Pages

Sunday, May 23, 2010

இராவணன்...!


காலங்கள் தோறும் வஞ்சிக்கப்பட்ட ஒரு இனமாய் திராவிட இனம் இருந்து வந்திருக்கிறது. செய்தி பரிமாற்றங்களாய் இருக்கட்டும் நாட்டில் செயல் படுத்தப்படும் நல திட்டங்களாய் இருக்கட்டும்....ஏன் பிரதமர் பதவியாய் இருக்கட்டும் இவை எல்லாம் நமக்கு நேரடியாக மறுக்கப்படாவிட்டாலும் தேர்ந்த காய் நகர்த்தல்கள் மூலம் மாற்றிவைக்கப்பட்டுள்ளன.

புராணங்கள் என்று நமக்கு போதிக்கப்படும் எல்லாவற்றிலும் திராவிடனைப்பற்றிய வெளிப்பாடு கொஞ்சமும் நாம் எதிர் பாராத வகையில் இருந்தாலும் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு மூளைச்சலைவியினால் நாமும் அதை சரியென எடுத்துக் கொண்டு அறிவுக்கு எட்டாத விசயங்களை கூட ஒத்துக் கொள்கிறோம். சர்ச்சைக்குரிய ஒரு களம்தான் இது என்பதில் மாற்றமில்லை, என்னுடைய கண்ணோட்டம் தவறாக இருக்கலாம் உங்களின் பின்னூட்டங்களின் மூலம் தெளிவான ஒரு நிலை கிடைக்கலாம் என்ற ஆவலில்தான் இப்போது நான் நமது சூப்பர் கதா நாயகனான....இரவணேஸ்வரன் எனப்படும் சக்கரவர்த்தி இராவணனை மீண்டும்......உயிர்ப்பிக்கிறேன்........

திருநெல்வேலியிலிருந்து புலம் பெயர்ந்து சென்ற தமிழ் நாட்டின் சைவ குலம் சேர்ந்த இராவணேஸ்வரன் அடிப்படையில் தமிழன் திராவிடன். கடுமையான சிவபக்தன் பத்து தலைகளுக்கு இருக்கும் மூளையை ஒருசேர பெற்ற பராக்கிரமசாலி நீதியோடு லங்கா தேசத்தை ஆட்சி புரிந்து வந்த கருணாமூர்த்தி. வால்மீகி இராமாயணம் மற்றும் கம்பராமாயணம் இவை இரண்டையும் ஆதாரமாககொண்டே நமக்குள் கேள்விகள் எழுகின்றன்.....மிகச்சிறந்த ஆட்சி புரிந்த இராவணனின் லங்காபுரியில் மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் இருந்திருக்கின்றன.

எல்லா சிறப்பும் கொண்ட ஒரு திராவிட சைவனை ஆரியம் ஒன்று சேர்ந்து வஞ்சித்து அரக்கனாக்கியதை இன்னும் நாம் ஒத்துக்கொண்டு ஏதெதோ பேசிக்கொண்டிருக்கிறோம். அறிவில் சிறந்தவர்களே...மனிதனும் விலங்கும் சேர்ந்து நடத்திய போர் இராமாயணம் என்று எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்? இராமபிரானும் லட்சுமணனும் திராவிட தேசத்திற்குள் நுழைந்த சமயத்தில் கிஸ்கிந்த தேசத்தை ஆண்டது வானரங்களா? எப்படி இது சாத்தியம் வடக்கே மனிதனும் தெற்கே வானரங்களும் ஆட்சி புரிந்தன என்று பகிங்கரமாய் ஒரு திராவிட அவமதிப்பைனை அரங்கேற்றி இருக்கும் இந்த புராணங்களை எப்படி கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வது?


திராவிடனெல்லாம்...வானரங்கள்...வாலியும் சுக்கிரீவனும் மாமன்னர்களாக சித்தரிக்கப்படாவிட்டால் கூட பரவாயில்லை ஒரு மனிதனாக கூட சித்தரிக்கப்படாத அவலம்....! இரமானை மிகச்சிறந்த அவதார புருசன் என்று காட்ட முயன்ற முயற்சியில் திராவிடனெல்லாம்...வானரமாயும் அரக்கனாயும் மாறிப் போன அதிசயம் நடந்தேறியதில் வியப்பில்லை. இராவணன் சீதையை தூக்கிச் சென்றது அவளது அழகில் மயங்கி அவளை மணக்க அல்ல...என்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளவென்டும். லட்சுமணனின் மீது விருப்பம் கொன்ட சூர்ப்பனகையை அவமானப்படுத்தி (மூக்கை அறுத்தது எல்லாம் புராண விவரிப்புகள்) திருப்பி அனுப்பியவுடன், சூர்ப்பனகையை பிடிக்கவில்லையெனில் மறுத்திருக்கலாமே அன்றி அவமானப்படுத்துதலை எப்படி ஏற்றுக் கொள்வது என்று ராம லட்சுமணர்களுக்கு பாடம் புகட்டவே சீதையை கொண்டு சென்றான் இராவணன். அவன் தங்கைக்கு ஒரு தலை சிறந்த அண்ணன் வேறு என்ன செய்வான்?


அரக்கன், பெண்ணாசை பிடித்தவன் என்று வர்ணிக்கும் புராணங்கள் தான் கவர்ந்து சென்ற பெண்ணின் மீது ஒரு சுண்டு விரல் கூட படாமல் பத்திரமாக வைத்திருந்தவன் பாடம் புகட்ட கொண்டு சென்றானா? இல்லை பெண்ணாசை பிடித்து கொண்டு சென்றானா? நீங்களே தீர்மானியுங்கள். ஒப்பற்ற வீரன் இராவணனை திராவிடர்கள் (வானரப்படை என்று விவரிக்கிறார்களே அது நாம்தான்) உதவியுடன் சென்று வென்று விட்டதாக அறியமுடிகிறது. இராவணின் அழிவிற்கு பின் தெற்கு பகுதிகள் ஆரியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின மேலும் வட இந்தியாவில் இருந்து நிறைய ஆரியர்கள் திராவிட பகுதிகளுகு குடியேறி மிகைப்பட்ட திரவிடர்களுக்கு ஆரிய விதிமுறைகள் புகுத்தப்பட்டன. சாதி சமயம் என்றால் என்னவென்று தெரியாத திராவிட மக்களை சாதி சமய அடிப்படையிலான ஒரு சமுதாயமாக செய்யும் தொழிலின் அடிப்படையில் பிரித்தாளப்பட்டனர்.


தாய்வழிச் சமூகமான திராவிட இனம் நாளடைவில் தந்தை வழி சமூகமாக மாற்றப்பட்டடது அதன் காரணமாக பெண் அடிமைப்படுத்தப்பட்டாள்....இப்படியாக இரவணேஸ்வரன் என்ற ஒரு தலை சிறந்த திரவிட சைவ மன்னனை கொன்றழித்து விட்டு பின் என்ன பாவம் தீர ஒரு சிவனை வழிபட வேண்டியிருக்கிறது. இராவணனை கொன்றழித்த நோக்கமும், அவனின் சகோதரனை அவனிடம் இருந்து பிரித்து உபாயங்களை அறிந்து கொன்ற முறையும் போரிட்ட விதமும் போருக்கு ஆட்கள் சேர்க்க அண்ணன் தம்பி (வாலி மற்றும் சுக்ரீவன்)களை பிரித்தாண்டு வாலியை மறைந்து இருந்து கொன்றமையும் தானே குற்ற உணர்ச்சிகுள் விழச் செய்து இராமேஸ்வர ஸ்தலம் உருவக வழிசெய்தது? நல்லது செய்தால் ஏன் பாவ மன்னிப்பு? நடந்தது வதம் அல்ல...ஒரு கோர இன அழிப்பு!

எல்லா பராக்கிரமும் கொண்டிருந்த இராவணேஸ்வரன் சீதை சிறைச்சேதம் தான் செய்து வைத்திருந்தான் கவர்ந்து செல்லவில்லை. சிறைச்சேதம் என்றாலும் அசோகவனத்திலே சகல விதமான மரியாதையுடன் அவளை நடத்தியதாக அறிய முடிகிறது. இதில் எந்த புனைதலும் இருப்பதற்கான சாத்தியம் இல்லை ஏனென்றால் மரியாதையுடன் நடத்தவில்லையெனில் அவள் மரியாதையாக திரும்ப கிடைத்திருக்கவும் வாய்ப்பில்லை. இவ்வளவு கண்ணியமான இராவணன் அரக்கனாகிவிட்டான்...ஆனால்... கட்டிய மனைவி மீது நம்பிக்கை இல்லாது அவளை தீக்குளிக்க சொன்னவர்.....தெய்வமாகிவிட்டார். எப்படி இருக்கிறது கதை?

சைவம் உருவமற்ற கடவுளை போதித்தது....அன்பே கடவுள் என்றது.....

"ஓசையுள்ள கல்லை நீர்
உடைத்து ரண்டாய் செய்துமே
வாசலில் வைத்த கல்லை
மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்த கல்லில்
பூவும் நீரும் சாத்துறீர்!
ஈசனுக்கு உகந்த கல்லு
எந்த கல்லு சொல்லுமே!"

என்ற உயரிய சித்தந்தம் போதித்தது ஆனால் அந்தோ பரிதாபம் இந்த உயரிய நெறி சமைத்தவர்கள் குரங்காகவும், அரக்கனாகவும் போனதுதான் தாங்க முடியாத கொடுமை!


நமது காலத்திலும் கூட ஒரு இராமாயாணம் நடந்திருக்கிறது.....வடக்கிருந்து வந்த வீரர்கள் யார்......? வானரங்கள் யார்? அழிக்கப்பட்ட திராவிட மன்னன் யார் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்...

ஓரு விசயம் மட்டும் மாறாமல் இருக்கிறது.....தமிழன் எப்போதும் புத்திசாலியாகவும்.....அதே நேரத்தில் ஏமாளியாகவும்....காலங்கள் கடந்து வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறான் என்பது மறக்கவும் மறுக்கவும் முடியாத உண்மை!


தேவா. S

18 comments:

சிவராஜன் said...

ஓரு விசயம் மட்டும் மாறாமல் இருக்கிறது.....தமிழன் எப்போதும் புத்திசாலியாகவும்.....அதே நேரத்தில் ஏமாளியாகவும்....காலங்கள் கடந்து வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறான் என்பது மறக்கவும் மறுக்கவும் முடியாத உண்மை!

- ithu maara vendum , naam valum pothe , matram varum , matram varavillai entral matrathai undakkuvom , valka tamil ....

விடுத‌லைவீரா said...

ஏ தமிழினமே இன்னும் ஏன் உறக்கம். இனியும் நீ உறங்கி கொண்டிருந்தால் அண்டை மாநிலத்தானுக்கு அடிமையாகிவிட வேண்டிவரும். கொதிதெழுங்கள் என் தமிழனமே! அந்நியனுக்கு இதுவரை அடிமை பட்டது போதும்.வாய் பேச்சால் இனி ஒன்றும் ஆகாத நிலையாகிவிட்டது. இனி எப்படி எதால் அடக்க முடியுமோ அதை கொண்டு அடக்க தயாராகுவோம்..
நண்பர் தேவாவின் கட்டுரையை படித்த பின் நீங்கள் அனைவரும் உணர்வுபூர்வமாக சிந்திப்பீர்கள் என்று நம்புகிறேன்...
தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர் கிடைப்பதற்கும்,தமிழீழத்துக்கு தனி நாடு கிடைப்பதற்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து போராடுவோம்.

Anonymous said...

இராமன் செய்தது இக்காலத்தில் ஈழத்தில் நடந்த இன அழிப்புக்கு ஒப்பான கீழ்த்தரமான தந்திரங்களுடனும் துரோகங்கள், காட்டிக் கொடுப்புக்களுடனும் நடந்த மிகப் பெரிய இனப் படுகொலை என்பதில் ஐயமில்லை!

இராவணன் திருநெல்வேலி வீர சைவ வேளாளன் என்ற சாதிய பகுப்புக்குப் பின்னுள்ள உங்கள் அரசியல் எது?

இதெல்லாம் எங்க எழுதியிருந்து புடிச்சீங்க?
ஆதாரம் என்ன?

நல்லா அடிச்சு உடுறீங்கன்னு தான் சொல்லத் தோணுது, அவன் சிவனை வழி பட்டதை வைத்து சைவப் பிள்ளையாக்குவது தமாசான செயல்.
அவன் நாகர் அல்லது இயக்கர் குலத்தைச் சேர்ந்தவன், இக்குலம் திரவிட இனத்தில் முதன்மையானது, அதன் ஒரு பிரிவு போன்றது. அவன் காலத்தில் சைவப் பிள்ளை போன்ற பிரிவுலாம் வந்திருக்கறீங்களா?

மத்தது, சைவம் உருவ வழிபாடற்றதுன்னு ஒரு பாடலை போட்டு படம் காட்டி இருக்கீங்க!
சைவத்தில் இல்லாத உருவ வழிபாடா தொன்று தொட்டு ஆரியர் வருகைக்கு முன்பே இலிங்கம் முக்கண் எனத் தொடங்கி விட்டது. இப்போதுள்ள பொந்து மதத்துள் உட்செரித்திருக்கும் சைவத்தில் அதன் பிரிவுகளில் உள்ள உருவ வழிபாட்டு எதிர்ப்பு பிற்பாடு உள்வாங்கப் பட்டு ஒழிக்கப் பட்ட முற்கால உலகாய்த, சார்வாக, ஆசிவக கொள்கைகளிலிருந்து மீந்திருக்கும் அம்சங்கள். வள்ளலார் வேறு பிற்காலத்தில் வந்தார்!

dheva said...

//இராவணன் திருநெல்வேலி வீர சைவ வேளாளன் என்ற சாதிய பகுப்புக்குப் பின்னுள்ள உங்கள் அரசியல் எது?//


ஒரு அரசியலும் இல்லை தோழரே.... சைவ பிள்ளை என்று குறிப்பிட்டது கண்டிப்பாய் சாதியத்துக்குள் கொண்டுவரும் முயற்சி அல்ல...அதற்கான ஆதாரத்தை திரட்டி கொடுத்தால் கட்டுரையின் மையக்கரு அடிப்பட்டுப் போகும் ...என்பதனால் அதை பற்றி...விவரிக்கவில்லை. உங்களுக்கு ஆதராரங்கள் வேண்டுமெனில் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் நாம் அது பற்றி விவாதிப்போம். உங்களின் கருத்துக்களின் மேன்மையான கருத்துக்கு நன்றி... இனிமேல் வந்து படிக்கும் வாசகர்களின் கண்களுக்கு இந்த அவசியம் இல்லாத விசயம் உறுத்தலை கொடுக்கும் என்பதால் சாதி பற்றிய அந்த பாகத்தினை நீக்கிவிட்டேன்.

இவ்வளவு கருத்து தெரிவித்த நீங்கள் உங்களின் பெயரையும் வெளியிட்டு இருந்தால் நன்றாக இருந்திதிருக்கும் தோழரே!

soundar said...

நல்ல பதிவு இந்த பதிவை படிக்க வாய்ப்பு கொடுத்த dhevaக்கு நன்றி

தமிழ் அமுதன் (ஜீவன்) said...

// மனைவி மீது நம்பிக்கை இல்லாது அவளை தீக்குளிக்க சொன்னவர்.....தெய்வமாகிவிட்டார். எப்படி இருக்கிறது கதை?//

ஆமாம்..! இந்த கருத்து எனக்குள்ளும் உண்டு..!

உங்கள் பதிவுகள் மிக சிறப்பாக இருக்கின்றது தொடருங்கள் ..! நான் சமீபத்தில் படித்ததில் சிறந்த பதிவு இது..!

Chitra said...

////சாதி சமயம் என்றால் என்னவென்று தெரியாத திராவிட மக்களை சாதி சமய அடிப்படையிலான ஒரு சமுதாயமாக செய்யும் தொழிலின் அடிப்படையில் பிரித்தாளப்பட்டனர்.///..... news to me... I didn't know. Very interesting to read.

க.பாலாசி said...

இராமயணத்தைப் பொருத்தவரை நிறைய மாற்றுக்கருத்துக்கள் உள்ளன. கதை மாந்தன் இராமனைப்பற்றி சர்ச்சைகள் எண்ணிலடங்காது இன்றும் விவாதற்கு உள்ளாகின்றன. தாங்கள் கூறுவதும் அதுபோலவே.

கடைசியாக தாங்கள் சொன்னது உண்மை...

//காலங்கள் கடந்து வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறான்//

வீரநடையா????

soundar said...

ஜெய்லானி விருது வாங்கிய நண்பர் dhevaக்கு வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

//ஓரு விசயம் மட்டும் மாறாமல் இருக்கிறது.....தமிழன் எப்போதும் புத்திசாலியாகவும்.....அதே நேரத்தில் ஏமாளியாகவும்....காலங்கள் கடந்து வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறான் என்பது மறக்கவும் மறுக்கவும் முடியாத உண்மை//

உண்மையிலும் உண்மை.

dheva said...

வாழ்த்துக்களுக்கு நன்றி செளந்தர்!

dheva said...

நன்றிகள் மலிக்கா!

அகல்விளக்கு said...

//காலங்கள் கடந்து வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறான்//

வீரநடையா????

அதானே...

Anonymous said...

இராவணன் ஒரு தமிழன் ஆஹா இது புது செய்தியா இருக்கே ..
1 .இராவணன் சீதையை தூக்கிச் சென்றது அவளது அழகில் மயங்கி அவளை மணக்க அல்ல...என்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளவென்டும். லட்சுமணனின் மீது விருப்பம் கொன்ட சூர்ப்பனகையை அவமானப்படுத்தி (மூக்கை அறுத்தது எல்லாம் புராண விவரிப்புகள்) திருப்பி அனுப்பியவுடன், சூர்ப்பனகையை பிடிக்கவில்லையெனில் மறுத்திருக்கலாமே அன்றி அவமானப்படுத்துதலை எப்படி ஏற்றுக் கொள்வது என்று ராம லட்சுமணர்களுக்கு பாடம் புகட்டவே சீதையை கொண்டு சென்றான் இராவணன். அவன் தங்கைக்கு ஒரு தலை சிறந்த அண்ணன் வேறு என்ன செய்வான்?

சிறந்த ஒரு அண்ணன் என்ன செய்யுவான் சொல்லட்டுமா " ஏண்டி நாயே உனக்கு கலயனமான புருஷன் தான் வேண்டுமா என்று அவளே திட்டி அவளே நல்ல வழி காட்டியிருப்பா .
நீங்க சொன்னிங்க இராவணன் ஒரு திராவிடன் அப்போ தங்கை ஒரு தமிழச்சி எப்பிடி ஒரு கல்யாணமான ஆண்மகனை விரும்ப முடியும் ?
அப்புறம் சூர்பனகை சீதா தேவியே கொல்ல முயன்ற போது தான் லட்சுமணன் அவளை தண்டித்தான்.
தங்கையை தண்டித்த லட்சுமணனை தானே இராவணன் தண்டிக்க வேண்டும் ஏன் சீதா தேவியை தூக்கிட்டு போக வேண்டும் ?அவன் ஒரு அரக்கன் புத்தியும் அது போல் தானே இருக்கும்...
சீதா ஸ்வயம்வரம் போது சிவதனுஷ் தூக்க முடியாமல் தோற்று வந்தவன் தான் இந்த இராவணன் ...அப்போதே சீதா தேவியின் அழகில் மயங்கியவன் தான் இந்த இராவணன் .
2 .எல்லா பராக்கிரமும் கொண்டிருந்த இராவணேஸ்வரன் சீதை சிறைச்சேதம் தான் செய்து வைத்திருந்தான் கவர்ந்து செல்லவில்லை.
தான் கவர்ந்து சென்ற பெண்ணின் மீது ஒரு சுண்டு விரல் கூட படாமல் பத்திரமாக வைத்திருந்தவன்.

சீதா தேவியில் மேலே சுண்டு விரல் பட்டா அவன் தலை வெடிச்சு சிதறியிருக்கும் அந்த பயம் தான் சுண்டு விரல் கூட படாமல் பத்திரமாக வெக்க காரணம் .

3 .இரவணேஸ்வரன் என்ற ஒரு தலை சிறந்த திரவிட சைவ மன்னனை கொன்றழித்து விட்டு பின் என்ன பாவம் தீர ஒரு சிவனை வழிபட வேண்டியிருக்கிறது. இராவணனை கொன்றழித்த நோக்கமும், அவனின் சகோதரனை அவனிடம் இருந்து பிரித்து உபாயங்களை அறிந்து கொன்ற முறையும் போரிட்ட விதமும் போருக்கு ஆட்கள் சேர்க்க அண்ணன் தம்பி (வாலி மற்றும் சுக்ரீவன்)களை பிரித்தாண்டு வாலியை மறைந்து இருந்து கொன்றமையும் தானே குற்ற உணர்ச்சிகுள் விழச் செய்து இராமேஸ்வர ஸ்தலம் உருவக வழிசெய்தது? நல்லது செய்தால் ஏன் பாவ மன்னிப்பு? நடந்தது வதம் அல்ல...ஒரு கோர இன அழிப்பு!


இராமன் யாரேயும் பிரிக்கவில்லை,இராவணன் தப்பு பண்ணற என்று சொன்ன விபீஷணனை இராவணன் தான் இலங்கையே விட்டு வெளியேற்றினா ..
வாலி சுக்ரீவன் ராஜ்யதிர்காகே சண்டை போட்டு பிரிஞ்சாங்க ...ஹனுமான் வழி தான் இராமன் இவர்களே சந்தித்தான் ..

4 .இவ்வளவு கண்ணியமான இராவணன் அரக்கனாகிவிட்டான்...ஆனால்... கட்டிய மனைவி மீது நம்பிக்கை இல்லாது அவளை தீக்குளிக்க சொன்னவர்.....தெய்வமாகிவிட்டார். எப்படி இருக்கிறது கதை?
அடுத்தவன் மனைவியே கடத்திட்டு போறவன் எப்பிடி கண்ணியமானவன் ஆவான் ?இது தான் தமிழன் பண்பாடா?
நாடு மக்கள்காகை வாழ்ந்த அவதார புருஷன் தான் இராமன் .சீதா தேவி பவித்ரமனவள் என்று இராமனுக்கு தெரியும் ஆனா நாடு மக்களக்கு தெரிவிக்க தான் மனைவியே தீ குளிக்க சொன்னா ..


5 ."ஓசையுள்ள கல்லை நீர்
உடைத்து ரண்டாய் செய்துமே
வாசலில் வைத்த கல்லை
மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்த கல்லில்
பூவும் நீரும் சாத்துறீர்!
ஈசனுக்கு உகந்த கல்லு
எந்த கல்லு சொல்லுமே!"

கழுநீர் கால்வா புனித கங்கை ஒன்றாகுமா ?
உப்பு கல்லும் வைர கல்லும் ஒன்றாகுமா ?
தங்கமும் தகரமும் ஒன்றாகுமா ?
வழிபடும் கல்லும் (சிலை ) வழியில் இருக்கும் கல்லும் ஒன்றாகுமா?
தாயும் தாரமும் ஒன்றாகுமா ?

வால்பையன் said...

என்ன தான் அனானியா வந்தாலும் கொண்டைய மறைக்க முடியல!

தேவா!

ராமாயணம், மகாபாரதம் புனைக்கதைகள், அவற்றில் திரிப்பு என்று ஒன்றில்லை, காரணம் மொத்த கதையுமே கற்பனை தான், அதற்காக ஏன் கிராஸ் பெல்டுகளிடம் சண்டையிடுகிறார்கள்!


சிவன் செம மூடில் இருந்த போது பெருமாள் போய் குனிந்து நின்று பிறந்தது தான் அய்யப்பன் என்கிறார்களே, அதை பற்றி குடுமிகளிடம் கேட்டு பாருங்கள், ஒருபய எட்டிபார்க்க மாட்டேன்!

விடுத‌லைவீரா said...

அது ஒரு நகரம். அந்த நகரத்தின் சிறப்பே அந்த சிவன் கோயில்தான். அது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். நகரின் பெரிய கோயில், பாடல் பெற்ற ஸ்தலம் என்றால், கர்ப்பகிரகத்திற்குள் நின்று கொண்டு பக்தர்களுக்கும் – கடவுளுக்கும் இடையில் தரகர்களாக இருக்கிற பார்ப்பனர்கள்தான் அந்தக் கோயிலிலும் கடவுளுக்கான தகவல் தொடர்பு கருவியாக இருந்தார்கள்.
“நம்ம ஆளுங்களுக்கு பைத்தியம் பிடித்தால், வீட்டுக்குள்ள இருக்கிறதை எல்லாம் தூக்கி வெளியில் அடிப்பான். பாப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் இருக்கிறத எல்லாம் தூக்கி வீட்டுக்குள்ள அடிப்பான்” என்று சொன்னார்..

நான்கு கிருட்டினர்களில் இருந்து உருவாக்கப்பெற்ற கிருட்டினன் என்ற படிமம் முரண்களால் நிரப்பப்பெற்றும், அதனைக் வினாக்குள்ளாக்காது வழிபடும் மக்கள் மனோநிலையைச் சாடுகிறார். வருணாசிரமத்தை அறிவித்தவன் நானே என்று கீதையில் அறிவிக்கும் கிருட்டினன், மூன்று குணங்களை அடிப்படையாகக் கொண்டு நான்கு பிரிவுகளைப் படைத்தான் என்றால் மூன்றிலிருந்து நான்கு எப்படிச் சாத்தியம் என்ற வினா எழுப்பப்பட்டுள்ளது.

அவ்வாறே இராமன் ஏகப்பத்தினி விரதன் என்ற கற்பிதத்தின் மீது விசாரணை நடத்தி, வால்மீகியைச் சாட்சியாக வைத்து இராமன், நாளின் ஒரு பொழுதை அந்தப்புற மகளிரொடு கழித்தவன் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இராமன் விளைவித்த அறம் என்று சொன்னால் சம்புகன் என்ற பார்ப்பனரல்லாத ஒருவன் தவம் செய்தான் என்பதற்காக அவனைக் குற்றவாளியாக்கிக் கொன்றதுதான் என்பது வாலியை மறைந்திருந்து கொன்றதன் பின்புலத்தில் உள்ள சுக்கிரீவனுடான ஒப்பந்தமும், சீதை மீதான அவனின் ஐயமும், ஒரு மனிதப் பிறவிக்குத் தெய்வமுலாம் பூசப்பட்டிருக்கிறது என்பதே உண்மை என்பதை எடுத்துரைக்கிறது.

ராவணன் பெண் பித்தன், ராமன்தான் ஒருவனுக்கு ஒருத்தி என்று உயிராக வாழ்ந்தவன்’ என்று மூணு பொண்டாட்டிக்காரன் கதாகாலட்சேபம் செய்வதுபோல், பல பெண்பித்தர்களும், பக்தர்களும் ராமனுடைய சிறப்பு ‘ஏக பத்தினி விரதன்’ என்று சொல்கிறார்கள். ஆனால் டாக்டர் அம்பேத்கர் வால்மீகி ராமாயணத்தில் இருந்து ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகளோடு, ‘ராமன் ஒரு ஸ்திரீலோலன்’ என்று நிரூபித்திருக்கிறார்:
“ராமன் ‘ஏக பத்தினி விரதன்’ என்பது ஒரு சிறப்பாகக் கூறப்படுகின்றது. இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாததாக உள்ளது.

வால்மீகியே கூட தன் ராமாயணத்தில் ராமன் அனேக மனைவியரை மணந்து கொண்டதைக் குறிப்பிடுகிறார். மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் ராமன் வைத்திருந்தான்.”
“ராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்குப் பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது.

காலை முதல் நண்பகல் வரை ராமன் மத ஆசாரங்கள் மற்றும் சடங்குகளை நிறை வேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தை கழித்தான்.

அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் களிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான். ராமன் அந்தப்புரப் பெண்களோடு அனுபவித்த களியாட்டங்களை வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார்.

ராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாடடத்தில் சீதையையும் கலந்துகொள்ளச் செய்தான், என வால்மீகி குறிப்பிடுகிறார்.

அழகிகளின் மத்தியில் ராமன் குடித்துக் கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்பெண்களெல்லாம் ராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு பட்டனர்.”
‘ராமன் ஏக பத்தினி விரதன் அல்ல, ஏகப்பட்ட பத்தினிகள் விரகன்’ என்று அம்பலப்படுத்துகிறார் டாக்டர் அம்பேத்கர். இந்த ராமனின் ராஜ்ஜியம் வரவேண்டும் என்பதுதான் காந்தியின் கனவாக இருந்தது. காந்தியின் கனவு நினைவாகி இருந்தால்.. நினைக்கவே கூசுகிறது. உண்மையில் ராம ராஜ்ஜியம் என்பது, காம ராஜ்ஜியம்தான்.

dheva said...

பெயரில்லாமல் பின்னூட்டமிட்டுள்ள மரியதைக்குரிய எமது வாசகருக்கு வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்!

என்னுடைய தளத்திற்கு வரும் நீங்கள் அடையாளம் இல்லாமல் வந்து பதிவிடுவது கொஞ்சம் வருத்தமாய் இருக்கிறது. இது கருத்துக்களின் களம். என்னுடைய பதிவின் ஆரம்பத்திலேயே விளக்கியிருக்கிறேன்...பின்னூட்டங்களின் மூலம் தெளிவான நிலையை எட்டலாம் என்று..... என் முதல் கேள்வி இதுதான்.... நியாயமான உங்களின் கேள்விகளை கேட்பதற்கு.....


" நீங்கள் ஏன் முகமூடி இட்டுக் கொண்டு ஒரு பெயரில்லா வாசகாராய் வரவேண்டும்? "


நீங்கள் யாரென்ற அடையாளத்தோடு வாருங்கள்....பிறகு நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்! உங்களை சகலவிதமான மரியாதையுடன் என்னுடைய தளம் நடத்தும்...என்று உறுதியளிக்கிறேன்.....! வருங்கள் நண்பரே.... நண்பராய்!

LK said...

விடுத‌லைவீரா said.

can you give me the book name in which ambedkar has written like this.??