Pages

Thursday, June 10, 2010

பிரபஞ்ச புதிர்....!
எதை எழுதினாலும்
உனக்கான கவிதையாய்...
மாற்றும் என் பேனாவுக்கும்...
எப்போதும் உனை நோக்கியே...
பாயும் என் நினைவுகளுக்கும்
புரிவதில்லை நான் தான்
எஜமானனென்று....


ஒரு மழைக்காய் ...
நீ குடை விரித்தாய்.....
சந்தோசத்தில் சிரித்தது...
மறைந்திருந்த சூரியன்

எப்போது ....
நீ கோலமிட வருவாய் என...
காத்திருக்கிறோம்...
நானும் ..உன் வீட்டு வாசலும்!

உனக்கு வியர்க்கும் போது...
எனக்கு கோபம் வரும்...
உன் மீது ஒட்டிக் கொண்டிருக்கும்
வியர்வையின் மீது!

ஒரு முறை ... நீ..
அச்சச்சோ என்று சொன்னாய்...
ஒராயிரம் முறை..
சொல்லிப்பார்த்தேன் நான்!
ஒரு முறை கூட
உன் அழகு அதில் இல்லை!

கடைக்கண்ணால்..
என்னை பார்க்கும்...
ஒவ்வொரு கணங்களும்
யுகங்களாய்தான் நீண்டால்தான் என்ன?

களுக் கென்று...
நீ சிரித்தாய்...
கிழே விழுந்த..சில்லறையாய்..
சிதறிப் போனேன் நான்...!நீ...உறங்கும் போது...
உன்னைக் காணவேண்டும்..
என்ற ஆசையில்...
இரவு முழுதும்...
உறங்கவில்லை நான்!

அது ஒரு பெளர்ணமி இரவு..
முதன் முதலாய்....
இரவில் உனைப் பார்த்தது....
திடுக்கிட்டே... போனேன்...
ஒரு இரவுக்கு எப்படி...
இரு நிலவென்று...!

என்னவோ சொல்ல...
உன்னருகில் வந்தேன்...
"ம்ம்ம்ம்..." என்ன என்றாய்..?
பரீட்சையில் மறந்த பதிலாய்...
உனக்கான கேள்வி
மறந்து போனது....!

என் பெயர் சொல்லி ...
நீ அழைத்த..
அந்த கணத்தின் உணர்ந்தேன்..
பிரசவத்திறுகு பிறகான...
தாயின் சந்தோசத்தை...!உன் பார்வை என்னவோ..
சாதாரணம்தான்....
ஆனால்...காட்டுத் தீயாய்...
பற்றி எரிகிறதே...
என் மனது...
புரியாத இந்த
பிரபஞ்ச புதிரை...
எப்படி நான் தீர்ப்பேன்..
சொல்லடி பெண்ணே....?காதலோடு இருக்கும் ஒவ்வொரு கணங்களும்.... கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்ட கணங்கள்! ஒரு காதல் மனிதனை முழுமையாக்குகிறது கவிஞனாக்குகிறது அர்த்தம் பொதிந்த இருப்புத்தன்மையை சாதாரணமாய் போதிக்கிறது.


காதோலோடு இருங்கள் அது பிரபஞ்சத்தின் உயிர்ச்சத்து!

காதோலோடு இருங்கள் இந்த கணம் அர்த்தம் பொதிந்ததாய் மாறும்!

காதலோடு இருங்கள் காதல் எல்லாம் போதிக்கும்!


தேவா. S

40 comments:

சிவம் அமுதசிவம் said...

’பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம்!’ என்றார் கவிஞர் வைரமுத்து.
அதுபோல, காதலை ஒரு புதிய கோணத்தில் - மிக அழகாகச்சொல்லியிருக்கிறீர்கள்.
வாழ்க! - உங்கள் கவித்துவமும் அந்தக் காதலும்..

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை... மிக அருமை...

vijay said...

அண்ணா அழகான வரிகள் , நிஜமாய் நினைக்கவில்லை இந்த காதல் ரசம் சொட்டும் கவிதைகளை, நேசிக்க நேசிக்க வைக்கிறது உங்கள் வார்த்தைகள்..

//என் பெயர் சொல்லி ...
நீ அழைத்த..
அந்த கணத்தின் உணர்ந்தேன்..
பிரசவத்திறுகு பிறகான...
தாயின் சந்தோசத்தை...!//

எவ்வளவு மென்மையான வார்த்தைகள்...நன்று ...இன்னும் பலமுறை படிக்க போகிறேன் , நானும் உங்களை போல் காதலை நேசிக்க ...

நேசமித்ரன் said...

காதல் வழிய வழிய எழுதி இருக்கிறீர்கள்

எளிய சொற்களால் ஆன ஆராதனை

தொடர்க

LK said...

இது காதலிக்கு எழுதியதா ?? இல்லை மனைவிக்கு எழுதியதா

தமிழ் அமுதன் said...

மீண்டும்..மீண்டும்..படிக்க தூண்டும் அருமையான
வார்த்தை பிரயோகம்...! அருமை...!

soundar said...

ஒரு முறை ... நீ..
அச்சச்சோ என்று சொன்னாய்...
ஒராயிரம் முறை..
சொல்லிப்பார்த்தேன் நான்!
ஒரு முறை கூட
உன் அழகு அதில் இல்லை!//

அருமையான வரிகள்...
சூப்பர் கவிதை. கவிதையும் சூப்பர் எழுதுறிங்க...

தமிழ் மதுரம் said...

ஒரு முறை ... நீ..
அச்சச்சோ என்று சொன்னாய்...
ஒராயிரம் முறை..
சொல்லிப்பார்த்தேன் நான்!
ஒரு முறை கூட
உன் அழகு அதில் இல்லை!//


உங்களின் கவிதை வரிகளின் உயிர்த் தடமே இந்த வசனத்தில் தான் உள்ளது. அருமையான கவிதை. காதலில் விழுந்து கரையேறியுள்ளீர்கள் போலும். மிக மிகச் சிறப்பான கவிதை தோழா!

க.பாலாசி said...

//எப்போது ....
நீ கோலமிட வருவாய் என...
காத்திருக்கிறோம்...
நானும் ..உன் வீட்டு வாசலும்!//

//என் பெயர் சொல்லி ...
நீ அழைத்த..
அந்த கணத்தின் உணர்ந்தேன்..
பிரசவத்திறுகு பிறகான...
தாயின் சந்தோசத்தை...!//

அதே காதல் இப்படியானதொரு அழகான கவிதையையும் உங்கள்மூலம் கோர்த்துவிடுமோ.. மேலவுள்ள ரெண்டு பத்திகளை மட்டும் ரசித்தேன்னு நினைக்காதீங்க... எல்லாத்தையும் எடுத்துப்போட்டா இன்னொரு கவிதையாயிடுமே.. அதானால்தான்... நட்சத்திரங்களைவிடுத்து நிலவினை மட்டும் காட்டுகிறேன்...

அருமையான கவிதைகள்...

VELU.G said...

மிக மிக அழகான வரிகளில் காதலை வெளிப்படுத்தியுள்ளீர்கள்


// காதோலோடு இருங்கள் அது பிரபஞ்சத்தின் உயிர்ச்சத்து! காதோலோடு இருங்கள் இந்த கணம் அர்த்தம் பொதிந்ததாய் மாறும்!காதலோடு இருங்கள் காதல் எல்லாம் போதிக்கும்!
//
எல்லாம் சரிங்க இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாலய இல்ல அதற்கப்புறமா(மனைவி இதுக்கெல்லாம் ஒத்துக்குவாங்களா)

Jeyamaran said...

*/என்னவோ சொல்ல...
உன்னருகில் வந்தேன்...
"ம்ம்ம்ம்..." என்ன என்றாய்..?
பரீட்சையில் மறந்த பதிலாய்...
உனக்கான கேள்வி
மறந்து போனது....!/* super line no chance

ஜெய்லானி said...

கவிதை சூப்பர் தேவா ..!!

ஜெயந்தி said...

ஒவ்வொரு கவிதையும் அருமை. படங்களும் அருமை.

dheva said...

சிவம் அமுத சிவம் @ எல்லா கோணதிலும் அழகயிருக்கும் ஒரே விசய்ம் காதல்தான் பாஸ்! நன்றி

dheva said...

நேசமித்ரன்....@ நன்றி தோழர்!

dheva said...

விஜய் @ நேசிப்பில்தான் தம்பி இருக்கிறது எல்லாமே......! ஆமா தம்பி எங்க... ரெங்க நாதன் தெருவில சுத்துறதா...கேள்விப்பட்டேன்....காதாலா...? கவிதைக்கு கரு தேடுறேன்னு சொல்றீயாமே உண்மையா? ஹா..ஹா...ஹா!

dheva said...

கார்திக் (LK)...@ மாப்பு..................... வச்சிட்டாய்ய...ஆப்பு.....................! குதுகலமா இருக்குற குடும்பத்துல கும்மி அடிக்கிறீங்களே...! பக்கத்துலேயெ நிக்கிறாங்க...கார்திக் அண்ணாவுக்கு என்ன பதில் போடுறீங்கன்னு பாத்துட்டு அடுத்த வேலைய பாக்குறேன்னு.....

ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்..அதுவந்து..... வேற வழியில்ல பாஸ் .... நாளைக்கு வீக் என்ட் வேற....அதனாலா


மனைவிக்கு .....எழுதனதாவே வச்சுக்குங்க....! சரியா! மிச்சத்த....சனிக்கிழமை ஆபீஸ்ல பேசலாம்....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! சந்தோசமா பாஸ்!

dheva said...

அமுதன்......@ நன்றி அமுதன்.... ! ஆமா என்ன ஜி சாட்ல புடிக்கவே முடியல உங்கள...!

malgudi said...

டாப் கியரில் வண்டியில் சென்ற அனுபவம்.

அருமையோ அருமை.

வாழ்த்துக்கள்.

S Maharajan said...

என்ன தேவா தேடுதலை காதல் பக்கம்
தேட போய்டீங்கள
கவிதை அருமை

Udanthai Valiban said...

காதோலோடு இருங்கள்.....அது பிரபஞ்சத்தின் உயிர்ச்சத்து!

காதோலோடு இருங்கள்.....இந்த கணம் அர்த்தம் பொதிந்ததாய் மாறும்!

காதலோடு இருங்கள்.... காதல் எல்லாம் போதிக்கும்...!

அண்ணா என் காதலியோடு உங்கள் கவிதையை பகிர்ந்தேன்...

அர்த்தம் பொதிந்த இருப்புத்தன்மையை எங்களுக்கு சாதாரணமாய் போதித்தது...

ஹேமா said...

சொட்டுச் சொட்டாய்க் காதல் மழை.இதே காதல் என்றுமே நிலைத்திருந்தால் அதிஷ்டம்தான்.

ப்ரியமுடன்...வசந்த் said...

காதல் மயக்கம் ...

வரிகளில் உவமானங்கள் சிறப்பு...

Chitra said...

நேசமித்ரன் said...

காதல் வழிய வழிய எழுதி இருக்கிறீர்கள்

எளிய சொற்களால் ஆன ஆராதனை

தொடர்க


........ I second it! Superb!

Chitra said...

மிகவும் ரசித்து வாசித்தேன்.... தேவா..... Simply Superb!

Anonymous said...

அருமையான கவிதை மனைவிக்கு தானே ????

Ananthi said...

ஹாய் தேவா. இத.. இத..... தான் எதிர்பார்த்தேன்...
நீங்க கவிதை எழுதுவதில் நெஜமாவே கிங் தான்..
அத்தனை வரிகளும் இனிமை..
எதை என்று சொல்வேன்.. எல்லாமே ரசித்து படித்தேன்..
//ஒரு முறை ... நீ..
அச்சச்சோ என்று சொன்னாய்...
ஒராயிரம் முறை..
சொல்லிப்பார்த்தேன் நான்!
ஒரு முறை கூட
உன் அழகு அதில் இல்லை!//

ரொம்ப அழகுங்க..!!

நீங்க சொன்னது, முற்றிலும் உண்மை.. காதலுடன் இருந்தால், உலகமே நம் பார்வைக்கு அழகு தான்.. :) :)
வாழ்த்துக்கள் தேவா..!!!

(பி.கு: தேவா.. சில பல வேலைகள் காரணமாக.. ரெகுலரா வந்து பின்னோட்டம் இட முடியல.. சாரிங்க.. )

சி. கருணாகரசு said...

கவிதை ஒரு மார்க்கமாத்தான் இருக்கு!

காதல் என்பது காற்று!
சுவாசிப்பவன் மட்டுமே...
முழுமையாய் வாழ்கிறான்.

இது என் கவிதை!

பகிர்வுக்கு நன்றி.

dheva said...

சவுந்தர்....@ நன்றி தம்பி

dheva said...

தமிழ் மதுரம்...@ காதலில் விழுந்து கரையேறுவது என்றெல்லாம் ஒன்றுமில்லை நண்பரே...காதல் நாம் பிறப்பதற்கு முன்னும்...இறந்த பின்னும் தொடரப் போகும் ஒன்று....

உங்களுக்கு ஒன்றூ தெரியுமா...காதல்தான் பிரபஞ்சத்தை இழுத்துப் பிடித்த்து வைத்திருக்கிறது...புதுசு புதுசாய் விசயங்களைப் படைக்கிறது.!

dheva said...

பாலாசி....@ உங்களின் பின்னூட்டத்தில் அழகுணர்ச்சி...மிளிர்கிறது..., காதலில் நீங்கள் பொங்கி வழிவதை உணர்கிறேன்... நண்பா!

dheva said...

வேலு.........@ அழகா மாட்டி விடுறீங்களே...ஹா...ஹா...ஹா...!

dheva said...

ஜெயராமன் @ நன்றி தம்பி..!

ஜெய்லானி..@ நன்றி நண்பரே...!

ஜெயந்தி...@ நன்றி தோழி...!

dheva said...

மால்குடி....@ டாப் கியரிலேயே..வாழ்க்கை போகட்டும் பாஸ்..! வாழ்த்துகள்!

dheva said...

மகராஜன்.....@ இலக்கு என்னவோ ஒரு இடம் நோக்கிதான் பாஸ்!

dheva said...

உடந்தை வாலிபன் (வாலண்டொ).....@ வாழ்த்துக்க்ள் தம்பி!


ஹேமா....@ என்ன இப்டி சொல்லீட்டீங்க.....காதலாய் இருந்தால் அது நிலைக்கும் ஹேமா...! காதல் என்றாலே....உண்மை...என்றுதான் அர்த்தம்...! உண்மைக் காதல் என்ற சொற்றொடர் தவறானது.!ப்ரியமுடன் வசந்த் @ காதல் விழிப்பு....பாஸ்....ஹா..ஹா...ஹா...! மிக்க நன்றி!

சித்ரா...@ மிக்க.. நன்றி சித்ரா...!


சந்தியா.....@ ஆமாங்க....ஆமாங்க..ஆமாம்...(ஹா ஹா....ஹா)


ஆனந்தி...@ நன்றி தோழி மிக்க் நன்றி ஆனந்தி....! உங்களின் ஊக்கம்தான் மேலும் மேலும் எழுத வைக்கிறது.


கருணாகரசு....@ உங்களின் கவிதை அருமை தோழர்! கவிதை ஒரு மார்க்கமாக இருக்கா...ஆமாம் தோழர்....இது முழுமை நோக்கிய மார்க்கம்தான்! முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்!

vasan said...

காதல்,,காத‌ல்,,, காத‌ல்.
காத‌ல், க‌ட‌ந்து போயின்!
பதுப்பிக்க‌, "பிர‌ப‌ஞ்ச‌ புதிர்"

கலாநேசன் said...

மிகவும் ரசித்து வாசித்தேன்.
அருமை

Jayadeva said...

பிரபஞ்சப் புதிர் என்றவுடன் நான் ஏதோ ஸ்டீபன் ஹாக்கின்ஸ் எழுதின ஏதோ ஒன்ன பத்திதான் சொல்லப் போறாருன்னு ஓடிவந்து பாத்தா பொண்ணப் பாத்து ஏங்கி நின்னுக்கினு இன்ருக்காரே. கல்யாணம் ஆகாதவரா இருக்கணும், [ஆயிடுச்சுன்ன இந்த மாதிரி எண்ணமெல்லாம் வராதுங்கோ!]. காதலிக்கும் போது அவ மாதுரி தீக்ஷித், சினேகா மாதிரிதான் தெரிவாள், கல்யாணம் ஆயிடிச்சுன்னாத்தான் தெரியும் அவ சொர்னாக்கான்னு.

இந்த பிளாக்கை பார்பதற்கு முன்
என்றும் எண்ணியதில்லை
நான் ஒரு கவி என்று
இப்போது உணர்கிறேன் என்னுள்ளும்
ஒரு கவிஞன்
ஒளிந்து கொண்டுள்ளான் என்று!

அப்படின்னு நான் கூட டுபாக்கூர் கவிதை விடலாம், ஆனா சத்தியமா அத கவிதைன்னு சொல்ல முடியாது.

Anonymous said...

என்னை அழுத்தமாக பிடித்து வைத்து கொண்டன இந்த கவிதைகள்....!!