போதும் அதன் ஞாபங்களை மறக்க விடுவதே இல்லை.

இதை ஒரு பதிவாய் தமிழ்ஸில் போட்ட போது....எதிர் ஓட்டு போட்டு இதை தூக்கி விட்டார்கள்....ஏனென்று எனக்கு புரியவைல்லை....ஒவ்வொரு மனிதருக்கும் மரணம் என்பது நிகழப்போகும் ஒன்று... நாம் கண்ட சில விசயங்களை பகிர்ந்து கொண்டால்.. நிலையில்லாத இந்த உலகின் அர்த்தம் இல்ல நிகழ்வுகளை எல்லாம் பெரிதாய் எடுத்துக்கொண்டு பகைமை பாராட்டித் திரியாமல்....இருக்கும் வரை ஒரு சந்தோசமான வாழ்வு வாழ வழி வகுக்கும் என்ற உணர்வோடுதான் இந்த தொடரை ஆரம்பிக்கிறேன்....! சராசரியாய் பொழுது போக்குக்காய்...கருத்தில்லமல் எழுதக்கூடாது என்ற என் திண்ணமான கருத்தும் கூட இந்த கட்டுரைக்கு காரணம்......

இது நடந்து ஆகஸ்ட் 13 ஆம் தேதி...1999 ஆம் ஆண்டு அம்மாவின் கடைசி தம்பி...சென்னையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். அப்போது நானும் சென்னையில் தான் பணி புரிந்து வந்தேன். மாமா என்றால் எனக்கு சிறு வயது முதலே பிடிக்கும் 3 வயதில் அவரது மடியில்தான் வைத்து எனக்கு காது குத்தினார்கள். தன் அக்கா பையன் என்பதால் மட்டுமல்ல என் மீது மாமவிற்கும் எப்போதுமே அலாதி பிரியம்தான்.

அது ஒரு வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி அளவில் என் செவிக்கு செய்தி எட்டியது தனது கடையின் உள்ளே....மாமா தற்கொலை செய்து கொண்டர் என்று....

எனக்குள் ஏற்பட்ட திகைப்பையும் தாண்டி....அவர் எனக்கு சைக்கிள் சொல்லிக் கொடுத்தது, கண்மாயில் நீச்சல் சொல்லிக்கொடுத்தது....அவரோடு...சைக்கிள் முன் கம்பியில் அமர்ந்து டென்ட் கொட்டாயில் சினிமா பார்த்ததும் என்னைக் கேட்காமலேயெ..என் கண் காட்சிகளாய் விரிந்தது.....

வழக்கம் போல இல்லாத மனிதருக்காக இருக்கும் வரை அவரை நினையாத மானுட கூட்டங்கள் உறவுகள் என்ற பெயரில் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தனர்.....அவரது உடல் இராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருப்பதை அறிந்து...அனைவரும் அங்கு ஒடினோம். காவல்துறையின் எல்லா நடைமுறைகளும் முடிந்து பிரேத பரிசோதனையும் முடிந்துதான் உடலை ஒப்படைப்பார்களாம்.

கலக்கமாய் அழுது கொண்டிருந்தனர் என் மனமோ மாமா உடலை பரிசோதனைக்கு முன் பார்க்க வேண்டும்...தாய் மாமனல்லவா....தாய்க்கு சமமாய் என்னை நேசித்தவர்...எப்போதும் எனக்கு ஒரு நல்ல நண்பனாய் இருந்தவர்....சரி...இப்போது உடல் எங்கு இருக்கும் என்ற கேள்விக்கு எனக்கு கிடைத்த பதில்...மார்ச்சுவரி.....

எதைபற்றியும் சிந்திக்காமல்....என் கால்கள் மார்ச்சுவரி நோக்கி நடக்க ஆரம்பித்தன...அப்போது மணி 8:30 இரவு.......வழக்கமாக அந்த நேரத்தில் மார்சுவரிக்குள் அனுமதிக்க மாட்டரார்களாம்....ஆனால் அந்த வாட்ச்மேன் மனித சடலங்களை கண்டு கண்டு...மனித நேயத்தின் உச்சத்தில் வாழும் ஒரு ஆத்மா...என்னோடு உடன் வர.... நான் மார்ச்சுவரி உள்ளே சென்றேன்....

எல்ல உடலையும் முகத்தை பார்க்க வேண்டாம் தம்பி....உன் மாமவின் உடலில் ஏதேனும் அடயாளம் இருந்தால் சொல்..உடலை வைத்து அடையாளம் கண்டு...பின் முகத்தை காட்டுகிறேன் என்றார்....சரி....அடையாளம்......என்ன சொல்வது...திக்...திக்...திக்..என்ற அந்த நிமிடத்தில்....ஒரு ஞாபகம் சட்டென்று வந்தது......

சின்ன வயதில் என் அம்மா பென்சில் சீவிக் கொண்டு இருந்த போது மாமா அம்மாவிடம் வம்பு இழுக்க....அம்மா கையில் இருந்த பிளேடால் கோபமாய் திரும்ப...பிளேடு மாமவின் வலது புஜத்தை...பதம் பார்த்து விட்டது.....அந்த தழும்பை மாமா எப்போதும் காட்டி....பார்த்தியாடா தம்பி...உன் அம்மா செஞ்ச வேலையை.... நான் செத்தாலும் இது தான் அடையாளம் என்று விளையாட்டய் சொல்வார்......அடக்கடவுளே...இது என்ன வாழ்க்கை.....அவரை அந்த தழும்பை கொண்டே அடையாளம் காணும் சூழ் நிலையை ஏன் உருவாக்கினாய்.....வாட்ச் மேன் காதில் கலக்கமாய் சொன்னேன்......

" எங்க மாமா வலது கை புஜத்துல ஒரு பெரிய தழும்பு இருக்கும் அண்ணே....."

வாட்ச் மேன் ஒவ்வொரு உடலின் வலது கரத்தையும் பார்க்க ஆரம்பித்தார்.....

(தொடரும்.....)


தேவா. S

3 comments:

Chitra said...

படிக்கும் போதே, மனதை உலுக்குகிறதே...... :-(

நிலாமதி said...

உங்கள் அன்புக்குரியவரை பற்றி எழுதும்போது ஏன் "தூக்க" ( தமிளிஸ்)வேண்டும்..............இதனால் உங்கள் மனப்பாரம் குறையும் என்றால் தொடர்ந்து எழுதுங்கள்.இனிமை மட்டும் வாழ்வல்ல சோகமும் தான் வாழ்வு..........சமனாக் எடை போட்டு வாழ்பவன் தான் மனிதன்.

rockzsrajesh said...

// தாய் மாமனல்லவா....தாய்க்கு சமமாய் என்னை நேசித்தவர்...//

உண்மை தாய் மாமன்கள் அப்படியே ....


rockzs...

www.rockzsrajesh.blogspot.com