Pages

Monday, May 10, 2010

கடவுள் ஏன் இருக்க கூடாது?


வாழ்வின் எல்லா விசயங்களும் ஏதோ ஒரு இலக்கு நோக்கிப் பயணிப்பதை நாம் அனைவரும் உணர்ந்திருந்தாலும் சுழற்சியின் வேகத்தில் ஓடி கொண்டிருக்கும் மனதுக்கு நின்று நிதானிக்க மிகைப்பட்ட நேரங்களில் தெரிவதில்லை. ஏதோ ஒரு இறப்பு, ஒரு தோல்வி, அல்லது இழப்பு என்று மனிதனுக்கு வரும் கணங்களில் மட்டும் இந்த மனசுழற்சி மெதுவாய் நின்று ....என்ன இது வாழ்க்கை என்ற எண்ணமும் ஏன் இப்படி எல்லாம் நகர வேண்டும்? மேலும் எதை நோக்கி நகர்கிறோம் என்ற கேள்வியும் நெஞ்சை கவ்விப்பிடிக்கின்றன.

மீண்டும் ஏதேனும் ஒரு மாய நிகழ்வின் மூலம் வெளியே வந்தவுடன் இந்தக் கேள்விகள் அறுபட்டுப் போய் வழக்கமான ஓட்டத்தில் ஓடிக் கொன்டிருகிறோம். இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் ஆயிரம் முறை நிகழ்ந்தாலும்...எதை நோக்கிப் போகிறோம் என்ற கேள்வி மறந்து மட்டும் போகிறது....ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் வெளியே ஓராயிரம் இரைச்சல்கள் இருந்தாலும் ஆழ்மனதில் எதை நோக்கிப் போகிறோம் என்றும் ஏன் போகிறோம் என்ற கேள்வி கரைதொடும் அலைகள் போல மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டுதானிருக்கிறது.

கடவுள் என்ற விசயத்தைப் பொறுத்த வரைக்கும் இன்று வரை மனிதர்கள் ஒரு குழப்பத்தில் தானிருக்கிறார்கள், ஒரு சாராருக்கு கடவுள் நம்மைப் போல இருக்கவேண்டும், ஒரு சிலருக்கு கடவுள் நிறைய பேர், ஒரு சாராருக்கு கடவுள் உருவமில்லாதவர் ஆனால் வேறு உருவமானவர்... ஒரு சிலருக்கு வழிப்பாடுகளே கடவுள் மொத்தத்தில் அவர் அவர் மனதை எது திருப்தி படுத்துமோ அது அவருக்கு கடவுள் ஆனால் ஒரு இடத்தில் எல்லோரும் ஒத்துப் போவர்கள் அது கடவுள் பிரமாண்டமானவர்....அதை மட்டும் அனைவரும் ஒத்துக் கொள்வார்கள்.

இந்த குழப்பம்தான் நாத்திகவாதம் பேசுபவர்களின் மிகப் பெரிய + பாயிண்ட் என்று கூட சொல்லலாம். மதம்தான் கடவுள் பற்றியும் பேசுகிறது அதே மதம் தான் சட்டதிட்டங்கள் இட்டு மனிதன் தன் மதத்தை விட்டு வெளியே செல்லாத வன்ணம் மூட நம்பிக்கைகளையும் சாதிகளையும் தீண்டாமையும் போதிக்கிறது அதற்கு விளக்கங்கள் கூட கொடுக்கிறது. புராணங்கள் என்ற நீதிக் கதைகளை எல்லாம் உண்மையாய் நடந்த விசயம் என்று யார் நம்புகிறார்களோ இல்லையோ அது கடவுள் மறுப்பாளர்களுக்கு ஒர் வசதியான ஆயுதமாகக் கூட போய் விட்டது.


காஞ்சி சங்காராச்சாரியாரையும், கல்கியும், நித்யானந்தனும் ஆன்மீகப்பாதையில் சென்று வழுக்கி விழுந்து கடவுளால் பழிவாங்கப்பட்டவர்கள்.....ஆமாம் அப்படித்தான் எடுத்துக் கொள்ளவ் வேண்டும். விளக்க முடியாத விசயத்தை இவர்கள் வியாபாரம் ஆக்கியதுதானே இவர்களின் வழுக்கல்கள், முற்றும் துறந்தவனுக்கு எதுக்கு கோடிகளும் புகழும் ! காணாததை கண்டவர்கள் .....கண்டதை சொல்ல முடியாது..... ஒழுக்க நெறிகளில் வாழ்ந்து காட்டி தன்னின் வாழ்க்கையை அடுத்தவருக்கு படிப்பினையாய் ஆக்குவதை விட்டு விட்டு இவர் தம்மைக் கடவுளர் என்று எண்ணி மாயையில் விழுந்ததுதான் வழுக்கல்.


பதஞ்சலிதான் யோக சூத்திரத்தை உருவாக்கியவர்... அதை கற்றறிந்த ஆன்மீக முனி என்றால் ஏன் காசுவாங்க வேண்டும்....சிவசூத்திரம் உருவாக்கியவர் யார் என்று நமக்கு சரியாகத்தெரியாது ஆனால் அதை படித்து விட்டு பயிற்றுவிக்க லட்சங்களில் கட்டணம்....பயிற்சியில் தவறு இல்லை...அதை பயிற்றுவித்தலை வியாபாரமாக்கியது தான் வழுக்கல். தந்திரா என்ற காமம் சார்ந்த தியானம் இல்லறத்தானுக்கு கொடுக்கப்பட்ட ஒரு வழிமுறை,முறைப்படி ஒரு பெண்ணை மணம் புரிந்து ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் போது உபோயோகம் செய்ய வேண்டிய ஒரு சாதனை முறை...! காம உணர்வுகளே எனக்குள் எழவில்லை நான் பிரம்மச்சாரி என்று சொல்லி விட்டு பின் ஆராய்ச்சி செய்தேன் என்று சொல்வது மிகப்பெரிய பித்தலாட்டம்...! உங்களை யாரேனும் திருமணம் செய்யக்கூடாது என்று சொன்னார்களா? சந்தோசமாய் திருமணம் செய்து கொண்டு ஆராய்ச்சியை அணு அணுவாய் செய்திருக்கலாமே...!


ஆன்மீகப்பாதையில் ஓராயிரம் வழுக்கல்கள் கடவுளை கற்பிக்கும் முறையிலும் மனிதர்களுக்கு ஓராயிரம் குழப்பங்கள்...இவை எல்லாம் சாதகமாய் போய்விட்டன கடவுள் மறுப்பாளர்களுக்கு! இதனாலேயெ கடவுள் இல்லை என்று ஓங்கி ஓங்கி கத்துகிறார்கள். நம்மைச் சுற்றி கோடானு கோடி விசயங்கள் நடக்கின்றன..ஆராய்ந்து அடைந்து விட முடியாதவாறு பிரபஞ்சம் இருக்கிறது... நாம் எல்லோரும் கூட பிறக்கிறோம், சிரிக்கிறோம், அழுகிறோம் ...இறக்கிறோம்....ஏதோ ஒன்று இருக்கிறது .... அதனால்தான் எல்லாம் நடக்கிறது. அறிவியல் எப்போதுமே...எப்படி நிகழ்கிறது என்று மட்டுமே விளக்கமுடியும் ஏன் நிகழ்கிறது என்று விளக்க முடியாது. இப்படி இருக்கையில் ஏதோ இருக்கிறது என்ற நம்பிக்கைகையில் கடவுளைப்பற்றியும் மதங்களைப்பற்றியும் ஆராயாமல் அல்லது மறுக்காமல் ஒருவர் மேல் அன்பு வைத்து உதவி செய்து ஒரு நிறைவன வாழ்வாய்...வாழ்ந்து..பழுத்து விழும் பழம் போல முழுதாய்....வாழ்வை நிறைவு செய்வோம்.


குழப்பங்களுக்க்குள் சிக்காமல்....கடவுள் இல்லை என்றும் மறுக்காமல்... கடவுள் ஏன் இருக்க கூடது? என்ற கேள்வியோடு வாழ்வைத் தொடர்ந்தால் அதுவே உண்மையான ஆன்மீகம் இல்லை இல்லை அதுவே உண்மையான.....இருத்தல்!

தேவா. S

67 comments:

சிறுகுடி ராம் said...

///மீண்டும் ஏதேனும் ஒரு மாய நிகழ்வின் மூலம் வெளியே வந்தவுடன் இந்தக் கேள்விகள் அறுபட்டுப் போய் வழக்கமான ஓட்டத்தில் ஓடிக் கொன்டிருகிறோம். இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் ஆயிரம் முறை நிகழ்ந்தாலும்...எதை நோக்கிப் போகிறோம் என்ற கேள்வி மறந்து மட்டும் போகிறது....///

நிதர்சனமான உண்மை தேவா... மிகச்சரியாக கூறி இருக்கிறாய்! வாழ்த்துக்களடா...!

VELU.G said...

அற்புதமான கருத்துக்கள் நண்பரே

நான் கூட என் நண்பனிடம் இப்படி கேட்டேன், எத்தனை மகா முனிவர்கள்,ஞானிகள் வந்தும் கடவுளைப் பற்றி தெளிவாக யாரும் சொல்லவில்லையே என்று. அதற்கு அவன் சொன்னான் கடவுளை தெளிவாக அறிந்து விட்டால் அது கடவுள் இல்லை என்றான் இது சரியா?

தமிழ்போராளி said...

ஒவ்வொரு முறையும் சாமியார்கள் பெரியார் தொண்டர்களின் வேலையை குறைக்கிறார்கள் அல்லது பெரியார் தொண்டர்களின் பேச்சுகளுக்கு ஆதாரமாக விளங்குகிறார்கள்.

பத்து மாநாடுகள், 1000 தெருக் கூட்டங்கள் நடத்தி அம்பலப்படுத்த வேண்டிய செய்தியை, தங்களின் கட்டுப்படுத்த முடியாத அல்லது கட்டுக் கடங்காத லீலைகளின் மூலம் அவர்களே அம்பலமாகிறார்கள்.

கடவுள் இருக்கிறார் எல்லா இடங்களிலும் இருக்கிறார்.மனிதனைவிட உயர்ந்தவன். அதே மனிதன் கடவுளின் சிலையையும்,உண்டியலையும் திருடி செல்கிறான். அந்த கடவுளால் தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. பின்பு எப்படி நண்பரே மக்களை காப்பாற்ற முடியும்.கடவுளின் பெயரால் காமலீலைகள் அரங்கேறிவரும் செய்தி தினம் தினம் செய்திதாள்களின் வந்து கொண்டு இருக்கு.தாங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கடவுள் இல்லை என்பதால் தான் அவர்கள் எல்லாரும் தைரியமாக தவறு செய்கிறார்கள். உங்கள் கடவுளால் அவர்களை என்ன செய்ய முடிந்தது???‘தர்மம் பண்ண புண்ணியம்’ என்கிற நம்பிகையையும் உடைத்து, பக்தர்களிடம் இருக்கும் பத்து ரூபாவைக்கூட நன்கொடை, செல்போன் டோக்கன், புத்தக விற்பனை என்று புடுங்கிக் கொண்டு, உள்ளே எளிய மக்களான பிச்சைக்காரர்களை கூட அனுமதிக்காமல், தங்கக் கோயில் கட்டி ‘ரிசார்ட்’ டைப்போல் கோயில்களை, மடங்களை நிர்வகிக்கிறார்கள்.

இப்படி வெள்ளைக்காரனையே ஏமாற்றி சம்பாதித்த சாமியார்களும் இருக்கிறார்கள். இதில் பார்ப்பான் பார்ப்பனரல்லாதவன் என்ற பேதமில்லாமல் ஒற்றுமையாய் கொள்ளை அடிக்கிறார்கள்.

அப்படி கொள்ளையடித்து மாட்டியிருக்கிறான் ‘கல்கி பகவான்’ என்ற ஒரு ஹைடெக் சாமியார்.

எது எப்படியோ? தொடர்ந்து இந்து மதத்தை அம்பலப்படுத்தும் பிரேமானந்தா, ஜெயெந்திரன், தேவநாத குருக்கள், நிந்தியானந்தம், கல்கி போன்றவர்களுக்கு பெரியார் தொண்டன் என்கிற முறையில், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘மாட்றவரைக்கும் சாமியார், மாட்டிக்கிட்ட போலிச் சாமியார்’ என்கிற முறையில் தங்களின் பக்தியை சாமியார்களின காலடியில் தேடிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்காக…… என்ன சொல்றது?

நீங்க நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்கிற சாமியாரின் லீலைகள், மோசடிகள் வெளி உலகத்திற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள். ஏன் என்றால், மோசடிகளும், லீலைகளும் செய்யாத சாமியார் எவனும் கிடையாது...

கோவி.கண்ணன் said...

தேவா,

சீராக நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
மரண பயம் அற்ற பிற உயிரினங்கள் எதற்குமே கடவுள் நம்பிக்கை இருப்பது போல் தெரியவில்லை, 'எதிர்காலம்' பற்றிய கற்பனையில் பயணப்படும் மனிதனுக்கு கடவுள் தேவைப்படுவதில் வியப்பு இல்லை.

க.பாலாசி said...

நல்ல கட்டுரைங்க.... இதுல நான் கருத்துச்சொல்ல ஒண்ணுமில்ல.. நீங்க சொன்ன பலவற்றோடு ஒத்துப்போகிறேன். கடவுள் ஏன் இருக்கக்கூடாது என்ற கேள்வியையே ஒதுக்கிவிட்டு கடவுளோடு பயணிக்கலாம் என்ற கருத்து என்னுடையது....

தமிழ் மீரான் said...

அருமையான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்.!
பகுத்தறிவாளிகள் என்று தங்களைப் பீற்றிக் கொள்ளும் நாத்திகர்களுக்கு ஒவ்வொரு வரியிலும் சாட்டையடி கொடுத்துள்ளீர்கள்.

அறிவு வளர வளர கடவுள் பெயரால் நடக்கும் மூடத்தனங்கள்தான் களையப்பட வேண்டுமே தவிற கடவுளை அல்ல.
ஐம்புலன்களால் அறிய முடியாத கடவுளை ஆறாம் அறிவால் அறிபவர்கள்தான் உண்மையிலேயே பகுத்தறிவாளிகள்.!

தமிழ்போராளி said...

அன்பு நன்பர் தமிழ்மீரான் அவர்களுக்கு... எனது கருத்தை பதிவு செய்து இருக்கிறேன். அதற்கு தங்களால் முடிந்தால் பதில் அளிக்குமாறு வேண்டுகிறேன்...
சாட்டையடி வாங்கி கொண்டிருப்பது சாமிகளும் சாமியார்களும் தான் என்பதை தாங்கள் அறியவில்லையா???

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//முற்றும் துறந்தவனுக்கு எதுக்கு கோடிகளும் புகழும் ! காணாததை கண்டவர்கள் .....கண்டதை சொல்ல முடியாது..... ஒழுக்க நெறிகளில் வாழ்ந்து காட்டி தன்னின் வாழ்க்கையை அடுத்தவருக்கு படிப்பினையாய் ஆக்குவதை விட்டு விட்டு இவர் தம்மைக் கடவுளர் என்று எண்ணி மாயையில் விழுந்ததுதான் வழுக்கல்.//
//ஏதோ இருக்கிறது என்ற நம்பிக்கைகையில் கடவுளைப்பற்றியும் மதங்களைப்பற்றியும் ஆராயாமல் அல்லது மறுக்காமல் ஒருவர் மேல் அன்பு வைத்து உதவி செய்து ஒரு நிறைவன வாழ்வாய்...வாழ்ந்து..பழுத்து விழும் பழம் போல முழுதாய்....வாழ்வை நிறைவு செய்வோம்//

ரொம்ப அருமையான பதிவு..

சாமி பெயரை சொல்லி.. பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருப்பதை விட்டு விட்டு....

ஹ்ம்ம் ஹ்ம்ம்.. என்னத்த சொல்றது..

என்னைப் பொறுத்த வரையில் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது, கூடுமானவரை.. அடுத்தவர் மனம் நோகாமல், முடிந்த நல்லதை செய்து வாழணும்... அவ்ளோ தான்..

மேலும் தொடர வாழ்த்துக்கள்.. தேவா..!! :)

Chitra said...

ஆன்மீகப்பாதையில் ஓராயிரம் வழுக்கல்கள் கடவுளை கற்பிக்கும் முறையிலும் மனிதர்களுக்கு ஓராயிரம் குழப்பங்கள்...இவை எல்லாம் சாதகமாய் போய்விட்டன கடவுள் மறுப்பாளர்களுக்கு! இதனாலேயெ கடவுள் இல்லை என்று ஓங்கி ஓங்கி கத்துகிறார்கள். நம்மைச் சுற்றி கோடானு கோடி விசயங்கள் நடக்கின்றன..ஆராய்ந்து அடைந்து விட முடியாதவாறு பிரபஞ்சம் இருக்கிறது... நாம் எல்லோரும் கூட பிறக்கிறோம், சிரிக்கிறோம், அழுகிறோம் ...இறக்கிறோம்....ஏதோ ஒன்று இருக்கிறது .... அதனால்தான் எல்லாம் நடக்கிறது. அறிவியல் எப்போதுமே...எப்படி நிகழ்கிறது என்று மட்டுமே விளக்கமுடியும் ஏன் நிகழ்கிறது என்று விளக்க முடியாது. இப்படி இருக்கையில் ஏதோ இருக்கிறது என்ற நம்பிக்கைகையில் கடவுளைப்பற்றியும் மதங்களைப்பற்றியும் ஆராயாமல் அல்லது மறுக்காமல் ஒருவர் மேல் அன்பு வைத்து உதவி செய்து ஒரு நிறைவன வாழ்வாய்...வாழ்ந்து..பழுத்து விழும் பழம் போல முழுதாய்....வாழ்வை நிறைவு செய்வோம்......தேவா, எவ்வளவு அருமையாக கருத்துக்களை தொகுத்து தந்து இருக்கீங்க. அசத்தல்! கடவுளை நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் - ஈகோ வேறு சேர்ந்து விட்டால் (for both groups) - இன்னும் விவாதங்களில், குழப்பங்கள் மிஞ்சி நிற்கின்றன.

தமிழ்போராளி said...

அன்பான தோழிக்கு..
நான் ஒரு கருத்தை இதற்கு முன் பதிவு செய்து இருக்கிறேன். அதற்கு யாருமே விளக்கம் தரவில்லை. மாறாக உங்கள் சுய கருத்தை தெரிவிக்கிறீர்கள். அப்போ சாமியார்கள் எல்லாம் செய்தது சரி என்று நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அது தவறு என்று நாத்திகர்ளாகிய நாங்கள் மட்டும்தான் சொல்கிறோம். குடும்ப பெண்களை கோவில் கருவறைக்குள் கொண்டு போய் காமலீலை நடத்தியதை யார் தட்டி கேட்டீர்கள்.அது சரியா என்கிறதா உங்கள் ஆன்மீகம்.. ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது கலச்சாரம்.ஆனால் பக்தியின் பெயரில் பெண்களும் ஆண்களுக்கும் அடிக்கும் கூத்தை தோழியர் செய்தி தாள்களில் படித்ததில்லையா? அல்லது தொலைக்காட்சியில் பார்க்கவில்லையா? அருமை தோழர்களே பகுத்தறிவு கொண்டு சிந்தித்து பாருங்கள். கடவுள் என்ற ஒருவன் இருந்தால் இப்படி அவர்கள் தவறு செய்வார்களா?? இதற்கு மட்டும் யாராவது பதில் சொல்வீர்களா???

கனவில் அவள் வந்தாள்
கனவிலும்
தூங்கிக் கொண்டிருந்த
என்னைத் தட்டியெழுப்பி
எனக்கொரு
பிரச்சினை என்றாள்.
.
நான்கு கைகளோடு நின்ற
அவளைக் கண்டு மிரண்டு,
யார் நீங்கள்? என்றேன்.
என் பெயர் காமாட்சி
ஊர் காஞ்சிபுரம் என்றாள்.
.
அய்யோ கடவுளா!
கடவுளுக்கே பிரச்சினையா?
ஆச்சரியத்தோடு
கணவனாலா என்றேன்.

கணவனால்
பிரச்சினை இல்லை
பிரச்சினைகளைப்
புரிந்து கொள்ளாமல்
கல்போல் நிற்பவன்
கணவனா என்றாள்.
.

புரியவில்லையே என்றேன்.

தினம் தினம்
நான் அவமானத்தால்
செத்துப் பிழைக்கிறேன்
என் பெண்மை
கேவலப்படுத்தப்படுகிறது
என்று உடைந்தாள்.

நான் பதட்டமாகிப் போனேன்
அய்யோ உங்களையா?
யார் அவன்? என்றேன்.

கோயில் குருக்கள் என்றாள்.

குருக்களா!
என்ன செய்தார் அவர்?
அதிர்ச்சியாகக் கேட்டேன்.
.
தினம் தினம்
கருவறையின் கதவுகளை
உட்பக்கமாக சாத்திக்கொண்டு
என்னை நிர்வாணப்படுத்தி அபிஷேகம்…
என்று சொல்லிக்
கொண்டிருக்கும்போதே
அவமானத்தால் கதறி விட்டாள்.
.
பின் நிதானித்து
குருக்கள் வாயில்
மந்திரம் இருக்கலாம்
மரியாதை இருக்கலாம்
ஆனால்
இதை
பெண்ணின் மனநிலையில்
புரிந்து கொள்
அவமானம் புரியும் என்றாள்.
.
சரிதான், ஆனால்
இதற்கு என்ன செய்ய முடியும்
என்றேன்-மிகுந்த வருத்தத்தோடு.

ச்சீ… இப்படிக் கேட்க
உனக்கு வெட்கமாக இல்லை?

உக்கிரமாகிப் போனாள் காமாட்சி

கோபத்தோட தொடர்ந்தாள்
எல்லாத் துறைகளிலும்
பெண்களுக்கு உரிமையும்
ஒதுக்கீடும் வேண்டும் என்று
கேட்கிறீர்களே
கோயில் கருவறைக்குள்
குருக்களாக
அர்ச்சகர்களாக
பெண்களை அனுமதித்தால்
உங்கள் புனிதம் என்ன
நாறி விடுமோ? என்று
காறித் துப்புவது போல் கேட்டு
நிலம் நடுங்க
சலங்கை உடைய
தீயைப் போல் போனாள்
காஞ்சி காமாட்சி..

தமிழ் மீரான் said...

அன்பிற்கினிய நண்பர் விடுதலை வீரா அவர்களுக்கு,
சாமிகளும் சாமியார்களும் சாட்டையடி வாங்கிக் கொண்டிருப்பதை நாம் அறியாமலில்லை. வாங்க வேண்டியவர்கள் வாங்கியே தீர வேண்டும். ஆனால் இது போன்ற போலிகளும் மூடத்தனங்களும் பணவெறியர்களும், சில கடவுள் மறுப்புக் கொள்யுடைவர்களிடத்தில் கூட இருப்பதை மறுக்க முடியாது.
இவைகளை மட்டுமே பிடித்துக் கொண்டு கடவுளை மறுப்பது ஏற்புடையதல்ல என்பதைத்தான் நண்பர் தேவா இந்தப் பதிவில் விளக்கியுள்ளார். நானும் அதை ஆமோதித்து கருத்து எழுதினேன். இதில் ஏதேனும் தங்களைப் புண்படுத்தியிருநதால் அதற்காக வருந்துகிறேன்.

தமிழ்போராளி said...

அன்புள்ள தமிழ்மீரான் அவர்களுக்கு....
காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனுக்கு நாத்திகனாகியா நான் விழா எடுக்கலாமா என்று யோசித்து வருகிறேன். காராணம் தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் செல்ல மறுக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தி பெற்றுக்கொடுத்தார் தந்தை பெரியார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகனும் என்ற போராட்டத்தை அறிவித்தார். பல போராட்டங்கள் நடந்தேறின.கடந்த ஆண்டு தி.மு.க அரசு அதனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தீர்மானம் கொண்டுவந்து பயிற்சியும் கொடுத்தது. ஆனால் பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்கள்...
அவர்கள் சொல்லிய குற்றச்சாட்டு என்ன தெரியுமா? பார்ப்பனர்களை தவிர மற்ற சாதியினர் கருவறைக்குள் வந்தால் தீட்டாகிவிடும். சாமி குத்தமாகிவிடும் என்று வாதிட்டனர்...
இது அனைத்தும் பொய் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் அதை நிருபித்து காட்டியவர் அர்ச்சகர் தேவந்தான்..
கோவில் கருவறைக்குள்ளே பெண்களை கொண்டு போய் காமலீலை நடத்தி வந்தானே!!!
அப்போது தீட்டாகவில்லையா? நன்றாக சிந்தித்து பாருங்கள் தோழர்களே...
இதற்கு மேலும் தொடர விரும்பவில்லை..
எனது கருத்தை பதிவு செய்ய அனுமதித்த நண்பர் தேவாவுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்....
நண்பர்களே நாம் கருத்துக்களால் மட்டுமே விவாதித்து கொள்வோம். மற்றபடி நீங்களும் நானும் தமிழ் நண்பர்கள். நன்றி

V.S.SUNIL KUMAR PILLAI said...

குழப்பங்களுக்க்குள் சிக்காமல்....கடவுள் இல்லை என்றும் மறுக்காமல்... கடவுள் ஏன் இருக்க கூடது? என்ற கேள்வியோடு வாழ்வைத் தொடர்ந்தால் அதுவே உண்மையான ஆன்மீகம் இல்லை இல்லை அதுவே உண்மையான.....இருத்தல்!

நல்லா விஷயம். நமக்கெல்லாம் அப்பால் ஒரு சக்தி இருக்கிறது அதை தான் நாம் கடவுள் என்கிறோம்.

நல்லடியார் said...

கடவுளுக்கு மனிதத்தன்மைகளைக் கொடுத்ததால் வந்த வினைதான் பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை! தோழர் விடுதலைவீரர் போன்றவர்களுக்கு இவர்களே வாய்ப்புகளை உருவாக்குகின்றனர். தனி மனித தவறுகளை முன்னிறுத்தி கடவுளை குற்றம் சொன்னால் கடவுள் நம்பிக்கையற்றவர்களின் தவறுகளுக்கு யாரை பொறுப்பாக்குவது?

கடவுள் என்று ஒரு சக்தி இருப்பின் ஏன் அநியாயம் தலைவிரித்தாடும்போதும்,அப்பாவி பக்தன் பாதிக்கப் படும்போதும்வந்து காப்பாற்றவில்லை என்ற கேள்வி நியாயமானதே.

திருடனின் மனைவி கடவுள் பக்தையாக இருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். தினமும் தன் கணவன் பத்திரமாகத் திரும்பிவந்து தனது மாங்கல்யம் நிலைக்க வேண்டும் என்பது அவளின் வேண்டுதல். உடனுக்குடன் கடவுள் தீர்ப்பளிக்க வேண்டுமெனில் திருடனைத் தண்டிப்பதா? அல்லது பக்தையின் வேண்டுதலை நிறைவேற்றுவதா? என்ற குழப்பம்தீர என்ன வழி?

திருடன் மற்றும் அவனின் மனைவிபோக, திருட்டு கொடுத்தவருக்கு யார் நியாயம் வழங்குவது? திருட்டு கொடுத்தவர் யாருக்கேனும் தீங்கிழைத்திருந்தால் அதையும் கவனத்தில் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும். இப்படியாக மனிதர்களின் குற்றங்களுக்கு உடனுக்குடன் தீர்ப்பளிப்பதைவிட ஒருநாளில் அனைத்து வகை நல்லது கெட்டதுகளுக்கும் தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அதுசார்ந்த அச்சமுமிருந்தால் தனிமனித தவறுகள் குறையும்.

ஒழுக்கமுள்ள மனிதர்களை உருவாக்குவதாகவே மதங்கள் இருக்க வேண்டும். அத்தகைய மதம் எது என்று தேடவேண்டியது பகுத்தறிவுள்ள ஜீவன்களின் கடமையாகும்.

சிந்திப்பவர்களுக்கானதோர் நல்ல பதிவு.

முனைவர் இரா.குணசீலன் said...

மக்களை முட்டளாக்குவதில்,
அரசியலை பின்னுக்குத் தள்ளுவது விளையாட்டு!
விளையாட்டைப் பின்னுக்குத் தள்ளவது சாமியார் தொழில்..

kittipullu said...

எனக்கு இதனை விளக்க வேண்டும்,ஏன் மன நலம் பாதித்த குழந்தைகள் இப்பூமியில் பிறக்கிறது?,எல்லா குருவும் இந்த கேள்விக்கு மழுப்பலான பதில்களே சொல்றாங்க.அவர்கள் பிறப்பிற்கு என்ன காரணம், சக்தி,பிரபஞ்ச சக்தி,கடவுள்,எதுவேணாலும் சொல்லுங்கள் பூமியில் அந்த சக்தியால் பிறக்கின்ற அனைவரும் ஒரே திறனுடன் தானே பிறக்க வேண்டும்,நாம் சொல்லும் ஞானம்,ஆன்மிகம்,ஆத்மா,பிரபஞ்ச சக்தி,பேராற்றல் அவர்களுக்கு தெரியாமலே இறக்க வேண்டும் என்றுதான் அந்த சக்தி படைகிறதா இவர்களை???பாவம்,பண்ணியம் என்று பதில் சொல்லாமல் இந்த கேள்விற்கு பதில் இருகிறதா நண்பர்களே...
இப்படி மழுப்பி மழுப்பி வாழ்வதால் எந்த பயனும் இல்லை.எல்லாம் சரியாக இருந்தால் ""நாம் கடவுளுடன் சேர்ந்து பயணம் செய்யலாம்""...இந்த குழந்தைகள் கடவுள் என்று இர்ருபதே தெரியாதே.

dheva said...

பின்னூட்டம் வாயிலாக உங்கள் கேள்வியினை சமர்ப்பித்ததற்கு நன்றி......!

சில நேரங்களில் கேள்விகள் கேட்பதின் நோக்கமே... நமக்கு இருப்பதில்லை..! மன பாதித்த குழந்தைகள் ஏன் பிறக்கின்றன என்பதற்கான பதில் தெரிந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? அதனால் ஏதேனும் பிரோயசனம் இருக்கிறதா....! யோரோ ஒருவரு உங்களை படைத்தார் என்று நீங்கள் திடமாக எண்ணுவதால் தான் இந்த கேள்வி வருகிறது..... ஏன் அந்த யாரோவைப் பற்றி ஆராய்கிறீர்கள்.

நாம் ஏன் பிறந்தோம்...? பூமி ஏன் தோன்றியது? பிரபஞ்சத்தின் நோக்கம் என்ன? கடவுள் இருக்கிறாரா இல்லையா? இதற்கு எல்லாமே...பதில் இல்லை....பதில் சொன்னால்.....அது விளங்காது. பாவம் புண்ணியம் எல்லாம் விட்டு விடுங்கள்...இல்லை அறிவியல் மூலமாய் விளக்கம் இருக்கிறதா என்றும் ஆராயாதீர்கள்...(அறிவியல் சொல்கிறது....அது.....மூளைவளர்ச்சி சரியாக இல்லை என்று...பிறகு உங்களுக்கு அடுத்த கேள்வி வரும் ஏன் மூளை வளர்ச்சி இல்லை என்று...)


நீங்கள் எதையும் ஆராயாமல்....அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழுங்கல்.....கேள்விகளுக்கு பதில் சொல்லி ஒரே பாரா கிராப்பில் கடவுளை விளக்க வேண்டும் என்று நினைத்தாலோ எதிர் பார்த்தாலோ அது முட்டாள் தனம்....! உங்களுக்குள் எது இப்படி கேள்வி கேக்கச் செய்கிறதோ......எது என்னை பதில் எழுதச் செய்கிறதோ எது இதை படிக்கிறதோ அவையெல்லாம்...கடவுளின் துணையின்றி நடக்குமா? எல்லாமே கடவுள் என்கிறேன்... !

கடவுளைத் தேடதீர்கள்... அது கடைசி வரை கிடைக்காது....ஏனென்றால் தேடும் பொருள்தான் கடவுள்!

உமர் | Umar said...

உலகம் எப்படி தோன்றியது அல்லது எப்படி இயங்குகிறது என்று தெரியவில்லை என்பதற்காக அவற்றைப் பற்றி ஆராயாமலே, ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கி அதுதான் உருவாக்கியது; அதுதான் இயக்குகிறது என்பது ஏற்புடையது அல்லவே நண்பரே!

//நீங்கள் எதையும் ஆராயாமல்....அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழுங்கல்..//

அப்படி வாழ்ந்தால் வளர்ச்சிகள் இருக்காது நண்பரே!

SASIKUMAR said...

ஒழுக்கமுள்ள மனிதர்களை உருவாக்குவதாகவே மதங்கள்-நல்லடியார் GOOD

சுதர்ஷன் said...

முதலில் இப்படியான பிரயோசனமான பகுத்தறிவிட்க்கு தேவையான பதிவுகள் எழுதுவதற்க்கு வாழ்த்துகள் . கடவுள எப்படி மனிதனால் உருவாக்கப்பட்டார் என்பது பற்றி எனது அடுத்த பதிவில் எழுதுவேன்

ஒரேயொரு எளிய கேள்வி . கடவுளால் மனிதன் உருவாக்கப்பட்டானா இல்லை மனிதனால் கடவுள் உருவாக்கப்பட்டானா ?

நமது முன்னோர்கள் அமைத்த மீற முடியாத சட்டம் தான் சமயங்கள் , கடவுள்கள் . எதை நோக்கி போகிறோம் என்பது அறிவியலில் தேடினால் இன்னும் உங்களுக்கு நிறைய விடயங்கள் தெரியவரும் நண்பரே

dheva said...

//ஒரேயொரு எளிய கேள்வி . கடவுளால் மனிதன் உருவாக்கப்பட்டானா இல்லை மனிதனால் கடவுள் உருவாக்கப்பட்டானா ?//

எதுவும் எதையும் உருவாக்கவில்லை...அதுவே...எல்லாமாய் இருக்கிறது!


நன்றி நண்பரே (சுதர்சன்) ! புரியவில்லை என்றால்...மீண்டும் கேளுங்கள்!

dheva said...

நண்பர் கும்மி அவர்களுக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள் .....ஆரோக்கியமான ஒரு விவாதத்தை தொடங்கி வைத்ததற்காக...

கற்பனை கதாபாத்திரம் தான் உலகை இயக்குகிறது...என்று நம்புவது முட்டாள்தனம்! ஏதோ ஒன்று இயக்குகிறது...என்று நம்புவதும்....அது பற்றி...தனக்குள் கேள்விகள் கேட்பதும் ஆன்மீகம்!

ஆராய்ச்சி முதலில் நம்மிடம் இருந்து தொடங்கட்டும் தோழரே...! முதலில் நமது உடல் எப்படி இயங்குகிறது...மனம் எது? உயிர் எது.....இதற்கு விடை தேடுவோம்....!

உமர் | Umar said...

நம் அனைவருக்குமே கடவுளைப் பற்றிய அறிமுகம் சிறுவயதில் பெற்றோராலும், சமூகத்தாலும் கிடைத்திருக்கும். சிறுவயது என்பதால் சொன்ன அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டிருப்போம். நாம் வளர்ந்த பின்பு, சுய சிந்தனை வந்த பிறகு கடவுளின் செயல்கள் என்று கற்பிக்கப்பட்ட பலவும் பொய் என்று தெரிய வரும்பொழுது, என்ன நிலை எடுக்கிறோம் என்பதில்தான் கடவுள் நம்பிக்கையும், கடவுள் மறுப்பும் தொடங்குகின்றது.

நான் பிறந்த சமூகத்தில் தும்மல் இறைவனால் ஏற்படுத்தப்படுவது என்று போதிக்கப்பட்டு, தும்மியபின்பு 'அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறவேண்டும் என்றும் சொல்லப்பட்டது. சிறு வயதில் நானும் அப்படியே இருந்தேன். தும்மல் எதனால் ஏற்படுகிறது என்பது தெரிந்தவுடன், சிறுவயது பழக்கத்தை நிறுத்திக்கொண்டேன். உங்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் இருந்திருக்கும் அல்லவா?

//ஆராய்ச்சி முதலில் நம்மிடம் இருந்து தொடங்கட்டும் தோழரே...! முதலில் நமது உடல் எப்படி இயங்குகிறது...மனம் எது? உயிர் எது.....இதற்கு விடை தேடுவோம்....//

ஆராய்ச்சிகளின் முடிவு தெரிந்தபின்பு, கடவுள் 'என்பது' உறுதிபடுத்தப்பட்டால், நம்பிக்கைக் கொள்வோம். அது தெரியாமல், நமக்கு தெரியாத ஒன்றை அடிப்படையாக வைத்து, ஏன் சக மனிதனை பிரித்துப் பார்க்கவேண்டும்?

ஆரோக்கியமான உரையாடலுக்கு நன்றி நண்பரே!

வால்பையன் said...

கடவுள் மறுப்பாளனுக்கு கடவுள் மேல் எப்படியய்யா கோவம் இருக்க முடியும்!
அதான் இல்லைன்னு ஆகிபோச்சே, அதுமேல கோவபட்டா இருக்குற மாதிர்யில்ல ஆவுது! எங்க கோவமெல்லாம் அதை வச்சு நீங்க ஆடுற ஆட்டம் தான்!

dheva said...

// எங்க கோவமெல்லாம் அதை வச்சு நீங்க ஆடுற ஆட்டம் தான்! // கரெக்டா சொன்னீங்க....

வால் பையன் @ எங்க கோபமும் அது மேலதான்...ஏன் இப்படி ஆட்டம் போட்டு... அசிங்கப்படுத்துறாங்கனுதான்.....! ஆட்டம் போடுறவனுக்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! கடவுள் மறுப்பாளர்கள் ஒரு பக்கம்னா....கடவுளை பல மாதிரி சித்தரித்து மூட நம்பிக்கைகளை ஏற்படுத்தும் சாமியார்களும்...அதை பின்பற்றுபவர்களும் ஒரு பக்கம்!

நாத்திகவதி.... கடவுள் இல்லைன்ற லெவலோட போயிடுறாங்க...கடவுளை அசிங்கப்படுத்துறது கிடையாது....இந்த சாமிய உருவமா கற்பனை பண்ணி மூட நம்பிக்கைகளை பாலோ பண்றன் பாருங்க...அவன் தான் கடவுளை அசிங்கப்படுத்துறான்!


பின்னூட்டத்திற்கு நன்றிகள்!

dheva said...

//நல்லா விஷயம். நமக்கெல்லாம் அப்பால் ஒரு சக்தி இருக்கிறது அதை தான் நாம் கடவுள் என்கிறோம்//

சுனில் @ நமக்கு அப்பாற்பட்ட சக்தி அல்ல கடவுள்...அது நமக்குள்ளே இருக்கின்ற சக்தி!

வால்பையன் said...

எவையெல்லாம் மூடநம்பிக்கைன்னு உங்களாலே பட்டியல் இடமுடியாது!
சொர்க்கத்தை நம்புவது,ந் அரகத்தை நம்புவது, நித்தியகன்னிகளை நம்பிவதௌ எல்லாமே மூட நம்பிக்கை தான்!

காவடி தூக்குதலும், கன்னத்தில் போடுதல் மட்டும் மூடநம்பிக்கை ஆகாது!, நாளை பைபிளை கொஞ்சம் கிழிக்க வேண்டியிருக்கு, முடிஞ்சா வந்துட்டு போஙக்!

dheva said...

//ஆராய்ச்சிகளின் முடிவு தெரிந்தபின்பு, கடவுள் 'என்பது' உறுதிபடுத்தப்பட்டால், நம்பிக்கைக் கொள்வோம். அது தெரியாமல், நமக்கு தெரியாத ஒன்றை அடிப்படையாக வைத்து, ஏன் சக மனிதனை பிரித்துப் பார்க்கவேண்டும்?//


நன்றி கும்மி அவர்களே.....ஆராய்ந்து பாருங்கள்..ஒரு கட்டத்தில் ஆராய்ச்சியும் இருக்காது.....கேள்வியும் இருக்காது கேள்வி கேட்டவனும் இருக்கமாட்டன்....அப்போது நீங்கள் கடவுள் என்று கற்பனை செய்யும் எந்த விசயமும் இருக்காது, சக மனிதன் என்று ஒருவன் கூட இருக்க மாட்டான் ....பிரிவுகளும்.. மதங்களும் என்று கூட ஒன்று ம் இருக்காது.....

உங்களுக்குளேயே....ஆராய்ச்சியை தொடங்குங்கள்....வாழ்த்துக்கள்!

தமிழ்போராளி said...

அஹ்ஹாஹஹஹஹ் சரியாக சொன்னீங்க வால்பையன் வாழ்த்துக்கள்...

தமிழ்போராளி said...

---------- Forwarded message ----------
From: veeraa
Date: 2010/5/13
Subject: “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
To: SASIKUMAR nadimuthu


“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”

பனை ஏறும்

தந்தை தொழிலில்

இருந்து தப்பித்து

நடிகர் சங்க தலைவராகிவிட்டவர் கேட்டார்.

“பெரியாரின்

முரட்டுத்தனமான அணுகுமுறை

அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”

இதுமுடி வெட்டும் தோழரின் மகனான

எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.


“என்னங்கபெரியார் சொல்லிட்டா சரியா?

பிரமணனும் மனுசந்தாங்க.

திராவிட இயக்கம்

இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”

இப்படி ‘இந்தியா டுடே’

பாணியில்கேட்டவர்

அப்பன் இன்னும்

பிணம் எரித்துக் கொண்டிருக்க

இங்கே டெலிபோன் டிபார்மென்டில்

சுபமங்களாவை விரித்தபடி

சுஜாதா

சுந்தர ராமசாமிக்கு

இணையாக

இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்

அவருடைய மகன்.

ஆமாம்

அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

உமர் | Umar said...

// நீங்கள் கடவுள் என்று கற்பனை செய்யும் எந்த விசயமும் இருக்காது,//

கடவுளே இல்லை என்று நான் கூறுகின்றேன். கடவுளின் பெயரால் ஏன் இவ்வளவு வேறுபாடுகள் என்பதுதான் என்னுடைய கேள்வி?

dheva said...

//எவையெல்லாம் மூடநம்பிக்கைன்னு உங்களாலே பட்டியல் இடமுடியாது!
சொர்க்கத்தை நம்புவது,ந் அரகத்தை நம்புவது, நித்தியகன்னிகளை நம்பிவதௌ எல்லாமே மூட நம்பிக்கை தான்!//


அது மட்டுமல்ல...வால்பயன்...


கோவிலுக்கு போறது....எதையோ ஒண்ண பாத்து சாமின்னு கும்பிடுறது, வேண்டுதல் வைக்கிறது...தீ மிதிக்கிறது...மாலை போடுறது எல்லாமே... மூட நம்பிக்கைதான்.... மீண்டும் சொல்கிறேன்... கடவுளுக்கும் இவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை....! என்னைப் பொறுத்த அளவில் இந்த செயலை செய்பவர்களும் கடவுள் மறுப்பாளர்கள்தான்!

பைபிளை நீங்கள் கிழிப்பது உங்கள் உரிமை.. கிழிப்பதால் .....யாராவது ஒரு மதவாதி கோபப்படலாம்...! கடவுளுக்கு நீங்கள் பைபிள் கிழிப்பது பற்றி கவலை இல்லை... அவரே தானே இதை செய்கிறார்.....!

நன்றி!

Anonymous said...

3 வயசு குழந்தைக்கு மூக்கு பிடிச்சு மருந்து கொடுக்கணும்

மூக்கு பிடிப்பது என்பது மூட நம்பிக்கை

தானக எடுத்து சாப்பிடுவது பகுத்தறிவு....!

ஆனா மூக்கு பிடிக்காம நீங்க அந்த ஸ்டேஜுக்கு வரமுடியாது. அது ஒரு வகையான பயிற்சி. சின்ன குழந்தைக்கு மணி சிலேட் மாதிரி. நான் காலேஜ் போய் அதை யூஸ் பண்ண முடியாது. பிரச்சினை என்ன என்றால் நம்மிடம் 40 வயது குழந்தையும் உள்ளது, அதுக்கு தன்னால சாப்பிட முடியாது..அதுக்கு தலை மீது தேங்காய் உடைக்கணும்..மூடர்களூக்குத்தான் மூட நம்பிக்கை. 40 வயது மூடன் தான் கடவுள் பெயரை கெடுக்கிறான்.

இது விளங்கிகிட்டா.....எதுக்கு இந்த மூட நம்பிக்கைன்னு எல்லாருக்கும் புரியும்!

சசிகுமார்

dheva said...

//கடவுளே இல்லை என்று நான் கூறுகின்றேன். கடவுளின் பெயரால் ஏன் இவ்வளவு வேறுபாடுகள் என்பதுதான் என்னுடைய கேள்வி? //


கும்மி @ கடவுள் இல்லைதான் நண்பரே...ஆமாம்... நீங்கள் கற்பனை செய்வது போல இல்லை!

வால்பையன் said...

//கும்மி @ கடவுள் இல்லைதான் நண்பரே...ஆமாம்... நீங்கள் கற்பனை செய்வது போல இல்லை! //


ஆமாம் கும்மி கடவுள் நம்ம கற்பனை போல இல்லை, தேவா கற்பனை போல தான் இருக்கார்!, அவரது கற்பனைக்கு மரியாதை கொடுத்து கடவுளுக்கு ஒரு ”ஓ” போடுவோம்!

உமர் | Umar said...

//அவரது கற்பனைக்கு மரியாதை கொடுத்து கடவுளுக்கு ஒரு ”ஓ” போடுவோம்! //

ஓ ஓ

dheva said...

வால் பையன் @ கற்பனை பண்ண முடியாத இடத்தை கற்பனை செய்ய சொல்கிறீர்கள்..... நல்ல விளையாட்டு நண்பரே..! எனக்கு எந்த கற்பனையும் இல்லை.... தோழரே....கடவுள் எப்படி இருப்பார் இருக்கிறார இல்லையா என்ற ஆராய்ச்சியும்..., மறுத்து பேசும் வேகமும் இல்லை....!

சக மனிதர்களை நேசிக்கிறேன்... வாழ்வியல் நெறிபடி வாழ்கிறேன்..... ! கடவுள் இருக்கலாம்... இல்லாமலும் இருக்கலாம்....! வலியுறுத்தல் எதுவும் என்னிடம் இல்லை..... நம்மைச் சுற்றி இவ்வளவு விசயங்கள் நடக்கும் போது ஏன்.. கடவுள் இருக்க கூடாது....? என்ற கேள்வி மட்டுமே கட்டுரையின் இலக்கு...பதில் இந்த சாமானியனால் அளிக்க முடியாது......!


உங்களின் வருகைக்கு நன்றி....! தொடர்ந்து வந்து ஆக்கமான நல்ல கருத்துக்களை தருவியுங்கள்!

வாழ்த்துகள்!

dheva said...

கும்மி.... @ உஙக்ளின் ' ஓ ' விற்கும் மிக்க நன்றி....!


தொடர்ந்து வந்து ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தாருங்கள் நண்பர்களே!

வாழ்த்துக்கள்!

உமர் | Umar said...

உங்கள் கேள்விக்கு பதிலாய் ஒரு கேள்வி பாருங்கள்.

எனக்கெதற்கு ஒரு கடவுள்?
http://rudhrantamil.blogspot.com/2010/05/blog-post_13.html

வால்பையன் said...

//நம்மைச் சுற்றி இவ்வளவு விசயங்கள் நடக்கும் போது ஏன்.. கடவுள் இருக்க கூடாது....?//


கடவுள் இருந்தால் நம்மை சுற்றி ஏன் இவ்வளவு விசயங்கள் நடக்குதுன்னு ஒரு பட்டியல் என்னால் கொடுக்க முடியும்!?

எனக்கும் இரண்டு கால் இருக்கீறது, உங்களுக்கும் இரண்டு கால் இருக்கிறது, நான் என் தன்னம்பிக்கையால் இரண்டு காலில் நிற்கிறேன், உங்களுக்கு ஊன்றி கொள்ள் கடவுள் என்ற குச்சி தேவை!, அதையே நியாயபடுத்தி அடுத்தவரை மாற்ற விடுவீர்கள்! எங்களால் அதை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியவில்லை தோழரே!

dheva said...

//பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பானே” அவனா தெய்வம்? இல்லை, அவன் பூஜ்யம் எனும் இல்லாத ஒன்றா? பூஜ்யம் என்றால் இல்லை என்றுதான் அர்த்தம்; பூஜ்யம் இல்லாமல் போய்விடுமா?//

கும்மி..... அட்டகாசமான உதாரணம் ருத்ரன் சார் வலைப்பூ....! துணைக்கு ஒரு ஆள்கிடைத்தார்..... எனக்கு....மேலெ சொல்லியிருப்பது நானல்ல....திரு. ருத்ரன் சார்தான்....! அதை திரும்ப திரும்ப படியுங்கள்.....உங்களுக்கு பதில் கிடைத்தாலும் கிடைக்கலாம்!

மிக்க நன்றி தோழரே!

வால்பையன் said...

//பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பானே” அவனா தெய்வம்? இல்லை, அவன் பூஜ்யம் எனும் இல்லாத ஒன்றா? பூஜ்யம் என்றால் இல்லை என்றுதான் அர்த்தம்; பூஜ்யம் இல்லாமல் போய்விடுமா?//


அவர் நாத்திகர் அல்ல கும்மி!
தேடுபவர்!, சில நேரங்களில் இப்படி வார்த்தை விளையாட்டு விளையாடுவார்!

dheva said...

வால் பையன்.....@


கரெக்ட்.... நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே... நீங்கள் தன்னம்பிக்கை என்று சொல்கிறீர்கள்....அதை நான் கடவுள் என்கிறேன்...!

ஆனால் கடவுள் என்றால் சமுதாயம் வேறு விதமாய் கற்பித்துள்ளதால் நான் கடவுள் என்று சொன்னவுடன் உங்களுக்கு எட்டு கை 6 தலை திரிசூலம் என்று எல்லாம் கூடி ஏதேதோ உருவம் வருவது உங்கள் தப்பில்லை....இந்த சமுதாயத்தின் கற்பிதம் அப்படி!

நட்ட கல்லை சுற்று வந்து...
மொண மொண வென்று ஓதுகின்ற...
மந்திரஙக்ள் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ...
நாதன் உள்ளிருக்கையிலே...!

- திருமூலர்....


நாதன் = உங்கள் தன்னம்பிக்கை


அரோக்கியமான விவாதத்திற்கு எடுத்துச் செல்வதற்காக நன்றிகல் நண்பரே!

உமர் | Umar said...

//கும்மி..... அட்டகாசமான உதாரணம் ருத்ரன் சார் வலைப்பூ....!//

தேவையான வரிகளை மட்டும் உருவி, போட்டுக்கொண்டுள்ளீர்கள். பதிவின் சாரத்தைப் பாருங்கள்.

"கடவுள் ஒரு சௌகரியம் மட்டுமே. சௌகரியங்கள் யாவும் சத்தியமும் கிடையாது சரியென்றும் ஆகாது."

உமர் | Umar said...

//இந்த சமுதாயத்தின் கற்பிதம் அப்படி!//

முதலில் எட்டு கை 6 தலை திரிசூலம் என்றார்கள், பிறகு நமக்கு மிஞ்சிய சக்தி என்றார்கள், பிறகு நாமே கடவுள் என்றார்கள். நமது செயல்களே கடவுள் என்று கூறினார்கள். இல்லாத ஒன்றிற்கு ஏன் இத்தனை கற்பிதங்கள்?

உமர் | Umar said...

//சில நேரங்களில் இப்படி வார்த்தை விளையாட்டு விளையாடுவார்! //

சௌகரியமான முடிவைத் தேடியதின் விளைவு என்றே அவர் கூறியிருக்கிறார் நண்பரே.

dheva said...

கும்மி....!


நீங்கள், நான், இந்த உலகம்.....உங்களைச் சுற்றியுள்ள எல்லாம் இருக்கிறது என்று ஒத்துக் கொள்கிறீர்களா?

உமர் | Umar said...

//நீங்கள், நான், இந்த உலகம்.....உங்களைச் சுற்றியுள்ள எல்லாம் இருக்கிறது என்று ஒத்துக் கொள்கிறீர்களா?//

அறிவியல் மூலம் அறியக்கூடிய அல்ல உணரக்கூடிய அனைத்தையுமே ஏற்றுக்கொள்கின்றேன். கடவுளை எப்படி அறிவது அல்லது உணர்வது?

dheva said...

ம்ம்...அப்படி கேளுங்க...கும்மி....!


கடவுள தேடாதீங்க..... கிடைக்கவே மாட்டார்...! கடவுளை யாராவது காமிக்கிறேன்னு சொன்னா செவுல்ல ரெண்டு கொடுங்க.....!

இவ்வளவு கேள்வி கேட்டு இவ்வளவு தெளிவா பேசுறீங்களே.... நீங்கள் உங்களை உணர்ந்திருக்கீர்களா?

உமர் | Umar said...

//நீங்கள் உங்களை உணர்ந்திருக்கீர்களா? //

உணர்தல் என்று எதைக் குறிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால், இவ்வளவு கேள்விகள் கேட்பதற்கான ஆதார கேள்வி 'What is the purpose of Life?'

உமர் | Umar said...

//கடவுளை யாராவது காமிக்கிறேன்னு சொன்னா செவுல்ல ரெண்டு கொடுங்க.....! //

நான் கேள்விகளால் அதனைத்தான் செய்கின்றேன்.

dheva said...

//உணர்தல் என்று எதைக் குறிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால், இவ்வளவு கேள்விகள் கேட்பதற்கான ஆதார கேள்வி 'What is the purpose of Life?//


கும்மி....@

இத தெரிஞ்சுக்கணும்னா ... நாத்திகம் பக்கம் போனீங்க...? அட பாவமே... கடைசிவரை....தெரிஞ்சுக்க முடியாதே! பாருங்க... . நீங்கள் இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு உணர முடிகிறதா என்று கேட்ட சாதாரண கேள்வி க்கு கூட பதிலளிக்க விடாமல் உங்களின் நாத்திகம் உங்களை வேலி போட்டு அடைத்து வைத்திருக்கிறது....! மதங்களும் இதே வேலையைத்தான் செய்கின்றன.....என்னை பொறுத்த அளவில் நாத்திகமும் ஒரு மதம் அவ்வளவே....!

வாழ்க்கையின் அர்த்தம்...என்ன? என்பது தான் உங்கள் கேள்வி...கோபித்துக் கொள்ளாதீர்கள் நண்பரே....ஒற்றை வரியில் சொல்லப்படும் பதிலாக எல்லாம் இருந்து விடுவதில்லை....! மிக ஆழமான கேள்வி....இதை உங்களுக்குள் தனியெ அமர்ந்து பலமுறை கேளுங்கள்...! உங்களை உணர....தனிமையில் இருங்கள்....தனியாக இல்லை தனிமையில்.....உங்களை நீங்கள் உணராதவரை...கடவுள் என்ற விசயம் உணர முடியாது.....!கடவுள் வெளியே தேடப்படுபவர் அல்ல......உங்களுக்குள்ளே உணரப்படவேண்டியவர்....! தத்து பித்து என்று அறிவியலால் உறுதி செய்யப்ப்பட்ட எல்லாம் உண்மை என்று நம்பாதீர்கள் அறிவியல் தமது வசதிக்கேற்ப முடிவுகளை மாற்றிக் கொண்டுள்ளது...என்பது வரலாற்றை நன்கு படித்தவர்களுக்கு தெரியும். இதே பூமியில் ஆர்டிக் பனி பிரதேசத்தில் பல இடங்களுக்கு அறிவியலால் பயணிக்க முடியவில்லை......மரணித்த பின் என்ன? என்று அறிவியலால் இது வரை விளக்க முடியவில்லை...! பிரபஞ்சத்தின் கோடாணு கோடி பால்வீதிகளை பற்றி அறிய முடியாமல் அறிவியல் வாய் பிளந்து நிற்கிறது...?

ஹரப்பா மொகஞ்சோதாராவில் அகழ்வாராய்ச்சி செய்யும் போதே நவக்கிரங்ககள் சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டது....அறிவியல் இல்லாத காலத்தில் 9 கிரகங்களையும் அதற்கு பக்கத்தில் 'பகவான் " என்று அடை மொழியிட்டு...கல்லாதா மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்? அவர்களுகு எப்படி...சூரிய குடும்பம் பற்றித் தெரியும்? பதில் எங்கேயும் தேடாதீர்கள் உங்களை குழப்பி விடுவார்கள்... நீங்களே சிந்தித்து பாருங்கள்.....!

மூட நம்பிக்கையை , தீண்டாமையை மட்டும் பேசியிருந்தால் நாத்திகம் வேரூன்றி தலைத்து இருக்கும் அது கடவுள் என்ற விசயத்தை அறியாமல் எள்ளி நகையாடியாதால் இப்போது இலக்கு இல்லாமல் பயணிக்கிறது. சிலை வணக்கம் செய்யல் ஆகாது என்று சொல்லி விட்டு தெருக்குதெரு சிலைகளை வைத்து தலைவர்கள் என்ற பெயரில் திராவிடம் பேசி...பகுத்தறிவு... பேசி வருகிறார்கள்!

உண்மையான பகுத்தறிவு.....உங்களை உங்களுக்குள் பகுத்து அறிவது....! அதைச் செய்யுங்கள் உங்களுக்கான விடைகள் உங்களுக்கே தெரியும்....!

மிக்க நன்றி நண்பரே!

வால்பையன் said...

//கடவுள் வெளியே தேடப்படுபவர் அல்ல......உங்களுக்குள்ளே உணரப்படவேண்டியவர்.//


உள்ளுகுள்ள நாலு கூலாங்கல்லை போட்டு என்ன செய்யுதுன்னு உணர்ந்தா கடவுள் தெரிவார்!

Anonymous said...

எனக்கு தெரிந்து 3500 வருடமாக கடவுள் என்ற விசயம் இருக்கிறது... மேலும்
பார்ப்பனர்கள் .. தான் கடவுளைத் தோற்றுவித்தனர் என்றால்.. இன்று உலகம் முழுதும் கடவுள் இருக்கிறாரே... ! அப்படி என்றால் அமெரிக்காவிலும் ஐரோப்பவிலும்....அரேபியாவிலும் பார்ப்பனர்கள் இருந்தனரா....! இல்லை நம்ம ஊர் பார்ப்பனர்கள்தான் கட்டுமரம் ஏறி எல்லா திசைகளுக்கும் சென்று கடவுளை கற்பித்தனரா? அல்லது என்.ஆர்.ஐ ஆக வருமானத்திற்காக சென்றார்களா?

இவ்வளவு நாத்திகம் பேசும் யாராவது எனது கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?

-சசிகுமார்

வால்பையன் said...

//பார்ப்பனர்கள் .. தான் கடவுளைத் தோற்றுவித்தனர் என்றால்.//


பார்பனர்கள் இந்து மதத்தை தோற்றுவித்தனர்! வர்ணாசிரமத்தை தோற்றுவித்தனர்! இங்கே யார் பார்பனர்களை மட்டும் திட்டி கொண்டிருக்கிறார்கலோ அவர்களுக்கு இந்த பின்னூட்டம், எங்களுக்கு அல்ல!

dheva said...

வால் பையன்.....@ எப்படியோ போகட்டுங்க.. நாம ரெண்டு பேரும் இப்போ நண்பர்கள் ஆகிட்டோம்.. கடவுள் இருந்தாலும் இல்லேன்னாலும் பரவாயில்லேங்க... நல்ல நண்பர் நீங்க கிடைச்சிருக்கீங்க... ரொம்ப சந்தோசம் உங்களின் வலைப்பூ மற்றும் மின்னஞ்சல் முகவரி சொல்லுங்க.. நண்பரே...! தொடந்து தொடர்பில் இருப்போம்!

வாழ்த்துகளுடன்!

உமர் | Umar said...

// நீங்கள் இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு உணர முடிகிறதா என்று கேட்ட சாதாரண கேள்வி க்கு கூட பதிலளிக்க விடாமல் உங்களின் நாத்திகம் உங்களை வேலி போட்டு அடைத்து வைத்திருக்கிறது....!//

நீங்கள் கேட்ட கேள்வியைத் தெளிவுபடுத்தி கொள்வதற்காக கேட்ட ஒன்றை எங்கெங்கோ கொண்டுச் சென்றுள்ளீர்கள்.

//பூமியில் ஆர்டிக் பனி பிரதேசத்தில் பல இடங்களுக்கு அறிவியலால் பயணிக்க முடியவில்லை......மரணித்த பின் என்ன? என்று அறிவியலால் இது வரை விளக்க முடியவில்லை...! பிரபஞ்சத்தின் கோடாணு கோடி பால்வீதிகளை பற்றி அறிய முடியாமல் அறிவியல் வாய் பிளந்து நிற்கிறது...?
//

இதெல்லாம் தெரியவில்லை என்பதற்காக, ஏதோ ஒன்றை எப்படி கடவுள் என்று கொள்ளமுடியும்?

//மூட நம்பிக்கையை , தீண்டாமையை மட்டும் பேசியிருந்தால் நாத்திகம் வேரூன்றி தலைத்து இருக்கும்//

மூட நம்பிக்கை, தீண்டாமை பற்றி பேசுவது சமூக மேம்பாடு. அடிப்படை ஆதரங்களற்றவற்றை ஏற்க மறுப்பது நாத்திகம்.

//சிலை வணக்கம் செய்யல் ஆகாது என்று சொல்லி விட்டு தெருக்குதெரு சிலைகளை வைத்து தலைவர்கள் என்ற பெயரில் திராவிடம் பேசி...பகுத்தறிவு... பேசி வருகிறார்கள்!//

நாத்திகம் பேசினாலே திராவிடத்திற்குள் இழுத்து விட்டுவிடுவீர்கள் போல. :-)

--
உங்களை கடவுள் விடுவதாய் இல்லை. நீங்களும் கடவுளை விடுவதாய் இல்லை. அதனால்தான் உருவங்களிலும், உருவகங்களிலும் இருந்த கடவுள் இப்பொழுது தன்னை உணர்தலில் வந்து குடியிருக்கின்றார் போலும்.

dheva said...

கும்மி...@ தன்னை உணரக்கூடிய ஒரு நிலை கூட உங்களுக்கு கஸ்டமாய் போனதும்.....குழப்பாய் இருப்பதும் துரதிஸ்டமானதே.....!

உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாத போது......மற்ற விசயங்கள் பற்றி தெளிவு கொள்வது கொஞ்சம் கஸ்டம் தான் நண்பரே!

உமர் | Umar said...

//உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாத போது.//

என்னுடைய எழுத்தில் தவறா, உங்களுடைய புரிதலில் தவறா என்பதை பார்ப்பவர்களின் சிந்தனைக்கு விட்டுவிடுவோம்.

dheva said...

கும்மி...@ உங்களுக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்னும் இருப்புத்தன்மையினை கூட தைரியமாய்....ஆமாம்... நான் இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும் என்று சொல்லத் தெரியவில்லை....

எதில் கோளாறு என்று படிப்பவர்களுக்கு ஏன் தெரியவேண்டும் ....முதலில் நமக்கு புரியவேண்டும் தோழரே!

உமர் | Umar said...

//உங்களுக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்னும் இருப்புத்தன்மையினை //

இருப்புத்தன்மையினைதான் உணர்தல் என்று கூறியுள்ளீர்களா? உணர்தலுக்கு வேறு பல அர்த்தங்களும் உள்ளன. நீங்கள் என்ன அர்த்தத்தில் கேட்டீர்கள் என்றுதான் கேட்டேன். அதற்குள் நீங்களாகவே பல முடிவுகளுக்கும் வந்துவிட்டீர்கள்.

dheva said...

கும்மி @//உணர்தலுக்கு பல அர்த்தம் இருக்கிறதா?//


ஏங்க.... நீங்க எதையுமே சிம்பிளா எடுக்க மாட்டீங்களா? உணர்தல்னா....அறிந்துகொள்ளுதல்...விளங்கிக்கொள்ளுதல்...என்றுதான் காலம் காலமாக உலகத்துக்கு...தெரியும்.....! இதுக்கு என்ன விளக்கத்தை உங்களின் நாத்திக சிந்தனி கொடுக்கப் போகிறதோ?

உமர் | Umar said...

//உணர்தல்னா....அறிந்துகொள்ளுதல்...விளங்கிக்கொள்ளுதல்.//

விளக்கத்திற்கு நன்றி.

என்னுடைய இருப்பை நான் உணர்ந்தே இருக்கிறேன். என்னுடைய படிப்பைப் பற்றியும் , திறமை குறித்தும் , குடும்பம் தொடர்பாகவும், வேலை மற்றும் இன்னபிற விஷயங்களையும் நான் அறிந்தே இருக்கிறேன். ஆனால், என்னுடைய வாழ்வின் நோக்கத்தை உணரவில்லை.

(இது எப்படி simple ஆ இருக்கா? இல்ல இன்னும் குழப்பிட்டனா?)

dheva said...

நீங்கள் இருப்பதையும் உங்களையும் உணர்ந்தாலே போதும் அதுதான் உண்மையான ஆன்மீகம்.....கங்கிராஜிலேசன் நீங்களும் ஆன்மீகவாதிதான்!


வாழ்க்கைக்கு நோக்கமில்லை நண்பரே...அது பற்றி ஓவராய் திங்க் பண்ணி.....குழம்பாதீர்கள்!

உமர் | Umar said...

//அதுதான் உண்மையான ஆன்மீகம்.//

கடவுளுக்கு பல உருவங்களும், உருவகங்களும் கொடுத்து பல அர்த்தங்கள் கற்பித்தது போல், இப்பொழுது ஆன்மீகத்திற்கு புதுப்புது அர்த்தங்களா?

எல்லாம் சௌகர்யங்களே!

உமர் | Umar said...

//வாழ்க்கைக்கு நோக்கமில்லை நண்பரே.//

:-)

உரையாடலுக்கு நன்றி நண்பரே!

dheva said...

உயிரோடு இருப்பது...சந்தோசமா இருக்கணும்னு நினைக்கிறது....எப்பவும் நல்லதே நடக்கணும்னு நினைக்கிறது.... நாத்திகம் பேசுறது எல்லாமே....செளகரியம் தான் நண்பா!

வாழ்த்துக்கள்!