Skip to main content

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் IV















இடைவிடாத தொடர் நிகழ்வுகளும் எண்ணங்களும் ஏதேதோ திசையில் எப்போதும் இழுத்துச் செல்லும் அப்படித்தான் இந்த தொடரையும் தொடரவிடாமல் எங்கெங்கேயோ சென்று விட்டேன்...சரி..மீண்டும் ஒரு யூ டர்ன் அடித்து தொடருக்குள் நுழைவோம். பிளேடுடன் நான் வேறு ரொம்ப நேரம் ஸ்டில் பொசிசனில் எவ்வளவு நேரம் நிற்பது....

இது வரை

பாகம் I - http://maruthupaandi.blogspot.com/2010/05/blog-post_02.html
பாகம் II -http://maruthupaandi.blogspot.com/2010/05/ii.html
பாகம் III- http://maruthupaandi.blogspot.com/2010/05/iii_07.html


இனி....

அறைக் கதவை தாளிட்டுக் கொண்டு பிளேடையே பார்த்துக்கொண்டிருந்த நன் வலது கை ஆட்காட்டி விரலுக்கு அருகே பலமுறை பிளேடை கொண்டுபோனாலும் கையை வெட்டிக்கொள்ள முடியாமல் ஏதோ ஒன்று பின் இழுத்தது அதற்கு பெயர் பயமா அல்லது ஆழ்மனது எனக்கு அறியாமல் தடுத்ததா?என்று எனக்குத் தெரியவில்லை. பிளேடால் கையை வெட்டினால் வலிக்கும் என்று நன்கு அறிந்திருந்த மனதை ரஜினி ரசிகன் என்னு ஒரு கவர்ச்சி மெல்ல மெல்ல பின்னுக்குத் தள்ளியது.


மெல்ல கைகளால் வலிக்காதவாறு பிளேடால் வலது கை ஆட்காட்டி விரலால் சுரண்டினேன் (வெட்ட வில்லை...) ஏன்னா வலிக்கும்னு தெரியும் ஆனாலும் வலிக்காம இரத்தம் வந்து அதிலே இருந்து எழுதணும் இது போலியான மனசு எனக்கு சொன்ன விசயம் ஓ...மெல்ல சுரண்டியதில் விரல் லேசாக கீறப்பட்டு லேசாக இரத்தம் வெளியே வந்தது ஆகா....இது போதும் என்று கொஞ்சமாய் வந்த விரலை அமுக்கி அமுக்கி..... ஒரளவுக்கு எழுதி விட்டேன்.....

" ரஜினி வாழ்க" என்று.... ! ஒரு வெற்றியுடன் யாருமறியாமல் குறைந்த அளவு வலியில் எழுதிய அந்த எழுத்துக்களைப் பார்த்து என்னை நானே பெரிய ரசிகனாக நினைத்துக் கொண்டேன் பெரிய தியாகி ரேஞ்சுக்கு மனசு கற்பனை செய்து விவரித்துப் பார்த்தது...அந்த விவரிப்பே எனக்குள் என்னைப்பற்றி பெரிய பச்சாபத்தை உண்டு பண்ணியது. நான் பெரிய சாதனை செய்து விட்டதாக கற்பனை செய்து கொண்டதை மனம் நிஜம் என்று நம்பத்தொடங்கியது. அன்புள்ள ரஜினிகாந்தே ஆசையில் ஓர் கடிதம் என்ற ரேஞ்சில் ஆரம்பித்து மாவீரன் படத்தை 10 தடவை பார்த்தேன் (பார்த்தது 1 தடவை அதுக்கும் அப்பா கிட்ட அடி வாங்கி கெஞ்சி கூத்தாடி படம் பார்க்க நான் பட்ட பாடு.....) என்று கோழிக் கிறுக்கல் கையெழுத்தில் கிறுக்கி அந்த லெட்டர் கவரை போஸ்ட்டும் செய்துவிட்டேன்.


ஒரு சாதாரண ரசிகனாய் இருந்து லெட்டர் எழுதி ரஜினியின் பதில் பெறுவதற்கு எத்தனை எத்தனை வேடிக்கைகள், ரஜினியிடம் இருந்து லெட்டர் வந்து விட்டால் அதை எல்லோரிடமும் காட்டி பெருமை அடித்துக்கொள்வதில் எவ்வளவு மும்முரம்.....எங்கே கோளாறு ரஜினி என்ற நடிகனிடமா? இல்லை அந்த நடிகனின் புகழோடு என்னை இணைத்துக் கொண்டு நான் பிரபலமாகும் முயற்சியா? என் எதிர்பார்ப்பை, நான் பிரபலமாவதை ரஜினியின் பதில் கடிதம் தீர்மானிக்கும் என்ற காரணத்தால் தினசரி வரும் தபால்காரரை எதிர்பார்த்து காத்திருப்பேன். அது ஒரு மே மாதம் என்பதால் பள்ளி விடுமுறை நேரம் மதியம் 2 மணிக்கு வரும் தபால்காரருக்காக தவமிருக்க ஆரம்பித்தேன்.....


நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தன...அந்த ஒரு நாள் என் கையில் ஒரு கடிதம் கொடுக்கப்பட்ட நொடியில் தபால்காரர் உலகின் தலை சிறந்த மனிதராக எனக்குப்பட்டார்! ஆமாம் ரஜினியிடம் இருந்து பதில் கடிதம்ங்க......இறக்கை இல்லாமல் பறந்தேன் தெரு முழுதும் கேட்குபடி....

" ரஜினீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ லெட்டர் வந்துருச்சுடோய் " கத்திக் கொண்டே வீட்டுக்குள் போய்... கவரை பிரித்து பார்த்கேன். அதில் அன்புள்ள .. என்பதும் மற்ற பாகங்கங்கள் (ரஜினியின் கையெழுத்து உள்பட ) எல்லாமெ ஏற்கெனவே பிரிண்ட் செய்யப்பட்டது என்னுடைய பெயரை மட்டும் பேனாவால் எழுதி இருந்தார்கள்....அதுவும் ரஜினிதான் எழுதியிருப்பாரா என்பதும் சந்தேகமே....இருந்தாலும் எனக்கு அது ஒரு மறக்க முடியாத வெற்றி நாளாய் அமைந்து போனது. மாலை நேரம் லெட்டரை என்னுடைய சட்டையில் வைத்து குத்திக் கொண்டு திரியாத குறையாக எல்லோரிடமும் காண்பித்தேன். பக்கத்து வீட்டு பாபுவை அதாள பாதாளத்திற்கு தள்ளி விட்டு .. நான் மட்டுமே ரஜினியின் ஏகபோக ரசிகன் என்று நினைத்துக் கொண்டேன்.

லெட்டர் வந்ததாலேயே நான் ரஜினிக்கு நெருக்கமாகிப் போனதாய் உணர்ந்தேன். இப்படித்தான் ரசிகனாய் இருக்கும் அத்தனை பேரும் தனக்கும் தன்னுடைய அபிமான நட்சத்திரத்துக்கும் ஒரு தனிப்பட தொடர்பு இருப்பதாய் கற்னையில் எண்ணிக் கொண்டு திரையில் அவர்கள் கூறும் மாயாஜால வாத்தைகளை உண்மை என்றும் நம்பிக் கொண்டு, திரையில் ஆட்டோ ஓட்டி, வண்டி இழுத்து , கூரை வீட்டில் வாழும் தன்னுடைய அபிமான நட்சத்திரங்களை.... ஏழைப்பங்காளனாக எண்ணிப் பார்க்கிற மனோபாவம் கிட்டதட்ட தமிழ் நாட்டில் மிகைப்பட்ட ரசிகர்களுக்கு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை ஆனால் அபிமானங்களின் நிஜ வாழ்க்கைக்கும் நமது கற்பனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

என்னுடைய எட்டு வயதில் நானும் அப்படித்தான் எனது அபிமான நட்சத்திரத்தை எனது பக்கத்து வீட்டு மாமாவைப் பார்ப்பது போல ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அடுத்த வாரிசு படம்தான் என்று நினைக்கிறேன்....அது வெளிவந்து ஓடிக் கொண்டிருந்தது.....அந்த காலகட்டத்தில் தான் பக்கத்து வீட்டு மீனாக்கா வந்து அந்த செய்தியை என் தலையில் இடி போல இறக்கினார்கள்.....


ஓ......என்ன செய்வது என்றறியாமல்....அழுகை என் அனுமதியின்றி...கண்களில் கண்ணீரைக் கொண்டு வந்தது.....அப்போது......


(தொடர்ந்து வருவான் ரஜினி ரசிகன்....)



தேவா.S

Comments

விஜய் said…
sari intrest ah poakumpoathu ippadi break ah poattu nippaatiteenka anna, sari wait panraen...
This comment has been removed by the author.
மாவீரன் படத்தை 10 தடவை பார்த்தேன் ரஜினி படம் ஒரு வாட்டி பார்த்த 100 தடவை பார்த்ததா அர்த்தம்
மொழிப்போர் தியாகியா அல்லது சுதந்திர இந்தியாவுக்காக எதும் தியாகம் செய்தவரா அல்லது தியாகம் செய்தவர்களுக்கு இவர் ஏதும் செய்தாரா? இனிதான் செய்ய போகிறாரா? யார் இந்த ரஜினி? தமிழர்களுக்காக என்ன செய்தார். என்ன செய்து கொண்டு இருக்கிறார். இந்த அறியாதவன் அறிந்து கொள்ள ஆசைதான். அதுவரை காத்திருக்கும் ஒரு கேள்வியாளன்...
உங்களை பார்த்தா எனக்கு பாவமா இருக்கு!
எல்லோரும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு சில மயக்கங்களில் ஆழ்ந்து இருக்கிறோம். இதுதான் உண்மை . நிதர்சனம்.

// தமிழர்களுக்காக என்ன செய்தார். என்ன செய்து கொண்டு இருக்கிறார். இந்த அறியாதவன் அறிந்து கொள்ள ஆசைதான்.//

அவர் ஒரு நடிகர். அது அவரின் தொழில். அதை அவர் செய்கிறார். இதற்கு மேல் அவரிடம் எதிர்பார்ப்பது தவறு. நீங்கள் வெளிநாட்டில் வேலை செய்கின்றீர்கள். அங்கு உள்ளவர்களுக்கு நீங்க என்ன செய்தீர்கள் என்று கேப்பது போல் உள்ளது இது
@@@வால்பையன்//உங்களை பார்த்தா எனக்கு பாவமா இருக்கு!//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நண்பரே...

அடுத்த பதி்வை எதிர்நோக்கியுள்ளேன்...
:-)
//அப்போது அடுத்த வாரிசு படம்தான் என்று நினைக்கிறேன்....அது வெளிவந்து ஓடிக் கொண்டிருந்தது.....அந்த காலகட்டத்தில் தான் பக்கத்து வீட்டு மீனாக்கா வந்து அந்த செய்தியை என் தலையில் இடி போல இறக்கினார்கள்.....


ஓ......என்ன செய்வது என்றறியாமல்....அழுகை என் அனுமதியின்றி...கண்களில் கண்ணீரைக் கொண்டு வந்தது.....அப்போது......//

இன்றைக்கு நான்தான் ரஜினியின் அடுத்தவாரிசு என்று இளம் நடிகர்கள் படுத்தும் பாட்டை பார்த்தால் எனக்கும் அழுகைதான் வருகிறது.

இப்படிக்கு
உங்களின் அடுத்த பதிவுக்காய் காத்திருக்கும் எட்டு வயது உங்களுக்கு போட்டியாக இருபத்திஏழு வயதிலும் ரஜினியை ரசிக்கும் ரசிகன்.
LK said...
// தமிழர்களுக்காக என்ன செய்தார். என்ன செய்து கொண்டு இருக்கிறார். இந்த அறியாதவன் அறிந்து கொள்ள ஆசைதான்.//

அவர் ஒரு நடிகர். அது அவரின் தொழில். அதை அவர் செய்கிறார். இதற்கு மேல் அவரிடம் எதிர்பார்ப்பது தவறு. நீங்கள் வெளிநாட்டில் வேலை செய்கின்றீர்கள். அங்கு உள்ளவர்களுக்கு நீங்க என்ன செய்தீர்கள் என்று கேப்பது போல் உள்ளது இது
///////////////////

Superb! Excellent!

To Dheva

Nice posting about our thalaivar. Expecting more..
நண்பர் LK அவர்களுக்கு...
ஓ இவர் நடிகரா சரி சரி. அது அவரின் தொழில் சரியாக சொன்னீர்கள். அப்ப வேறு யாரும் தொழில் செய்யவில்லையா? எத்தனையோ தமிழர்கள் எத்தனையோ தொழில் செய்றாங்க.ஏன் அவர்கள் எல்லாம் உங்களுக்கு தெரியவில்லை. முதலில் தமிழன் என்ற உணர்வு கொள்ளுங்கள். அந்நிய மாநிலத்தானுக்கெல்லாம் இடம் கொடுத்ததால் தான் இன்னும் தமிழனை ஏறி மிதிதுக்கொண்டிருக்கிறான். கேட்டால் அனைவரும் இந்தியன் என்று சொல்வீர்கள். குடிக்க தண்ணீர் கொடுக்க மறுக்கிறான். அடுத்த பக்கம் பார்த்தால் முல்லை பெரியாறு பிரச்சனை. இப்படி பல பிரச்சனை இருந்தாலும் சில தமிழர்கள் ரசிகர்மன்றம் என்ற பெயரில் கூத்தடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்... மானம் கெட்ட மறத்தமிழன் எப்ப தன்னை உணர்கிறனோ அப்போதுதான் ஒரு வழிபிறக்கும்...
அதுவரை எத்தனை பெரியார் வந்தாலும் மாற்ற முடியாது...
creativemani said…
சூப்பர் தேவா.. தொடருங்க..

@ விடுதலைவீரா:

தமிழர்களுக்கு என்ன செய்தார், தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் என்பது நீங்கள் ரஜினியைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வியல்ல பாஸ்.. நீங்க வெய்யிலில் கால் கடுக்க நின்னு ஓட்டு போட்டு, ஜெயிக்கவைத்து ஆட்சியில் அமரவைத்து இருக்கீங்களே, அவங்களைப் பார்த்து கேட்க வேண்டியது.

ரஜினி, ஒரு நடிகர். 25 வருடங்களுக்கும் மேலாய், தனது அற்புத நடிப்பாலும், வசீகரத்தாலும் லட்சோப லட்சம் ரசிகர்களுக்கு அபிமானியாய் உயர்ந்து இருப்பவர். ஒரு நடிகராய், இன்றளவும் பலலட்சம் ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண பேருந்து நடத்துனராய் இருந்து இன்று இந்தியாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராய் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்..

உங்களையும் என்னையும் பிடிக்கும் என்று நம்மைத் தெரிந்த 10 -15 பேரை தவிர வேற யாராவது சொல்லுவார்களா?

ரஜினியிடம் ஒரு பொறுப்பும், பதவியும் தராமலேயே என்ன செய்தார், என்ன செய்தார் என்று கேட்டால் வேடிக்கையாக உள்ளது... பொறுப்பிலும், பதவியிலும் இருப்பவர்களே எப்படி இருக்கிறார்கள் என்பது நாம் தினமும் பார்க்கும் ஒன்று.

நாங்கள் அவரின் ரசிகர்கள் மட்டுமே.. எனவே, அவர் செய்யும் நல்ல காரியங்களை எங்களைக் கேட்பதை விட அவரது அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளுங்கள்..
‘தமிழ்’ என்றால் என்ன? மக்களா? நாடா? மொழியா? நாட்டைப் பொறுத்து, மக்களைப் பொறுத்து, மொழிக்குத் தமிழ் என்கின்ற பேர் வந்ததா? அல்லது மொழியைப் பொறுத்து நாட்டுக்கும், மக்களுக்கும் தமிழகம், தமிழ்நாடு, தமிழர் என்கின்ற பேர் வந்ததா! என்ற கேள்விகள், தமிழைப் பொறுத்த வரை வித்து முந்தியா? மரம் முந்தியா என்ற தர்க்கத்தைப் போன்றதாகவே எனக்குத் தோன்றுகின்றன. எப்படி இருந்தாலும் தமிழ் நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி என்று மூன்று பண்டங்கள் இருக்கின்றன.


இந்த மூன்றையும் முதல் பொருளாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் தமிழ் , தமிழ் நாடு, தமிழ் மொழி என்கின்ற சொற்களைக் காண்பதற்கு முன்பிருந்தே, இவற்றை காணாதவர்களிடமிருந்து இந்த மூன்றையும் குறிக்கும் படியாக திராவிடம், திராவிடர், திராவிட மொழி என்பதாகச் சொற்கள் இருந்து வந்ததையும், வருவதையும் பார்க்கிறோம். தமிழ் மொழியும் அதன் சிதைவுகள் என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும், நாடுகளும் கூடத் தமிழைச் சேர்ந்ததே என்றும் அந்தக் கருத்தைக் கொண்டே திராவிடம் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது என்றும் அகராதிகளும் , ஆராய்ச்சி உரைகளும் கூறுகின்றன”.
எப்பொழுதுதான் விழிக்கப்போகிறார்களோ உறக்கத்திலிருந்து !
பகிர்வுக்கு நன்றி
dheva said…
தம்பி....என் தளபதி விஜய்//// வெயிட் பண்ணு ராஜா....அடுத்த பதிவுல படிக்கலாம்....ஹா...ஹா....ஹா! மிக்க நன்றி பா...!
dheva said…
//செளந்தர்.....@ சரியதான் சொல்லியிருகீங்க...//

//வீரா.......@ நீங்க நடத்துங்க....பாஸ்!//


//வால் பையன்.....@ ஆமங்க என்ன பாத்தா பாவமதான் இருக்கு....!//


//LK....@ வாஸ்தவம்தான் எல்லாத்தயும் நாம ஏன் அவருகிட்ட எதிர்பார்க்கணும்? நல்லா கேட்டீங்க!//


//ஜெய்லானி.....@ என்ன எனக்கு சப்போர்ட்டா இல்லா ஆப்பா? எதுக்கு இந்த ரிப்பீட்டு....ஹா....ஹா....ஹா....!//


//அகல்விளக்கு ராஜா @ மிக்க நன்றிகள் தோழரே....!//


//எப்யூடி.....@ மிக்க நன்றி நண்பா...!
//இப்படிக்கு
உங்களின் அடுத்த பதிவுக்காய் காத்திருக்கும் எட்டு வயது உங்களுக்கு போட்டியாக இருபத்திஏழு வயதிலும் ரஜினியை ரசிக்கும் ரசிகன்//

சீக்கிரமே....தொடர்ச்சியை போட்டுடலாம் பாஸ்!//


// மணிகண்டன்....@ காராசாரமான ஒரு பின்னூட்டம் சூப்பர் மணி...ஆமா எங்க....ஆன்லைன்ல உங்கள காணோம்? நன்றி மணிகண்டன்!//
ஹ்ம்ம்ம்.... தேவா......
திரும்பவும் பிரேக்க்க்க்க்........... சப்பாஹ்...முடியல..
அந்த மீனாக்கா அப்படி என்னதாங்க சொல்லிட்டு போனாங்க.. :P :P
வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com
Chitra said…
///எங்கே கோளாறு ரஜினி என்ற நடிகனிடமா? இல்லை அந்த நடிகனின் புகழோடு என்னை இணைத்துக் கொண்டு நான் பிரபலமாகும் முயற்சியா? என் எதிர்பார்ப்பை, நான் பிரபலமாவதை ரஜினியின் பதில் கடிதம் தீர்மானிக்கும் என்ற காரணத்தால் ...//////

.......சின்ன சின்ன விஷயங்களையும் ரொம்ப சுவாரசியமாக எழுதி இருக்கீங்க...... அந்த எட்டு வயது சிறுவனின் துள்ளல் நடை குறையாமல்......

.... The comments for this post is also very interesting to read...... :-)
தமிழ்வீரா
உங்களுக்கு நண்பர் மணிகண்டன் அருமையாக விளக்கம் தந்து இருக்கிறார் . நீங்கள் சொல்வது போல் இருந்தால் யாரும் அவர்கள் மாநிலத்தை தவிர்த்து எங்கும் சென்று வேலை செய்ய இயலாது. இது இந்த விவாதத்திற்கான களம் அல்ல.
ராணி இதழில் உங்களோடு பேசுகிறேன் எனும் தலைப்பில் நடிகரும், ஓவியருமான சிவகுமார் தொடர்ந்து எழுதி வருகிறார்.

இந்த வார இதழில் (16.5.2010) அவர் குறிப்பிட்ட ஒரு கருத்து சுரீர் என்று தைக்கிறது. திரையுலகத்தில் மின்னிக் கொண்டே, அந்த மோகத் திரையைக் கிழித்துள்ளது அசாதாரணமானதே!

சினிமாவில் காட்டப் படும் அத்தனையும் உண்மையில் மாயை, கட்டுக் கதை என்பதை அறிவுப் பூர்வமாக மக்கள் நம்ப ஆரம்பித்துவிட்டால், சினிமாவுக்கு உள்ள கவர்ச்சி அடியோடு அழிந்து விடும். மக்களின் அறியாமை தொடரும்வரை அரசியலுக்கும், சினிமாவுக்கும் அழிவில்லை என்ற கருத்தினைப் பதிவு செய்துள்ளார் நடிகர் சிவகுமார்.

உண்மைதானே; சினிமா ஒரு தொழில்; அதில் நடிப்பதெல்லாம் தொழிலைச் சார்ந்தது என்பதைத் தவிர அதற்குமேல் என்ன வாழ்கிறது?

முதலில் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். நடிப்பு என்றால் என்ன? உண்மையல்ல என்பதன் மறுபெயர்தானே!

அந்த நடிப்பை நிஜம் என்று நினைத்துவிட்டால் விபரீதம்தானே!

இப்பொழுதெல்லாம் மக்களிடத்தில் தம்மைப்பற்றிய வடிவம் (இமேஜ்) பேருருப் பெறவேண்டும் மக்களின் மனத்தில் ஆணி அடித்து உட்காரவேண்டும் அதன்மூலம் கிடைக்கும் பாமரத்தனமான செல்வாக்கை அரசியலுக்கு மினுமினுப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் அதன்மூலம் இந்த நாட்டையே ஆளவேண்டும் என்ற மனப்பால் குடித்து, வேண்டுமென்றே திட்டமிட்டு சில வசனங்களைக் கதாநாயகன் பேசுவதுபோல சித்திரிக்கிறார்கள்.

நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னதற்குச் சமம் என்பது போன்றவை எல்லாம் இந்த ரகத்தைச் சேர்ந்ததுதான்.

எப்பொழுது வரவேண்டுமோ, அப்பொழுது வருவேன்! என்பதெல்லாம் இரு பொருளில் உச்சரிக்கப்படும் வார்த்தைகள்.

இப்பொழுது இந்தக் களத்தில் போட்டிகள் அதி-கரித்துவிட்டன. சினிமாவில் நடிக்கும் கதாநாயகர்கள் பெரும்பாலோர் அடுத்த முதலமைச்சர் நாம்தான் என்ற மனப்பான்மையில் மிதக்கின்றனர்.

நாட்டுக்காகப் பாடுபட்டு இருக்கவேண்டாம்; தியாகம் செய்திருக்கவேண்டாம்; சில வசனங்களைப் பேசினாலே போதும்; இந்த அப்பாவிப் பாமர மக்களின் வாக்குகளை சுலபமாக, சாமர்த்தியமாக ஜேப்படி செய்துவிடலாம் என்று நினைக்கும் போக்கை மனதில் கொண்டுதான் நடிகர் சிவகுமார் நறுக்கென்று பட்டுத் தெறித்ததுபோல் கூறியிருக்கிறார்.

நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் சினிமாவும் ஒன்று என்று வாழப்பாடியில் (19.5.1962) 48 ஆண்டுகளுக்குமுன்பே தந்தை பெரியார் கூறிய தொலைநோக்கை என்ன வென்று கூறுவது!
//ஜெய்லானி.....@ என்ன எனக்கு சப்போர்ட்டா இல்லா ஆப்பா? எதுக்கு இந்த ரிப்பீட்டு....ஹா....ஹா....ஹா....!///

இதுக்கூட தெரியலை தேவா. ஹும்எனக்கும் தெரியல அச்சோ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்..
//ஜெய்லானி.....@ என்ன எனக்கு சப்போர்ட்டா இல்லா ஆப்பா? எதுக்கு இந்த ரிப்பீட்டு....ஹா....ஹா....ஹா....!//

இதுகூட தெரியலையா தேவா. எனக்குதான் தெரியலை. அச்சோ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்
நீங்கள் ரஜினி பற்றி எழுதியதற்கு ஒரு கமெண்ட் போட்டேன் ...அதில் ரஜினி பற்றிய
சுட்டி இருந்தது ரஜினி ரசிகர்கள் எதில் இருந்து வருகிறார்கள் என்பதை பற்றி அதை எடுத்து
விட்டீர்கள் ஏன் என்று தெரியவில்லை ....சரி அப்படி உருப்படியாய் ரஜினி சமூகத்திற்கு
என்ன செய்தார் என்று சொல்லுங்கள் .................................மதுரையில் தனக்காக போஸ்டர்
ஒட்டிய ரசிகர்கள் , தாமகா ஜெயிக்க உதவிய ரசிகர்கள் பாமாகா அடிக்கும் பொழுது
கூட பேசாமல் இருந்தார் ரஜினி . இதில் ரஜினியின் சுயரூபம் தெரிகிறதா ...................எத்தனையோ
விடயம் உள்ளது ...நடிப்பை ரசிப்பது கூட பரவாஇல்லை ஆனால் மாயையில் இருக்கிறீர்கள் ..........என்ன செய்ய

நான் இந்த பதிவு அருமை என்று சொல்பர்வர்களையும் உங்களையும் பார்த்தால் மிகபாவமாய் இருக்கிறது
dheva said…
எனதருமை தோழர்...வெண்ணிற இரவுகள்.....!


கை தவறி உங்களின் பின்னூட்டம் ரிஜெக்ட் ஆகிப்போனதற்கு முதலில் மன்னிக்கவும்! பதிவுத்தொடரின் பாதியிலேயே ஒரு கருத்து எடுத்துக்கொண்டு என்னையும் எனக்கான வாசகர்களையும் பாவம் என்று உங்களின் அறியாமை அடுத்த அடுத்த பதிவுகளில் கண்டிப்பாய் மாறூம்.

மற்றபடி....எங்களுக்காக பாவப்படும் உங்களுக்கு அனேக நமஸ்காரங்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள்....மீண்டும் ஒரு முறை உங்களின் கடந்த பின்னூட்டம் அகற்றப்பட்டதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்...!

தொடர்ந்து வாருங்கள்! வாழ்த்துக்கள்!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த