Skip to main content

மெளனம்....!












என்ன எழுதுவது என்று தெரியவில்லை. எதுவுமே தோன்றாமல் மனம் ஒரு மழைக்குப் பின் துடைத்து வைத்த வானம் போல இருக்கிறது. ஒரு மாதிரியான அவஸ்தை நெஞ்சில் இருக்கிறது....ஆனால் மூச்சு சீராய் இருக்கிறது. உடலின் எடை கூட இருப்பது போல தெரியவில்லை.மெளனமாய் இருக்க ஏறக்குறைய முயற்சிக்கிறேன். இந்த கணத்தை நீட்டித்துகொண்டு இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது.

கேள்விகள் அற்றுப்போவதும், எண்ணமில்லாமல் இருப்பதும் ஒரு வரப்பிரசாதம். எல்லா கேள்விகளுக்கும் எப்படி பதில்கள் இருக்கின்றனவோ... அதேபோல அந்த பதில்களை உடைத்துப் போடவும் வேறு சில கருத்துக்களும் நிச்சயமாய் இருக்கின்றன. அதனால் கருத்துக்களின் பின் செல்லாமல் கருத்துக்களை விட்டு தள்ளி இருப்பது ஒரு சுகமான அனுபவமாயிருக்கிறது, ஆரம்பத்தில் பழக்கப்பாடாத மனது.... இதன் சூட்சுமத்தை உணர்ந்த பின் ஒரு ஓரமாய் ஒதுங்கி நல்ல பிள்ளை போல வேடிக்கைப் பார்க்கிறது.

காட்சிகளுக்குள் சிக்காமல், தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளாமல், வேடிக்கை பார்ப்பது என்பது ஒரு அலாதியான விசயம்தான். சிலர் நினைக்கிறார்கள் கேள்விகள் கேட்டு பதில் கிடைக்கும் என்று ஆனால் பதில்கள் எல்லாம் பொய்யாய் மாறும் தருணங்களில் கிடைக்கிறது மனிதர்களுக்கு ஞானம். புத்தர் சொல்லியது அதுதான். இருத்தல்தான் (இருத்தல் என்றால் என்ன? என்று மனம் ஒரு கிளைக் கேள்வி கேட்டிருக்குமே...!) சத்தியம்..இருத்தலை உணர்தல் உன்னதம். புத்தரிடம் கேள்வி கேட்டு வாதம் செய்ய முடிவு செய்து வந்தார் ஒரு பண்டிதர். புத்தருக்கு அவரின் நோக்கம் புரிந்து விட்டது. புத்தர் சொன்னார்.. என்னுடன் ஒரு வருடம் தங்கி இருங்கள் பின் வாதம் செய்யலாம் என்று....


ஒரு வருடமும் ஓடோடி விட்டது.....! புத்தர் அந்த பண்டிதரை அழைத்தார்...வாதம் செய்வோமா நண்பரே? என்று கேட்டார். அந்த ஒரு வருடத்தில் புத்தரின் அருகாமையும் இயல்பான வாழ்வும் எல்லாவற்றையும் அதன் அதன் அழகிலேயே ரசித்த இயல்பும் கண்டு..... பிரமிப்பில் இருந்த பண்டிதருக்கு....கேள்வியே மறந்து போயிருந்தது. தட்சணா மூர்த்தி தத்துவம் போல...." இருந்ததை இருந்தது போல இருந்து காட்டி" மெளனமாய் ஒரு வருட காலத்திற்குள் அந்த பண்டிதருக்கு பாடம் சொல்லப்பட்டு இருந்தது.

புரிதல் உள்ள இடத்தில் கேள்விகள் இல்லை. வாதத்தால் வெல்வது என்பது மட்டுப்பட்ட அறிவு. உண்மையை உணர்வது என்பது.... நிறைவான அறிவு. நிறைவான அறிவுகள் வாதம் செய்ய விரும்புவதில்லை...அவை வெறுமனே இருக்கின்றன. வெறுமனே இருப்பதாலேயே இரைச்சலும் கருத்துக்களும் நிறைந்த மனிதர்கள் ஒன்றுமில்லாதது என்று சொல்கிறார்கள். மிக மிக சப்தமாக பேசுகிறார்கள், தத்துவ அணிவகுப்புகள் நடத்துகிறார்கள்...புஜ பலம் காட்டுகிறார்கள்!

போட்டி போட்டு பேசி பேசிதான் பழகி விட்டோமே....மாதம் ஒரு முறை மெளனமாக இருந்தால்தான் என்ன? அது ஒரு பெரிய காரியம் இல்லை என்று தானே நினைக்கிறீர்கள்....இருந்து பாருங்கள்... அப்போது தெரியும்...மனதின் இரைச்சல் எப்படி இருக்கிறது என்று....? வாரச்சந்தை தோற்று விடும்....! முதலில் நமக்குள் அமைதியாவும்...மெளனமாகவும் இருக்க முடிகிறதா என்று பார்ப்போம்....! பிறகு போதிப்போம்... அடுத்தவருக்கு நமது சித்தாந்தங்களையும் கொள்கைகளையும்.....!


சப்தமின்றி சலமின்றி... நகரமுயலும் போது....குரங்காட்டம் போடும் ஒன்று...! அதை அடக்காமல் ஆடவிட்டு களைக்க வையுங்கள்...பின் அதுவே களைத்துப் போய் ஒடுங்கிக் கொள்ளும்!

மெளனம் வலிமையான வார்த்தைகளற்ற மொழி....! அனுபவித்துப்பாருங்கள்.... மேலே தோன்றியது அல்லவா கிளைக் கேள்வி...இருத்தல் என்றால் என்ன என்று அதன் அர்த்தம் பூரணமாய் விளங்கும்


தேவா. S

Comments

AltF9 Admin said…
Arumaiyana pathivu....
Unknown said…
எங்கெங்கும் பூரணமாய் நிசப்தம்..
ஆன்மிகம், மௌனம், தனிமை
ஒரே வலி .....
Chitra said…
மாதம் ஒரு முறை மெளனமாக இருந்தால்தான் என்ன? அது ஒரு பெரிய காரியம் இல்லை என்று தானே நினைக்கிறீர்கள்....இருந்து பாருங்கள்... அப்போது தெரியும்...மனதின் இரைச்சல் எப்படி இருக்கிறது என்று....? வாரச்சந்தை தோற்று விடும்....! முதலில் நமக்குள் அமைதியாவும்...மெளனமாகவும் இருக்க முடிகிறதா என்று பார்ப்போம்....! பிறகு போதிப்போம்... அடுத்தவருக்கு நமது சித்தாந்தங்களையும் கொள்கைகளையும்.....!




...... பேச்சில்தான் வெட்டித்தனம் உண்டு..... ஆனால், மௌனம் - மேன்மையானது - அருமையான கருத்துக்கள்!
Paleo God said…
//புரிதல் உள்ள இடத்தில் கேள்விகள் இல்லை//

ஆமாம் தேவா. :)

இடுகை அருமை.
மெளனம் வலிமையான வார்த்தைகளற்ற மொழி....! அனுபவித்துப்பாருங்கள்...
நல்ல அருமையான பதிவு படிக்கும் பொழுது ஒரு அமைதி இருக்கு அண்ணா
SASIKUMAR said…
I DO NOT WANT TO PUT ANY COMMENTS DUE TO THE SAME REASON EVERYONE TRAVELING DIFF.BOAT DIFF. MANNER,
IN GODDISH SEA.UNFORTUNATELY LAKE OF GUIDNESS OR EXP DESTINATION (POORANAM) TIME WILL BE NOT SAME.
-SHYSIAN.
விஜய் said…
அண்ணா கலக்குறீங்க,எனக்கு தான் கொஞ்சம் புரிய நேரம் ஆகுது, இருந்தாலும் மறுபடியும் மறுபடியும் படிச்சு தெரிஞ்சுக்குறேன் ..அழகானா ஆழ்ந்து படிக்க வேண்டிய படைப்பு ,அருமை வாழ்த்துக்கள் அண்ணா....
சப்தமின்றி சலமின்றி... நகரமுயலும் போது....குரங்காட்டம் போடும் ஒன்று...! அதை அடக்காமல் ஆடவிட்டு களைக்க வையுங்கள்...பின் அதுவே களைத்துப் போய் ஒடுங்கிக் கொள்ளும்!//

சரியான வார்த்தை.
மனதை எப்படி பழக்க வேண்டும் என்று கோடு போட்டு இருக்கிறீர்கள்,

வாழ்த்துகள்
மிகச்சரியான கூற்று தேவா...

சில நிமிடங்கள் கண்களை மூடி, அதுவும் புறத்தே உருவாக்கிக்கொண்ட நிசப்தமான சூழலில் அமைதியாக இருக்க முயன்றாலே, மனது அது மனம்போல் பேசிக்கொண்டேயிருக்கும் பாருங்களேன்.... அடா... அடா... பெரிய பெரிய அரசியல் பேச்சாளர்களே தோற்று ஓடிப்போய்விடுவார்கள்...!! அந்த அளவிற்கு குப்பைகளை சேர்த்து வைத்துள்ளோம் & வைத்துக்கொண்டும் இருக்கின்றோம்.

எந்த நாள் மனத்தின் பேச்சு ஓய்கிறதோ, அன்றே நாம் விடுதலை ஆகிவிடுவோம்...
""என்று வருமோ அந்த நாளும்...?!?""
///சப்தமின்றி சலமின்றி... நகரமுயலும் போது....குரங்காட்டம் போடும் ஒன்று...! அதை அடக்காமல் ஆடவிட்டு களைக்க வையுங்கள்...பின் அதுவே களைத்துப் போய் ஒடுங்கிக் கொள்ளும்!
///

super na...
தல எப்படி தினமும் ஒன்னு இப்பிடி பின்னுறீங்க...
....................................................................................................................................?
என்னிடம் கேள்விகள் இல்லை.
vasan said…
தன்னறிவு, த‌ன்னிறைவு, த‌ன்னுண‌ர்வு,
நிறைகுட‌த்து நிச‌ப்த‌ம்.
ஹேமா said…
கேள்விகளும் அதற்குண்டான பதில்களும் தற்காலிகமே தவிர...இன்னும் தொடரும்
அதே கேள்விகள் பதில் இல்லாமல்.
அருமையான சிந்தனை தேவா.
dheva said…
சிவா.... @ மிக்க நன்றி தம்பி!

=====================================

கே.ஆர்.பி செந்தில்...@ மிக்க நன்றி தோழர்.... (வலின்னு சொன்னதுதான் என்னனு புரியல....)

=================================================


சித்ரா...@ நன்றி தோழி..!

=================================================


சங்கர் (பலா பட்டறை).... @ நன்றி நண்பா...!

=================================================


செளந்தர்....@ அமைதியா இருங்கன்னு சொல்றதையே சில பேர் கத்தி கத்தி சொல்லுவாங்க....என்ன தம்பி நான் சொல்றது சரிதானே? ஹா....ஹா...ஹா...!

================================================


சசிகுமார்....@ வருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி சசி!

==================================================

விஜய்...@ தம்பி.. எங்கடா போய்ட்ட.. ஆளை புடிக்க முடியல.....! நன்றி தம்பி!

==================================================


சி. கருணாகரசு....@ தொடர்ச்சியான வருகைக்கும்...புரிதலுக்கும் நன்றி தோழர்!


==================================================

நிகழ் காலத்தில்...@ ஆமாம்.. நண்பரே.. நீங்கள் சொல்வது சரிதான்!

=================================================


சிறுகுடி ராமு....@ மாப்பு.. ரொம்ப டேங்ஸ்...! சிங்கப்பூர் எப்படி இருக்கு? ரொம்ப சத்தமாவா...கேக்குதுதுதுது...ஹா... ஹா..ஹா...!

=================================================


ப. செல்வகுமார்....@ தம்பி.. வாங்க..! மிக்க நன்றிப்பா.. கோமாளி எப்படி இருக்காக?

=================================================


ஜெயராமன்...@ வாங்க தம்பி...மதுர வெயிலு எப்படி இருக்கு....? என்னது.. மழையா..... சொல்லவே இல்ல.... ! நன்றிப்பா...!

==================================================


ஜெய்லானி...@ அட.. நீங்க வேற.. ஏதோ. தோணுறத.. எழுதுறோம் பாஸ்....! ஆமா..இடுகை இடுகையா உங்ககிட்ட ஒரு கேள்வி கேக்குறேனே பதிலயே காணோம்....ஹா... ஹா.....ஹ....! நன்றி பாஸ்!

=================================================


வீரா....@ ம்ம்ம்ம்ம்ம்... வர வர.....ரொம்பவே மாறிட்டீங்க...இருந்ததை இருந்தது போல இருந்து காட்டுறீங்க.... நன்றி + வாழ்த்துக்கள் தோழர்!

=================================================


ஜெயந்தி....@ நீங்க.. தெளிவாகத்தான் எப்பவும் இருக்கீங்க தோழி! மிக்க நன்றி!


==================================================


வாசன்....@ அருமை .. மிக்க நன்றி சார்!

=================================================

ரமேஸ் (சிரிப்பு போலிஸ்).....@ தம்பி.. வாங்க.. ! மிக்க நன்றி!
VELU.G said…
மிக மிக நல்ல பதிவு நண்பரே

//
என்ன எழுதுவது என்று தெரியவில்லை.
//
இப்படியும் பதிவிடலாமா? ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..


//கேள்விகள் அற்றுப்போவதும், எண்ணமில்லாமல் இருப்பதும் ஒரு வரப்பிரசாதம்.
//

சரியாகச் சொன்னீர்கள். ஆனால் சாத்தியங்கள் மிகவும் குறைவு

//
கருத்துக்களை விட்டு தள்ளி இருப்பது ஒரு சுகமான அனுபவமாயிருக்கிறது,
//

நல்ல விஷயம் தான். கொஞ்சம் உங்களை விட்டு தள்ளியிருந்து உங்களைப் பாருங்களேன். இன்னும் அற்புதமாக இருக்கும்


//
முதலில் நமக்குள் அமைதியாவும்...மெளனமாகவும் இருக்க முடிகிறதா என்று பார்ப்போம்....! பிறகு போதிப்போம்... அடுத்தவருக்கு நமது சித்தாந்தங்களையும் கொள்கைகளையும்...
//

இங்கே போதிக்கும் தகுதி யாருக்குமே இல்லை. எதையும் முழுதாக உணர்ந்து கொண்டவர்கள் யாருமே இல்லை. தவிர எதுவும் போதிப்பதில் புரிவதில்லை யாருக்கும். அவர்கள் அந்த நிலையில் இருந்து உணர்ந்துகொண்டாலன்றி...


//
மெளனம் வலிமையான வார்த்தைகளற்ற மொழி....! அனுபவித்துப்பாருங்கள்....
//
உண்மை தான்
dheva said…
ஹேமா... @ மிக்க நன்றி..தோழி!
//மெளனம் வலிமையான வார்த்தைகளற்ற மொழி....! //

அவ்வப்பொழுது உணர்ந்திருக்கிறேன். ‘மௌனம்’ என்ற வார்த்தையே வலிமைதான்...
க ரா said…
ஆஹா. மெளனத்துக்குதான் எத்தனை வலிமை. நன்றின்னா பகிர்வுக்கு.
\\சப்தமின்றி சலமின்றி... நகரமுயலும் போது....குரங்காட்டம் போடும் ஒன்று...! அதை அடக்காமல் ஆடவிட்டு களைக்க வையுங்கள்...பின் அதுவே களைத்துப் போய் ஒடுங்கிக் கொள்ளும்!\\
நல்ல பகிர்வு
புரிதல் உள்ள இடத்தில் கேள்விகள் இல்லை//

அருமை தேவா...:))
dheva said…
வேலு...@ மிக்க நன்றி... உங்கள் கருத்துக்களையும் கவனித்து கடந்து செல்கிறேன்....!

பாலாசி....@ ஆமாம் பாலாசி!

அம்பிகா...@ மிக்க நன்றி தோழி!

இராமசாமி கண்ணன்....@ வாங்க தம்பி.....மிக்க நன்றி!

தென்னம்மை (உங்க பேர கரெக்டா டைப் பண்ணியிருக்கேனா...!!!) @ மிக்க நன்றி!
விஜய் said…
கவிஞர் விருது பெற்ற உங்களுக்கு எனது மனமார்ந்த பாச வாழ்த்துக்கள் .....கலக்குங்க அண்ணா ...:) .
Anonymous said…
//சப்தமின்றி சலமின்றி... நகரமுயலும் போது....குரங்காட்டம் போடும் ஒன்று...! அதை அடக்காமல் ஆடவிட்டு களைக்க வையுங்கள்...பின் அதுவே களைத்துப் போய் ஒடுங்கிக் கொள்ளும்!//

அருமையான வார்த்தை....முயற்சித்து பார்க்க வேண்டும்.

//மெளனம் வலிமையான வார்த்தைகளற்ற மொழி.//

வலிமையான ஆனால் சில நேரம் வலி கொடுக்கும் மொழி.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த