Skip to main content

நட்ப கூட கற்பு போல எண்ணுவேன்!




நட்பு பற்றி எதுவும் எழுதுவதில்லை என்பது... சிங்கப்பூரில் இருந்து என் நண்பன் சிறுகுடி ராமு அவ்வப்போது என் மீது வைக்கும் குற்றச்சாட்டு.

ஓராயிரம் நண்பர்கள் நம்மைச்சுற்றி இருந்தாலும் மிகைப்பட்ட பேர்கள் நம்மால் நேசிக்கப்படுபவர்களாக இருப்பார்கள் ஆனால்... நம்மை நேசிப்பவர் என்பவர்கள் அதிக பட்சமாக ஒருவர் அல்லது இருவராயிருக்க முடியும். இது அடையாளம் காண்பதற்கரிய ஒரு கடினமான விசயம்தான் என்றாலும் காலத்தின் ஓட்டத்தில் எல்லாம் கற்பூரமாய் கரைந்து விட ஏதோ ஒரு சுடர் மட்டும் ஒளி விட்டு வீசிக் கொண்டிருக்கும். அந்க ஒளி மழையிலும், காற்றிலும், புயலிலும் நம்மைச் சுற்றி வெளிச்சம் வீசிக் கொண்டிருப்பதை சட்டென்று ஏதோ ஒரு கணத்தில் உணர முடியும் அப்படிப்பட்ட என்னைச் சுற்றிய வெளிச்சம்தான்..........


சலீம்



இப்போது கூட இப்படி நான் எழுதுவதை அவன் மிகைப்படுத்தி கூறுவதாக கூறி நிராகரித்து விட்டு அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சாதாரணமாய் சொல்லக் கூடிய அளவிற்கு நட்புக்கரசன் அவன். நல்ல நண்பனுக்கான அளவீடு என்ன...? நான் சொல்கிறேன்....

1) ஒட்டு மொத்த உலகமும் என்னை மீது களங்கம் கற்பித்து அதற்கான ஆதரங்களைத் திரட்டிக் கொடுத்தாலும்...தனி ஒருவனாய் ஒட்டு மொத்த உலகத்திடமும் தனி ஆளாய் வாதிடுவான் ....அவனைப்பற்றி எனக்குத் தெரியும்...உங்கள் வேலையைப்பார்த்துக் கொண்டு செல்லுங்கள் என்று...!


நட்பு என்பது நம்பிக்கை.... !


கடுமையான சூழல்களிலும் அவனின் செயல்பாட்டிலும் முடிவெடுத்தலிலும் எனக்குள் தோன்றிய விசயம் இது!

2) எந்த சூழலிலும் தன்னால் நேசிக்கப்படுபவர் எந்த கஸ்டமும் படக் கூடாது என்று நினைப்பது உண்மையான நேசிப்பு இதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... நட்பு..காதல்...பாசம்... எதுவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... நான் வைத்திருக்கும் பெயர்....சலீம்! என்னை இதுவரை தர்மசங்கடமான சூழ் நிலைக்கு எப்போதுமே அவன் உட்படுத்தியது இல்லை. ஏதாவது தேவை என்றால்... கூட...என்னிடம் கேட்காமல்...என்னுடைய எல்லா தேவைகளையும் நான் கேட்காமலேயே பூர்த்தி செய்வான்....!

நட்பு என்பது நேசித்தல்!

3) ஒரு முறை தூக்கத்தில் எனக்குப் புறையேறி... நான் மூச்சுத்திணறிக் கொண்டிருந்த போது....அவசரமாய் எழுந்து தண்ணீர் கொடுத்து, முதுகு தட்டி..என்னை ஆசுவாசப்படுத்திய போது ....எப்போதும் தைரியமான அவனின் கண்களில் கண்ணீரைப் பார்த்த போது அம்மாவின் ஞாபகம் என்னைக் கேட்காமலேயே வந்தது...!


நட்பு என்பது தாய்மை!

4) கொளுத்தும் ஏப்ரல் மாத வெயிலில் வேலை தேடி நான் வெளியே சென்று விட்டு மதியம் மூணு மணி வாக்கில் அறைக்குள் நுழையும் போது எனக்காக உணவு வாங்கி வைத்து விட்டு அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி சாப்பிடாம இருக்காத... சாப்பிடு கண்டிப்பாக வேலை கிடைக்கும் அத பத்தி கவலைப்படாத என்று சொல்வான்...!


நட்பு என்பது மனோதைரியம்!

5) ஒரு நாள் அவனுக்கு கையில் சிறிய ஆபரேசன் செய்ததை நேரே பார்த்து நான் ஒரு மயக்க நிலைக்கு வந்த போது தன் வலியை மறைத்துக் கொண்டு நீ போய் வெளியே உட்காருடா....என்று தன்னுடைய தைரியத்தை எனக்கு கொடுத்தான்...!


நட்பு என்பது தியாகம், விட்டுக் கொடுத்தல்., சந்தோசப்படுத்துதல், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

இன்றுவரை ....எதையுமே எதிர்பார்க்காமல் வாரத்திற்கு இருமுறை பேசினாலும் அர்த்தம் பொதிந்தவனாய் நிழல் போல தொடர்ந்து கொண்டிருக்கிறான் என் நண்பன்! இன்னும் சொல்லப் போனால் எனக்கான தற்போதைய எல்லாவற்றுக்கும் அவனே...காரணம்! அதிகம் நான் சொல்வதை அவன் விரும்பப் போவதில்லை...ஏனென்றால் புகழ்ந்தால் தொடரும் நட்பல்ல இந்த நட்பு...! என் மீது தவறென்றால் தனியாக கூப்பிட்டு காட்டு காட்டென்று காட்டிவிடுவான்....! எவ்வளவு திட்டினாலும் எதார்த்தமாய் தோளில் கை போட்டு ஆறுதலாய் அந்த விசயத்தை உள்ளே புகட்டி விடுவான்! என் வாழ்வின் சாரதி......என் சலீம்...! இன்னும் ஒரு 7 ஜென்மம் நான் பிறந்தாலும் அவனளவுக்கு நான் இருப்ப்பேனா என்பது சந்தேகம்....!

என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துங்கள் அவனுக்கான இந்த பிறந்த தினத்தில்.....!


30.05.2010



தேவா. S

Comments

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்... சலீம்
AltF9 Admin said…
கொளுத்தும் ஏப்ரல் மாத வெயிலில் வேலை தேடி நான் வெளியே சென்று விட்டு மதியம் மூணு மணி வாக்கில் அறைக்குள் நுழையும் போது எனக்காக உணவு வாங்கி வைத்து விட்டு அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி சாப்பிடாம இருக்காத..

- velai ellam kedaikkum vidu , sappadu nalla irunthucha ,

Valthukkal anna, ippadi ethavathu eluthunana padichuddu vote poduven illana vote maddum than poduven ok....
இத்தகைய நண்பர் இந்த காலத்தில் கிடைப்பது மிக அரிது. உங்கள் நண்பருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அண்ணா நண்பர் சலீம் அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவியுங்கள். தாய் தந்தைக்கு அடுத்த நிலையில் அந்த அன்பையும், அக்கரையினையும் கொடுப்பவர்கள் வாழ்க்கைத்துணையும், நண்பர்களுமே.
Anonymous said…
உங்க நண்பர் சலீம் அவர்களக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
S Maharajan said…
"நீ என்னிடம் பேசியதை விட
எனக்காக பேசியதில் உணர்ந்தேன்
நம்ம நட்பை."

"நட்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்"

நம் (தேவா)நண்பருக்கு என்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
"நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே"
Kousalya Raj said…
உங்கள் நட்பும், உங்கள் நண்பரும் பல்லாண்டு வாழ என் அன்பான வாழ்த்துகள்
Riyas said…
Happy birth day for ur friend Saleem
தாங்களும், தங்கள் நண்பரும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
@@@Kousalya// உங்கள் நட்பும், உங்கள் நண்பரும் பல்லாண்டு வாழ என் அன்பான வாழ்த்துகள் //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
dheva said…
ஜீவன் பென்னி
தம்பி சிவராசு
நண்பர் கார்த்திக்(LK)
தம்பி சவுந்தர்
தோழி சந்தியா
நண்பர் மகராஜன்
தோழி கெளசல்யா நண்பர் ஆரண்ய நிவாஸ் இராமமூர்த்தி
நண்பர் ஜெய்லானி...(பக்கதுல சார்ஜாவுல இருந்து கிட்டு துபாய்ல இருக்க எனக்கு ஒரு கால் பண்ண மாட்டேன்கிறீங்க பாஸ்)
தம்பி ரியாஸ்



என்னொடு சேர்ந்து என் நண்பனை வாழ்த்திய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்!
நண்பர் சலீமுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

கடந்த மூன்று நாட்களாக மலேசியாவிற்கு பறந்துவிட்டபடியால், இணையத்தில் உலவ இயலவில்லை.. நண்பர் சலீமின் பிறந்தநாள் பற்றி அறியும் வாய்ப்பும் இல்லாமல் போய் விட்டது....

நான்தான் கடைசியாக வாழ்த்து சொல்லும் ந(ண்)பர்... அதனால் என்ன!! இது அடுத்து வரும் பிறந்தநாளுக்காகவும் சொன்னது போலாயிற்றே... இப்போது நான்தான் முதல் பிறந்தநாள் வாழ்த்து சொல்வது... எப்பூடி!!!
///நட்பு பற்றி எதுவும் எழுதுவதில்லை என்பது... சிங்கப்பூரில் இருந்து என் நண்பன் சிறுகுடி ராமு அவ்வப்போது என் மீது வைக்கும் குற்றச்சாட்டு.///

ரொம்ப நன்றி மாப்ள!!

"நட்புன்னா இப்படிதாண்டா இருக்கணும்....!" அப்படின்னு சொல்றமாதிரி நட்பு உங்களோடதுன்னு புரிஞ்சுகிட்டேன்.... எனக்கே ரொம்ப பொறாமையா இருக்குடா.... மனசு கலங்குதுடா, ஆனந்தத்துல...
VELU.G said…
உங்கள் நன்பருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நல்ல பகிர்வு தேவா
எனது வாழ்த்துக்களும் சலீம் ...
நல்ல நட்புகள் கிடைக்கப் பெற்றோர் பேரு பெற்றவர்கள் ...
சற்று பொறாமை தான் ...
வருகிறேன் தேவா ...
Chitra said…
1) ஒட்டு மொத்த உலகமும் என்னை மீது களங்கம் கற்பித்து அதற்கான ஆதரங்களைத் திரட்டிக் கொடுத்தாலும்...தனி ஒருவனாய் ஒட்டு மொத்த உலகத்திடமும் தனி ஆளாய் வாதிடுவான் ....அவனைப்பற்றி எனக்குத் தெரியும்...உங்கள் வேலையைப்பார்த்துக் கொண்டு செல்லுங்கள் என்று...!



..... It is a blessing to have friend like this!
Chitra said…
.ஏனென்றால் புகழ்ந்தால் தொடரும் நட்பல்ல இந்த நட்பு...! என் மீது தவறென்றால் தனியாக கூப்பிட்டு காட்டு காட்டென்று காட்டிவிடுவான்....! எவ்வளவு திட்டினாலும் எதார்த்தமாய் தோளில் கை போட்டு ஆறுதலாய் அந்த விசயத்தை உள்ளே புகட்டி விடுவான்! என் வாழ்வின் சாரதி


...... Ultimate! May the Lord continue to bless this friendship! :-)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த