Skip to main content

அறைவீடு.....!


.















எப்போது எது வேண்டுமானாலும் எங்க தாத்த கிட்டதான் கேக்கணும்..அரிசி வேணும்னாலும் சரி...பருப்பு வேணும்னாலும் சரி... எண்ணை வேணும்னாலும் சரி..அறவீடு என்று சொல்லக் கூடிய அந்த பிரத்தியோகமான சிறிய அறையின் சாவி தாத்த கையிலதான். 75 வயசனாலும் அவரது பேச்சில் நிதானம் குறையவில்லை! நெடு நெடு உயரம் செக்க செக்க சிவந்த மேனி..... முன் நெற்றியில் ஏறிய வழுக்கை வெள்ளை வெளெர் முடி கழுத்தில் ஒற்றை ருத்ராட்சம்...முன் நெற்றி முழுதும் பட்டையய் பூசிய திரு நீறு. தலை மட்டும் லேசாய் ஆடத்தொடங்கியிருந்தது.

சின்ன வயதில் விடுமுறைக்கு தாத்தா வீட்டுக்கு போன உடனேயே அவர் கிட்டதான் எல்லோரும் போவோம்... ! என்னுடைய கையை அழுந்த பிடித்து நல்லாயிருக்கியா அப்புன்னு அவர் கேட்பதிலும் கையின் அழுத்தத்திலும் அவரின் அன்பு தெரியும். 6 பெண் பிள்ளைகளும் அதற்கப்புறம் எங்க அப்பாவும் பிறந்ததனால் அவருக்கு ஆண் பிள்ளைகள் என்றால் பிரியம் என்று அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன். அதுவும் மகன் வயித்து பேரன் என்பதால் தாத்தவின் பிரத்தியோக அன்பு எனக்கு கிடைக்கும்.

அதிகாலையில எழுந்துடுவாரு எத்தன மணின்னு சொல்ல முடியல எனது அரைத்தூக்கத்தில்...."தென்னாடுடைய சிவனே போற்றி! எந் நாட்டவருக்கும் இறைவா போற்றி" என்று கூறி கம கம என்று அவர் விபூதி பூசுவதை பார்த்திருக்கிறேன். காலை எழுந்தவுடன் அவர்களின் ஒழுக்கம் அது என்று பின்பு புரிந்து கொண்டேன். வீட்டில் எல்லோரும் 4 அடி தள்ளி நின்றுதான் பேசுவார்கள்.

ஒவ்வொரு முறையும் அப்பத்தா...ஏதாவது கேட்க அவர் அதட்டலோடு அறவீட்டு கதவு திறந்டு யாரும் உள்ளே பார்க்காத அளவிற்கு கதவை சாத்திவிட்டு உள்ளே போய் அரிசியோ பருப்போ எடுத்துக் கொடுப்பார். அவர்தான் கொடுக்கவேண்டும் இல்லையென்றால் அனாவசியாமாய் விரையம் செய்து விடுவார்கள் என்பது அவருடைய எண்ணம். இருட்டில் லந்தர் வெளிச்சத்தில் அவரு உள்ளே நிற்கும் போது அவரின் வைரகடுக்கண் தோடு மின்னுவதை நான் ஒளிந்து இருந்து பார்த்து இருக்கிறேன். அவருக்கு உடல் நலன் சரியில்லாத நேரத்திலும், மேலும் அப்பாத்தவின் சில தேவைகளுக்கும் அப்பத்தா மட்டும் அறவீட்டுக்குள் சென்று வருவதை கவனித்து இருக்கிறேன்.

எப்பவும் தாத்தாவின் இடுப்பில் இருக்கும் அறவீட்டு சாவி....உள்ளே என்னதான் இருக்கும் என்ற குறு குறுப்பு எனக்கு அதிகமாகவே இருந்தது. ஒரு தடவை என் கடைசி அத்தை உள்ளே போய் விட...." உன்ன யாரு உள்ளே வரச் சொன்னது என்று " தாத்த போட்ட கூச்சலில் மீதமுள்ள யாருக்கும் அந்த பக்கம் கூட போக தோணவில்லை.


அவரை பொறுத்தவரை அது ஒரு ஒழுக்கம். அவர்களின் பிரைவசி அங்க என்ன இருக்குன்னு உங்களுக்கு என்ன அக்கறை அப்படிங்கிற ஒரு கோபம்! கோடி கோடியா ஒண்ணும் இல்ல அப்பு...எதுக்கு அவசியம் இல்லாம எதுக்கு வரணும்கிறேன்..அப்படின்னு அப்பாகிட்ட சாந்தமாய் தாத்தா விளக்கம் கொடுப்பதையும் நான் கவனித்திருக்கிறேன். 1981 கடைசியில வீட்டுக்கு கரண்ட் இழுத்த சமயத்தில் கூட வயரிங் ஆளு உள்ள போறதயும் வெளில வரதயும் ஒரு பதை பதைப்போடு பார்த்துக் கொன்டிருந்தார் தாத்தா....! சாணம் மெழுகிட்டு இருந்ததாப்ப ஒரு பூச்சு பொட்டு வராது..... நோய் நொடி எதுவும் வராது எதுக்கு சிமிண்ட் போடணும்கிறன்னு அவர் கேட்ட போது ....எனக்கு ஒன்ணும் புரியல.

1982 ஒரு மார்கழி மாதத்துல தாத்தா சிவலோக பதவி அடஞ்சுட்டார்.....! வீட்டுத் தோட்டத்தில் அவரை அடக்கம் செய்தோம் அவரின் வேண்டுகோளுக்கிணங்க...ஒரு பிரின்சிபில் மேன்...! வீட்டுக்கு வந்து முதல் காரியம எங்க அறவீட்டு சாவின்னு தேடிய போது ....அது அப்பத்தாவின் இடுப்பில் ஏறி இருந்தது. அந்த சாவிய கொடுங்க அப்பத்தான்னு கேட்டப்ப அத்தன துக்கதுலயும் .....ஏன் அப்பு என்ன வேணும் சொல்லு நான் தாரேன்னுச்சுப் பாருங்க....! மீண்டும் அவர்களின் அந்த உறுதியான ஒரு பிரைவசி விளங்கியது. அதற்கு மரியாதை கொடுத்து யாரும் அதைகேட்பதையே மறந்து போனோம்.

காலங்கள் ஓடி ஓடி...2000 வருடத்திறுகு கொண்டு வந்து எங்களை நிறுத்திய சமயத்தில்....அப்பத்தா மட்டும் தான் வீட்டில் இருந்துச்சு....மகள்கள் எல்லாம் திருமணத்திற்கு பிறகு சென்றுவிட....அப்பாவும் நாங்களும் அப்பாவின் வேலை நிமித்தம் வேறு இடத்தில் இருக்க..... நடை உடையா இருந்த அப்பத்தா ஒரு மார்ச் மாதம் இறந்து போய் விட்டார்கள்.

இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்து உறவுகள் எல்லாம் வெளியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்....6 அத்தைகளும் அவர்களின் பிள்ளைகளும், என் அப்பாவும் எனது குடும்பமும் வெளியே பேசி கொண்டிருந்தார்கள்....! கல்யாண சாவு இதுப்பா ஒரு அத்தை அப்பாவிடம் சொல்லி கொண்டிருந்தார்...எத்தனை பேரன் , பேத்திகள்....! ஒரு கட்டத்திற்கு மேல் இறப்பை உறவுகளே அங்கீகரிக்கின்றனர்.....!அழுகை எல்லாம் நின்று...ஒரு புரிதல் வந்து விடுகிறது என்று எண்ணிக் கொண்டிருந்த என் முன்....ஆணியில் அறவீட்டு சாவி......ஆடிக்கொண்டிருந்தது. எஜமானர்களின் இடுப்பை அலங்கரித்து தனக்க்கு என்று ஒரு தனியடம் வைத்திருந்த சாவி.....யார் எஜமானர் என்று தெரியாமல் தற்காலிகமாய் ஆணியில் ஆடிக் கொண்டிருந்ததா.....அல்லது அழுகையில் விசும்பிக் கொண்டிருந்ததா என்று தெரியவில்லை.

ஒ.....ஓஒ.... பிரைவசி...பிரைவசி என்று மனிதர்கள் போற்றிக் கொண்டிருந்த..... அந்த பிரைவசி இப்போது என் கண் முன்னே ஆடிக் கொண்டிருந்தது.....எல்லோரும் மறந்து போன அல்லது அவர்களின் சுவரஸ்யத்து தீனி போடாத அறவீட்டு சாவி......இப்போது என்கையில்......! பெரிய விசயங்கள் ஏதும் இல்லாவிட்டாலும்....என்னதான் இருக்கிறது என்று பார்ப்போம் என்ற அரைகுறை புரிதலுடன் கூடிய மனதுடன்.......அறவீட்டை திறந்தேன்.....எனது காதுகளில் " தென்னாடுடைய.......தாத்தாவின் குரல் ஒலிக்க..மனம் இருட்டில் பள பளக்கும் அவரது வைரத்தோட்டை நினைவு படுத்த.....மிக நீளமான கனத்த சாவி கையில் கனக்க.....கூடவே சேர்ந்து மனமும் கனக்க...

" கிறீச்.......கிறீச்......."சப்தத்தோடு......பெரிய.தேக்கு மர பூண் போட்ட கதவு திறந்து வழிவிட....உள்ளே செல்கிறேன்.



(பதிவின் நீளம் கருதி இப்போதைக்கு நிறுத்தி.....கண்டிப்பா அடுத்த பதிவில் முடிச்சிடுறேங்க........)



தேவா. S

Comments

மண் வாசம் வீசுகிறது. மீண்டும் ஒரு எதிர்பார்ப்போடு நிறுத்தி இருக்கிறீர்கள் தொடருங்கள். காத்திருக்கிறேன்
விஜய் said…
anna, nijama alakaa erukku, neenka eluthura visayam
நல்ல பகிர்வு நண்பரே....

அருமையாக எழுதியுள்ளீர்கள்...

இறுதி பாகத்தை எதிர்நோக்கியிருக்கிறேன்...
இதை படிக்கும் பொது என்க்கு எங்க தாத்தா ஞாபகம் வந்தது
குடும்பம்...இப்போது எல்லாம் குடும்பங்களை பார்க்க முடிவதில்லை.தேடி கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. எங்காவது ஓரிரு குடும்பங்கள் குடும்பமாக இருக்கிறார்கள். பழைய நினைவுகளுக்கு கொண்டு போய் விட்டீர்கள். அது எல்லாம் ஒரு சந்தோசக்காலம்.இனி நினைத்தாலும் வராது...
ஆனால் இன்றோ தாத்தா பாட்டி பழையவீட்டிலும்,அம்மா,அப்பா முதியோர் இல்லத்திலும் குழந்தைகள் விடுதிகளிலும் கணவனும் மனைவி அவசர குடும்பமும் நடத்தி வருகிறார்கள்.
ஆனால் இன்றும் செக்கில் பூட்டிய மாடாய் பழைய காலத்து நினைவுகள் வந்து கொண்டுதானிருக்கிறது.
யார் மீது குற்றம் சுமத்துவது?? எல்லாம் புரியாத புதிராய்தான் இருக்கிறது...

என்ன தேவா தொடர்கதை எல்லாம் தொடங்கி இருப்பது போல இருக்கு?? சரி சரி காத்திருக்கிறோம்.
எங்கள் தாத்தா வீட்டிலும் இதை போன்ற ஒரு அறை வீடு உண்டு.
\\எஜமானர்களின் இடுப்பை அலங்கரித்து தனக்க்கு என்று ஒரு தனியடம் வைத்திருந்த சாவி.....யார் எஜமானர் என்று தெரியாமல் தற்காலிகமாய் ஆணியில் ஆடிக் கொண்டிருந்ததா.....அல்லது அழுகையில் விசும்பிக் கொண்டிருந்ததா என்று தெரியவில்லை.\\
நல்லா எழுதியிருக்கீங்க.
Anonymous said…
அருமையா எழுதறிங்க மீதி பாகம் படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்
நல்லா விறுவிறுப்பா போகுது. முக்கியமான இடத்துல நிறுத்திட்டீங்களே?
எங்க பாட்டியும் யாரையும் உள்ளவிட மாட்டாங்க. திண்பண்டம் ஏதாச்சும் கேட்டோம்னா உள்ள போய் எடுத்துகிட்டு வருவாங்க. சிறு வயதில் உள்ள போய் பார்க்கனும்னு தோன்றும் ஆனா பாட்டி விடமாட்டாங்க. கதவின் இடுக்கு வழியா பாத்தாலும் ஒரே இருட்டா இருக்கும்.

பின்னூட்டம் பதிவாக மாறக்கூடிய அபாயம் இருப்பதால் இதோடு நிறுத்திக்கொள்கின்றேன். அருமையான பதிவு.
movithan said…
அசத்தலான நடை.
மீதிக்கதைக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றேன் .
அருமையா இருக்கு பழைய நினைவுகள்...மீதியையும் சீக்கிரமா போடுங்க..
அனு said…
என்னங்க.. இப்படி suspenseல தொடரும் போட்டுடீங்க.. என்னன்னு ஒரே ஆர்வமா இருக்கு.. சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க.. waiting..
earnguru said…
wonderful writing style
அருமை..! அருமை ..! தொடருங்கள்..!
ஹேமா said…
எங்கள் தாத்தா ஒரு றங்குப்பெட்டி வைத்திருந்தார் !நல்ல பதிவு தேவா.அருமையா எழுதியிருக்கீங்க.
dheva said…
கார்த்திக்
தம்பி தளபதி விஜய்
அகல் விளக்கு ராஜா - சீக்கிரமே போட்டுடலாம் பாஸ்!
தம்பி சவுந்தர்
அம்பிகா.... - முதல் வருகைக்கு நன்றி...! தொடர்ந்து வாருங்கள்!
ஜெயந்தி - மிக்க நன்றி ! தொடர்ந்து வாருங்கள்!
மால் குடி - முதல் வருகைக்கு நன்றி நண்பரே...தொடர்ந்து வாருங்கள்!
ஜெய்லானி....
அனு - முதல் வருகைக்கு நன்றி! தொடந்து வாருங்கள்!
குரு - முதல் வருகைக்கு நன்றி!
தமிழ் அமுதன்
ஹேமா - முதல் வருகைக்கு நன்றி! தொடர்ந்து வார்ங்கள்!


பின்னூட்டமிட்டிருக்கும் எனது மற்ற எல்லா நண்பர்களுக்கும் மிக்க நன்றி...! கண்டிப்பாய் உங்களின் பின்னூட்டங்கள் எனக்கு உத்வேகத்தை அளிக்கின்றன....!
lcnathan said…
TIRUNELVELI MAAVATTATHIL THAN INTHA MAATHIRI "ARAVEEDU" IRUKKUM! ILAMAIKKALA NINAIVUKALAI VELI KONDUVANTHA VITHAM ARUMAI! JANNALE ILLAMAL IRUTTAKA IRUKKUM ARAVEETIL YAARUKKUM THERIYAAMAL NULAIVATHU ORU THANI INBAM!!!HM...HM.!! ATHU ORU NILAKKAALAM!!!!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...