Pages

Wednesday, June 9, 2010

சுட்டதை சுட்டேங்க.... அவ்ளோதான்!


ஊரெல்லாம் சுற்றிப் பறந்த அந்த காகத்திற்கு பசி வயிற்றைக் கிள்ளியது. அந்த நாளின் வெயில் கூட ரொம்ப அதிகம் மாலை 3 மணி வரை சுற்றி சுற்றி களைத்த காகம் துவண்டு எந்த நேரம் வேண்டுமானாலும் மயங்கி விழும் என்ற நிலை. பசி....அவ்வளவு கொடுமையானது!

எப்போதும் உங்களுடன் நான் இருக்கிறேன் என்பதை நினைவு கூறுங்கள் என்றுதான் சுவாசிக்கும் ஒரு நிகழ்வு நமக்குள் நிகழ்கிறது. மூச்சை இழுத்து வெளியே விடும் போது எல்லாம் புற சக்கி ஒன்று நமது இயக்கத்துக்கு தேவை என்பதை எல்லா ஜீவராசிகளும் உணர வேண்டும். இதற்கு இறை கொடுத்துள்ள ஒரு ரிமைண்டர்தான்...சுவாசம்.

மிகைப்பட்ட பேர்கள் இதை நினைப்பதில்லை...! தூக்கம் ஒரு ரிமைன்டர்... தூங்காவிட்டால் பைத்தியம் பிடிக்கும்..உறக்கத்திலும் ஓய்விலும் மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைப்பதால்தான் ஒரு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கிறது. அது போல....கடவுள் வைத்த மிகப்பெரிய ரிமைன்டர்...பசி....!


பசி வந்தால் பத்தும் பறந்து போகும்...ஆனால் பறக்கும் இந்த காகத்திற்கோ பசியால் பறக்கவே முடியாமல் தள்ளாடித் தள்ளாடிப் போய் வந்து ஒரு கூரை வீட்டு வாசலின் ஓரமாய் அடுக்கி வைத்திருந்த சுள்ளிகளின் மீது வந்து விழுந்தது என்றுதான் சொல்லவேண்டும்..! மெல்ல அமர்ந்த காகம் அரை மயக்கதில் நிமிர்ந்து பார்த்த போது....பொன்னம்மா பாட்டி வாசலில் உட்கர்ந்து தனது மாலைக் உணவு கடையை தனது வீட்டின் முன் தயார் செய்து கொண்டிருந்தது மங்கலாக தெரிந்ததுத்... சரி.. யார் இந்த பொன்னம்மா பாட்டி...?

மகன் மொக்க ராசு குடித்து குடித்து ஊதாரியாய் ஊர் சுற்ற....தன் வயிற்றை கழுவ வேறு வழியில்லாமல், இட்லி, பணியாரம், தோசை என்று வாசலில் சுட்டு வியாபாரம் செய்பவள் தான் நம்ம பொன்னம்மா பாட்டி. மாலை வியாபரத்துக்காக சுட சுட எல்லாம் தயார் செய்து கொண்டிருந்தவள் இந்த காகத்தை கவனிக்கவும் தவறவில்லை.... அது கொடுத்த ஈனஸ்வர சப்தத்தையும் கவனிக்க தவறவில்லை.

பசியோடு இருந்த காகத்திற்கு பணியாரம் மீது கண்...! பாட்டிக்கு இருந்த வாழ்வியல் பிரச்சினைகளில் காகத்தின் பசியை ஊடுறுவி நோக்கும் திறன் மறைந்து போயிருந்தது...! திடீரென்று வீட்டுக்குள் ஏதோ சப்தம் கேட்க...சிறுக சிறுக சேர்த்து அரிசி பானைக்குள் மறைத்து வைத்துள்ள காசை எடுக்க குடிக்க மொக்க ராசு திருட்டுத்தனமா பின் வழியா வந்திருப்பானோ என்ற பதற்றத்தில் எழுந்து உள்ளே போனாள் பாட்டி.

பசியோடு இருந்த காக்கா எவ்வளவு நேரம்தான் பாட்டி தான் சுடும் பணியாரத்தில் திஞ்சு போனதையாச்சும் கொடுப்பாள் என்று காத்திருக்கும். எல்லா விதிமுறைகளையும் காற்றில் பறக்க விட்ட காகம் ...முதலில் சட்டியில் இருந்த தண்ணீரைக் கொஞ்சம் குடித்து விட்டு... ஒன்று அல்ல இரண்டு பணியாரத்தை வாயில் கவ்விக் கொண்டு ஜிவ் வென்று பறந்து விட்டது. திரும்பி வந்த பாட்டிக்கு 2 பணியாரம் போனது தெரியவில்லை. அவளுக்கு பானையை உருட்டிய பூனையை விரட்டிய திருப்தி (பணம் பாதுக்காப்பய் இருக்குல்ல...)


சரி பாட்டிய சீன்ல இருந்து கட் பண்ணிடுவோம்....! இப்போ...காக்கா வந்து அமர்ந்த ஒரு ஊர் ஓர மரக்கிளை அது எவ்வளவு முக்கியமோ அந்த அளவு முக்கியம் அந்த மரத்துக்கு கீழே படுத்திருந்த நம்ம தெரு நாய்.. மணியும் முக்கியம் (பெரும்பாலும் நாய்க்கு அந்த பேர்தான் வைக்கிறாங்க.. அதான் .. யாரும் தப்பா எடுத்துக்காதீங்க சாமியோவ்...)


மோப்ப சக்தி அதிகம் உள்ள பிராணி நாய்... அப்படித்தான் நம்ம மணியும்....மேலே காக்கா வைத்திருந்த பணியாரம் அரைத்தூக்கதில் இருந்த மணியை எழுப்பி விட்டது. பல வீட்டு மிச்சத்தையும் ஹோட்டலின் கொல்லைப்புறத்திலும் நல்லா மொக்கு மொக்குன்னு சாப்பிட்டு விட்டு வயிறு புடைக்க சாப்பிட்டு விட்டு கிடந்த மணிக்கு ....இன்னு ரெண்டு பணியாரம் கிடைச்சா தேவலாம்னு தோண....எழுந்து நின்று மேலே இருந்த காக்காவைப் பாத்துச்சு....

உசாராயிடுச்சு காக்கா...அடப்பாவிகளா.. ! பரம்பரை பரம்பரையா எங்க குடும்பத்துல தனியா உக்காந்து ஒருத்தன கூட சாப்பிட விடவே மாட்டீங்களா...ன்னு ரெண்டு பணியாரத்தையும் கவனமா வாயில கவ்விட்டு என்னா....அப்டீன்ற மாதிரி நம்ம மணியை பார்த்து லுக் விட்டுச்சு.....


எப்பயோ யாரோ சொன்ன கதை ஞாபகம் வர.. மணி காக்காவ பாத்து சொன்னிச்சாம் நீ ரொம்ப அழகா இருக்கன்னு. இப்படித்தான் யாராவது சம்பந்தம் இல்லாம நம்மள புகழ்ந்த ஸ்ட்ரெய்ட்டா ஆப்புதான் அப்டீன்ற பாடத்தை..தனது பாட்டன் முப்பாட்டன் மூலமா தெரிஞ்சு வச்சிருந்த காக்கா... ம்ம்ம்ம்..ன்னுச்சம். என்னடா பணியாரத்த கேர்புல்லா பிடிச்சுட்டு இருக்கேன்னு நினைச்சு.. நாய் சொன்னிச்சாம் நீ ஒரு பாட்டு பாடுன்னு.


காக்கா... ரெண்டு பணியாரத்தையும் வாயில இருந்து எடுத்து வலது காலுக்கு கீழே வச்சுகிட்டு பாடிச்சாம். அடங்... என்ன இது இவ்ளோ உசார இருக்கே காக்கான்னு யோசிச்ச நாய்... நீ பாடுன்ன நல்லா இல்ல ஒரு டான்ஸ் ஆடுன்னு சொன்னிச்சாம்...கடுப்பான காக்கா ....அடங்கொன்னியா..... யார ஏமாத்தப் பாக்குற....அப்படீன்னு சொல்லிட்டு... உன்ன மிதிச்சே கொன்னுடுவேன்னு வலது காலை தூக்கி உதைக்கிற மாதிரி பண்ணிச்சாம். அடப்பாவமே...

ரெண்டு பணியாரமும் கீழே விழுந்துடுச்சு... டக்குன்னு நம்ம நாய் மணி பாய்ஞ்சு அதை எடுக்குறதுக்குல்ல.. குறுக்கால வந்த ஒரு பூனை அதை தூக்கிட்டு நாலு காலு பாய்ச்சல்ல எஸ்கேப் ஆகிடுச்சாம். வேகமா வந்த நாய் ஒரு முள்லு முள்ளு மேல போய் விழுந்து உடம்பு பூராமா ரத்தமாம். காக்கா..... அச்சச்சோ.... நம்ம கோபத்தால...... பணியாரம் போச்சேன்னு...அழுது கிட்டே பசியோட வேறு திசையில் பறக்க ஆம்பிச்சிச்சாம்.......

பணியாரத்தை கவ்விட்டு போன பூனை தன்னோட குட்டிகளுக்கு அதை பகிர்ந்து கொடுத்துட்டு....சொன்னிச்சாம்...." திடீர்னு மேலெ இருந்து விழுந்துச்சு பயலுகளா..காலையில் இருந்து ஒண்ணும் இல்லயேன்னு நினைச்சேன்....இன்னைக்கு கடவுள் நமக்கு படியளந்துட்டார்ன்னு ".

கதையின் நீதி

1) பசியோடு இருந்த காக்காவிறுகு ஒரு சின்ன பீஸ் பாட்டி போட்டு இருந்தா.. பாட்டிகு ரெண்டு பணியாரம் மிச்சம்.

2) வயிறுதான் புல்லா இருக்கே... நமக்கு எதுக்கு தேவையில்லம இன்னும் ரெண்டு பணியாரம்னு நாய் நினைச்சிருந்தா..... நாய்க்கு உடல் வேதனை மிச்சம்.

3) பசியோடு அலைஞ்சு திரிஞ்சு கொண்டு வந்தோமே.. அத ஒழுங்கா சாப்பிடுவோம் எதுக்கு தேவையில்லாம அடுத்தவன் உசுப்பேத்தி நாம கோபப்பட்டு "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு"ன்ற பழமொழிய நிரூபிக்கணும்னு காக்க நினைச்சிருந்தா.... வயிற்றுப்பசி ஆறியிருக்கும் நிம்மதி மிச்சமாயிருக்கும்.

ஏதேதோ நிகழ்வுகள் நிகழ...பூனை போலத்தான் சில பேருக்கு ஏதோ கிடைத்து விடுகிறது. பூனைக்கு கிடைக்க வேண்டிய பணியாரம் கிடைத்தே ஆக வேண்டும் என்பது நியதி... இதை எதார்த்தம் என்றும் சொல்லலாம்...கடவுள் செயல் என்றும் சொல்லலாம்.

பின் குறிப்பு: எல்லோரும் சூடா ஆக்ரோசமா பதிவு போடுறாங்க.... சரி நாமளும் சீரியஸ் பதிவு போட்டு....வாசிப்பாளரின் BP யை அதிகாமக்க வேண்டாம் என்று எண்ணியதின் விளைவு... பாட்டி வடை சுட்ட கதையை ரீமேக் பண்ண வேண்டியதா போச்சு........யாரும் காப்பிரைட் பண்ணி வச்சிருந்தா மன்னிச்சுருங்கோவ்வ்வ்வ்வ்....!


தேவா. S

64 comments:

dheva said...

சாதி பற்றி எழுதிய பதிவின் தொடர்சியை நாளைக்கு இல்லை மறு நாள் போட்டுறேங்க....!

LK said...

yappa eppadi ippadilaam think panreenga.. mudiyala dheva. kalakunga

ஜீவன்பென்னி said...

:)-

Jeyamaran said...

கதைய எங்கையோ படிச்ச மாதிரி தெரியுதே ஒன்னவதுல படிச்சிருக்கேன் பாட்டி வடை சுட்ட கதை

soundar said...

சார் இந்த கதை எங்கள் விஜய்க்கு நடிக்க கொடுக்க வேண்டும். அவர் இதில் நடிக்க வேண்டும்

Jeyamaran said...

விஜய்தான் அடுத்தடுத்து ரீமேக் பண்றார்னு பார்த்தல் தேவாவும் பண்றாரே

விடுத‌லைவீரா said...

கடவுளை மற; மனிதனை நினை என்றார் தந்தை பெரியார்! மனிதனைப் பற்றி நினைத்துச் செயல்படும் மனித நேய வாழ்வு (Humanism) என்பதே - நல்ல வாழ்வு, நல்ல சமூகம் - கடவுள் தேவையில்லை என்பதுதான்.

கடவுளை நம்பி, கும்பிட்டு, வாழ்வில் வழிகாட்ட வேண்டிக் கொண்டு வாழ்ந்த சர்வாதிகாரி இட்லர் என்ன சொன்னான்? யூதர்களை இலட்சக் கணக்கில் கொன்று குவித்தபோது என்ன சொன்னான்? இந்த உலகத்தைப் படைத்த, சர்வ சக்தியுள்ள கடவுளின் எண்ணப்படியே நான் செயல்படுகிறேன். யூதர்களைக் கொல்வதன் மூலம் கடவுளின் வேலையை நான் செய்கிறேன் என்று சொன்னான். தன் படை வீரர்களின் இடுப்பு பெல்டில் (Belt) பொறித்து வைத்த வாசகங்கள் - கடவுள் நம்முடன் இருக்கிறார் (ஜெர்மன் பழமொழி) என்பதே! இனப்படுகொலைக்குப் பாதுகாப்பாகக் கடவுள் இருந்துள்ளார்.

அமெரிக்கக் குடியரசுத் தலைவராக உலகம் பார்த்தது. ஜார்ஜ் புஷ் எனும் அவர், கடவுளிடம் பேசி, அதனுடைய சம்மதத்தைப் பெற்றுத்தான் ஈராக் நாட்டின் மீது போர் தொடுத்து ஆயிரக்கணக்கான முசுலிம்களைக் கொன்று குவித்தார் என்று அவரே தெரிவித்தார். இந்த மடத்தனமான பேச்சைக் கேட்டு உலகமே கைகொட்டிச் சிரித்தது. என்றாலும் நாங்கள் கடவுளை நம்புகிறோம் (In God we Trust) என்கிற வாசகங்களை டாலர் நோட்டில் அடித்து வைத்திருக்கும் அமெரிக்காவின் அதிபர் அது பற்றிக் கவலைப்படவில்லை.

இந்த அமெரிக்க நாட்டின் புகழ் பெற்ற இரட்டைக் கோபுரக் கட்டடங்களை விமானத்தால் மோதி, இடித்துத் தகர்த்து தரை மட்டமாக்கிய அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் என்பாரும் அந்தக் கொடுமையைச் செய்ததற்கான காரணம் என்று அல்லாவைக் கைகாட்டி விட்டார். இசுலாத்தின் பெருமையைக் கட்டிக் காப்பாற்றும் புனிதப் போரில் தாம் ஈடுபட்டு இருப்பதாகக் கூறி வருகிறார். உலகின் பல நாடுகளிலும் இந்தப் பகையாளிகள் பரவி, படு பாதகங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இட்லர் எனும் கிறித்துவர், யூதர்களைக் கொன்றார். புஷ் எனும் கிறித்துவர் இசுலாமியரைக் கொன்றார். ஒசாமா எனும் இசுலாமியர் கிறித்துவர்களைக் கொன்றார்.

(பணியாரத்தை கவ்விட்டு போன பூனை தன்னோட குட்டிகளுக்கு அதை பகிர்ந்து கொடுத்துட்டு....சொன்னிச்சாம்...." திடீர்னு மேலெ இருந்து விழுந்துச்சு பயலுகளா..காலையில் இருந்து ஒண்ணும் இல்லயேன்னு நினைச்சேன்....இன்னைக்கு கடவுள் நமக்கு படியளந்துட்டார்ன்னு "

ஏதேதோ நிகழ்வுகள் நிகழ...பூனை போலத்தான் சில பேருக்கு ஏதோ கிடைத்து விடுகிறது. பூனைக்கு கிடைக்க வேண்டிய பணியாரம் கிடைத்தே ஆக வேண்டும் என்பது நியதி... இதை எதார்த்தம் என்றும் சொல்லலாம்...கடவுள் செயல் என்றும் சொல்லலாம்)

நமது நாட்டில் எத்தனையோ ஏழைகள் ஒரு வேலை சாப்பாட்டிற்கு வழியில்லாமல் வேதனை படுகிறார்கள். அன்றாடம் கொலை,கொள்ளை,கற்பழிப்பு,கடவுள் சிலைகள் கடத்தல்,கடவுளுக்கு கொடுக்கப்பட்ட கைக்கூலியான பணம் சேர்ந்திருந்த உண்டியல் திருட்டு, அன்றாடம் நடக்கும் விபத்துக்குள் இதற்கு எல்லாம் காரணம் கடவுள்தான் என்று தேவா ஏற்றுக்கொள்வாரா? கடவுள் அளந்த படியை அனைவரும் சந்தோசமாக ஏற்றுக்கொள்ள வேண்டாமா? அப்படி ஏற்றுக்கொள்ளாவிட்டால் அது கடவுளுக்கு எதிரானது அல்லவா? இதற்கு எல்லாம் தாங்கள் சரி என்று ஏற்றுக்கொள்ள அனைவரும் தயாராக இருக்கிறீர்களா??

கடவுள் இல்லாமல் ஒருவரும் நல்லவராக இருக்க முடியாது என்கிறார்களே, அது சரியான கருத்தா? தவறு என்றுதானே வரலாறு நிரூபிக்கிறது?

Chitra said...

பாட்டி வடை சுட்ட கதையை ரீமேக் பண்ண வேண்டியதா போச்சு........யாரும் காப்பிரைட் பண்ணி வச்சிருந்தா மன்னிச்சுருங்கோவ்வ்வ்வ்வ்....!


...... அந்த copyright நான்தான் வச்சுருக்கேன்..... கப்பம் கட்டிருங்க..... பணியாரமாய் இருந்தாலும் பரவாயில்லை..... :-)

dheva said...

விஜய் கேட்டிருக்காரு.....எவ்ளோ ரேட் ஆனாலும் பரவாயில்ல பாஸ்....ன்னு கெஞ்சுறாரு....! நான் தான் யோசிச்சிட்டு இருக்கேன்.... ஹா.... ஹா... ஹா..!

dheva said...

சித்ரா @ அட..... அது நீங்கதானா..... சித்ரா....! கப்பம் கட்ட பாட்டி கிட்ட பணியாரம் வாங்கப்போனா...அவுங்க.... சொன்னாங்க...ஏம் பேத்திதாப்பா சித்ரா....ன்னு....! பணியாரம்..கூரியர்ல அனுப்பியிருக்கேன்....மைக்ரோ ஓவன்ல சூடு பண்ணி சாப்பிடுங்க...

ஜாக்கிரதை...அங்க யாராச்சும் பறிச்சுட போறாங்க...!

தமிழ் அமுதன் said...

அருமையா சுவாரஸ்யமா இருக்கு தேவா...!


’’தத்துவ தளபதி தேவா’’

அப்ப்டின்னு ஒரு பட்டம் கொடுத்துடலாமா ...!
சொல்லுங்க நண்பர்களே..?;;)))

முனைவர்.இரா.குணசீலன் said...

பணியாரம் போச்சே!

soundar said...

பட்டம் கொடுக்கலாம் சிறந்த கதை ஆசிரியர் பட்டம் கொடுக்கலாம்

சிறுகுடி ராமு said...

ஹலோ..... ஆங்... அப்படியா? இந்த கதைய விஜய், தேவாகிட்ட இருந்து பத்துலட்ச ரூபாய்க்கு காபிரைட் வாங்கிட்டாரா?
அடே! படத்துக்கு பேருகூட வச்சாச்சா? என்ன...! பேரு "பணியாரக்காரனா"?!!??!!!

soundar said...

சார் விஜய் படம் எதுவும் ஓடலை இந்த கதை ரொம்ப நல்ல இருக்கு விஜய் தாங்க சார்

VELU.G said...

பாட்டி பணியாரம் சுட்ட கதை நல்லாயிருக்கு
//
dheva said...

விஜய் கேட்டிருக்காரு.....எவ்ளோ ரேட் ஆனாலும் பரவாயில்ல பாஸ்....ன்னு கெஞ்சுறாரு....! நான் தான் யோசிச்சிட்டு இருக்கேன்.... ஹா.... ஹா... ஹா..!
//

விஜய்க்கு பாட்டி வேஷமா? காக்கா வேஷமா?

dheva said...

முனைவர் குணசீலன்...@ பாட்டிக்கிட்ட இருந்து... ரெண்டு பணியாரம் ஸ்பேரா வாங்கி வச்சுருக்கேன் சார்... .கவலைப்படாதீங்க...!

dheva said...

அமுதன்....@ விஜய் கோச்சுக்க போறாருங்க.... இந்த படத்தோட டைட்டிலில் இதையும் சேத்துதான் அவருக்கு போடுறதா டீல்....ஹா...ஹா...ஹா..!

dheva said...

சவுந்தர்....@ கதையுலக சக்கரவர்த்த்தின்னு பட்டம் வந்துடுச்சி ஆல் ரெடி...(காப்பி ரைட் கேட்டு சித்ரா வேற சண்டை போடுறாங்க....ஏன் தம்பி நீ வேற...ஹா...ஹா...ஹா..)

dheva said...

சிறுகுடி ராமு....@ நாட்டாம (மாப்ள.......)............ தீர்ப்ப மாத்திச் சொல்லு.... 10 லட்சம் இல்ல... 10 கோடி...!

க.பாலாசி said...

அடடா... சின்னபுள்ளையில படிச்ச ஒரு நீதிக்கதையில இத்தன கிளைகளை முளைக்கவிட்டு மூன்று நீதிகளை காட்டியிருக்கீங்க... லேட்டஸ்ட்ஸ் டெக்னாலஜி படி வடைக்குபதில் பணியாரம்... நல்லாருக்குங்க...

dheva said...

வேலு...@ அதுதான் சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்ட்டு இருக்கோம்.... பேசாம பணியாரம் வேசம் கொடுக்கலாமான்னு பாக்குறேன்.....(அப்ப படம் கண்டிப்பா படம் ஓடும்னு நினைக்கிறேன்....அந்த பணியாரத்த பூனை பிச்சு திங்கற சீனுக்கு ரசிகர் கூட்டம் கரகோஷித்து ரசிக்கும்ல....!)

dheva said...

பாலசி.....@ ஆக்சுவலா.....கதை அமெரிக்காவுல நடக்குற மாதிரி எடுக்கலாம்னு இருந்தேன்....அங்க சித்ரா (காப்பி ரைட் அவுங்களுதுன்னு சண்டைக்கு வராங்க...பாலாசி) இருக்கதால...இங்கேகே....அமிஞ்சிக்கரையிலே சூட்டிங் வச்சு முடிச்சாச்சு.....!

அமெரிக்காவா இருந்த என்ன பண்ணியிருப்போம்....பணியாரத்துக்குப் பதில...பர்கர் வச்சுட்டப்போச்சு....! அப்போ பொன்னம்மா பாட்டி எலிசபெத் ஆகிடும் என்ன பர்கர் கிங்ல வேலை பாத்து இருப்பாங்க...அவ்ளோதானெ....ஹா....ஹா...ஹா..!

vijay said...

அண்ணா, நீங்க கலக்குறீங்க, சின்னதா ஒரு கரு கிடைச்சா போதும் , சும்மா பூந்து விளையாடுறீங்க, கதையின் நீதி நிஜமா ரொம்ப அழகா இருந்துச்சு ....நீங்க கலக்குங்க அண்ணா

soundar said...

விஜய் அப்பா தேவா வீடு எங்கே தேடுகிறார் இந்த கதை
வாங்குவதற்கு முடிவு செய்து விட்டார்

Jeyamaran said...

ஹாய் விஜய் என்ன பணிகாரகாரனா? இல்ல வேட்டைகாரனா? உங்கள் விடைகளை அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி www.pani-vettai.com

ஹேமா said...

அட...காக்கா கதை.வடை போய் இப்போ பணியாரமா.நல்லாத்தான் இருக்கு!

dheva said...

//நமது நாட்டில் எத்தனையோ ஏழைகள் ஒரு வேலை சாப்பாட்டிற்கு வழியில்லாமல் வேதனை படுகிறார்கள். அன்றாடம் கொலை,கொள்ளை,கற்பழிப்பு,கடவுள் சிலைகள் கடத்தல்,கடவுளுக்கு கொடுக்கப்பட்ட கைக்கூலியான பணம் சேர்ந்திருந்த உண்டியல் திருட்டு, அன்றாடம் நடக்கும் விபத்துக்குள் இதற்கு எல்லாம் காரணம் கடவுள்தான் என்று தேவா ஏற்றுக்கொள்வாரா? கடவுள் அளந்த படியை அனைவரும் சந்தோசமாக ஏற்றுக்கொள்ள வேண்டாமா? அப்படி ஏற்றுக்கொள்ளாவிட்டால் அது கடவுளுக்கு எதிரானது அல்லவா? இதற்கு எல்லாம் தாங்கள் சரி என்று ஏற்றுக்கொள்ள அனைவரும் தயாராக இருக்கிறீர்களா??//


ஆமாம் வீரா நீங்கள் சொல்வது மிகச்சரிதான்.. எல்லாதவறுகளுக்கும் கடவுள்தான் காரணம்.....ஒரு கடவுள் திருட.. இன்னொரு கடவுள் காரணமாகிறார்....! சில விபத்துக்கள் கூட...லாரி ஓட்டி வரும் கடவுள்..... தண்ணி அடித்து விட்டோ அல்லது தூக்கத்திலோ ஓட்டினால்.. ஒழுங்காய் ஓட்டி வரும் இன்னொரு கடவுளின் மீது மோதி கொன்று விடுகிறார்.

வீரா...@ ஆமாம் வீரா....மிகச் சரியாக சொன்னீர்கள்...எல்லாவற்றுக்கும் கடவுள் தான் காரணம். இது ஏன் ஆன்மீகவாதிகளுக்குப் புரிவதில்லை. ஒரு சந்தேகம்.. உங்களைப் பார்த்தால் கடவுள் மறுப்பாளர் போல தெரியவில்லையே....பிரபஞ்ச ரகசியம் புரிந்தவர் போலல்லவா தோன்றுகிறது.

நன்றி வீரா!


பாட்டி பணியாரம் சுட்ட கடையிலுமா....? விவாதங்கள்.. ஹா... ஹா.. ஹா...!

விடுத‌லைவீரா said...

பாட்டி பணியாரம் சுட்ட கடையிலுமா....? விவாதங்கள்.. ஹா... ஹா.. ஹா...

பணியாரத்துக்கு யாராவது சட்னி ஊற்றி சாப்பிடுவார்களா தேவா?
பணியார காமெடில போய் ஏன் வில்லனை கொண்டு வந்து சேர்க்கிறீங்க....
@ தேவா!
ஆமாம் வீரா நீங்கள் சொல்வது மிகச்சரிதான்.. எல்லாதவறுகளுக்கும் கடவுள்தான் காரணம்.....ஒரு கடவுள் திருட.. இன்னொரு கடவுள் காரணமாகிறார்....! சில விபத்துக்கள் கூட...லாரி ஓட்டி வரும் கடவுள்..... தண்ணி அடித்து விட்டோ அல்லது தூக்கத்திலோ ஓட்டினால்.. ஒழுங்காய் ஓட்டி வரும் இன்னொரு கடவுளின் மீது மோதி கொன்று விடுகிறார்.

அது என்ன தேவா நல்லது நடந்தால் மட்டும் கடவுள் படி அளந்துவிட்டார் என்று சொல்கிற நீங்கள். ஏன் அதற்கு எதிராக எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்....

பணியாரத்தை கவ்விட்டு போன பூனை தன்னோட குட்டிகளுக்கு அதை பகிர்ந்து கொடுத்துட்டு....சொன்னிச்சாம்...." திடீர்னு மேலெ இருந்து விழுந்துச்சு பயலுகளா..காலையில் இருந்து ஒண்ணும் இல்லயேன்னு நினைச்சேன்....இன்னைக்கு கடவுள் நமக்கு படியளந்துட்டார்ன்னு "

ஏதேதோ நிகழ்வுகள் நிகழ...பூனை போலத்தான் சில பேருக்கு ஏதோ கிடைத்து விடுகிறது. பூனைக்கு கிடைக்க வேண்டிய பணியாரம் கிடைத்தே ஆக வேண்டும் என்பது நியதி... இதை எதார்த்தம் என்றும் சொல்லலாம்...கடவுள் செயல் என்றும் சொல்லலாம்......

மேலே உள்ளது நீங்கள் சொன்னது தானே?? நல்லது மட்டும் நடந்தா கடவுளின் செயல்..அப்ப தீமைக்கு யார் பொறுப்பேற்பது? கடவுள் சிலையை திருடுகிறான் அதை கடவுளால் தடுத்துக்கொள்ளவும் முடியவில்லை. தன்னை காப்பாற்றிக்கொள்ளாத கடவுள் மக்களுக்கு நன்மை செய்யும் என்று எப்படி உங்களால் நம்ப முடிகிறது.கடவுளின் வேலைகள் என்னதான் என்று நீங்கள் விளக்க வேண்டும். உண்மையாகவே கடவுள் இருந்தால் இரண்டு லாரிகள் மோத வரும்போது இரண்டு ஓட்டுனர்களையும் தட்டி மோத போகிறது என்று அல்லவா சொல்ல வேண்டும். மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் கடவுளின் வீர விளையாட்டா? மக்களை காப்பாற்றும் பொருப்பை கடவுளுக்கல்லவா கொடுத்துள்ளார்கள். ஒன்றும் செய்யாத கடவுள் எதற்கு என்றுதான் வெளிநாட்டுக்கு கொண்டு போய் விற்றுவிடுகிறார்கள்.. கடவுளை நம்பி திருடும் திருடனுக்கு மட்டும் நன்மை செய்கிறார் கடவுள்.. என்ன என்று கேட்கிறீர்களா? நல்ல விலை போகுதாம் கடவுளின் சிலைகள்..

dheva said...

//ஆமாம் வீரா நீங்கள் சொல்வது மிகச்சரிதான்.. எல்லாதவறுகளுக்கும் கடவுள்தான் காரணம்.....ஒரு கடவுள் திருட.. இன்னொரு கடவுள் காரணமாகிறார்....! சில விபத்துக்கள் கூட...லாரி ஓட்டி வரும் கடவுள்..... தண்ணி அடித்து விட்டோ அல்லது தூக்கத்திலோ ஓட்டினால்.. ஒழுங்காய் ஓட்டி வரும் இன்னொரு கடவுளின் மீது மோதி கொன்று விடுகிறார்.//


அட வீரா நான் எழுதுன பின்னூட்டத்தை படிக்கவே இல்லையா நீங்க.... திரும்ப படிங்க... இந்த பாராவை.... நான் தான் ஒத்துக்கிடேனே.. கடவுள்தான் எல்லாம் செய்றார்னு. உங்க கேக்க வச்சு... என்ன பதில் எழுத வச்சு... எல்லாமே கடவுள்தான் பாஸ்.... ! மறுபடியும் நான் ஒத்துக்களேன்னு சொல்லக்கூடாது சரியா.. ஹா....ஹா.. ஹா...!

விடுத‌லைவீரா said...

தேவா+வீரா= நண்பர்கள்.
தேவாவுக்கு எழுதும் அனைத்து கட்டுரைகளும் வெற்றிப்பெற்றுக்கொண்டிருக்கிறது.அவருக்கு சந்தோசம் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் அவரை புகழ்ந்து பேசிவிட்டு, அவருக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது (வராது வரவிடவும் மாட்டேன்(ம்)) நான் ஒதுங்கி கொண்டால் நான் தேவாவுக்கு ஒரு நல்ல நண்பனா? இன்பத்துன்பகளில் கூட இருப்பவனே நல்ல நண்பன். தொடருங்கள் தேவா என்றும் நான் உங்களுடன் இருப்பேன் நல்ல நண்பனாக...

ரோஸ்விக் said...

கடவுளுக்கும் ரெண்டு பணியாரம் பார்சல்... (எந்தக் கடவுள்னா கேக்குறீங்க...?? ஹி ஹி ஹி)

ஜெயந்தி said...

ரீ மேக்கிங் கதையா?

dheva said...

ரோஸ்விக்.....@ கடவுளுக்கே பார்சலா..ஹா.. ஹா...ஹா... நன்றி ரோஸ்விக்...!

dheva said...

ஜெயந்தி..... @ என்னங்க... நீங்க.. கதை கன்பார்ம் ஆகி.... விஜய் நடிக்கப் போறார்.. படம் பேரு என்ன தெரியுமா..... " பணியாரக்காரன் "

அறிமுக பாட்டே....போட்டாச்சு...

" பாட்டி சுட்ட பணியாரம்...
நடக்கும் பாரு வியாபாரம்...
காலம் மாறும் பாரு....
பாட்டி பர்கர் விப்பா பாரு... ..."

ரீ மேக் தான் .. கொஞ்சம் விட்டா தியேட்டர்லதான் பாக்க முடியும் படத்த...ஆமா...!

ஜெயந்தி said...

பாட்டு மட்டும் ரீ மிக்ஸ் பாட்டு இல்லயா?

soundar said...

இந்த கதையில் கமல் நடித்தால் பாட்டி காக்கா நாய் பூனை எல்லாமே அவரே நடித்து விடுவார்

dheva said...

ஜெயந்தி...@


" எண்ணெய் கொதிக்குது.. எண்ணெய் கொதிக்குது
அடுப்பெரியுது.. அடுப்பெரியுது..
பாட்டி பணியாரம் சுடுது....
வர்றாம் பாரு பணியாரக்காரன்..."


- காக்கதான் விஜய்... பணியாரத்த உஷார் பண்ணும் போது இந்த பாட்டு.. (புலி உறுமுது ஸ்டைல்) .. .அதுவும் ரீமிக்ஸ் தான்
.... .கலக்கலா பாத்து என்ஜாய் பண்ணுங்க...!

dheva said...

சவுந்தர்... @ கலக்கல் இமேஜினேஷன்.... சூப்பர் ஹா.. ஹா.. ஹா!

soundar said...

இந்த கதையில் விஜயகாந்த் நடிச்சா ஒழுங்க அந்த பணியாரத்தை கொடுத்துடு நான் துப்பாக்கி எடுப்பேன்.
காக்கா;சார் என்னை மன்னித்து விடுங்கள்சார்.
விஜயகாந்த்:மன்னிப்பு....எனக்கு தமிழ்ல புடிக்காத வார்த்தை.

soundar said...

விஜய் இந்த கதையில் விஜய் பேசும் பஞ்ச.
ஒரு வாட்டி பணியாரத்தை எடுத்தா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

எனக்கென்னமோ பூனை பணியாரம் சாப்பிடுமா என்பதே டவுட்டாக இருக்கிறது! :)

மேலதிக டவுட்கள்:

ஏன் எல்லாமே தமிழ்லயே பேசுகின்றன?

மனிதர்களின் கேடி கேப்மாரித்தனங்களை இவைகளும் செய்கின்றன என்பதை எதன் அடிப்படையில் நீங்கள் தீர்மானித்தீர்கள்?

உணவு கிடைப்பின் பசியாறவேண்டும் என்பதுதானே மனிதர் தவிர்த்து மற்றெல்லா ஜீவராசிகளின் வாழ்வியல் நடைமுறை. அதில் மனித நீதியை புகுத்துவது பகுத்தறிவா?

அடுத்து குரங்கும் குல்லா வியாபாரியும் பற்றி எழுதவும்!

--

ஏதோ என்னால முடிஞ்சது. ஹி ஹி..:))))))

அனு said...

கதை contd..

பணியாரத்தை சாப்பிட போன பூனையும் பூனைக்குட்டிகளும் வெளில பசி மயக்கத்தோட நின்ன காக்காவை பாத்துச்சாம். அதையும் கூப்பிட்டு அந்த ரெண்டு பணியாரத்தையும் பகிர்ந்து சாப்பிட்டுச்சாம்..

(பாவங்க அந்த காக்கா. எத்தனை கதையில தான் அது பசியோடயே இருக்கும்..)

நீதி: இவ்வளவு தான் வாழ்க்கை-னு நம்பிக்கை இழந்துட கூடாது.. வாழ்க்கை எப்போ வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் மாறும்.. அதற்கு தயாரா இருக்கனும்..

ப்ரியமுடன்...வசந்த் said...

இடுகையும் பின்னூட்டங்களும் சுவாரஸ்யம்...

S Maharajan said...

தத்துவம் 10001 கலக்குங்க!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மனிதனில் இருந்துதான் குரங்கு வந்திருக்கிறது . என்ன பாக்குறீங்க அப்படித்தான் இனி வரும் காலங்களில் குரங்குகள் பேசிக்கொள்ளும் .

LK said...

yow engaya nan potta commentuku pathil .. iru first oru autova anuparen unga veetuku

c.p.senthilkumar said...

முடியல,தாங்கலை,வேணாம்,விட்ருஙக,வலிக்குது

Pradeepa Kumaresan said...

எல்லா சம்பவமும் இறைவனாலேயே.ஹா ஹா ஹா ஹா ஹா

dheva said...

கார்த்திக் (LK) @ ஊரெல்லாம் ஒரே சண்டை சச்சரவா இருக்கு....எங்க பாத்தாலும் புடிச்சு எரியுது....அதுதான் என்ன எழுதலாம்னு யோசிச்சேன்... நம்ம பாட்டி வடை சுட்ட கதைய ரீ மேக் பண்ணுவோமேன்னு நம்பிபிபி...எழுதிட்டேன்.... நம்ம வீரா என்னடான்னா.. அதுல ரெண்டு பிரச்சினைய கொண்டு வந்துட்டார்.....ஹா...ஹ....ஹா....!

dheva said...

சங்கர்......... @ வாங்க.. ராசா... ஒரு பாட்டி வடை சுட்ட கதைக்கா.. இம்புட்டு...! நல்ல சொல்றே கேட்டுக்கங்க அப்பு.... நம்ம கதை ரீ மேக் தேன்....! சித்ராதேன்...காப்பிரைட்டு வச்சிருக்கேன்னு சொல்றாக....

கேஸு கீஸு போடுறதா இருந்தா நம்மள விட்டுங்க...சாமி..(விஜய் நடிக்கிறார்னு சொன்னவுடனே இம்புட்டு கேள்வியா?)

குல்லா வியாபாரியும்...குரங்கும்....டிஸ்கசன் நடந்துகிட்டு இருக்கு...சீக்கிரமே...போட்டுறுவோம்..

ஹா....ஹா...ஹா...!

நன்றி சங்கர்!

dheva said...

அனு....@ வாங்க.. அடுத்த ரீமேக்க ரெண்டு பேரும் சேர்ந்தே பண்ணலாம் மேடம்...

சங்கர்தான் ஐடியா கொடுத்து இருக்கார்... குல்லாவியாபரியும்..குரங்கும்...! ஹா.. ஹா.. ஹா...!~

dheva said...

மகாராஜன்...@ ஆமா... பாஸ். .! கரெக்டா சொன்னீங்க.. நான் நோட் பண்ணிக்கிறேன்....!

dheva said...

கார்த்தி(LK)... @ பதில் சொல்லியாச்சு பாஸ்... எதுக்கு பாஸ் ஆட்டோ எல்லாம்..? ஆட்டோ அனுப்புறதா இருந்தா.. பாட்டி வீட்டு முகவரி சொல்றேன்.. அங்க அனுப்புங்க...! ஹா.. ஹா.. ஹா..!

dheva said...

பிரதீபா குமரேசன்... @ வாங்க ... மிக்க நன்றி..!

dheva said...

பனித்துளி சங்கர்....@ வாங்க.. தம்பி....குரங்குதானே.. பேசும் பேசும்.. ஹா.. ஹா..ஹா...!

soundar said...

இறைவன் எங்கு இருக்கிறான் அவர் முகவரி கொடுங்கோ. எல்ல பதிவில் கடவுள்......

dheva said...

செளந்தர்....@ இறைவனோட முகவரியா..... கடைசி வரை கிடைக்காது தம்பி!

prasanthsriram said...

முடியல,முடியல;வலிக்குது வலிக்குது
முடியல,,முடியல வலிக்குது வலிக்குது
" பணியாரக்காரன்

வேணாம்,விட்ருஙக,வலிக்குது

Anonymous said...

அப்பாடா எப்பிடி தான் இப்பிடில்லாம் யோசிகிறின்களோ..சூப்பர் தான்.

அந்த காக்கா என் வீடு ஜன்னலில் வந்திருந்த நான் சாப்பிட கொடுதிரிப்பேன் என் வீட்லே தினவும் காக்காவுக்கு சூப்பர் டிபன் தான் ( பழைய டிபன் இல்லை புதுசு தான் )

நாஞ்சில் பிரதாப் said...

//பசி வந்தால் பத்தும் பறந்து போகும்...ஆனால் பறக்கும் இந்த காகத்திற்கோ பசியால் பறக்கவே முடியாமல் //

சே... வார்த்தையாலே விளையாடறீங்கப்போங்க....:))

நாஞ்சில் பிரதாப் said...

முதல்ல இந்த காக்கா வடை சுட்ட கதை எங்கேருந்து வந்துச்சுன்னு ஆராய்ச்சி பண்ணணும்...
அநேகமா ராமாயணம், மகாபாரதம் இதிகாசங்களுக்கு அப்புறம ரொம்ப பழைய கதை இதுதான்னு நினைக்கிறேன்.... இன்னும் கேட்டுட்டு இருக்க வேண்டியிருக்கு...என்ன கொடுமை சார் இது...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நல்லா இருக்கு....இந்தக் கதை உணர்த்தும் நீதியை நானும் வேற மாதிரி எழுதியிருக்கேன், படிச்சு பாருங்க!

http://ulagamahauthamar.blogspot.com/2010/05/blog-post_13.html

Anonymous said...

//இப்படித்தான் யாராவது சம்பந்தம் இல்லாம நம்மள புகழ்ந்த ஸ்ட்ரெய்ட்டா ஆப்புதான் அப்டீன்ற பாடத்தை..//

நல்ல அட்வைஸ்
நல்ல கதை
நல்ல கருத்து
நல்ல பின்னூட்டம்
அதுக்கு நல்ல பதில் !!